Tuesday, September 20, 2016

பப்பாளி வைத்தியம்

நாட்டு பப்பாளி மரத்தின் இலையை
பறித்து சதைத்து சாறெடுத்து அந்த சாற்றை படர்தாமரையால் பாதிக்கப்பட்டப் பகுதியில் பூசி காயவைத்து விட்டு மூன்று மணிநேரம் கழித்து குளிக்கலாம். பிறகு
🍏500 மில்லி தேங்காய் எண்ணையில் 15 கிராம்  வெள்ளைப்பூண்டை தட்டிப்போட்டு பூண்டு சிவந்துவரும்போது இறக்கி பத்திரப்படுத்திக் கொண்டு  அதை  படர்தாமரையால் பாதித்த இடத்தில் தொடர்ந்து 12 நாட்கள் போட்டுவர
எத்தகைய படர்தோல் வியாதியும் குணமாகும். குளியல் பொடியைப் போட்டு குளிக்கலாம். சோப்புநீக்கம்.!

🍃பப்பாளி இலையை சதைத்து சாறெடுத்து அதோடு அதே அளவு
சாத்துக்குடி ஜூஸ்  சேர்த்து
ஒரு கப்பாக 12 நாள் வெறும் வயிற்றில்  குடித்துவர உடலில் தங்கியுள்ள இறந்த செல்கள் வேகமாக
வெளியேறி ஆரம்ப நிலை சொரியாஸிஸ் வியாதி குணமாகும்.! மருந்தை குடிக்கும் காலத்தில் அசைவ உணவு, உப்பு,காரம் குறைத்துக்கொள்ள வேண்டும்.!

🍀நாட்டுப்பப்பாளி இலையை சதைத்து இரு கப் அளவு சாறெடுத்து தினமும் காலை
உணவிற்கு பின்னும் மதிய உணவிற்கு பின்னும்  இருவேளையாக பாதிப்பாதியாக 7 நாட்கள்  கொடுத்துவர
இரத்ததட்டுகள் அதிகரித்து விச ஜுரம் குணமாகும்.!

ஒரு கையளவு பப்பாளி இலையை  பிச்சிப்போட்டு இரண்டு டம்ளர் நீரூற்றி கொதிக்க வைத்து நீர் ஒரு டம்ளராக சுண்டியதும் இறக்கி வடிகட்டி  தேன் கலந்து வெறும் வயிற்றில்  தினமும் ஒரே வேளையாக 30 நாட்கள் குடித்துவர கர்பபை கட்டிகள்  கரையும், குடல் வலிமை பெறும்.!

🌱நாட்டுப்பப்பாளி இலையுடன்
வாழையிலை சம அளவெடுத்து
பணங்கற்கண்டு சேர்த்து
அரைத்து நெல்லிக்காய் அளவு காலை, மாலை மூன்று நாட்கள் உண்டு வந்தால் பெண்களுக்கு
சூதகதடை நீங்கும்.!

☘வறண்ட சருமம் கொண்டவர்கள் பப்பாளி இலையோடு
சோற்றுக்கற்றாளை சதையையும்
சேர்த்து அரைத்து முகத்தில் பூசி குளித்து வந்தால் முகம் பளப்பளப்பாகும்.!

amyogatrust.blogspot.in
100% தரமான மூலிகைப் பெருட்களுக்கு Aum Herbals
Mobile:9629368389

நலம் பெருகட்டும் …

No comments:

Post a Comment