Sunday, June 26, 2016

கொழுப்பைக் கரைக்கும் கொடம்புளி

உடல் பருமனால் ஆண்களும், பெண்களும் பெருமளவு பாதிக்கப்பட்டுள்ளனர். இவர்கள் சிறிது தூரம் நடந்தாலோ, மாடிப் படிகளில் ஏறினாலோ மூச்சிரைக்கும். அப்படியே உட்கார்ந்துவிடுவார்கள். இதனால் இவர்கள் அதிக மன உளைச்சலுக்கு ஆளாகின்றனர்.

சிலர் எடையைக் குறைக்கிறோம் என்ற விளம்பரங்களை நம்பி ஏமாந்து பணத்தை இழப்பதுதான் மிச்சம்.

பொதுவாக ஒருவருடைய எடை அவருடைய நடுத்தர வயதில்தான் அதிகரிக்க ஆரம்பிக்கும். ஆனால் இன்று சிறு பிள்ளைகள் கூட குண்டாகி அவதிக்குள்ளாகின்றனர்.

இதற்கு நாம் உண்ணும் உணவுதான் முக்கியக் காரணமாகிறது. உணவில் உள்ள கொழுப்பு உடலில் தங்கி விடுவதால் உடல் பெருத்துவிடுகிறது.

உடல் எடையைக் குறைக்க சிலர் பட்டினி கிடப்பார்கள். அது தவறு. மருந்து மாத்திரைகளை உபயோகித்தாலும் உடல் எடை குறையாது.

உணவும், உடற்பயிற்சியும் தான் உடல் எடையை முறையாகக் குறைக்கும் மருந்தாகும்.

அதற்கு கொடம்புளி மிகவும் பயனுள்ளதாக இருக்கிறது.

கொடம்புளி இந்தியாவில் கன்னியாகுமரியிலும், கேரளாவிலும் அதிகம் பயன்படுத்துகிறார்கள். இலங்கை மக்களும் புளிக்குப் பதிலாக கொடம்புளியைப் பயன்படுத்துகிறார்கள்.

கொடம்புளியின் பூர்வீகம் இந்தியாதான். தற்போது தென்கிழக்கு ஆசிய நாடுகளிலும் விளைகின்றது.

Tamil : Kodumpuli

Sanskrit : Vrikshamla

English : Brindel berry

Telugu : Sima chinta

Malayalam : Kodumpuli

இதன் பழம் மஞ்சள் நிறத்தில் இருக்கும். இதன் மேல் தோலுடன் உள்ள தசைப் பகுதிதான் மருத்துவத் தன்மை கொண்டது.

உடல் பருமன் குறைய

உடல் பருமன் உள்ளவர்கள் சமையலில் இந்த கொடம்புளியை சேர்த்துச் சாப்பிட்டு வந்தால் உடல் பருமன் குறையும்.

இந்த கொடம்புளியில் உள்ள ஹைட்ராக்ஸி சிட்ரிக் அமிலம் என்ற வேதிப்பொருள் தான் உடலின் எடையைக் குறைக்க பெரும் வகையில் உதவுகிறது.

உண்ணும் உணவில் இருக்கும் அதிகப்படியான மாவுச்சத்துக்கள் அனைத்தும் கொழுப்புச் சத்தாக மாறுகின்றது. இதனால் கொழுப்புப் படலம் உடலில் தங்கி உடலைப் பருமனாக்குகிறது.

இந்த மாவுச் சத்தை கொழுப்புச் சத்தாக மாறாமல் ஹைட்ரஸி சிட்ரிக் அமிலம் தடுக்கிறது. இதனால் உடலில் கொழுப்புச் சத்து உருவாவது தடுக்கப்படுகிறது. மேலும் உடலுக்குத் தேவையான ஊட்டச்சத்தக்கள் அனைத்தும் கிடைக்கின்றன.

பசியை அடக்கும்

கொடம்புளியை தினமும் உணவில் சேர்த்து வந்தால் அதிகப் பசியைக் கட்டுப்படுத்தும். சீரண மண்டலத்தை பலப்படுத்தும். இதனால் உடலில் உள்ள கொழுப்பு வெகு விரைவில் கரையும்.

மலச்சிக்கல் தீர

புளிக்குப் பதிலாக கொடம்புளியை உணவில் சேர்த்து வந்தால் மலச்சிக்கல் தீரும்.

மூட்டுவலி நீங்க

கொடம்புளியின் விதையை நீக்கி அதன் சதைப் பகுதியை நீரில் கொதிக்க வைத்து கஷாயமாக்கி அருந்தினால் மூட்டுவலி குணமாகும். உடலில் உள்ள வாத பித்த குற்றத்தைச் சீர்படுத்தும்.

இலங்கை மக்களும், கேரள மக்களும் பழங்காலம்தொட்டே இந்த கொடம்புளியைப் பயன்படுத்தி வந்துள்ளனர்.

நாமும் கொடம்புளியை உணவில் சேர்த்து அதன் பயன்களை அடைவோம்.

மரு.கிருஷ்ணன்

பித்தப்பை கற்கள்

பித்தப்பை கற்களை நாமாகவே அகற்றலாம் :-
++++++++++++++++++++++++++++++++++++++

புற்றுநோய்க்கு அடிகோலும் பித்தப்பை கற்களை, நாமே இயற்கை வழியில் அகற்றலாம். மேலும் இந்த வழிமுறை, வலுவிழந்த நமது கல்லீரலை, புத்துணர்வு பெறவும் உதவுகிறது.

ஐந்து நாட்களுக்கு, தொடர்ந்து 4 கிளாஸ் ஆப்பிள் ஜூசையோ அல்லது தினமும் 4 அல்லது 5 ஆப்பிள்களை உண்டுவரவும். பித்தப்பையில் உள்ள கற்களை மிருதுவாக்க, ஆப்பிள் ஜூஸ் உதவும்.

ஆறாம் நாளில், மாலை 6 மணி மற்றும் இரவு 8 மணிக்கு சுடுநீரில் எப்சம் உப்பை (மெக்னீசியம் சல்பேட்) கலந்து குடிக்கவும்.

எப்சம் உப்பு, பித்தப்பை குழாய் திறப்பை எளிதாக்கும்.

இரவு 10 மணிக்கு, அரை கோப்பை ஆலிவ் எண்ணெய் அல்லது எள்ளு எண்ணெயை, அதே சம அளவுள்ள எலுமிச்சை சாறுடன் நன்கு கலக்கி குடிக்கவும். இது பித்தப்பை குழாய் வழியே, கற்கள் வெளியேற வழிவகுக்கும்.

அன்றைய தினத்தில், இரவு நேர உணவை தவிர்க்க வேண்டும்.

மறுநாள் காலை, இயற்கை உபாதையில், பச்சை நிற பித்தப்பை கற்கள் வெளியேறி இருப்பதை காணலாம்.

விஷ உணவுகளுக்கு விடை கொடுப்போம் !

பாரம்பரிய உணவுகளுக்கு உயிர்கொடுப்போம் !  - இணையப்பகிர்வு

Saturday, June 18, 2016

சர்க்கரை நோய்

இதைத்தான் சர்க்கரை நோய் என்கிறார்கள் !
--------------------------------------------

அனைவரும் அலோபதி மயக்கத்தில் முழ்கி இருக்கும் இந்த நாட்டில், நம் மரபு மருத்துவத்தை தேடி வந்த உங்கள் அனைவருக்கும் என் வணக்கத்தை தெரிவித்து கொள்கிறேன்.

இன்று நாம் அனைவரும் கூடியிருப்பது சர்க்கரை நோய் என்று சொல்லப்படும் நீரிழிவு பிரச்சனையை பற்றி முழுமையாக தெரிந்து கொள்ளவே.

முதலில் நம் உடல் எதனால் உருவானது என்று பார்போம்.

நமது உடல் பல லட்சம் கோடிக்கனக்கான செல்களால் ஆனது. ஒவ்வொறு செல்களுக்கும் அறிவு இருக்கிறது. இதன் முக்கிய வேலை நாம் உண்ணும் உணவில் உள்ள சத்துக்களை உட்கிரகித்து, கழிவுகளை  வெளியேற்றவது. உட்கிரகித்தல், வெளியேற்றுதல் இதன் முக்கிய வேலை.

உதாரணத்திற்கு ஒரு மண் பொம்மையை காட்டி, தலையை சுட்டிக்காட்டி இது என்ன என்று கேட்டால், தலை என்பீர்கள். கால்களை சுட்டிக்காட்டி இது என்ன என்று கேட்டால், கால் என்பீர்கள். இந்த இரண்டு பகுதியையும் கையால் நசுக்கி பொடித்தால் அங்கு என்ன இருக்கும் ?...... எண்ணில் அடங்கா சிறு, சிறு மண் துகள்கள் மட்டுமே இருக்கும் அல்லவா.

இது போல் தான் நம் உடலும் உச்சந்தலை முதல் உள்ளங்கால் வரை பல லட்சம் கோடிக்கணக்கான செல்களால் ஆனது.

இப்பொழுது உடல் எப்படி இயங்குகிறது என்று பார்ப்போம்.

பொதுவாக ஒரு பொருள் இயங்க வேண்டும் என்றால் என்ன வேண்டும் ?..... ம் சொல்லுங்க. ஏதாவது ஒரு எரிபொருள் வேண்டும் அல்லவா.

உதாரணத்திற்கு வாகனங்கள் இயங்க வேண்டும் என்றால், பெட்ரோல் என்கிற எரிப்பொருள் வேண்டும். மின் சாதனம் இயங்க வேண்டும் என்றால் ?... மின்சாரம் வேண்டும்.

இது போல் நமது உடல் இயங்க வேண்டும் என்றால் என்ன வேண்டும் ? நமது உடலுக்கு எது எரிபொருள் ? உணவு வேண்டும்ங்க. சரி அந்த உணவு செரிமானத்தின் கடைசியில் என்ன வாக மாறுகிறது ? நாம் உண்ணும் மாவுச்சத்துக்கள் தேவையான அளவு சர்க்கரையாக மாறுகிறது, மீதம் உள்ளவை புரதமாகவோ, கொழுப்பாகவோ மாற்றப்படுகிறது. சர்க்கரை என்பது நாம் பயன்படுத்தும் இனிப்பல்ல இது ஒரு சத்துப்பொருள்.

நாம் உண்ணும் உணவில் இருந்து கிடைக்கும் இந்த சர்க்கரை எனும் சத்துப்பொருள் செல்கள் உட்கிரகித்து, எரித்து வெப்ப சக்தி வழங்குகிறது.

இந்த வெப்ப சக்தியால் தான் நாம் இயங்குகிறோம்.

இப்ப சொல்லுங்க நாம் இயங்குவதற்கு என்ன வேண்டும் ?...... சர்க்கரை எனும் சத்துப்பொருள் வேணுமுங்க.  சரியா சொன்னிங்க.

ஒரு பெரியவர் படுத்த படுக்கையாக இருக்கிறார் என்று வைத்துக்கொள்வோம். அவர் உடலை தொட்டுப்பார்த்தால் எப்படி இருக்கும் ?... உடல் சூடாக இருக்கும். அடுத்தநாள் இயற்கை எயதி விட்டார், இப்பொழுது உடலை தொட்டுப்பார்த்தால் எப்படி இருக்கும்?... உடல் ஐஸ் போல் இருக்கும்.

உயிரோடு இருக்கும் போது உடலில் என்ன இருந்தது ?... வெப்பம் இருந்தது. உயிர் இல்லாத போது உடலில் என்ன இல்லை ?... வெப்பம் இல்லை.

இப்பொழுது சொல்லுங்க உயிரோடு இருக்க வேண்டும் என்றால் என்ன வேண்டும் ?.... வெப்பம் வேணுமுங்கோ. வெப்பம் சக்தி எப்படி நமக்கு கிடைக்கிறது ?... உணவில் உள்ள சர்க்கரை (மாவுச்சத்து) செல்களால் எரிக்கப்பட்டு வெப்ப சத்தி கிடைக்குதுங்க.

இப்ப சொல்லுங்க, நாம உயிரோட இருக்கனும் நா என்ன வேண்டும் ?... சர்க்கரை வேணும் ங்க. சரியா சென்னிங்க. இவருக்கு எல்லோரும் கை தட்டுங்க.

பாருங்கள் மக்களே. நாம் உயிரோடு இருக்க தேவைப்படும் ஒரு அதிஅவசிய சர்க்கரை என்னும் சத்துப்பொருளால் நமக்கு நோய் ஏற்படுகிறது என்கிறார்களே, இதுவே இவர்களின் உச்சகட்ட கொடூர மனப்பான்மையை வெளிப்படுத்துகிறது.

இது வரைக்கும் உடல் எதனால் ஆனது., எப்படி இயங்குகிறதென்று பார்தோம்.

இப்பொழுது செரிமானத்தை பற்றி பார்போம்.

நாம் உண்ணும் உணவு வாயில் உமிழ் நீருடன் கலந்தவுடன் செரிமானம் ஆக துவங்கிவிடுகிறது, பின் வயிற்றில் அமிலத்துடன் கலந்து செரிக்கப்பட்டு, சிறுகுடலுக்கு செல்கிறது இங்கு பித்த பையில் இருந்து வரும் பித்த நீரால் செரிக்கப்படுகிறது. பின் இந்த செரிக்கப்பட்ட உணவுக்கூழில்  உள்ள சத்துக்கள் சிறுகுடலின் கடைசிப்பகுதியில் இரத்ததில் கலக்கிறது. பின் கழிவுகள் பொருங்குடலுக்கு சென்று வெளியேற்றப்படுகிறது.

வாய், வயிறு, சிறுகுடலில் செரிமானம் சரியாக நடந்தால், இரத்தத்தில் கலந்த சத்துப்பொருட்கள் தரமான சத்துப்பொருட்களாக இருக்கும். செரிமானம் சரி இல்லை என்றால். சத்துப்பொருட்கள் தரமற்றவையாக இருக்கும்.

