Saturday, March 11, 2017

குதிகால்வலி மற்றும்மாதவிடாய்பிரச்சினை

[3/11, 12:49] Am Yoga: குதிங்கால் வலிக்கு இயற்கை மருத்துவம்

குதிங்காலில் வலி உள்ளவர்கள்  ஒரு செங்கலை நெருப்பிலிட்டு சூடாக்கி அதன் மீது ஏழு எருக்கன் இலைகளை அடுக்கி , அந்த எருக்கன் இலைகள் மீது குதிங்காலை சிறிது நேரம் அழுத்தி வைப்பார்கள். பதமான அந்த சூட்டில் குதிங்கால் வாதம் அல்லது குதிங்கால் வலி நீங்கும் என்பது கிராமத்து மக்களிடம் ஒரு நம்பிக்கையாக உள்ளது. அனுபவத்தில் பலன் தருவதை காண முடிகிறது.!

இணையப்பகிர்வு
[3/11, 12:51] Am Yoga: மாதவிலக்கை தள்ளிப் போட ஆரோக்கியமான இயற்கை வழிமுறை

சில பெண்களுக்கு நேரம் காலம் தப்பி மாதவிலக்கு வரும். மறுநாள் வீட்டுல விசேஷம் இருக்கும். இந்த நேரத்தில் டென்ஷன் ஆகாமல் மாதவிலக்கை தள்ளி போட நான் சொல்லும் இயற்கை வழியை பின்பற்றலாம். இதற்காக கண்ட கண்ட ஆங்கில மருந்துகளை பயன்படுத்தாமல் இதை பயன்படுத்தி பாருங்கள்.

இந்தப் பிரச்சனையை சரி பண்ணக்கூடிய அருமருந்து ‘சப்ஜா விதை’! இந்த சப்ஜா விதை நாட்டு மருந்துக் கடைகள்ல கிடைக்கும். இதை வாங்கிட்டு வந்து, ராத்திரி கால் டம்ளர் தயிரில் ஒரு டீஸ்பூன் சப்ஜா விதையை ஊறப் போட்டு, மறுநாள் காலையில் வெறும் வயிற்றில் சாப்பிட்டா உடனடியா பலன் கிடைக்கும். ரத்தப்போக்கு நிக்கும்.

 வந்தது நிக்கறதுக்கு மருந்தை பார்த்தோம். இப்போது வரப் போறதைத் தள்ளி வைக்கறதுக்கும் மருந்து இருக்கு.
இதற்கும் இதே சப்ஜா விதை தான்.
இந்த சப்ஜா விதை - தயிர் கலவையை சாப்பிட்டு, ரெண்டு மலை வாழைப்பழத்தை சாப்பிட்டு, ஒரு டம்ளர் தண்ணியைக் குடிக்க வேண்டும். கேரண்ட்டியா அன்னிக்கு மாதவிலக்கு ஆகாது!

 தூரத்தைத் தள்ளிப் போட, இன்னொரு சூப்பரான - ஆரோக்கியமான வழி இருக்கு! காலையில வெறும் வயித்துல கைப்பிடி பொட்டுக்கடலையை (பொரி கடலை) மென்னு தின்னு, ஒரு டம்ளர் பச்சைத் தண்ணி குடிங்க. அதுக்கப்புறம் ஒரு மணி நேரம் கழிச்சுத்தான் காப்பியோ, டீயோ எதுவானாலும் குடிக்கணும்.

அப்படிச் செஞ்சா கட்டாயம் அன்னிக்கு மாதவிலக்கு வராது. இப்படியே அஞ்சாறு நாள் கூட மாதவிலக்கைத் தள்ளிப் போடலாம். உடம்பை பாதிக்காத எளிய வழி! கூடவே, உடம்புல புரோட்டீன் சத்தும் சேரும்!

 சில சமயம் ‘சீக்கிரமே மாதவிலக்கு வந்துட்டா தேவலை’னு நினைச்சா, அதுக்கும் ஒரு கை வைத்தியம் இருக்கு!
கொஞ்சம் எள்ளையும் வெல்லத்தையும் சேர்த்துத் தின்னுங்க. பலன் நிச்சயம்! எள், வெல்லம் ரெண்டுமே சூட்டைக் கிளப்பிவிட்டு, மாதவிலக்கையும் வர வச்சிடும். அதே மாதிரி, , இஞ்சிச் சாறுல நிறைய வெல்லம் கலந்து வெறும் வயித்துல குடிச்சாலும் உடனடியாக பலன் கிடைக்கும்.!

