Showing posts with label நமது பழக்கம்-Healthy Life style. Show all posts
Showing posts with label நமது பழக்கம்-Healthy Life style. Show all posts

Saturday, April 23, 2016

இயற்கை உணவுத் திட்டம்

காலை 7 முதல் 9 மணிக்குள்

முதல் நாள்

இரண்டு நாட்டு வாழைப்பழம்
ஒரு இளநீர்
50 கிராம் வேர்க்கடலை

இரண்டாம் நாள்

அரைமூடி தேங்காய்.
50 கிராம் அவல்.
25 கிராம் கருப்பட்டி.

மூன்றாம் நாள்

கோதுமை புட்டு,
கருப்பட்டி,
இரண்டு நாட்டு வாழைப்பழம்

நான்காம் நாள்

கொய்யா 4 துண்டு
ஆப்பிள் 2 துண்டு
பப்பாளி 4 துண்டு
ஆரஞ்ச் 5 துண்டு
மாதுளை பாதியளவு
பாதாம் பருப்பு 10 எண்ணிக்கை.

ஐந்தாம் நாள்

முளைகட்டிய கொண்டைக் கடலை 100 gr
பேரிச்சம் பழம் 50 கிராம்
வெள்ளரிக்காய் ஒன்று

ஆறாம் நாள்

அத்திப்பழம் 3
ஆரஞ்ச் 3
முந்திரிப் பருப்பு 10 எண்ணிக்கை

ஏழாம் நாள்

முளைகட்டிய சிறுபயறு 50 கிராம்
உலர் திராட்சை 50 கிராம்
மரவள்ளிக்கிழங்கு 100 கிராம்

மேற்கூறிய உணவுகளை வாரத்தில் உள்ள ஏழுநாட்களும் ஏழு விதமான காலை உணவாக மாற்றிமாற்றி உண்ணலாம்

இவ்வரிசையை மாற்றியோ அல்லது தேவைக்கு ஏற்ப, கூட்டியோ குறைத்தோ உண்ணலாம். இது தவிர,  கம்பு, வரகு சோளம்,கைக்குத்தல் அரிசி போன்றவற்றை இடித்து வைத்து தேங்காய், கருப்பட்டிப் போட்டு பிசைந்தோ காய்ச்சியோ சாப்பிடலாம்!

மதியம் 1 முதல் 2 மணிக்குள்

கேரட் 50 கிராம்
நெல்லிக்காய் 50 கிராம்
பீட்ரூட் 50 கிராம்
பாகற்காய் 50 கிராம்
சக்கரை வள்ளிக் கிழங்கு  50 கிராம்
உருளைக் கிழங்கு 50 கிராம்
வெள்ளரி 100 கிராம்
ஊட்டி மிளகு 1
எலுமிச்சை 1
மிளகுத்தூள் சிறிது இந்துப்பு சிறிது. மேற்கண்ட காய்கறிகளில் நமக்கு பிடித்த  காய்கறிகளில் மூன்று காய்கறிகளை மட்டும் தினமும் வெட்டி துண்டுத்துண்டாக நறுக்கிப் போட்டு அதில் எலுமிச்சையை பிழிந்து மிளகு உப்புத்தூவி  கலந்து உண்ணலாம்.!

மாலை

பட்டாணி,சிறுபயறு,கொண்டைக்கடலை,
கொள்ளு, பெரும்பயறு , வேர்க்கடலை போன்ற தானியங்கள் அல்லது பாதாம் பருப்பு முந்திரி , உலர் திராட்சை போன்றவற்றுடன் வாழைத்தண்டு ஜூஸ் பப்பாளி ஜூஸ்  எலுமிச்சை, கருப்பட்டி கலந்த பானகம் போன்ற ஏதேனும் ஒன்றை சேர்த்துக் கொள்ளலாம்.!

இரவு

7 முதல் 8 மணிக்குள்

மாம்பழம் 2 துண்டு
அன்னாசி 2 துண்டு
சப்போட்டா 1
இதோடு சாத்துக்குடி ஆப்பிள், மாதுளை, நெல்லிக்காய், பாகற்காய் போன்ற ஏதேனும் ஒரு ஜூஸ் பனங்கற்கண்டு/ தேன் கலந்து அருந்தலாம்.!

இந்தக் குறிப்பில் உள்ள அனைத்துவகை பழம் காய்கறிகளை தவிர அந்தந்த சீசனில் கிடைக்கும் தர்பூஸ், நொங்கு,நாவல், ஸ்ட்ராபெரி போன்ற பழங்களையும் சேர்த்துக் கொள்ளலாம்.!
பொதுவாக காலையில் தேங்காயும் பழமும் மதியம் காய்கறிகளும் தானியமும் இரவில் பழமும் ஜூஸ் வகைகளும் சாப்பிடுவது நல்லது.!
தினமும் ஒரே வகை பழம் காய்கறிகளை சாப்பிடுவதை தவிர்க்க வேண்டும்.!

மேற்கண்ட உணவுமுறையை முடிந்தவரை சரியாக பின்பற்றினால் உடல் பருமன்,நீரழிவு,சிறுநீரக செயலிழப்பு, புற்றுநோய், மலச்சிக்கல், இரத்த அழுத்தம், குழந்தையின்மை போன்ற எந்த வகையான கோளாறுகளாய் இருந்தாலும் மூன்றுநாளில் கட்டுப்பட்டு 1 முதல் ஆறு மாதத்தில் குணமடையும்.!

(முற்றிய நிலையில் உள்ள நோயாளிகளையும் அறுவை சிகிட்சை செய்தே ஆக வேண்டிய நிலையில் இருப்பவர்களையும் தவிர)

நலம் பெருகட்டும் …

amyogatrust.blogspot.com
mobile:9629368389

Friday, April 22, 2016

தீய பழக்கங்களிலிருந்து விடுபடுங்கள்....

இயற்கை வழியில் உங்கள் தீய பழக்கங்களிலிருந்து விடுபடுங்கள்

தீய பழக்கம் என்பது தன் உடல், மன ஆரோக்கியத்திற்கு ஒவ்வாத 
நாட்டின் சட்டத்திட்டம் , அறக்கோட் பாட்டிற்கு  எதிரான செயல்களே தீயப்பழக்கம் எனப்படும். ஒருவன் உண்மையில் மனம் விரும்பி  தீய பழக்கங்களை விடவேண்டும், தன்னால் விட முடியும் என்று எண்ணினால் தீய பழக்கத்தை விட முடியும்! அவ்வாறு தன்னால் தீய பழக்கத்தை அவ்வளவு எளிதாக விடமுடியாது என்று எண்ணி னால் அவன் வாழ்நாள் முழுவதும் அவனால் அதிலிருந்து விடுபட முடியாது! 

ஏனெனில்   எப்பொழுது ஒருவன் தன்னால் நன்மை தரும் நல்ல செயல் களைச்  செய்ய முடியாது என்று முடி வெடுக்கிறானோ அந்த வினாடியே அவன் தீமைகளுக்கு அடி பணிந்து விட் டான். தீமைக்கு உண்மையில் இல்லாத கிரீடத்தை அவன் அதற்கு சூட்டிவிட்டான். கண்டிப்பாக அவன் எந்தக் கடவுளை வணங்குபவனாய் இருந்தாலும் அந்த கடவுளையே செருப்பால் அடித்து விட்டான் என்று தான் பொருள்.! 

கடவுள் என்றாலே மனிதன் நன்மையின் பக்கம் நிலை நிற்பதற்காக  ஏற்ப்படுத்தப் பட்டவை தான்!  

