பேலியோ என்னும் கற்கால உணவு முறை🐅 உடல் இரண்டுவிதமாக இயங்குகிறது ஒன்று சக்கரையால் மற்றொன்று கொழுப்பால் சக்கரை அரிசி, சிறுதானியங்கள், பிஸ்கெட், கேக், வத்தல் போன்ற நொறுக்குத்தீனி போன்றவற்றில் இருந்து கிடைக்கிறது.🐆 கொழுப்பு நேரடியாக பாதாம், பிஸ்தா, சுத்திகரிக்காத எண்ணைய் மாமிச உணவுகளான ஆடு,மாடு ,மீன், முட்டை போன்ற வற்றிலிருந்து கிடைக்கிறது🐬 கற்கால மனிதனுக்கு பெரும்சதை, சக்கரைவியாதி, இரத்த அழுத்தம் போன்ற எந்தவியாதியும் இல்லை.🐫 மனிதன் விவசாயம் செய்ய ஆரம்பிக்கும் முன்னே தனது உணவாக மாமிச உணவுகளையும் ஒரு சில பழம்,காய்கறியைகளை மட்டுமே உண்டு ஆரோக்கியமாக வாழ்ந்துள்ளான்🏂 ஆகையால், உடல் பருமன், சக்கரைவியாதி, இரத்த அழுத்தம் போன்ற நோய்களில் அவதிப்படுபவர்கள் குறிப்பாக உடல் எடையை குறைக்க நினைப்பவர்கள் பேலியோ உணவு முறையை பின்பற்றி 90% நேரடியான கொழுப்பு உணவான மாமிசம், கொட்டை உணவுகள் போனால் போகிறதென்று 10% தானியம், காய்கறிகளை எடுத்துக்கொண்டால் போதும்🐿 10 நாட்களிலேயே உடல் எடையில் நல்ல மாறுதலை உணரலாம்🌻 6 மாதத்தில் 30 கிலோ குறைந்தேன், ஒருவருடத்தில் 80 கிலோ குறைந்தேன்🕷 இப்ப சக்கரையில்லை🐧 கொழுப்பும் இல்லை 🐇 என்றெல்லாம் பேலியோ காரர்கள் தனது அனுவங்களைப் பகிர புற்றீசல்களைப் போல பலரும் இந்த உணவுமுறைக்கு மாறிவருகிறார்கள், சில மருத்துவர்களும் இந்த உணவு முறையை பரிந்துரைக்கிறார்கள்🌻 இதில் கொடுமை என்னவெனில் பல சைவ உணவுக்காரர்களும் எடையை குறைக்கும் ஆசையில் இந்த கோதாவில் இறங்கி உடலை குறைத்தேனே உயிரை வளர்த்தேனே என்று எக்காளமிடுகிறார்கள்🐄 ஆனால், உண்மையில் இந்தப் பேலியோ உணவு ஒரு சரிவிகித உணவல்ல, எடையைக் குறைக்க, நோய்களை கட்டுப்படுத்த இது ஒரு சரியான தீர்வும் இல்லை🌺 ஏனெனில் 90 சதவீதம் கொழுப்பு உணவுகளை தொடர்ந்து எடுத்துக்கொண்டு மாவுச்சத்தை எடுக்காமல் இருப்பதாலேயே எடை குறைகிறது. அதே நேரம் உடலில் ஏற்கனவே சேமிக்கப்பட்ட மாவுச்சத்தான கார்போஹைட்ரட்டை உடல் தனது தேவைக்கு பயன்படுத்திக் கொள்கிறது.🕸 ஆனால், தொடர்ந்து முறையை பல ஆண்டுகள் கடைப்பிடிக்கும் போது உடல் மெட்ட பாலிசம் பாதிக்கப்பட்டு உடல் சோர்வு ஏற்படுவதோடு பக்கவாதம், இருதய செயலிழப்பு போன்ற பல கொடிய வியாதிகள் உருவாகும்.