Showing posts with label மருத்துவக் குறிப்புகள். Show all posts
Showing posts with label மருத்துவக் குறிப்புகள். Show all posts

Thursday, April 21, 2016

மூலிகை மருத்துவம்.

சின்ன வெங்காயச் சாறு ஒரு தேக்கரண்டி, இஞ்சிச்சாறு ஒருத்தேக்கரண்டி தேன் இரண்டுத் தேக்கரண்டி கலந்து
காலை, இரவு தொடர்ந்து ஏழு நாட்கள் குடித்து வந்தால்  நெஞ்சுசளி அகலும். இரத்த அடத்தி குறையும், ஆழ்ந்த தூக்கம் வரும். வயிறு உப்புசம், வாய்வுத் தொல்லை குறையும்.!

மற்றும் சில மூலிகை மருத்துவங்கள்:

1.பித்த நோய்கள்

கேரட் சாறும், தேனும், கலந்து பருகி வர கர்ப்பிணி பெண்கள் வாந்தி நிற்கும். உடல் வலுவாகும்.  பித்த நோய்கள் தீரும்.

2.உடல் தளர்ச்சி

முட்டைக்கோசுடன் பசுவின் வெண்ணெய் கலந்து பாகம் செய்து சாப்பிட்டால் உடல் தளர்ச்சி நீங்கும்.

3.வேர்க்குரு

தயிரை உடலில் தேய்த்து குளிப்பதன் மூலம் வேர்க்குருவை போக்கலாம்.

4.ஞாபக சக்தி

வெண்டைக்காயை உணவில் அடிக்கடி சேர்த்துக் கொண்டால் நரம்புகள் பலமடைவதுடன் மூளையின் இயக்கம் செம்மைப்படும்.

5.நீரழிவு

அருகம்புல் சாற்றை மோருடன் கலந்து குடித்தால் நீரழிவு குணமாகும்.!


 Mobile: 9629368389 amyogatrust.blogspot.com

Wednesday, April 20, 2016

ஜலதோஷம்.

ஜலதோசத்தை இயற்கை வழியில் குணப்படுத்துங்கள்.!

ஜலதோசம் என்பது நுரையீரலில் சேர்ந்துள்ள கெட்டநீர் மற்றும் தலைநீர், அதிகச்சளி போன்ற காரணங்களால் ஏற்படுகிறது.!

ஜலதோசத்திற்கு மருந்து சாப்பிடாவிட்டல் ஒரு வாரத்தில் குணமாகிவிடும்.!
மருந்து சாப்பிட்டால் 7 நாட்களில் குணமாகிவிடும் என்று வேடிக்கையாக கூறுவார்கள்.! நமது முறையை பயன்படுத்தினால்  இரண்டே முறையில் கடுமையான ஜலதோசம் கூட காணாமல் போய்விடும்.! கொஞ்சுண்டு மஞ்சள்தூள் அதில் ஐந்தில் ஒருபங்கு சுண்ணாம்பு இவற்றோடு கொஞ்சம் நீர்சேர்த்து குழைத்து நெற்றியில் திருநீர்  பூசுவது போல் நெற்றியில் பூசிவிட்டு பகலிலோ இரவிலோ கொஞ்சம் தூங்கி எழுந்து விடுங்கள் ஜலதோசமாக வெளியேறி வந்த நீர் கட்டிச்சளியாகி வெளியேறிவிடும்.!

நலம் பெருகட்டும் …

amyogatrust.blogspot.com
mobile:9629368389.!

Monday, April 18, 2016

மஞ்சள் காமாலை

இயற்கை வழியில் காமாலையை
குணப்படுத்துங்கள்.!

மஞ்சள் காமாலை என்பது கல்லீரல்அலர்ஜியால் ஏற்படும்
ஒருநோய்! இதில் பல வகைகள்
இருக்கிறது.! எந்த வகையான கல்லீரல் நோயாக இருந்தாலும் இயற்கையில் முழுதாகக் குணப்படுத்த முடியும்.!  நமது உடலில் உள்ள உள் உறுப்புகளிலேயே வெட்டுப்பட்டோ அழுகியோ போனாலும் கூட மீண்டும் வளரும் ஒரே உள்உறுப்பு கல்லீரல் மட்டும்தான்.!   கல்லீரல் அலர்ஜிக்கு முக்கியக் காரணம் உணவு ஏனெனில் நமது உடலால் சேகரிக்கப் பட்ட அனைத்து உணவின் சாரத்தையும் இரத்தத்திற்கு அனுப்புவது கல்லீரல்தான் அதுபோலவே உடலில் சேகரிக்கப்பட்ட நச்சுக்கழிவுகளை வெளியேற்றுவதில் முக்கிய பங்காற்றுவதும் கல்லீரல் தான்.! கல்லீரலைப் பாதிக்கும் மூன்று முக்கிய விசயம் இரசாயண உணவு,
மது, புகைப்பழக்கம், ஓய்வில்லாத உழைப்பு.! தினமும் பத்து கோக் குடித்தாலோ அல்லது பல வருடங்கள் இரசாயண உணவுகளை தொடர்ந்து எடுத்துக் கொண்டாலோ, தினமும் ஒரு ஆப் அடித்துவிட்டு ஆட்டம் போட்டாலோ தொடர்ந்து ஒரு வருடம் ஓய்வின்றி உழைத்தாலோ கல்லீரல் கெட்டுவிடும் என்று உறுதியாக கூறமுடியாது.! அதனால் தான் கவிஞர் வைரமுத்து அழகாக கூறினார்.! கல்லீரல் கழுதைப்பாரம் சுமக்கும், இடைவிடாது நடக்கும். ஆனால் படுத்துவிட்ட தென்றால் உன்பாடு திண்டாட்டமாகி விடும் என்று.!
ஒருவருக்கு மஞ்சள் காமாலை வந்தவுடன் யூரின் மஞ்சளாக இருக்கும் அதில் ஒருபிடி சோற்றைப் போட்டுப் பார்த்தால்
சோறு மஞ்சளாகிவிடும்.!
கண் வெள்ளைப்பகுதி மஞ்சளாக ஆகிவிடும், சாப்பிட்ட உடன் வாந்திவரும். உடலை முறுக்கிப் போட்டதுபோல் அசதியாக இருக்கும்!
மஞ்சள் காமாலை வரவேக்கூடாது என்று நிணைப்பவர்கள் மேற்கண்ட அறிகுறிகளில் ஏதேனும் ஒன்று அடிக்கடி தென்பட்டாலே வாழ்க்கை முறையை இயற்கை சார்ந்து அமைத்துக் கொள்ள வேண்டும்.!
மஞ்சள் காமாலை வந்துவிட்டால் இரண்டடிக்கு மேல் வளர்ந்த கீழாநெல்லி இலையை ஒரு கையளவு பறித்து நன்றாக இடித்து ஒருடம்ளர் மோரில்  கலக்கி உணவிற்கு அரைமணி முன் காலை, மாலை குடிக்க வேண்டும்.!
உணவாக அரிசிக்கஞ்சி மட்டுமே எடுத்துக் கொள்ள வேண்டும்.!
அதோடு ஒரு பாட்டிலில் தேன் அல்லது கருப்பட்டி பாகில்  நெல்லிக்காயை ஊறவைத்துக் கொண்டு தினமும் மூன்று வேளையும் இரண்டு தேக்கரண்டி தேனோடு நெல்லிக்காயையும் உண்டுவர வேண்டும்.!
<உப்பு,புளி, மிளகாய் நீக்கி ஒருவாரம் ஓய்வெடுக்க வேண்டும்>
பிறகு நாற்பத்தெட்டு நாட்கள் வரை  கஞ்சி, இரசஞ்சோறு, தயிர்சாதம், பழ உணவுகளை அதிகம் பின்பற்றிக் கொண்டே தினமும் தேன்நெல்லியையும் தின்றுவந்தால்  மஞ்சள் காமாலைநோய் பறந்துவிடும்.! தினமும் குளிக்கலாம்.! இது நாம் உட்பட பலரும்  பயன்படுத்தி வெற்றிகண்ட இயற்கை முறை நீங்களும் கடைப்பிடித்து வெற்றி அடையுங்கள்.!
நலம் பெருகட்டும் …

amyogatrust.blogspot.com
mobile:9629368389

Monday, April 11, 2016

கோடைவியாதிகள் - கண்கட்டி

கண்கட்டி வராமல் தடுப்பது எப்படி?

தற்போது வெயில் தகித்து வருகிறது. வெப்பத்தால் தலை முதல் கால் வரை நமது உறுப்புகள் பாதிப்பை சந்திக் கின்றன. கண்களும் வெகுவாக பாதிக்கப்படுகிறது. இதனால் கண்ணில் கட்டி ஏற்பட்டு பாடாய்படுத்தி விடுகிறது. வெயில் தாக்கத்தில் இருந்து கண்களை பாதுகாக்கும் வழிகள் பற்றி விளக்கு கிறார் கண் மருத்துவர் சித்தார்த்தன்.

