Tuesday, September 20, 2016

பப்பாளி வைத்தியம்

நாட்டு பப்பாளி மரத்தின் இலையை
பறித்து சதைத்து சாறெடுத்து அந்த சாற்றை படர்தாமரையால் பாதிக்கப்பட்டப் பகுதியில் பூசி காயவைத்து விட்டு மூன்று மணிநேரம் கழித்து குளிக்கலாம். பிறகு
🍏500 மில்லி தேங்காய் எண்ணையில் 15 கிராம்  வெள்ளைப்பூண்டை தட்டிப்போட்டு பூண்டு சிவந்துவரும்போது இறக்கி பத்திரப்படுத்திக் கொண்டு  அதை  படர்தாமரையால் பாதித்த இடத்தில் தொடர்ந்து 12 நாட்கள் போட்டுவர
எத்தகைய படர்தோல் வியாதியும் குணமாகும். குளியல் பொடியைப் போட்டு குளிக்கலாம். சோப்புநீக்கம்.!

🍃பப்பாளி இலையை சதைத்து சாறெடுத்து அதோடு அதே அளவு
சாத்துக்குடி ஜூஸ்  சேர்த்து
ஒரு கப்பாக 12 நாள் வெறும் வயிற்றில்  குடித்துவர உடலில் தங்கியுள்ள இறந்த செல்கள் வேகமாக
வெளியேறி ஆரம்ப நிலை சொரியாஸிஸ் வியாதி குணமாகும்.! மருந்தை குடிக்கும் காலத்தில் அசைவ உணவு, உப்பு,காரம் குறைத்துக்கொள்ள வேண்டும்.!

🍀நாட்டுப்பப்பாளி இலையை சதைத்து இரு கப் அளவு சாறெடுத்து தினமும் காலை
உணவிற்கு பின்னும் மதிய உணவிற்கு பின்னும்  இருவேளையாக பாதிப்பாதியாக 7 நாட்கள்  கொடுத்துவர
இரத்ததட்டுகள் அதிகரித்து விச ஜுரம் குணமாகும்.!

ஒரு கையளவு பப்பாளி இலையை  பிச்சிப்போட்டு இரண்டு டம்ளர் நீரூற்றி கொதிக்க வைத்து நீர் ஒரு டம்ளராக சுண்டியதும் இறக்கி வடிகட்டி  தேன் கலந்து வெறும் வயிற்றில்  தினமும் ஒரே வேளையாக 30 நாட்கள் குடித்துவர கர்பபை கட்டிகள்  கரையும், குடல் வலிமை பெறும்.!

🌱நாட்டுப்பப்பாளி இலையுடன்
வாழையிலை சம அளவெடுத்து
பணங்கற்கண்டு சேர்த்து
அரைத்து நெல்லிக்காய் அளவு காலை, மாலை மூன்று நாட்கள் உண்டு வந்தால் பெண்களுக்கு
சூதகதடை நீங்கும்.!

☘வறண்ட சருமம் கொண்டவர்கள் பப்பாளி இலையோடு
சோற்றுக்கற்றாளை சதையையும்
சேர்த்து அரைத்து முகத்தில் பூசி குளித்து வந்தால் முகம் பளப்பளப்பாகும்.!

amyogatrust.blogspot.in
100% தரமான மூலிகைப் பெருட்களுக்கு Aum Herbals
Mobile:9629368389

நலம் பெருகட்டும் …

உண்ணுவதெல்லாம் உணவா?

🦀உண்ணுவதெல்லாம்  உணவாகா
உடலை அசைப்பதெல்லாம்
உடற்பயிற்சியாகா
உரைப்பதெல்லாம் உரையாகா
உள்ளம் நினைப்பதெல்லாம் வாழ்வாகா🙈

