[20:41, 21/03/2016] Am Yoga: கோவையில் வழக்கமாக நான் பழங்கள் வாங்கும் அந்த தள்ளுவண்டி கடையில் அன்று கொய்யா பழங்கள் இல்லை.விற்றுவிட்டது.
வேறு எங்கு கிடைக்கும் என அவரிடமே கேட்கையில்,அவர் பக்கத்திலிருந்த சூப்பர் மார்க்கெட்டைக் காட்டினார்.அது ரிலையன்ஸால் நடத்தப்படும் ரிலையன்ஸ் ஃப்ரெஷ் சூப்பர் மார்க்கெட்.
கொய்யா-ஆப்பிள்-பப்பாளி என கலவையாக அமைந்த பழத்தேர்வுகளுக்கு-78.50 என பில் வந்தது.நூறு ரூபாயை எடுத்து நீட்டினேன்.
கவர் வேணுங்களா சார்? என்று பில்
கவுண்ட்டரில் நின்றவர் கேட்டார்.
அவரது அந்தக் கேள்விக்கு நான் தரப்போகும் பதிலை வைத்துதான் பாக்கி சில்லறையை அவர் தரப்போகிறார் என்பதை அவரது பாடி
லாங்குவேஜ் முன்னமே சொல்லிவிட,
"ஏங்க கேக்குறீங்க? பொருள் வாங்குனா அத
கொண்டு போறதுக்கு கவர் தருவீங்க தானே?"
என்ற நான் பதிலுக்கு கேள்வியாக கேட்க,
"இல்ல,கவருக்கு ஒர்ரூவா" என்ற பதிலோடு
ஒரு சாக்லேட்டையும் நீட்டினார்.மீதி ஐம்பது
பைசாவிற்கு சாக்லேட்.அவர் தந்த அந்த கவரில்
ரிலையன்ஸ் ஃபிரஷ் விளம்பரம்.
அதைப் பார்த்ததும்,"லட்சக்கணுக்குல யாவாரம்
பண்றீங்க,50% மார்ஜின்ல விக்குறீங்க.கொள்ளை லாபம்.
ஒரு கவர் தர மாட்டீங்களோ? இதுல உங்க கடை விளம்பரத்தை,என் காசுல வேற செய்யனுமா?முடியாது.எனக்கு கவரும்
வேணும்.சில்லறையும் வேணும்.
அந்த கவர் கவர்மென்ட் சொன்ன மைக்ரான் லெவல்ல இருக்கனும்"என்று நான் வாதாடியது-பயோ டீகிரேடபிள் கவரோடு சில்லறையை
வாங்கியது தனிக்கதை.
இத்தனை களேபரத்தையும் வேடிக்கை மட்டுமே
பார்த்ததோடு-தன் பணத்தைத் தந்து-அந்த
கவரையும் பல விந்தை மனிதர்கள்
மறுபேச்சின்றி வாங்கிச் சென்றதும்
தனிக்கதை.
இது போன வருடம் நடந்த சம்பவம்.
நிற்க...
இந்த பொங்கலுக்கு முதல்நாள் வியாழன்
மாலை,பனங்கிழங்கு வாங்கச்
சென்றேன். சங்கரன்கோவில் சுற்றுவட்டார
கிராமங்களில் இருந்து விவசாயிகளே
மஞ்சள்கிழங்கு-கரும்பு-பனங்கிழங்கு-
போன்றவற்றை சாலையோரத்தில் போட்டு
விற்றுக் கொண்டிருந்தனர்.
அதில் கூட்டம் குறைவாக இருந்த ஒரு "கடைக்குச்" சென்றேன்.அந்தக் கடையில் தலையில் "வண்டு" கட்டிக் கொண்டு பெண்களே பிஸியாக வியாபாரம் செய்து கொண்டிருந்தனர்.
ஒரே குடும்பமாக இருப்பார்கள் போல.அவர்கள்
அருகில் சென்று வண்டியை நிறுத்தியதும்,
"வாங்க சார்,பனெங்கெழங்க பாக்கீயளா"என்றவாரே வரவேற்றார்.
"ஆமாங்க.."
"எதன்னாலும் எடுத்துகிடுங்க"
"எனக்கு இத பாத்து வாங்க தெரியாது.நீங்களே நல்லதா தாங்க"
"பூராமே நயொம் கெழங்குதாம்"என்றவாரே-
அந்த கூட்டத்திலேயே வயதான பாட்டி ஒரு
கட்டு கிழங்கை நீட்டினார்.
