Showing posts with label யோகாசனம் - Yoga. Show all posts
Showing posts with label யோகாசனம் - Yoga. Show all posts

Thursday, April 7, 2016

யோகா பயிலும் பொழுது.....

             யோகா பயிலும் பொழது
கடைப்பிடிக்க வேண்டிய வழிமுறைகள்!

*5 வயது முதல் ஆயுள்வரை ஆண்,பெண், மூன்றாம் பாலினத்தை சேர்ந்த மனிதர்கள் அனைவரும்  யோகா கற்கலாம்.!

*யோகா பயிலும் போது அனைவரும் உள்ளாடை அணிந்து கொள்வதோடு உடலை வதைக்காத எளிய ஆடைகளை அணிந்துகொள்ள வேண்டும்.!

*நோய்களை குணப்படுத்த யோகா பயில்பவர்கள் ஒரே விதமான நோய்க்கான தனி வகுப்பாக  பயில்வது சிறந்த பலனைத் தரும்.!

*சாப்பிடுவதற்கு 15 நிமிடங்களுக்கு முன்பும் சாப்பிட்ட பிறகு என்றால் மூன்று மணிநேரத்திற்கு பின் யோகா பயிலலாம்!

*இதயநோயாளிகள், மூன்று மாதத்திற்கு உட்பட்ட கர்ப்பிணி பெண்கள், படுத்த படுக்கையில் உள்ள நோயாளிகள், மாதவிடுமுறை உள்ள பெண்கள்
எளிய மூச்சுப்பயிற்சி தியானம், சாந்தியாசனம் செய்யலாம்.
கடினமானப் பயிற்சிகளை செய்யக்கூடாது.!

*பத்மாசனம், சிரசாசனம் போன்ற எல்லா ஆசனங்களையும்  5 வயதுமுதல் 40 வயதுவரை உள்ள
அனைவரும் புதிதாக கற்றுக்கொள்ளலாம்.!

*நாற்பது வயதிற்கு மேல் கடினமான யோகாசனமான சிரசாசனம், விருச்சிகாசனம் , யோகநித்திரை போன்ற ஆசனங்களை புதிதாக கற்றுக் கொள்ளக் கூடாது.!

*ஏற்கனவே தொடர்ந்து உயர்நிலை ஆசனங்களை பயில்பவர்கள்
ஆயுள்வரை சிரசாசனம்  பூரண சக்ராசனம் போன்ற  ஆசனங்களை செய்யலாம். ஆனால், அப்படி பயிலும்போது முதுகுவலி கழுத்துவலி போன்ற உபாதைகள் தோன்றினால்  படிப்படியாக  ஆசனங்களை எளிய ஆசனங்களாக மாற்றிக் கொள்ள வேண்டும்.!

* நாள்பட்ட நோய்களுக்கு எந்த வகையான மருத்துவம் செய்து கொண்டிருப்பவர்களும் கூடவே தினமும் ஒரு மணி நேரம் வரை எளிமையான யோகாப் பயிற்சிகளையும் தொடர்ந்து செய்யலாம்.!

*காய்ச்சல், தலைவலி, உடல்வலி போன்றவை இருக்கும் போது யோகா பயிலக் கூடாது.!

*எந்த மருந்துகளையும் சாப்பிட்டு விட்டு யோகா பயிலக்கூடாது. யோகா முடிந்து சிறிது நேரத்தில் மருந்துகளை சாப்பிடலாம். பிறகு ஒரு மணிநேரம் கழித்தே உணவருந்த வேண்டும். அல்லது யோகா முடித்து சாப்பிட்டு விட்டு பிறகு மாத்திரை மருந்துகளை  எடுத்துக் கொள்ளலாம்.!

*கபாலபதி, சவனக்கிரியா, வாமணதௌதி, நேதி, அக்னிசாரா போன்ற  உள் சுத்திகரிப்பு பயிற்சியான கிரியை பயிற்சிகளை மாதம் இரண்டு முதல் நான்கு முறைகள் மட்டும் செய்தால் போதுமானது. தினமும் பயிலக்கூடாது.!

* பொதுவாக கிரியை செய்யும் நாளில் முதலில் கிரியை பிறகு ஆசனம், பிறகு பிராணாயாமம், பிறகு தியானம் என்று செய்ய வேண்டும்.!

