Monday, September 5, 2016

சர் கரை சவால்

இயற்கையின் அற்புதம்🍋

கடந்த ஆண்டு டிசம்பர் 10 ஆம் தேதி முதல் ஜனவரி 9 ஆம்  தேதிவரை சக்கரை சவால் என்ற தலைப்பில் நமது நாகர்கோவில் இயற்கை வாழ்வில் மையத்தில் சக்கரை நோயாளிகளுக்கு இலவச பரிசோதனை, யோகாப்பயிற்சி, மூலிகை மருந்துகள், இயற்கை உணவு திட்டம் போன்றவற்றை முற்றிலும் இலவசமாக வழங்கினோம்🍏

இதில் 30 பேர் கலந்துகொண்டனர். ஆரம்பத்தில் சக்கரை அதிகமாக இருந்ததால் எந்த இனிப்பையும் சாப்பிடாமல் தினசரி இன்சுலின் மற்றும் மாத்திரையை பயன்படுத்திய பலருக்கு பயிற்சி ஆரம்பித்த ஒரிரு வாரத்திலேயே சக்கரை அளவு குறைந்து வந்ததோடு உடல் ஆரோக்கியமும் மேம்பட்டதால்
பிறகு செயற்கை இன்சுலின், மாத்திரையை நிறுத்திவிட்டு பயிற்சி, வாழ்வியல் வழிமுறை, மூலிகை மருந்தின் மூலமே சக்கரையை கட்டுப்பாட்டில் கொண்டு வந்தோம்🍑
நிறைவு நாளில் அதிகப்பட்சமாக  55 முதல் 181 அளவு வரை பலருக்கும் சக்கரை குறைந்திருந்தது. சிலருக்கு சக்கரை இயல்பு நிலைக்கும் வந்திருந்தது. ஆனாலும் ஒரிருவருக்கு சக்கரை சற்று அதிகமாக கூடி இருந்தது. இன்னும் சிலருக்கு பயிற்சி ஆரம்பித்த நாளில் எப்படி இருந்ததோ அதே அளவிலேயே சக்கரை இருந்தது. இதில் கவனிக்கத் தக்க  விசயம் என்னவெனில் அனைவரும் இயற்கையான பழம், பனங்கற்கண்டு போன்ற இயற்கை இனிப்புகளை உண்டு வந்தனர். மாத்திரை மருந்துகளை நிறுத்திவிட்டனார் ஆனாலும் முன்பிருந்த சோர்வு, தாகம், அடிக்கடி சிறுநீர் கழித்தல், வேகமாக எடை குறைதல் போன்ற  எந்த தொந்தரவும் இல்லை. இதுவன்றோ இயற்கையின் அற்புதம்.!🌻

இந்த நிகழ்வில் கலந்துகொண்டவர்களில் பலர்  50 வயதிற்கு மேற்பட்டவர்கள் தொடர்ந்து பல ஆண்டுகளாக செயற்கை இன்சுலினுக்கு அடிமையாக இருந்தவர்கள் இன்று இயற்கையின் பாதுகாப்பில் மகிழ்வாக இருக்கிறார்கள்.!

இந்தப் பயிற்சி முறைகளை பிரபலப்படுத்த ஒரு ஆவணப்படத்தையும் தயாரித்து நாமே வெளியிட்டோம்.!
இதோ மீண்டும் வருகின்ற செப்டம்பர்  14 ஆம் தேதி முதல் அக்டோபர் 13 ஆம் தேதிவரை  மீண்டும் ஒரு மாத காலத்திற்கு காலை 7.10  -மணி  முதல் 8.10 மணிவரை இலவச சக்கரை சவால் நிகழ்வை நடத்த உள்ளோம்🐿

வினைப்பயன் உள்ளவர்கள் இதில் கலந்துகொண்டு பிணியை வெல்வதோடு இரசாயண மருந்து, இரசாயண உணவுகளின் கோரப் பிடியிலிருந்து  விடுபடுவார்கள்.!
நலம் பெருகட்டும் …

Am Yoga Trust
யோகா, இயற்கை வாழ்வியல் பயிற்சி மையம்
பார்வதிபுரம் ஜங்சன்,
நாகர்கோவில்.3
தொடர்பிற்கு:9629368389
Aum Herbals
amyogatrust.blogspot.in

No comments:

Post a Comment