பொதுவாகவே நமது உடலுக்கு நன்மையை ஏற்றுக்கொள்ளும் திறனும். தீமையை வெளியேற்றும் திறனும் இயல்பாவே இருக்கிறது.

எப்படி என்று கேட்கிறீர்களா ? இதோ செயல் முறை விளக்கம்.

இப்பொழுது நீங்கள் பசி யோடு இருக்கிறீர்கள் என்று வைத்துக்கொள்வோம். நான் உங்களுக்கு மிகவும் பிடித்த உணவை உங்கள் கண் முன்னே கொண்டு வந்து காட்டிச்செல்கிறேன். இப்பொழுது வாயில் என்ன மாற்றம் நிகழும் ?.... ஐய்யா எச்சில் ஊறுகிறது. ம் சரி.
அதே உணவை உங்கள் கண் முன்னே கீழே போட்டு மிதித்துவிட்டேன், அதை அப்படியே தட்டில் எடுத்து வைத்து மீண்டும் உங்கள் அருகில் கொண்டு வந்து காட்டிச்செல்கிறேன். இப்பொழுது எப்படி இருக்கும் ? உமிழ் நீர் சுரக்குமா ?.... சுரக்கவில்லைங்க, கொமட்டீட்டு தான் வருகிறது.

இவ்வளவுதாங்க விடையமே. நல்லதிற்கு நமது உடல் உமிழ் நீர் சுரந்து ஏற்றுக்கொள்கிறது. கெட்டதற்கு உமிழ் நீர் சுரக்காமல் ஏற்க மறுக்கிறது.

நமது உடலில் பல சுரபு உறுப்புகள் இருக்கின்றன. உமிழ் நீர் சுரபிகள், தைய்ராய்டு, தைமஸ், கணையம் போன்ற பல சுரப்புறுப்புக்கள் இருக்கிறது.

இதே போல் தான் கணையமும். இரத்தத்தில் இருக்கும் நல்ல சர்க்கரைக்கு இன்சுலின் சுரக்கிறது கெட்ட சர்க்கரைக்கு இன்சுலின் சுரப்பதில்லை.

எது நல்லது, எது கெட்டது. முன்னால் பார்த்தோம் அல்லவா. செரிமானம் சரியாக இருந்தால் இரத்தத்தில் கலக்கும் சத்துப்பொருள் தரமானதாக இருக்கும் எனவும். செரிமானம் சரி இல்லை என்றால் தரமற்றவையாக இருக்கும்.

தரமான சர்க்கரையை, நல்ல சர்க்கரை என்றும். தரம் குறைந்த சர்க்கரை கெட்ட சர்க்கரை, என்றும் வைத்துக்கொள்வோம்.

நமது உடல் என்ன செய்யும் என்று செயல் விளக்கத்தோடு பார்தோம் ? நல்லதை ஏற்றுக்கொள்ளும், கெட்டதை வெளியேற்றும்.

அதேப்போல் தான் நல்ல சர்க்கரை ஏற்றுக்கொள்ளப்படுகிறது. கெட்ட சர்க்கரை சிறுநீரகம் மூலம் வெளியேற்றப்படுகிறது.

சரி. நாம் இப்பொழுது உண்கிறோம். என்ன நடக்கிறதென்று பார்ப்போம்.

உணவு வாயில் போட்டவுடன் உமிழ் நீர் கலந்து செரிமானம் வேலை ஆரம்பமாகிறது. பின் உணவு வயிற்றுக்கு செல்கிறது இங்கு அமிலம் மற்றும் பல செரிமான நீர்களுடன் கலந்து செரிமானம் ஆகிறது. பின் சிறுகுடலுக்கு சென்று பித்த நீர் கலந்து செரிமானம் ஆகிறது. சிறுகுடல் இறுதியில் சத்துப்பொருட்கள் இரத்தத்தில் கலக்கிறது.

நீங்கள் உண்ட உணவு அறைகுறையாக செரிமானம் ஆகி உள்ளது என்று வைத்துக்கொள்வோம். எனவே பாதி தரமான சத்துப்பொருளும், பாதி தரம் குறைந்த சத்துப் பொருளும் கிடைக்கிறது. இவை அனைத்தும் இரத்தத்தில் கலந்தாச்சு.

உதாரணத்திற்கு 100 சர்க்கரை கிடைத்துள்ளது என்று வைத்துக்கொள்வோம். இதில் 50 நல்ல சர்க்கரை, 50 கெட்ட சர்க்கரை. இது அனைத்தும் இரத்தில் ஒடிக்கொண்டிருக்கிறது. கணையம் அருகே வரும் போது. கணையம் ஒவ்வொறு சர்க்கரையாக பரிசோதனை செய்து பார்க்கும். இவை தரமானதா, தரமற்றதா. உடலுக்கு நன்மை செய்யக்கூடியதா, தீமை செய்யக்கூடியதா என்று பரிசோதித்து, நல்ல சர்க்கரைக்கு மட்டும் இன்சுலின் வழங்கும், ஒரு கெட்ட சர்க்கரைக்கும் கூட இன்சுலின்  வழங்காது.

நாம் முன்னே செயல் விளக்கத்தோடு பார்த்தோம் அல்லவா. உடல் நல்ல உணவிற்கு உழிழ் நீர் சுரந்தது, கெட்ட உணவிற்கு சுரக்கவில்லை. இதேதான் இங்கேயும் நடக்கிறது.

தற்போது இன்சுலினுடன் 50 சர்க்கரையும், இன்சுலின் இல்லாமல் 50 சர்க்கரையும் இரத்தத்தில் ஒடிக்கொண்டிருக்கிறது. செல்கள் இன்சுலின் உள்ள சர்க்கரைக்கு மட்டுமே கதவை திறக்கும். இந்த 50 நல்ல சர்க்கரையும் செல்களுக்குள்ளே போய்விடும். பின் இது எரிக்கப்பட்டு வெப்ப சத்தி நமக்கு கிடைக்கிறது. இந்த சத்தி மூலமே நாம் இயங்குகிறோம்.  இன்சுலின் இல்லாத சர்க்கரையை சிறுநீரகம் கண்டறிந்து சிறுநீர் மூலமாக வெளியேற்றிவிடுகிறது. உடலே நல்லதை, கெட்டதை கண்டறிந்து என்ன செய்ய வேண்டுமோ அதை செய்துவிட்டது. நாம் இப்பொழுது ஆரோக்கியமாக இருப்போம்.

நீங்கள் செய்யும் வேலைக்கு 30 சர்க்கரை போதும் என்று வைத்துக்கொள்வோம். மீதம் உள்ள 20 நல்ல சர்க்கரையை உடல் என்ன செய்யும் ?... உதாரணத்திற்கு நமக்கு தேவையைவிட பணம் அதிகம் இருந்தால் என்ன செய்வோம், சேமித்து வைப்போம் அல்லவா. அது போல் தான் உடல் தேவைக்கு அதிகமாக இருக்கும் சர்க்கரையை கூட்டு சர்க்கரையாக (Glycogen) செரிவூட்டி கல்லீரல், தசைநார்களில் சேமித்துவைத்துக்கொள்கிறது.

இந்த சேமிக்கப்பட்ட சர்க்கரை எப்போது எதற்கு பயன்படுகிறது, நாம் செய்யும் வேலைக்கு நல்ல சர்க்கரை போதவில்லை என்றால் லேசாக கிறுகிறுப்பு ஏற்பட்டு கண்கள் இருட்டடையும் போது இந்த சேமிக்கப்பட்ட சர்க்கரை இரத்தத்தில் கொட்டப்படுகிறது. நமக்கு ஏதாவது காயம் எற்பட்டால், அந்த காயத்திற்கு அருகில் இருக்கும் தசைநார்களில் சேமிக்கப்பட்ட சர்க்கரை அங்கு இருக்கும் செல்களை புதுப்பித்து காயத்தை ஆற்ற பயன்படுத்தபடுகிறது. நமக்கு எங்காவது விபத்து ஏற்பட்டு ரோட்டில் கிடந்தால், உறுப்புகள் சீராக இயங்குவதற்காக சேமிக்கப்பட்ட சர்க்கரை இரத்தத்தில் கொட்டப்பட்டு நமது உயிரை காக்க பயன்படுகிறது.

நாம் எப்படி நமக்கு பணம் இல்லாத போது சேமித்த பணத்தை பயன்படுத்துகிறோமோ. அது போல் நமது உடல் ஆபத்து காலங்களில் சேமிக்கப்பட்ட சர்க்கரையை பயன்படுத்துகிறது.

இப்ப சொல்லுங்க மனிதனுக்கு எது உண்மையான சொத்து ?... பணம் காசு வீடு, வாகனமா ? நிச்சயம் கிடையாது. நாம் சேமித்த சர்க்கரையே நமக்கு உண்மையான சொத்து.

எவர் வந்தாலும் வராவிட்டாலும். எது இருந்தாலும் இல்லாவிட்டாலும். இறுதியில், இந்த சர்க்கரையே உங்கள் கூட இருந்து உயிரை காக்கும். நாம் எதற்கு அதிக முக்கியத்துவம் தர வேண்டும் என்று நீங்களே முடிவு செய்து கொள்ளுங்கள்.

10 நிமிட இடைவேளைக்கு பிறகு சந்திப்போம்.

எல்லோரும் வந்தாச்சுங்களா ! சரி ஆரம்பிப்போம்.

இப்பொழுது நமது உடல், நல்ல சர்க்கரை, கெட்ட சர்க்கரை, அதிகப்படியான நல்ல சர்க்கரைகளை எப்படி கையாள்கிறது என்று பார்தோம். இது மனிதன் தோன்றிய காலம் முதல் நடந்து வரும் இயற்கை நிகழ்வு.

இந்த மாவுச்சத்து பொருளுக்கு எவன் சர்க்கரை என்று பெயர் வைத்தான் என்று தெரியவில்லை. இது நம்மை குழப்புவதற்காக சூழ்ச்சி செய்து வைக்கப்பட்டுள்ளது. செரிமான கோளாறால் ஏற்படும் அதிக நீரிழிவு பிரச்சனைக்கு எவன் சர்க்கரை நோய் என்று பெயர் வைத்தான் என்று தெரியவில்லை.

நாம் உண்ணும் சர்க்கரைக்கும் (இனிப்பு) இந்த சர்க்கரை நோய் என்று சொல்லப்படும் நீரிழிவு பிரச்சனைக்கும் துளி கூட சம்மந்தம் கிடையாது.

சர்க்கரை என்பது ஒரு சுவை. அவர்கள் கூறும் சர்க்கரை (மாவுச்சத்து) என்பது ஒரு சத்து பொருள்.

மனிதனுக்கு செரிமானம் நன்றாக இருக்க வேண்டும் என்றால் இனிப்பு சுவை மிக மிக அவசியமானது. இனிப்பு சுவையால் மட்டுமே உங்கள் வயிற்றிற்கும், மண்ணீரலுக்கும் சக்தி வழங்க முடியும்.

இலை போட்டு முதலில் இனிப்பு வைத்தவன் எல்லாம் முட்டாள்

வீட்டு தின்னையில் வழிப்போக்கர்களுக்கு ஒரு மூடி தேங்காயும் ஒரு உருண்டை கருப்பட்டி வைத்தவன் எல்லாம் முட்டாள்.

விழா காலங்களில் இனிப்பு பண்டம் செய்து உண்டவன் எல்லாம் முட்டாள்.

இனிப்பை சாப்பிடக்கூடாது என்று சொல்லும் ஆங்கில மருத்துவர்கள் அறிவாளிகள்.

எதற்கு இலையில் முதலில் இனிப்பை வைத்தார்கள் ? அனைத்து உணவையும் சாப்பிட்டுவிட்டு இறுதியில் இனிப்பை வீட்டிற்கு மூட்டைகட்டி செல்லவா !,  இனிப்பை முதலில் உண்ண வேண்டும். இனிப்பு சுவை நாக்கில் பட்டவுடன் மின்காந்த அலையாக மாறி நேரடியாக வயிற்றிற்கும், மண்ணீரலுக்கும் சக்தியை வழங்குகிறது. பின் நாம் என்ன சாப்பிட்டாலும் அது நன்கு செரிமானம் ஆகி நல்ல சத்துக்களாக இரத்தத்தில் கலக்கிறது.

உங்கள் மருத்துவர் என்ன சொல்லுவார் இனிப்பு சாப்பிடக்கூடாது. இனிப்பு சாப்பிடாவிட்டால் வயிறு, இதற்கு சக்தி வழங்கும் மண்ணீரலுக்கு சத்தி கிடைக்காது. இப்பொழுது உணவு உண்டால் செரிமானம் எப்படி இருக்கும் ? அறைகுறையாக. கிடைக்கும் சத்துப்பொருட்கள் பெரும்பாலும் கெட்ட சத்துப்பொருளாகவே இருக்கும். இவைகளை உடல் என்ன செய்யும் சிறுநீர் மூலம் வெளியேற்றிவிடும். நாம் எப்படி இருப்போம் சோர்வுடன் நோயாளியாகவே இருப்போம்.

நம்மை நோயாளியாக்கி சாகடிப்பதற்காக இவர்கள் செய்த முதல் தந்திரம். மாவுச்சத்திற்கு சர்க்கரை என்று பெயர் வைத்தது, இனிப்பு சாப்பிடக்கூடாது என்று சொன்னது.

இனிப்பை சாப்பிடக்கூடாது என்று செரிமானத்தை கெடுத்ததோட விட்டார்களா ! இல்லை.

இவர்களின் அடுத்த கட்ட கொலைகார செயல்களை பார்போம்.