ஆனால்  இதை நமது அனுபவத்தின் அடிப்படையில் சற்று மாற்றிக் கொள்ளலாம்.!

*உடற்பயிற்சி யோகாவை சேர்த்து பயில்வதாய் இருந்தால் முதலில் உடல்பயிற்சி பிறகு யோகாசனம், பிராணாயாமம் செய்யலாம்.!

*உடற்பயிற்சி யோகாவை தனித்தனியாக செய்வதாய் இருந்தால்  காலையில் யோகாவையும் மாலையில் உடற்பயிற்சியும் செய்யலாம்.!

*யோகா பயில்பவர்கள் முடிந்தவரை டீ, காப்பி,  போதை வஸ்துக்கள் அசைவ உணவு, செயற்கை இரசாயண உணவுகளை  தவிர்த்துக் கொள்வதோடு நேர்மையான வாழ்க்கை முறையை அமைத்துக் கொள்ள வேண்டும்.!

*கிருத்தவர்கள், இஸ்லாமியர்கள் யோகா செய்யக் கூடாது என்பதும்
அதில் மந்திரம் உள்ளது, யோகா ஒரு வழிபாட்டு  முறை என்று சொல்வதும் முட்டாள்தனமானது. ஏனெனில், யோகாவை மந்திரம் இல்லாமலும் செய்யலாம், வழிபாடாகவும் செய்யலாம், உடல் மனப்பயிற்சி ஆகவும் செய்யலாம்!
இங்கு எந்தக் கட்டாயமும் இல்லை.
ஒருவேளை நாம் செல்லும் வகுப்பில் தினமும் மந்திரம், ஜெபம் செய்யும் வழக்கமிருந்தாலும் பிடிக்காதவர்கள் அவரவர் மத கோட்பாட்டின் படி பிராத்தனை செய்து பயிற்சியை ஆரம்பிக்கலாம்.!

ஆலய வழிபாடு செய்வது, இஸ்லாமிய  தொழுகை, சர்ச் பிராத்தனை என்று எதற்குமேயோகாப் பயிற்சி போட்டி இல்லை.!

யோகா என்பது ஆதியில்  இந்திய முனிவர்கள் கண்டறிந்த இயற்கை வாழ்வியல் மருத்துவ முறை. யோகாவில் உள்ள ஒரு ஆசனத்தையே பலருக்கும் தகுந்தாற் போல் பல வழிமுறையில் கற்பிக்க முடியும்.!

மேற்கண்ட வழிமுறைகளை அனைத் தையும் முடிந்தவரை கடைப்பிடித்து என்றும் ஆரோக்கிய மாகவும்  இளமை யாகவும் நிறைநிலை பெற்றும் வாழ் வோம்.!

amyogatrust.blogspot.com
mobile:9629368389

நலம் பெருகட்டும் …

Friday, March 25, 2016

கண்களுக்கான பயிற்சி

"கண்களுக்கு சில அத்தியாவசிய எளிய பயிற்சிகள்."

யோகா, நீச்சல், ஜாக்கிங் போன்ற பல
வகை உடற்பயிற்சிகள் எவ்வளவு உடலுக்கு முக்கியமோ அதே அளவு பயிற்சி நம்
கண்களுக்கும் அவசியமானது.

கண்களை ஆரோக்கியமாக வைத்துக்கொள்வது கண்களுக்கு ஏற்படும் களைப்புகளை குறைக்கும்.

கண்களில் எந்த பிரச்சனையும் வராமலிருப்பதற்கும்
வழிவகுக்கும்.

கண்களுக்கு நாம் தர வேண்டிய அத்தியாவசிய
பயிற்சி முறைகள்:

1. ஒரு நாற்காலியில் வசதியாக உட்கார்ந்து,
உள்ளங்கையை தேய்த்து வெப்பம் உண்டான
பின் கண்களை உள்ளங்கையால் மூடிகொள்ளவும்.

அவ்வாறு செய்யும் போது கருவிழிகளின் மேல்
அதிகம் அழுத்த வேண்டாம்.

மூக்கையும் மூடிக்கொள்ளும்படியாக முக்கோன வாக்கில் கைகள் அமைய வேண்டும்.