கண்கட்டி என்பது கண்ணின் இமைப் பகுதி மற்றும் கீழ்ப்பகுதியில் கொப்புளம் போல உருவாகும். இது வலி மற்றும் கண்ணில் உறுத்தலை உண்டாக்கும். சில நேரம் இந்த கட்டிகள் ஒரு வாரம் வரை நீடிக்க வாய்ப்புள்ளது. மேலும் வெயில் காலத்தில் கண்கட்டி பிரச்னை அதிகமாக இருக்கும். வெயிலில் அலையும் போது, உடல் உஷ்ணம் அதிகரிப்பதால் கண்கட்டி உருவாகிறது. அழுக்குகள், தூசுகளாலும் இது ஏற்படலாம். சாலையில் செல்லும் போது தூசு, புழுதி முகத்தில் படிகிறது. கண்களிலும் தூசுகள் படிந்து பாதிப்பை ஏற்படுத்துகின்றன. இதுபோன்ற சூழலில் கண்ணில் உடனே கிருமித்தொற்று உருவாகிறது. புழுதி, மண், புகை உள்ளிட்டவைகளுடன் உஷ்ணமும் சேர்ந்து கொண்டால் கண்ணில் கட்டிகள் எட்டி பார்த்து விடுகிறது. வெயில் காலத்தில் அதிக வியர்வை வெளியேறுவதால் உடல் உலர்ந்து போகிறது. கண்ணில் உள்ள கண்ணீர், விழிப்படலத்துக்கான ஈரப்பசையை கொடுக்கிறது. வெயிலில் செல்லும் போது இந்த கண்ணீர் விரைவில் ஆவியாகி விடுவதால் கண் உலர்ந்து எரிச்சலை ஏற்படுத்தும். மேலும் புறஊதா கதிர்களின் தாக்கம் வெப்ப காலத்தில் அதிகமாக இருக்கும். அவையும் கண்களுக்கு பாதிப்பை ஏற்படுத்தும். இதிலிருந்து பாதுகாத்துக் கொள்ள தரமான குளிர்க்கண்ணாடி களை (கூலிங் கிளாஸ்)பயன்படுத் தலாம். வெயில் காலம் மட்டுமல்லாமல், எப்போது வெளியில் சென்றாலும் குளிர் கண்ணாடிகளை பயன்படுத்தலாம். பாதுகாப்பு முறை: வெயில் தலையில் பட்டு உடல் உஷ்ணம் அதிகரிக்காமல் தடுக்க தொப்பிகள் அணிவது நல்லது. எங்கு சென்றாலும் ஒரு பாட்டில் குடிநீரும் கையில் இருக்கட்டும். வெயிலால் கண் உலர்வு ஏற்படும் போது இந்த தண்ணீ ரால் கண்களை கழுவிக் கொள்ளலாம். அதிக நேரம் வெயிலில் அலைவதால் ஏற்படும் கண் எரிச்சலுக்கு கண் சொட்டுமருந்துகள் உள்ளன. இவற்றை மருத்துவரின் ஆலோசனைப்படி பயன்படுத்தலாம். வெயிலில் சுற்று பவர்கள் அடிக்கடி முகத்தையும் கண் களையும் குளிர்ந்த தண்ணீரில் கழுவ வேண்டும். இது கண்களில் தூசு படிவஎதையும், உலர்வதையும் தடுக்கும். கண்கள், முகம் புத்துணர்ச்சியுடன் காணப்படும். கண்ணில் பிரச்னை வரும் போது மருத்துவரின் ஆலோசனைப்படி சிகிச்சை எடுத்துக் கொள்வது நல்லது. ரெசிபி பாலக்பனீர்: 200 கிராம் பனீரை பொடியாக நறுக்கி எண்ணெயில் வறுத்துக் கொள்ளவும். ஒரு கட்டு பாலாக்கீரையை 10 நிமிடம் வேக வைத்து மிக்சியில் அரைத்துக் கொள்ளவும். தக்காளி, வெங்காயம், இஞ்சி, பூண்டு விழுது, சிவப்பு மிளகாய் ஆகியவற்றை வதக்கி அரைத்துக் கொள்ளவும். வாணலியில் எண்ணெய் ஊற்றி முந்திரி போட்டு பனீர் சேர்த்து அரைத்த விழுதை சேர்க்கவும். கரம்மசாலாத்தூள் மற்றும் உப்பு சேர்த்து கொதிக்க விடவும். பாலக்கீரையில் வைட்டமின் ‘ஏÕ சத்து உள்ளது. பனீர் உடலுக்கு குளிர்ச்சி தருகிறது. ராகிபழ அப்பம்: ராகி மாவு அரை கப், மைதா மாவு அரை கப், பொடியாக வெட்டிய 2 வாழைப்பழம் ஆகியவற்றுடன் சிறிதளவு உப்பு மற்றும் சர்க்கரை சேர்த்து பிசைந்து கொள்ளவும். தோசை பதத்தில் ஆப்பம் போல் சட்டியில் வார்த்து எடுக்கவும். இந்த இனிப்பு அப்பத்தில் நார்ச்சத்து உள்ளது. வாழைப்பழம் சேர்ப்பதால் உடலுக்கு குளிர்ச்சி. பனீர் பொடிமாஸ்: இரண்டு கப் பனீரை ஆவியில் வேக வைத்து உதிர்த்துக் கொள்ளவும். அரை கப் நறுக்கிய குடை மிளகாய், வெங்காயம் அரை கப், கேரட் துருவல் ஒரு டேபிள் ஸ்பூன், பச்சை மிளகாய் 2 ஆகியவற்றுடன் உதிர்த்து வைத்துள்ள பனீரையும் சேர்த்து தாளித்து வதக்கவும். இறுதியில் அரை எலுமிச்சை பழத்தை பிழிந்து, கொத்தமல்லி இலை சேர்த்து அலங்கரிக்கவும். இதில் புரோட்டீன் மற்றும் வைட்டமின்கள் உள்ளன. பாட்டி வைத்தியம் அகத்திக் கீரை சாற்றுடன் துவரம் பருப்பு 100 கிராம், தேங்காய்ப்பால் சேர்த்து வேக வைத்து சாப்பிட்டால் கண் எரிச்சல் தீரும். அகத்திக் கீரையை அரைத்து உச்சந்தலையில் ஒரு மணி நேரம் வைத்திருந்து குளித்தால் உடல் சூடு குறையும். அல்லிக் கொடியை தேங்காய் எண்ணெயில் போட்டு காய்ச்சி தைலமாக தயாரித்து தலையில் தேய்த்து வந்தால் உடல் சூடு தணியும். ஒரு கைப்பிடி ஆதொண்டை இலையை ஒரு லிட்டர் நல்லெண்ணெயில் போட்டு கொதிக்க வைத்து தைலம் தயாரித்து, தலைக்கு தேய்த்து குளித்து வந்தால் கண் நோய் குணமாகும். இசப்கோல் விதையை பொடி செய்து தேனில் கலந்து சர்பத் செய்து குடித்து வந்தால் உடல் சூடு தணியும். வெந்தயக் கீரையுடன் பூண்டு, உப்பு சேர்த்து அரைத்து சாப்பிட்டால் சூடு குறையும். வெங்காயத் தாளை அரைத்து அதில் வெந்தயத்தை ஊற வைத்து காய வைக்கவும். பின்னர் பொடி செய்து ஒரு ஸ்பூன் அளவுக்கு சாப்பிட்டால் சூடு தணியும். வல்லாரைக் கீரையை அடிக்கடி உணவில் சேர்த்துக் கொண்டால் கண்கள் குளிர்ச்சி அடையும். முருங்கைக் கீரையை அரைத்து தலையில் தேய்த்துக் குளித்தால் உடல் குளிர்ச்சியடையும். டயட் தொடர்ந்து வெயிலில் அலைவது, கண்களில் தூசுபடுவது போன்றவற்றை தடுப்பது அவசியம். குறைந்தது மூன்று லிட்டர் தண்ணீர் குடிக்க வேண்டும். வைட்டமின் ‘ஏ’ சத்து உள்ள கீரை வகைகளான அகத்திக் கீரை, பாலாக் கீரை, முருங்கைக் கீரை, கொத்தமல்லி, கருவேப்பிலை ஆகியவற்றை கட்டாயம் உணவில் சேர்க்க வேண்டும். கீரை, பால், வெண்ணெய், மோர், தயிர் ஆகியவற்றை தினமும் உணவில் சேர்த்துக் கொள்ளவும். உணவு தயாரிக்க கடலை எண்ணெய், ரீபைண்டு ஆயிலுக்கு பதிலாக நல் லெண்ணெய், தேங்காய் எண்ணெய் பயன்படுத்தலாம். காய்கறிகளில் கேரட், மாங்காய், தக்காளி, மீன் ஆகியவற்றில் இருந்து அதிகளவு வைட்டமின் ‘ஏ‘ சத்து கிடைக்கிறது. சிக்கன் சாப்பிட்டால் உடல் சூடு அதிகரிக்கும். அதற்கு பதிலாக மீன் அல்லது ஆட்டு இறைச்சி சாப்பிடலாம். வெந்தயத்தை பொடியாக்கி மோரில் அரை ஸ்பூன் கலந்து தினமும் இரண்டு முறை குடிப்பது உடல் சூட்டை தணிக்கும். இதை வெறும் வயிற்றில் குடித்தால் நல்ல பலன் கிடைக்கும். இளநீர், தர்பூசணி உள்ளிட்ட நீர்ப்பழங்களும் உஷ்ணத்தை குறைக்கும் என்கிறார் உணவு ஆலோசகர் சங்கீதா.!

நலம் பெருகட்டும் …

எருக்கு - மறந்து போன மூலிகை.

நோய்களை எட்ட விரட்டும் எருக்கு..! 12

ஆண்டுகள் நீரில்லாமல் வாழும்! 'தெய்வீக மூலிகை’ எனப் போற்றப்படும் எருக்கு, வளமற்ற நிலங்கள், பராமரிக்கப்படாத வயல்கள், சாலையோரங்கள், சுடுகாடு... என எங்கும் விளையும். பன்னிரண்டு ஆண்டுகள் வரை மழையே இல்லாவிட்டாலும்கூட உயிர்வாழும் ஆற்றல் கொண்டது.

அகன்ற எதிரடுக்கில் அமைந்த இலைகளைக் கொண்ட, நேராக வளரும் பாலுள்ள குத்துச்செடி. ஒழுங்கற்ற அரைக்கோள வடிவில் உள்ள இதன் காய்க்குள் உள்ள பஞ்சில் விதைகள் இருக்கும். முற்றிய காய்கள் வெடித்து காற்றில் பறக்கும்போது, பஞ்சுகள் ஆங்காங்கு விழுந்து மட்கி... அதனுள் உள்ள விதைகள் மண்ணில் பதிந்து முளைத்து செடியாகும்.

மனிதர்கள், பறவைகள், விலங்குகள் என யாருடைய தயவும் இல்லாமல் தன் இனத்தை தானே உற்பத்தி செய்து கொள்கிறது, எருக்கு. இத்தனை சிறப்பு வாய்ந்த எருக்கை நாம் கொண்டாட தவறிவிட்டோம். விநாயகர் சதுர்த்தி தினத்தைத் தவிர, மற்ற நாட்களில் எருக்கின் அருகேகூட செல்லத் தயங்கு கிறோம்.

உண்மையில் நம்முடைய பலவிதமான நோய்களுக்கான தீர்வை தன்னுள் வைத்துக் கொண்டிருக்கும் இந்த எளிய செடியின் மருத்துவ குணங்களைத் தெரிந்துக் கொண்டால், ஆச்சரியத்தில் விழிகளை விரிப்பீர்கள்.

