Thursday, April 7, 2016

யோகா பயிலும் பொழுது.....

             யோகா பயிலும் பொழது
கடைப்பிடிக்க வேண்டிய வழிமுறைகள்!

*5 வயது முதல் ஆயுள்வரை ஆண்,பெண், மூன்றாம் பாலினத்தை சேர்ந்த மனிதர்கள் அனைவரும்  யோகா கற்கலாம்.!

*யோகா பயிலும் போது அனைவரும் உள்ளாடை அணிந்து கொள்வதோடு உடலை வதைக்காத எளிய ஆடைகளை அணிந்துகொள்ள வேண்டும்.!

*நோய்களை குணப்படுத்த யோகா பயில்பவர்கள் ஒரே விதமான நோய்க்கான தனி வகுப்பாக  பயில்வது சிறந்த பலனைத் தரும்.!

*சாப்பிடுவதற்கு 15 நிமிடங்களுக்கு முன்பும் சாப்பிட்ட பிறகு என்றால் மூன்று மணிநேரத்திற்கு பின் யோகா பயிலலாம்!

*இதயநோயாளிகள், மூன்று மாதத்திற்கு உட்பட்ட கர்ப்பிணி பெண்கள், படுத்த படுக்கையில் உள்ள நோயாளிகள், மாதவிடுமுறை உள்ள பெண்கள்
எளிய மூச்சுப்பயிற்சி தியானம், சாந்தியாசனம் செய்யலாம்.
கடினமானப் பயிற்சிகளை செய்யக்கூடாது.!

*பத்மாசனம், சிரசாசனம் போன்ற எல்லா ஆசனங்களையும்  5 வயதுமுதல் 40 வயதுவரை உள்ள
அனைவரும் புதிதாக கற்றுக்கொள்ளலாம்.!

*நாற்பது வயதிற்கு மேல் கடினமான யோகாசனமான சிரசாசனம், விருச்சிகாசனம் , யோகநித்திரை போன்ற ஆசனங்களை புதிதாக கற்றுக் கொள்ளக் கூடாது.!

*ஏற்கனவே தொடர்ந்து உயர்நிலை ஆசனங்களை பயில்பவர்கள்
ஆயுள்வரை சிரசாசனம்  பூரண சக்ராசனம் போன்ற  ஆசனங்களை செய்யலாம். ஆனால், அப்படி பயிலும்போது முதுகுவலி கழுத்துவலி போன்ற உபாதைகள் தோன்றினால்  படிப்படியாக  ஆசனங்களை எளிய ஆசனங்களாக மாற்றிக் கொள்ள வேண்டும்.!

* நாள்பட்ட நோய்களுக்கு எந்த வகையான மருத்துவம் செய்து கொண்டிருப்பவர்களும் கூடவே தினமும் ஒரு மணி நேரம் வரை எளிமையான யோகாப் பயிற்சிகளையும் தொடர்ந்து செய்யலாம்.!

*காய்ச்சல், தலைவலி, உடல்வலி போன்றவை இருக்கும் போது யோகா பயிலக் கூடாது.!

*எந்த மருந்துகளையும் சாப்பிட்டு விட்டு யோகா பயிலக்கூடாது. யோகா முடிந்து சிறிது நேரத்தில் மருந்துகளை சாப்பிடலாம். பிறகு ஒரு மணிநேரம் கழித்தே உணவருந்த வேண்டும். அல்லது யோகா முடித்து சாப்பிட்டு விட்டு பிறகு மாத்திரை மருந்துகளை  எடுத்துக் கொள்ளலாம்.!

*கபாலபதி, சவனக்கிரியா, வாமணதௌதி, நேதி, அக்னிசாரா போன்ற  உள் சுத்திகரிப்பு பயிற்சியான கிரியை பயிற்சிகளை மாதம் இரண்டு முதல் நான்கு முறைகள் மட்டும் செய்தால் போதுமானது. தினமும் பயிலக்கூடாது.!

* பொதுவாக கிரியை செய்யும் நாளில் முதலில் கிரியை பிறகு ஆசனம், பிறகு பிராணாயாமம், பிறகு தியானம் என்று செய்ய வேண்டும்.!