கண்களை மூடும் போது இருளை உணர்ந்து,
அந்த நேரம் பல மகிழ்ச்சியான சம்பவங்களை நினைத்து, மூச்சை உள்ளே இழுத்து, மெதுவாக விட
வேண்டும்.

இதை போல் 3 நிமிடங்களுக்கு ஒருமுறை செய்தல்
வேண்டும்.

2. கண்களை 3-5 விநாடிகள் இறுக்கமாக
மூடிகொண்டும், பின் 3-5 விநாடிகள் திறந்தும்
வைத்திருத்தல் வேண்டும்.

இதனை 7 அல்லது 8 முறை செய்யவும்.

3. கண் மசாஜ்:

வெப்பம் மற்றும் குளிர்ந்த நீர் மசாஜ்:

குளிர்ந்த மற்றும் சூடான நீரில்
துண்டை நினைத்து புருவம், மூடிய
இமைகள், மற்றும் கன்னங்கள் மீது அழுத்தவும்.

இரண்டையும் மாற்றி மாற்றி செய்யவும்.

ஆனால் குளிர்ந்த நீரில் அழுத்துவதை கடைசியாக
அமையும்படி செய்யவும்.

முழு முக மசாஜ்:

சூடான நீரில் ஒரு துண்டை நனைத்து,
கண்களை தவிர, கழுத்து, தலை மற்றும்
கன்னங்கள் என அனைத்து பகுதிகளிலும்,
தேய்த்தல் வேண்டும்.

பின்னர், விரல்களால் மெதுவாக நெற்றி மற்றும் மூடிய கண்களை மசாஜ் செய்யவும்.

கண்ணிமை மசாஜ்:

கண்களை மூடி 1-2 நிமிடங்கள் விரல்களால்
வட்ட இயக்கங்களில் மசாஜ் செய்யவும்.

பின் கைகளை கழுவி சுத்தமாகவும், அதிகமாக
அழுத்தாமல் சாதாரணமாக அழுத்துவது அவசியம்.

4. மெதுவாக இரண்டு கைகளால் மூன்று விரல்கள் கொண்டு மேல் கண் இமைகள் அழுத்தவும்.

பின்னர், 1-2 வினாடிகளில் அப்படியே அழுத்தியவாறு இருந்து பின் விடுவிக்கவும்.

இதை தொடர்ந்து 5 முறை செய்யவும்.

5. அமைதியாக உட்கார்ந்து, கண்களை இடதுபுறமாகவும் பின் வலதுபுறமாகவும் சுழற்ற வேண்டும்.

5 முறை செய்யவும், அதன் இடையே ஒவ்வொரு முறையும் கண்களை சிமிட்டவும்.

6. 10-15 வினாடிகள் ஒரு தொலைதூர
பொருளைப் (150 அடி அல்லது 50 மீட்டர்
மேல்) பார்க்கவும்.

பின்னர், மெதுவாக கண்களை அருகில் உள்ள பொருள் மீது ( 30அடி அல்லது 10 மீட்டர் தூரத்தில்) 10-15 வினாடிகள் நோக்கவும்.

மீண்டும் தொலைதூர பொருளை பார்க்கவும்.

இதனை 5 முறை செய்யவும்.

7. முழங்கை நீட்டி ஒரு பென்சில் வைத்து,
மூக்கின் முன் மெதுவாக நகர்த்தி வரவும்.

கண்களை அந்த பென்சிலைப் பார்த்தபடியே நகர்த்துவதை கவனம் செலுத்தவும்.

இதனை 10 முறை செய்யவும்.

8. எதிரில் உள்ள சுவரை பார்த்தப்படியே
உங்கள் கண்களால் எழுத முயற்சிக்கவும் அதுவும்
தலையை நகர்த்தாமல் எழுத வேண்டும்.

இது முதலில் கஷ்டமாக இருக்கும் மீண்டும்
மீண்டும் செய்தால், பின் பழகிவிடும்.

9. தலையை அசக்காமல் மேலும் கீழுமாக
பார்க்கவும்.

இதனை 8 முறை செய்தல் வேண்டும்.

பின்னர் இடது வலது என அசைக்கவும்.

இதையும் 8 முறை செய்தல் வேண்டும்.

கண்களை அதன் போக்கில் போகும்
போது அதனை கட்டாயப்படுத்தி, நம்
திசையில் பார்ப்பது தவறு.