இப்பொழுது உங்களுக்கு அதிக நீரிழவு, தாகம், சோர்வு, அதிக பசி. ஏற்படுகிறது இவை அனைத்திற்கும் என்ன காரணம்? அரைகுறை செரிமானத்தால் இரத்தத்தில் கலந்த கெட்ட சத்துப்பொருட்கள் வெளியேறுவதே காரணம். நீங்கள் என்ன செய்ய வேண்டும் ? செரிமானம் சரியாக என்ன வழிவகையோ அதை செய்ய வேண்டும். செரிமானத்தை சரி செய்தால் மேலே குறிப்பிட்ட அனைத்து பிரச்சனைகளும் சரியாகும்.

ஆனால் நீங்கள் என்ன செய்வீர்கள்,  உங்கள் அருகில் உள்ள மேதாவி உனக்கு சர்க்கரை நோய் இருக்கக்கூடும் போய் பரிசோதித்துக்கொள் என்பார். நீங்களும் பரிசேதனை செய்து பார்க்க போவீர்கள். அங்கு எவன் எப்பொழுது மாட்டுவன் எப்படியெல்லாம் அவன் தலையில் மிளகாய் அரைக்கலாம் என்று 5 வருடம் படித்துவிட்டு வெள்ளை கோர்ட்டு போட்டு கழுத்தில் பாசக்கயிறை மாட்டிக்கொண்டு ஒரு பூதம் உட்காந்திருக்கும். உங்கள் இரத்தத்தை பரிசோதனை செய்து பார்த்து, உங்களுக்கு சர்க்கரை அதிகம் உள்ளது. நீங்கள் சர்க்கரை நோயின் ஆரம்பகட்டத்தில் உள்ளீர்கள் என்பார்கள். இதில் என்ன பரிதாபமான விடையம் என்றால். நல்ல மற்றும் கெட்ட சர்க்கரை இரண்டிற்கும் இவர்களுக்கு வித்தியாசம் தெரியாது, இரண்டுமே சேர்த்துதான் இவர்களால் சொல்ல முடியும்.

அந்த சர்க்கரை நல்ல சர்க்கரையா, கெட்ட சர்க்கரையா ? கணையம் பரிசோதித்து இன்சுலின் வழங்கப்பட்டுவிட்டதா இல்லையா ? சர்க்கரை செல்களுக்குள் சென்று எரிக்கப்பட்டுவிட்டதா ? சிறுநீரகத்தால் கெட்ட சர்க்கரை கண்டரிந்து வெளியேற்றப்பட்டுவிட்டதா அல்லது வேலை நடந்து கொண்டிருக்கிறதா ? அதிக நல்ல சர்க்கரை தசைநார்களில் சேமிக்கப்பட்டுவிட்டதா, இல்லை சேமிப்பு வேலை நடந்து வருகிறதா ? நீங்கள் செய்யும் வேலைக்கு சர்க்கரை போதுமானதா இல்லையா என்று எதுவும் அந்த அப்பாவி Robotic மருத்துவர்களுக்கு தெரியாது. இவர்களுக்கு தெரிந்ததெல்லாம் அளவுகளை பார்த்து மாத்திரை கொடுப்பது மட்டுமே.

நல்ல சர்க்கரைக்கும், கெட்ட சர்க்கரைக்கும் இயந்திரங்களுக்கு வித்தியாசம் தெரியாது. இரண்டிற்கும் ஒரே Chemical formula வைத்தான் காட்டும், Glucose - C6H12O6. இதோ உதாரணம் அடிக்கரும்பு எப்படி இருக்கும் ?... நன்கு இனிப்பு சுவை உடையதாக இருக்கும் ங்க. சரி நுனிக் கரும்பு எப்படி இருக்கும் ?...
இனிப்பு குறைவாக சல்லென்று இருக்கும். இந்து அடிக்கரும்பையும், நுனிக்கரும்பையும் ஒரு Lab ல் கொடுத்து பரிசோதனை செய்யது பாருங்கள் Sucrose - C12H22O11 என்று ஒரே Chemical formula வைதான் காட்டும். எப்படி நமக்கு சுவையில் வித்தியாசம் தெரிந்து இயந்திரத்திற்கு தெரியவில்லையோ, அதேப்போல்தான் தரமான சர்க்கரைக்கும்( நல்ல )மற்றும் தரமற்ற சர்க்கரைக்கும் (கெட்ட) உடலுக்கு வித்தியாசம் தொரியும், இயந்திரங்களுக்கு தெரியாது.

இப்பொழுது புரிகிறதா ஏன் ஆங்கில மருத்துவத்திற்கு நல்ல மற்றும் கெட்ட சர்க்கரைக்கு வித்தியாசம் தெரியவில்லை என்று. இவர்கள் தன் சொந்த மூலையை விட மனிதன் உருவாக்கிய இயந்திரத்தை மட்டுமே நம்புவார்கள்.

சரி, இப்பொழுது நீங்கள் சர்க்கரை நோயாளி என்று முத்திரை குத்தப்பட்டுவிட்டார்கள். மாத்திரை எழுதி கொடுத்துவிட்டார்கள்.

இவர் எந்த அளவை வைத்து உங்களை சர்க்கரை நோயாளி என்று முடிவு செய்தார் ? யார் அளவை நிர்ணயம் செய்தது ? இந்த சர்க்கரை மாத்திரை எதற்கு கண்டுபிடிக்கப்பட்து ? உண்மையில் ஆரோக்கியத்திற்கு அளவு ஏதும் உண்டா ? என்று பார்ப்போம்.

ஆங்கில மருத்துவம் அறுவைசிகிச்சை செய்யத்துவங்கும் காலகட்டத்தில், இரத்த போக்கு அதிகம் ஏற்பட்டு உயிரிழப்பு அதிகம் ஏற்பட்டது. அறுவை சிகிச்சையின் போது ஒரு மாத்திரை கொடுக்கப்பட்டு அறுவைசிகிச்சை செய்துபார்த்தார்கள். இது அவர்களுக்கு வெற்றியாக அமைந்து. அறுவை சிகிச்சையின் போது மட்டுமே கொடுக்கப்பட்டு வந்த இந்த மாத்திரையை எப்படி உலகம் முழுவதும் வியாபாரம் செய்து கோடிகோடியாய் பணம் சம்பாதிப்பது என்று இரவு பகலாக ஆங்கில மருத்துவ உலகம், மருந்து மாத்திரை பெருநிறுவனங்கள் இணைந்து ஆலோசனை செய்து ஒரு முடிவிற்கு வந்தார்கள். அந்த முடிவு என்ன ?

மதிய உணவு இடைவேளை பிறகு பார்ப்போம். சரியாக 1/2 மணி நேரம் கழித்து துவங்குவோம்.

சர்க்கரைக்கு அவர்களே ஒரு அளவை நிர்ணயித்து, இதற்கு மேல் சென்றாலும் நோய், கீழ் சென்றாலும் நோய் என்று பொய் பிரச்சாரம் செய்வதென முடிவெடுத்தார்கள்.

இதன் படி உலகம் முழுவதும் பெரும்பாலான மக்கள் மாட்டுவர்கள். இவர்களிடம் மாத்திரை விற்பனை செய்து கோடி கோடியாய் சம்பாதிக்கலாம் என்பதே இவர்களின் நோக்கம்.

ஆரம்ப காலத்தில் இவர்கள் முடிவு செய்த சர்க்கரைக்கான அளவு 40,60 என இருந்தது பின் ஒவ்வொறு 20 வருடங்களுக்கு பிறகு, இது தவறு, இது தான் சரி என்று மாற்றிவிடுவார்கள், 80,100,120,140 என மாற்றம் அடைந்துள்ளது. இவர்கள் முன்னே சொன்ன அளவு எல்லாம் பொய்யா, இதற்கு மாத்திரை சாப்பிட்டு மாண்டவர்கள் எல்லாம் முட்டாளா ?... பதில் யாரிடமும் இல்லை.

இந்த வியாபாரிகள் விரித்த வலையில் தான் நீங்கள் இப்போது சிக்கி உள்ளீர்கள்.

உண்மை என்னவென்றால் சர்க்கரை இவ்வளவுதான் இருக்க வேண்டும் என்ற எந்த அவசியமும் இல்லை. சர்க்கரையை பரிசோதித்து பார்பதே மிகப்பெரிய முட்டாள்தனம்.

ஒரு மினிதன், அவர் வாழும் பகுதி, அவர்கள் பண்பாடு, கலாச்சாரம், அவர் செய்யும் வேலை ( உடல் உழைப்பு), மன நிலை, உணவு, சுற்றுச்சூழல், நீர், செரிமாண மண்டலத்தின் சக்தி, பிராண சக்தி இவைகளை பொருத்து சர்க்கரையின் அளவு ஒவ்வொருவருக்கும் மாறிக்கொண்டே இருப்பது தான் இயற்கை.

உண்மை இப்படி இருக்கும் போது, எதன் அடிப்படையில் உலகம் முழுவதும் அனைத்து மனிதர்களுக்கும், இவர்களால் ஒரே அளவை நிர்ணயம் செய்ய முடிகிறது. இதை வைத்தே தெரியவில்லையா ?.... இவர்களின் நோக்கம் உலக மக்களை நோயாளிகளாக்கி,  அவர்களின் செவ்வம் மற்றும் ஆரோக்கியத்தை சுரண்டும் கொடூர பாவச்செயல்களை செய்கிறார்கள் என்று.

நீங்கள் என்ன செய்தீர்கள், மாத்திரை டப்பாவை வாங்கி வீட்டிற்கு வந்துவிட்டீர்கள். இப்பொழுது உணவெடுக்கிறீர்கள். செரிமானம் அறைகுரையாக இருக்கிறது. இதனால் 70 கெட்ட சர்க்கரையும், 30 நல்ல சர்க்கரையும் இரத்தத்தில் கலக்கிறது என்ற வைத்துக்கொள்வோம். உடல் என்ன செய்யும் 70 கெட்ட சர்க்கரையை கண்டரிந்து சிறுநீர் மூலமாக வெளியேற்றிவிடும். 30 நல்ல சர்க்கரை செல்களுக்குள் சென்றுவிடும்.

இப்பொழுது மாத்திரை சாப்பிடுகிறீர்கள். இது என்ன செய்யும் நேரடியாக கணையத்திடம் சண்டையிட்டு 70 கெட்ட சர்க்கரைக்கும் இன்சுலின் வாங்கி கொடுக்கும் கொடூர செயலை செய்யும், இந்த 70 கெட்ட சர்க்கரையும் இன்சுலினுடன் இரத்தத்தில் சுற்றிக்கொண்டிருக்கும். செல்கள் இன்சுலின் இருப்பதால் கதவை திறந்து ஏற்றுக்கொள்ளும். இந்த கெட்ட சர்க்கரையை செல்களால் சரியாக எரிக்கப்பட்டு வெப்ப சக்தியாக மாற்ற முடியாது. எனவே முதல் முதலில் உங்கள் செல்களில் கழிவு தங்குகிறது.

உதாரணத்திற்கு நல்ல சர்க்கரையை வெயிலில் நன்கு காய்ந்த விறகாக கற்பனை செய்துகொள்ளுங்கள். கெட்ட சர்க்கரையை காயாத ஈர விறகாக கற்பனை செய்துகொள்ளுங்கள். செல்களை அடுப்புகளாக கற்பனை செய்துகொள்ளுங்கள்.

அடுப்பின் வேலை என்ன?.. விறகை எரித்து வெப்ப சக்தி வழங்குவது. செல்களின் முக்கிய வேலை என்ன?.. சர்க்கரையை எரித்து வெப்ப சக்தி வழங்குவது. நன்கு காய்ந்த விறகை அடுப்பில் எரித்தால் அங்கு என்ன மிச்சம் இருக்கும் ?... சிறிது சாம்பல் மட்டுமே. வெப்ப சக்தியும் முழுமையாக கிடைத்துவிடும். ஈர விறகை எரித்தால் என்ன நடக்கும் ?... சரியாக எரியாமல் புகைந்து புகைந்து விறகு அடுப்பில் தங்கிவிடும். சரியாக வெப்ப சக்தியும் கிடைக்காது. இது போல் தான் நம் செல்களும் கெட்ட சர்க்கரையை முழுமையாக எரிக்க முடியாமல் கழிவு செல்களில் தங்கிவிடுகிறது.

உலகத்தில் உள்ள அனைத்து நோய்களுக்கும் ஒரே காரணம்தான். அது என்ன ? இயற்கை விதிமீறல் செயல்களால் கழிவுகள் நமக்குள் தங்குவதே காரணம். கழிவு தேக்கம் நோய். கழிவு நீக்கம் குணம்.

உடல் சரியாக கெட்ட சர்க்கரையை கண்டரிந்து சிறுநீர் மூலம் வெளியேற்றிய தரமற்ற சர்க்கரையை நாம் சொந்த செலவில் மாத்திரை வாங்கி சாப்பிட்டு செல்களுக்குள்ளையே செலுத்துவதுதான் உங்கள் அறிவியலின் உச்சகட்ட அற்புத செயல்.

சாக்கடைக்கு செல்ல வேண்டிய ஒரு தேவையற்ற பொருளை, நாம் செல்களுக்குளே செலுத்துவதால் கழிவுகள் செல்களில் தங்கி அந்த செல் பாதிக்கிறது. இத தொடர்ந்து நடக்கும் போது. அந்து உறுப்பு பாதிக்கிப்படுகிறது. உறுப்புகள் பாதிக்கப்பட்டால் அதன் வேலையை சரியாக செய்ய முடியாது. இதனால் மேலும் கழிவுகள் உள்ளேயே தங்க, சொல்லிலடங்கா துயரங்களுக்கு ஆளாகுகிறோம்.

இப்பொழுது தெரிகிறதா சர்க்கரை நோய் வந்தால் ஏன் எல்லா நோய்களும் வருகிறதென்று. சர்க்கரை நோய் என்னும் நீரிழிவு பிரச்சனை வந்தால் எந்த நோயும் வராது. இதற்கு மாத்திரை அல்லது இன்சுலின் ஊசி போடுவதின் மூலமே அனைத்து நோய்களும் வருகிறது.