எதற்காக கூறுகிறேன் என்றால்
மூலிகை மருந்து, யோகா இரண்டும் நமது முன்னோர் தந்த சொத்துக்கள்🕸
அதை முறையாக பயன்படுத்தினால் எத்தகைய உடல்,மன, ஆன்மாவின் பிணிகளையும் கடந்து பேரின்ப பெருவாழ்வில் நிலைக்கலாம்.!
ஆனால்,வாய்ருசி என்னும் மாயையும் ,பழக்கம் என்னும் -அரக்கனும், பெருமை என்னும்
அறிவீனமும் நாம் பேரின்பமடைவதை தடுத்து வதைத்தே கொல்கிறது மனிதனை🐣
பாக்கெட்டில் வரும் எல்லாமே குப்பை. பெரிய கம்பெனிகள் தருவது எல்லாமே இரசாயணம், விளம்பரத்தில் சொல்வது அத்தனையும் சுத்தமான பொய்.!
இதை உள்ளில் நிறுத்தி தீய மனசாட்டத்தையும்
நாவாட்டத்தையும் கடந்து முற்றத்தில் உள்ள வேம்பை பறித்து வாயில் வைத்தால்  போதும் பிணியெல்லாம் பறந்துபோகும். அதைவிட அற்புத மூலிகை இல்லை. மனம் நிறுத்தி மூன்றுமூச்சிழுத்தால் போதும் அதுவே ஆனந்தயோகமாகும்
விதியின் பெரும்பிணியும் கதறி ஓடும்.! புரிகிறதல்லவா?
"சரி அப்படியானல் இப்பொழுது தைராய்டு சீரின்மைக்கும், கொடிய மூட்டுவலிக்கும் தீர்வு சொல்கிறேன் படியுங்கள் … சுக்கு,மிளகு,திப்பிலி,வேப்பம்கொட்டை, பனங்கற்கண்டு சம அளவாக எடுத்துப் பொடித்து வைத்துக்கொண்டு தினம் காலை,மாலை ஒருத்தேக்கரண்டி
வாயில் போட்டு கால்டம்ளர் சுடுநீர் அருந்தவும். பிறகு ஒருமணி நேரம் கழிந்து நஞ்சில்லா நல்ல உணவாக உண்டுவந்தால் எத்தகைய தைராய்டு குறைபாடும் மண்டலத்தில் ஓடிவிடும்.! இன்னொன்று தைராய்டு,  பாங்கிரியாஸ்,பிட்யூட்டரி, அட்ரீனல் போன்ற நாளமில்லா சுரப்பிகளில் ஏற்படும் எந்த வியாதிக்கும் மருந்து மட்டும் முழுத்தீர்வாகாது.! சர்வாங்காசனம், மட்ச்யாசனம்,வக்ராசனம், சாந்தியாசனம் போன்ற யோகாசனங்களில் பாதி குணமுள்ளது. தகுந்த
ஆசிரியரிடம் கற்றுக்கொள்ளவும்.!
நாள்ப்பட்ட மூட்டுவலி, கணுக்கால் வலிக்கு உழுந்தம் மாவு கால்பங்கு கடுகு பொடி கால்பங்கு சேர்த்து நாட்டுக்கோழி முட்டையின் வெள்ளைக்கரு அரைப்பங்கு கலந்து குழைத்து கல்லுப்பு நீர் சிறிது கலந்து பிசைந்து வலியுள்ள இடத்தில் பூசி அரைமணி முதல் ஒரு மணிநேரம் வரை இளம்வெயிலில் அமர்ந்து வந்தால் பனிரெண்டு நாளில் மூட்டுவலி, கணுக்கால்வலி,தோள்பட்டை வலி,கழுத்துவலி, இடுப்புவலி போயே போய்விடும்.
அதோடு தினமும் ஒருவேளை சமைக்காத உணவும், சத்துமாவு கஞ்சி்யும் அருந்தி வந்தால் எத்தகைய நாள்ப்பட்ட வலியும் குணமாகும்.! நினைவிருக்கட்டும்
காப்பி,தேநீர்,பிஸ்கெட்,ஹார்லிக்ஸ்,கா்ன்ப்ளவர்,பிரட்,பெப்சி, பிராய்லர் கோழி, நண்டு,இறால், பெரிய கம்பெனிகளின் சத்துமாவு போன்றவை  உணவிற்க குப்பை.!
கைகுத்தல் அரிசிக்கஞ்சி, கேழ்வரகு தோசை,சாத்துக்குடி, நாட்டுவாழைப்பழம், இந்துப்பு, பனங்கற்கண்டு, கருப்பட்டி, ரீபைண்ட் செய்யாத கடலெண்ணைய், தேங்காய் எண்ணை, நல்லெண்ணைய்
பசுநெய் இதுவே அமிர்தமாகும் உணவு.!

amyogatrust.blogspot.in
🌿100% இயற்கையான மூலிகை தயாரிப்புகளுக்கு
Aum Herbals
Mobile:9629368389

Monday, September 19, 2016

மனமென்னும் மந்திரம்

போன வாரத்தில் இரண்டு  பக்கவாத நோயாளிகளை ஒரே நாளில் வேறு இடங்களில் சந்தித்தேன். இரண்டு பேருமே படுத்தப் படுக்கையாய் கிடந்தவர்கள். ஒருவரின் உதவி இல்லாமல் எழுந்து அமரகூட  அவர்களால் முடியாது.! ஆனால், அவர்களை சந்தித்த பத்தாவது நிமிடத்திற்குள் இரண்டு பேரையும் எழுந்து நடக்க வைத்துவிட்டேன்.!

பயப்படதீர்கள், முடவர்கள் நடக்கிறார்கள் குருடர்கள் பார்க்கிறார்கள்
என்று கிருஸ்து காலத்திற்கு செல்லவில்லை.!

