Saturday, March 26, 2016

வாய்ப்புண்

பொரிகாரத்தை வாங்கி அடுப்பில் வைத்துள்ள இரும்புச்சட்டியில் போட்டால் பொரிந்து வரும். அதில் 10 கிராமும் தேன் 50 மில்லியும் கலந்து குளப்பி வாய்ப்புண்களுக்கு போட்டு வர புண் குணமாகும்.!
தாய்ப்பால் கொடுக்கும் இடத்தில் புண் ஏற்ப்பட்டால் பொரித்த வெண்காரம் 20 கிராம் வெண்ணெய் நூறுமில்லி கலந்து வைத்துக்கொண்டு அடிக்கடி போட்டுவர புண்மாறும்.!
மூலக்காந்தல் மூலப்புண்களுக்கு 5 கிராம் வெண்காரத்தை 50 கிராம் பன்றிநெய்/பசுநெய்யுடன் அரைத்து பஞ்சில் வைத்து போட்டுவர புண், காந்தல், மூலமுளை மாறும்.!
வெங்காரம், காசிக்கட்டி, கந்தகம் 10 கிராம் விதம் சேகரித்து 100 கிராம் வெண்ணையுடன் அரைத்துப்போட்டு வர சொறி, சிரங்கு, புண்கள் குணமாகும்.!
பொரிகாரம் பொரித்து கொஞ்சம் தேனில் குழைத்து நாக்கில் தடவி வந்தால் குழந்தைகளுக்கு வரும் வாய்ப்பூப்பு மாறும்.!

No comments:

Post a Comment