ஆனால்  இதை நமது அனுபவத்தின் அடிப்படையில் சற்று மாற்றிக் கொள்ளலாம்.!

*உடற்பயிற்சி யோகாவை சேர்த்து பயில்வதாய் இருந்தால் முதலில் உடல்பயிற்சி பிறகு யோகாசனம், பிராணாயாமம் செய்யலாம்.!

*உடற்பயிற்சி யோகாவை தனித்தனியாக செய்வதாய் இருந்தால்  காலையில் யோகாவையும் மாலையில் உடற்பயிற்சியும் செய்யலாம்.!

*யோகா பயில்பவர்கள் முடிந்தவரை டீ, காப்பி,  போதை வஸ்துக்கள் அசைவ உணவு, செயற்கை இரசாயண உணவுகளை  தவிர்த்துக் கொள்வதோடு நேர்மையான வாழ்க்கை முறையை அமைத்துக் கொள்ள வேண்டும்.!

*கிருத்தவர்கள், இஸ்லாமியர்கள் யோகா செய்யக் கூடாது என்பதும்
அதில் மந்திரம் உள்ளது, யோகா ஒரு வழிபாட்டு  முறை என்று சொல்வதும் முட்டாள்தனமானது. ஏனெனில், யோகாவை மந்திரம் இல்லாமலும் செய்யலாம், வழிபாடாகவும் செய்யலாம், உடல் மனப்பயிற்சி ஆகவும் செய்யலாம்!
இங்கு எந்தக் கட்டாயமும் இல்லை.
ஒருவேளை நாம் செல்லும் வகுப்பில் தினமும் மந்திரம், ஜெபம் செய்யும் வழக்கமிருந்தாலும் பிடிக்காதவர்கள் அவரவர் மத கோட்பாட்டின் படி பிராத்தனை செய்து பயிற்சியை ஆரம்பிக்கலாம்.!

ஆலய வழிபாடு செய்வது, இஸ்லாமிய  தொழுகை, சர்ச் பிராத்தனை என்று எதற்குமேயோகாப் பயிற்சி போட்டி இல்லை.!

யோகா என்பது ஆதியில்  இந்திய முனிவர்கள் கண்டறிந்த இயற்கை வாழ்வியல் மருத்துவ முறை. யோகாவில் உள்ள ஒரு ஆசனத்தையே பலருக்கும் தகுந்தாற் போல் பல வழிமுறையில் கற்பிக்க முடியும்.!

மேற்கண்ட வழிமுறைகளை அனைத் தையும் முடிந்தவரை கடைப்பிடித்து என்றும் ஆரோக்கிய மாகவும்  இளமை யாகவும் நிறைநிலை பெற்றும் வாழ் வோம்.!

amyogatrust.blogspot.com
mobile:9629368389

நலம் பெருகட்டும் …

மண்குளியல்

மண்குளியல் மகத்துவம்

நல்ல சுத்தமான செம்மண் அல்லது கறையான் புற்றை சேகரித்து
அதை நன்றாக சலித்துக் கொண்டு அதோடு வெட்டிவேர், விலாமிச்சுவேர், சந்தனப்பட்டை ,ரோஜாப்பூ , கஸ்தூரி மஞ்சள் போன்றவற்றின் பொடியையும் சிறிது சேர்த்து நீர்விட்டு நன்றாக குழைத்து உடல் முழுவதும் பூசிவிட்டு ஒரு மணிநேரம் வரை அப்படியே இளம் வெயிலில் படுக்க வேண்டும். மண்காயகாய மீண்டும் கொஞ்சம் பூசிக் கொள்ளலாம். ஒரு மணி நேரத்திற்கு பிறகு மூலிகை குளியல் பொடியை தேய்த்து குளித்துக் கொள்ளலாம்.!

மண்குளியல் பலன்கள்.!

*தோல் நோய்களை குணப்படுத்தும்

*உடலுக்கு இளமையான தோற்றத்தை தரும்

*சுவாசக் கோளாறுகளை சீராக்கும்

*மூட்டுவலி, இடுப்புவலி, தண்டுவட வலிகளைப் போக்கும்

*வியர்வை சுரப்பிகளின் ஆற்றலை அதிகரிக்கும்

*உள்ளுறுப்புகளின் செயல் திறனை அதிகரிக்கும்

*கை, கால் எரிச்சல், கீல்வதம், நரம்புமண்டல கோளாறுகளை
கட்டுப்படுத்தும்.!

