Monday, March 28, 2016

மகளிர் பிரச்சினை

கருத்தடை காரணங்கள்

வங்கியில் பணிபுரியும் நமது மாணவி ஒருவர் திடீரென்று
கடந்தவாரம் கைப்பேசியில் அழைத்து ஈஸ்டர் விடுமுறையில்
இரண்டுநாள் காலை யோகா வகுப்புக்கு வருகிறேன் என்று கூறி இருந்தார்.! அதன்படி வெள்ளிக்கிழமை காலை வகுப்பிற்கு வந்திருந்தார். அவரை பார்த்தவுடன் சட்டென்று அடையாளம் காண முடியாத அளவிற்கு குண்டாக காணப்பட்டார்.
என்னாச்சு மேடம்? என்று கேட்டதற்கு "குழந்தை யின்மைக்காக மருத்துவம் செய்துகொண்டதில் வந்த பக்க விளைவால் இவ்வாறு ஆகிவிட்டது. சரி அதில் என்னப் பிரச்சனை என்று கேட்டதற்கு  எங்கள் இருவருக்கும் அனைத்து  பரிசோதனை முடிவுகளும் நார்மலாகவே இருக்கிறது. ஆனாலும் அலோபதியில்   சத்துமாத்திரை , ஊசி என்று பல்வேறு தனிசிகிட்சை செய்தேன் அதில்தான் இப்படி ஆகிவிட்டது.
"ஏனம்மா, நீங்களே முன்பு யோகா கற்றவர்தானே? திருமணத்திற்கு முன்பே யோகாவின் மூலம் பதினைந்து கிலோவரை எடையை குறைத்தவராயிற்றே நீங்கள், உங்களை தான் நானே பலருக்கு முன்மாதிரியாக கூறுவேன்,  உங்கள் வெற்றிகரமான பயிற்சியை தொடர்ந்து உங்கள் வங்கியில் பணிபுரியும் பலரும்
நமது பயிற்சி முறைகளை கற்று பயனடைந்தார்களே.!
என்று கேட்டதும் ஆமாம் சார், திருமணத்திற்கு முன்பு யோகா செய்தே 76 கிலோவில் இருந்து 60 கிலோவாக எடையை குறைத்தேன்.! ஆனால், திருமணம் நடந்தபிறகு என்னால் ஒருநாள் கூட யோகா செய்ய முடியவில்லை. வங்கிவேலை, வீட்டுவேலை என்று பிசியாக இருந்துவிட்டேன். அதோடு சிகிட்சையும் சேர்ந்துவிட்டதால்  இப்ப 93 கிலோ இருக்கிறேன் என்றார்.! இப்படித்தான் பலரும் கையில் வெண்ணையை வைத்துக்  கொண்டே நெய்க்கு அலைந்து
உருக்குலைந்து போகிறார்கள்.! அவருக்கு தற்போது வயதும் 38 ஆகிவிட்டது.! இயற்கை உணவு முறைகளையும் வாழ்வியல் முறைகளையும் ஒழுங்காக கடைப்பிடித்து தொடர்ந்து யோகாவையும் செய்து வந்திருந்தாலே  உங்கள் நிலை சரியாகி இருக்கும். அதைவிடுத்து தேவையில்லாமல்  இல்லாத பிரச்சனைக்கு ஆங்கில மருத்துவம் பார்த்து கிட்டத்தட்ட 25 கிலோ எடையை கூட்டி வந்துள்ளீர்களே அம்மா.! என்று கடிந்து விட்டு இரண்டு நாட்கள் சில எளிய பயிற்சிகளையும் வாழ்வியல் முறைகளையும் மீண்டும் கடைப்பிடிக்க கற்றுக் கொடுத்து அனுப்பி வைத்தேன்.! 