Tuesday, September 20, 2016

மனமெல்லாம் பணத்தின் மணம்

உடுக்க ஒரு வேட்டி
குடிக்கக் கூழு
படுக்க பத்தடி
படிக்க நல்லறம்
பிணிதடுக்க வேப்பமரம்
உயிர் துடிக்க பிராணக்காற்று
உடல் வளர்க்க ஒரு பணி
வாழ்வினிக்க ஒரு கன்னி  இவை
போதும் நம்  உயிர்கடக்க …

காலில்  ஒரு தோல்சுத்தி
கழுத்தில்
 ஒரு நாய்  வளையம்
வெப்பம் கொல்லும்
வேளையிலும்
பகட்டாய் ஒரு மேலங்கி
இதுதான்  
பண உலகின் ஆடை …

மேல் நாட்டுப்பயி்ர் வாங்கி பகலெல்லாம்
விசம் தெளித்து
பகட்டாய் வளர்த்தெடுத்து
பதமாய் பறிமாறும்
நஞ்சே பண உலகின் உணவு …

மூன்று பக்கமும் சுவர் மூடி மூவர்ண  இரசாயணமடித்து
 நடுவினில் ஒரு துளையிட்டு உயிர் எரிய  குளிரூட்டி
இரவெல்லம்
தன் நஞ்சையே சுவாசித்து
பிணம் போல பளப்பளப்பாய்
படுக்கையில் புரளுவதே
பண உலகின் உறக்கம் …

தட்சனை பலலட்சம்
கட்டணம் சிலலட்சம்
வாழ்வின் பாதிகாலம்
வெட்டியான ஏட்டுக்கல்வி
நல்லறங்கள் பேணாமல்
நம்முடலை பங்கு வைத்து
பணம் பண்ணும் பராந்து கூட்டத்தை
உருவாக்குவதே பண உலகின்
கல்விமுறை …

இரசாயண கழிவுகளையும்
தன் வீட்டுக் குப்பைகளையும்
ஊர்நதியில் கொட்டிவிட்டு
சுகம்  காணும் மனிதர்களும்,
தன் வளத்தை கூறுப்போட்டு
உலக வாய்க்கு தாரைவார்த்து
கமிசன் வாங்கும் இடைத்தரகு
அரசியல்வாதிகளும்,
என் தலைவன் மலம் மணக்கும்
என்றலையும் தொண்டர்களும் ,
காதலிற்கும் காமத்திற்கும்
வரிதெரியா பிண்டங்களும்
பண உலகின் மாண்புமிகு மாந்தர்கள் …

அத்தனைக்கும் ஆசைப்படுபவனே
பண உலகின் துறவி
அவன்கூட வான்புரவியில் வந்தால் தான்  ஞானியென்று  நீ கவனி …

உண்மை இவ்வாறு இருக்க
நான் மட்டும் எவ்வாறு வெறும்
கையில் முத்திரைப்பிடிக்க …

எனக்கும் இரண்டு பிள்ளைகள் இருக்கிறார்கள் அல்லவா,
அவர்களும்  பண உலகில் கல்லூரிக்கு செல்கிறார்கள்  அல்லவா?
புரிந்துகொள்ளுங்கள் பணவான்களே.!

-ஏகப்பிரியன்
amyogatrust.blogspot.in

No comments:

Post a Comment