*தாது உற்பத்தி அதிகரிக்கும்

*கர்பப்பை, சிறுநீரகத்தில் உள்ள சிறிய கட்டிகளை கரைக்கும்

*பொதுவாக கறையான் புற்றில் கரையானின் உமிழ்நீர் கலந்துள்ளதால்

அது தோல்புற்று நோயை குணப்படுத்துவதோடு தோலின் நிறத்தை மேம்படுத்தவும் மென்மையாக வைத்துக் கொள்ளவும் உதவுவதாக
இயற்கை தோல் நோய் ஆய்வாளர்கள் கூறுகிறார்கள்

*மழலையை உற்பத்தி செய்யும் உயிரணுக்களில் இருப்பதைப் போலவே மண்ணிலும் பல்லாயிரக்கணக்க நன்மை செய்யும் செல்கள் நிறைந்துள்ளது.!

மாதம் ஒருமுறை அனைவரும் மண்குளியல் செய்யலாம்.!
நோய்தன்மை நீங்க  விரும்புபவர்கள் வாரத்திற்கு மூன்று நாட்கள் தொடர்ந்து மண்குளியல் செய்யலாம்.!
கடினமான  சுவாச, தோல் அலர்ஜி இருப்பவர்கள் மட்டும்   முதலில் உடலின் ஒரு பகுதியில் தேய்த்து பார்த்துவிட்டு உடலுக்கு ஒத்துக் கொண்டால்  பிறகு உடலெல்லாம் பூசிக் கொள்ளலாம்.!

மண்ணின் மகத்துவம் உணர்ந்து அனைவரும் மண்ணறைக்கு
போகும் முன்னே ஒரு முறையாவது மண்குளியல் செய்வது மகத்துவமானது.!

மண்குளியல் உள்ளிட்ட இயற்கை வாழ்வியல் பயிற்சி முகாம் ஏப்ரல் 29 முதல் மே 1 ஆம் தேதி வரை நாகர்கோவிலில் நடைபெற உள்ளது ஆர்வமுள்ளவர்கள் கலந்து கொள்ளலாம்.!

தொடர்பிற்கு:9629368389
நலம் பெருகட்டும் …

amyogatrust.blogspot.com

குளியல் !

உண்மையில் நம்மில் பல பேருக்கு எதற்காக குளிக்கிறோம் என்றே தெரியவில்லை.

அழுக்கு போகவா.....! நிச்சயம் கிடையாது.....!

மாத மளிகை பட்டியலில் சோப்பு டப்பாவை வாங்கி அடுக்கி வைத்து கொள்கிறோம்.

சோப்பு எதற்காக கண்டுபிடிக்கப்பட்டது தெரியுமா... கப்பலில் இயந்திரத்தோடு இயந்திரமாக வேலை செய்வோருக்கு உடலில் திட்டு திட்டாக ஆயில் படிந்துவிடும்.

இந்த கடின எண்ணெய்யை நீக்குவதற்காக சோப்பு பயண்படுத்தினார்கள். கப்பலில் மட்டும் அல்ல எண்ணெய் புழங்கும் மற்ற இடங்களிலும் கூட இது பயன்பட்டது.

சோப்பு போடுவதற்கு நாம் எந்த கப்பலில் வேலை பார்த்தோம். எந்த சேறு, சகதி எண்ணெய்க்குள் புரண்டு எழுந்து வந்தோம்.

வணிக பெருமுதலை கும்பல் சும்மா இருப்பார்களா, ஆயிலில் புரண்டெழுந்து வேலை செய்வோர் மட்டுமே பயண்படுத்தி வந்த இந்த சோப்பை,

எல்லோரும் பயண்படுத்தும் படி பல திட்டம் தீட்டி. கிருமி உருவாக்கி, அதன் மேல் பயம் உருவாக்கி.
நடிகர்களை நடிக்க விட்டு. நம் தலையில் கட்டிவிட்டார்கள்.