அப்படி செய்தல் பார்வை மோசமாகிவிடும்.

10. எப்போதும் கண் உடற்பயிற்சியை
முடிக்கும் போது, உள்ளங்கையால்
தடவி முடிப்பது நல்லது.

நீண்ட நேரம் தொடர்ந்து பயிற்சிகள் செய்வதை விட,
தினமும் சிறிது நேரம் செய்தல் நல்லது.

இந்த மாதிரியான பயிற்சிகள் குறிப்பாக கம்ப்யூட்டர்
முன் வேலை செய்வோருக்கு சிறந்ததாக இருக்கும்.

எளிதாக, தினம் அலுவலகத்தில் உங்கள் கம்ப்யூட்டர்
ஓவ்வொறு செயலாக்கத்திற்கும் சில நொடிகள்
பிடிக்கும், அப்போது உங்கள் கண்களுக்கு மேல
குறிப்பிட்டுள்ள பயிற்சிகளையோ அல்லது தூரத்தில் உள்ள விஷயங்களை நோக்கி பார்க்கவும்.

இவை அனைத்தும் கண்களுக்கு நாம் தர வேண்டிய அத்தியாவசிய பயிற்சி முறைகள்.

இதை முறையாக செய்து பயன் பெறுங்கள்.

"ஆரோக்ய வாழ்வுக்கு இந்த பயிற்சிகள் அவசியம்"

யோகாவின் ஆன்மீக வேர்

யோகாவின் ஆன்மீக வேர் :

யோகா, தெய்வீகமான வேத நூல்களையே
தன்னுடைய உறுதியான நங்கூரமாகக்
கொண்டிருக்கிறது.

நித்ய யோக ... பதஞ்ஜலி
யோக சூத்திரங்களையும், யோகத்தின்
அடிப்படை நூல்களாகக் கருதப்படும் ஹட
பிரதீபிகா, கேரண்டஸம்ஹிதை மற்றும் சிவ
ஸம்ஹிதைகளிலிருந்து எடுக்கப்பட்ட யோகப்
பயிற்சிகளின் சாரமாகும்.

பதஞ்ஜலி யோக சூத்திரங்கள்:

பதஞ்சலி யோக சூத்திரங்களின் காலம் கி.மு.
இரண்டாம் நூற்றாண்டைச் சேர்ந்ததாகக்
கூறப்பட்டாலும், இந்நூல் அதற்கும்
பல்லாயிரக்கணக்கான ஆண்டுகளுக்கு
முந்தைய சாஸ்திர நூல் என்பதை நாம்
நினைவில் கொள்ளவேண்டும்.

பதஞ்ஜலி முனிவரால் எழுதப்பெற்ற இந்நூல்தான் யோக சாஸ்திரங்களுக்கே அடிப்படை ஆதார நூலகத்
திகழ்கிறது.

இதில் சொல்லப்பட்டிருக்கும் நுட்பங்கள் மறைபொருளாகவும், ஒரு சிலருக்கே புரியும் வகையில் இருந்தாலும், பயிற்சி செய்யக்கூடிய வகையில் அதாவது நம் அன்றாட வாழ்வில் எளிதாகக்
கடைப்பிடிக்கும் வகையில் இருக்கின்றன.

அது அறிமுகப்படுத்தும் அஷ்டாங்க யோக
முறைகளை, நம் வாழ்க்கை முறையாக
மாற்றும்படி அது வலியுறுத்துகிறது.

ஹடயோகப்ரதீபிகா :

ஹடப்ரதீபிகா, கோரக்நாதரின் சீடரான ஸ்வாமி
ஸ்வாத்மாராமாவினால் எழுதப்பட்டது.

இந்நூல் 15 ஆம் நூற்றாண்டைச் சேர்ந்தது.

ஆதிநாதரான சிவபெருமான், தம்முடைய
துணைவியான தேவி பார்வதிக்கு ஹட யோகப்
பயிற்சிகளின் இரகசியங்களைப் போதித்தார்.

யோகிகளின் பரம்பரை வழியாகப் பயணித்து
வந்த இந்த யோக நுட்பங்களையே இந்நூல்
அடிப்படையாகக் கொண்டிருப்பதால்,
இந்நூலை ஆதிநாதரான சிவபெருமானுக்கே
அர்ப்பணித்துள்ளார், இந்நூலாசிரியர்.