நன்மை தரும் செயல்களின் பக்கம்,நல்ல பழக்க வழக்கங்களின்  பக்கம் என்னால் நின்று உயர்வடைய முடியாது.! டாஸ்மாக் அதிகமாக இருக்கிறது குடிப்பேன், வியா பாரத்தில் கொள்ளை லாபம் வருகிறது கொள்ளையடிப்பேன், லஞ்சம் தர தயாராக பலர் இருக்கிறார்கள் லஞ்சம் வாங்குவேன், கல்விக்காக , தங்கள் வருமானத்திற்காக எத்தகைய இழிவையும் தாங்கிக் கொள்ள இந்த சமுதாயம் தயாராக இருக்கிறது நானும் பிறரை இழிவுபடுத்துவேன்.!  என்று கூறு பவன் உண்மையில் தன்னம்பிக்கையும் கடவுள் நம்பிக்கையும்  இல்லாதவன்.! அந்தந்த நேரத்திற்கு சூழலிற்கு தக்கபடி வாழ்பவன் இயற்கையின் எஜமானும் இல்லை கடவுளின் மகனும் இல்லை மாறாக இவனே தீமையின் எஜமான் சாத்தானின் மகன்! 

துரதிஷ்டவசமாக இன்றைக்கு ஆன்மிக வாதிகள் என்று அறியப்படும் மத சாமி யார்கள் பலரும் தீமையை சகித்துக் கொண்டு வாழ், அல்லது சாமர்த்தியமாக அதையே உனக்கு நன்மை செய்யும் விசயமாக மாற்றிக் கொண்டு வாழு என்று உபதேசம் செய்பவர்களாக இருக்கிறார்கள்.! உண்மையில் இந்த ஆன்மீக வாதிகளே தீமைக்கு அடிமையாகி விட்டார்கள். இவர்களே உண்மையான கடவுளை மறுக்கி றார்கள்! கடவுள் தன்மைக்கு எதிராக மக்களை திசைதிருப்பி விட்டுவிட்டனர்.! 

புத்தனோ, இயேசுவோ, முகமதுவோ செய்யாத ரமணரோ, ரமானுஜரோ சொல்லத் துணியாத  தீமையை சகித்துக் கொண்டு நீங்களும் அதோடு இயைந்து வாழுங்கள் என்ற தத்துவத்தை நவீன சாமியர்கள் கூறுவதை கேளுங்கள். உண்மையில் இவர்கள்  கடவுளை உணர்ந்தவர்கள் அல்ல அரசியல்வாதிகளின் ஏஜன்டுகள் என்பதை  புரிந்துகொள்வீர்கள்.! 
இந்த ஏஜன்டுகளின் துணையோடு தான் நமது கனிமவளம் முதல் உடல் நலம் வரை அத்தனையும் கொள்ளையடிக்கப் படுகிறது.! 

எங்கெல்லாம் தப்புகளை சகித்துக் கொண்டு செல்ல கூறப்படுகிறதோ அங்கெல்லாம் நன்மையின் பால் உள்ள நம்பிக்கையை கைவிட்டுவிடு என்ற ஆலோசனை கூறப்படுகிறது.!
ஆதலால்  உங்கள் மீது நம்பிக்கை கொள்ளுங்கள்  கடவுளான உண்மையின் மீது நம்பிக்கை கொள்ளு ங்கள் தொடர்ந்து செயல்படுங்கள் உங் கள் தீய பழக்கங்கள் அத்தனையை விட்டு நீங்களும்  தீய அரசியல் சக்திகளி டமிருந்து நமது தேசமும் கடவுளால் கண்டிப்பாக காப்பாற்றப்படும்.!


நலம் பெருகட்டும் …

amyogatrust.blogspot.com
mobile:9629368389

Wednesday, April 20, 2016

இயற்கை மருத்துவ மேதை பீச்சாம்ப்.!

பீச்சாம்ப்  என்ற இயற்கை மருத்துவரும் லூயி பாயிஸ்டர் என்ற  அலோபதி  மருத்துவரும்  ஒரே காலத்தில் வாழ்ந்தவர்கள்.

நோய்கள் வருவதற்கு நோய்க் கிருமிகளே காரணம்.
அதனால் நோய்க் கிருமிகளை  அழிக்கின்ற ஆண்டிபயோடிக் மருந்தை ஊசி மூலமாக உடலில் செலுத்தினால் கிருமிகள் அழிந்துவிடும். மனிதன் நோயிலிருந்து விடுபடலாம் என்பது லூயி பாயிஸ்டரின் தத்துவம்.!

ஆனால் பீச்சாம்ப்பின் கருத்து என்னவென்றால்  நோய் வருவதற்கு நோய்க்கிருமிகள் முதல் காரணமல்ல. உடலில் உள்ள கழிவுகளின் தேக்கமே நேய்க்கிருமிகளை உற்பத்தி செய்கிறது. அதுவும் கிருமிகள் உருவாவதே  கழிவுகளை சுத்தப்படுத்தத்தான்.  அதனால் கிருமிகளை கொல்வதால் மனிதன் இரண்டு விதத்தில்  பாதிக்கப்படுவான்.
ஒன்று அவன் உடலில் இயற்கையாக நடக்கும் சுத்திகரிப்பு பாதிக்கப்படுகிறது. இரண்டு இப்பொழுது தரப்பட்ட ஆண்டிபயோடிக் குப்பைகளால்  இயற்கையான நோய் எதிர்ப்பு திறனும் குன்றி விடுகிறது. அதனால் நோயை நீக்க வேண்டுமானால் உடலில் தேங்கியுள்ள, ஜீரணமண்டலத்தில் தேங்கியுள்ள, இரத்த குழாய்களில் தேங்கியுள்ள கழிவுகளை முற்றிலும் நீக்கிவிட்டால் போதும். எந்த நோய்களையும் குணப்படுத்திவிடலாம் என்றார் பீச்சாம்ப்.

இது " ஓதுகின்ற மலக்கட்டை யொழித்து விட்டால் உடம்பிலுள்ள வாதையெலாம் ஒடுங்கிப் போகும் தாதுற்ற சிறுநீரை தெளியவைத்தால்  சடலத்திலுள்ள வேகமெல்லாந் தணிந்து
போகும் கோதுற்ற உமிழ் நீரை முறியவைத்தால் கூட்டிலுள்ள பகையெலாம் குலைந்து போகும் கோதடர்ந்த இவை மூன்றும் களங்கமற்றால் கொல்ல வரும் காலனையும் வெல்லலாமே "

என்ற அகத்தியரின் கூற்றை மெய்ப்பிப்பதாய் இருந்தாலும். பீச்சாம்ப்  பல புதுமைகளை  செய்தார் அதாவது சித்தர்கள்
தங்கள் உள்ளுணர்வையும் நோயாளிகளையும் அடிப்படையாக வைத்தே பல நோய்களுக்கு பரிகாரம் கண்டறிந்தனர். ஆங்கில மருத்துவர்களோ எலியையும் குரங்கையும் இன்னும் பல உயிரினங்களையும் இறந்த மனிதனின் உடலையும் வைத்து ஆராய்ந்தே இன்றும் பரிகாரம் காண்கிறார்கள் … பீச்சாம்ப்போ தன் உடலையே தனது ஆராய்ச்சி களமாக பயன்படுத்தினார்.! எனெனில் இயற்கை உணவு நோயாளிக்கு மருந்து மற்றவர்களுக்கு அதுவே விருந்தாய் அமையும்.  என்பதே அவரின் கண்டுப்பிடிப்பாய் இருந்தது.!

பழ உணவுகளில் வாழ்ந்து வந்த பீச்சாம்ப்  கிருமிகளே நோய்களை உருவாக்குகின்றன என்ற ஆங்கில மருத்துவ மேதைகளை சவாலுக்கு அழைத்தார்.!  அவர்களின் முன்னிலையில் நோய்க்கிருமிகளை குடித்து காண்பித்தார். ஊசியின் மூலம் தன் உடலில் செலுத்தச் சொன்னார். ஆனாலும் அவருக்கு எந்தநோயும் வரவில்லை.  அன்றே  கழிவுகளின் தேக்கமில்லாத  தூய்மையான
 உடலில் எந்த நோய்க்கிருமிகள் செலுத்ப்பட்டாலும் கிருமிகளே அழியும். தூய உடலுக்கு அழிவில்லை.! என்று நிருபித்தார் பீச்சாம்ப்.