இதன் மூலம் என்ன ஆனது..

சோப்பு போட்டு நம் தோல்களின் மேல் இயற்கையாக உருவாகும் மெல்லிய பாதுகாப்பு கொழுப்பு படலத்தை நீக்கி விட்டேம், இப்பொழுது பாதுகாப்பற்ற நிலை உருவாகிறது. இதை திரும்ப சீர் செய்யவே உடல் பெரும்பாடுபடுகிறது.

நமக்கு வாய் முகத்தில் மட்டும் அல்ல தோலின் மேல் இருக்கும் ஒவ்வொறு வியர்வை துவாரங்களும் வாயே. சோப்பை போடுவதன் மூலம் வியர்வை துவாரம் வழியே இரசாயண நச்சு இரத்தத்தில் கலந்து கல்லீரலை பாதிக்கிறது.

சோப்பு போடுவதன் மூலம் தோல் மூலமாக நம் உடல் கிரகிக்கும் பிரபஞ்ச சக்தி தடுக்கப்படுகிறது.

இன்னும் இதன் தீமைகள் பல உண்டு. சொல்லி மாளாது.

நாம் சோப்பு போடுவதற்கு எந்த சேறு, சகதி, எண்ணெய் இயந்திரங்களுக்குள் புரண்டு வருவதில்லை.

சரி பின் எதற்கு தான் குளிக்கிறோம் என்று கேட்கிறீர்களா....?

குளியல் = குளிர்வித்தல்

குளிர்வித்தலோ மருவி குளியல் ஆனது.

மனிதர்களுக்கு உள்ள 75% நோய்களுக்கு காரணம் அதிகப்படியான உடல் வெப்பம்.

இரவு தூங்கி எழும்போது நமது உடலில் வெப்பக் கழிவுகள் நேங்கியிருக்கும்.

காலை எழுந்ததும் இந்த வெப்பகழிவை உடலில் இருந்து நீக்குவதற்காக குளிந்தநீரில் குளிக்கிறோம்.

வெந்நீரில் குளிக்க கூடாது. எண்ணெய் குளியலின் போது மட்டுமே மிதமான வெந்நீர் பயன்படுத்த வேண்டும்.

குளிர்ந்த நீரை அப்படியே மொண்டு தலைக்கு ஊற்றிவிடக்கூடாது. இது முற்றிலும் தவறு.

நீரை முதலில் காலில் ஊற்ற வேண்டும், பின், முழங்கால், இடுப்பு, நெஞ்சு பகுதி, இறுதியாக தலை.

எதற்கு இப்படி. காலில் இருந்து ஊற்றினால் தான் வெப்பம் கீழிருந்து மேல் எழும்பி, விழி மற்றும் காது வழியாக வெளியேறும்.

நேரடியாக தலைக்கு ஊற்றினால் வெப்பம் கீழ் நோக்கி சென்று வெளியில் போக முடியாமல் உள்ளேயே சுழன்று கொண்டிருக்கும்.

இப்பொழுது நம் முன்னோர்களின் குளியல் முறையை கண்முன்னே கொண்டு வாருங்கள்.

குளத்தில் ஒவ்வொறு படியாக இறங்குவார்கள். காலில் இருந்து மேல் நோக்கி நினையும். வெப்பம் கீழ் இருந்து மேல் எழுப்பி இறுதியில் தலை முங்கும் போது கண், காது வழியே வெப்பக் கழிவு வெளியேறிவிடும்.

இறங்கும் முன் ஒன்று செய்வார்கள் கவனித்ததுண்டா. உச்சந்தலைக்கு சிறிது தண்ணீர் தீர்த்தம் போல் தெளித்துவிட்டு இறங்குவார்கள்.

இது எதற்கு... உச்சந்தலைக்கு அதிக சூடு ஏறக்கூடாது. சிரசு எப்போதும் குளிர்ச்சியாக இருக்க வோண்டும்.

எனவே உச்சியில் சிறிது நினைத்து விட்டால் குளத்தில் இறங்கும் போது கீழ் இருந்து மோலாக எழும் வெப்பம் சிரசை தாக்காமல் காது வழியாக வெளியேறிவிடுகிறது.