''எருக்கம்பால் கட்டிகளையே
கரைக்கும் வாயுவைத் திறக்கறவே கொன்றுவிடும் தீர
செருக்கான சந்நிவலி தீர்க்கும் சார்ந்த பல செந்தூரம் உண்ணமுடியுமென ஓது''

-என்கிறது, சித்தர்பாடல். ஆதிமனிதனின் கயிறு! எருக்கின் இலை, பூ, பட்டை, வேர் என அனைத்திலும் மருத்துவக் குணங்கள் கொட்டிக் கிடக்கின்றன. ஆடு, மாடு மேய்ப்பவர்கள் காலில் முள் தைத்தால், எருக்கு இலையை உடைத்து அதன் பாலை முள் தைத்த இடத்தில் பூசிக்கொள்வார்கள். இதனால் வலி குறைவதுடன், அந்த இடம் பழுத்து, முள் வெளியே வந்துவிடும். இதை இன்றைக்கும் கிராமங்களில் பார்க்கலாம். அதனால்தான் 'ஏழைக்கு வைத்தியம் எருக்கு’ என்று சொல்லி வைத்திருக்கிறார்கள். தென்னைநார்க் கயிறு, ட்வைய்ன் நூல், நைலான் கயிறு, இரும்பு ரோப் என கயிறுகளின் பல பரி மாணங்களை இன்றைக்குப் பயன் படுத்துகிறோம். ஆனால், ஆதி மனிதனுக்கு கயிறாகப் பயன்பட்டவை, எருக்கு நார்களும், சில கொடி வகைகளும்தான். எருக்கு நார் மிகவும் வலுவானது. வில்லின் நாண், மீன் வலை, முருக்கு நூல் என எருக்கு நாரை பலவிதமாகப் பயன்படுத்தியிருக் கிறார்கள்.

 பண்டைத் தமிழர்கள். இலவம்பஞ்சு தலையணை கிடைக்காதவர்களுக்கு, எருக்குக் காயிலுள்ள பஞ்சுதான் தலையணையாக இருந்திருக்கிறது.

விஷக்கடிக்கு மருந்து! இதன் இலை, விஷமுறிவுக்குப் பயன்படுகிறது. பாம்பு கடித்தவர்களுக்கு முதலுதவி சிகிச்சையாக எருக்கு இலையை அரைத்து... புன்னைக் காய் அளவு (கோலிகுண்டு அளவு) உள்ளுக்குக் கொடுத்தால், விஷம் இறங்கும். அடுத்து,
மருத்துவரிடம் கொண்டு செல்லலாம்.

தேள் கடித்தால், இதே இலையை அரைத்து சுண்டைக்காய் அளவு கொடுத்து, கடிவாயிலும் வைத்து கட்டினால் விஷம் இறங்கும்.

மூன்று துளி எருக்கன் இலைச் சாறு, பத்து துளி தேன் கலந்து கொடுத்தால், வயிற்றில் உள்ள புழுக்கள் வெளியே வந்துவிடும்.

குதிகால் வலி இருந்தால், சூடான செங்கல் மீது, பழுத்த எருக்கு இலையை வைத்து அதன்மீது குதிகாலை வைத்து வைத்து எடுத்தால், வலி குறையும்.

எருக்கு இலையை நெருப்பில் வாட்டி பொறுக்கும் சூட்டில், உடம்பில் உள்ள கட்டிகள் மீது வைத்து கட்டினால், கட்டிகள் உடையும்.

இலையை எரித்து, புகையை வாய்வழியாக சுவாசித்தால், மார்பு சளி வெளியேறும்.

ஆஸ்துமாவை விரட்டும் வெள்ளெருக்கு! எருக்கன் பூவைக் காய வைத்துப் பொடியாக்கிக் கொள்ள வேண்டும். இந்தப் பொடியில் 200 கிராம் எடுத்து, சிறிது சர்க்கரை சேர்த்து இரண்டு வேளை சாப் பிட்டு வந்தால், பால்வினை நோய், தொழு நோய் குணமாகும். வேரை கரியாக்கி, விளக்கெண்ணெய் கலந்து மேற்பூச்சாகப் பயன்படுத்தினால் கரப்பான், பால்வினை நோய்ப் புண்கள், ஆறாத காயங்கள் ஆறும். இதன் பால்... பொடுகு, படை, மூட்டுவலி, மூட்டுவீக்கம், மூலநோய்க்கு சிறந்த நிவாரணி என்கிறது சித்த மருத்துவம்.

கத்திரிப்பூ நிறப் பூக்களைக் கொண்ட எருக்குதான் பெரும்பாலான இடங்களில் இருக்கும். ஆனால், வெள்ளை நிறப் பூக்களை உடைய எருக்கு அரிதாக காணப்படும். இதை வெள்ளெருக்கு என்பார்கள். இதுதான் பிள்ளையாருக்கு உகந்ததாக கருதப்படுகிறது. இந்த எருக்கின் வேர்களில் பிள்ளையார் உருவங்களைச் செதுக்கி வழிபடு வார்கள். இந்த வெள்ளை எருக்கின் பூக்கள் ஆஸ்துமாவை விரட்டும் அருமருந்து. வெள்ளெருக்குப் பூக்களின் நடுநரம்பை நீக்கிவிட்டு, இதழ்களை மட்டும் எடுத்துக் கொள்ளவேண்டும். இதற்கு சம அளவு மிளகு, கிராம்பு சேர்த்து மை போல அரைத்து, மிளகு அளவுக்கான மாத்திரைகளாக உருட்டி, நிழலில் உலர்த்திக் கொள்ள வேண்டும். மூச்சிரைப்பு அதிகமாகும்போது, இதில் ஒரு உருண்டையை வாயில் போட்டு நீர் அருந்தினால், உடனே இரைப்பு தணியும்.

'10கிராம் இஞ்சி, 3 வெள்ளெருக்குப் பூக்கள், 6 மிளகு ஆகியவற்றை நசுக்கி, அரை லிட்டர் தண்ணீரில் போட்டு, கால் லிட்டராகும் வரை சுண்டக் காய்ச்சி தினமும் இரண்டுவேளை குடித்து வந்தால், இரைப்பு குறையும்’ என்கிறார்கள், சித்த மருத்துவர்கள்.

குழந்தைகளுக்கான சத்துமாவு

செய்முறை

வரகு 1கிலோ
கைகுத்தல் அரிசி 300 கிராம்
உளுந்து 150 கிராம்
சிறுபயறு 100 கிராம்
பொரிகடலை 100 கிராம்
பார்லி அரிசி 50 கிராம்
எள் 25 கிராம்
பிஸ்தா பருப்பு 10 கிராம்
பாதாம் பருப்பு 10 கிராம்
முந்திரி பருப்பு 10 கிராம்
வேர்க்கடலை  10 கிராம்
ஏலக்காய் 10 கிராம்

இவற்றில் வரகு , பார்லியை தவிர எல்லாவற்றையும் தனித்தனியாக லேசாக வறுத்து வைத்துக்கொண்டு வரகு பார்லியுடன் அனைத்தையும் சேர்த்து  இயந்திரத்தில் பொடித்து வைத்துக்கொண்டு இரண்டு தேக்கரண்டி மாவுடன் தேவையான அளவு பனங்கற்கண்டு சேர்த்து நீர்விட்டு காய்ச்சி குழந்தைகளுக்கு கொடுத்து வந்தால் குழந்தைகளுக்கு நோய் எதிர்ப்பு ஆற்றல் அதிகரிக்கும்
ஊட்டச்சத்து குறைபாடு நீங்கும்
வயிறு உப்புசம்,  மலச்சிக்கல் போன்ற உபாதைகள் சீராவதுடன். நெஞ்சுச்சளியும் அகலும்.! இந்த மாவை 6 மாதம் முதல் உள்ள எல்லாக் குழந்தைகளுக்கும் இரண்டு வேளை கொடுக்கலாம்.!

ஓர் அனுபவம்.!

இந்தக்குறிப்பை இலங்கையை சேர்ந்த நமது  முகநூல் நட்பாளர் Magesh Rahini Sivakumar அவர்கள் கூறி இருந்தார். இலங்கையில் உள்ள ஒரு ஆயுர்வேத மருத்துவமனையில் இந்தக் குறிப்பை கற்றுகொண்டதாகவும் தனது பேரனுக்கு இந்த சத்துமாவை தொடர்ந்து குடுத்து வருவதால் மிக ஆரோக்கியமாக இருப்பதுடன், எந்த பருவகால நோய்களும் அவனை தாக்குவதில்லை. அதோடு அவன் இந்தமாவை மிகவும் விரும்பி சாப்பிடவும் செய்கிறான். சமீபத்தில் எங்கள் பகுதியில் உள்ள அனைத்து குழந்தைகளும் சளியால் அவஸ்தை பட்டபோது கூட இவன் மிக ஆரோக்கியமாக இருந்தான். இது குறித்து எங்கள் பகுதி மருத்துவர்கள் கூட ஆச்சரியம் தெரிவிக்கின்றனர். நன்றி ஆயுர்வேதா என்று கூறி இருந்தார்.!

இந்தத் தகவலை அறிந்த நாம்  சளியால் அவஸ்தைபட்டு வந்த நமது மாணவர் ஒருவரின் ஒரு வயது குழந்தைக்கு மேற்கண்ட முறைப்படியானப் பொருளோடு கால்கிலோ சுத்தமான பனங்கற்கண்டும் சிறிது அமுக்ரா சூரணமும் சேர்த்துப் பொடித்து இரண்டு நாட்களாக கொடுத்து வந்தோம்.! சளியால் எப்பொழுதும் முசுமுசுவென  மூச்சுவிட சிரமப்பட்ட நண்பரின் பெண் குழந்தை இப்பொழுது நன்றாக மூச்சுவிடுகிறது. சளியும் துண்டுத்துண்டாக வெளியேறுவதாக கூறி மிக நன்றி ஆசானே என்றதுடன் இன்னும் எவ்வளவு மாவு இருக்கிறது, அவ்வளவும் எனக்கு வேண்டும் என்று வாங்கிசென்றுவிட்டார்.!