20 வயதில் பெண்ணுக்கு திருமணமானால் அவள் தாயாகும் வாய்ப்பு 90 சதவீதம் அதுவே 30 என்றால் 60 %  என்றும் 35 என்றால்  40 சதவீதம் என்றும் குறைந்துகொண்டே வரும் 35 வயதுக்கு மேல் என்றால் தாயாகும் வாய்ப்பு மிகமிக குறைவு.! இன்றைய அவசர யுகத்தில் ஆண்களோடு போட்டிப்போட்டு பல்வேறு துறைகளில் பணியைப் பொறுவதற்கே பல பெண்களுக்கு 25 வயதாகிவிடுகிறது. பிறகு அதில் தங்கள் நிலையை வலுவாக்கி பொருளாதார நிலையை மேம்படுத்திக் கொண்டு தகுந்த வரனை தேடி திருமணம் செய்யவே 30 வயதை தாண்டி விடுகிறார்கள். இதில்  இரசாயண உணவு, பயிற்சி செய்ய நேரமின்மை, குடும்ப அலுவலகப் பிரச்சனை என்று 35 வயதை கடந்துவிட்டு பலரும் லட்சங்களை கொட்டியாவது குழந்தையை வாங்கிவிடலாம் என்று நினைக்கிறார்கள்.!
இப்படிப்பட்ட தம்பதிகளின் எண்ணிக்கை இன்று பெருகி வருகிறது, அதோடு பல இளம் வயது தம்பதிகளும் கர்பபை நீர்க்கட்டி, கர்பப்பை பலவீனம், விந்தணுக் குறைபாடு, அழுத்தம் நிறைந்த வாழ்க்கை முறை போன்றவற்றின்  காரணமாக தாய்தந்தை ஆகும் வாய்ப்பை பல தம்பதிகள் இழந்து வருகிறார்கள்.!
இதற்கு முற்றிலும் இயற்கை முறையில் எளியத் தீர்வுகள் நிறைந்திருந்தாலும் அது அவர்களின் கண்களுக்கு புலப்படுவதில்லை.! இப்பொழுதெல்லாம் கருத்தடை விளம்பரங்கள் கண்ணில் படுவதே இல்லை.! மாறாக இதுபோன்ற தம்பதிகள் பலரையும் பரவலாக காணமுடிகிறது.! மரபணுவையை சிதைத்து நஞ்சையே உணவாக உண்ண வைத்த நவீன விவசாயம் செய்தே மகத்தான பணிகளில் இதுவும் ஒன்று. அரசுக்கு இதனால் இரண்டு நன்மை  ஒரே கல்லில் இரண்டு மாங்காய் ஒன்று டம்மியான மனிதர்கள், இரண்டு ஜனத்தொகையும் குறையும்.! சரி இவ்வளவு வியாக்கியானமா பதிவிடுவதற்கு பதிலா  நீரோ ஒரு தீர்வையும் கூறி இருந்தால் நன்றாக இருந்திருக்கும் என்று சிலர் அங்கலாய்ப்பது புரிகிறது. முடிந்தவரை மரபணுமாற்றம் செய்யாத இயற்கையான உணவுகளை உண்ணுங்கள், வாழையிலை குளியல், எண்ணைய் குளியல்,  இடுப்புக்குளியல், இயற்கை பல்பொடி, குளியல்பொடி,  மண்பாண்ட சமையல் போன்றவற்றை  கடைப்பிடிப்பதோடு தினமும் அரைமணி நேரம் யோகாவும் செய்துவந்தால் நிச்சயம் தவம் செய்யாமலே அழகான மழலைகளைப் பெறலாம், முக்கியமானது என்னவெனில் நமது மாணவியைப் போலவே எல்லா வழிகளையும் முயன்று விட்டு பிறகு இயற்கைக்கு வராதீர்கள் முதலில் ஒரு வருடமாவது இயற்கையை முயன்று விட்டு மற்ற முறைகளுக்கு போங்கள்.  அல்லது 60 சதவீதமாவது இயற்கை முறைகளை கடைப்பிடித்துக் கொண்டே மற்ற முறைகளையும்  கடைப்பிடியுங்கள்.!
அதுவே சரியான வழி.!

மேலதிக ஆலோசனைகளுக்கு
இந்த எண்ணை தொடர்புகொள்ளலாம் :9629368389

amyogatrust.blogspot.in
FACEBOOK AMYOGA TRUST

நலம் பெருகட்டும்

No comments:

Post a Comment