Saturday, March 26, 2016

எங்களைப் பற்றி ஒரு அறிமுகம்

அம் யோகா டிரஸ்ட்
யோகா, இயற்கை வாழ்வியல் நிபுணர் ஏகப்பிரியன் மு. இஸ்மாயில் அவர்களால் 2012 ஆண்டு தொடங்கப்பட்டது. இந்த அமைப்பில் பாரதி, ஆறுமுகம், ராஜேஷ் போன்றவர்கள்  நிர்வாகிகளாக இருக்கிறார்கள்.!
அம் யோகா டிரஸ்டின் மூலம் இதுவரை இரண்டாயிரத்து ஐநூறிற்கும் மேற்பட்ட நோயாளிகள் இலவசமாகவும் குறைந்த கட்டணத்திலும்
பயனடைந்துள்ளனர்.!
பொது ஆரோக்கியம், ஆஸ்துமா,  அடுக்குத்தும்மல்,சக்கரை, இரத்த அழுத்தம், உடல் பருமன், மூட்டுவலி, கீல்வாதம், பக்கவாதம் போன்ற நோயாளிகளுக்கு  ஒருநாள் மற்றும் ஒரு மாதகால இலவச யோகா & இயற்கை வாழ்வியல் பயிற்சி உணவு முறை திட்டம், மூலிகை மருந்துகளின் மூலம் பல்வேறு நோயாளிகளை மீட்டு ஆவணப்படுத்தி வருகிறது.! குறிப்பாக சக்கரை முற்றிய நிலையில் இன்சுலின் எடுத்துக்கொண்டிருந்தவர்கள் பலரின் பிணியை இயற்கை வழியில் கட்டுப்படுத்தி  ஆங்கில மருந்துகளை படிப்படியாக முற்றிலும் நீக்கியும் சக்கரையை கட்டுப்பாட்டில் வைத்தும் பலருக்கு சக்கரையை இயல்பு நிலைக்கே கொண்டு வந்தும்  இயற்கையின் ஆற்றலை பறைசாற்றி வருவதோடு நோயாளிகள் அடைந்த பயனை ஆவணப் படமாக தயாரித்தும் வெளியிட்டுள்ளது.!
அம் யோகா டிரஸ்ட் நிறுவனர் ஏகப்பிரியன் மு.இஸ்மாயில் அவர்கள் 40 வயது நிரம்பியவர். இவர் தனது 15 வயது முதல் சூரியச் சித்தர் சுவாமி வெங்கட் இரமணன் என்ற குருவிடமும் பின் நாகர்கோவில் கிருஷ்ண மூர்த்தி பண்டிதரிடமும் ஹடயோகா, இராஜயோகா, இயற்கை மூலிகை மருத்துவம் போன்றவற்றை திறம்பட கற்றுத் தேர்ந்தவர்.! அதன் பிறகு விவேகானந்தா கேந்திரா, வேதாத்ரி மகரிசி யோகா, ஈசா யோகா போன்ற அமைப்புகளிலும் பல்வேறு  யோகா நூட்பங்களை கற்றுணர்ந்தார்.! நிறைவாக  2010 ஆண்டு இந்தியன் ஸ்கூல் ஆப் யோகா டாக்டர். அசோக்குமார் அவர்களிடம் யோகா  ஆசிரியர், யோகா சிகிட்சையாளர் பட்டயமும் பெற்றார்.! அது முதல் தான்பெற்ற இந்த உன்னத கலையின் மேன்மையை பறைசாற்றும் விதத்தில் பலருக்கும் பல்வேறு பயிற்சிகளை வழங்கி சிறப்பித்து வருகிறார்.!

இவரின் சாதனைகளில் சில

முதல்  உலக யோகா தினக் கொண்டாட்டத்தில் 32 நிமிடங்கள் தலைகீழாக <சிரசாசன நிலையில்> நின்றுகொண்டே யோகா வகுப்பெடுத்து  உலகின் அவ்வாறு வகுப்பெடுத்த முதல் யோகா ஆசிரியர் என்று  புகழ்பெற்றார்.!

*2011 ஆண்டு மஹாயோகா   என்ற 268 பக்க முழுமையான யோகா பயிற்சி புத்தகத்தை எழுதி வெளியிட்டார்.!
*ஆழ்நிலை யோகா டிவிடி மற்றும் சக்கரை ஆய்வு நிகழ்வை
*இன்சுலின் என்ற ஆவணப்படமாக தயாரித்து வெளியிட்டார்.!

*பல்வேறு நோயாளிகளுக்கு யோகா, மூலிகை மருந்துகளை மாதம் முழுவதும் இலவசமாக வழங்கி ஆய்வு செய்யும் முன்மாதிரி  வகுப்புகளை வெற்றிகரமாக தொடர்ந்து நடத்திவருகிறர்.!

*இதுபோன்றே பல மாநில, தென்னிந்திய அளவிலான யோகாசனப் போட்டிகளிலும்
கலந்துகொண்டு முதல் இடங்களை பிடித்துள்ளார்.!

* முற்றிலும் இயற்கை வாழ்வியல் முறைகளையே கடைப்பிடிக்கும் ஆசிரியர்  அது போன்றே பிறரும் வாழ்ந்து உடல் மன ஆரோக்கியத்தை மேம்படுத்திக் கொள்ள பேஸ்ட், பவுடர், சீனி, மைதா, ஆங்கில மருந்துகளின் தீங்கிலிருந்து விடுபட பல்பொடி, குளியல் பொடி, சத்துமாவு, மூலிகை தேனீர்பொடி, அமுக்ரா மாத்திரை , சிறுகுறிஞ்சான் மாத்திரை, போன்ற அத்தியாவசியமான மூலிகைப் பொருட்களையும் முற்றிலும் இயற்கை முறையில் தானே தயாரித்து வழங்கி வருகிறார்.!

குடும்ப வாழ்க்கை

இவரின் மனைவி பெயர் மைதீன்பீவி
இரண்டு மகன்கள் மூத்தவர் முகமது இஜாஸ்   மாநில  யோகாசன சேம்பியன் <2015>
தற்போது இராமகிருஷ்ணா இயற்கை மருத்துவக் கல்லூரியில் முதலாம் ஆண்டு B.N.Y.S படித்து வருகிறார்.!
இளையவர் முகமது இக்லாஸ் +1 படித்து வருகிறார்.!

இயற்கை வாழ்வியல் இரகசியங்களை அறிந்துகொள்ளவும் இயற்கை வழியில் என்றும் இயற்கையோடு இயைந்து இன்புற்று வாழவும்
உலக மக்கள் அனைவரையும் அன்போடு அழைக்கிறோம்.!

AM YOGA TRUST
461/2012 தொடர்பிற்கு:9629368389
amyogatrust.blogspot.com

நலம் பெருகட்டும் …

No comments:

Post a Comment