உண்மையில் நடந்ததை தான் சொல்கிறேன். அதில் ஏற்கனவே ஒர் ஆண்டிற்கு முன் நம்மிடம் பக்கவாதத்திற்கு யோக சிகிட்சை பெற்று பிறகு அவரின் மனைவிக்கு கேன்சர் வந்துவிட்டதால் கவனிப்பின்றி பயிற்சியை விட்டவர் ஒருவர்.!

இன்னொருவரை அன்றுதான் ஒரு மாணவர் அறிமுகம் செய்திருந்தார்.
நான்கு வார்த்தை தலையில் நாலுசுற்று முதுகில் நாலுசுற்று முன்பக்கமாக கொஞ்ச நேரம்பின்பக்கமாக கொஞ்ச நேரம்அழுத்திப்பிடித்து தூக்கிநிறுத்தி
நடக்க விட்டேன். நடந்தே விட்டார்கள்.! இதுதான் மனதின் சக்தியாய் விளங்கும் பிரபஞ்ச  ஆற்றலின் அற்புதம்.! இதை நான் எந்த கல்லூரியிலும் கற்கவில்லை,
எந்த குருவும் எனக்கு போதிக்கவில்லை, இதற்கு முன் இதுபோல் நானே செய்ததில்லை.! எல்லா உயிர்களும் மேன்மையடைய வேண்டும்  என்று தினமும் பிராத்திக்கிறேன் அவ்வளவே எனது பங்கு.!

அந்தப் பிராத்தனையே இந்த அற்புதத்தை செய்தது.! என்
ஒருவனின் பிராத்தனை ஒரே நாளில் இரண்டு படுக்கை நோயாளிகளை எழுந்து நடக்க வைக்கும் என்றால்  இந்த உலகம் முழுவதும் உள்ள அத்தனை மனிதர்களும் - எல்லா உயிர்களும் மேன்மையடையட்டும் என்று
பிராத்தனை செய்தால் எத்தகைய
மாற்றம் வரும்.! இந்த உலகே சொர்க்க பூமியாக மாறிவிடுமே.!

பொதுவாக வைத்தியத்தை பற்றிப் பேசும் போது சொல்வார்கள்
வைத்தியம் செய்பவன் தன்னை நம்ப வேண்டும். வைத்தியத்தை பெற்றுக்கொள்பவனும் வைத்தியனை நம்ப வேண்டும். இந்த இரண்டு
நம்பிக்கையும் இணைந்துவிடும்
போது அவர்கள் செய்யும் வைத்தியமும் தன்னை நம்பியவர்களை குணமாக்கிவிடும்.! இதைதான் இயேசு கிறுஸ்து பைபிளில் நானல்ல உன்னை இரட்சித்ததுஉன் விசுவாசமே உன்னை இரட்சித்தது. என்றார்; இவை அனைத்திற்கும் பிராத்தனையே மூலதனம்.!

எல்லோரும் இன்பம் பெறுக
எல்லோரும் அமைதி பெறுக
எல்லோரும் ஆனந்தம் பெறுக
எல்லா உயிர்களும் மேன்மை யடையட்டும்.!

வாழ்க வளமுடன்.!
நலம் பெருகட்டும் …

வருத்தப்பட்டு பிணியை சுமக்கும்
மனிதர்களே,
நீங்கள் எல்லோரும் என்னை
நினையுங்கள் உங்கள் பிணி
பணிபோல் விலகும்.!

-ஏகப்பிரியன் DYT
amyogatrust.blogspot.in
Aum Herbals

உடல் சூடு

உடல் சூட்டால் அவதிப்படுபவர்களுக்கு வாரம் இரு முறை வெந்தயக்களி தயார் செய்து கொடுக்கவேண்டும். இதை எப்படி செய்வது என்று பார்க்கலாம்.

வெந்தயம் - 500 கிராம்
பச்சரிசி மாவு - 200 கிராம்
வெல்லம் அல்லது கருப்பட்டி - 100 கிராம்
சுக்குதூள் - அரை தேக்கரண்டி
ஏலக்காய் - 2 (தூளாக்கவும்)
நல்லெண்ணெய் - 2 தேக்கரண்டி

செய்முறை :

* ஏலக்காய், வெல்லம் அல்லது கருப்பட்டியை தூளாக்கி கொள்ளவும்.

* வெந்தயத்தை வெறும் கடாயில் சிவக்க வறுத்து ஆற வைத்து மிக்சியில் போட்டு தூளாக்குங்கள்.

* அரிசி மாவில், வெந்தய மாவு, தண்ணீரை கலந்து தோசை மாவு பதத்திற்கு தயார் செய்யவும்.

* பாத்திரத்தில் வெல்லத்தைக்கொட்டி நீர் கலந்து, பாகு காய்ச்சி வடிகட்டி எடுக்கவும்.

* கரைத்து வைத்துள்ள மாவை அடுப்பில் வைத்து நன்கு கிளற வேண்டும். அடுப்பை மிதமான தீயில் வைத்து கொள்ள வேண்டும். கைவிடாமல் கிளற வேண்டும்.

