Wednesday, September 21, 2016

தேங்காய்

வான்கொண்ட அமிழ்தம் தேங்காய்
தேங்காய் உண்ட மனிதன் ஞானி
ஞானி சொன்ன வார்த்தை  வேதம்
வேதம் கண்ட மாயை பேதம்❄

உலகிலேயே சிறந்த உணவு தேங்காய் தான் இதை உலகமே ஒப்புக்கொண்டாலும்
இன்னும் சில மருத்துவர்கள்
ஒப்புக்கொள்ள வில்லை.!
"எனது மருத்துவர் என்னை கடந்த
பத்து ஆண்டுகளாகவே சக்கரையும் கொழுப்பும் இருப்பதால் தேங்காய் மட்டுமல்லாது எந்த கொழுப்பு மற்றும் இனிப்பு உணவுகளையும் எடுக்க வேண்டாம் என்று எச்சரித்திருந்தார். நானும் கடந்த காலங்களில் அவ்வாறே வாழ்ந்து வந்தேன். ஆனால், சமீப காலங்களில் ஹீலர் பாஸ்கர் போன்ற சிலரின்  பேச்சைக் கேட்டு தேங்காய், வாழைப்பழம்,கருப்பட்டி, அசைவ உணவுகள் என்று அனைத்தையும் எடுத்துவருகிறேன். இன்று மிக ஆரோக்கியமாக உணருகிறேன்.!
பத்தாண்டுகளுக்கு முன்பே ஹார்ட் அட்டாக் வேறு வந்துவிட்டதால்
குடும்ப மருத்துவரின் ஆலோசனையில் பல மாத்திரைகளையும் தொடர்ந்து எடுத்துக்கொண்டிருந்தேன். இன்று அனைத்தையும் நிறுத்திவிட்டேன்.
யோகா செய்கிறேன், நிறைய இயற்கை தலங்களுக்கு  சென்று வருகிறேன், மிக மகிழ்வாக ஆரோக்கியமாக இருக்கிறேன். எனக்கு இருப்பதெல்லாம் ஒரே வருத்தம்தான் கடந்த பத்தாண்டுகளாக எனது மருத்துவர் என்னை ஏமாற்றி இருக்கிறாரே அதைதான் என்னால் தாங்க முடியவில்லை. என்று; ஒரு யோகா மாணவர் என்னிடம் குமுறினார். நான் கூறினேன். "அய்யா அவர் உங்களை ஏமாற்றவில்லை அவரையும் சேர்த்து இந்த வர்த்த உலகம் ஏமாற்றிவருகிறது. தேங்காய் ஏதோ தடை செய்யப்பட்டப் பொருள் போலவும் சூரியகாந்தி எண்ணைதான் உடலை ஒழுங்காக இயங்க வைக்கும் என்றும், இதயத்துடிப்பில் சிறிய மாற்றம் ஏற்பட்டாலும் ஆண்டுக்கணக்கில் மாத்திரை சாப்பிட வேண்டும் என்றும் நாற்பது வயது ஆகிவிட்டாலே  அடிக்கடி மருத்துவசோதனை செய்வது முக்கியம் என்றும் திட்டமிட்டு BBC முதல் தினத்தந்தி வரை அடிக்கடி செய்திகளை பரப்புகிறார்கள். ஒரு பக்கம் எண்ணைய் குளியல் தேவையில்லை, தேங்காய் கெட்டது, இனிப்பு கெட்டது என்று சொல்லிக்கொண்டே இன்னொரு புறம் தினமும் குறிப்பிட்ட அளவு பிராந்தி குடித்தால் உடலுக்கு நல்லது, பீர் குடித்தால் உடலுக்கு குளிர்ச்சி,கோக் குடிப்பதுதான் நாகரீகம், பல பேருடன் படுக்கையை பகிர்ந்து கொள்வது மனித உரிமை, அவரவர் விருப்பப்படி வாழ்வதே சுதந்திரம் என்றெல்லாம்  செய்திகளை தொடர்ந்து கசிய விட்டுக்கொண்டே  இருக்கிறார்கள். ஒரு பக்கம்  நல்லதை பயன்படுத்த விடாமல் தடுத்து விடுகிறார்கள். இன்னொரு புறம் கெட்டது அத்தனையும் நல்லது என்று புகழ்பெற்ற பல்கலைகழகம், ஊடகங்கள், நடிகர்கள்,  மாடல்கள் என்று அத்தனை  வசதிகளையும் வைத்து அழகாக பரப்புகிறார்கள்.
இந்த உலகம் எதை பேசவேண்டும்
எதை உண்ணவேண்டும்
எந்த மாதிரியான வைத்தியம் பார்க்க வேண்டும் என்று அத்தனை
விசயங்களையும் திட்டமிட்டு செயல்படுத்தி வரும்போது அதன் மாயப்பிடியில் இந்த உலகமே தன்னை மறந்து நிற்கும் போது உங்கள் மருத்துவர் மட்டும் எப்படி தான் கற்ற மருத்துவத்தை மறக்காமல் இருப்பார். ஒருவேளை அவரே கொலஸ்ட்ராலுக்கு தேங்காய் நல்லது என்று கூறினாலும் இந்த உலகம் எப்படி ஏற்றுக்கொள்ளும்?
அனைத்தும் உண்மையையும் மாயை
மறைத்துக் கொண்டுள்ளதல்லவா?
இத்தகைய கொடிய வர்த்தக காலத்தில் கூட மாயையை கடந்து நீங்கள் மாரடைப்பிற்கு தேங்காவும்
சக்கரைக்கு கருப்பட்டியும் சாப்பிடும்
வரம் பெற்றுள்ளீர்களே அதுதான்
அதேதான் உங்கள் அதிஷ்டம்.!
இதற்காக இயற்கைக்கு நன்றி சொல்லுங்கள் " என்றதும்; உண்மைதான் என்று  கூறிவிட்டு நமது பிள்ளைகளுக்கும் இந்த உண்மைகள் விளக்கிக் கூறவேண்டும். என்றபடி விடைப்பெற்றார்.!
மூன்னோர் வழி நம் பெற்றதெல்லாம் அரிய இரத்தினங்கள் அதை நவீன ஆராய்ச்சி என்று கூறப்படும் சாக்கடையில் கொட்டாமல் பாதுகாப்பது

நமதுகடமை.!
நலம் பெருகட்டும் …

-ஏகப்பிரியன். மு.இஸ்மாயில் DYT
amyogatrust.blogspot.in
100% இயற்கையான மூலிகை தயாரிப்புகளுக்கு Aum Herbals
Mobile:9629368389

No comments:

Post a Comment