*இணையப்பகிர்வு*
[3/11, 17:22] Am Yoga: *அஜீரணம் குணமாக*

சுக்கு,மிளகு,திப்பிலி, பெருஞ்சீரகம், இந்துப்பு இந்த ஐந்து பொருட்களையும் வாங்கி சம அளவு எடுத்து பொடித்து வைத்துக் கொண்டு மூன்று வேளையும் சாப்பிட்ட உடன்  ஒரு ஐந்து கிராம் அளவு கலவையை எடுத்து வாயில் போட்டு கால் டம்ளர் சுடுநீர் குடித்து வந்தால் அஜீரண வாய்வுத்தொல்லை தீரும்.!

🌿இயற்கை மூலிகை தயாரிப்புகளுக்கு🍁
Aum Herbals
Mobile & Whats app
9629368389
[3/11, 17:22] Am Yoga: இயற்கை வழியில் வாத, பித்த, கப வியாதிகளை குணமாக்குங்கள்         திரிபலா சூரணம் ஒரு எளிய சர்வரோக நிவாரணி. கடுக்காய் ஒருபங்கு  நெல்லிக்காய்  அரைபங்கு  தான்றிக்காய் கால் பங்கு இவற்றின் தோலை மட்டும் சேகரித்து இடித்துவைத்துக் கொண்டால் திரிபலா சூரணம் தயார்.!  வாதத்திற்கு வெந்நீரிலும் பித்தத்திற்கு நெய்யிலும் கபத்திற்கு தேனிலும் ஒருத்தேக்கரண்டி அளவு தினமும் மூன்று வேளையும் கொடுத்துவர பேதியை சுகமாக வெளியேற்றி பித்தச்சூட்டையும் குறைத்து கைகால் உளைச்சலையும் நீக்குவதுடன் கபத்தையும் இதமாக வெளியேற்றிவிடும்.! இந்த சூரணத்தை வெந்நீரில் போட்டு வாய்க்கொப்பளித்து வர வாய்ப்புண் குணமாகும். இதே பொடியை தேங்காய் எண்ணையில்  லிட்டருக்கு 48 கிராம் விதம் கலந்து காய்ச்சி தலையில் தேய்த்து குளித்துவர பித்தச்சூடு குறைந்து முடி உதிருதல் நிற்கும்.! உதட்டு வெடிப்பு மற்றும் புண்களுக்கும் இந்த எண்ணையை பயன்படுத்தலாம்! தவிடு நீக்காத அரிசிக்கஞ்சி நீரில் திரிபலா சூரணத்தை கலந்து குடித்துவர இரத்தத்தில் உள்ள கிருமிகள் அழிவதோடு காமலை நோயும் குணமாகும். பருத்த உடலை சிறுக்க வைக்க வெந்நீரில் ஒருத்தேக்கரண்டி தினமும் சாப்பிடலாம். மெலிந்த உடலை தேற்ற நாட்டுப்பசும்பால் மற்றும் தேன்கலவையோடு தினமும் இரவில் உண்டுவரலாம்.! மலச்சிக்கல், ஆஸ்துமா, சக்கரைவியாதி, இரத்த அழுத்தவியாதி இருப்பவர்கள் தினமும் இந்தப் பொடியை இரவில் ஒருத்தேக்கரண்டி அளவு கால்டம்ளர் நீரில் சாப்பிட்டபின் உண்டு வர மேற்கண்ட நோய்கள் கட்டுப்படும்.! நாள்ப்பட்ட நோய்களுக்கு வலிமையான தீர்வாகவும் பருவ  நோய்களுக்கான எளிமையான தீர்வாகவும் விளங்குகிறது திரிபலா சூரணம். திரிபலாவோடு ஆடதோடை மற்றும் சுக்கு சேர்த்து தயாரித்துள்ள பஞ்சமூலி சூரணம் தேவைப்படுவோர் நம்மை அழைக்கவும்.!  AUM HERBALS MOBILE:9629368389! amyogatrustblogspot.com நலம் பெருகட்டும் …

No comments:

Post a Comment