சாதாரணமாக உள்ள செரிமானப்பிரச்சனையை சரி செய்திருந்தால் உங்கள் அனைத்து பிரச்சனையும் சரியாகியிருக்கும் அதைவிட்டுவிட்டு, பன்னாட்டு வியாபாரிகளின் கொடிய விசப் பொருட்களை துளி கூட சிந்திக்காமல், அப்படியே நாம் ஏற்றுக்கொண்டதால் உணர்ச்சியற்ற நோய் பிண்டங்களாக காட்சியளிக்கிறோம்.

நீரிழிவு காரணங்கள் !
--------------------------------

சர்க்கரை நோய் என்னும் நீரிழிவு பிரச்சனைக்கு மூன்றே காரணம்தான். அனைத்து நீரிழிவு நோயாளிகளும் இதில் அடங்குவார்கள்.

1 - அதிக கவலை
2 - அவசரமாக சாப்பிடுவது
3 - அதிக உடல் வெப்பம்

சர்க்கரை நோயாளி என்னு சொல்லப்படும் செரிமானக் கோளாறு உள்ளவர்கள் அனைவருக்கும் இதில் ஒரு காரணமாவது நிச்சயம் பொருந்தும். பரிசோதித்து பாருங்கள். என்னங்க நான் சொன்னது சரியா... !

எப்படி குணப்படுத்துவது  ?
-----------------------------------------

1 : கவலை - சாப்பிடும் பொழுது கவலை எல்லாம் மறந்து உணவின் மேல் முழுகவனமும் செலுத்தி சாப்பிட வேண்டும். கவலைக்கு உண்டான காரணங்களை சரி செய்ய முயற்சிக்க வேண்டும்.

2 : அவசரமாக சாப்பிடுவது - அவசரமாக டிக்கட் எடுக்க விரும்புபவர்கள் தாராளமாக அவசரமாக சாப்பிடலாம். "நொறுங்கத்தின்றால் நூறு ஆயுசு", பசி எடுத்தால் மட்டுமே உணவெடுக்க வேண்டும்.
ஒரு முறை நன்கு சிந்தித்து பாருங்கள் நாம் எதற்காக இவ்வளவு பாடுபடுகிறோம் என்று, இறுதியில் சாப்பிடுவதற்காகவே என்று உணர்வீர்கள். அதை இப்பவே உணர்ந்து பொறுமையாக சாப்பிடலாமே. நம் நலனுக்காக நம் உடலை இவ்வளவு பாடுபடுத்துகிறோம், ஏன் உடல் நலனுக்காக நாம் 1/2 மணி நேரம் ஒதுக்கி பொறுமையாக சாப்பிடக்கூடாது.

சாப்பிடும் பொழுது உலகத்தையே மறந்துவிட வேண்டும். உணவிற்கு முன் இனிப்பான பழங்களை சாப்பிட வேண்டும். சாப்பிடும் போது உணவை பார்த்து நமது முழு கவனமும் உணவின் மேல் செலுத்தி மென்று ரசித்து ருசித்து சாப்பிட வேண்டும்.

கோதுமையை முற்றிலும் தவிர்க்க வேண்டும்.

3 : அதிக உடல் வெப்பம் - பச்சை தண்ணீரில் குளிப்பது. வாரம் இரண்டு நாள் எண்ணெய் குளியல். நீர்காய்கனிகளை அதிகம் சாப்பிட வேண்டும்.

இனி இந்த செரிமானப்பிரச்சனையை யாரும் நோய் என்று சொல் வேண்டாம். நீரிழிவு என்பதே பொருந்தும். தேவையில்லாத, கெட்ட சத்து பொருட்கள் அனைத்தும் சிறுநீர் முலமே வெளியேறும், சர்க்கரை மட்டும் அல்ல. நீரிழிவை சரி செய்ய மேலே குறிப்பிட்ட மூன்று காரணத்தையும் சரி செய்தால் குணம் பெற்றுவிடுவீரகள்.

சர்க்கரை நோய் - செரிமானக்கோளாறால் ஏற்படும் நீரிழிவு பிரச்சனை.

தீர்வு - இனிப்பான பழங்களை சாப்பிடுவது. உணவை பசிக்கும் போது மென்று ரசித்து ருசித்து சாப்பிடுவது.

இனி நாம் யாரும் பன்னாட்டு வியாபாரிகளின், உயிரை குடிக்கும் இரசாயண மாத்திரைகளையும் இன்சுலின்களையும் எடுக்க மாட்டோம் என்று உறுதி எடுப்போம். மூளையில், மழுங்கி கிடக்கும் நமது முளையை சற்று பயன்படுத்தி சிந்திக்க துவங்குவோம்.

பன்னாட்டு கொலைகார வியாபாரிகளின், கொடூர வச தன்மை உள்ள பொருட்களை விற்கும் சந்தையாக உங்கள் உடலை மாற்றிவிடாதீர்கள்.

"உள்ளமே பெருங்கோவில்
ஊநுடலே ஆலையமாம்"

ஆலையத்தை ஆரோக்கியமாக வைத்துக்கொள்வீர்கள் என்று நம்புகிறேன்.நன்றி
- நலம் நம் கையில்  உண்மையான கருத்து.! உணர்ந்து வாழ்தல் சிறப்பு.!

மருத்துவ குறிப்புகள்

ஜூஜுபி வைத்தியம்..!

தீராத விக்கலை நிறுத்த...

1. ஒரு 30 வினாடிகள்...
இரு காது துவாரங்களையும்
விரல்களால் அடைத்துக்கொள்ளுங்கள்...

நின்று போகும் தீராத விக்கல்!

2. ஒரே ஒரு சிறு கரண்டி அளவுக்கு
சர்க்கரையைவாயில் போட்டு
சுவையுங்கள்..

பறந்து போகும் விக்கல்!
____________ _________ _________ _____

கொட்டாவியை நிறுத்த...

கொட்டாவி வருவதற்கான காரணம்:
Oxigen பற்றாக்குறை தான்..

அதனால்...

ஒரு நான்கு அல்லது ஐந்து தடவை,
நன்கு மூச்சை இழுத்து விடுங்கள்...

கொட்டாவி போய், நன்கு சுறுசுறுப்பாகி
விடுவீர்கள்!
____________ _________ _________ _______

உடல் துர் நாற்றத்தைப்போக்க...

குளிக்கும் போது...

நீங்கள் குளிக்கும் தண்ணீரில்
ஒரே ஒரு தக்காளிப் பழத்தின் சாற்றினை
கலந்து பிறகு குளிக்கவும்...

அவ்வளவு தான்...

நாள் முழுக்க புத்துணர்வுடன்
திகழ்வீர்கள்!
____________ _________ _________ ________

வாய் துர்நாற்றத்தால் சங்கடமா?

எலுமிச்சை சாற்றில் சிறிது உப்பு
சேர்த்து குடித்து வந்தாலும்,
வாயைக் கொப்பளித்து வந்தாலும்
வாய் துர்நாற்றம் நீங்கும்.
____________ _________ _________ ________

தலைமுடி வயிற்றுக்குள் போய் விட்டதா?

வாழைப்பழத்தினுள் அல்லது வெற்றிலையில்
ஒரு நெல்லை வைத்து விழுங்க,
முடி வெளியேறி பேதியும் நிற்கும்.
____________ _________ _________ ________

வேனல் கட்டி தொல்லையா?

வெள்ளைப் பூண்டை நசுக்கி
சிறிது சுண்ணாம்பு கலந்து
கட்டி மீது தடவி வர அது உடையும்.
____________ _________ _________ ________

1) பொன்மேனி தரும் குப்பைமேனி

குப்பை மேனி இலையையும் உப்பையும்
சேர்த்து அரைத்து சொறி, சிரங்குகளுக்குத்
தேய்த்துவர குணமாகும்.

2) தேளை விரட்டும் குடியோட்டிப்பூண்டு

பிரம்மதண்டின் பச்சை வேரைச் சிதைத்து
தேள்கடி வாயில் வைத்துக் கட்ட நஞ்சு நீங்கும்.

3) வயிற்றுவலி போக்கும் நறுவலி

நறுவிலிப்பட்டையை இடித்துச் சாறு பிழிந்து,
தேங்காய்ப் பாலில் கலக்கி குடிக்க கடினமான
வயிற்றுவலி போகும்.

4) காற்று சுத்திகரிப்பான் – சர்க்கரை

சர்க்கரையை நாட்பட்ட நோயாளிகளின்
படுக்கை அறையில் புகைக்க சுத்தக்காற்று
உண்டாகி அறை சுத்தப்படும்.

5) தலைபாரம் நீக்கும் கிராம்பு

கிராம்பை நீர்விட்டு மை போல அரைத்து
நெற்றியிலும் மூக்கு தண்டின் மீதும் பற்றிட
தலைபாரம் நீரேற்றம் குணமாகும்.

6) காயத்துக்கு காட்டாமணக்கு

காயம்பட்டு, இரத்தம் வெளிப்பட்ட இடத்தில்
காட்டாமைக்கு பாலைப் பூச குருதி நிற்கும்.
காயமும் ஆறும்.

7) உப்பலுக்கு உப்பிலாங்கொடி

மாந்தத்தினால் குழந்தைகளின் வயிறு
உப்பிக் காணின், உப்பிலாங்கொடியை
அரையில் கட்டத் தீரும்.

8) குழந்தையை காப்பான் கரிப்பான்

கரிசாலைச் சாறு 2 துளியுடன், 8 துளி தேன்
கலந்து கொடுக்க கைக்குழந்தைகளுக்கு
உண்டாகும் நீர்க்கோவை நீங்கும்.

9) கடலையும் அடிதடியும்

கடலை இலையை வேகவைத்து அடிபட்ட வீக்கம்,
மூட்டுப் பிசகல் முதலியவைகளுக்குச் சூட்டோடு
வைத்துக் கட்ட தீரும்.

10) மயக்கத்துக்கு ஏலம்

ஏலக்காய் 1 பங்கு, பனைவெல்லம் ½ பங்கு சேர்த்து,
எட்டுப்பங்கு நீர்விட்டுக் காய்ச்சி கொடுக்க
பித்த மயக்கம் நீங்கும்.

11) புளியிருக்க புண்ணேது?

புளியிலை, வேப்பிலை இவ்விரண்டையும்
சமஅளவு எடுத்து இடித்து எட்டுபங்கு நீர்விட்டுக்
காய்ச்சி புண்களைக் கழுவி வர, ஆறாத புண்கள்
ஆறும்.

12) பால்கட்டுக்கு பாசிப்பயிறு

பாசிப்பயிறு மாவை வெந்நீர் விட்டுக் களியாகக்
கிளறி மார்பில் பற்றிட பால்கட்டு குறைந்து
வீக்கமும் குறைந்து போகும்.
மார்பின் நெறிக்கட்டிகளும் குறையும்.

13) மயிர்கறுக்க மருதோன்றி

மருதோன்றி இலை, நிலவாரை இரண்டையும்
சேர்த்து அரைத்துப் பூச மயிர் கறுக்கும்.

14) வாந்தி நீக்கும் நெல்லி

நெல்லியீர்க்கு, கருவேம்பீர்க்கு, வேப்பீர்க்கு
மூன்றையும் சேர்த்து இடித்து, நீர்விட்டுக்
காய்ச்சிக் கொடுக்க வாந்தி உடனே நிற்கும்.

15) படர்தாமரைக்கு

அறுகம்புல்லும், மஞ்சளும் சேர்த்து அரைத்து
படர்தாமரையில் பூச தீரும்.

16) பல் ஈறு, வீக்கம், வலிக்கு

கிராம்பு, கற்பூரம், ஓமம் எடுத்து நன்றாகத் தட்டி
வீக்கம் உள்ள ஈறுகளில் வைத்து சிறிது நேரம்
சென்றபின் வாய் கொப்பளிக்க பல் ஈறு, வீக்கம்
தீரும்.

17) மலச்சிக்கலுக்கு

பிஞ்சு கடுக்காய் – 100 கிராம், சுக்கு – 100 கிராம்,
எடுத்து தட்டி 1 குவளை நீரில் போட்டு காய்ச்சி
இரவு படுக்க போகும்பொழுது குடித்து விட்டு படுக்கவும்.
நன்றாக மலம் இளகும்.

18) மூலம் அகல

ஆகாசத் தாமரை இலையை அரைத்து தொடர்ந்து
தடவி வந்தால் மூலம் அகன்று விடும்.

19) முகப்பொலிவிற்கு

உலர்ந்த ரோஜா இதழ்களுடன் சிறிது பன்னீரும்
சந்தனமும் அரைத்து முகத்தில் தடவ தோலின்
நிறம் பொலிவு பெறும்.

20) சூட்டினால் உண்டாகும் இருமலுக்கு

மிளகை தூள் செய்து சம அளவு பனைவெல்லம்
கலந்து சுண்டைக்காய் அளவு ஒரு நாளைக்கு
மூன்று வேளை சாப்பிட வேண்டும்.

21) கல்லடைப்புக்கு – தாம்பூலம்

எருக்கம் பூவின் மொக்கு ஏழு எடுத்து சுண்ணாம்பு
போடாமல் வெற்றிலை பாக்குடன் வைத்து உண்ணவும்.
இப்படி 2 அல்லது 3 வேளையில் கல் விழும்.

22) தாய்ப்பால் சுரக்க கீரை

கோவை இலையை நெய்யில் வதக்கி,
வெள்ளைப் பூண்டு சேர்த்து வதக்கி,
கால் வயிறு கீரை, காலையில் உண்டு விட்டு
ஆகாரம் சாப்பிடவும்.
இவ்வாறு 3 நாள் செய்ய பால் சுரக்கும்.

23) அரையாப்பு தீர

எலுமிச்சம் வேர், சத்திசாரணைவேர் அரைத்து
கெச்சக்காய் அளவு நல்லெண்ணையில் கலந்து
சாப்பிடவும் 3 நாளில் தீரும்.