🌞 ஏனெனில் மனித உடலே பஞ்ச சக்திகளின் ஆற்றல்தான் இதில் அதிக வெப்ப சக்தியை கொடுக்கும் மாமிச கொழுப்பு உணவுகளை மட்டுமே அதிகமாக எடுக்கும் போது நீர்சக்தி, நிலசக்தி, காற்று சக்தி, ஆகாயசக்தி போன்றவை பாதிக்கப்பட்டு பெரிய பாதிப்புகள் ஏற்படுவது உறுதி.🌧! ஆனால், இது உடனடியாக தெரியாது. ஏனெனில் ஒவ்வெரு உடல் பாகங்களுக்கும் தேவையான இயங்கு சக்தி ஏதேனும் ஒருவகையில் கிடைக்கும் வரையில் உறுப்புகளில் பாதிப்புதெரியாது🌟 இது எப்படியெனில் தினமும் 500 மில்லி ஆல்ககால் உட்கொள்ளும் மனிதனுக்கோ அல்லது சில வருடங்களாக தொடர்ந்து இரவு விழுத்திருந்து பகலில் தூங்கும் மனிதனுக்கோ அதன்பாதிப்பு உடனடியாக தெரியாது.🐼 ஆனால் இயற்கைக்கு மாறாக இயங்கியதன் பாதிப்பு வந்தே தீரும்.! இதுவரை பேலியோ உணவை ஆராய்ந்த அத்தனை ஆராய்ச்சிகளிலுமே இதன் பாதிப்புகளை உடனே கண்டறிய முடியவில்லை. ஆனால், உடல் எடையை வேகமாக குறைக்கிறது. அப்படி குறைப்பதுகூட ஆபத்துதான் உடல் எடையை சீரன அளவிலேயே குறைக்க வேண்டும் என்று எச்சரிக்கிறார்கள்.🌷 ஆனால், இந்த போலியோ டயட் ஆதரவளார்களே தங்களுக்குள் இயக்கம் ஆரம்பித்து சமூக ஊடகங்களின் வாயிலாக மிகப்பெரிய பரப்புரைகளை செய்து எத்தைத்தின்றால் பித்தம் கூடும் என்று உடல் பருமனை குறைக்க அலைபவர்களை குறிவைத்து கொடுக்கிறார்கள்🐝 மாவுச்சத்தை எடுக்காமல் வெறும் மாமிசத்தை மட்டும் எடுத்தால் எடை குறையத்தான் செய்யும் இதில் ஆச்சரியம் ஒன்றும் இல்லை. சக்கரை வியாதியால் எடை குறைவதிலும் இதுதான் நிகழுகிறது. ஏற்கனவே அதிகமான மாவுச்சத்து உணவை உட்கொண்டு சக்கரையால் குண்டாக இருப்பவர்கள் பிறகு புதிய உணவுப் பழக்கத்திற்கு மாறுவதாலேயே எடையை இழக்கிறார்கள்🐪 சக்கரையால் அல்லவே அல்ல.! ஆனால், போலியோ காரர்களாவது அதிக மாமிச கொழுப்பை எடுக்கிறார்கள் சக்கரைக் காரர்களுக்கு அதுவும் இல்லை☘ பிறகெப்படி உடல் குறையாமல் இருக்கும்🌿 ஆகவே ஜகத்தோரோ 🐾 பேலியோ டயட், சுகர் டயட் என்றெல்லாம் சரிவிகிதம் இல்லாத உணவு முறைகளைப் பின்பற்றி உடலை வதைக்காமல் பிடித்த இயற்கை உணவு, முறையான யோகப் பயிற்சி, சரியான வாழ்க்கை முறையை பின்பற்றி என்றும் ஆரோக்கியமாய் வாழுங்கள்.💥☘🌺 amyogatrust.blogspot.in AM HERBALS mobile:9629368389 நலம் பெருகட்டும் …
No comments:
Post a Comment