அடடா.! இருக்கிற மூலிகைகளையே நம்மால் தட்டுப்பாடில்லாமல் தயாரிக்க முடியவில்லை. இதில் புதிதாக இதுவும் சேர்ந்து விட்டதா, என்று முனகியபடியே இன்று நமது சத்துமாவோடு மீண்டும் இந்த மாவை ஒரு நான்கு கிலோ மட்டும் இன்று தயாரிக்கப் போகிறேன்.!

நீங்களும் இதை தயாரித்து கொடுத்து உங்கள் குழந்தைகளின் ஆரோக் கியத்தை மேம்படுத்துங்கள் செர்லாக், ஹார்லிக்ஸ் , இருமல் டானிக் போன்ற இரசாயண அரக்கர்களிடம்  இருந்து குழந்தை செல்வங்களின் ஆரோக்கி யத்தை  மீட்டெடுங்கள்.!நமது நண்பர்கள் யாருக்காவது இந்த குழந்தை ஊட்டமாவு  வேண்டுமானால் உடனே அழைக்கவும்.  அல்லது நமது மாணவர்  அசோக் வந்து இந்த மாவும் தனது குழந்தைக்கு வேண்டும் என்று தூக்கிசென்று போய்விடப்போகிறார்.!


amyogatrust.blogspot.com
mobile:9629368389
நலம் பெருகட்டும் …

சீரகம்

உடல் எடை குறைக்க உதவும்  சீரகம்.

தினமும் இதை 1 டீஸ்பூன் சாப்பிட்டால், பதினைந்து  கிலோ வரை எடைகுறைக்க முடியும்!

அன்றாட உணவில் சேர்த்து வரும் வாசனை மிகுந்த மசாலா பொருளான சீரகம் உடல் எடையை வேகமாக குறைக்க உதவும்.  அதிலும் தினமும் சீரகத்தை தொடர்ந்து எடுத்து வந்தால், 20 நாட்களில் நல்ல மாற்றத்தைக் காணலாம். சீரகம் உடல் எடையைக் குறைக்க உதவுமா என்பது குறித்து சமீபத்தில் ஆய்வு ஒன்று நடைபெற்றது.

அந்த ஆய்வில் உடல் பருமனான 88 பெண்களை தினமும் சீரகத்தை எடுத்து வர செய்ததில், உடல் மெட்டபாலிசம் அதிகரித்து, செரிமானம் சீராகி, கலோரிகள் வேகமாக எரிக்கப் பட்டிருந்தது தெரிய வந்தது.

அதுமட்டுமின்றி, சீரகம், வேறு பல நன்மைகளையும் உள்ளடக்கியுள்ளதாம்.

உடல் எடையை வேகமாக குறைக்க சீரகத்தை எப்படியெல்லாம் எடுத்துக் கொள்ள வேண்டும் எனப் பார்ப்போம்.

உங்களுக்கு மிகவும் வேகமாக 15 கிலோ எடையைக் குறைக்க ஆசை இருந்தால், கீழே கொடுக்கப்பட்டுள்ள வழிகளில் உங்களுக்கு பிடித்ததை தேர்ந்தெடுத்து, அந்த வழியில் சீரகத்தை உட்கொண்டு வாருங்கள்.

1.  சீரக தண்ணீர்

இரண்டு டேபிள் ஸ்பூன் சீரகத்தை நீரில் போட்டு இரவு முழுவதும் ஊற வைத்து, மறுநாள் காலையில் அந்த நீரை கொதிக்க வைத்து, வடிகட்டி, அதில் சிறிது எலுமிச்சையை பிழிந்து, இரண்டு வாரத்திற்கு தினமும் காலையில் குடித்து வர, விரைவில் உடல் எடை குறைந்திருப்பதைக் காணலாம்.

2. சீரகப் பொடி மற்றும் தயிர்.

சிறிது தயிரில் 1 டீஸ்பூன் சீரகப் பொடி சேர்த்து கலந்து தினமும் உட்கொண்டு வந்தால், உடல் எடையைக் குறைக்கலாம்.

3. சீரகப் பொடி மற்றும் தேன்

அரை டீஸ்பூன் சீரகப் பொடியை நீரில் சேர்த்து, அதோடு தேன் கலந்து தினமும் குடித்து வருவதன் மூலமும் உடலில் உள்ள கொழுப்புக்களைக் கரைத்து உடல் எடையைக் குறைக்கலாம்.

4. சூப்புடன் சீரகப் பொடி.

தினமும் சூப்புடன் சீரகப் பொடியை ஒரு டீஸ்பூன் சேர்த்து கலந்து குடித்து வர, உடல் எடை குறையும்.


5. எலுமிச்சை மற்றும் இஞ்சி எடையைக் குறைக்க உதவும் பொருட்களில் முதன்மை யானவை. அதிலும் சீரகத்துடன் சேர்ந்தால், இதன் சக்தி அதிகமாகும்.

ஒரு பாத்திரத்தில் கேரட் மற்றும் பிடித்த வேறு காய்கறிகளை சேர்த்து நன்கு வேக வைத்துக் கொள்ளவும். பின் அந்த காய்கறிகளில் இஞ்சியை துருவிப் போட்டு, எலுமிச்சை சாறு, சீரகப் பொடி சேர்த்து கலந்து, இரவு நேரத்தில் உட்கொண்டு வர, உங்கள் எடை குறைவதை நன்கு காணலாம்.

6. தொப்பையைக் குறைக்கும் சீரகம்

சீரகம் உடலில் கெட்ட கொழுப்புக்கள் சேர்வதைத் தடுத்து, அதிகப்படியான கலோரிகளை எரிக்கும்  உடலின் மெட்டபாலிசத்தை அதிகரிக்கும் ஊட்டச் சத்துக்களும், ஆன்டி-ஆக்ஸிடன்ட்டு களும் ஏராளமாக உள்ளது. இதனால் இவற்றை அன்றாட உணவில் எடுத்து வந்தால், கொழுப்புக்களால் அதிகரித்த தொப்பையைக் குறைக்கலாம்.

7. சீரகத்தின் வேறுசில நன்மைகள்

மாரடைப்பைத் தடுப்பது,
ஞாபக சக்தியை அதிகரிப்பது, நோயெதிர்ப்பு மண்டலத்தை வலிமைப்படுத்துவது,
இரத்த சோகையை சரிசெய்வது, செரிமானத்தை மேம்படுத்துவது,
வாய்வு தொல்லையை நீக்குவது .

Thanks:  Sree danvanthri ayurveda vaithiyasalai,  Tirunelveli

மதுமேக சூரணம்!

            மதுமேக சூரணம்
(சர்க்கரை நோய் கட்டுப்படுத்த)

செய்முறை:


எள்ளுப்பிண்ணாக்கு 18கிராம், ஆவாரம்பட்டை 18 கிராம்,
பருத்தி பருப்பு 48 கிராம்,
வால் மிளகு 24 கிராம்,
இலவங்கப்பட்டை 24 கிராம்,
மாசிக்காய் 12 கிராம்,
சிறுநாகப்பு 12 கிராம்,சுத்தி செய்த பறங்கிப்பட்டை 24 கிராம்,

இவைகளைச் சேகரித்துக் கொள்ளவும். பின் நன்றாக இடித்து சலித்து வைத்ததுக்கொண்டு காலை, மாலை ஒரு டீஸ்பூன் அளவு வெண்ணீரில் கலந்து சாப்பிடவும்.

இந்த சூரணத்தால் தீரும் நோய்கள் :

1. வெகுமூத்திரம்,
2. இந்திரிய நஷ்ட்டம்,
3. சர்க்கரை நோயால் ஏற்படும் அரிப்பு மற்றும் புண்கள்.

இதனுடன் காளமேக நாராயணச் செந்தூரம் ஒன்று அல்லது இரண்டு அரிசியளவு சேர்த்துக்கொள்ளவும்.

Wednesday, April 6, 2016

வாழைத்தண்டு

அல்சரைத் தடுக்கும் வாழைத்தண்டு !

வைட்டமின் ஏ, பி6, சி, ஃபோலேட்ஸ், நியாசின் உள்ளன.

சிறுநீரகம், பித்தப்பை ஆகியவற்றில் உள்ள கற்களைக் கரைக்கும்.

ரத்தசோகை, கரோனரி இதய நோய், நரம்பு மண்டலப் பிரச்னை உள்ளவர்களுக்கு ஏற்றது.

ரத்த அழுத்தம், அதிகப்படியான இதயத் துடிப்பு கட்டுக்குள் வரும்.

நார்ச்சத்து உள்ளதால், கொழுப்பின் அளவைக் குறைக்கும்.

வைட்டமின் ஏ இருப்பதால், கண்களுக்கு நல்லது.

இதில் உள்ள மக்னீசியம், எலும்புகளை வலிமையாக்கும்.

கர்ப்பிணிகள் வாரம் ஒருமுறை உண்ணலாம்.

உடலில் உள்ள தொற்றுக்கள், கழிவுகள் வெளியேறும்.


உடல் எடை குறைக்க நினைப்போருக்கு சிறந்த தீர்வுnu

பைட்டோகெமிக்கல்ஸ் சத்துக்கள் உள்ளதால், அல்சரைத் தடுக்கும்.

Monday, April 4, 2016

தலைவலி குணமாக:

i. விரலி மஞ்சளை விளக்கெண்ணெயில் முக்கி,  விளக்கில் காட்டி சுட்டு அதன் புகையை மூக்கின் வழியாக உரிஞ்ச தலைவலி, நெஞ்சுவலி முதலியன அகலும்.

ii . கீழாநெல்லிச்சாறு, உத்தாமணிச்சாறு, குப்பைமேனிச் சாறு சமமாக கலந்து நல்லெண்ணையில் எரித்து நசியமிட ஓயாத தலைவலி தீரும்.

iii . திருநீற்று பச்சிலைசாறு, தும்பைச்சாறு இரண்டும் கலந்து பச்சை கற்பூரம் சேர்த்து மூக்கில் உறிஞ்ச தலைவலி பாரம் குணமாகும். குப்பைமேனி சாறும் தலைவலிக்கு நல்ல குணம் தரும்.

தீராத தலைவலி நீங்க :

தும்பைப் பூவின் இலையை கசக்கி அந்தச் சாறை முகர்ந்தால் தலைவலி உடனே நீங்கும்.

தலைப்பாரம் குறைய :

நல்லெண்ணெயில் தும்பை பூவை போட்டு காய்ச்சி தலையில் தேய்த்து குளித்து வர தலைபாரம் குறையும்.

