Showing posts with label ஆசனங்கள் பழகும் முறை. Show all posts
Showing posts with label ஆசனங்கள் பழகும் முறை. Show all posts

Tuesday, April 5, 2016

பத்மாசனம்

 ஆசனம் செய்யும் முறைகள்
இது சமதரையில் அமரும் முறையாகும். யோகாசனத்தின் ஏனைய பயிற்சிகளிற் சிலவான பிராணயாமம், தியானம், நாடிசுத்தி போன்றவற்றை பத்மாசனத்தில் அமர்ந்தே செய்ய வேண்டும். பத்மாசனம் செய்ய தனியாக நேரம் ஒதுக்க வேண்டியதில்லை. சாதாரணமாக படித்துக் கொண்டிருக்கும் நேரங்களிலும் கூட பத்மாசனம் போடலாம். ஆனால் சாப்பிடும் போது பத்மாசனத்தில் அமரக் கூடாது.


செய்முறை

1. தரை / தரை விரிப்பின் மேல் உட்காரவும். கால்களை நீட்டிக் கொள்ளவும்.

2. முதுகை நிமிர்த்தி நேராக வைக்கவும். கைகளை உடலின் பக்கவாட்டில் வைத்துக் கொள்ளவும். நார்மலாக சுவாசிக்கவும்.

3. வலது காலை தூக்கி இடது தொடையில் வைக்கவும். அதே போல இடது காலை மடித்து தூக்கி வலது தொடையில் வைக்கவும்.

4. இரண்டு குதிகால்களும் அடிவயிற்றை தொட்டுக் கொண்டு இருக்க வேண்டும்.

5. இடது கையை நீட்டி வலது கால் முட்டியின் மீது வைக்கவும். வலது கையை வலது கால் முட்டியில் வைக்கவும்.

6. கை விரல்கள் யோக முத்திரைகளில் ஒன்றான “ஞான (சின்) முத்திரை”யில் வைத்துக் கொள்ளவும். அதாவது கை கட்டை விரலால் ஆட்காட்டி விரலை மிதமான அழுத்தத்தில் பிடித்துக் கொண்டிருக்க வேண்டும். இதர விரல்கள் தரையை நோக்கியிருக்கும். இயல்பாக சுவாசிக்கவும்.

7. ஆரம்பத்தில் இந்த நிலையில் 1 லிருந்து 3 நிமிடங்கள் இருக்கலாம். பிறகு நேரத்தை அதிகரித்துக் கொள்ளலாம்.


<நன்றாக பழகிய பின் இந்த நிலையிலேயே தியானமும் பிராணாயாமமும் கூட செய்யலாம்>
8. கண்களை மூடி அமைதியாக வைத்துக் கொள்ளவும்.

9.கண்களை திறந்து, கை விரல்களை தளர்த்தி ஒவ்வொரு காலாக  தரையில் வைத்து ஆரம்ப  நிலைக்கு திரும்பவும்.!

பலன்கள்

1. ஜபம், தியானம், பிராணாயமம் செய்ய உகந்த ஆசனம்.

2. ருமாடிக் வலிகளை குறைக்கும். விறைத்து விடும் கால்கள், முழங்கால்களில் ரத்த ஒட்டத்தை அதிகப்படுத்தி சரிசெய்யும்.

3. அடிவயிற்று பிரதேசத்துக்கு ரத்த ஒட்டத்தை அதிகரிக்கும்.

4. நரம்புகளுக்கு நல்லது.

5. மனோசக்தி கூடுகிறது.
எச்சரிக்கை

1. பத்மாசனம் செய்யும் போது குனியக்கூடாது.

2. தொடக்கத்தில் முழங்கால் வலி ஏற்படலாம். பழகப் பழக சரியாகி விடும். ஆனால் வலி வந்தால் உடனே ஆசனத்தை கலைத்து விட வேண்டும். வலுக்கட்டாயமாக முரட்டுத்தனமாக ஆசனத்தை செய்யக் கூடாது. ஆசனத்தை நிறுத்தி, இளைப்பாறவும்.

பலன்கள்
பத்மாசனம் செய்வதால் கிடைக்கும் பலன்களை இனி பார்க்கலாம்.

1. அடிவயிற்று பகுதிக்கு ரத்த ஓட்டம் அதிகமாக கிடைக்கிறது.

2. நன்றாக பசி எடுக்கும்.

3. வாத நோய்கள் பறந்தோடும்.

4. நுரையீரல்களின் இயக்கம் துரிதப்படுத்தப்படுவதால் நுரையீரல் சம்பந்தமான வியாதிகள் எட்டி பார்க்காது.

5. முழங்கால் மூட்டு நோய்கள் போய் சுறுசுறுப்பு வரும்.

6. தொடை, குதி கால்கள் இவற்றின் நரம்புகள் நல்ல வலிமையை அடைய இவ்வாசனமே சிறந்தது.

7. இவை எல்லாவற்றிற்கும் மேலாக மனத்தை ஒருமுகப் படுத்தும் பயிற்சிக்கு இவ்வாசனமே மிக மிக உயர்ந்த தாக யோகிகள் ஒப்புக் கொள்கிறார்கள் என்றால் இதன் அருமை எத்தகையது என்பதை புரிந்து கொள்ளுங்கள்.

தவறான முறை

சிலர் இந்த ஆசனத்தை செய்யும் போது குனிவார்கள். இது தவறு. முதுகும், கைகளும் இயல்பாக இருக்க வேண்டியது அவசியம் ஆகும். தொடைகளின் மேல் குதிகால் நன்றாக அழுந்த வேண்டும். மேலும் 5 முறையாவது மூச்சு உள்செல்வதையும் வெளியேறு வதையும் வெறுமனே கவனித்தபடி இருக்க வேண்டும். இது முக்கியம்.!



நலம் பெருகட்டும் …