Sunday, September 18, 2016

யாம் பெற்ற இன்பம்⛹

கடந்த வருடம் ஒரு மழைநாளில் நாகர்கோவில் தினத்தந்தி அலுவலகம் எதிரே பாதாள சாக்கடைக்காக வெட்டப்பட்டப் பட்டிருந்த குழியில் எனது பைக்கோடு குப்புற விழுந்துவிட்டேன். முதுகுத்தண்டில் சற்று பலத்த அடி🚴🏿
இரண்டு மூன்று நாட்கள் நிமிரவே முடியவில்லை. பிறகு நாபியாசனம், புஜங்காசனம்  போன்ற ஆசனங்களை செய்து சற்று ஆசுவாசப்படுத்திக் கொண்டேன். ஆனாலும், ஏகபாத சிரசாசனம், பஸ்திமோத்தானசனம் போன்ற ஆசனங்களை செய்துவிட்டால் அன்று முழுவதும் அடி முதுகும் கால்மூட்டும் வலித்துக் கொண்டே இருந்தது. இந்த ஆசனங்களை செய்யவிட்டால் ஒன்றும் தொந்தரவு இல்லை. இருந்தாலும் ஸ்மார்ட் போன் வெச்சிருக்கிறவன் கையைப் போலதான் யோகாசனம் படிச்சவன் உடம்பும் சும்மா இருக்காது. ஒரு கட்டத்தில் வலி கூடிக்கொண்டே வந்ததால் ஒரு சில அட்வான்ஸ்  ஆசனங்கள் செய்வதை விட்டேன் வலியும் விட்டுவிட்டது. ஆனால், தினமும் 42 ஆசனங்களை செய்து வந்தவன் அதில் பாதிக்கு மேல் விட்டுவிட்டதால் உடல் கொஞ்சம் குண்டாக ஆரம்பித்ததுடன் வளைவுத்தன்மை மிகவும் குறைந்தது போல்  தோன்றியது🎭  விதி வலியது என்று மனசை தேற்றத் தொடங்கிய போதுதான் ஆபத்பாந்தவனாய் நமது மாணவர் ஒருவர் ,தனக்கு முன்பிருந்த  உடல்வலி, முதுகுவலி போன்றவை இப்பொழுது இல்லை.
அதோடு உடல் எடையும் குறைந்துள்ளது.  அதற்கு முக்கியக் காரணம்  யோகாவும் தினமும் ஒருவேளை  உணவாக சாப்பிடும் தேங்காவும் உங்க சத்துமாவும் தான் என்றார்.! அடடா, நாமும் அதைத் தானே சாப்பிடுகிறோம் என்று நினைத்தேன். பிறகு  யோசித்து சாயங்காலம் குடித்து வந்த சத்துமாவை அதிகாலை  ஐந்து மணிக்கே குடித்துவிட்டு வீட்டில் இருந்து கிளம்ப ஆரம்பித்தேன்.!
🌠 என்ன ஆச்சரியம் ஒரு வாரத்திலேயே நல்ல பயன் தெரிந்தது. மீண்டும் அனைத்து அட்வான்ஸ் ஆசனங்களையும் பயின்று வருகிறேன். அடி முதுகுவலியும் அதிக எடையும் போயே போய் விட்டது.!🌈

நன்றி, நம்மிடம் கற்று நமக்கே திரும்ப போதித்த அற்புதமாணவர்
கோபாலகிருஷ்ணருக்கு.!

அனைத்து உதவிகளும் நமக்குள்ளேயே உள்ளன.!

amyogatrust.blogspot.in
Mobile:9629368389

No comments:

Post a Comment