* வெந்து வரும்போது வடிகட்டி வைத்துள்ள வெல்ல பாகுவை கலந்து கிளறவேண்டும்.

* மாவு பாத்திரத்தில் ஒட்டாமல் திரண்டு வரவேண்டும். தண்ணீரில் விரலை விட்டுவிட்டு மாவை தொட்டால் அது விரலில் ஒட்டக்கூடாது. அதுவே சரியான பதம்.

* கடைசியாக பின்பு அதில் நல்லெண்ணெய் ஊற்றி கிளறி சுக்கு தூள், ஏலக்காய் தூள் கலந்திடுங்கள்.

* லேசான சூட்டில் சாப்பிடுங்கள்.

* இது உடலுக்கு குளிர்ச்சியளிக்கும். பருவம் எய்திய பெண்களுக்கு உடல்சூடு காரணமாக வெள்ளைப்படுதல் உண்டாகும். அதனால் அவர்கள் மெலிந்துபோவார்கள். அப்படிப்பட்டவர்களுக்கு வாரம் இரு முறை வெந்தயக்களி தயார் செய்து கொடுக்கவேண்டும். இது உடலுக்கு புத்துணர்ச்சியை வழங்கும். எலும்புகள் நன்கு வளர்ச்சியடையும்.!

🚨இணையப்பகிர்வு

Sunday, September 18, 2016

யாம் பெற்ற இன்பம்⛹

கடந்த வருடம் ஒரு மழைநாளில் நாகர்கோவில் தினத்தந்தி அலுவலகம் எதிரே பாதாள சாக்கடைக்காக வெட்டப்பட்டப் பட்டிருந்த குழியில் எனது பைக்கோடு குப்புற விழுந்துவிட்டேன். முதுகுத்தண்டில் சற்று பலத்த அடி🚴🏿
இரண்டு மூன்று நாட்கள் நிமிரவே முடியவில்லை. பிறகு நாபியாசனம், புஜங்காசனம்  போன்ற ஆசனங்களை செய்து சற்று ஆசுவாசப்படுத்திக் கொண்டேன். ஆனாலும், ஏகபாத சிரசாசனம், பஸ்திமோத்தானசனம் போன்ற ஆசனங்களை செய்துவிட்டால் அன்று முழுவதும் அடி முதுகும் கால்மூட்டும் வலித்துக் கொண்டே இருந்தது. இந்த ஆசனங்களை செய்யவிட்டால் ஒன்றும் தொந்தரவு இல்லை. இருந்தாலும் ஸ்மார்ட் போன் வெச்சிருக்கிறவன் கையைப் போலதான் யோகாசனம் படிச்சவன் உடம்பும் சும்மா இருக்காது. ஒரு கட்டத்தில் வலி கூடிக்கொண்டே வந்ததால் ஒரு சில அட்வான்ஸ்  ஆசனங்கள் செய்வதை விட்டேன் வலியும் விட்டுவிட்டது. ஆனால், தினமும் 42 ஆசனங்களை செய்து வந்தவன் அதில் பாதிக்கு மேல் விட்டுவிட்டதால் உடல் கொஞ்சம் குண்டாக ஆரம்பித்ததுடன் வளைவுத்தன்மை மிகவும் குறைந்தது போல்  தோன்றியது🎭  விதி வலியது என்று மனசை தேற்றத் தொடங்கிய போதுதான் ஆபத்பாந்தவனாய் நமது மாணவர் ஒருவர் ,தனக்கு முன்பிருந்த  உடல்வலி, முதுகுவலி போன்றவை இப்பொழுது இல்லை.
அதோடு உடல் எடையும் குறைந்துள்ளது.  அதற்கு முக்கியக் காரணம்  யோகாவும் தினமும் ஒருவேளை  உணவாக சாப்பிடும் தேங்காவும் உங்க சத்துமாவும் தான் என்றார்.! அடடா, நாமும் அதைத் தானே சாப்பிடுகிறோம் என்று நினைத்தேன். பிறகு  யோசித்து சாயங்காலம் குடித்து வந்த சத்துமாவை அதிகாலை  ஐந்து மணிக்கே குடித்துவிட்டு வீட்டில் இருந்து கிளம்ப ஆரம்பித்தேன்.!
🌠 என்ன ஆச்சரியம் ஒரு வாரத்திலேயே நல்ல பயன் தெரிந்தது. மீண்டும் அனைத்து அட்வான்ஸ் ஆசனங்களையும் பயின்று வருகிறேன். அடி முதுகுவலியும் அதிக எடையும் போயே போய் விட்டது.!🌈

நன்றி, நம்மிடம் கற்று நமக்கே திரும்ப போதித்த அற்புதமாணவர்
கோபாலகிருஷ்ணருக்கு.!