இது மட்டுமின்றி தன்கையையே கீறி எந்த மருந்தும் போடாமலே குணப்படுத்தினார்! பிறகு மற்றொரு முறை அசைவ உணவுகளையும் ஆங்கில மருந்துகளையும் பயன்படுத்தி  கொண்டே கைகளை  கீறி சோதனை செய்தார் புண் சீழ்ப்பிடித்து துர் நாற்றம் வீசியது. பிறகு இயற்கைக்கு திரும்பி கையை குணப்படுத்திக் காட்டினார்.!

இதைப்பார்த்த மக்கள் அவரை பின்பற்றி நோய்களிலிருந்து குணமடைந்தார்கள்.

அதனால் லூயிபாயிஸ்டர் போன்ற ஆங்கில மருத்துவ துறையினரும் மருந்து விற்பனையாளர்களும் சேர்ந்து அந்த இயற்கை மாமேதையை மரத்தில் கட்டிவைத்து எரித்துக் கொன்றார்கள்.!
அவர் மறைந்தாலும் அவரின் தத்துவம் வென்றுவிட்டது …! இந்தியாவின் மகாத்மா காந்தியை போல உலகெங்கிலும் கோடிக்காண மக்கள் பீச்சாம்பை  பின்பற்றினார்கள்.!

இன்றும்  பின்பற்றி வருகிறார்கள்.!

இயற்கைக்கு
அழிவில்லை.!

உடலில் நோயென்று எதுவுமில்லை.!

 தன் உடலை சுத்திகரிக்கத் தெரிந்தவனுக்கு  எந்த பண்ணாட்டு குப்பையும் தேவையே இல்லை.!

வாழ்க பீச்சாம்ப் புகழ் …!

இயற்கையோடு இயைந்து இன்புற்று வாழ்வோம்.!

குறிப்பு: இந்தபதிவு
 DR. A.V.G. ரெட்டியின் பரிபூரண உடல் நலம் என்ற நூல் கருத்தின் அடிப்படையில் எழுதப்பட்டது.!

amyogatrust.blogspot.com
Mobile:9629368389

வாழ்க வளமுடன்.!
நலம் பெருகட்டும் …

Friday, April 8, 2016

இயற்கையோடு இயைந்து ...

இயற்கையோடு இயைந்து வாழ்வோம்.!

சமீபத்தில் தினத்தந்தியில்
ஒரு பெண்மணியை பற்றி எழுதி இருந்தார்கள். 104 நாட்கள் நீர் முதல் எந்த உணவையும் சாப்பிடாமல் உயிரோடு இருந்தார்களாம்.!

நமது மாணவர் ஒருவர் இது சாத்தியமா அய்யா என்று கேட்டார்.!

நான் கூறினேன் பல ஆண்டுகளாக விஷத்தை மட்டுமே உண்டு நாம் வாழ்கிறோம். அவர் 104 நாட்கள் விஷத்தை உண்ணாமல் வாழ்ந்துள்ளார், அவ்வளவுதானே என்றதும் நாம் எங்கே விஷத்தை உண்டோம் என்று ஆச்சரியமாக கேட்டார்.

காலையில் எழுந்ததும் என்ன செய்வீர்கள்? கோல்கெட் பேஸ்ட்டில் பல் விளக்குவேன்.

'சரி, அதில் நிக்கோடின் முதல் பல இரசாயண விசம் உள்ளது. அடுத்து?

" இரண்டு டம்ளர் மினரல் வாட்டர் குடிப்பேன்"

சரி, அதில் இயற்கையான ஆக்ஸிஜன் சிதைக்கப்பட்டு செயற்கை இரசாயணங்கள் சேர்க்கப்பட்டுள்ளது

அடுத்து? "

'ஒரு கப் டீ குடிப்பேன்'

சரி, பாக்கெட் பாலில் குளோரின் வாஷிங்சோடா போன்ற பலவிதமான  இரசாயணங்கள் சீனியில்  மேற்கண்ட பொருட்களோடு சல்பேட் போன்ற  பத்துவிதமான இரசாயணங்கள் கலந்துள்ளது, தேயிலை 32 விதமான பூச்சி மருந்தால் பராமரிக்கப்பட்ட ஒரு விசப்பொருள்.  அடுத்து?

காலையில் 4 அல்லது 5 இட்லி சட்னி '
பெரும்பாலான வயல்களில் பூச்சி மருந்தை நம்பியே நெல் விதைக் கிறார்கள் எவ்வளவு விலை உயர்ந்த அரிசியை வாங்குவீர்களோ அவ்வளவு நச்சுப்பொருள் அதிகமாக இருக்கும்.

அடுத்து?

'பதினொரு மணிக்கு டீ வடை '

" அருமை, இதில் கெமிக்கல் பாலும் போலியான சத்தில்லாத சக்கை எண்ணையும் சந்தேகத்திற்குரிய பருப்பும். அடுத்து?

' மதியம் மீன்கறி, சோறு, இரசம் '

" சரி, மீனை கடலுக்கு போய் உடனே பிடித்து வருவதில்லை பலநாட்கள் கடலில் தங்கியே மீன்பிடித்து வருகிறார்கள். அப்படி பலநாட்கள் மீன்கள் கெட்டுப்போகாமல் இருக்க ஐஸ்பெட்டியில் வைத்தால் மட்டும் போதாது, அதற்காகத்தான் மார்ச்சுவரியில் பிணத்தை அழுகாமல் பாதுகாக்க பயண்படுத்தும் பென்சாயின் என்ற ஒரு இரசாயணத்தை பயன்படுத்துகிறார்களாம், கருவாட்டிற்கும் இதையே தேய்த்து காயவைத்தால் போதுமாம் உப்பு தடவ வேண்டாமாம், ஒருவேளை நீங்கள் பிராய்லர் கோழியோ, முட்டையோ சேர்ப்பதாய் இருந்தாலும்  அவை முப்பது நாட்களில் செயற்கை இரசாயண ஊசிகளைப் போட்டு உருவாக்கியது. அடுத்து?

'அப்பப்ப கேன்வாட்டார், சர்பத், மோர், சாயங்காலம் டீ, அல்லது சுக்காப்பி வடை '
"கேன்வாட்டர் என்பது சத்துநீக்கிய சப்பைத்தண்ணீர், பால் விசம்னா அதில் தயாராகும் மோர் அமிர்தமாவா இருக்கும், சர்பத்துனா சாக்ரீனும் கலர்பொடியும் அதில் சேரும் எலுமிச்சையும். சுக்குக்காப்பியும் இரண்டு கெட்டானா இருக்க வாய்ப்புண்டு. உறுதியா சொல்ல முடியாது. அடுத்து?

'இரவு சோறு, புரோட்டா, இல்லைனா சப்பாத்தி '

"அருமை, புரோட்டால சேர்க்குற மைதா வைத்தான் மருந்து ஆராய்ச்சிக் கழகத்தில எலிகளுக்கு சுகரை வரவழைக்கக் கொடுக்கிறார்களாம், மைதாவை தின்று எலிக்கு சுகர்வந்த உடன் அதை இந்த மருந்து குணமாக்குகிறதா என்று சில ஊசி மருந்துகளைப் போட்டு ஆராய்ச்சி   செய்வார்களாம். கோதுமை  கூட இயற்கையாய் விளைந்ததாகவும் தோல்நீக்காததாகவும் இருந்து அதில் மாவு திரித்து சப்பாத்தி போட்டால் தான் நல்லது.  அடுத்து?

