Friday, March 25, 2016

யோகாவின் ஆன்மீக வேர்

யோகாவின் ஆன்மீக வேர் :

யோகா, தெய்வீகமான வேத நூல்களையே
தன்னுடைய உறுதியான நங்கூரமாகக்
கொண்டிருக்கிறது.

நித்ய யோக ... பதஞ்ஜலி
யோக சூத்திரங்களையும், யோகத்தின்
அடிப்படை நூல்களாகக் கருதப்படும் ஹட
பிரதீபிகா, கேரண்டஸம்ஹிதை மற்றும் சிவ
ஸம்ஹிதைகளிலிருந்து எடுக்கப்பட்ட யோகப்
பயிற்சிகளின் சாரமாகும்.

பதஞ்ஜலி யோக சூத்திரங்கள்:

பதஞ்சலி யோக சூத்திரங்களின் காலம் கி.மு.
இரண்டாம் நூற்றாண்டைச் சேர்ந்ததாகக்
கூறப்பட்டாலும், இந்நூல் அதற்கும்
பல்லாயிரக்கணக்கான ஆண்டுகளுக்கு
முந்தைய சாஸ்திர நூல் என்பதை நாம்
நினைவில் கொள்ளவேண்டும்.

பதஞ்ஜலி முனிவரால் எழுதப்பெற்ற இந்நூல்தான் யோக சாஸ்திரங்களுக்கே அடிப்படை ஆதார நூலகத்
திகழ்கிறது.

இதில் சொல்லப்பட்டிருக்கும் நுட்பங்கள் மறைபொருளாகவும், ஒரு சிலருக்கே புரியும் வகையில் இருந்தாலும், பயிற்சி செய்யக்கூடிய வகையில் அதாவது நம் அன்றாட வாழ்வில் எளிதாகக்
கடைப்பிடிக்கும் வகையில் இருக்கின்றன.

அது அறிமுகப்படுத்தும் அஷ்டாங்க யோக
முறைகளை, நம் வாழ்க்கை முறையாக
மாற்றும்படி அது வலியுறுத்துகிறது.

ஹடயோகப்ரதீபிகா :

ஹடப்ரதீபிகா, கோரக்நாதரின் சீடரான ஸ்வாமி
ஸ்வாத்மாராமாவினால் எழுதப்பட்டது.

இந்நூல் 15 ஆம் நூற்றாண்டைச் சேர்ந்தது.

ஆதிநாதரான சிவபெருமான், தம்முடைய
துணைவியான தேவி பார்வதிக்கு ஹட யோகப்
பயிற்சிகளின் இரகசியங்களைப் போதித்தார்.

யோகிகளின் பரம்பரை வழியாகப் பயணித்து
வந்த இந்த யோக நுட்பங்களையே இந்நூல்
அடிப்படையாகக் கொண்டிருப்பதால்,
இந்நூலை ஆதிநாதரான சிவபெருமானுக்கே
அர்ப்பணித்துள்ளார், இந்நூலாசிரியர்.

ஹடப்ரதீபிகா ஆனஸங்கள், பிராணாயாமங்கள்,
பந்தனங்கள், முத்ராக்கள் போன்ற நான்கு
முக்கியமான உபதேஸங்களைத் தன்னகத்தே
கொண்டுள்ளது.

இது சக்கரங்கள், நாடிகள், குண்டலினி சக்தி போன்றவற்றைப் பற்றியும் விரிவாக விளக்குகிறது.

20 நூற்றாண்டுகளுக்கு முன்பு இந்த யோக நூல்கள்
எழுதப்பட்டபோது, மனித இயல்புகள்
எவ்வாறு இருந்தனவோ, அவை அப்படியே
இப்போதும் இருக்கின்றன.

இன்னும் சொல்லப்போனால், நவீன யுக
மனிதர்கள் வேறு பல முக்கியமான
பிரச்சினைகளையும் தங்கள் வாழ்வில்
எதிர்கொள்ள வேண்டியிருக்கிறது.

அவை நம்முடைய செல்களின் செயல்முறைகளிலும்,
மூளையின் செயல்முறைகளிலும்கூட பெரும்
தாக்கத்தை ஏற்படுத்தக்கூடிய அளவிற்கு உள்ளது.

வேலை செய்யும் இடத்தில் ஏற்படும்
மன அழுத்தம், ஒரு அவசர வாழ்க்கை முறை,
சமுதாய ரீதியான உண்மைகளை மாற்ற
நினைத்தல் போன்ற சங்கடங்களையும்
சமாளிக்கவேண்டியுள்ளது.

நித்ய கிரியாவிலிருக்கும் நுட்பங்கள், இன்றைய நவீன யுக மனிதனின் உடலில் பரிசோதிக்கப்பட்டு,
அவை எந்தளவிற்குப் பயனளிக்கின்றன
என்பதை நவீன ஆராய்ச்சிகள் மூலம்
உறுதியாக நிரூபிக்கப்பட்ட பிறகே
பொதுமக்களின் பயன்பாட்டுக்கு
அளிக்கப்பட்டுள்ளன.