ஜலதோஷத்தின் போது உள்ள தலைவலி நீங்க:

சிறு கொண்டியில் நீர் ஊற்றி ஒரு ஸ்பூன் மஞ்சள் தூளை போட்டுக் கலக்கி கெண்டியை அடுப்பில் சூடேற்ற ஆவி வெளிவரும். வெளிவரும் ஆவியை பிடித்தால் தலைவலி குணமாகும்.

தலைபாரம், நீரேற்றம் நீங்க:

இஞ்சியை இடித்துச் சாறு எடுத்து சூடாக்கி தலையில் நெற்றியில் பற்று போட குணமாகும்.

கடுமையான தலைவலி:

ஐந்தாறு துளசி இலைகளும் ஒரு சிறுதுண்டு சுக்கு 2 இலவங்கம் சேர்த்து மைபோல் அரைத்து நெற்றியில் பற்றாகப் போட்டால் தலைவலி குணமாகும்.

Saturday, April 2, 2016

வாழை இலைக்குளியல்



உலகில் உள்ள எல்லா தாவரங்களும் கரியமிலா வாய்வை உண்டு அக்ஸிஜனை வெளிவிடுகின்றன. அதில் சுத்தமான பிராணக் காற்றும் கலந்திருக்கும். ஆனால், வாழை இலை  மட்டுமே கரியமிலா வாய்வை உண்டு சுத்தமான பிராணக்காற்றை மட்டுமே வெளிவிடுகின்றன.!
இன்றைக்கு சைனா போன்ற நாடுகளிலும் நமது பெருநகரங்களிலும் சுத்தமான காற்றை சுவாசிக்க கட்டணம் வசூலித்து விட்டு காற்றை விற்கிறார்கள். ஆனால் அதுவும் தூய பிராணாக்காற்று அல்ல.! ஏனெனில் காற்றைப் பிடித்து அதில் உள்ள மாசை வடிகட்டி நமக்கு அளிக்கிறார்கள்.! இதில் உண்மையில் பிரணாக்காற்று இருப்பதில்லை. வெறும் சக்கையான காற்று மட்டுமே உள்ளது. இதனால் உடலுக்கு பெரிய நன்மை எதுவும் கிடைக்காது. ஆனால், இயற்கையான வாழை இலையில் சாப்பிடுவதாலும், வாழையில் உள்ளிருந்து வெளியேறும் காற்றை சுவாசிப்பதலேயும் நமது உடலில் 100% பிராணக்காற்று அதிகரிக்கும்.! அதனால் தான் உடல் எரிந்த நிலையில் பிரணான் அல்லாடிக் கொண்டிருப் பவர்களை  வாழையில் படுக்க வைக்கிறார்கள்.!
இது மட்டுமல்லாமல் இலையை சுட்டு புண்களில் தடவுவது, வயிற்றுப் புண்ணுக்கு காய்ந்த இலையோடு தேன் கலந்து சாப்பிடுவது போன்ற பல்வேறு பழக்கங்கங்களை நமது முன்னோர்கள் கடைப்பிடித்தனர் அதில் ஒன்றுதான் வாழை இலைக்குளியல் வாழை இலைக்குளியல் செய்வதால் போகுப் போகும் உயிரைக்கூட திரும்ப மீட்க முடியும் என்கிறார்கள் இயற்கை ஞானிகள்.!
வாசியை சுத்தப்படுத்தும் இரகசியம் தெரிந்து விட்டால் உடலின் சேர்ந்து விட்ட அளவுக்கதிகமான கரியமிலா வாய்வை ஒரு மணி நேரத்தில் வெளியேற்றி விடலாமே.!

வாழை இலைக்குளியல்
செய்முறை

1. இயற்கை வழியில் விளைவித்த வாழை இலைகளை ஆளுக்கு தகுந்தாற்போலும் உருவத்திற்கு தகுந்தாற் போலும் சேகரித்துக் கொள்ள வேண்டும். சுமாராக ஒருவருக்கு  எட்டு இலைகள் வரை தேவைப்படும்.!
2.தரையில்  ஆறு வாழை நார், நூல் கயிறு அல்லது தென்னங்கயிற்றை வரிசையாக போட வேண்டும்.
3.அதன் மேல் நான்கு வாழை இலைகளை நன்றாக துடைத்து இலையின் தண்டை கையால்  லேசாக சதைத்து போடவேண்டும்.!
4.ஒரு காட்டன் டவலை சிறிது நனைத்து தலையில் மப்ளர்போல் சுற்றிக் கட்டிக் கொள்ள வேண்டும்.
5.நான்கு முதல் ஆறு டம்ளர் வரை நீரை குளியல் செய்யப் போகின்ற வருக்கு குடிக்க கொடுக்க வேண்டும்.!
6.பிறகு மெதுவாக அவரை வாழையில் படுக்க வைத்து விட்டு அவரின் மேல் நான்கு முதல் ஆறு இலைகளை  தலை முதல் பாதம் வரை வெளியே தெரியாமல் வைத்து நன்றாக மூடிவிடவும். சுவாசம் செய்வதற்காக மூக்கின் மேல் வைக்கும் இலையை மட்டும் லேசாக வெட்டிக் கொள்ள வேண்டும்.!
7.அப்படியே கயிறால் கட்டி படுக்க விடவும். இருபது முதல் 30 நிமிடம் வரை இப்படி இருக்க வேண்டும். உடல் முழுவதும் நன்றாக வேர்த்து இனிமேல் இருக்க முடியாது என்ற நிலை வந்தவுடன். கட்டுகளை அவிழ்த்து இலையை எடுத்துவிடவும்.
8.எழுந்தவுடன் பார்த்தால் கிட்டத்தட்ட இரண்டு முதல் நான்கு லிட்டர் வரை உடலில் இருந்து கெட்டநீர் வெளியேறி இருக்கும்.!
9.எழுந்தவரை நன்றாக ஐந்துமுறை சுவாசம் செய்ய வைத்து
தேன்  மற்றும் சிறிது இந்துப்புக்கலந்த  இரண்டு டம்ளர் நீரை குடிக்க கொடுக்க வேண்டும்.பிறகு 15 நிமிடம் கழித்து குளித்து விடலாம்.!

வாழைகுளியல் பலன்கள்
""''"'''"''"""""""'"'"'"
1.உடல் எடை சீராக இருக்கும்
2.உடலில் உள்ளக் கொட்ட நீரும் காற்றும் வெளியேறிவிடும்
3.தோல் நோய்கள் குணமாகும்
4.ஆஸ்துமா,இழுப்பு ,அடுக்குத்தும்மல், உடல் பருமன்  போன்ற நோய்கள் கட்டுப்படும்
5.சிறுநீரகம், கணையம், கல்லீரல் பலப்படும்
6.ஆண்மைக் குறைவு, கர்பபைக் கோளாறு குணமாகும்
7.உடலுக்கு புத்துணர்வும் புதிய நம்பிக்கையும் கிடைக்கும்
8.கை,கால் வலி, மூட்டுவலி, முதுகுவலி தண்டுவடக் கோளாறுகள் கட்டுப்படும்
9.பசியின்மை, அஜீரணக் கோளாறு, பித்த வாந்தி குணமாகும்
10.ஜாதகத்தில் சிலருக்கு ஏற்படும் மரண கண்டத்தில் இருந்து தப்புவிக்கும்.!

இது மட்டுமல்ல இன்னும் எத்தனையோ அற்புத பலன்களை உடையது வாழை இலைக்குளியல். ஏனெனில் உடலில் பிராணசக்தி துய்மையடையும் உடல், மனம், ஆன்மா அனைத்துமே தூய்மையடையும்.!

குறிப்பு: காலையில் 8 முதல் 11 மணிவரையும் மாலையில் 3 மணி முதல் 5 மணிவரையும் வாழையிலைக் குளியல் செய்ய ஏற்ற நேரம்.!
கீழே விரிப்பை விரித்து மொட்டை மாடி, வெட்டவெளியில் மட்டுமே குளியல் செய்ய வேண்டும். பெண்கள் சுற்றிலும் மறைவான வெட்ட வெளியில் செய்ய வேண்டும்.!
வாழை இலைக்குளியலுக்கு முதல்நாள் முற்றிலும் சமைக்காத உணவை உண்டு வாழை இலைக்குளியல் செய்தால் அதன் பலன் பல மடங்கு உயரும்.!
அதீத மன அழுத்தம், மனக்கோளாறுகள், கர்பிணிப் பெண்கள், இரத்த அழுத்தத்திற்காக பல ஆண்டுகள் மாத்திரை எடுப்பவர்கள், முற்றிய நிலையில் உள்ள இதய நோயாளிகள் வாழை இலை குளியல் எடுப்பதை தவிர்ப்பது நலம் பயக்கும். மற்றபடி 10 வயது முதல் நூறு வயதுவரை உள்ள ஆண், பெண் அனைவரும் வாழையில் குளியல் செய்து உடலில் பிராண சக்தியை அதிகரிக்கலாம்.!
வாழ்க வளமுடன்.!
நலம் பெருகட்டும் …

நாகர்கோவிலில் விரைவில் நடக்க இருக்கும் வாழையிலை குளியல் உள்ளிட்ட இயற்கை வாழ்வியல் முகாமில் கலந்துகொள்ள நம்மை அனுகலாம் …!
amyogatrust.blogspot.com
mobile:9629368389

நீர் சிகிச்சை

தண்ணீர் சிகிட்சை

*தினமும் காலையில் இரண்டு டம்ளர் நீர் குடிக்க வேண்டும்.
இதனால்  உணவுப்பாதை,பெருங்குடல் சுத்தமாகும்.!

*உடற்பயிற்சி, யோகா செய்வதற்கு முன் ஒரு டம்ளர் நீர் குடிக்க வேண்டும். இதனால் பயிற்சியினால் ஏற்படும் உடல் உஷ்ணம்
சீரடையும்.!

*ஒன்றுக்கு போய்விட்டு வந்ததும் அரை டம்ளர் நீர் குடிக்க வேண்டும். இதனால் உடல் இழந்த நீரை சமன்செய்யும் அதோடு யூரினரி இன்பெக்சனையும் கட்டுப்படுத்தும்.!

*யோகா, உடற்பயிற்சி முடிந்ததும் அரை டம்ளர் நீர் குடிக்க வேண்டும். இதனால்  உடல் செயல்திறன் அதிகமாகும்.!