'இரவில் இரண்டு வாழைப்பழம் '

பெங்களூர் வாழை என்று மரபணுவிலேயே விஷத்தை சேர்த்து செய்த பளபளப் பழங்களும் உண்டு, பருவத்திற்கேற்ப பலமூட்டை இரசாயணங்களை அள்ளிவீசி மெருகேற்றிய பழங்களும் உண்டு,
வாழைத்தண்டில் ஊசிகுத்திப் பழுக்க வைக்கப்படும் பழங்களும் உண்டு. அருமை அடுத்து?"

' எதாவது கொஞ்சம் சிப்ஸ், மிக்சர் என்றைக்காவது கொஞ்சம், சொவ்வாய் , வெள்ளி சுத்தமான சைவசாப்பாடு மட்டும்தான் '

" ஹஹ் ஹா.! நண்பரே முட்டைக் கோஸை இரசாயணத்தில் முக்கியெடுப்பார்கள், பச்சைப் பட்டணியை கலரில் ஊறவைத்து பேக் செய்வார்கள், கத்தரிக்காய் என்றாலே மரபணு மாற்றியதைதான் அனைவரும் விரும்பி வாங்குகிறார்கள்.! இன்னும் உப்பு, பெருங்காயம், அஜினாமோட்டோ,  ரீபைண்ட் ஆயில் எல்லாம்  முழு நச்சான விசப்பொருள்தான். அடுத்து?
'சும்மா, இருங்கள் அய்யா.! நீங்க சொல்றதைக் கேட்டாலே தலை சுத்துது'

"இதுக்கே இப்படியா? இன்னும் பிஸ்கெட், சாக்லேட், ஐஸ்கிரீம், ஹார்லிக்ஸ், பூஸ்ட்,பெப்ஸி, கோக், பீட்சா, சோப்பு, பவுடர், சென்ட் கதையெல்லாம் கேட்டா மயங்கிருவீங்க போலயே,
சரி இரவு கடைசியா என்னப் பண்ணுவீங்க?

இரவில் ஒருமுறை கோல்கெட்டால பல்விளக்கி விட்டு குட்நைட் மேட்டை வெச்சிட்டு எல்லோரும் தூங்கிருவோம். '

நண்பரே, நம்ம உடம்பில இருக்குற கோடிக்கணக்கான செல்களில் பலதும் கொசுக்களை விட மென்மையானது. வெளியே ஓடுற கொசுக்களை கொல்லும் குட்நைட் உங்களுக்குள்ள இருக்கிற செல்களை கொஞ்சவா செய்யும்?

' புரிஞ்சிருச்சி அய்யா,  ஏதோ.! அந்தம்மா, சாப்பிடாம 104 நாளு வாழ்ந்தது சாதனைனு நினைச்சேன். ஆனா, இவ்வளவு நாளு  இத்தனை விச  உணவுகளை உண்டும் சாக வாழுற மனுசன் ஒவ்வெருத்தரும்  சாதனையார்கள் தான்.! இன்று முதல், நானும் உங்களைப் போல இயற்கை வாழ்வியல் முறைக்கு திரும்பி விடுகிறேன்.!

அதுதான், இவ்வளவு இரசாயண விஷங்களை கொடுத்தும் என்னை பாதுகாத்த  என்உடல்  இயற்கைக்கு நான் செய்யும் கைம்மாறு என்று கூறிவிட்டு முதலில் பல்பொடியில் இருந்து ஆரம்பிக்கிறேன் என்று கூறி நமது மூலிகைப் பல்பொடியை வாங்கிச் சென்றார் நமது மாணவர் பரமேஸ்வரன்.! "

*நம்மாழ்வார் அய்யா சொன்னதுபோல எவ்வளவு சின்னதாய் இருந்தாலும் பரவாயில்லை இயற்கையை நோக்கி இன்றே முதல் அடியை எடுத்து வையுங்கள்.! அதுவே உங்களையும் உங்கள் தலைமுறைகளையும் பாதுகாக்கும் உயரிய நெறி.!

முழுக்க முழுக்க 100% இயற்கை வாழ்வியல் முறைகளை கடைப்பிடித்து உங்கள் எத்தகைய ஆரோக்கிய குறைபாடுகளையும் போக்கிக் கொள்ள என்றும் இயற்கையோடு இயைந்து இன்பமாய் வாழ ஏப்ரல் 29,30, மே 1 ஆகிய மூன்று நாட்கள் குமரிமாவட்டம் ஆரல்வாய்மொழியில் யோகா & இயற்கை வாழ்வியல் முகாம் நடைபெற உள்ளது. ஆர்வமுள்ளவர்கள் முன்பதிவு செய்துகொள்ளுங்கள்.!

amyogatrust.blogspot.com
mobile:9629368389

நலம் பெருகட்டும் …

Thursday, April 7, 2016

மண்குளியல்

மண்குளியல் மகத்துவம்

நல்ல சுத்தமான செம்மண் அல்லது கறையான் புற்றை சேகரித்து
அதை நன்றாக சலித்துக் கொண்டு அதோடு வெட்டிவேர், விலாமிச்சுவேர், சந்தனப்பட்டை ,ரோஜாப்பூ , கஸ்தூரி மஞ்சள் போன்றவற்றின் பொடியையும் சிறிது சேர்த்து நீர்விட்டு நன்றாக குழைத்து உடல் முழுவதும் பூசிவிட்டு ஒரு மணிநேரம் வரை அப்படியே இளம் வெயிலில் படுக்க வேண்டும். மண்காயகாய மீண்டும் கொஞ்சம் பூசிக் கொள்ளலாம். ஒரு மணி நேரத்திற்கு பிறகு மூலிகை குளியல் பொடியை தேய்த்து குளித்துக் கொள்ளலாம்.!

மண்குளியல் பலன்கள்.!

*தோல் நோய்களை குணப்படுத்தும்

*உடலுக்கு இளமையான தோற்றத்தை தரும்

*சுவாசக் கோளாறுகளை சீராக்கும்

*மூட்டுவலி, இடுப்புவலி, தண்டுவட வலிகளைப் போக்கும்

*வியர்வை சுரப்பிகளின் ஆற்றலை அதிகரிக்கும்

*உள்ளுறுப்புகளின் செயல் திறனை அதிகரிக்கும்

*கை, கால் எரிச்சல், கீல்வதம், நரம்புமண்டல கோளாறுகளை
கட்டுப்படுத்தும்.!

*தாது உற்பத்தி அதிகரிக்கும்

*கர்பப்பை, சிறுநீரகத்தில் உள்ள சிறிய கட்டிகளை கரைக்கும்

*பொதுவாக கறையான் புற்றில் கரையானின் உமிழ்நீர் கலந்துள்ளதால்

அது தோல்புற்று நோயை குணப்படுத்துவதோடு தோலின் நிறத்தை மேம்படுத்தவும் மென்மையாக வைத்துக் கொள்ளவும் உதவுவதாக
இயற்கை தோல் நோய் ஆய்வாளர்கள் கூறுகிறார்கள்

*மழலையை உற்பத்தி செய்யும் உயிரணுக்களில் இருப்பதைப் போலவே மண்ணிலும் பல்லாயிரக்கணக்க நன்மை செய்யும் செல்கள் நிறைந்துள்ளது.!

மாதம் ஒருமுறை அனைவரும் மண்குளியல் செய்யலாம்.!
நோய்தன்மை நீங்க  விரும்புபவர்கள் வாரத்திற்கு மூன்று நாட்கள் தொடர்ந்து மண்குளியல் செய்யலாம்.!
கடினமான  சுவாச, தோல் அலர்ஜி இருப்பவர்கள் மட்டும்   முதலில் உடலின் ஒரு பகுதியில் தேய்த்து பார்த்துவிட்டு உடலுக்கு ஒத்துக் கொண்டால்  பிறகு உடலெல்லாம் பூசிக் கொள்ளலாம்.!