"இதுல எத்தனங்க இருக்கு ?" எண்ண
சோம்பேறித்தனம் பட்டு அவர்களிடமே கேட்டேன்.
"இருவத்தஞ்சு.." என்று சொல்லிவிட்டு,இங்கொடுங்க என்று அந்த கிழங்குக் கட்டை வாங்கி ஒரு "தினமலரில்" சுற்றிக் கொடுத்தார்.
கிராமத்தில் இருந்தாலும் தினமலரின்
உபயோகத்தை துல்லியமாக கணித்து
வைத்திருந்தார்கள்.
"அதனென்னதுக்கு...சூடு...காயிதம் தாம்
நல்லது...கெடாது..வாங்யிட்டுபேயி அயத்தமேனிக்க ஒம்பாட்டுக்கு பிரிச்சுல
வச்சுராதீய,வெளியவே வைங்க...ஒண்ணுஞ்
செய்யாது..அவிச்சு சாப்புடுங்க"..
"பிளாஸ்டிக் கேரி பேக் இல்லயா?" என்ற என்
ஒற்றைக் கேள்வியில் பனங்கிழங்கைப் பற்றிய
என் புரிதலைத் தெரிந்து கொண்டு,மேற்படி
டைரக்ஷன்ஸ் டூ யூஸை விவரமாகச்
சொன்னார்கள்.வாங்கிக் கொண்டேன்.
"வேறெதாச்சும்?"
"வேணாங்க..இது மட்டுந்தான்..எவ்ளோங்க?"
"அம்பது ரூவா"
இம்மாதிரியான கடைகளில் பேரம் பேசவே
கூடாது என்பது என் அப்பாவின் அறிவுரை
என்பதால்,அவர்கள் சொன்ன விலையில்
வாங்கிக் கொண்டேன்.கிளம்புகையில்,
"எய்யா" என்ற குரல் என் வண்டியின் பிரேக்கை
போட வைத்தது.
"என்னங்க?"
"இந்தாங்க...வண்டில கெட்டிகிடுங்க"
என்றவாரே ஒன்றிரெண்டு மஞ்சள்கிழங்கு,மாவிலை,வேப்பிலை,
கணுப்பிலை,கொண்ட போட்டோவில்
இருக்கும் இந்த "பொக்கே" வைத் தந்தார்கள்.
ஐந்து ரூபாய் இருக்கலாம் என்ற எண்ணத்தில்,பத்து ரூபாயை நீட்டினேன்.
"என்னத்துக்கு? வேணாம்.வண்டில கெட்டுங்க"
என்று குடும்பத்தோடு மறுத்து விட்டார்கள்.
வியாபாரத்தின் அடிநாதம்--வாங்குபவர்களைப்
பற்றிய அக்கறையில் தான் இருக்கிறது.
ஒரு விவசாயி-தன் பொருளை விற்கும்
வியாபாரியாகவும் இருக்கும் போது அந்த
அக்கறை இருக்கும்.
நாம் விற்கும் இந்தப் பொருள் எப்படி வந்தது
என்று துளி கூட தெரியாத கார்ப்பரேட்
காட்டுமிராண்டிகளிடம் அந்த அக்கறை
இருக்காது.
துரதிஷ்டவசமாக இந்த திருநாட்டில்
காட்டுமிராண்டிகளிடம் பணமும்,விவசாயிக
ளிடம் மனமும் இருக்கிறது....
நண்பர்களே இனியாவது விவசாயிகளிடம் நேரடியாக பெரும் எந்த விளை பொருளுக்கும் பேரம் பேசாதீர்கள்,... அவர்கள் உழைப்பை உதாசீனப்படுத்தி உங்கள் மேதாவித்தனத்தை நிருபிக்க வேண்டிய அவசியம் இல்லை...
இன்னொரு விற்பனை குழுவில் நண்பர் ஒருவர் பதிவிட்டது.
[15:57, 22/03/2016] Balaraman R😔: Distant end office, does not have the right to change/correct the address. If the address is incorrect or insufficient as mentioned in the cover , they have to return it to the sender. (May be sensitive documents or things in the cover)hc

No comments:
Post a Comment