அனைத்து உதவிகளும் நமக்குள்ளேயே உள்ளன.!

amyogatrust.blogspot.in
Mobile:9629368389

அறிந்து கொள்வோம்..

ஒருவருக்கு உயிர் இருக்கின்றதா? இல்லையா என்பதை அறிய முதலில் மூச்சு இருக்கின்றதா? என்றுதான் பார்ப்போம்...

பாமரர் முதல் படித்தவர் வரை உயிர் இருக்கின்றதா என்பதை கண்டறிய உலகெங்கும் உள்ள நடைமுறை இதுதான்...

ஆனால்?...........இன்றோ!!!?

மூச்சு(சுவாசம்) இருக்கின்றது!

இரத்த ஓட்டம் இருக்கின்றது!

நாடி துடிப்பு இருக்கின்றது!

இதயத்துடிப்பும் இருக்கின்றது!

இருந்தும்...

மூளை இறந்து விட்டது என்று சொல்லி உயிரோடு இருக்கும் ஒரு மனிதரை கொன்று அவரின் உடல் உறுப்புகளை தானம் என்ற பெயரில் கொள்ளையடிக்கும் பழக்கம் டாக்டர்கள் மத்தியில் மிக அதிகமாகிக் கொண்டு வருகின்றது...

உடல் உறுப்புகளுக்காக கொலை செய்யும் டாக்டர்கள் இவர்கள்...

மக்களும் இதற்கு ஆதரவளித்து வருவது மிகவும் வேதனைப் படக்கூடிய, வெட்கப்படக்கூடிய விசயமாகும்...

மூளை இறந்து விட்டது என்று சொல்லி தமக்கு தேவையான அனைத்து உறுப்புகளையும் எடுத்துக்கொள்ளும் இந்த கொள்ளையர்கள், மாபெரும் பல உண்மைகளை மக்களிடம் மறைத்து விடுகின்றார்கள்...

மூளை இறக்குமா?

அப்படி கூறும் டாக்டர்களுக்கு மூளை இருக்குமா?

மூளை இறந்துவிட்டது என்று சொல்லுபவர்களே...
நீங்கள் சொல்லும் வார்த்தையில் உண்மை இருக்குமானால், மனச்சாட்சி உள்ள டாக்டர்களாக இருப்பீர்களேயானால்...

பதில் சொல்லுங்கள்...

இறந்துவிட்டது என்று சொன்ன மூளை, உடம்பில் இருந்தபோது இயங்கிய மூச்சு, இரத்த ஓட்டம், இதய துடிப்பு, நாடி துடிப்பு இவையெல்லாம் இறந்த அந்த மூளையை உடம்பிலிருந்து எடுத்தவுடன் (மூச்சு, இரத்த ஒட்டம், இதய துடிப்பு, நாடிதுடிப்பு இவையெல்லாம்) நின்று விடுகின்றனவே!
ஏன்? ஏன்? ஏன்?...

காரணம் மூளை இறக்கவில்லை, மூளை இயங்கி கொண்டுதானிருக்கின்றது...

மனிதனின் கடைசி மூச்சு இருக்கும் வரை மூளையானது
இயங்கி கொண்டுதானிருக்கும்...

சிந்தியுங்கள்...
மக்களே!...
இது ஒரு மாபெரும் கொலை!...
பெரிய மோசடி!!!

இந்த கொலைக்கு மக்களும், அரசாங்கமும் துணை போவதுதான்
மிகக்கொடுமை...

உறுப்பு தானங்களுக்கு நான் எதிரியல்ல...

இறந்துவிட்ட ஒருவரின் உறுப்பை தானம் பெறுவதை நான் எதிர்க்கவில்லை...

உயிரோடு இருப்பவரின் அனுமதி பெற்று அவரின் உறுப்புகளை தானம் பெறுவதையும் நான் எதிர்க்கவில்லை...

நாம் எதிர்ப்பதெல்லாம் உடலில் முக்கிய உறுப்புகள் எல்லாம் இயங்கி கொண்டிருக்கும்போது, மூளை இறந்துவிட்டது என்று சொல்லி ஒருவருடைய மூச்சை நிறுத்தி கொலை செய்து உடல் உறுப்புகளை தானம் என்ற பெயரில் கொள்ளையடிப்பதைத்தான்...

இப்படி உறுப்புகளை எடுப்பதன் மூலம் பல குடும்பங்களை வாழவைப்பதாக(?) கூறும் இவர்கள் இதன் மூலம் பல பெண்கள் தாலி அறுக்கப்பட்டு விதவைகளாக நிற்பதை வெளியில் சொல்லுவதில்லை!

பல குழந்தைகள் பெற்றோரை இழந்து அனாதைகள் ஆவதை வெளியில் சொல்லுவதில்லை!!!

பெற்றோர்கள் தங்கள் குழந்தையை இழந்து தவிப்பதை வெளியில் சொல்லுவதில்லை!!!