*குளிப்பதற்கு முன் ஒரு டம்ளர் நீரருந்த வேண்டும். இதனால் உடல்சூடு எளிதில் தணியும்.!

*சாப்பிடுவதற்கு ஒரு மணிநேரம் முன்பு ஒன்று முதல் இரண்டு டம்ளர் நீரருந்த வேண்டும். இதனால் உணவு எளிதில் ஜீரணமாகும்.!

*சாப்பிடும் போது உணவுடன் அரைடம்ளர்  வரை மட்டும் நீரருந்த வேண்டும். இதனால் உணவு நன்றாக அரைக்கப்பட்டு உணவின் சத்து எளிதில் உடலில் சேரும்.!

சாப்பிட்டு அரை மணி முதல் ஒரு மணிநேரம் கழித்து இரண்டு டம்ளர் வரை நீரருந்த வேண்டும். இதனால் உணவுப்பாதை, பெருங்குடல் பலப்படும்.!

உடல் உழைப்பிற்கு பின் இரு டம்ளர் நீரருந்த வேண்டும்.
இதனால் உடல் இழந்த ஆற்றலை திரும்பப் பெறும்.!

கோபம் வந்தால் உடனே அரை டம்ளர் நீரருந்த வேண்டும். இதனால் மனம் அமைதியடையும்.!

அதிகமாக பேச வேண்டிய நேரத்தில் ஒரு டம்ளர் வரை நீரருந்திவிட்டு பேச வேண்டும். இதனால் நாவறட்சி இன்றி நீண்ட நேரம் உரையாட முடியும்.!

தூங்குவதற்கு காலிலிருந்து அரைமணி நேரம் முன்பு ஒரு டம்ளர் நீரருந்த வேண்டும்.
இதனால் உறக்கத்தில் இரத்த ஓட்டம் சீராக நடைபெறும்.!

#குறிப்பு: மினரல் வாட்டர், பிரிஜ் வாட்டர்,  ஹாட் வாட்டர், கூல்டிரிங்ஸ், மோர் போன்ற எதுவும் மண்பானை நீருக்கு ஈடாகாது. ஏனெனில் மாண்பானை நீரில் தேவையில்லாத பாக்டீரியாக்கள் அழிந்து விடுவதோடு சுத்தமான அக்ஸிஜன் அதிகரிக்கும் மற்றவை களில்
அக்ஸிஜன் சிதைந்து விடுவதோடு தீமை செய்யும் பாக்டீரியாக்கள் நிறைந்து காணப்படும்.!

 amyogatrust.blogspot.com
mobile:9629368389

நலம் பெருகட்டும் …

Thursday, March 31, 2016

உடல் எடையை அதிகரிக்க

உடல் எடையை அதிகரிக்க

300 கிராம் அளவு வெள்ளரிக்காயை  தோல்நீக்கி சிறிய துண்டுகளாக வெட்டி  எடுத்துக் கொண்டு அதனுடன் 10 பேரிச்சம் பழங்களையும் சிறியதாக வெட்டி இரண்டையும் இரவில் ஒரு பாத்திரத்தில் மூடிவைத்து விட்டு
அடுத்தநாள்  காலையில் இவற்றை வெறும் வயிற்றில் தொடர்ந்து 30 நாட்கள் உண்டுவந்தால் எடை அதிகரிக்கும். !

நலம் பெருகட்டும் …

amyogatrust.blogspot.com
amyogatrustfacebook
Mobile:9629368389

Wednesday, March 30, 2016

இரத்த சோகை நீங்க..

இரத்த உற்பத்திக்குச் சாப்பிட வேண்டிய உணவுகள்

உடலில் உள்ள இரத்தம் சுத்தமில்லாமல் இருந்தால் உடல் அசதி, காய்ச்சல், வயிற்றுப் பொருமல், சுவாசக் கோளறுகள் போன்றவை உண்டாகலாம். அதனால் உடலின் அடிப்படை சக்தியான இரத்தத்தை சுத்தமாக வைத்துக்கொள்வது அவசியமாகும். இயற்கை உணவுகள் மூலம் இரத்தத்தை சுத்தமாக வைத்துக்கொள்வது எப்படி? ரத்தத்தை எப்படி உடலுக்கு உற்பத்தி செய்யலாம் என பார்ப்போம்.

நாவல் பழத்தைத் அடிக்கடி சாப்பிட்டு வர‌ இதயத்திற்கு மிகுந்த பலத்தைக் கொடுப்பத்துடன் உடலில் இரத்தம் அதிகமாக‌ ஊறும். பேரீச்சம் பழத்தை தேனில் மூன்று நாட்களுக்கு ஊற வைத்து பிறகு வேளைக்கு 2 அல்லது மூன்று வீதம் சாப்பிட்டு வந்தால் உடலில் ரத்தம் ஊறும். தினசரி இரவு அரை தம்ளர் தண்ணீரில் உலர்ந்த 3 அத்திப்பழத்தை போட்டு, காலை வெறும் வயிற்றில் குடித்தால் ரத்தம் பெருகும்..

பீட்ரூட் கிழங்கு சாப்பிட்டு வந்தால் புதிய இரத்தம் உற்பத்தியாகும். செம்பருத்திப் பூவை நடுவில் இருக்கும் மகரந்தத்தை தவிர்த்து சுத்தி உள்ள இதழ்கள் மட்டும் வெறும் வயிற்றில் சாப்பிட்டு வர வெட்டை சூடு தீர்ந்து இரத்தம் விருத்தியாகும்.

முருங்கைக் கீரையை துவரம் பருப்புடன் சமைத்து ஒரு கோழிமுட்டை உடைத்து விட்டு கிளறி நெய் சேர்த்து 41 நாட்கள் சாப்பிட்டு வர இரத்தம் விருத்தியாகும். இஞ்சிச் சாறுடன் தேன் கலந்து சாப்பிட்டால் இரத்தம் சுத்தப்படுத்தப்படுகிறது.

தக்காளிப் பழம் சாப்பிட்டு வந்தால் இரத்தம் சுத்தமாகும். ஆனால், வாத நோய் உள்ளவர்கள் தவிர்த்தல் நல்லது. இலந்தைப் பழம் சாப்பிட்டால் இரத்தத்தை சுத்தம் செய்வது மட்டுமில்லாமல், சுறுசுறுப்பாக வைத்துக் கொள்ளும். பசியையும் தூண்டும் தன்மை கொண்டது. விளாம்பழம் சாப்பிட்டால் இரத்தத்தில் உள்ள கிருமிகள் அழிந்துபோகும்.

Saturday, March 26, 2016

வாத வேங்கை வர்ம ஜோதி தைலம்.


1. தேங்காய் எண்ணெய் 1 1/2.லிட்டர்
2. சீனம் 100 gm
3. நவசாரம் 100 gm
4. வெள்ளை பூண்டு 100 gm
5. மிளகாய் வத்தல் 10 gm
6. வெற்றிலை 5 no's
7. டர்பன் ஆயில் 30 ml
8. தேன்மெழுகு 10 gm
9. கட்டி கற்பூரம் 10 gm
10. வேம்பாடம் பட்டை 25 gm
11. பச்சை கற்பூரம் 5 gm
12. புகையிலை 10 gm
செய்முறை :
சீனம்,சாரம் ,தனித்தனியே பொடித்து கொள்ளவும்.பூண்டு தோல் உரித்து சேர்த்து அரைத்து வழித்து இரும்பு சட்டியில் போட்டு,மிளகாய் வற்றல்,வெற்றிலை,புகையிலை கிள்ளி போட்டு எண்ணெய் முழுவதும் ஊற்றி அடுப்பிலேற்றி சிறு தீயாக எரித்து கற்கம் கறுத்து சட்டியில் ஒட்டும்.தைலம் காய்ச்சும் ஆரம்பம் முதல் முடிவு வரை கரண்டியால் கிண்டி கொண்டே இருக்கவும்.கற்கம் மணல் பதம் வரும் போது சட்டியை கீழ் இறக்கி வடி கலசத்தில் தேன் மெழுகை சீவி போட்டு,கட்டி கற்பூரம்,பச்சை கற்பூரம் பொடித்து சேர்க்கவும்.வடிகலசத்தில் மேல் துணியை சல்லடைபோல் வேடு கட்டி வேம்பாடம் பட்டையை பொடித்து தூவி அதன் மேல் சூடான தைலத்தை வேம்பார் பட்டை தூளின் ஊற்றவும்.எண்ணெய் சிவப்பாக மாறி கீழிறங்கி மெழுகு சூடங்களை தன்னுடைய சூட்டால் கரைத்துசேர்த்துக்கொள்ளும்.பிறகு டர்பன் ஆயில் சேர்க்கவும்.
தீரும் நோய்கள் :
1. மூட்டு வலி
2. கைகால் குடைச்சல்,
3. ரத்தக்கட்டு
4. அடிபட்ட வீக்கம்
5. சுளுக்கு
6. நரம்பு பிசகல்
7. சதைப் பிடிப்பு
8. மத மதப்பு
9. குதிங்கால் வலி
10. கழுத்துப் பிடிப்பு
11. மூச்சுப் பிடிப்பு
12. தோள்பட்டை வலி
13. உடம்புவலி
14. பக்க வாதம் முதலியவை தீரும்.
உபயோகிக்கும் முறை :
தூங்குவதற்கு முன்பாக 5 முதல் 10 சொட்டு வர்ம தைலம் எடுத்து சூடு உண்டாகும்படி கையினால் பாதித்த பகுதியில் தேய்க்கவும்.மறுநாள் காலை சுடு தண்ணீரில் குளிக்கவும்.or உப்பை சட்டியில் தெறிப்பு அடங்க வறுத்து துணியில் முடிந்து இளஞ்சூட்டில்ஒத்தடம் கொடுக்கவும்.
நலம் பெருகட்டும் 

தேனும் லவங்கப் பட்டையும் ..........

 உலகத்தில் கெட்டு போகாத ஒரே உணவு தேன் தான்!
அதிகபட்ச மாற்றம் எதுவென்றால், உறைந்து கிறிஸ்டல் கற்களாக மாறும். அப்போது சூடான தண்ணீரில் தேன் பாட்டிலை வைத்தால் இளகி மீண்டும் பழைய நிலைக்கு மாறிவிடும்.

