Tuesday, September 20, 2016

உண்ணுவதெல்லாம் உணவா?

🦀உண்ணுவதெல்லாம்  உணவாகா
உடலை அசைப்பதெல்லாம்
உடற்பயிற்சியாகா
உரைப்பதெல்லாம் உரையாகா
உள்ளம் நினைப்பதெல்லாம் வாழ்வாகா🙈

எதற்காக கூறுகிறேன் என்றால்
மூலிகை மருந்து, யோகா இரண்டும் நமது முன்னோர் தந்த சொத்துக்கள்🕸
அதை முறையாக பயன்படுத்தினால் எத்தகைய உடல்,மன, ஆன்மாவின் பிணிகளையும் கடந்து பேரின்ப பெருவாழ்வில் நிலைக்கலாம்.!
ஆனால்,வாய்ருசி என்னும் மாயையும் ,பழக்கம் என்னும் -அரக்கனும், பெருமை என்னும்
அறிவீனமும் நாம் பேரின்பமடைவதை தடுத்து வதைத்தே கொல்கிறது மனிதனை🐣
பாக்கெட்டில் வரும் எல்லாமே குப்பை. பெரிய கம்பெனிகள் தருவது எல்லாமே இரசாயணம், விளம்பரத்தில் சொல்வது அத்தனையும் சுத்தமான பொய்.!
இதை உள்ளில் நிறுத்தி தீய மனசாட்டத்தையும்
நாவாட்டத்தையும் கடந்து முற்றத்தில் உள்ள வேம்பை பறித்து வாயில் வைத்தால்  போதும் பிணியெல்லாம் பறந்துபோகும். அதைவிட அற்புத மூலிகை இல்லை. மனம் நிறுத்தி மூன்றுமூச்சிழுத்தால் போதும் அதுவே ஆனந்தயோகமாகும்
விதியின் பெரும்பிணியும் கதறி ஓடும்.! புரிகிறதல்லவா?
"சரி அப்படியானல் இப்பொழுது தைராய்டு சீரின்மைக்கும், கொடிய மூட்டுவலிக்கும் தீர்வு சொல்கிறேன் படியுங்கள் … சுக்கு,மிளகு,திப்பிலி,வேப்பம்கொட்டை, பனங்கற்கண்டு சம அளவாக எடுத்துப் பொடித்து வைத்துக்கொண்டு தினம் காலை,மாலை ஒருத்தேக்கரண்டி
வாயில் போட்டு கால்டம்ளர் சுடுநீர் அருந்தவும். பிறகு ஒருமணி நேரம் கழிந்து நஞ்சில்லா நல்ல உணவாக உண்டுவந்தால் எத்தகைய தைராய்டு குறைபாடும் மண்டலத்தில் ஓடிவிடும்.! இன்னொன்று தைராய்டு,  பாங்கிரியாஸ்,பிட்யூட்டரி, அட்ரீனல் போன்ற நாளமில்லா சுரப்பிகளில் ஏற்படும் எந்த வியாதிக்கும் மருந்து மட்டும் முழுத்தீர்வாகாது.! சர்வாங்காசனம், மட்ச்யாசனம்,வக்ராசனம், சாந்தியாசனம் போன்ற யோகாசனங்களில் பாதி குணமுள்ளது. தகுந்த
ஆசிரியரிடம் கற்றுக்கொள்ளவும்.!
நாள்ப்பட்ட மூட்டுவலி, கணுக்கால் வலிக்கு உழுந்தம் மாவு கால்பங்கு கடுகு பொடி கால்பங்கு சேர்த்து நாட்டுக்கோழி முட்டையின் வெள்ளைக்கரு அரைப்பங்கு கலந்து குழைத்து கல்லுப்பு நீர் சிறிது கலந்து பிசைந்து வலியுள்ள இடத்தில் பூசி அரைமணி முதல் ஒரு மணிநேரம் வரை இளம்வெயிலில் அமர்ந்து வந்தால் பனிரெண்டு நாளில் மூட்டுவலி, கணுக்கால்வலி,தோள்பட்டை வலி,கழுத்துவலி, இடுப்புவலி போயே போய்விடும்.
அதோடு தினமும் ஒருவேளை சமைக்காத உணவும், சத்துமாவு கஞ்சி்யும் அருந்தி வந்தால் எத்தகைய நாள்ப்பட்ட வலியும் குணமாகும்.! நினைவிருக்கட்டும்
காப்பி,தேநீர்,பிஸ்கெட்,ஹார்லிக்ஸ்,கா்ன்ப்ளவர்,பிரட்,பெப்சி, பிராய்லர் கோழி, நண்டு,இறால், பெரிய கம்பெனிகளின் சத்துமாவு போன்றவை  உணவிற்க குப்பை.!
கைகுத்தல் அரிசிக்கஞ்சி, கேழ்வரகு தோசை,சாத்துக்குடி, நாட்டுவாழைப்பழம், இந்துப்பு, பனங்கற்கண்டு, கருப்பட்டி, ரீபைண்ட் செய்யாத கடலெண்ணைய், தேங்காய் எண்ணை, நல்லெண்ணைய்
பசுநெய் இதுவே அமிர்தமாகும் உணவு.!

amyogatrust.blogspot.in
🌿100% இயற்கையான மூலிகை தயாரிப்புகளுக்கு
Aum Herbals
Mobile:9629368389

No comments:

Post a Comment