24) குழந்தைகள் பேதிக்குப் பிட்டு வகை

புளியாரை, வாழைப்பூ சமனெடை எடுத்து இடித்து
பிட்டவியல் செய்து தேன் சேர்த்து பிசைந்து
கொடுக்க பேதி நிற்கும்.

25) கர்ப்பிணிகளுக்கு குடிநீர்

கர்ப்பிணிகளுக்கு மலசலம் கட்டினால்,
ஒரு பலம் பழைய நெல்லிவற்றலை இடித்துக்
குடிநீர் செய்து சமஅளவு பசும்பால் விட்டு சாப்பிட,
மலசலம் வெளியேறும்.

26) பசி உண்டாக

புதினா சாறு 1 பங்கு, எலுமிச்சம் பழச்சாறு
3 பங்கு கூட்டி கொஞ்சம் சர்க்கரை சேர்த்துக்
கொள்ளவும்.

27) இருமலுக்கு தேனூறல்

5 பலம் தேனை நன்றாய்க் காய்ச்சி சுடுகையில்
மிளகுத்தூள் படிகாரம் (12 கிராம்) போட்டுக்
குலுக்கி கொடுக்கவும்.

28) வெள்ளை தீர்க்கும் புங்கன்

புங்கன் கொழுந்தை நெகிழ அரைத்து நல்லெண்ணெய்
கலந்து கொடுக்க வெள்ளை தீரும்.

29) அரையாப்புக்கு அரிசிக் களிம்பு

முருங்கை வேர்ப்பட்டையும், புழுங்கலரிசியும்
உப்பும் சேர்த்து அரைத்து பூச குணமாகும்
(அரையப்பு என்பது தொடைசந்தில் வரும் ஒரு பால்வினை நோய்)  

இயற்கை வழியில் பிணிகளை வெல்லுங்கள்

1.பித்த சூட்டிற்கு,                    நெல்லி வற்றலை கியாழம் செய்து பால்சர்க்கரை கலந்து உட்கொண்டு வந்தால் பித்தசூடு ,  ஆண்குறியில் சிறுகொப்புளம் போன்றவை நீங்கும்.        
2.தொண்டைப்புண்ணிற்கு,            நவச்சாரத்தை முட்டையின் வெண்கருவில் இழைத்து நெஞ்சுக்குழியில் தடவினால் புண் நீங்கும்.                              

3.அண்ட வாயு தீர,                    கருவளையல் மிளகு பெருங்காயம் இவைகளை சம நிறையாய் எடுத்து வர நீங்கும்..                    

4.சீதபேதிக்கு,                          நாட்டுச்சர்க்கரையும்,  நெய்யும் கலந்து சாப்பிட தீரும்.              

5.போகம் அதிகரிக்க,             வாதுமைப்பருப்பை பாலில் உட்கொண்டால் போகம் அதிகரிக்கும்.      
6.காமாலை தீர,                   நெல்லி வற்றலும், சீரகமும் கலந்து உலர்த்தி இடித்து ஒரு திரிகடி அளவு எடுத்து ஒரு வாரம் இரு வேளையும் சாப்பிட நீங்கும்.                      
7.பல் பூச்சி விழ,                    கண்டங்கத்திரி செடியை உலர்த்தி சுட்ட சாம்பலால் பல் விலக்க நீங்கும்.                          
8.உடல் பலம் பெற,                நிலப்பனைக் கிழங்கு சூரணித்து பாலிலிட்டு சாப்பிட விந்துக்கட்டும் உடல் பலமாகும் 9.நான்கு செம்பருத்திப்பூ சிறிது அருகம்புல் இரண்டையும் சேர்த்து அம்மியில் அரைத்து காலையில் வெறும் வயிற்றில் ஒரு வாரம் சாப்பிட்டு வந்தால் பெரும்பாடு எனப்படும் அதிக உதிரப்போக்கு குணமாகும். உணவாக தவிடு நீக்காத அரிசிக்கஞ்சி, மோர்சாதம், பால்சாதம், பழங்கள் மட்டுமே உண்டுவந்தால் அதிக பலன் கிடைக்கும்.! amyogatrustblogspot.com     mobile:9629368389

கண் நோய்

கண்ணாடி அணிபவர்கள் கண்டிப்பாக தெரிந்துகொள்ள வேண்டியவை

கண்ணில் வரும் கிட்டப்பார்வை, தூரப்பார்வை, என்பது கண் சம்பந்தப்பட்ட நோயே கிடையாது, நம் கண்ணாடி அணிகிறோம் இந்தக் கன்னாடியினுடைய பவர் நாள் செல்ல நாள் செல்ல அதிகரிக்கிறதா? அல்லது குறைகிறதா? கண்டிப்பாக அதிகரிக்கிறது, இதிலிருந்து என்ன புரிகிறது, கண்ணாடியின் பவர் அதிகமாகிறது என்றால் யங்கள் கண்ணினுடைய பவர் குறைகிறது என்று அர்த்தம்.

பாதி கெட்டுப்போன கண்ணை முழுவதுமாகக் கொடுப்பதற்குக் கண்ணாடி அணிய வேண்டுமா? இது என்ன மருத்துவம்? கண்ணில் நோய் வந்தால் குணப்படுத்துவதற்கு வைத்தியர் தேவையா? நோயை அதிகப்படுத்துவதற்கு வைத்தியர் தேவையா? கிட்டப்பார்வை, தூரப்பார்வை சரி செய்ய நமது உடலுக்கே தெரியும் அதற்குத் தேவையான சில பொருள்கள் இரத்தத்தில் கெட்டுப் போய் உள்ளன, இது முதல் காரணம். இரண்டாவது கண் சம்பந்தப்பட்ட நோய்களைக் குணப்படுத்தத் தேவையான சில பொருள்கள் இரத்தத்தில் இல்லை. மூன்று இரத்தத்தின் அளவு குறைவாக உள்ளது. நான்கு கண் கெட்டுப்போய் விட்டது என்று, நம் மனது கெட்டுப்போய் விட்டது. ஐந்து நம் உடலிலுள்ள கண்ணைக் குணப்படுத்தும் அறிவு கெட்டுப் போய்விட்டது.

கண்ணில் வரும் கிட்டப்பார்வை, தூரப்பார்வை, குளுகோமோ, புரை மற்றும் பல நோய்களுக்கான தண்ணில் கிடையாது. இரத்தத்தில் தான் நோய் எந்த மருந்தும், மாத்திரையும், ஆப்ரேஷனும் செய்யாமல் கண்ணாடி அணியாமல் கண்ணில் வரும் நோய்களைக் குணப்படுத்த முடியும். எனவே நாம் புரிந்து கொள்ள வேண்டியது என்னவென்றால், கண்ணில் வரும் அனைத்து நோய்களுக்கும் கண் காரணம் கிடையாது. இரத்தத்தில் தான் நோய், அதிலும் மேலே சொல்லப்பட்ட ஐந்தும் தான் காரணம். இந்த ஐந்தையும் சரிப்படுத்துவதன் மூலமாக நமது நோய்களை நாமே குணப்படுத்திக் கொள்ளலாம்.
கண் பார்வை குறைபாடு நீங்க

முருங்கைப் பூவுடன் பசும்பாலை சேர்த்து நன்றாக காய்ச்சி காலை மாலை என்று இரண்டு வேளையும் சாப்பிட்டு வந்தால் கண்ணில் ஈரப்பசை அதிகமாகும்; கண் பார்வை குறைபாடு நீங்கும்.

கண்ணில் வெள்ளெழுத்து நோய் உள்ளவர்கள் முருங்கைப் பூ பொடியுடன் தேன்கலந்து அருந்தி வந்தால் வெள்ளெழுத்து மாறும். கண்ணில் உருவாகும் வெண்படலமும் மாறும். முருங்கை பூவை பாலில் வேகவைத்து – பிறகு அந்த பாலை நன்றாக வடிகட்டி சாப்பிட்டு வந்தால் கண்கள் குளிர்ச்சி அடையும்.

இரவு உணவுக்குப் பின் கை, வாய் இவைகளை கழுவிய பின் ஒவ்வொரு கண்ணிலும் மூன்று மூன்று துளிகள் சுத்தமான நீர்விட்டு இமைகளை மென்மையாக தேய்த்து சந்திர தரிசனம் (நிலவைப் பார்த்தல்) செய்தல் மிகவும் நல்லது.

வாரம் இருமுறை தலைக்கு எண்ணெய் தேய்த்து குளிப்பது நல்லது. இதனால் கண் நரம்புகள் சூடு குறைந்து பார்வையை தெளிவுபெறச் செய்யும்.
முதுமைக் காலத்தில் கண்டிப்பாக தலைப்பாகை, செருப்பு அணிந்து நடத்தல் வேண்டும்.
இரவு படுக்கைக்குச் செல்லும் முன் உள்ளங்கால்களில் பசுநெய்யை நன்றாக தேய்த்து, அரிசித் தவிட்டை நன்றாக அதன்மேல் தடவி பின்பு பாதங்களை பருத்தியினாலான துணி வைத்து கட்டிவிடவும். விடியற்காலையில் எழுந்தவுடன் கட்டை அவிழ்த்து இரு பாதங்களையும்
குளிர்ந்த நீரால் கழுவ வேண்டும.

மதிய உணவில் பண்ணைக்கீரை, சிறுகீரை, பொன்னாங்கண்ணி கீரை, காரட் சேர்த்துக்கொள்ள வேண்டும். இரவில் பால் சாதம் சாப்பிடுவது நல்லது. இரவு உணவுக்குப்பின், பால், பழம் சாப்பிடுவது நல்லது. ஒருவேளை உணவில் நெய் சேர்த்துக் கொள்ளலாம். நான்கு மாதத்திற்கு ஒருமுறை பேதி மருந்து , மாதம் ஒருமுறை நசிய மருந்து பயன்படுத்தினால் கண் சம்பந்தப்பட்ட நோய்கள் அகலும். பித்தத்தை அதிகரிக்கும் உணவுகளை தவிர்க்கவும். மலச்சிக்கல் இல்லாமல் பார்த்துக்கொள்ள வேண்டும். உச்சி வெயிலில் அலையக் கூடாது.
முதுமையில் ஏற்படும் பார்வைக் குறைபாட்டை வெள்ளெழுத்து என்று அழைக்கின்றனர். இது குணமாக:
முருங்கை விதை – 100 கிராம்
மிளகு – 100 கிராம்

இரண்டையும் நன்றாக கலுவத்திலிட்டு மெழுகு போல் அரைத்து ஒரு வெங்கலத்தாம்பளத்தினுள் தடவி வெய்யிலில் வைத்தால் தாம்பளம்
சூடேறி எண்ணெய்கசியும். அதனை வடிகட்டி பத்திரப்படுத்தவும்.
இந்த எண்ணெயில் 1 சொட்டு எண்ணெய் கண்ணில் விட வெள்ளெழுத்து பாதிப்பு குணமாகும்.

பொதுவாக கண்களில் வரும் நோய்களில், வயதானவர்களுக்கு காணப்படுவது கண்புரை. இதை ஆங்கிலத்தில், “காட்டிராக்ட்” என்பர். கண்களில் உள்ள லென்ஸ், ஒளி அனுப்பும் தன்மையை இழக்கிறது. இதனால், கண்பார்வை குறைகிறது. பிறந்தது முதல், கண் லென்ஸ் ஒளிக்கதிர்களை விழித்திரைக்கு அனுப்பி, கண் பார்வை தருகிறது. கண்புரை ஏற்பட்டபின் இது மாறுபடுவதால், பார்வை குறைவு ஏற்படுகிறது. கண் புரை நோய், 40 வயது முதல் துவங்கலாம். முதலில், தூரப்பார்வை குன்றுதல், வாகனங்கள் ஓட்டுவதில் சிரமம் மற்றும் பார்வை தன்மை குறைபாடு ஆகியவை உண்டாகும். கண்ணாடி நம்பர் அடிக்கடி மாறக்கூடும். இவ்வாறு ஏதேனும் பிரச்னை இருந்தால், கண் மருத்துவரிடம், கண் புரை நோய் இருக்கிறதா என்று பரிசோதனை செய்து கொள்ள வேண்டும். கண் புரையை, அறுவை சிகிச்சை மூலம் சரி செய்ய முடியும்.
கண் பார்வை குறைபாடு சரி செய்யலாம் ....
வீட்டில் எல்லோரும் செய்யக்கூடிய ஒரு எளிய முறை ஒன்று சொல்லப் போகிறேன். நாம் நம் பூஜை அறையில் தினமும் தீபம் ஏற்றுவோம். அந்த தீப ஒளியை தினமும் 15 நிமிடம் பார்த்து வந்தால் பல நன்மைகளை அடையலாம். அந்த தீபத்தில் இருந்து வரும் ஒளியை கண் அசைக்காமல் பார்க்க வேண்டும். அப்படி பார்க்கும் போது, நமது மனமும் அடங்கும், கண்களுக்கும் மிகவும் நல்லது. கிட்டப்பார்வை மற்றும் தூரப்பார்வை, கண் எரிச்சல் போன்ற பல நோய்கள் சரியாகும். எவ்வளவு மனம் பாரமாக இருந்தாலும் சரி குறைந்துவிடும். பல பிரச்சனைகளுக்கு பதில் கிடைக்கும் என்பது மிகப்பெரிய உண்மையாகும். நமக்கே தெரியாமல் அதில் இருந்து நிறைய சக்திகள் நமக்கு கிடைக்கும். அந்த சக்தி என்ன மாற்றத்தை தரும் என்பதை பற்றி கூறுகிறேன்.
1.மனக் கவலை தூள் படும்
2.முடிவு எடுக்கும் திறன் ஏற்படும்
3.கண்கள் புத்துணர்ச்சி பெறும்
4.நாம் புதிய தெம்புடன் காணப்படுவோம்
5.ஆசைகள் நம்மை அடக்குவது போய், நாம் ஆசைகளை அடக்கிவிடுவோம்
6.ஒரு புதிய மனிதராய் காணப்படுவோம்
7.ஒற்றைத்தலைவலி சரியாகும்
எனவே எல்லோரும் இதை தினமும் குறைந்தது 15 நிமிடம் அதற்கு மேலும் செய்யலாம். தொடர்ந்து செய்து வந்தால் பலன் அடைவது நிச்சயம்.!   -இணையப்பகிர்வு

Friday, June 10, 2016

சுகப் பிரசவம்

சுகப்பிரசவம் நடந்திட உதவும் அதிமதுரம்..!

