Wednesday, September 14, 2016

தகவல்கள்

எண்ணற்ற நன்மை இருக்குது இங்கே🍅

🌅செடிகள், மூலிகை மருந்துகள், இயற்கை உணவுப்பொருட்கள் போன்றவற்றை பற்றிய  வியாபார பதிவுகளை போடும்போது அது எங்கு கிடைக்கும்.! இதனால் என்னென்ன நன்மைகள் கிடைக்கும் என்பதையும் தெளிவாக சேர்த்து முகவரியோடு பதிவது நல்லது.! இதுபோன்ற  பதிவுகளை பார்க்கும் நண்பர்கள்  தங்கள் தேவைக்கு உண்மை தன்மையை ஆராய்ந்து பொருட்களை வாங்கி பயன்படுத்தலாம்.🍇 அல்லது பிற குரூப்களில் அரிய தகவல்களை பகிரலாம்.!  அது ஒரு மிகப்பெரிய சேவையாக இருக்கும். ஏனெனில் பெரிய பெரிய கம்பெனிகளில் , மால்களில் இயற்கையானப் பொருட்களை வாங்குவதை விட   இதுபோன்ற தளங்களில் வரும் செய்திகளை வைத்து நாமே நேரடியாக பொருட்களை வாங்கும் போது விலையும் குறைவாக இருக்கும். தரமானப் பொருளையும் பெற முடியும்.!  வங்கிக் கணக்கில் பணம் செலுத்த ஆன்லைன் வசதி இல்லாதவர்கள் செல்பேசியில் இருந்து பணம் செலுத்தலாம் அல்லது பஸ், இரயில் டிக்கெட் புக் செய்து கொடுக்கும் கணினி மையங்களில் சொன்னால் அவர்கள் கூட எளிதாக பணம் செலுத்தி விடுவார்கள்.! ஏன் கூறுகிறேன் என்றால் நமது குழுவில் இயற்கை விவசாயம் செய்பவர்கள், பாரம்பரிய முறையில் எண்ணைய் தயாரிப்பவர்கள், இயற்கை மூலிகை தயாரிப்பாளர்கள் , மாடிதோட்டம் அமைப்பவர்கள், நாட்டு வகை பிராணி வளர்ப்பாளர்கள், யோகா, சித்தா, வர்ம வைத்தியர்கள் பல் மருத்துவர் போன்ற பலரும் இருக்கிறார்கள்.!  இவர்களின் சேவையை நமது தேவைக்கு பயன்படுத்துவது எளிய வழியில் நமது ஆரோக்கியத்தை மேம்படுத்த உதவும். நான் பாரம்பரிய முறையில் எண்ணைய் தயாரிக்கும் ஒரு கல்செக்கை தேடி பல மாதம் அலைந்து  சில இடங்களில் கிடைத்தும் திருப்தி இல்லாமல் இருந்தேன். போன மாதம் ஒரு குழுவில் வந்த பதிவைப்பார்த்து திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள ஒரு செக்கில் இயற்கையான எள், இயற்கையான நிலக்கடலை, நாட்டு தேங்காயில் 100% இயற்கை முறையில் கல் செக்கில் ஆட்டிய எண்ணைய் கிடைப்பதாய் கேள்விப்பட்டு அதை வரவழைத்து  ஒரு பக்கவாத நோயாளிக்கு எண்ணை தயாரித்து கொடுத்தேன் படுத்தப்படுக்கையாக இருந்த அந்த நபர் இப்பொழுது தனியாக நடைப்பயிற்சி செய்யும் அளவிற்கு முன்னேறி விட்டார். பயிற்சி கால், இயற்கை மூலிகை உணவு முக்கால். ஒன்றின்றி ஒன்று முழுமை பெறாது.!  அதுபோலவே இன்னொரு வாட்ஸ் அப் நண்பர் சில நாட்டு இரக தக்காளி, மிளகாய்,கத்தரிக்காய், வெண்டைக்காய் விதைகளை அனுப்பி தந்திருந்தார். இன்று  என் வீட்டில் பாதி  உணவுத் தேவையை அதுவே பூர்த்தி செய்துவருகிறது.!
டெங்கு பீதியில் தவித்துவந்த இரண்டு மழலை செல்வங்கள் நமது ஆலோசனையின் பேரில் வெறும், வெத்தலை, துளசி,மிளகு  மற்றும் சாத்துக்குடியை பயன்படுத்தியோ குணமடைந்து உள்ளனர்.! இப்படி எண்ணற்ற நன்மைகள் தொடர்ந்து வாட்ஸ்அப் தகவல்களால் நாம் பெற்று வருகிறோம்.!
ஆனால், நேற்று ஒரு நண்பர் உங்கள் தளத்தில் நிறைய வியாபர தகவல்கள் வருகிறதே என்று ஒருவர் இழுத்தார். மற்றொரு நண்பர் தேவையில்லாத தகவல்கள் வருகிறது தளத்தை விட்டு வெளியேறலாமா என்று யோசிக்கிறேன் என்றார்.  சரிதான், எதையும் ஆக்கப்பூர்வமாக பயன்படுத்தத் தெரியவில்லை எனில்  அமைதியாக வெளியேறி ஆனந்தமாக  இருக்கலாம் தப்பில்லையே …!
நமது தளத்தில் இயற்கை, யோகா, மூலிகை, இந்திய முன்னோர் ஞானம், எளிய மூலிகை மருத்துவம் போன்ற தலைப்புகளில் வரும்  பதிவுகளையோ அதுபோன்ற வியாபார பதிவுகளையோ  தவிர்ப்பதில் நமக்கு உடன்பாடு இல்லை.! நானெல்லாம் தமிழில் ஒரு நல்ல மருத்துவ தகவலை,  முகநூலிலோ, வாட்ஸ்அப்பிலோ  பகிரமாட்டார்களா என்று; பலநாட்கள்  காத்திருந்து பெற்றுள்ளேன். ஆனால், இன்று அனைத்தும் தேவைக்கு அதிகமாகவே நம்மைத் தேடி வந்துவிடுகிறது. அதனால் கூட சிலருக்கு சலிப்பு ஏற்படலாம்.! வாடிக்கையாகவே வேடிக்கைப் பார்த்த்துக் கொண்டே இருந்தால் அப்படித்தான் இருக்கும்.😞
பதிவுகளில் வரும் ஒரு சில நல்ல விசயங்களையாவது கடைப்பிடிக்க ஆரம்பித்தால் மட்டுமே தளத்தின்
அர்த்தம் புரியும்💐

amyogatrust.blogspot.in
Aum Herbals இயற்கை இரகசியம் WA 9629368389

No comments:

Post a Comment