யோகாவில் நோய்கள் எப்படி குணமாகிறது.?

உடலில் நோய்தோன்ற உடலில் இருக்கும்
ஐந்து வித கோசங்களில் ஏற்படும் சீரின்மையே
காரணம் என்கிறது, யோக தத்துவம்.! .

அக்குப்பஞ்சர் காரர்கள் கூறும் பஞ்ச பூதங்கள்
வேறு பஞ்ச கோசங்கள் வேறு.!

முதலில் கோசங்கள் என்றால் என்ன வென்று
கூறுகிறோம்.

கோசம் என்பது சமஸ்கிருத சொல்லாகும்.

கோசம் என்றால் உறை/ கூடு, புதையல்
என்று பொருள். .

அதாவது மனிதனின் உடல்தான் அவனின்
கூடு, புதையல் எல்லாமே.

அதை கடந்துதான் மனிதன் நிறை நிலையை அடைய
முடியும்.!

இந்த உடலில் உள்ள சதை, எலும்பு,
உறுப்புகள், இரத்தம், சீழ் இதெல்லாம்
அன்னமயகோசம் அதவாது உணவால்
பலப்படும் பகுதி.!

அடுத்து நரம்பு தொகுதிகளில் நடக்கும் உயிர்
இயக்கமே பிராணமய கோசம்.

அதாவது அன்னத்தால் உடல் உருவாகவும் தொடர்ந்து
அதில் உயிரை நிலைப்படுத்தவும் செய்யும்
மின்சார சக்தியே பிராணமயகோசம்.!

அடுத்து மனோன்மயம் என்பது எண்ணத்
தொகுதியை குறிப்பது உணவு கூடும்,
மின்சார கூடும் எண்ண அலைகளின் தன்மைக்
கேற்பவே நல்ல விளைவையோ தவறான
விளைவையோ உருவாக்கும்.!

அடுத்து விஞ்ஞானமய கோசம் என்பது
பகுத்தறிந்து செயல்களை செய்வது. அதாவது
நன்றாக வேலை செய்தால் சீக்கிரம்
முன்னேறலாம், பொறுமையாக யோசித்தால்
எதையும் கண்டுப்பிடிக்கலாம், மேலிருந்து
குதித்தால் கால் உடையலாம் என்று முடிந்த
முடிவுகளைக் கொண்டு ஆராய்ச்சி பூர்வமாக
அணுகும் அறிவு.!

நிறைவாக ஆனந்தமயகோசம் என்பது
ஆன்மாவை உணர்வது அல்லது உண்மையை
உணர்வது. அதாவது தனது உடலாலும்,
பிராணனாலும், மனோன்மயத்தாலும்,
முடிந்த முடிவுகளாலும் பெற்ற ஆற்றலை
இறைநிலையான ஆன்மாவோடு அல்லது
இயற்கை ஆற்றலோடு இணைப்பதே
ஆனந்தமயம்.!

சரி இதற்கும் நோய்க்கும் என்ன தொடர்பு
என்று வினவினால்

1. உணவுக் குற்றத்தால் வருவது சதை,
உறுப்பு, இரத்த வியாதிகள்.!

2. பிராணக்காற்று மற்றும் உயிர் ஒளியின்
குற்றத்தால் வருவது நரம்பு வியாதி,
வாயுக்கோளாறு, கை,கால் மரத்துப்போதல்,
பக்கவாதம் போன்ற நோய்கள்.!

3. மனநிலை சீரின்மை, கடந்த கால கெட்டப்
பழக்கங்கள் விபரீத அனுபவங்கள்,
போன்றவற்றல் வருவது மனநோய்கள்.!,

4. விஞ்ஞான முடிவுகளுக்கு எதிராக
செயல்படுவதால் வருவது விபத்து,
பாக்டீரியாத் தொற்று அஜீரணக் கோளாறு,
தோல்நோய்கள் போன்றவை.!

5. ஆனந்த மயத்தால் வரும் வியாதி மூளைக்
குழப்பம், பைத்தியம், ஆழ்மன சிந்தனை
போன்ற வியாதிகள் உருவாகும்.!

யோக சாஸ்திரத்தின் படி இந்த ஐந்து
கோசங்களில் வரும் வியாதிகளை அந்தந்த
பகுதிகளை உணவு முறையாலும்,ஆசனத்தாலும், மூச்சுப்பயிற்சியாலும், பிராணனை உள்செலுத்துவதாலும்,
பிராத்தனை, மந்திர உச்சாடனம் செய்வது,
தியானம் செய்வது, இயற்கையோடு இயைந்து
வாழ்தலின் மூலம் எளிதாக பஞ்ச கோசங்களின்
ஆற்றலை சீராக்கி நலமோடும் வளமோடும்
ஆரோக்கியமாகவும் நிறைநிலை பெற்றும் வாழலாம்.!

நலம் பெருகட்டும் …

amyogatrust
mobile:9629368389

No comments:

Post a Comment