**தேனை சூடு படுத்தக்கூடாது**
தேனை மைக்ரோவேவிலோ அல்லது அடுப்பிலோ வைத்து சூடு செய்தால் அதில் உள்ள சத்துக்கள் அழிந்துவிடும்.
உலகில் எல்லா பகுதிகளிலும் கிடைக்கும் உணவு தேன். தேனின் அற்புத உணவு தேனின் மருத்துவ குணங்கள் சொல்லி தீராதது. நாம் இதனை அறிந்து, நமது அன்றாட வாழ்வில் தேனை உபயோகிக்க வேண்டும். ஆரோக்கியமாக வாழ வேண்டும்.

**தேனும் லவங்கப் பட்டையும்**
இதய நோய்: இன்று எல்லா வயதினரையும் தாக்கும் நோய் இதய நோய். இந்த நோய் ஏற்பட மன உளைச்சல், பரம்பரை, கொழுப்பு சத்து கூடுதல் என்று பல காரணங்கள் சொல்லப்படுகின்றன.
இதயத்தின் ரத்த குழாய்களில், நாளங்களில் அடைப்பு ஏற்படுவதால், போதிய ரத்தம் கிடைக்காமல் இருதயம் செயல் இழக்கிறது.

**அற்புத மருந்து இதோ!**
தினமும் காலையில் லவங்கப்பட்டை பொடியை தேனுடன் சேர்த்து குழைத்து சிற்றுண்டியுடன் சேர்த்து சாப்பிடுங்கள். 2 கரண்டி தேன், 1 கரண்டி பொடி என்ற கணக்கில் ரொட்டியுடன் அல்லது நீங்கள் சாப்பிடும் சிற்றுண்டியுடன் சாப்பிட்டு வாருங்கள்.
இதய நோய் உங்களை மீண்டும் அனுகாது. ஏற்கெனவே உங்களுக்கு மாரடைப்பு வந்திருந்தால், மீண்டும் நிச்சயம் வராது.
இதய நோய் உள்ளவர்களுக்கு சுவாசம் மற்றும் இதய துடிப்பு பலவீனமாக இருக்கும். அவர்களுக்கு இந்த தேனும் லவங்கப்பட்டை பொடியும் ஒரு வசப்பிரசாதம். 1 மாதத்தில் அவர்களுக்கு வித்தியாசம் தெரியும்.
அமெரிக்கா, கனடா நாடுகளில் மருத்துவமனைகளில் இந்த உணவை கொடுத்து வருகிறார்க்ள.அதிசயத்தக்க மாற்றங்களை பதவு செய்துள்ளார்கள். அடைப்பை நீக்கி, இரத்த ஓட்டத்தை அதிகரித்து, மூச்சு வாங்குவதை குறைத்து, இதய துடிப்பை பலப்படுத்தி, இதய நோயை விரட்டி அடிக்கும் அற்புத சக்தி கொண்டது தேனும் லவங்கமும்.
செலவு குறைச்சல் தானே! முயற்சி செய்யுங்களேன்!

**ஆர்த்ரிரைட்டீஸ் என்கின்ற முடக்குவாதம்.**
மூட்டு வலி உள்ளவர்கள், நடக்க முடியாமல் கஷ்டப்படுகிறவர்களுக்கு தித்திக்கும் தேன் போன்ற செய்தி.
தினமும் காலை மற்றும் இரவு நேரங்களில் 1 கப் வெந்நீரில் 2 தேக்கரண்டி தேன், 1 சின்ன தேக்கரண்டி லவங்க பொடியை கலந்து குடித்து வாருங்கள்.
ஒரே வாரத்தில் உங்கள் வலி குறைவது தெரியும்.

‘எத்தகைய கடுமையான மூட்டுவலியாக இருந்தாலும் 1 மாதத்தில் குணம் நிச்சயம்’ என்று அடித்து சொல்கிறார்கள் கோபன் ஹேகன் பல்கலைகழக ஆய்வு மையத்தினர்.
200 மூட்டுவலிகாரர்களை கொண்டு ஒரு சோதனை நடத்தினர். தினமும் காலை 1 தேக்கரண்டி தேனும் 1/2 தேக்கரண்டி லவங்க பொடியும் கலந்து கொடுத்து வந்தனர்.
ஒரே வாரத்தில் 73 நோயாளிகள் வலி நிவாரணம் கண்டனர். ஒரு மாதத்தில் அனைவரும் நடக்கத் தொடங்கினர்.
இந்த காலத்தில் மூட்டு வலி இல்லாதவர் யார்? அதனால் இந்த கண்கண்ட மருந்தை இன்றே தொடங்கி வாழ்க்கை பயணத்தின் வலியை குறைத்துக் கொள்வோம்!

**சிறுநீர்குழாய் கிருமிகள்**
2 தேக்கரண்டி லவங்கபொடி, 1 தேக்கரண்டி தேன் ஆகியவற்றை இளஞ்சூட்டு தண்ணீரில் கலந்து குடித்து வர, சிறுநீர் குழாய்களில் உள்ள கிருமிகள் அழிந்து விடும். கோடைக்கலத்தில் இது அரு மருந்து.

**கொலஸ்ரால் என்னும் கொழுப்பு சத்து**
2 மணி நேரங்களில் உடம்பில் உள்ள கொழுப்புச் சத்தை 10% குறைக்கும் தன்மை கொண்டது தேன்.

2 தேக்கரண்டி தேன், 3 தேக்கரண்டி லவங்க பட்டை பொடியையும் 16 அவுன்ஸ் தண்ணியுடன் கலந்து குடியுங்கள். 2 மணி நேரத்தில் உங்கள் கொழுப்பு சத்து அளவு குறையும்.

ஒரு நாளில் 3 முறை 2 கரண்டி தேன், 1 கரண்டி லவங்க பொடியை மிதமான வெந்நீரில் கலந்து குடித்து வர நிச்சயம் கொலஸ்டிரால் கரைந்து விடும்.
சாதாரணமாகவே உங்கள் உணவில் தேனை சேர்த்து கொண்டு வாருங்கள். கொழுப்பு சத்து நோய் வரவே வராது.

**ஜலதோஷம்**
சூடான தண்ணீரில் 1 தேக்கரண்டி தேனை வைத்து இளஞ்சூடாக்கி அதனுடன 1/4 தேக்கரண்டி லவங்க பொடியை குறைத்து 3 நாளைக்கு எடுத்துக் கொள்ளுங்கள்.
சைனஸ், சளி, இருமல் என எல்லாமே ஓடி போகும்.

**வயிற்று அல்சர்**2 தேக்கரண்டி தேன், 1 தேக்கரண்டி லவங்கபவுடர் கலந்து உண்டு வர வயிற்றுவலி, வயிற்றில் அல்சர் போன்றவை அடியோடு மறையும்.

**வாயு தொல்லை**இந்தியாவிலும் ஜப்பானிலும் நடந்த ஆய்வின் முடிவில் தேனுடன் லவங்க பொடியை சேர்த்து சாப்பிட்டால் வாயுத்தொல்லை தீருமாம்!

**எதிர்ப்பு சக்தி வளரும்**
தேனில் அதிக அளவு இரும்பு சத்தும் வைட்டமின்களும் உள்ளது. இதை நாம் தொடர்ந்து லவங்க பொடியுடன் கலந்து உண்டு வந்தால் நமது உடலின் நோய் எதிர்ப்பு சக்தி கூடுகிறது. இதனால் அடிக்கடி வைரஸ் ஜுரம், ஃபுளு என்று படுக்க வேண்டாம்.
ஸ்பெயின் நாட்டு விஞ்ஞானி ஒருவர் தேனில் உள்ள இயற்கை ரசாயனங்கள் ஃப்ளூ ஜூரத்தை உண்டு பண்ணும் கிருமிகளை அழிக்கிறது என்று நிருபித்துள்ளார்.

**அஜீரணம் **
சிலருக்கு சாப்பிட்ட உடன் வயிறு பெருத்து, வயிறு அடைத்து சிரமபடுவார்கள். இவர்கள் உணவு உண்பதற்கு முன் 2 தேக்கரண்டி தேனில் சிறிது லவங்க பொடியை தூவி சாப்பிட வேண்டும். பிறகு இவர்கள் சாப்பிட்டால் இவர்களுக்கு உணவு சுலபமாக வலியில்லாமல் ஜீரணமாகும்.

**நீண்ட ஆயுள்**
நீண்ட ஆயுளுக்கு 3 கப் மிதமான சூடில் உள்ள நீரில் 4 தேக்கரண்டி தேன், 1 தேக்கரண்டி லவங்க பட்டை பொடியை கலந்து வைத்துக்கொண்டு ஒரு நாளில் 3 அல்லது 2 முறையாக பருக இளமை ததும்பும்.
வயதான தோற்றம் மறைந்தே போகும். 100 வயதில் 20 வயதிற்கான சுறுசுறுப்பை காணலாம். சருமம் மிருதுவாக இருக்கும் ஆயுள் நீடிக்கும்.

**தொண்டையில் கிச் கிச்!**
1 தேக்கரண்டி தேனை எடுத்து மெதுவாக உண்ணுங்கள். 3 மணிக்கு ஒரு தரம் இப்படி செய்து வாருங்கள். தொண்டையில் கிச்கிச் முதல் அல்லது 2 தேக்கரண்டியில் போய்விடும்.
**முகப்படுக்கள் அடியோடு மறைய!**
3 தேக்கரண்டி தேன், 1 தேக்கரண்டி லவங்கப் பொடி இரவு படுக்கும் போது இதை குழைத்து பருக்களின் மேல் தடவுங்கள். காலையில் வெதுவெதுப்பான நீரில் முகத்தை அலம்புங்கள். தொடர்ந்து 2 வாரம் இதை செய்து வர பருக்களை வேரோடு இது அழித்துவிடும்.

**சரும நோய் தீர**சொறி, படை போன்ற பல சரும நோய்களை குணப்படுத்தும் தேன், லவங்க பொடி இரண்டையும் சம அளவில் எடுத்துக் கொண்டு குழைத்து இந்த சரும நோய்களின் மேல் தடவி வர இந்த சரும் நோய்கள் குணமாகும்.