மண்ணின் மகத்துவம் உணர்ந்து அனைவரும் மண்ணறைக்கு
போகும் முன்னே ஒரு முறையாவது மண்குளியல் செய்வது மகத்துவமானது.!

மண்குளியல் உள்ளிட்ட இயற்கை வாழ்வியல் பயிற்சி முகாம் ஏப்ரல் 29 முதல் மே 1 ஆம் தேதி வரை நாகர்கோவிலில் நடைபெற உள்ளது ஆர்வமுள்ளவர்கள் கலந்து கொள்ளலாம்.!

தொடர்பிற்கு:9629368389
நலம் பெருகட்டும் …

amyogatrust.blogspot.com

குளியல் !

உண்மையில் நம்மில் பல பேருக்கு எதற்காக குளிக்கிறோம் என்றே தெரியவில்லை.

அழுக்கு போகவா.....! நிச்சயம் கிடையாது.....!

மாத மளிகை பட்டியலில் சோப்பு டப்பாவை வாங்கி அடுக்கி வைத்து கொள்கிறோம்.

சோப்பு எதற்காக கண்டுபிடிக்கப்பட்டது தெரியுமா... கப்பலில் இயந்திரத்தோடு இயந்திரமாக வேலை செய்வோருக்கு உடலில் திட்டு திட்டாக ஆயில் படிந்துவிடும்.

இந்த கடின எண்ணெய்யை நீக்குவதற்காக சோப்பு பயண்படுத்தினார்கள். கப்பலில் மட்டும் அல்ல எண்ணெய் புழங்கும் மற்ற இடங்களிலும் கூட இது பயன்பட்டது.

சோப்பு போடுவதற்கு நாம் எந்த கப்பலில் வேலை பார்த்தோம். எந்த சேறு, சகதி எண்ணெய்க்குள் புரண்டு எழுந்து வந்தோம்.

வணிக பெருமுதலை கும்பல் சும்மா இருப்பார்களா, ஆயிலில் புரண்டெழுந்து வேலை செய்வோர் மட்டுமே பயண்படுத்தி வந்த இந்த சோப்பை,

எல்லோரும் பயண்படுத்தும் படி பல திட்டம் தீட்டி. கிருமி உருவாக்கி, அதன் மேல் பயம் உருவாக்கி.
நடிகர்களை நடிக்க விட்டு. நம் தலையில் கட்டிவிட்டார்கள்.

இதன் மூலம் என்ன ஆனது..

சோப்பு போட்டு நம் தோல்களின் மேல் இயற்கையாக உருவாகும் மெல்லிய பாதுகாப்பு கொழுப்பு படலத்தை நீக்கி விட்டேம், இப்பொழுது பாதுகாப்பற்ற நிலை உருவாகிறது. இதை திரும்ப சீர் செய்யவே உடல் பெரும்பாடுபடுகிறது.

நமக்கு வாய் முகத்தில் மட்டும் அல்ல தோலின் மேல் இருக்கும் ஒவ்வொறு வியர்வை துவாரங்களும் வாயே. சோப்பை போடுவதன் மூலம் வியர்வை துவாரம் வழியே இரசாயண நச்சு இரத்தத்தில் கலந்து கல்லீரலை பாதிக்கிறது.

சோப்பு போடுவதன் மூலம் தோல் மூலமாக நம் உடல் கிரகிக்கும் பிரபஞ்ச சக்தி தடுக்கப்படுகிறது.

இன்னும் இதன் தீமைகள் பல உண்டு. சொல்லி மாளாது.

நாம் சோப்பு போடுவதற்கு எந்த சேறு, சகதி, எண்ணெய் இயந்திரங்களுக்குள் புரண்டு வருவதில்லை.

சரி பின் எதற்கு தான் குளிக்கிறோம் என்று கேட்கிறீர்களா....?

குளியல் = குளிர்வித்தல்

குளிர்வித்தலோ மருவி குளியல் ஆனது.

மனிதர்களுக்கு உள்ள 75% நோய்களுக்கு காரணம் அதிகப்படியான உடல் வெப்பம்.

இரவு தூங்கி எழும்போது நமது உடலில் வெப்பக் கழிவுகள் நேங்கியிருக்கும்.

காலை எழுந்ததும் இந்த வெப்பகழிவை உடலில் இருந்து நீக்குவதற்காக குளிந்தநீரில் குளிக்கிறோம்.

வெந்நீரில் குளிக்க கூடாது. எண்ணெய் குளியலின் போது மட்டுமே மிதமான வெந்நீர் பயன்படுத்த வேண்டும்.

குளிர்ந்த நீரை அப்படியே மொண்டு தலைக்கு ஊற்றிவிடக்கூடாது. இது முற்றிலும் தவறு.

நீரை முதலில் காலில் ஊற்ற வேண்டும், பின், முழங்கால், இடுப்பு, நெஞ்சு பகுதி, இறுதியாக தலை.

எதற்கு இப்படி. காலில் இருந்து ஊற்றினால் தான் வெப்பம் கீழிருந்து மேல் எழும்பி, விழி மற்றும் காது வழியாக வெளியேறும்.

நேரடியாக தலைக்கு ஊற்றினால் வெப்பம் கீழ் நோக்கி சென்று வெளியில் போக முடியாமல் உள்ளேயே சுழன்று கொண்டிருக்கும்.

இப்பொழுது நம் முன்னோர்களின் குளியல் முறையை கண்முன்னே கொண்டு வாருங்கள்.

குளத்தில் ஒவ்வொறு படியாக இறங்குவார்கள். காலில் இருந்து மேல் நோக்கி நினையும். வெப்பம் கீழ் இருந்து மேல் எழுப்பி இறுதியில் தலை முங்கும் போது கண், காது வழியே வெப்பக் கழிவு வெளியேறிவிடும்.

இறங்கும் முன் ஒன்று செய்வார்கள் கவனித்ததுண்டா. உச்சந்தலைக்கு சிறிது தண்ணீர் தீர்த்தம் போல் தெளித்துவிட்டு இறங்குவார்கள்.

இது எதற்கு... உச்சந்தலைக்கு அதிக சூடு ஏறக்கூடாது. சிரசு எப்போதும் குளிர்ச்சியாக இருக்க வோண்டும்.

எனவே உச்சியில் சிறிது நினைத்து விட்டால் குளத்தில் இறங்கும் போது கீழ் இருந்து மோலாக எழும் வெப்பம் சிரசை தாக்காமல் காது வழியாக வெளியேறிவிடுகிறது.

வியக்கவைக்கிறதா... !  நம் முன்னோர்களின் ஒவ்வொறு செயலுக்கும் ஆயிரம் அர்த்தங்கள் உண்டு.

குளித்துவிட்டு சிறிது நேரம் ஈரத் துணியோடு இருப்பது மிக நல்லது.

அதே ஈரத்துணியோடு நாம் அரச மரத்தை சுற்றி வந்தால் 100% சத்தமான பிராணவாயுவை நமது உடல் தோல் மூலமாக கிரகித்துக்கொள்ளும்.

பித்தம் நீங்கி பிராணவாயு அதிகரித்தால் அனைத்து நோய்களும் ஓடிவிடும்.

புத்தி பேதலிப்பு கூட சரியாகும்.

குளியலில் இத்தனை விடையங்கள் இருக்கும் போது. குளியல் அறை என்றாலே அதில் ஒரு ஹீட்டர் வேர, இப்படி சுடு தண்ணீரில் சோப்பும், ஸ்சேம்பையும் போட்டு குளிச்சிட்டு வந்தா நாம நோயாளியா இல்லாம வேற எப்படி இருப்போம்.

