காலையில் வெளியே கிளம்ப வண்டியை கிளப்பினால் சர்ரென வண்டியில் உள்ள பெட்ரோல் வெளியேறுகிறது …
பெட்ரோல் செல்லும் குழாயில் ஒரு பெரிய ஓட்டை …
சரியென்று ஒரு பசை ஒட்டியை எடுத்து ஒட்டிவிட்டு மீண்டும் வண்டியை எடுத்துக் கொஞ்சம் தூரம் போனதும் ,ஒரு யோகா மாணவர் தொடர்புகொண்டு , இன்று நடக்கும் போட்டியில் என்னால் கலந்துகொள்ள முடியாது, அம்மாவிற்கு உடம்பு சரியில்லை என்கிறார் …
அடுத்து போட்டிக்காக காரில் சென்றுகொண்டிருக்கும் போது ஒருவர் இருசக்கர வாகனத்தை குறுக்கே திருப்ப முனைந்து விபத்து ஏற்படும் சூழல் உருவாகிறது …
அதிலிருந்து மீண்டு, நேரே போட்டி நடக்கும் இடத்திற்கு சென்று போட்டியில் கலந்து கொள்வதற்கான படிவத்தை கேட்டால் ஒரு மணிநேரம் காக்க வைக்கிறார்கள் …
அதையும் கடந்து போட்டியில் கலந்துகொண்ட நமது மாணவர்களைப் பார்த்து பல யோகாசன ஆசிரியர்களே வியந்து பாராட்டுகிறார்கள் …
இந்த வகையில் முடிந்திருந்தால் நன்றாக இருந்திருக்கும்,
போட்டியில் வெற்றிபெற்ற மாணவர்களுக்கு பரிசுகளை அறிவிக்கிறார்கள், அதில் நமது மாணவர்களின் பெயர்கள் மட்டும் விடுபட்டுள்ளது, கேட்டால் சர்டிபிகெட் பற்றாக்குறை, மதிப்பெண் பட்டியலை வேறு காணவில்லை என்கிறார்கள்,
ஒரு மாணவியின் தந்தை, நிகழ்வு ஏற்பாட்டாளரிடம் இப்படித்தான் ,கேவலமாக போட்டியை நடத்துவதா? எனது மகளிற்கு காய்ச்சல் வேறு அடிக்கிறது என்கிறார், ஏற்பாட்டாளர்களோ, சில நேரத்தில் இப்படி ஆகிவிடுவது இயல்புதான், பெற்றோர்களை நாங்கள் அழைக்கவில்லை, பயிற்சியாளரிடம் பேசிக்கொள்ளுங்கள் என்கிறார்கள்,
ஒரு வழியாக இறுதியில் வெற்றிபெற்ற மாணவர்கள் அனைவருக்கும் ஷீல்டுகளை வழங்கி நிறைவு செய்துவிட்டனர்,
வீட்டில் வந்துப்பார்த்தால் என் கைப்பேசியை காணவில்லை, யாராவது ஒற்றர்கள் எடுத்துவிட்டார்களோ, பைக்கில் வரும் வழியில் எங்கேயாவது விழுந்துவிட்டதா? ஒரே குழப்பம், மீண்டும் 13 கிலோமிட்டர் பயணம் செய்து பயிற்சிமையம் வந்துப்பார்த்தால் கைப்பேசி நமக்காக அமைதியாக காத்திருக்கிறது, பிறகு இரவு பயிற்சி மையத்திலேயே தூங்கி எழுந்தாகி விட்டது, எப்படியோ நேற்றைய நாள் - நல்லநாள் என்று நினைக்கும் போது, உள்ளிருந்து ஒருகுரல் நெகட்டிவ் எனர்ஜினா இதானா சந்தோஷ்?
என்று கேட்கிறது, இப்படித்தான் சிலநேரம் எதிர்மறை ஆற்றல் நம்மிடம் தன் இருக்கையை காட்டிக்கொள்ள முனைந்து வரும் வெறுமனே வேடிக்கைப்பார்த்தபடி
கடந்துவிட்டாலோ அல்லது அடுத்தடுத்த வினைபுரியாமல் அமைதியாக இருந்தாலோ வெறுத்து ஓடிவிடும்.! அல்லது நம் இரத்த அழுத்தத்தை அதிகப்படுத்தி
சுகம் காணும் இந்த வேடிக்கைவிதி.!
முடிவு நம்கையில்.!
நல்லதையே நினைப்போம்
நலம் பெருகட்டும் …
-ஏகப்பிரியன்
amyogatrust.blogspot.in

No comments:
Post a Comment