இப்படி 6 மாத குழந்தையிலிருந்து 60 வயதானவர்கள் வரை இவர்களின் கொலைக்கரங்கள் நீண்டுவிட்டன...

இனி யாரும் மயக்கம் போட்டுக் கூட கீழே விழுந்துவிட கூடாது...

அப்படியே விழுந்தாலும் தவறி இவர்களிடம் போகக் கூடாது...

காரணம் மூளை இறந்துவிட்டது என்று சொல்லி கொலை செய்து
உறுப்புகளுக்கு விலைபேசி விற்று விடுவார்கள்...

இவர்கள் உறுப்புகளை தானமாக பெற்றாலும் அதை
மற்றவர்களுக்கு பொருத்தும் ஆப்ரேசனை இவர்கள் (டாக்டர்கள்) தானமாக (இலவசமாக) செய்வார்களா?...

செய்ய மாட்டார்கள்...

மக்களே!
எச்சரிக்கையாக இருங்கள்!!
இவர்களின் நோக்கம் பணம் தான்...
மக்கள் நலமல்ல!!! என்பதை நினைவில் கொள்ளுங்கள்...

நம் மக்களும், மலிவான பத்திரிக்கைகள் மற்றும் டி.வி விளம்பரங்களுக்கு அடிமைப்பட்டு இதற்கு உடன்படுவதுதான் ஒரு மாபெரும் வேதனை...

கோமா என்று நாம் அழைத்ததைத்தான் இவர்கள் "Brain Death" (மூளை இறந்துவிட்டது) என்று சொல்லி நம்மை ஏமாற்றுகின்றார்கள்.

கோமாவில் இருந்தவர்கள் பலநாட்கள், பல மாதங்கள் ஏன் வருடங்களுக்கு பிறகு கூட உடல்நிலையில் முன்னேற்றம் ஏற்பட்டு உயிர் பிழைத்து நலமாக வாழும் பலரை நாம் பார்த்திருக்கிறோம்.

அப்படி இருக்கும்போது உயிர் வாழ (கோமா நிலையிலிருந்து மீண்டெழ) வாய்ப்புகள் அதிகம் உள்ள அவர்களை அவசர அவசரமாக கொலை செய்ய வேண்டிய நோக்கம் என்ன என்பது
உங்களுக்குப் புரிந்திருக்கும்...

இது ஒரு முழுமையான சாட்சியுடன் கூடிய கொலை என்பதால் இதை செய்பவர்களுக்கு அதிகபட்ச தண்டனையை அரசாங்கம் இவர்களுக்கு வழங்க வேண்டும்.

உலகில் எத்தனையோ விதமான மருத்துவங்கள் இருக்க அந்தந்த துறை சம்பந்தப்பட்டவர்களிடம் எல்லாம் எவ்வித யோசனையும் கேட்காமல் ஆங்கில மருத்துவம் கூறுவதை அப்படியே அரசும் மக்களும் நம்பியதால் இவர்கள் இந்த அளவுக்கு வளர்ந்து விட்டார்கள்.

1947-ல் இந்தியா சுதந்திரமடைந்தபோது நாம் விரட்டியடித்த ஆங்கிலேயர்கள் கூடவே இந்த ஆங்கில மருத்துவத்தையும் விரட்டியிருக்க வேண்டும்...

அப்படி விரட்டாமல் அரசியலில் மட்டும் சுதந்திரம் அடைந்து ஆங்கில மருத்துவத்திற்கு அடிமையானதின் விளைவுதான் இன்று நம்மை உயிரோடு புதைக்கின்றார்கள்...

இந்திய மருத்துவங்களான சித்தா, யுனானி, ஆயுர்வேதா, உடலில் சக்தியை வைத்தே நோயை குணப்படுத்தும் சீன மருத்துவமான அக்குபஞ்சர், ஆகியவை இருக்க, மற்றும் ஆங்கில மருத்துவத்தின்
கொடுமையை படித்து அதில் வெறுப்புற்ற ஜெர்மனி நாட்டைச் சேர்ந்த டாக்டர் ஹானிமன் உலகுக்கு வழங்கிய ஹோமியோ மருத்துவம்"இது போன்ற நல்ல மருத்துவங்கள் எல்லாம் இருக்க
அவற்றை மதிக்காமல் கண்மூடித்தனமாக இவர்களை பின் பற்றியதின் விளைவுதான் இன்று உயிரோடு இருக்கும்போதே கண்களை எடுக்கிறார்கள்...

இந்திய மெடிக்கல் கவுன்சில், தமிழ்நாடு மெடிக்கல் கவுன்சில் என்று பெயரை மாத்திரம் வைத்துக்கொண்டு அதில் ஆங்கில மருத்துவத்தை மட்டும் வைத்துக்கொண்டு அதற்கு அரசாங்கம் சேவகம் செய்வதால் தான் இந்த அவலங்களை, கொடுமைகளை
நாம் அனுபவிக்கின்றோம்.