**எடை குறைய வேண்டுமா?**
தினமும் காலையில் சாப்பிடுவதற்கு அரை மணி முன்னர் மிதமான சூட்டில் உள்ள நீரில் தேனையும், லவங்க பொடியையும் கலந்து குடிக்கவும். அதே போல இரவில் படுக்க போகும் முன்னர் தேனையும், லவங்க பொடியையும் மிதமான வெந்நீரில் கலந்து குடிக்கவும். தொடர்ந்து இப்படி செய்து வந்தால் எத்தனை குண்டாக இருந்தாலும் உடல் எடை குறைவது உறுதி.
அதிசயம் ஆனால் உண்மை. இதை நீங்கள் குடித்து வரும் போது உடலில் கொழுப்பை சேர விடாமல் தடுத்து விடும். அதாவது நீங்கள் சாதாரண உணவை சாப்பிட்டு வந்தாலும் கூட எடை கூடாமல் தடை செய்யும்.

**புற்று நோய்க்கு அருமருந்து**
ஆஸ்திரேலியா, ஜப்பான் நாடுகளில் நடத்தப்பட்ட ஆய்வின் முடிவில், ‘வயிறு மற்றும் எலும்பில் வரும் புற்று நோய்களை குணப்படுத்தலாம்’ என்று தெரியவந்துள்ளது.
ஒரு தேக்கரண்டி தேன், ஒரு தேக்கரண்டி லவங்க பொடி என்ற கணக்கில் குழைத்து, தினமும் 3 வேளை உண்ண ஒரே மாதத்தில் இந்த புற்று நோய் குறைந்து விடுமாம்.

**அயர்ச்சி**
‘உடம்பில் சக்தியை அதிகரிக்க தேனை விட சிறந்தது இல்லை’ என்கிறார் ஆராய்ச்சியாளர் டாக்டர் மில்டன். இதில் உள்ள சர்க்கரை அபாயகரமானது இல்லை. உடலுக்கு உதவ கூடியது.
வயதானவர்கள், நோயிலிருந்து மீண்டவர்கள், சக்தி குறைவதால் தினமும் காலை ஒரு கப் நீரில் 1 தேக்கரண்டி தேனில் லவங்க பொடியை நன்று தூவி குடிக்க வேண்டும்.
அதே போல மதியம் 3 மணிக்கும் குடித்து வர, இழந்த சக்தியை பெறுவார்கள்.

**வாய் துர்நாற்றத்தை போக்க!**
தெற்கு அமெரிக்கா மக்கள் தினமும் காலையில் தேனையும் லவங்க பொடியையும் கலந்து சுடுநீரில் வாய் கொப்பளிப்பார்கள். இதனால் வாய் துர்நாற்றம் போய் விடும். நாள் முழுவதும் வாய் மணக்கும்.
**காது கேளாதவர்களுக்கு நற்செய்தி**
தேனையும், லவங்க பொடியையும் சம அளவில் கலந்து காலை மாலை என 2 வேளையிலும் எடுத்து காமந்தம் போய்விடுமாம்.
தேன் லவங்கப்பட்டை கலவை 
மூலிகை பல்பொடி குளியல் பொடி இயற்கை சத்துமாவு பஞ்சமூலி சூரணம் சிறுகுறிஞ்சான் மாத்திரை
சக்கரை சூரணம் அமுக்ரா மாத்திரை போன்ற 100 % இயற்கையான நமது மூலிகை தயாரிப்புகள் தேவைக்கு
தொடர்புகொள்க :9629368389
நலம் பெருகட்டும் …

சீரகத்தின் 15 மருத்துவப் பயன்கள்


மஞ்சள் வாழைப் பழத்துடன், சிறிது சீரகம் சேர்த்துச் சாப்பிட்டு வந்தால்உடல் எடை குறையும்.
சிறிது சீரகத்தை மென்று தின்று ஒரு டம்ளர் குளிர்ந்த நீரைக் குடித்தால் தலைச்சுற்றுகுணமாகும்.
கர்ப்பகாலத்தில் ஏற்ப்படும்வாந்தியைக் குறைக்க எலுமிச்சம்பழச் சாற்றுடன் சீரககுடிநீரை சேர்த்துக் கொடுக்கலாம்.
ஓமத்துடன் சிறிது சீரகம் இட்டு கஷாயம் செய்து, சாப்பிட்டால், அதிகபேதி போக்கு நிற்கும்.
சீரகம் தாய்மார்களுக்கு பால் சுரப்பை அதிகரிக்கச் செய்யும்.
மோருடன் சீரகம், இஞ்சி, சிறிது உப்பு சேர்த்துப் பருகினால் வாயுத் தொல்ல நீங்கும்.
சீரகத்தை லேசாக வறுத்து, அத்துடன் கருப்பட்டி சேர்த்துச் சாப்பிட்டு வர, நரம்புகள் வலுப்பெறும். நரம்புத் தளர்ச்சிகுணமாகும்.
சீரகத்துடன், மூன்று பற்கள் பூண்டு வைத்து மைய்ய அரைத்து, எலுமிச்சை சாறில் கலந்து குடித்தால், குடல் கோளாறுகள்குணமாகும்.
கொஞ்சம் சீரகமும், திப்பிலியும் சேர்த்துப் பொடித் தேனில் குழைத்து சாப்பிட்டால், தொடர் விக்கல்விலகும்.
பசியின்மை, வயிற்றுப்பொருமல், சுவையின்மை, நெஞ்செச்ரிச்சல்தீர சீரகம் + கொத்தமல்லி+ சிறிது இஞ்சி இவைகளை லேசாகவறுத்து நீரில் கொதிக்கவைத்து வடித்து தேநீர் போல வெல்லம் அல்லது நாட்டுசர்க்கரை சேர்த்து பருகி வரலாம்.
வாய்ப்புண், உதட்டுப்புண்குணமாக சீரகம் + சின்னவெங்காயம் இவற்றை லேசாக நெய்விட்டு வதக்கி உண்ணலாம்.
சீரகத்தை இஞ்சி, எலுமிச்சம் பழச்சாறில் கலந்து ஒருநாள் ஊறவைத்துக் கொள்ளவும். இதை, தினம் இருவேளை வீதம் மூன்று நாட்கள் சாப்பிட்டு வர, பித்தம்மொத்தமாகக் குணமாகும்.
சுக்கு, சீரகம், மிளகு, திப்பிலி ஆகியவற்றைப் பொடித் தேனில் கலந்து சாப்பிட்டால் எல்லா உடல் உள் உறுப்புகளையும் சீராக இயங்கச் செய்வதோடு, கோளாறு ஏற்படாது தடுக்கும்.
"ஓமம், சீரகம் கலவை வய்ற்றுக்குமருந்து"
தினமும் தண்ணீருடன் சிறிது சீரகத்தைப் போட்டு நன்கு கொதிக்க வைத்து 'சீரகக் குடிநீர்' தயார் செய்து வைத்துக் கொள்ளவும். இதை, நாள்முழுவதும், அவ்வப்போது பருகி வர, எந்தவித அஜீரணக் கோளாறுகளும் வராது.நீர்மூலம் பரவும் நோய்களைத் தடுக்கலாம். பசி ருசியைத் தூண்டும்.!

பஞ்ச தீபாக்கினி சூரணம் !!!

அனைத்து இருமல் நோய்களுக்கும் பஞ்ச தீபாக்கினி சூரணம் !!!
சுக்கு ................. இரண்டு துண்டுகள்
மிளகு .......................ஒரு தேக்கரண்டி
திப்பிலி ............... ஒரு தேக்கரண்டி
ஏலக்காய் ............. ஒரு தேக்கரண்டி
சீரகம் ............... ஒரு தேக்கரண்டி
நாட்டுப் பசு நெய் ,......தேவைக்கு
அனைத்துப் பொருட்களையும்
தனித்தனியே
நாட்டுப் பசு நெய்யில்
பொன்னிறமாக வறுத்து
மொத்தமாக சேர்த்து
நன்கு அரைத்து
சூரணமாக செய்து கொள்ளவும்
இந்த சூரணத்திற்குப் பெயர் பஞ்ச தீபாக்கினி சூரணம் ஆகும்
வறட்டு இருமல்
தொடர் இருமல்
கக்குவான் இருமல்
சளி இருமல்
போன்ற அனைத்து வகை இருமல் நோய்களும் நீங்க
இந்த சூரணத்தை சாப்பிட வேண்டிய முறை
பெரியவர்கள்
இந்த பஞ்ச தீபாக்கிணி சூரணத்தில்
ஒரு தேக்கரண்டி எடுத்து
நாட்டுப் பசு நெய்யில் சேர்த்துக் குழைத்து
காலை மாலை
தினம் இருவேளை
வெறும் வயிற்றில்
சாப்பிட்டு வர
மூன்று நாட்களில் பரிபூரண குணம் அடைவார்கள்
சிறுவர்களுக்கு
அரை தேக்கரண்டி பஞ்ச தீபாக்கினி சூரணத்தைத்
தேனில் குழப்பி
உணவுக்கு முன்
காலை மட்டும்
இரண்டு நாட்கள் கொடுத்து வர
பரிபூரண குணமாகும்
பச்சிளம் குழந்தைகளுக்கு
இந்த பஞ்ச தீபாக்கினி சூரணத்தை
ஒரு சிட்டிகை அளவு
தேனில் குழைத்து
நாக்கில் தடவ
நோய் சரியாகும்
அகத்தியர் வைத்திய ரத்தின சுருக்கத்தில்
இந்த சூரணம்
பன்னிரெண்டு நோய்களைத் தீர்க்கும்
என குறிப்பிடப் பட்டுள்ளது
இது ஒரு சரியாக எளிய அனுபவ வீட்டு மருத்துவம் ஆகும்


மருத்துவக் குறிப்புகள் - வெள்ளாட்டுப்பால்

நாள் பட்ட இருமல்

பெருங்குடல் பலவீனம்

பித்த மயக்கம்

தலைச்சுற்றல்

தேக பலவீனம் 

ஆண்மைக் குறைவு

ஆகியவை நீங்க தினமும் 300 மில்லி வெள்ளாட்டுப் பாலில் 300 மில்லி
தண்ணீர் சேர்த்து காய்ச்சி பணங்கற்கண்டு, மிளகு, கொத்தமல்லி சேர்த்து நாளைக்கு மூன்று வேளை குடித்துவர மேற்கண்ட நோய்கள் தீரும்.!
தொடர்ந்து மூன்று முதல் நாற்பத்தெட்டு நாட்கள்
வரை குடித்து வரலாம்.!