குளிக்க மிக நல்ல நேரம் - சூரிய உதயத்திற்கு முன்

குளிக்க மிகச் சிறந்த நீர் - பச்சை தண்ணீர்.

குளித்தல் = குளிர்வித்தல்

குளியல் அழுக்கை நீக்க அல்ல

உடலை குளிர்விக்க.

இறைவன் கொடுத்த இந்த உடல் மீது உங்களுக்கு அக்கறை இருந்தால் மாற்றிக்கொள்ளுங்கள். சோப்பைப் போட்டு தமக்குத்தாமே தீங்கிழைத்துக் கொள்ளாதீர்கள்.!

நலம் பெருகட்டும் …

Friday, April 1, 2016

உங்க சமைமயலரையில் மாதா பிளாஸ்டிக்கா?

நீங்க உங்கள் சமையலறையில்
 plastic cutting board ( பிளாஸ்டிக் கட்டிங்  போட் )  ஐ கொண்டு   தானா காய்கறிகளை நறுக்குவது.?

அப்படிஎன்றால் இந்த பதிவை படித்தவுடன் உங்கள் plastic cutting board ஐ சற்று அவதானியுங்கள்.
நீங்க உபயோகிக்கும் plastic cutting board காய்கறிகள் நறுக்கும் பொழுது உங்கள் கத்தி அந்த கட்டிங் போடையும் சேர்த்து சிறிது சிறிதாத நறுக்கப்பட்டு உங்கள் கண்களுக்குத் தெரியாத அளவுக்கு சிறிது துண்டுகள் நீங்க  நறுக்கும் காய்கறிகளுடன் சேர்ந்து உங்கள் சமையலில் சேர்ந்து நீங்கள் சாப்பிடும்போது அது  உங்க சமிபாட்டு அறையை சென்றடைகின்றது. பிளாஸ்டிக் எப்பொழுதும் ஜீரணிப்பதில்லை இதனால் உங்களுக்கு உங்கள்  உடம்பில் குடலோடு ஒட்டி உடல் சம்பந்தமான  நோய்களை உருவாக்கி உங்களை மரணம் வரைக்கும் கொண்டுசெல்கின்றது. இந்த பாதிப்பு

அதிகமாக சிறுவர்களுக்கே ஏற்படுகின்றது. உங்கள் plastic cutting board ஐ  அவதானித்து பார்த்தீர்களானால் புரியும்.எவ்வளவு இதிலிருந்து உங்கள் சமையலோடு கலந்து சாப்பிட்டு இருக்கின்றீர்கள்  என்று.

எனவே நீங்கள் எப்பொழுதும் உங்கள் wood  cutting board பலகை கட்டிங் போட் கொண்டே உபயோகிக்கும் பழக்கத்துக்கு மாற்றிக்கொள்ளுங்கள். பலகை சிறிது துண்டுகளாக தூள்கள்  சமையலில் கலந்துஅதை அடுப்பில் வைத்து வேகவைத்தால் அது உடம்புக்கு கேடு விளைவிக்காது.ஜீரணிக்கும். நீங்களும்உங்கள் குடும்பமும் உங்கள் நண்பர்களும்.பாரிய நோயிலிருந்து பாதுகாக்கலாம்.இந்த தகவலையும் நண்பர்களுக்கு பகிர்ந்துகொள்ளுங்கள்.
நோயற்ற  வாழ்வே குறைவற்ற  செல்வம்.

Saturday, March 26, 2016

இட்லி மாவு

கடந்த 10 ஆண்டுகளில் இட்லி, தோசை மாவை விலைக்கு விற்கும் பழக்கம் விரிவடைந்துக் கொண்டே போகிறது. இட்லி, தோசை மாவு விற்கப்படுவதால் ஒரு புறம் பெண்களின் வேலைச்சுமை குறைகிறது. மறுபுறம் வீட்டில் இருந்தபடியே பணம் ஈட்டும் தொழிலாக மாவு விற்பனை நடைபெறுகிறது. மேலும் சிறிய மளிகைக்கடை முதல் பெரிய ஷாப்பிங் மால் வரை இட்லி, தோசைமாவு பாக்கெட்டுகளில் கிடைக்கிறது.
இந்த மாவு ஒரு ஸ்லோ பாய்ஸன் மாதிரி என்பது ஏனோ பலருக்கும் தெரிவதில்லை. இதன் பின் விளைவுகளை சற்று அலசிப் பார்த்தால் பயங்கரமான விளைவுகள் தெரிய வருகின்றது.

1. 6 நாட்கள் வரை புளிப்பு வாசனை வராமல் இருக்க, நம் உடலில் ஏற்படும் காயத்திற்கும், புண்ணிற்கும், கேரம் போர்ட் விளையாட பயன்படுத்தும் Boric Acid, ஆரோட் மாவு போன்றவற்றைக் கலந்து விற்பனைக்கு அனுப்பி வைப்பதாக செய்திகள் வருகின்றன.

2. ஒரு நாளைக்கு 3–6 மணி நேரம் அரைக்க வேண்டிய கிரைண்டர்கள், 12-18 மணி நேரம் தொடர்ந்து ஓட்டுவதால், அந்த கல் கொஞ்சம் கொஞ்சமாக தேய்மானம் ஏற்பட்டு, மாவுடன் கலந்து விட வாய்ப்புகள் அதிகம். இதனால் சிறுநீரகத்தில் கல் உண்டாகும் அபாயம் இருக்கின்றது.

3. என்னதான் நல்ல அரிசி உளுந்து போட்டாலும், நல்ல தண்ணீரை ஊற்றித்தான் மாவு அரைக்க வேண்டும். ஆனால் பெரும்பாலும் உவர்தன்மையைக் கொண்ட கிணத்தடி தண்ணீர் மற்றும் உப்பு தண்ணிரை பயன்படுத்தினால் திண்டாட்டம் தான்.

4. நம் முன்னோர்கள் இட்லிக்கு மாவு அரைக்கும்போது ஒரு கை வெந்தயத்தை போட்டு அரைப்பார்கள். வெந்தயம் ஒரு இயற்கையான நோய் நிவாரணி (ஆண்டிபயாடிக்); இது உடம்பு உஷ்ணம், வாய்துர்நாற்றம், குடல்புண் போன்ற நோய்களைத் தடுக்கும் ஆற்றல் உள்ளது. கடைமாவில் யாரும் வெந்தயத்தை சேர்ப்பதில்லை என செய்தி.
மேலும் ஈகோலை (E-COLI) எனப்படும் ஒருவகை பாக்டீரியாவானது, (–24 ) மைனஸ் 24 டிகிரிக்கு கீழே இருந்தால் தான் கொஞ்சமாவது கட்டுப்படும்; அவ்வகை பாக்டீரியாக்கள் மாவுகளில் உருவாகி சிலருக்கு சாப்பிட்டவுடன் ஃபுட் பாயிஸன் என்றும், சிலருக்கு ஸ்லோ பாய்ஸனாக உடலில் கலந்து உயிரையேக் கொல்லும் அபாயமும் உள்ளது.
எனவே சென்னை மாநகராட்சி மற்றும் அரசு நிர்வாகம், கடைகள், மற்றும் மாவுஅரைக்கும் இடங்களில் பரவலாக சோதனை (ரெய்டு) நடத்தி தரம் குன்றிய மாவுகளைக் கைப்பற்றி, அபராதமும் விதித்து வருகின்றது.
எனவே, நமக்கு நன்கு தெரிந்த, கலப்படம் செய்யாத, நேர்மையானவர்கள் அரைத்து விற்பனை செய்யும் இட்லி, தோசை மாவுகளை மட்டும் வாங்குங்கள். முன்பின் தெரியாதவர்கள் தயாரித்து கடைகளில் விற்கும் பாக்கெட் மாவுகளை முற்றிலுமாகத் தவிர்ப்பது நலம்.