வியக்கவைக்கிறதா... !  நம் முன்னோர்களின் ஒவ்வொறு செயலுக்கும் ஆயிரம் அர்த்தங்கள் உண்டு.

குளித்துவிட்டு சிறிது நேரம் ஈரத் துணியோடு இருப்பது மிக நல்லது.

அதே ஈரத்துணியோடு நாம் அரச மரத்தை சுற்றி வந்தால் 100% சத்தமான பிராணவாயுவை நமது உடல் தோல் மூலமாக கிரகித்துக்கொள்ளும்.

பித்தம் நீங்கி பிராணவாயு அதிகரித்தால் அனைத்து நோய்களும் ஓடிவிடும்.

புத்தி பேதலிப்பு கூட சரியாகும்.

குளியலில் இத்தனை விடையங்கள் இருக்கும் போது. குளியல் அறை என்றாலே அதில் ஒரு ஹீட்டர் வேர, இப்படி சுடு தண்ணீரில் சோப்பும், ஸ்சேம்பையும் போட்டு குளிச்சிட்டு வந்தா நாம நோயாளியா இல்லாம வேற எப்படி இருப்போம்.

குளிக்க மிக நல்ல நேரம் - சூரிய உதயத்திற்கு முன்

குளிக்க மிகச் சிறந்த நீர் - பச்சை தண்ணீர்.

குளித்தல் = குளிர்வித்தல்

குளியல் அழுக்கை நீக்க அல்ல

உடலை குளிர்விக்க.

இறைவன் கொடுத்த இந்த உடல் மீது உங்களுக்கு அக்கறை இருந்தால் மாற்றிக்கொள்ளுங்கள். சோப்பைப் போட்டு தமக்குத்தாமே தீங்கிழைத்துக் கொள்ளாதீர்கள்.!

நலம் பெருகட்டும் …

அரிய வாய்ப்பு - பயன்படுத்திக் கொள்வீர்!!

யோகா & இயற்கை
வாழ்வியல் பயிற்சி

அனைத்து விதமான  ஆரோக்கிய குறைபாடு உடையவர்கள்   இயற்கை, யோகா, ஆரோக்கிய வழிமுறைகளை தெரிந்து கொள்ள ஆர்வமுள்ளவர்கள் கலந்து கொள்ளலாம்.!

*முக்கியமான யோகா நுட்பங்கள்

*இயற்கை வழியில் கபத்தை சுத்திகரித்தல், பெருங்குடலை சுத்திகரித்தல்.!

*வாழையிலை குளியல்

*மண்குளியல்

*எண்ணையை குளியல்

*முக்கிய வர்மபுள்ளிகள்

*மூன்றுவேளையும் சமைக்காத இயற்கையில் விளைந்த பழம் காய்கறி மற்றும் தானிய உணவுகள்.!

*இயற்கையான  சூழலில்
தங்கும் வசதி.!

நாள்:ஏப் 29,30, மே 1
வெள்ளி,சனி, ஞாயிறு.!

இடம்:

அன்னை ஆஸ்ரமம்
சுப்ரமணியபுரம்
ஆரல்வாய்மொழி
கன்னியாகுமரி மாவட்டம்

தொடர்பிற்கு:9629368389

amyogatrust.blogspot.com

இந்த வகுப்பில் கலந்து கொள்வதன் மூலம் எத்தகைய ஆரோக்கிய குறைபாடு இருப்பவர்களும் 50% குணமடையலாம்.! நமது வழிமுறைகளை ஆறுமாதங்கள்
தொடர்ந்து கடைப்பிடித்தால் பூரண ஆரோக்கியத்தை மீட்டெடுக்கலாம்.!

சக்கரை, இரத்த அழுத்தம், உடல் பருமன்  பரிசோதனை செய்யப்படும்.

முகாமில் நீங்கள் கொண்டுவரும் எந்தவித இரசாயண மருந்துகளுக்கும் அனுமதிஇல்லை.!

எச்சரிக்கை!

எச்சரிக்கை! மறைமுகமாக நடக்கிறது மூன்றாம் உலகப்போர்!

