Monday, September 5, 2016

இளநீரும் எலுமிச்சையும்

இளநீரில் எலுமிச்சை சாறு கலந்து அருந்தினால் , வயிற்றுக் கடுப்பு நிற்பதுடன் , உடல் சூடு குறையும் . மேலும் , இளநீரில் வெந்தயத்தை ஊறவைத்து , அரைத்து சாப்பிட்டாலும் , உஷ்ணத்தால் ஏற்படும் வயிற்று கடுப்பு நீங்கும் .
♦ குழந்தைகளுக்கு வாந்தி பேதிக்கு , இளநீர் சிறந்த மருந்து .
♦ இளநீரின் வாய்ப்பகுதியில் துளையிட்டு , ஒரு கரண்டி சீரகத்தை உள்ளே போட்டு , இரவு முழுவதும் வைத்திருந்து , அதிகாலையில் பருகி வர உடல் உஷ்ணம் மற்றும் வயிற்றுவலி தீரும் .
♦ இளநீருடன் நுங்கை கலந்து உடலில் தேய்த்தால் , சொறி , சிரங்கு மற்றும் வேர்க்குரு பிரச்னை ஏற்படாது .
♦ இளநீருடன் தேன் கலந்து சாப்பிட , தாது பலம் ஏற்படும் .
♦ இளநீரைத் தொடர்ந்து சாப்பிட , வயிற்றுப் புண் ஆறும் .
♦ சிறிதளவு வால்மிளகை இளநீருடன் அரைத்து , நெற்றிப் பொட்டில் பூசிட , வெப்ப தலைவலி தீரும் .
♦ இளநீரில் பாசிப்பயறு , வெந்தயத்தை ஊற வைத்து , உடலில் தேய்த்துக் குளிக்க சொறி , வியர்வை நாற்றம் மறையும் .
♦ இளநீரில் மல்லித்தூள் அல்லது ஏலத்தூள் கலந்து சாப்பிட , வாந்தி நிற்கும் .
♦ இளநீரில் தர்பூசணி பழத்துண்டுகளையோ அல்லது வெள்ளரி பழத் துண்டுகளையோ கலந்து சாப்பிட உடல் உஷ்ணம் தணியும்.!
🌺இணையப்பகிர்வு

No comments:

Post a Comment