இந்திய மெடிக்கல் கவுன்சிலில் நமது இந்திய மருத்துவமும் இல்லை...

தமிழ்நாடு மருத்துவ கவுன்சிலில் நம் சித்த மருத்தவமும் இல்லை...

மக்களே சிந்தியுங்கள்!...

நம் வரிப்பணத்தில் அந்நிய நாட்டு மருத்துவத்துக்கு ஆதரவு தெரிவிக்கும் அநியாயத்தையும், இதனை அங்கீகரிக்கும் அரசையும்
புரிந்து கொள்ளுங்கள்...

திறமையும் அறிவும் உள்ள நம்நாட்டு மருத்துவங்களை படித்த பல இலட்சக்கணக்கான டாக்டர்கள் வெளியில் தெரியமல் போனதற்கும் அவர்கள் திறமை பயன்படாமல் அமுங்கி போனதற்கும் மக்களாகிய நாமும், அரசும் தான் காரணம்.

இந்த மருத்துவங்களுக்காக தேவையான உதவிகளை அரசு செய்திருக்குமானால் விண்ணை முட்டும் வளர்ச்சியை நம் மருத்தும் பெற்றிருக்கும்.

சமீபத்தில் 198 ஆம்புலன்சுகளை வழங்கிய நம் தமிழக அரசு ஒரே ஒரு ஆம்புலன்சை கூட இந்திய மருத்துவங்களுக்காக வழங்கவில்லை என்பதை நீங்கள் அறிவீர்கள்.

மக்களாகிய நாம் விழிப்படைய வேண்டும்!...

அரசும் இதனை உணர்ந்து செயல்பட வேண்டும்!...

மேலும் உறுப்புகள் தானம் என்ற பெயரில் கொலைகள் நடக்காமல் சட்டம் இயற்றி அரசாங்கம் இதை உடனடியாக தடுக்க வேண்டும்.

ஆங்கில மருத்துவ கொடுமைகளிலிருந்து விடுதலை பெற நாம் தெளிவு பெற வேண்டும். அதற்காக முழு முயற்சியுடன் பாடுபட வேண்டும்.

நமது வாழ்க்கை முறையில் சில விஷயங்களை ஒழுங்குப்படுத்துவது, புரிந்து கொள்ளுவதன் மூலமாக மட்டுமே ஆரோக்யமாக வாழ்வது சாத்தியமாகும்...

அதாவது,

"கழிவின் தேக்கம் வியாதி..."

"கழிவின் வெளியேற்றம் குணம்..."

"Accumulation of waste / toxins in our body is
disease
Elimination of waste / toxins is cure"

இதை மக்களுக்கு புரியவைப்பதே எனது நோக்கம்.

"எப்பொருள் யார்யார்வாய்க் கேட்பினும் அப்பொருள்
மெய்ப்பொருள் காண்ப தறிவு" -திருக்குறள்.

அதாவது,
"எந்தவொரு பொருள் குறித்து எவர் எதைச் சொன்னாலும், அதை அப்படியே நம்பி ஏற்றுக் கொள்ளாமல் உண்மை எது என்பதை ஆராய்ந்து தெளிவதுதான் அறிவுடைமையாகும்."

நவீன மருத்துவம் எனப்படும் ஆங்கில மருத்துவத்தால் எந்த நாள்பட்ட நோயையும் குணப்படுத்தமுடியாது. நோயின் குறிகளைச் சிறிது காலம் மறைத்து வைக்க மட்டுமே முடியும்...

மருந்துகள் மற்றும் அழகு சாதனங்கள் சட்டம் (Drugs and Cosmetic Act) 1995-ல் திருத்தப்பட்டு ஷெட்யூல்-து 51 என்ற பிரிவின் கீழ் ஆங்கில வைத்தியத்தால் 51 வகை வியாதிகளை குணப்படுத்த முடியாது என்று இந்தியச்சட்டம் தெளிவாக எச்சரிக்கிறது.

அவ்வாறு ஷெட்யூல்-து 51ல் கூறப்பட்டுள்ள நோய்களுக்கு ஆங்கில் மருத்துவம் வைத்தியம் பார்க்க கூடாது.