காலையில் நீங்கள் பல் துலக்குவதில் இருந்து இரவு உண்ணும் உணவு வரை அனைத்துலும் மறைமுகமாக பல காலமாக ஏமார்ந்து வருகிறீர்கள் என்பது உங்களுக்கு தெரியுமா? எங்கோ செய்தியில் படித்து கூறியது போல இருந்த புற்றுநோய் இன்று அக்கம், பக்கத்து வீடுகளை வரை நெருங்கி விட்டது.

இன்று நாம் உண்டு வரும் பெரும்பாலான காய்கறி, பழங்கள் மரபணு மாற்றப்பட்டவை. பணத்திற்காக, கொள்ளை லாபத்திற்காக நச்சு, இரசாயனப் பொருள் கலப்புள்ள விதைகள் விற்கப்படுகின்றன.
விவசாயத்தின் தோழனான தேனீக்கள் கோடிக்கணக்கில் இறப்பது ஏன்? இந்த மரபணு மாற்றப்பட்ட விதைகள் தான். மரபணு மாற்றப்பட்ட விதைகளால் விளைந்த உணவுகளால் தேனீக்கள் அதிகளவில் இறக்கின்றன. மேலும் இவை தான் மனிதர்கள் மத்தியில் புற்றுநோய் எண்ணிக்கை அதிகரிப்பதற்கும் முக்கிய காரணியாக இருக்கிறது.

சரியாக ஒவ்வொரு முறையும் உலகநாடுகள் அவரவர் ஆண்டு பட்ஜெட், துறை சார்ந்த நிதி ஒதுக்கும் தருவாயில் ஏதேனும் ஒரு புதிய வைரஸ் சார்ந்த நோய்கள் பரவுவது / அதிகரிப்பது ஏன்?

முன்பெல்லாம் நோய்களுக்கு மருந்துகள் கண்டுபிடிக்கப்பட்டன. ஆனால், இன்று நோயை கண்டுபிடித்து வளரும் மற்றும் ஏழை நாடுகளில் அதை பரவ செய்து மருத்துவ உலகம் பணம் சம்பாதித்து வருகிறது. உண்மையில் கண்ணுக்கு தெரியாமல் நடந்துக் கொண்டிருக்கும் மூன்றாம் உலகப்போர் இது தான்.

எங்கோ ஏதோ ஊரில், நண்பருக்கு தெரிந்தவரின் உறவினர் எவருக்கோ புற்றுநோய் என்று கேள்விப்பட்டு வந்தோம். ஆனால் இன்று? நமக்கே நேரடியாக தெரிந்தவர், நண்பர், ஏன் நம் வீட்டு நபருக்கே கூட புற்றுநோய் இருக்கிறது என்பது மிக சாதாரணமாக மாறி இருப்பதற்கு என்ன காரணம்?

பதப்படுத்தப்பட்ட உணவுகள், பூச்சி மருந்து அடிக்கப்பட்ட காய்கறி பழங்கள், தீய இரசாயனங்கள் கலப்பு செய்யப்பட்ட அழகு சாதன பொருட்கள் என நமக்கே தெரியாமல், நாம் பயன்படுத்தி வரும் இவற்றால் நாள்பட உடலில் புற்றுநோய் செல்களும், கட்டிகளும் உண்டாகின்றன.


20 வருடங்கள் முன்பு வரை சர்க்கரை நோய் என்பது பரம்பரை நோய், ஆனால் இன்று? பரம்பரையில் அனைவருக்கும் இருக்கும் நோயாக மாறிவிட்டது.

இதற்கு காரணம் சோடா பானங்களும், வெள்ளை சர்க்கரை பயன்பாடு, உணவுகளில் கலக்கப்படும் செயற்கை இனிப்பூட்டிகள் தான். நாம் அனைவரும் அறிந்தது தான் இது. ஆனால், பிறகு ஏன் இவை எல்லாம் முற்றிலுமாக தடை செய்யப்படவில்லை?

பாட்டி வைத்தியம், சித்த வைத்தியம் என நமது வீட்டு சமையல் பொருள்கள் மற்றும் இயற்கை தாவர மூலிகைகளை மருந்தாக உட்கொண்டு வந்த வரை நமது உடல் ஆரோக்கியமாக தான் இருந்து வந்தது. ஆனால், இன்று?