ஹடப்ரதீபிகா ஆனஸங்கள், பிராணாயாமங்கள்,
பந்தனங்கள், முத்ராக்கள் போன்ற நான்கு
முக்கியமான உபதேஸங்களைத் தன்னகத்தே
கொண்டுள்ளது.

இது சக்கரங்கள், நாடிகள், குண்டலினி சக்தி போன்றவற்றைப் பற்றியும் விரிவாக விளக்குகிறது.

20 நூற்றாண்டுகளுக்கு முன்பு இந்த யோக நூல்கள்
எழுதப்பட்டபோது, மனித இயல்புகள்
எவ்வாறு இருந்தனவோ, அவை அப்படியே
இப்போதும் இருக்கின்றன.

இன்னும் சொல்லப்போனால், நவீன யுக
மனிதர்கள் வேறு பல முக்கியமான
பிரச்சினைகளையும் தங்கள் வாழ்வில்
எதிர்கொள்ள வேண்டியிருக்கிறது.

அவை நம்முடைய செல்களின் செயல்முறைகளிலும்,
மூளையின் செயல்முறைகளிலும்கூட பெரும்
தாக்கத்தை ஏற்படுத்தக்கூடிய அளவிற்கு உள்ளது.

வேலை செய்யும் இடத்தில் ஏற்படும்
மன அழுத்தம், ஒரு அவசர வாழ்க்கை முறை,
சமுதாய ரீதியான உண்மைகளை மாற்ற
நினைத்தல் போன்ற சங்கடங்களையும்
சமாளிக்கவேண்டியுள்ளது.

நித்ய கிரியாவிலிருக்கும் நுட்பங்கள், இன்றைய நவீன யுக மனிதனின் உடலில் பரிசோதிக்கப்பட்டு,
அவை எந்தளவிற்குப் பயனளிக்கின்றன
என்பதை நவீன ஆராய்ச்சிகள் மூலம்
உறுதியாக நிரூபிக்கப்பட்ட பிறகே
பொதுமக்களின் பயன்பாட்டுக்கு
அளிக்கப்பட்டுள்ளன.

யோகாவில் நோய்கள் எப்படி குணமாகிறது.?

உடலில் நோய்தோன்ற உடலில் இருக்கும்
ஐந்து வித கோசங்களில் ஏற்படும் சீரின்மையே
காரணம் என்கிறது, யோக தத்துவம்.! .

அக்குப்பஞ்சர் காரர்கள் கூறும் பஞ்ச பூதங்கள்
வேறு பஞ்ச கோசங்கள் வேறு.!

முதலில் கோசங்கள் என்றால் என்ன வென்று
கூறுகிறோம்.

கோசம் என்பது சமஸ்கிருத சொல்லாகும்.

கோசம் என்றால் உறை/ கூடு, புதையல்
என்று பொருள். .

அதாவது மனிதனின் உடல்தான் அவனின்
கூடு, புதையல் எல்லாமே.

அதை கடந்துதான் மனிதன் நிறை நிலையை அடைய
முடியும்.!

இந்த உடலில் உள்ள சதை, எலும்பு,
உறுப்புகள், இரத்தம், சீழ் இதெல்லாம்
அன்னமயகோசம் அதவாது உணவால்
பலப்படும் பகுதி.!

அடுத்து நரம்பு தொகுதிகளில் நடக்கும் உயிர்
இயக்கமே பிராணமய கோசம்.

அதாவது அன்னத்தால் உடல் உருவாகவும் தொடர்ந்து
அதில் உயிரை நிலைப்படுத்தவும் செய்யும்
மின்சார சக்தியே பிராணமயகோசம்.!

அடுத்து மனோன்மயம் என்பது எண்ணத்
தொகுதியை குறிப்பது உணவு கூடும்,
மின்சார கூடும் எண்ண அலைகளின் தன்மைக்
கேற்பவே நல்ல விளைவையோ தவறான
விளைவையோ உருவாக்கும்.!