ஷெட்யூல்-து 51ல் வரையறுக்கப்பட்டுள்ள 51 நோய்களின் பட்டியல்
பின்வருமாறு:-

1. எய்ட்ஸ் (AIDS)
2. நெஞ்சுவலி (Angina)
3. குடல் வால் நோய் (Appendicitis)
4. இருதய இரத்தக் குழாய் அடைப்பு (Block in Blood Vessels)
5. கண்பார்வை அற்ற நிலை (Blindness)
6. தலை வழுக்கை (Baldness)
7. ஆஸ்துமா (Asthma)
8. உடலில் தோன்றும் கட்டிகள் முதலாக, புற்றுநோய்
வரை (Cancer)
9. கண்புரை (Cataract)
10. தலை முடி வளர, நரையை அகற்ற (To Growth of Hair, To removing Grey Hair)
11. கருவில் வளரும் குழந்தையை ஆண் அல்லது பெண்ணாக மாற்றுவோம் என்று கூறுவது.
12. பிறவிக் கோளாறு
13. காது கேளாமை (Deafness)
14. நீரிழிவு நோய் (Diabetic Mellitus)
15. கர்ப்பப்பை சம்பந்தமான அனைத்து கோளாறுகள்.
16. வலிப்பு நோய் - மனநோய் (Eplilipsy)
17. மூளைக்காய்ச்சல்
18. உடல் நிறம் கருப்பாக இருந்தால் சிவப்பாக மாற்றுதல்.
19. மார்பக வளர்ச்சிக்கு
20. புரையோடிய புண் (Gagerence)
21. மரபணு நோய்கள் (Genetic Diseases)
22. க்ளாகோமா எனும் கண்நோய் (Glaucoma)
23. கழுத்து வீக்கம் (தைராய்டு) (Thyrodism)
24. ஹெர்னியா (Hernia)
25. உயர் மற்றும் குறைந்த இரத்த அழுத்தம் (BP)
26. விரைவீக்கம் (Orchitis)
27. பைத்தியம் (Mental Disorder)
28. ஞாபக மறதி, ஞாபக சக்தியை அபிவிருத்தி
செய்ய (To improve Memory Power)
29. குழந்தையின் உயரத்தைக் கூட்ட (To Increase Height)
30. சாதாரணமாக ஏற்படும் கண்பார்வைக் குறைபாடு கிட்டப்பார்வை, தூரப்பார்வை.
31. ஆண் உறுப்பு வளர்ச்சி, வீரியம்
32. பற்களை உறுதிப்படுத்த
33. மஞ்சள் காமாலை, கல்லீரல் மர்ம நோய் (Hepatitis)
34. இரத்தப் புற்றுநோய் (Leukemia)
35. வெண்குஷ்டம் (Leocoderma)
36. உடலுறவில் வீரியம் அதிகப்படுத்தல்
37. மூளை வளர்ச்சிக் குறைவு
38. மாரடைப்பு நோய் (Heart Attack)
39. குண்டான உடம்பு மெலிய (Obesity)
40. பக்கவாதம் (Paralysis)
41. உடல் நடுக்கம் (Parkinson)
42. மூலநோய் மற்றும் பவுத்திரம் (Piles)
43. வாலிப சக்தியை மீட்க
44. குறைந்த (இள) வயதில் முதிர்ச்சியடைந்த தோற்றம்
45. குறைந்த (இள) வயதில் தலைநரை (Greying Hair)
46. ரூமாட்டிக் இதய நோய் (Rheumatism)
47. ஆண்மைக்குறைவு, விரைவில் ஸ்கலிதம் (Impotance)
48. கழுத்துவலி மற்றும் முதுகுத்தண்டில் ஏற்படும்
அனைத்து வலிகளும் (Spondylosis)
49. திக்குவாய் (Stammering)
50. சிறுநீரக கற்கள், பித்தப்பை கற்கள், நிறுநீர்ப்பை கற்கள் (Kidney Stone, Gall Stone).
51. காலில் இரத்த நாளங்கள் வீக்கம் அடைதல் (Varicose Vein).

மேற்கண்ட நோய்களுக்கு ஆங்கில மருத்துவத்தில் மருந்தும் கிடையாது, மருத்துவமும் பார்க்கக்கூடாது என இந்தியச்சட்டம் சொல்கிறது.

மக்களே!

இனிமேலாவது விழிப்படையுங்கள்!!!

உங்களையும் உங்கள் சந்ததிகளையும்
காப்பாற்றிக்கொள்ளுங்கள்!...

இந்த தகவல்கள் உண்மை என உணர்ந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்…

கேள்வி -பதில்

ஐயா , வலது கண் அடிக்கடி துடிக்கிறது...கண் மறுத்துவரை பார்க்க வேண்டுமா ?என்ன செய்ய ?

நன்றாக துங்குங்கள் சரியாக போய்விடும். மேலும்உ, ங்கள் கண்களை அடிக்கடி கழுவுங்கள். ஓய்வு கிடைக்கும்போதெல்லாம் அமைதியான இடத்தில், தியானம் செய்வது போல் அமர்ந்து 10 நிமிடம் கண்சிமிட்டுங்கள்.

கண்துடிப்பிற்கு கீழ்க்கண்டவை காரணங்கள்.

1. அடக்கப்பட்ட அழுத்தம்
2. Stress
3. Tiredness
4  Eyestrain
5. Excess Caffeine
6. Alcohol
7. Dry eyes
8. Nutritional imbalances
8. Allergies

In India mostly nutrient imbalance, especially Vitamins and Minerals, might be a major reason.