• அதிமதுரம், சீரகம் சம அளவு எடுத்து பொடித்து வைத்துக் கொண்டு 20 கிராம் பொடியை 200 மில்லி தண்ணீரில் போட்டுக் கொதிக்க வைத்து 100 மில்லியாகச் சுண்டியதும் வடிகட்டி காலை வேளையில் மூன்று தினங்கள் சாப்பிட்டால் கருவுற்ற பெண்களுக்கு பிரசவத்திற்கு முன்னதாக உள்ள காலங்களில் ஏற்படும் உதிரப் போக்கு நிவர்த்தியாகும்.

• அதிமதுரம், தேவதாரம் இவைகள் வகைக்கு 35 கிராம் பொடி செய்து, பிறகு வெந்நீர் விட்டு நன்றாக அரைத்து, பிரசவ வலி துவங்கிய உடன் இரண்டு முறை கொடுத்தால் சுகப்பிரசவம் ஏற்படும். பெண்களுக்கு ஏற்படும் கருப்பைத் தொடர்பான நோய்கள் நிவர்த்தியாகும். ஆரோக்கியமான பெண்களின் மலட்டுத்தன்மை நீங்கும்.

• போதுமான அளவு தாய்ப்பால் இல்லாதவர்கள் ஒரு கிராம் அதிமதுரச் சூரணத்தைப் பாலில் கலந்து சிறிதளவு இனிப்பு சேர்த்துச் சாப்பிட்டு வந்தால், தாய்ப்பால் அதிகமாகச் சுரக்கும்.

• அதிமதுரம், திராட்சை இவை இரண்டையும் சமமாகப் பொடி செய்து 50 அல்லது 100 கிராம் எடுத்து தண்ணீரில் அரைத்து பாலில் கலக்கி பெண்களின் மாதவிடாய் தொடங்கிய நாள் முதல் ஐந்து தினங்கள் சாப்பிட்டு வந்தால், ஆரோக்கியமான பெண்களுக்குக் கருத்தரிக்கும்.

கருத்தரிக்கும் வரை 2 முதல் 3 மாதங்கள் வரை சாப்பிட்டால் நல்ல பலனை எதிர்பார்க்கலாம்.

"ஆரோக்ய வாழ்வுக்கு இயற்கை மருத்துவம் அவசியம்"

இதை அனைவருக்கும் தெரியப்படுத்துவோம்.

"ஆரோக்ய பாரதத்தை உருவாக்குவோம்"

Wednesday, June 8, 2016

மூலிகைப் பொடிகள்

[08/06 9:01 PM] SHIVA JI SHIVA: காத்திருக்க பழகு !
----------------------------


பசிக்கும் வரை காத்திரு

உடல் நீர் கேட்கும் வரை காத்திரு

காய்ச்சல் உடலை

வாழப்பழகுவாய்.
[08/06 9:01 PM] SHIVA JI SHIVA:
*மருந்துகடைகளில் விற்கப்படும் எந்த மூலிகைபொடி  எதற்கு பயன்படும்..?*

*பாதுகாக்க படவேண்டிய பயனுள்ள குறிப்புகள்..!*

*அருகம்புல் பொடி* அதிக உடல் எடை, கொழுப்பை குறைக்கும், சிறந்த ரத்தசுத்தி

*நெல்லிக்காய் பொடி* பற்கள் எலும்புகள் பலப்படும். வைட்டமின் “சி” உள்ளது

*கடுக்காய் பொடி*
குடல் புண் ஆற்றும், சிறந்த மலமிளக்கியாகும்.

*வில்வம் பொடி* அதிகமான கொழுப்பை குறைக்கும். இரத்த கொதிப்பிற்கு சிறந்தது

*அமுக்கலா பொடி*
தாது புஷ்டி, ஆண்மை குறைபாடுக்கு சிறந்தது.

*சிறுகுறிஞான் பொடி*
சர்க்கரை நோய்க்கு மிகச் சிறந்த மூலிகையாகும்.

*நவால் பொடி*
சர்க்கரை நோய், தலைசுற்றுக்கு சிறந்தது.

*வல்லாரை பொடி* நினைவாற்றலுக்கும், நரம்பு தளர்ச்சிக்கும் சிறந்தது.

*தூதுவளை பொடி* நாட்பட்ட சளி, ஆஸ்துமா, வரட்டு இருமலுக்கு சிறந்தது.

*துளசி பொடி* மூக்கடைப்பு, சுவாச கோளாருக்கு சிறந்தது.

*ஆவரம்பூ பொடி*
இதயம் பலப்படும், உடல் பொன்னிறமாகும்.

*கண்டங்கத்திரி பொடி*
மார்பு சளி, இரைப்பு நோய்க்கு சிறந்தது.

*ரோஜாபூ பொடி*
 இரத்த கொதிப்புக்கு சிறந்தது, உடல் குளிர்ச்சியாகும்.

*ஓரிதழ் தாமரை பொடி*
ஆண்மை குறைபாடு,
மலட்டுத்தன்மை நீங்கும்.வெள்ளைபடுதல் நீங்கும், இது மூலிகை வயாகரா

*ஜாதிக்காய் பொடி*
நரம்பு தளர்ச்சி நீங்கும், ஆண்மை சக்தி பெருகும்.

*திப்பிலி பொடி*
உடல் வலி, அலுப்பு, சளி, இருமலுக்கு சிறந்தது.

*வெந்தய பொடி*
வாய் புண், வயிற்றுபுண் ஆறும். சர்க்கரை நோய்க்கு சிறந்தது.

*நிலவாகை பொடி*
 மிகச் சிறந்த மலமிளக்கி, குடல்புண் நீக்கும்.

*நாயுருவி பொடி*
உள், வெளி, நவமூலத்திற்க்கும் சிறந்தது.
*கறிவேப்பிலை பொடி*
கூந்தல் கருமையாகும். கண்பார்வைக்கும் சிறந்தது.

*வேப்பிலை பொடி* குடல்வால் புழு, அரிப்பு, சர்க்கரை நோய்க்கு சிறந்தது.

*திரிபலா பொடி* வயிற்றுபுண் ஆற்றும், அல்சரை கட்டுப்படுத்தும்.

*அதிமதுரம் பொடி* தொண்டை கமறல், வரட்டு இருமல் நீங்கும், குரல் இனிமையாகும்.

*துத்தி இலை பொடி* உடல் உஷ்ணம், உள், வெளி மூல நோய்க்கு சிறந்த்து.

*செம்பருத்திபூ பொடி* அனைத்து இருதய நோய்க்கும் சிறந்தது.

*கரிசலாங்கண்ணி பொடி*
காமாலை, ஈரல் நோய், கூந்தல் வளர்ச்சிக்கு சிறந்தது.

*சிறியாநங்கை பொடி* அனைத்து விஷக்கடிக்கும், சர்க்கரை நோய்க்கும் சிறந்தது.

*கீழாநெல்லி பொடி,* மஞ்சள் காமாலை, சோகை நோய்க்கு சிறந்தது.

*முடக்கத்தான் பொடி* மூட்டு வலி, முழங்கால்வலி, வாததுக்கு நல்லது

*கோரைகிழங்கு பொடி*
தாதுபுஷ்டி, உடல் பொலிவு, சரும பாதுகாப்பிற்கு சிறந்தது.

*குப்பைமேனி பொடி* சொறிசிரங்கு, தோல் வியாதிக்கு சிறந்தது.

*பொன்னாங்கண்ணி பொடி*
உடல் சூடு, கண்நோய்க்கும் சிறந்தது.

*முருஙகைவிதை பொடி*
ஆண்மை சக்தி கூடும்.

*லவங்கபட்டை பொடி* கொழுப்புசத்தை குறைக்கும். மூட்டுவலிக்கு சிறந்தது.

*வாதநாராயணன் பொடி*
 பக்கவாதம், கை, கால் மூட்டு வலி நீங்கும்.

*பாகற்காய் பவுட்ர்* குடல்வால் புழுக்கள் அழிக்கும். சர்க்கரை நோய் கட்டுக்குள் இருக்கும்.

*வாழைத்தண்டு பொடி*
சிறுநீரக கோளாறு, கல் அடைப்புக்கு மிகச் சிறந்தது.

*மணத்தக்காளி பொடி*
குடல் புண், வாய்புண், தொண்டைபுண் நீங்கும்.

*சித்தரத்தை பொடி*
 சளி, இருமல், வாயு கோளாறுகளுக்கு நல்லது.

*பொடுதலை பொடி* பேன் உதிரும், முடி உதிரிவதை தடுக்கும்.

*சுக்கு பொடி*
ஜீரண கோளாறுகளுக்கு சிறந்தது.

*ஆடாதொடை பொடி* சுவாச கோளாறு, ஆஸ்துமாவிற்கு சிறந்தது.

*கருஞ்சீரகப்பொடி* சக்கரை, குடல் புண் நீங்கும், நஞ்சு வெளிப்படும்.

*வெட்டி வேர் பொடி*
நீரில் கலந்து குடித்துவர சூடு குறையும், முகம் பொலிவு பெறும்.

*வெள்ளருக்கு பொடி* இரத்த சுத்தி, வெள்ளைப்படுதல், அடிவயிறு வலி நீங்கும்.

*நன்னாரி பொடி*
உடல் குளிர்ச்சி தரும், சிறுநீர் பெறுக்கி, நா வறட்சிக்கு சிறந்தது.

*நெருஞ்சில் பொடி* சிறுநீரக கோளாறு, காந்தல் ஆகியவற்றை நீக்கும்.

*பிரசவ சாமான் பொடி*
பிரசவத்தினால் ஏற்படும் அதிகப்படியான இழப்பை சரி செய்யும், உடல் வலிமை பெறும். தாய்பாலுக்கு சிறந்தது.

*கஸ்தூரி மஞ்சள் பொடி*
தினசரி பூசி வர முகம் பொலிவு பெறும்.

*பூலாங்கிழங்கு பொடி*
 குளித்து வர நாள் முழுவதும் நறுமணம் கமழும்.

*வசம்பு பொடி*
பால் வாடை நீங்கும், வாந்தி, குமட்டல் நீங்கும்.

*சோற்று கற்றாலை பொடி*
உடல் குளிர்ச்சி, முகப்பொலிவிற்கு பயன்படும்.

*மருதாணி பொடி*
கை , கால்களில் பூசி வர பித்தம், கபம் குணமாகும்.

*கருவேலம்பட்டை பொடி*
பல்கறை, பல்சொத்தை, பூச்சிபல், பல்வலி குணமாகும்

இஞ்சி எதனுடன் எப்படி சாப்பிட்டால் என்ன பலன் கிடைக்கும்..?

1. இஞ்சி சாறை பாலில் கலந்து சாப்பிட வயிறு நோய்கள் தீரும். உடம்பு இளைக்கும்.

2. இஞ்சி துவையல், பச்சடி வைத்து சாப்பிட மலச்சிக்கல், களைப்பு, மார்பு வலி தீரும்.

3. இஞ்சியை சுட்டு உடம்பில் தோய்த்து சாப்பிட பித்த, கப நோய்கள் தீரும்.

4. இஞ்சி சாறில், வெல்லம் கலந்து சாப்பிட வாதக் கோளாறு நீங்கி பலம் ஏற்படும்.

5. இஞ்சியை புதினாவோடு சேர்த்து துவையலாக்கி சாப்பிட பித்தம், அஜீர ணம், வாய் நாற்றம் தீரும். சுறு சுறுப்பு ஏற்படும்.

6. இஞ்சியை, துவையலாக்கி சாப்பிட வயிற்று உப்புசம் இரைச்சல் தீரும்.

7. காலையில் இஞ்சி சாறில், உப்பு கலந்து மூன்று நாட்கள் சாப்பிட பித்த தலைச்சுற்று, மலச்சிக்கல் தீரும். உடம்பு இளமை பெறும்.

8. பத்துகிராம் இஞ்சி, பூண்டு இரண்டையும் அரைத்து, ஒருகப் வெந்நீரில் கலந்து காலை, மாலை இரண்டு நாட்கள் சாப்பிட மார்பு வலி தீரும்.
[08/06 9:01 PM] SHIVA JI SHIVA: துன்பம் தீர்க்கும் ஆன்மீக ரகசியங்கள் :- 1

ஏதேனும் ஒரு முக்கியமான வேலையாக அல்இலது தொலைதூர வெளியூர் பயணம் கிளம்பினாலும் அல்லது அன்று உங்கள் பயனதிசை சூலம் இருந்தாலும் கானம் எனப்படும் காராமணிப்  பயிர் கொஞ்சம் வலது கையில் வைத்து வாசலுக்கு அருகில் நின்று கொண்டு விநாயகரை வேண்டிக் கீழே உள்ள மந்திரத்தை 7 தடவை ஜெபித்து அந்தக்  காராமணிப் பயிரில் ஊதி பின்னர் வாசலைத் தாண்டி வெளியே வந்து காராமணிப் பயிரை எறிந்து விடவும்.பின்னர் விநாயகரை வேண்டிகே கிளம்பிச் செல்ல காரியத்தடைகள் நீங்கி  வெற்றியுண்டாகும்.ஒரு குறிப்பிட்ட நல்ல காரியம் செய்யும் போது பலரின் எதிர்ப்பு,பொறாமை,திருஷ்டி இருந்தால் அந்த மாதிரி நேரங்களில் இந்தப் பிரயோகத்தை உபயோகிக்க நிச்சயம் வெற்றி கிட்டும்.