அடுத்து விஞ்ஞானமய கோசம் என்பது
பகுத்தறிந்து செயல்களை செய்வது. அதாவது
நன்றாக வேலை செய்தால் சீக்கிரம்
முன்னேறலாம், பொறுமையாக யோசித்தால்
எதையும் கண்டுப்பிடிக்கலாம், மேலிருந்து
குதித்தால் கால் உடையலாம் என்று முடிந்த
முடிவுகளைக் கொண்டு ஆராய்ச்சி பூர்வமாக
அணுகும் அறிவு.!

நிறைவாக ஆனந்தமயகோசம் என்பது
ஆன்மாவை உணர்வது அல்லது உண்மையை
உணர்வது. அதாவது தனது உடலாலும்,
பிராணனாலும், மனோன்மயத்தாலும்,
முடிந்த முடிவுகளாலும் பெற்ற ஆற்றலை
இறைநிலையான ஆன்மாவோடு அல்லது
இயற்கை ஆற்றலோடு இணைப்பதே
ஆனந்தமயம்.!

சரி இதற்கும் நோய்க்கும் என்ன தொடர்பு
என்று வினவினால்

1. உணவுக் குற்றத்தால் வருவது சதை,
உறுப்பு, இரத்த வியாதிகள்.!

2. பிராணக்காற்று மற்றும் உயிர் ஒளியின்
குற்றத்தால் வருவது நரம்பு வியாதி,
வாயுக்கோளாறு, கை,கால் மரத்துப்போதல்,
பக்கவாதம் போன்ற நோய்கள்.!

3. மனநிலை சீரின்மை, கடந்த கால கெட்டப்
பழக்கங்கள் விபரீத அனுபவங்கள்,
போன்றவற்றல் வருவது மனநோய்கள்.!,

4. விஞ்ஞான முடிவுகளுக்கு எதிராக
செயல்படுவதால் வருவது விபத்து,
பாக்டீரியாத் தொற்று அஜீரணக் கோளாறு,
தோல்நோய்கள் போன்றவை.!

5. ஆனந்த மயத்தால் வரும் வியாதி மூளைக்
குழப்பம், பைத்தியம், ஆழ்மன சிந்தனை
போன்ற வியாதிகள் உருவாகும்.!

யோக சாஸ்திரத்தின் படி இந்த ஐந்து
கோசங்களில் வரும் வியாதிகளை அந்தந்த
பகுதிகளை உணவு முறையாலும்,ஆசனத்தாலும், மூச்சுப்பயிற்சியாலும், பிராணனை உள்செலுத்துவதாலும்,
பிராத்தனை, மந்திர உச்சாடனம் செய்வது,
தியானம் செய்வது, இயற்கையோடு இயைந்து
வாழ்தலின் மூலம் எளிதாக பஞ்ச கோசங்களின்
ஆற்றலை சீராக்கி நலமோடும் வளமோடும்
ஆரோக்கியமாகவும் நிறைநிலை பெற்றும் வாழலாம்.!

நலம் பெருகட்டும் …

amyogatrust
mobile:9629368389

Thursday, March 24, 2016

யோகாசன அடிப்படை

யோகாவின் ஆன்மீக வேர் :

யோகா, தெய்வீகமான வேத நூல்களையே
தன்னுடைய உறுதியான நங்கூரமாகக்
கொண்டிருக்கிறது.

நித்ய யோக ... பதஞ்ஜலி
யோக சூத்திரங்களையும், யோகத்தின்
அடிப்படை நூல்களாகக் கருதப்படும் ஹட
பிரதீபிகா, கேரண்டஸம்ஹிதை மற்றும் சிவ
ஸம்ஹிதைகளிலிருந்து எடுக்கப்பட்ட யோகப்
பயிற்சிகளின் சாரமாகும்.

பதஞ்ஜலி யோக சூத்திரங்கள்:

பதஞ்சலி யோக சூத்திரங்களின் காலம் கி.மு.
இரண்டாம் நூற்றாண்டைச் சேர்ந்ததாகக்
கூறப்பட்டாலும், இந்நூல் அதற்கும்
பல்லாயிரக்கணக்கான ஆண்டுகளுக்கு
முந்தைய சாஸ்திர நூல் என்பதை நாம்
நினைவில் கொள்ளவேண்டும்.

பதஞ்ஜலி முனிவரால் எழுதப்பெற்ற இந்நூல்தான் யோக சாஸ்திரங்களுக்கே அடிப்படை ஆதார நூலகத்
திகழ்கிறது.