ஆரம்பம் முதலே கரியும், உப்பையும் வைத்து தான் பல் துலக்கி வந்தோம். திடீரென பற்பசை பயன்படுத்துங்கள் என வெள்ளையாக ஒன்றை காட்டியவுடன் அதற்கு மாறினோம். பற்கள் பலவீனம் அடைந்தன, உடனே அதற்கென தனி ஸ்பெசல் பற்பசை. ஒரு கம்பெனி பலவகை பற்பசை விற்று பெரும் லாபம் அடைகிறது. நாம் பல் இழித்துக் கொண்டு நிற்கிறோம்.

இதற்கான முடிவு அரசாங்கத்தின் கையில் இல்லை. நமது கையில் தான் இருக்கிறது. நமக்கு இவ்வளவு கேடு விளைவிக்கும் பொருட்களை இனியும் வாங்கி பயன்படுத்த தான் போகிறோமா? அல்லது இனியாவது நமது உடலுக்கும், ஆரோக்கியத்திற்கும் எது நல்லது என அறிந்து செயலப்பட போகிறோமா?
நாம் அனுபவித்து விட்டோம். இதை உங்களது குழந்தைகளுக்கும் பரிசளித்து விடாதீர்கள்.!

Wednesday, April 6, 2016

வாழைத்தண்டு

அல்சரைத் தடுக்கும் வாழைத்தண்டு !

வைட்டமின் ஏ, பி6, சி, ஃபோலேட்ஸ், நியாசின் உள்ளன.

சிறுநீரகம், பித்தப்பை ஆகியவற்றில் உள்ள கற்களைக் கரைக்கும்.

ரத்தசோகை, கரோனரி இதய நோய், நரம்பு மண்டலப் பிரச்னை உள்ளவர்களுக்கு ஏற்றது.

ரத்த அழுத்தம், அதிகப்படியான இதயத் துடிப்பு கட்டுக்குள் வரும்.

நார்ச்சத்து உள்ளதால், கொழுப்பின் அளவைக் குறைக்கும்.

வைட்டமின் ஏ இருப்பதால், கண்களுக்கு நல்லது.

இதில் உள்ள மக்னீசியம், எலும்புகளை வலிமையாக்கும்.

கர்ப்பிணிகள் வாரம் ஒருமுறை உண்ணலாம்.

உடலில் உள்ள தொற்றுக்கள், கழிவுகள் வெளியேறும்.


உடல் எடை குறைக்க நினைப்போருக்கு சிறந்த தீர்வுnu

பைட்டோகெமிக்கல்ஸ் சத்துக்கள் உள்ளதால், அல்சரைத் தடுக்கும்.

Tuesday, April 5, 2016

பத்மாசனம்

 ஆசனம் செய்யும் முறைகள்
இது சமதரையில் அமரும் முறையாகும். யோகாசனத்தின் ஏனைய பயிற்சிகளிற் சிலவான பிராணயாமம், தியானம், நாடிசுத்தி போன்றவற்றை பத்மாசனத்தில் அமர்ந்தே செய்ய வேண்டும். பத்மாசனம் செய்ய தனியாக நேரம் ஒதுக்க வேண்டியதில்லை. சாதாரணமாக படித்துக் கொண்டிருக்கும் நேரங்களிலும் கூட பத்மாசனம் போடலாம். ஆனால் சாப்பிடும் போது பத்மாசனத்தில் அமரக் கூடாது.


செய்முறை

1. தரை / தரை விரிப்பின் மேல் உட்காரவும். கால்களை நீட்டிக் கொள்ளவும்.

2. முதுகை நிமிர்த்தி நேராக வைக்கவும். கைகளை உடலின் பக்கவாட்டில் வைத்துக் கொள்ளவும். நார்மலாக சுவாசிக்கவும்.

3. வலது காலை தூக்கி இடது தொடையில் வைக்கவும். அதே போல இடது காலை மடித்து தூக்கி வலது தொடையில் வைக்கவும்.

4. இரண்டு குதிகால்களும் அடிவயிற்றை தொட்டுக் கொண்டு இருக்க வேண்டும்.

