Saturday, March 26, 2016

தியான வெளி



நான் கடந்த பத்து ஆண்டுகளாக 
தியானம் செய்து வருகிறேன்.
ஆனால் என்னால் தியானத்தில்
ஒன்றவே முடியவில்லை. தியானத்தின் மூலம் எத்தனையோ
நன்மைகளை அடைந்துள்ளதாக பலரும் கூறுகிறார்கள் என்னால் ஏன் அதுபோன்ற பயன்களை பெற முடியவில்லை? எனப் பலரும் கூறுகிறார்கள். 
உண்மை என்னவென்றால் " தியான வெளியில் எல்லோருமே நுழையலாம்.ஆனால் தியானத்தோடு ஒன்றினைய சிலரால் மட்டுமே முடியும்.!
நாம் கூறும் சில உணர்வைப் பெற்றவர்களாலேயே
தியானமாகவே ஆக முடியும் …
மலரின் மலர்ச்சியில் மகிழ்ந்ததுண்டா,
மழலைச் சிரிப்பில்
உருகியதுண்டா,
முன் காதல் உணர்வில்
கரைந்திருக்கிறாயா,
கொடுமை கண்டு
கொதித்து காணாமல்
போன அனுபவம் உண்டா,
தீராத துன்பத்தில்
திகைத்து அழுதிருக்கிறாயா,
என்றாவது யாரையும்
புண்ப்படுத்தாமல் ஜோராக
சிரித்திருக்கிறாயா
சகோதரா?
கறிக்கடையை பார்த்ததும் உன்
கண்களில் நீர் வந்ததுண்டா?
வாடிய பயிரை கண்டு வாடாவிடினும் ,உதவி தேடிய ஏழையின் கண்ணீரை துடைக்க
என்றாவது உன் கைகளை பயன்படுத்தி இருக்கிறாயா,
இசையில் கரைந்து இமைக்க
மறந்திருக்கிறாயா,
எந்த சலனமும், சிந்தனையும் இல்லாமல்
என்றாவது இருந்திருக்கிறாயா,
மொழிச் சுவையை மட்டுமே
உண்டு உயிர்வாழ்ந்திருக்கிறாயா,
கலை வெளியில், ஞானநூல் பொருளில் உலகின்
இருப்பையே உணராது
என்றாவது உயிரோடு
ஒன்றியதுண்டா?
இதில் எதேனும் ஒன்றிலும்
ஒன்றாத, உணராத ஒருவனால்
தியானத்தை உணரமுடியாது.!
ஆம், சகோதரா!
மானிடனாகப் பிறக்காதவனால்
முக்தியடையவே முடியாது.!
அது போலவே மனிதனாக வாழாதவர்களால் தியானத்தில்
ஒன்றவே முடியாது.!
சிலர் தங்கள் தூக்கத்தையும், சோம்பலையும், அதீத கற்பனையையும் தியானம் என்கிறார்கள். அது வேண்டுமானால் அனைவருக்கும் வரும்.
ஆகையால் சகோதரரே,
தியான உணர்வை பெற வேண்டுமானால் நீர் முதலில் மனித உணர்வுநிலையின் உச்சத்தை உணர வேண்டும். பிறகு அதை கடக்க வேண்டும், முயலுங்கள் …

நலம் பெருகட்டும் …


No comments:

Post a Comment