இதில் சொல்லப்பட்டிருக்கும் நுட்பங்கள் மறைபொருளாகவும், ஒரு சிலருக்கே புரியும் வகையில் இருந்தாலும், பயிற்சி செய்யக்கூடிய வகையில் அதாவது நம் அன்றாட வாழ்வில் எளிதாகக்
கடைப்பிடிக்கும் வகையில் இருக்கின்றன.

அது அறிமுகப்படுத்தும் அஷ்டாங்க யோக
முறைகளை, நம் வாழ்க்கை முறையாக
மாற்றும்படி அது வலியுறுத்துகிறது.

ஹடயோகப்ரதீபிகா :

ஹடப்ரதீபிகா, கோரக்நாதரின் சீடரான ஸ்வாமி
ஸ்வாத்மாராமாவினால் எழுதப்பட்டது.

இந்நூல் 15 ஆம் நூற்றாண்டைச் சேர்ந்தது.

ஆதிநாதரான சிவபெருமான், தம்முடைய
துணைவியான தேவி பார்வதிக்கு ஹட யோகப்
பயிற்சிகளின் இரகசியங்களைப் போதித்தார்.

யோகிகளின் பரம்பரை வழியாகப் பயணித்து
வந்த இந்த யோக நுட்பங்களையே இந்நூல்
அடிப்படையாகக் கொண்டிருப்பதால்,
இந்நூலை ஆதிநாதரான சிவபெருமானுக்கே
அர்ப்பணித்துள்ளார், இந்நூலாசிரியர்.

ஹடப்ரதீபிகா ஆனஸங்கள், பிராணாயாமங்கள்,
பந்தனங்கள், முத்ராக்கள் போன்ற நான்கு
முக்கியமான உபதேஸங்களைத் தன்னகத்தே
கொண்டுள்ளது.

இது சக்கரங்கள், நாடிகள், குண்டலினி சக்தி போன்றவற்றைப் பற்றியும் விரிவாக விளக்குகிறது.

20 நூற்றாண்டுகளுக்கு முன்பு இந்த யோக நூல்கள்
எழுதப்பட்டபோது, மனித இயல்புகள்
எவ்வாறு இருந்தனவோ, அவை அப்படியே
இப்போதும் இருக்கின்றன.

இன்னும் சொல்லப்போனால், நவீன யுக
மனிதர்கள் வேறு பல முக்கியமான
பிரச்சினைகளையும் தங்கள் வாழ்வில்
எதிர்கொள்ள வேண்டியிருக்கிறது.

அவை நம்முடைய செல்களின் செயல்முறைகளிலும்,
மூளையின் செயல்முறைகளிலும்கூட பெரும்
தாக்கத்தை ஏற்படுத்தக்கூடிய அளவிற்கு உள்ளது.

வேலை செய்யும் இடத்தில் ஏற்படும்
மன அழுத்தம், ஒரு அவசர வாழ்க்கை முறை,
சமுதாய ரீதியான உண்மைகளை மாற்ற
நினைத்தல் போன்ற சங்கடங்களையும்
சமாளிக்கவேண்டியுள்ளது.

நித்ய கிரியாவிலிருக்கும் நுட்பங்கள், இன்றைய நவீன யுக மனிதனின் உடலில் பரிசோதிக்கப்பட்டு,
அவை எந்தளவிற்குப் பயனளிக்கின்றன
என்பதை நவீன ஆராய்ச்சிகள் மூலம்
உறுதியாக நிரூபிக்கப்பட்ட பிறகே
பொதுமக்களின் பயன்பாட்டுக்கு
அளிக்கப்பட்டுள்ளன.

யோகாவில் நோய்கள் எப்படி குணமாகிறது.?

உடலில் நோய்தோன்ற உடலில் இருக்கும்
ஐந்து வித கோசங்களில் ஏற்படும் சீரின்மையே
காரணம் என்கிறது, யோக தத்துவம்.! .

அக்குப்பஞ்சர் காரர்கள் கூறும் பஞ்ச பூதங்கள்
வேறு பஞ்ச கோசங்கள் வேறு.!

முதலில் கோசங்கள் என்றால் என்ன வென்று
கூறுகிறோம்.

கோசம் என்பது சமஸ்கிருத சொல்லாகும்.