5. இடது கையை நீட்டி வலது கால் முட்டியின் மீது வைக்கவும். வலது கையை வலது கால் முட்டியில் வைக்கவும்.

6. கை விரல்கள் யோக முத்திரைகளில் ஒன்றான “ஞான (சின்) முத்திரை”யில் வைத்துக் கொள்ளவும். அதாவது கை கட்டை விரலால் ஆட்காட்டி விரலை மிதமான அழுத்தத்தில் பிடித்துக் கொண்டிருக்க வேண்டும். இதர விரல்கள் தரையை நோக்கியிருக்கும். இயல்பாக சுவாசிக்கவும்.

7. ஆரம்பத்தில் இந்த நிலையில் 1 லிருந்து 3 நிமிடங்கள் இருக்கலாம். பிறகு நேரத்தை அதிகரித்துக் கொள்ளலாம்.


<நன்றாக பழகிய பின் இந்த நிலையிலேயே தியானமும் பிராணாயாமமும் கூட செய்யலாம்>
8. கண்களை மூடி அமைதியாக வைத்துக் கொள்ளவும்.

9.கண்களை திறந்து, கை விரல்களை தளர்த்தி ஒவ்வொரு காலாக  தரையில் வைத்து ஆரம்ப  நிலைக்கு திரும்பவும்.!

பலன்கள்

1. ஜபம், தியானம், பிராணாயமம் செய்ய உகந்த ஆசனம்.

2. ருமாடிக் வலிகளை குறைக்கும். விறைத்து விடும் கால்கள், முழங்கால்களில் ரத்த ஒட்டத்தை அதிகப்படுத்தி சரிசெய்யும்.

3. அடிவயிற்று பிரதேசத்துக்கு ரத்த ஒட்டத்தை அதிகரிக்கும்.

4. நரம்புகளுக்கு நல்லது.

5. மனோசக்தி கூடுகிறது.
எச்சரிக்கை

1. பத்மாசனம் செய்யும் போது குனியக்கூடாது.

2. தொடக்கத்தில் முழங்கால் வலி ஏற்படலாம். பழகப் பழக சரியாகி விடும். ஆனால் வலி வந்தால் உடனே ஆசனத்தை கலைத்து விட வேண்டும். வலுக்கட்டாயமாக முரட்டுத்தனமாக ஆசனத்தை செய்யக் கூடாது. ஆசனத்தை நிறுத்தி, இளைப்பாறவும்.

பலன்கள்
பத்மாசனம் செய்வதால் கிடைக்கும் பலன்களை இனி பார்க்கலாம்.

1. அடிவயிற்று பகுதிக்கு ரத்த ஓட்டம் அதிகமாக கிடைக்கிறது.

2. நன்றாக பசி எடுக்கும்.

3. வாத நோய்கள் பறந்தோடும்.

4. நுரையீரல்களின் இயக்கம் துரிதப்படுத்தப்படுவதால் நுரையீரல் சம்பந்தமான வியாதிகள் எட்டி பார்க்காது.

5. முழங்கால் மூட்டு நோய்கள் போய் சுறுசுறுப்பு வரும்.

6. தொடை, குதி கால்கள் இவற்றின் நரம்புகள் நல்ல வலிமையை அடைய இவ்வாசனமே சிறந்தது.

7. இவை எல்லாவற்றிற்கும் மேலாக மனத்தை ஒருமுகப் படுத்தும் பயிற்சிக்கு இவ்வாசனமே மிக மிக உயர்ந்த தாக யோகிகள் ஒப்புக் கொள்கிறார்கள் என்றால் இதன் அருமை எத்தகையது என்பதை புரிந்து கொள்ளுங்கள்.

தவறான முறை

சிலர் இந்த ஆசனத்தை செய்யும் போது குனிவார்கள். இது தவறு. முதுகும், கைகளும் இயல்பாக இருக்க வேண்டியது அவசியம் ஆகும். தொடைகளின் மேல் குதிகால் நன்றாக அழுந்த வேண்டும். மேலும் 5 முறையாவது மூச்சு உள்செல்வதையும் வெளியேறு வதையும் வெறுமனே கவனித்தபடி இருக்க வேண்டும். இது முக்கியம்.!



நலம் பெருகட்டும் …