இதை செய்த வெளியூர்,வெளிநாடு பயணம் கிளம்ப வெற்றியுடனும் பாதுகாப்புடன் திரும்பலாம்.

மந்திரம்:-

ஓம் ஸ்ரீம் ஹ்ரீம் சர்வ விக்ன வினாசாய, சர்வ கார்ய சித்திம் நமஹ ||.

கொய்யா

கொய்யா.


மூலிகையின் பெயர் –; கொய்யா.

தாவரவியல் பெயர் –; PSIDIUM GUAJAVA.

தாவரக்குடும்பம். –; MYRTACEAE.

பயன் தரும் பாகங்கள் –;
இலை, வேர், மற்றும் பழம்.

வளரியல்பு –;
கொய்யா சிறு மரவகையை சேர்ந்தது.இதன் தாயகம் மத்திய அமரிக்கா மற்றும் தென் மெக்சிகோ.

முழுமையான எதிரடுக்கில் அமைந்துள்ள இலைகளையும் வெள்ளை நிற மலர்களையும், சதைப்பற்றுள்ள உருண்டையான மற்றும் ஓவல் அமைப்பில் உள்ள கனிகளையும், வழுவழுப்பான பட்டையையும் உடைய மரம்.

 தமிழகமெங்கும் பழத்திற்காகப் பயிரடப்படுகிறது. காடுகளில் தானே வளரவதுண்டு. இதன் உயரம் சுமார் முப்பது அடி வளரும், மரத்தின் விட்டம் சுமார் 25 செ.மீ. கடல் மட்டத்திலிருந்து 1500 மீட்டர் வரை வளரக்கூடியது.

 களிமண்ணிலும், சிறிது மணல் பாங்கான இடத்திலும் நன்கு வளரும். மண் 4.5 முதல் 8.2 பி.எச். இருந்தால் போதும். வருட மழையளவு 100 செ.மீ. போதும். வேர்கள் 25 செ.மீ. வரை சத்தை உருஞ்சக் கூடியது.

 வெப்பமான பிரதேசத்தில் நன்கு வளரக்கூடியது. மரம் நல்ல கெட்டியானது. அதிக கிளைகள் வரக்கூடியது. பூத்து கொத்தாக காய்கள் விடக்கூடியது. காய் பச்சை நிறத்தில் இருக்கும். பழுத்தால் மஞ்சள் நிரமாக மாரும். பழத்திற்குள் வெண்மையான சதைப்பற்றுடன் விதைகள் இருக்கும். சில வகை கொய்யா சதைப் பற்று சிவப்பாக இருக்கும்.
 மருத்துவப் பயன் ஒன்றே.

 விதையிலிருந்து இன விருத்தி செய்வார்கள். ஒட்டுக் கட்டியும் புதிய ரகங்களை தயார் செய்வார்கள். பழத்தில் லக்னோ 49 வகை பெரிதாகவும், இனிப்பாகவும் இருக்ககும்.

வைட்டமீன் "சி" அதிகமாக இருக்கும். அலகாபாத் பேடா வகை பெரிதாகவும் உருண்டையாகவும் நறுமணம் உடையதாகவும் இருக்கும்.

வரட்சியைத் தாங்கி வளரக் கூடியது. சிட்டிடார் உத்திர்ப்பிரதேசம் பெரிதாகவும் இனிப்பாகவும் இருக்கும். மேலும் பல வகைகள் உள்ளன.

கொய்யாவின் மருத்துவப் பயன்கள் –;

ஒரு பிடி கொய்யா இலையை அரித்து ஒரு மிளகாயுடன் வதக்கி ஒரு லிட்டர் நீரில் போட்டுக் கால் லிட்டராகக்காச்சி அரை மணிக்கு ஒரு முடக்கு வீதம் கொடுத்து வர வாந்தி, பேதி (காலரா) மந்தம், வாய்பொருமல், வறட்சி, தாகம் அடங்கும்.

கொய்யா மரத்தின் இலைகளைக் கொண்டு வந்து இலேசாக வதக்கி ஒரு டம்ளர் தண்ணீர் விட்டு நன்றாகக்கொதிக்க வைத்து இறக்கி, சூடாக இருக்கும் பொழுதே வடிகட்டி வைத்துக் கொண்டு,ஒரு கோழி முட்டையை உடைத்து அதன் மஞ்சள் கருவை மட்டும் எடுத்து ஒரு பாத்திரத்தில் விட்டு நீர் போல அடித்து வைத்துக் கொண்டு, ஒருவர் கசாயத்தை அடித்திக் கொண்டிருக்கும் பொழுதே மற்றவர் கோழி முட்டை மஞ்சள் கரு எடுத்து அந்தக் கசாயத்தை விட்டுக் கொண்டே இருக்க வேண்டும். மஞ்சள் கரு எல்லாவற்றையும் விடும் வரை அடித்துக் கொண்டே இருக்க வேண்டும். பிறகு அந்தக் கசாயத்தில் பாதியளவைக் காலையிலும் பாதியளவை மாலையிலும் கொடுத்து வந்தால் நாட்பட்ட சீதபேதியானாலும் நின்று விடும்.

மூன்று வயதுக்கு மேற்பட்ட குழந்தைகளைக்குக் காலை, பகல் மாலை ஆக ஒரு நாளைக்கு மூன்று வேளை சங்களவு கொடுத்து வரநாட்பட்ட சீதபேதி நின்று விடும்.

இரண்டு கைப்பிடளவு நறுக்கிய கொய்யா இலையை லேசாக வதக்கி இரண்டு டம்ளர் அளவுக்குத் தண்ணீர் விட்டு நன்றாகக் கொதிக்க வைத்து இறக்கி, நீரை வடிகட்டி அந்த நீரைக் கொண்டு ஆசன வாயில் உள்ள மூலத்தை ஒரு நாளக்கு மூன்று முறை கழுவி வந்தால் நாளா வட்டத்தில் மூலம் சுருங்கி கடைசியில் மூலமே இல்லாமல் போகும்.

ஆனால் மூலம் சுருங்கும் வரை கழுவி வர வேண்டும்.

கொய்யா இலையைக் கொண்டு வந்து அதை வாயில் போட்டு மென்று அதைக் கொண்டே பல் துலக்கி வந்தால் பல் சம்பந்தமான எல்லாக் கோளாறுகளும் குணமாகும். இதனால் ஆடும் பற்கள் கெட்டி படும். பற்சொத்தை நீங்கும். எகிர் வீக்கம் வாடி விடும். பற்களில் ஏற்படும் அரிப்பு அதாவது தேய்வு மாறி பல் வெண்ணிறமாகும்.பல்லில் உள்ள அழுக்கு நீங்கும்.

கொய்யா மரத்தின் ஜல்லி வேர் அதாவது மெல்லிய வேர்களைக் கொண்டு வந்து அதைப் பொடியாக நறுக்கி ஒரு கைப்பிடியளவு எடுத்து ஒரு சட்டியில் போட்டு இரண்டு டம்ளர் அளவு தண்ணீர் விட்டு இரவு முழுதும் மூடிவைத்து, காலையில் ஒரு டம்ளர் அளவு கொடுத்து வந்தால் வயிற்றுப் போக்கு நன்று விடும். குழ்ந்தைகளுக்கு ஒரு சங்களவு கொடுத்து வந்தால் வயிற்றுப் போக்கு நிற்கும்.

இந்த நீரைக் கொண்டு மூலத்தைக் கழுவி வந்தால் மூலம் சுருங்கு விடும். ஆனால் தொடர்ந்து 21 நாட்கள் வரை கழுவி வந்தால் தான் குணம் தெரியும்.


மலச்சிக்கலினால் கஷ்டப் படுகிறவர்கள் இரண்டு தினங்கள்க்கு ஒரு முறை கொய்யாப் பழத்தைத் தின்று வந்தால் மலம் இளகளாகச் சரளமாக இறங்கும். சிறுநீர் நன்கு பிரியும். எரிச்சல் குணமாகும்.

கொய்யாக் கொழுந்து இலையை மென்று தின்று இலகுவான உணவு உண்ண செரியாமை, மந்தம், குடல் வாயு தீரும்.


மரு.கிருஷ்ணன்

Tuesday, June 7, 2016

ஆறாத புண்ணிற்கு

ஆறாத புண்ணுக்கு மருந்து

ஊமத்தை இல்லை சாறு - 250 மில்லி
சுத்தமான தேங்காய் எண்ணை - 250 மில்லி
மயில் துத்தம் (Copper Sulphate) - 15 கிராம்

மேற் சொன்ன மூன்றையும் அடுப்பிலேற்றி சுண்ட காய்ச்சி வடிக்கட்டி புட்டியில் அடைக்கவும்.

புண்களை நன்றாக சுத்தம் செய்து இந்த மருந்தை மேல் பூச்சாக இட குணமாகும்.

தீரும் புண்கள் : மேகபுண், நீரிழிவு புண், ஆராத குழிப்புண், வளர்புண், ரணம் சதைவளரும் புண்புரைகள், தீரும்.
நாக/பெங்

Monday, June 6, 2016

குடலிறக்கம்

ஹெர்னியா எனப்படும் குடலிறக்க பிரச்சனைக்கான சில இயற்கை வைத்தியங்கள்!!!
குடலிறக்கம் என்பது ஒரு உறுப்பில் உள்ள துவாரத்தின் வழியே அதன் தசைச்சுவரில் ஏற்படும் புடைப்பாகும். இத்தகைய குடலிறக்கம் தொப்புள், அடிவயிறு போன்ற இடங்களில் உள்ள தசைப்பகுதிகளில் ஏற்படக்கூடியது. மேலும் இந்த பிரச்சனை சிறுவர் முதல் பெரியவர் வரை என யாருக்கு வேண்டுமானாலும் வரலாம். இந்த ஹெர்னியா என்னும் குடலியக்கம் ஏற்பட பல காரணங்கள் உள்ளன.
மேலும் குடலிறக்கம் வந்தால், வயிற்றில் புடைத்த நிலையில் கட்டி உண்டாவதோடு, கடுமையான வலியையும் சந்திக்க நேரிடும். சில நேரங்களில் இந்த புடைப்பால் குடலானது நகர முடியாமல் மாட்டிக் கொண்டு, குடல் அடைப்பு அல்லது குடலானது அழுகிப் போகும் வாய்ப்பும் உள்ளது. இந்த ஹெர்னியா என்னும் குடலிறக்கத்தில் நிறைய வகைகள் உள்ளன. ஒவ்வொன்றும் ஒவ்வொரு விதமான அறிகுறிகளைக் கொண்டிருக்கும். இத்தகைய ஹெர்னியா இருந்தால், உடல் எடை அதிகரிப்பது, கல்லீரல் நோய், தொடர்ச்சியான இருமல், மலச்சிக்கல் போன்றவை ஏற்படும்.
இப்போது அந்த குடலிறக்கத்தை சரிசெய்யும் சில இயற்கை வைத்தியங்களைப் பார்ப்போம்.
ஹெர்னியா எனப்படும் குடலிறக்க பிரச்சனைக்கான சில இயற்கை வைத்தியங்கள்!!!
அதிமதுரம்
குடலிறக்கத்திற்கு அதிமதுரம் ஒரு சிறந்த நிவாரணி. அதற்கு ஒரு ஸ்பூன் அதிமதுர பொடியை 1/2 கப் பாலில் போட்டு கலந்து, வாரத்திற்கு ஒரு முறை குடிக்க வேண்டும். இதனால் அது பாதிப்படைந்த பகுதியில் உள்ள புடைப்பை நீக்கிவிடும்.
இஞ்சி
இஞ்சி கூட குடலிறக்கத்தை சரிசெய்யப் பயன்படும். அதிலும் குடலிறக்கத்தால் ஏற்படும் வலியைக் கட்டுப்படுத்த, ஒரு கப் இஞ்சி டீயை வெறும் வயிற்றில் குடிக்க வேண்டும். இருப்பினும் இதனை அளவாக குடிப்பது நல்லது. இல்லாவிட்டதது அது வயிற்று உப்புசத்தை ஏற்படுத்திவிடும்.
சீமைச் சாமந்தி டீ
வெதுவெதுப்பான டீயை, அதிலும் சீமைச்சாமந்தி டீயை அவ்வப்போது குடித்து வந்தால், குடலிறக்கத்தால் ஏற்படும் வலியைக் கட்டுப்படுத்தலாம் என்று நிபுணர்கள் கூறுகின்றனர். இல்லாவிட்டால் ப்ளாக் டீ குடித்தாலும், ஹெர்னியாவை பிரச்சனையை சரிசெய்யலாம்.
மோர்
ஹெர்னியா இருந்தால், ஒரு நாளைக்கு மூன்று முமுறை மோரைக் குடித்து வந்தால், நிச்சயம் குடலியக்கத்தால் ஏற்படும் வலியை தடுக்கலாம். இது டீ பிடிக்காதவர்களுக்கு ஒரு சிறந்த மாற்றாக விளங்கும்.
தண்ணீர்
ஹெர்னியா பிரச்சனை இருப்பவர்கள், அளவுக்கு அதிகமாக தண்ணீர் பருக வேண்டும். இதனால் குடலிறக்கத்தால் ஏற்படும் வலி குறைந்துவிடும்.! அதோடு தினமும் 3 சுற்றுகள் ஏகபாத சிரசாசனம் தலையணை அல்லது சுவர்  உதவியுடன்  சர்வாங்காசனமும் பிறகு சாதரணமாக மட்யாசனமும் செய்துவந்தால் குடலிறக்கம் குணமாகும்.! நலம் பெருகட்டும் … amyogatrustblogspot.com    Mobile:9629368389

