Saturday, March 4, 2017

கண்கள்

கண்களின் எற்படும் தொந்தரவுகளில் இருந்து எளிதில் விடுபட உத்திகள்!

ஒருமுறை கண்ணாடி அணிந்தால், பிறகு கண்ணாடியைக் கழற்ற வழியே இல்லையா?

பல வழிகள் இருக்கிறது.

கண்கள் தொந்தரவுகளில் இருந்து எளிதில் விடுபட உத்திகள்!

கண்களைக் காக்கும் பயிற்சி

கண்களில் ஏதேனும் பிரச்சனை வந்தால், மருத்துவரைப் பார்த்து, கண்ணாடி அணிந்து கொள்கிறோம். பிரச்சனை சரியானதும் கண்ணாடியைக் கழட்டிவிட வேண்டும் தானே? ஆனால், ஒருமுறை கண்ணாடி அணிந்தால், அதையே தொடர்கிறோமே ஏன்? ஒருமுறை அணிந்தால், கண்ணாடியைக் கழற்ற வழியே இல்லையா?

கண்ணாடி ஏன் அணிகிறோம்?

கண்ணின் முன்பக்கத்தில் இருந்து, பின்பக்கம் வரை அதாவது, கருவிழியில் இருந்து விழித்திரை வரை இருக்கும் விட்டத்தை `ஆக்ஸியல் லென்த்’ (Axial length) என்பார்கள். பிறக்கும்போது 17 mm இருக்கும் விட்டம், பெரியவர்கள் ஆகும்போது 22.5 mm வரை அதிகரிக்கும். சிலருக்கு 24 மி.மீ வரைகூட இருக்கும். 22.5 mm என்ற இந்த சராசரி அளவைவிட அதிகமாகவோ, குறைவாகவோ இருந்தால், பார்வை சரியாகத் தெரியாது. ‘ஆக்ஸியல் லென்த்’ குறைவாக இருப்பவர்களுக்குக் கிட்டப் பார்வையிலும், அதிகமாக இருப்பவர்களுக்குத் தூரப் பார்வையிலும் பிரச்சனை இருக்கும். தூரப் பார்வை உள்ளவர்களுக்கு குவிவு வில்லைகளும் Convex lens, கிட்டப் பார்வை உள்ளவர்களுக்கு குழிவு வில்லைகளும் Concave lens பார்வைக் கோளாறைச் சரிசெய்யத் தரப்படும்.

கண்ணாடி போட்டுக்கொண்டால், பார்வைக் கோளாறு சரியாகிவிடுமா?

கண்ணாடி போடுவதால், நிச்சயம் பார்வைக் கோளாறு சரியாகாது. நாம் பார்க்கும் பொருளின் பிம்பம், கண்ணில் இருக்கும் லென்ஸ் வழியாக விழித்திரையில் விழும். விழித்திரையில் விழும் இந்த பிம்பம், மூளைக்குச் சென்று பதிந்த பிறகுதான், நாம் அந்தப் பிம்பத்தைப் பார்க்கிறோம். கருவிழிக்கும் விழித்திரைக்குமான இடைவெளி அதிகமாக இருந்தாலோ, குறைவாக இருந்தாலோ, நாம் பார்க்கும் பிம்பம் சரியாக விழித்திரையில் விழாது.

கண்ணாடி அணிவதன் மூலம், கருவிழி வழியாகச் செல்லும் பிம்பமானது, சரியாக விழித்திரைக்குச் சென்றடைய உதவும். ஆனால், கண்ணின் முன் பக்கத்துக்கும் பின் பக்கத்துக்கும் இடையில் இருக்கும் இடைவெளியைக் கண்ணாடி குறைக்கவோ, அதிகரிக்கவோ செய்யாது.

ஒருமுறை கண்ணாடி அணிந்தால், பிறகு கண்ணாடியைக் கழற்ற வழியே இல்லையா?

பல வழிகள் இருக்கிறது. அதில் ஒரு வழிமுறையை இன்று பார்ப்போம்.

