Monday, September 19, 2016

மனமென்னும் மந்திரம்

போன வாரத்தில் இரண்டு  பக்கவாத நோயாளிகளை ஒரே நாளில் வேறு இடங்களில் சந்தித்தேன். இரண்டு பேருமே படுத்தப் படுக்கையாய் கிடந்தவர்கள். ஒருவரின் உதவி இல்லாமல் எழுந்து அமரகூட  அவர்களால் முடியாது.! ஆனால், அவர்களை சந்தித்த பத்தாவது நிமிடத்திற்குள் இரண்டு பேரையும் எழுந்து நடக்க வைத்துவிட்டேன்.!

பயப்படதீர்கள், முடவர்கள் நடக்கிறார்கள் குருடர்கள் பார்க்கிறார்கள்
என்று கிருஸ்து காலத்திற்கு செல்லவில்லை.!

உண்மையில் நடந்ததை தான் சொல்கிறேன். அதில் ஏற்கனவே ஒர் ஆண்டிற்கு முன் நம்மிடம் பக்கவாதத்திற்கு யோக சிகிட்சை பெற்று பிறகு அவரின் மனைவிக்கு கேன்சர் வந்துவிட்டதால் கவனிப்பின்றி பயிற்சியை விட்டவர் ஒருவர்.!

இன்னொருவரை அன்றுதான் ஒரு மாணவர் அறிமுகம் செய்திருந்தார்.
நான்கு வார்த்தை தலையில் நாலுசுற்று முதுகில் நாலுசுற்று முன்பக்கமாக கொஞ்ச நேரம்பின்பக்கமாக கொஞ்ச நேரம்அழுத்திப்பிடித்து தூக்கிநிறுத்தி
நடக்க விட்டேன். நடந்தே விட்டார்கள்.! இதுதான் மனதின் சக்தியாய் விளங்கும் பிரபஞ்ச  ஆற்றலின் அற்புதம்.! இதை நான் எந்த கல்லூரியிலும் கற்கவில்லை,
எந்த குருவும் எனக்கு போதிக்கவில்லை, இதற்கு முன் இதுபோல் நானே செய்ததில்லை.! எல்லா உயிர்களும் மேன்மையடைய வேண்டும்  என்று தினமும் பிராத்திக்கிறேன் அவ்வளவே எனது பங்கு.!

அந்தப் பிராத்தனையே இந்த அற்புதத்தை செய்தது.! என்
ஒருவனின் பிராத்தனை ஒரே நாளில் இரண்டு படுக்கை நோயாளிகளை எழுந்து நடக்க வைக்கும் என்றால்  இந்த உலகம் முழுவதும் உள்ள அத்தனை மனிதர்களும் - எல்லா உயிர்களும் மேன்மையடையட்டும் என்று
பிராத்தனை செய்தால் எத்தகைய
மாற்றம் வரும்.! இந்த உலகே சொர்க்க பூமியாக மாறிவிடுமே.!

பொதுவாக வைத்தியத்தை பற்றிப் பேசும் போது சொல்வார்கள்
வைத்தியம் செய்பவன் தன்னை நம்ப வேண்டும். வைத்தியத்தை பெற்றுக்கொள்பவனும் வைத்தியனை நம்ப வேண்டும். இந்த இரண்டு
நம்பிக்கையும் இணைந்துவிடும்
போது அவர்கள் செய்யும் வைத்தியமும் தன்னை நம்பியவர்களை குணமாக்கிவிடும்.! இதைதான் இயேசு கிறுஸ்து பைபிளில் நானல்ல உன்னை இரட்சித்ததுஉன் விசுவாசமே உன்னை இரட்சித்தது. என்றார்; இவை அனைத்திற்கும் பிராத்தனையே மூலதனம்.!

எல்லோரும் இன்பம் பெறுக
எல்லோரும் அமைதி பெறுக
எல்லோரும் ஆனந்தம் பெறுக
எல்லா உயிர்களும் மேன்மை யடையட்டும்.!

வாழ்க வளமுடன்.!
நலம் பெருகட்டும் …

வருத்தப்பட்டு பிணியை சுமக்கும்
மனிதர்களே,
நீங்கள் எல்லோரும் என்னை
நினையுங்கள் உங்கள் பிணி
பணிபோல் விலகும்.!

-ஏகப்பிரியன் DYT
amyogatrust.blogspot.in
Aum Herbals

No comments:

Post a Comment