Wednesday, March 23, 2016

எண்ணெய்க் குளியல் ஏன்?



 நம் பாரம்பரிய வாழ்வியலில் உடலை நோய் அணுகாமல் காத்து, ஆரோக்கியத்தை மேம்படுத்தும் ‘வாரம் ஒரு நாள் எண்ணெய்க் குளியல்’ என நம் பண்பாட்டில் ஆரோக்கியம் பேணும் வகையில் வாழ்வின் ஒரு அங்கமாகவே இருந்து வந்த வழக்கம், இன்று வெறும் தீபாவளிச் சடங்காக மாறிவிட்டதுதான் சோகம்!! இது சோகம் என்றால், அந்த தீபாவளி நாளன்றுகூட, உடல் முழுதும் முறையாய் எண்ணெய் தேய்த்துக் குளிக்கும் வழக்கமும் போய், வெறும் 1 ஸ்பூன் எண்ணெயை தலையிலிட்டு வேலையை முடிப்பது சோகத்தின் உச்சம்!!

நமது இந்த வாழ்வியல் போக்கில் மாற்றம் கொண்டு வருவது மிக அவசியமாகிறது. ஏனெனில், புவி வெப்பமயமாதல், அதிவேக வாழ்க்கை முறை எனப் பல்வேறு காரணங்களால், நம்மில் பலருக்கு பித்தமும், உடல் சூடும் அதிகரித்தே இருக்கின்றன. இதற்கு, முறையான எண்ணெய்க் குளியல் நிச்சயம் ஒரு வரப்பிரசாதம்.

எண்ணெய்க் குளியலின் பயன்கள்:

தமிழ் மருத்துவத்தின் ஆதார நூல்களில், எண்ணெய்க் குளியலின் பயன்களாக விவரிக்கப்படுபவை:

# உடல் சூடு தணியும்
# உடல் சோர்வு, உடல் வலி நீங்கும்
# நல்ல உறக்கம்
# மெய், கண், செவி, நாசி, வாய் என புற உலகோடு நாம்          தொடர்புகொள்ள  உதவும்  ஐம்புலன்களுக்கும்  தெளிவு    # தோல், கூந்தல் செழுமை
# ஆயுள் விருத்தி

உடலில் பித்தம் அதிகமாதலால் ஏற்படும் குருதி அழல் (நவீன மருத்துவத்தில் உயர் இரத்த அழுத்தம்), மூலச்சூட்டினால் உண்டாகும் உடல் உபாதைகள், மன நிலையில் சமநிலையின்மை, வெகுவான பிரயாணம், அதிக வெப்ப சூழ்நிலையில் பணி போன்ற நிலைகளில் எண்ணெய்க் குளியலின் மகத்துவம் எளிதில் விளங்கும். மேற்கத்திய அறிவியல் ஆராய்ச்சிகளில், ‘எண்ணெய்க் குளியல்’ பற்றிய விரிவான ஆய்வுகள் இதுவரை இல்லை. எனினும், சிறு சிறு ஆய்வுகள் மூலம் எண்ணெய்க் குளியலால் மன அழுத்தம் குறைந்ததற்கான சான்றுகள் உள்ளன.

‘எண்ணெய்க் குளியல்’ முறை:
உகந்த நாட்கள்:
ஆண்கள்: புதன் மற்றும் சனி
பெண்கள்: செவ்வாய் மற்றும் வெள்ளி

உகந்த நேரம்: காலை 5 முதல் 7 மணிக்குள்

உகந்த எண்ணெய்:
தென்னிந்திய பகுதியில் வாழ்பவர்களுக்கு நல்லெண்ணெய் சிறந்தது நல்லெண்ணெயை  கொதிக்க வைத்து  பதத்தில் இறக்கி தாங்கும் சூட்டில் பயன்படுத்த வேண்டியது. இது எல்லா வயதினருக்கும் ஏற்றது. இதனை மொத்தமாய் காய்ச்சி வைத்தும் பயன்படுத்தலாம். ‘கபம்’ சார்ந்த தொல்லை இருப்பின் இதை உடல் முழுதும் தேய்த்து, தலையில் மிகக் குறைந்த அளவில் இட்டுக்கொள்ளலாம். (மாறாக கபத்தன்மை உடையோர்க்கென பிரத்யேகமான மூலிகை தைலங்களை (பீனிச தைலம்) தாராளமாய் பயன்படுத்தலாம். இவை சைனஸ் தொந்தரவு குறைவதற்கு உதவிகரமாகக்கூட செயல்படுகின்றன.

எண்ணெய் வைக்கும் முறை:
தாங்குமளவு சூட்டில் தலை மற்றும் உடல் முழுதும் எண்ணெய் தேய்த்து, செவி ஒன்றுக்கு மூன்று துளியும், நாசி ஒன்றுக்கு இரு துளியும் இட வேண்டும். (காதில் நீர்/ சீழ் வடியும் தன்மை இருப்போருக்கு, இம்முறைக்கு மட்டும் மருத்துவ ஆலோசனை தேவை) உள்ளங்கால்களிலும் தேய்ப்பது அவசியம். 10 முதல் 20 நிமிடம் வரை உடலில் எண்ணெய் ஊறிய பின், குளிப்பதற்கு வெந்நீரும், தேய்ப்பதற்கு சீயக்காய் சேர்ந்த பொடியும் பயன்படுத்தினால் நன்மை.

உடலுக்கு பஞ்சகற்பப் பொடியை (கஸ்தூரி மஞ்சள், மிளகு, கடுக்காய்த் தோல், நெல்லி வித்து, வேப்பம் வித்து என அனைத்து பொருட்களையும் சமஅளவில் சேர்த்து அரைத்தது) பயன்படுத்துவதை தமிழ் மருத்துவம் ஊக்குவிக்கிறது. குளித்த பின் நன்றாக தலை, உடலை உலர்த்துவதும் முக்கியம்.

எண்ணெய் குளியல் நாளன்று தவிர்க்க வேண்டியவை: எண்ணெய் குளியல் நாளன்று உடல் இயக்கத்திற்கு நல்ல ஓய்வு அவசியம். உடல் சூடு தணிந்திருக்கும் வேளையில், தயிர், பால், மோர், நீர்க் காய்கறிகள், திராட்சை, வாழைப்பழங்கள், குளிர்ந்த பானங்கள் முதலிய குளிர்ச்சி உண்டாக்கும் உணவுகள் தவிர்த்து, எளிதில் செரிமானம் ஆகக்கூடிய அரிசி உணவுகளே அன்றைய தினத்திற்கு ஏற்றது.

மேலும் மாமிசம், மது, புகை, பகல் உறக்கம், உடற்புணர்வும் விலக்கப்பட வேண்டியவை. “சனி நீராடு” என்கிறார் மஹா சித்தர் ஓளவையார். நம் உடல் ஆரோக்கியத்தை உறுதிப்படுத்த நம் வாழ்க்கை முறைக்குள் மீண்டும் எண்ணெய்க் குளியலை தவறாமல் கடைபிடிப்பதன் அவசியத்தை நினைவூட்டத்தான் இவ்வருட தீபாவளியும் சனிக்கிழமையில் அமைந்ததோ?!

எண்ணெய்களின் பிற மருத்துவ பயன்கள்: நல்லெண்ணெய்:
# மூட்டு வலி உடல் வலிக்கு நல்லெண்ணெயை மிதமான சூட்டில் தினமும் தடவி வர இழந்த நீர் மற்றும் எண்ணெய்ப் பற்றை மூட்டுக்களில் சேர்த்து வலி குறையவும், மூட்டுக்கள் பலப்படவும் உதவும்.

# பாரம்பரிய மருத்துவ முறைகளில், வலி நிவாரண எண்ணெய்களில் (பிண்ட தைலம், உளுந்து தைலம், கற்பூராதி தைலம்) பெரும்பாலும் நல்லெண்ணையே மூலம்.