கண்களுக்கான பயிற்சி  1

நிமிர்ந்து நேராக உட்கார வேண்டும். வலது கையில் கட்டை விரலைத் தவிர மற்ற விரல்களை மடக்கி, பார்வைக்கு நேராக உயர்த்தி, கட்டைவிரலைப் பார்க்க வேண்டும். நம் பார்வை, கட்டை விரலில் நிலைத்திருக்க வேண்டும். கையை மெதுவாக வலப்புறம் நகர்த்த வேண்டும். கையை நகர்த்தும்போது, விழிகள் மட்டும் கையோடு சேர்ந்து நகர வேண்டும். தலையைத் திருப்பக் கூடாது. கழுத்து, முதுகு, நேராக இருப்பது அவசியம். கட்டை விரலைத் தெளிவாகப் பார்க்கக்கூடிய தூரம் வரை மட்டுமே கையை நகர்த்தவும். சிறிது நேரம் அப்படியே வைத்திருக்கவும். பிறகு, கையை அப்படியே பழைய நிலைக்குக் கொண்டுவரவும். இதை, ஐந்து முறை செய்ய வேண்டும். பயிற்சி செய்யும்போது, கண்களைச் சிமிட்டக் கூடாது. இதேபோல கை பெருவிரலை இடது பக்கம் நகர்த்தி செய்ய வேண்டும்.

கண்களுக்கன பயிற்சி 2

நிமிர்ந்து நேராக உட்கார வேண்டும். கட்டை விரலைத் தவிர மற்ற விரல்களை மடக்கி, வலது கையைப் பார்வைக்கு நேராக உயர்த்தி, கட்டை விரலைப் பார்க்க வேண்டும். இப்போது, கையை மேலே உயர்த்த வேண்டும். உயர்த்தும்போது கருவிழிகள் மட்டும் கையோடு சேர்ந்து நகர வேண்டும். சிறிது நேரம் அப்படியே வைத்திருக்கவும். பிறகு, கையை பழைய நிலைக்குக் கொண்டுவரவும். கட்டை விரலைப் பார்த்தபடி கையைக் கீழே கொண்டுசெல்ல வேண்டும்.

கண்களுக்கான பயிற்சி  3

நேராக உட்கார்ந்து, மூக்கின் நுனியை உற்று நோக்கவும். கண்களோ, தலையோ வலிப்பது போன்று இருந்தால், கொஞ்சம் ஓய்வு எடுத்துவிட்டுத் தொடரலாம். பிறகு, கண்களை மூடி ஓய்வெடுக்கவும்.

கண்களுக்கான பயிற்சி 4

நிமிர்ந்து உட்கார்ந்து கண்களை 10 முதல் 20 time முறை சிமிட்டவும். பிறகு, கண்களைத் திறந்து நேராகப் பார்க்கவும். இடது கண் விழியை வலது பக்கமும், வலது கண் விழியை இடது பக்கமும் கொண்டுவந்து பயிற்சி செய்யவும். அதன் பிறகு, கைகளை தேய்த்து கண்களில் வைத்துக்கொள்ளவும். மீண்டும் 10- 20 முறை கண்களைச் சிமிட்டவும்.

கண் சிமிட்டுதல் மற்றும் மூக்கின் நுனியினை பார்த்தல் புருவமத்தியைப் பார்த்தல் என்பவற்றுடன் கீழே கொடுக்கப்பட்டுள்ள உத்திகளையும் செய்து வந்தால்
கண் சம்பந்தப்பட்ட  நோய்களையும் குணப்படுத்தலாம்.

குணப்படுத்தக்கூடிய நோய்கள்:

கிட்டப்பார்வை,

 தூரப்பார்வை,

குளுக்கோமா Glucoma,
கண்ணில் புரை Cataracts,

 கண்ணுள் அழுத்தம் அதிகரித்தல் Eye Pressure,
 கண் உலர்தல் Dry eyes.!

*இணையப்பகிர்வு*

No comments:

Post a Comment