கோசம் என்றால் உறை/ கூடு, புதையல்
என்று பொருள். .

அதாவது மனிதனின் உடல்தான் அவனின்
கூடு, புதையல் எல்லாமே.

அதை கடந்துதான் மனிதன் நிறை நிலையை அடைய
முடியும்.!

இந்த உடலில் உள்ள சதை, எலும்பு,
உறுப்புகள், இரத்தம், சீழ் இதெல்லாம்
அன்னமயகோசம் அதவாது உணவால்
பலப்படும் பகுதி.!

அடுத்து நரம்பு தொகுதிகளில் நடக்கும் உயிர்
இயக்கமே பிராணமய கோசம்.

அதாவது அன்னத்தால் உடல் உருவாகவும் தொடர்ந்து
அதில் உயிரை நிலைப்படுத்தவும் செய்யும்
மின்சார சக்தியே பிராணமயகோசம்.!

அடுத்து மனோன்மயம் என்பது எண்ணத்
தொகுதியை குறிப்பது உணவு கூடும்,
மின்சார கூடும் எண்ண அலைகளின் தன்மைக்
கேற்பவே நல்ல விளைவையோ தவறான
விளைவையோ உருவாக்கும்.!

அடுத்து விஞ்ஞானமய கோசம் என்பது
பகுத்தறிந்து செயல்களை செய்வது. அதாவது
நன்றாக வேலை செய்தால் சீக்கிரம்
முன்னேறலாம், பொறுமையாக யோசித்தால்
எதையும் கண்டுப்பிடிக்கலாம், மேலிருந்து
குதித்தால் கால் உடையலாம் என்று முடிந்த
முடிவுகளைக் கொண்டு ஆராய்ச்சி பூர்வமாக
அணுகும் அறிவு.!

நிறைவாக ஆனந்தமயகோசம் என்பது
ஆன்மாவை உணர்வது அல்லது உண்மையை
உணர்வது. அதாவது தனது உடலாலும்,
பிராணனாலும், மனோன்மயத்தாலும்,
முடிந்த முடிவுகளாலும் பெற்ற ஆற்றலை
இறைநிலையான ஆன்மாவோடு அல்லது
இயற்கை ஆற்றலோடு இணைப்பதே
ஆனந்தமயம்.!

சரி இதற்கும் நோய்க்கும் என்ன தொடர்பு
என்று வினவினால்

1. உணவுக் குற்றத்தால் வருவது சதை,
உறுப்பு, இரத்த வியாதிகள்.!

2. பிராணக்காற்று மற்றும் உயிர் ஒளியின்
குற்றத்தால் வருவது நரம்பு வியாதி,
வாயுக்கோளாறு, கை,கால் மரத்துப்போதல்,
பக்கவாதம் போன்ற நோய்கள்.!

3. மனநிலை சீரின்மை, கடந்த கால கெட்டப்
பழக்கங்கள் விபரீத அனுபவங்கள்,
போன்றவற்றல் வருவது மனநோய்கள்.!,

4. விஞ்ஞான முடிவுகளுக்கு எதிராக
செயல்படுவதால் வருவது விபத்து,
பாக்டீரியாத் தொற்று அஜீரணக் கோளாறு,
தோல்நோய்கள் போன்றவை.!

5. ஆனந்த மயத்தால் வரும் வியாதி மூளைக்
குழப்பம், பைத்தியம், ஆழ்மன சிந்தனை
போன்ற வியாதிகள் உருவாகும்.!

யோக சாஸ்திரத்தின் படி இந்த ஐந்து
கோசங்களில் வரும் வியாதிகளை அந்தந்த
பகுதிகளை உணவு முறையாலும்,ஆசனத்தாலும், மூச்சுப்பயிற்சியாலும், பிராணனை உள்செலுத்துவதாலும்,
பிராத்தனை, மந்திர உச்சாடனம் செய்வது,
தியானம் செய்வது, இயற்கையோடு இயைந்து
வாழ்தலின் மூலம் எளிதாக பஞ்ச கோசங்களின்
ஆற்றலை சீராக்கி நலமோடும் வளமோடும்
ஆரோக்கியமாகவும் நிறைநிலை பெற்றும் வாழலாம்.!

"ஆரோக்ய வாழ்வுக்கு யோகம் அவசியம்"