# “கவல க்ரிஹா” எனும் பழமையான ஆயுர்வேத முறைதான், நவீன ஆயில் புல்லிங்! வெறும் வயிற்றில், சிறிது நல்லெண்ணெய்யை 10 முதல் 20 நிமிடம் வாயில் அடக்கி, கொப்பளித்து வெளியேற்றும் முறை. ஐம்புலங்களின் வாயிலாக உடலின் சமச்சீரற்ற வாத, பித்த கபத்தை சமன் செய்யவும், நாட்பட்ட நோய்களிலிருந்து மீள்வதற்கு துணை மருத்துவமாய்க் கொள்ளலாம் என்கின்றன ஆயுர்வேத மருத்துவக் குறிப்புகள். பல், ஈறுகளின் ஆரோக்கியத்தை இம்முறை பேணுவதாக நவீன அறிவியலும் சான்றளிக்கின்றன.

விளக்கெண்ணெய்:
அடி வயிறு (கர்ப்பப்பை, கீழ்க்குடல் மூலம்/மலச்சிக்கல்) சார்ந்த பிரச்சனைகளுக்கு தமிழ் மருத்துவம் விளக்கெண்ணெய் சார்ந்த மருந்துகளையே பரிந்துரைக்கிறது. உடல் அதிக சூட்டில் அவதியுறும் சமயம், அடிவயிற்றிலும், உச்சந்தலையிலும் உள்ளங்கை, கால்களிலும் சிறிது விளக்கெண்ணெய் தடவினால் கிடைக்கும் நிவாரணம் அறிவியல் ஆதாரமற்றது என்றாலும் அனுபவத்தில் உண்மையானதே!

தேங்காய் எண்ணெய்:
வறண்ட சருமம், சிறு புண்கள், வெயில் பாதுகாப்பு (sun screen) தரமான தேங்காய் எண்ணெய் மட்டுமே போதுமான மருந்து! மேலும் சித்த மருத்துவம் கூறும் ஆறாத புண்களுக்கான ஊமத்தன் தைலமானாலும், தோல் ஒவ்வாமை அரிப்பு (allergy) அருகம்புல் தைலமானாலும், கூந்தலுக்கான நீலிபிருங்காதி, பொடுகு, பிற தோல் நோய்களுக்கான வெப்பாலை, புங்கம், குப்பைமேனி தைலங்கள் அனைத்திலும் தேங்காய் எண்ணெயே சேர்ந்துள்ளது.

Tuesday, March 22, 2016

வாழை இலையின் பயன்கள்

இன்றைக்கு நாகரிகம் முன்னேறிவிட்டது என்று சொல்லி எத்தனையோ பாரம்பரியமான விஷயங்களை, நம் முன்னோர்கள் அற்புதமாய் கண்டுபிடித்து வைத்திருக்கிற விஷயங்களை தவறவிட்டு விட்டோம்.
அதில் ஒன்றுதான் இந்த வாழை இலையில் சாப்பிடுவது. வாழை இலையில் சாப்பிடுவதால் என்னென்ன நன்மைகள் உண்டாகின்றன? பார்ப்போம்…
முதலாவது வாழை ஒரு நல்ல நச்சு முறிப்பான் (Germ Killer) ஆகும்.
அதாவது நல்ல கிரிமிநாசினி என்றும் சொல்லலாம். சுடச்சுட பொங்கலையோ அல்லது சாதத்தையோ வாழையில் வைத்து சாப்பிடுவது மிகவும் நன்மை பயக்கும்.
தீக்காயம் பட்டவரை வாழை இலையில் கிடத்துவதை கண்டிருப்பீர்கள். வாலை இலை படுக்கையும், வாழைத்தண்டுச் சாறும், வாழைக்கிழங்கின் சாறும் நல்லதொரு நச்சு முறிப்பான்கள் ஆகும்.
இன்றைக்கும் கிராமங்களில் பாம்பு கடித்து விட்டால் முதலில் வாழைச்சாறு பருகக்கொடுப்பார்கள். நச்சு முறிந்துவிடும்.
காடும் காடு சார்ந்த பகுதிகளில் வாழ்ந்தவன்தான் தமிழன். எந்த வித நச்சும் முறிக்கப்படவேண்டும் என்பதற்காகத்தான் 4 பேர் கூடும் எந்த இடத்திலும் வாழைமரத்தை பயிரிட்டு தயாராக வைத்திருந்தான்.
ஆகவேதான் திருமணப் பந்தலிலும் வாழை மரம், இடுகாட்டுப் பாடையிலும் வாழை மரம், மக்கள் கூடும் எந்த திருவிழாக் கூட்டங்களிலும் வாழை மரம் என்று எங்கெங்கு காணினும் வாழை மரத்தை வைத்தான் நம் தமிழன். அதாவது நச்சு முறிப்புக்கு என்றுதான் அவ்வாறு செய்தான்.
இருட்டில் சமைக்க நேர்ந்து, சமைத்த உணவில் எதிர்பாராத விதமாக நச்சு கலந்திருந்தாலும், அல்லது வேறு எந்த வகையில் உண்ணும் உணவில் நச்சு கலந்திருந்தாலும் அதற்கான உடனடி நச்சு முறிப்பான் வாழை இலை மட்டுமே. அதனால்தான் வாழை இலையில் சாப்பாடு.
நாம் சாப்பிடும் தட்டை எவ்வளவு சுத்தப்படுத்துகிறோம்? தண்ணீர் விட்டு அல்லது வெந்நீர் விட்டு நன்றாக அலசி காயவைத்து எவ்வளவு சுகாதாரமாக பயன்படுத்துகிறோம்.
ஆனால் நமக்கும் நம்முடைய பிள்ளைகளுக்கு நோய்கள் வருகின்றன. ஆனால் வாழை இலை பயன்படுத்தி சாப்பிடுபவர்களுக்கு நோய்கள் வருவதில்லை. இதை என்றாவது யோசித்துப் பார்த்திருக்கிறீர்களா?
வாழை இலையில் தொடர்ந்து உணவு உட்கொண்டு வந்தால் தோல் பளபளப்பாகும். உடல் நலம் பெறும். மந்தம், வலிமைக்குறைவு, இளைப்பு போன்ற பாதிப்புகள் நீங்கும். அழல் எனப்படும் பித்தமும் தணியும்.
வாழையிலையின் மேல் உள்ள பச்சைத் தன்மை (குளோரோபில்) உணவை எளிதில் சீரணமடையச் செய்வதுடன் வயிற்றுப் புண்ணை ஆற்றும் தன்மை கொண்டது. நன்கு பசியைத் தூண்டும். வாழையிலையில் உண்பவர்கள் நோயின்றி நீண்ட ஆரோக்கியத்துடன் வாழ்வார்கள்.
அலுவலகம் செல்லும் அதிகாரிகள், பணியாளர்கள் மற்றும் தொழிலாளர்கள் மதிய உணவை எடுத்துச் செல்ல வாழை இலை சிறந்தது. சோறு பழுதாகாமல் அப்படியே இருக்கும் . குழந்தைகள், மாணவ, மாணவிகள் மதிய உணவு கொண்டு செல்ல வாழை இலை பயன்மிக்கது. கல்யாண வீடுகள், பொது விழாக்கள், அன்னதானம் விருந்து வைபவங்களுக்கு உணவு பரிமாறுவதுக்கு வாழை இலைகள் தான் பெரிதும் பயன்படுகின்றன.
வாழைமரத்தில் இருந்து நாம் பல பயன்களை பெற்று வருகின்றோம். அதில் வாழை இலையின் பயன்பாடும் முக்கியம். வாழை இலையின் பயன்பாட்டை அறிந்து கொள்ளுங்கள்.ப