Sunday, June 5, 2016

சிறுநீரக கற்கள்

இயற்கை வழியில் சிறுநீரக கற்களை கரையுங்கள்.!  நாட்டு மருந்துக்கடையில் நண்டுக்கல் பற்பம், சிருங்கி பற்பம் ஒவ்வென்றும் 10 கிராம் அளவில் வாங்கி வைத்துக் கொண்டு தினம் ஒரு சிட்டிகை அளவு  பொடியெடுத்து ஒரு டம்ளர்  முள்ளங்கிச்சாறு அல்லது வாழைத்தண்டு சாற்றில்  கலந்து மதியம் உணவிற்கு அரைமணி முன்பு பத்துநாள் குடித்து வந்தால்  10 mm வரை உள்ள கல் எளிதாக கரைந்து விடும்.!               நலம் பெருகட்டும் …        amyogatrustblogspot.com  mobile:9629368389

சர்வாங்காசனம்

சர்வாங்காசனம் இரண்டு முறை தினமும் 3 நிமிடம். மட்ச்யாசனம் ஒரு முறை 1 முதல் நான்கு நிமிடம் வரை. சாந்தியாசனம் 3 முதல் 10 நிமிடம் வரை செய்துவந்தால் இரத்த அழுத்தம், தைராய்டு சீராகும். கால் நரம்பு சுருக்கு வியாதி குணமாகும். மலச்சிக்கல், கைகால் வலி குணமாகும்.  என்றும் இளமையான தோற்றம் கிடைக்கும். சர்வாங்க ஆசனத்தில்  உடல் முழுவதும் இரத்த ஓட்டம்  எதிர்புறமாக நடைபெறுவதால் உடல்பருமன், கொழுப்புகட்டி ஆரம்பநிலை புற்றுநோய் குணமாகும். அதுபோலவே இந்த மூன்று ஆசனங்களையும் இணைத்து செய்வதால்  அட்ரீனல், பாங்கிரியாஸ், தைராய்டு, பிட்யூட்ரி, பீனியல் போன்ற உடம்பில் உள்ள அத்தனை நாளமில்லா சுரப்பிகளும் சீராக இயங்குவதால் நோய்கள் எளிதில்  குணமாவதோடு  நோயெதிர்ப்பு சக்தியும் அதிகரிக்கும்.! நிறைய ஆசனங்கள் செய்ய முடியாதவர்கள் இந்த மூன்று ஆசனங்களை மட்டுமாவது தொடர்ந்து செய்து பயனடையுங்கள்.தீவிரமான கழுத்துவலி இருப்பவர்கள் முதல் இரண்டு ஆசனங்களை செய்யக்கூடாது.!  நலம் பெருகட்டும் amyogatrustblogspot.com     mobile:9629368389

வேம்பு

வேம்பின் இலை, காய் கனி என அனைத்தும் மருத்துவத்தில் சிறந்து விளங்குகிறது.. வேப்பந்தழையின் இலை கோழையகற்றுதல், சிறுநீர் பெருக்குதல், வீக்கம், கட்டிகளைக் கரைத்தல், வாதம், மஞ்சள் காமாலை, காச்சல், சுவையின்மை, பித்தம், கபம், நீரிழிவு, தோல் வியாதிகள், பூச்சிக் கொல்லியாகவும் பயன் படுகிறது. வேப்பங்கொழுந்தும் அதிமதுரப்பொடியும் சமன் சேர்த்து நீர் விட்டு அரைத்துப் பட்டாணி அளவாய் மாத்திரை போல் செய்து நிழலில் உலர்த்தி நாள் தோறும் 3 வேளை ஓரிரு மாத்திரை போல கொடுத்து வர அம்மை நோய் தணியும். வேம்பு இலையை அரைத்துக் கட்டி வர ஆறாத ரணம், பழுத்து உடையாத கட்டி, வீக்கம் தீரும். வேப்பங்கொழுந்து 20 கிராம், ஈர்க்கு 10, 4 கடுக்காய் தோல், பிரண்டைச் சாறு விட்டரைத்து அரை அவுன்ஸ் விளக்கெண்ணெய் கலந்து கொடுக்கக் குடல் பூச்சி வெளியாகும். வேம்பின் சாறில் 10 அரிசி ,நெய், தேன், வெண்ணெய், பாலில் 2 மண்டலம் கொடுக்க எந்த மருந்துலும் கட்டுப் படாத நோய்கள் மதுமேகம், என்புருக்கி, இளைப்பு, காசம் ஆகியவை தீரும். உடம்பு கெட்டி படும், நரை திரை மாறும். வேம்பு இலையுடன் சிறிது மஞ்சள் சேர்த்துத் தடவி வரப் பித்த வெடிப்பு, கட்டி, பருவு, அம்மைக் கொப்புளம் ஆகியவை குணமாகும். உந்தாமணி இலையை வேப்பெண்ணையில் வதக்கிச் சூட்டுடன் ஒத்தடம் கொடுக்க நரம்பு இசிவு, கரப்பான், கிரந்து, சிரங்கு, சுரம், சன்னிகளில் வரும் இசிவு, கண்ட மாலை கீல் வாதம் குணமாகும். வேப்பிலையை அரைத்து முகப்பரு உள்ள இடத்தில் பூசினால் வெகு விரைவில் மறைந்து விடும். வேப்ப மரத்திலிருந்து உதிர்ந்த பூக்களைச் சேகரித்து வைத்துக் கொண்டு ஒரு வருடம் கழித்து இந்தப் பூவைக் கொண்டு ரசம் வைப்பார்கள். இந்த வேப்பம் பூ ரசம் பித்த சம்பத்தப்பட்ட நோய்களைக் குணப்படுத்தும். வேப்பிலைக் கசாயம் கிருமிகளைக் கொன்று காய்ச்சலைக் கட்டுப்படுத்தும் தன்மை கொண்டதாகும். தினமும், காலை வேளையில் பத்து வேப்பிலைக் கொழுந்து எடுத்து ஐந்து மிளகுடன் சேர்த்து மென்று சாப்பிட்டு வந்தால் மலேரியாக் காய்ச்சல் குணமாகும். நீரிழிவு நோயாளிகள் தொடர்ந்து சாப்பிட்டு வர மாத்திரை எதுவும் இன்றிக் குணமாகும். கார்த்திகை மாதம் விடுகின்ற கொழுந்தை இருபத்தேழு நாள் சாப்பிட பாம்பு விடம் நீங்கும். பாம்பு கடித்தாலும் விடம் ஏறாது. ஒரு மாதம் சாப்பிட்டு வந்தால் பதினெட்டு வகையான குட்டமும் குணமாகும். நூற்றாண்டு வேம்பின் பூ, தளிர், பட்டை, வேர், காய் உலர்த்திய சூரணத்தை ஆறு மாதம் சாப்பிட்டு வந்தால் நிச்சையம் குட்டம் முதலான தோல் நோய் அனைத்தும் குணமாகும். புளி நீக்கி பத்தியம் இருத்தல் வேண்டும். வேப்பிலை, எலுமிச்சம் பழச் சாற்றில் அரைத்துத் தலைக்குத் தேய்க்க, பித்த மயக்கம், குடிவேறி குணமாகும். வேப்பிலைமஞ்சள் சேர்த்து அரைத்துப் பூச பித்த வெடிப்பு கால் பாத எரிச்சல் குணமாகும். நகச்சுத்திக்கு பற்றிட குணமாகும். வேப்பிலையை பச்சையாகவும் வேக வைத்தும் அல்லது கசாயம் செய்தும் சாப்பிட்டு வந்தால் தீராத நோய் அனைத்தும் தீர்ந்து விடும்.! 

உலக யோகா தினம்

இரண்டாவது உலக யோகா தினம் ஜூன் 21 அன்று உலகம் முழுவதும் கோலாகலமாக  கொண்டாடுவதற்கான ஏற்பாடுகள் தடபுடலாக நடந்து வருகிறது.! மத்திய அரசு மாவட்டத்திற்கு ஒரு லட்சம் விதம் இந்தியாவில் உள்ள அத்தனை மாவட்டங்களுக்கும் நிதி ஒதுக்கி உள்ளது.! இதுபோக பெரிய கார்ப்பரெட் யோகா கம்பெனிகளுக்கு பலகோடி நிதியையும் இன்னும் பல்வேறு விதமான உதவிகளையும் செய்துவருகிறது.!  மாவட்டத்திற்கு ஒரு லட்சம் பணத்தை அவர்களிடம் விண்ணப்பிக்கும்   ஒருவரை தேர்ந்தெடுத்து வழங்குவார்கள்.! போன ஆண்டு பல மாவட்டங்களுக்கான ஒதுக்கீடை   ஒருசில மாநில அமைப்புகளே பெற்று அவர்களுக்கு தெரிந்த மாவட்ட அமைப்புகளுக்கு அனுப்பி அதன் மூலம் ஒவ்வெரு மாவட்டத்திலும் கிட்டத்தட்ட 50  இடங்களில் பயிற்சிகள்  நடைபெற ஏற்பாடுகள் செய்யப்பட்டன.!  பத்து முதல்  30 நாட்கள் தெர்ந்தெடுக்கப் பட்ட பள்ளி, கல்லூரி, சமூக கூடங்களில் ஒத்திகை பிறகு ஒருநாள் கூத்து.! கர்ப்பரேட் சாமியார்கள்  தனது பங்கிற்கு ஒரு மாவட்டத்திற்கு பல லட்சம் பேருக்கு யோகாவை கற்றுகொடுத்தாயிற்று  தமிழகத்தில்   பலகோடி பேருக்கு தீட்சை வழங்கி வருகிறோம்  என்றெல்லாம் கூறி வசூல் சக்கரவரத்திகளாக வலம் வர ஆரம்பித்து விட்டார்கள்.! நம்மைப்  போன்ற எளிய யோகா ஆசிரியர்களும்  அமைப்புகளும் தனது சக்திக்கு இயன்றவாறு பல விழிப்புணர்வு பயிற்சிகளை வழங்க முனைந்து நிற்கிறார்கள்.! சென்ற ஆண்டு முதல் யோகா தினக் கொண்டாட்டத்தில் நமது அம்யோகா டிரஸ்ட் அடியேன் நாகர்கோவில் அண்ணா விளையாட்டரங்கில் உலகிலேயே முதல் முறையாக தொடர்ந்து  32 நிமிடங்கள் சிரசாசன நிலையில் யோகா  வகுப்பெடுத்து சாதனை புரிந்தோம் இதில் நான்கு முக்கியமான யோகாசனம், பிராணாயாமம், தியானம் மற்றும் இயற்கை வாழ்வியல் இரகசியங்களையும் கற்பித்தோம்.!  இதில் நூற்றிற்கும் மேற்பட்ட பொதுமக்கள் கலந்துகொண்டு பயன்பெற்றனர்.! அதில் ஒரு ஐந்துபேர் நம்மிடம்  பிறகு முறையாக யோகா கற்க வந்தனர்.! உண்மையில்  இந்த ஐந்துபேர் மட்டும்தான் நமது யோகா தினக் கொண்டாட்டத்தால் பயனடைந்தவர்கள். மற்றபடி கலந்து கொண்டவர்கள் வெறும் வேடிக்கை மனிதர்கள் மட்டும்தான்.! அதன்பிறகு நமது ஒருமாத கால இலவச சக்கரை சவால் முகாம், இரத்த அழுத்தம், உடல்பருமன், அடுக்குத்தும்மல் போன்ற நோய்களுக்காக நடத்தப்பட்ட  பயிற்சியில் கலந்து கொண்டு பயனடைந்தோர் கிட்டத்தட்ட நூறுபேர் இவர்களில் பலர் இன்சுலின், இரத்த அழுத்த மாத்திரை போன்றவற்றை நிறுத்தி உணவு முறை, யோகா, வாழ்க்கை முறையை சீரமைத்துக் கொண்டு ஆரோக்கியமாக வாழ்கிறார்கள்.! உண்மையில்  இவர்கள்தான்  யோகாவின் ஆற்றலுக்கு சான்றாய் இருப்பவர்கள்.!  ஒருநாள் கொண்டாட்டத்தில் இதுபோன்ற மனிதர்களுக்கு  வாழ்த்து, இதுபோன்ற ஆய்வுப்பூர்வமான பணிகளை செய்யும் அமைப்புகளுக்கு பெரிய அங்கீகாரம் வழங்கி  ஊக்குவித்தால் எளிய நிலையில் உள்ள யோகா ஆசிரியர்களையும் சாதனையாளர் களையும் கண்டறிந்து  விருது வழங்கி கவுரவித்தல் போன்ற பணிகளை மத்தியஅரசு  செய்தால்  மட்டுமே உண்மையில்  அது யோகாவை வளர்க்கும் கொண்டாட்டமாக அமையும்.!  அல்லது இதெல்லாம் வெறும் வெற்று விளம்பரம்  என்று சிலர் கூறுவதுபோல் ஆகிவிடும்.! நலம் பெருகட்டும் … amyogatrustblogspot.com     mobile:9629368389

Friday, June 3, 2016

திக்குவாய்

இயற்கை வழியில் திக்குவாயை குணப்படுத்துங்கள்       நாட்டுப்பசும் பால் 200 மில்லி எடுத்து அதில் ஒரு தேக்கரண்டி மலைத்தேன் கலந்து தொடர்ந்து 15 நாட்கள் வெறும் வயிற்றில் குடித்துவர  திக்குவாய், மனபயம் மாறும். ஞாபகசக்தி அதிகரிக்கும்.!நலம் பெருகட்டும் …          

amyogatrustblogspot.com

கை நடுக்கம்

இயற்கை முறையில் கை நடுக்கத்தை குணப்படுத்துங்கள்.      தூதுவளை இலையை மை போல் அரைத்து சுண்டைக்காய் அளவு காலை வெறும் வயிற்றில் பதினைந்து நாள் கால் டம்ளர் பசும்பால் அல்லது சுடுநீரில் கலந்து குடித்து வர கை நடுக்கம், நெஞ்சுசளி, உடல் பலவீனம் குணமாகும்.! நலம்பெருகட்டும் …  

amyogatrustblogspot.com    mobile:9629368389