Monday, September 5, 2016

சர் கரை சவால்

இயற்கையின் அற்புதம்🍋

கடந்த ஆண்டு டிசம்பர் 10 ஆம் தேதி முதல் ஜனவரி 9 ஆம்  தேதிவரை சக்கரை சவால் என்ற தலைப்பில் நமது நாகர்கோவில் இயற்கை வாழ்வில் மையத்தில் சக்கரை நோயாளிகளுக்கு இலவச பரிசோதனை, யோகாப்பயிற்சி, மூலிகை மருந்துகள், இயற்கை உணவு திட்டம் போன்றவற்றை முற்றிலும் இலவசமாக வழங்கினோம்🍏

இதில் 30 பேர் கலந்துகொண்டனர். ஆரம்பத்தில் சக்கரை அதிகமாக இருந்ததால் எந்த இனிப்பையும் சாப்பிடாமல் தினசரி இன்சுலின் மற்றும் மாத்திரையை பயன்படுத்திய பலருக்கு பயிற்சி ஆரம்பித்த ஒரிரு வாரத்திலேயே சக்கரை அளவு குறைந்து வந்ததோடு உடல் ஆரோக்கியமும் மேம்பட்டதால்
பிறகு செயற்கை இன்சுலின், மாத்திரையை நிறுத்திவிட்டு பயிற்சி, வாழ்வியல் வழிமுறை, மூலிகை மருந்தின் மூலமே சக்கரையை கட்டுப்பாட்டில் கொண்டு வந்தோம்🍑
நிறைவு நாளில் அதிகப்பட்சமாக  55 முதல் 181 அளவு வரை பலருக்கும் சக்கரை குறைந்திருந்தது. சிலருக்கு சக்கரை இயல்பு நிலைக்கும் வந்திருந்தது. ஆனாலும் ஒரிருவருக்கு சக்கரை சற்று அதிகமாக கூடி இருந்தது. இன்னும் சிலருக்கு பயிற்சி ஆரம்பித்த நாளில் எப்படி இருந்ததோ அதே அளவிலேயே சக்கரை இருந்தது. இதில் கவனிக்கத் தக்க  விசயம் என்னவெனில் அனைவரும் இயற்கையான பழம், பனங்கற்கண்டு போன்ற இயற்கை இனிப்புகளை உண்டு வந்தனர். மாத்திரை மருந்துகளை நிறுத்திவிட்டனார் ஆனாலும் முன்பிருந்த சோர்வு, தாகம், அடிக்கடி சிறுநீர் கழித்தல், வேகமாக எடை குறைதல் போன்ற  எந்த தொந்தரவும் இல்லை. இதுவன்றோ இயற்கையின் அற்புதம்.!🌻

இந்த நிகழ்வில் கலந்துகொண்டவர்களில் பலர்  50 வயதிற்கு மேற்பட்டவர்கள் தொடர்ந்து பல ஆண்டுகளாக செயற்கை இன்சுலினுக்கு அடிமையாக இருந்தவர்கள் இன்று இயற்கையின் பாதுகாப்பில் மகிழ்வாக இருக்கிறார்கள்.!

இந்தப் பயிற்சி முறைகளை பிரபலப்படுத்த ஒரு ஆவணப்படத்தையும் தயாரித்து நாமே வெளியிட்டோம்.!
இதோ மீண்டும் வருகின்ற செப்டம்பர்  14 ஆம் தேதி முதல் அக்டோபர் 13 ஆம் தேதிவரை  மீண்டும் ஒரு மாத காலத்திற்கு காலை 7.10  -மணி  முதல் 8.10 மணிவரை இலவச சக்கரை சவால் நிகழ்வை நடத்த உள்ளோம்🐿

வினைப்பயன் உள்ளவர்கள் இதில் கலந்துகொண்டு பிணியை வெல்வதோடு இரசாயண மருந்து, இரசாயண உணவுகளின் கோரப் பிடியிலிருந்து  விடுபடுவார்கள்.!
நலம் பெருகட்டும் …

Am Yoga Trust
யோகா, இயற்கை வாழ்வியல் பயிற்சி மையம்
பார்வதிபுரம் ஜங்சன்,
நாகர்கோவில்.3
தொடர்பிற்கு:9629368389
Aum Herbals
amyogatrust.blogspot.in

இளநீரும் எலுமிச்சையும்

இளநீரில் எலுமிச்சை சாறு கலந்து அருந்தினால் , வயிற்றுக் கடுப்பு நிற்பதுடன் , உடல் சூடு குறையும் . மேலும் , இளநீரில் வெந்தயத்தை ஊறவைத்து , அரைத்து சாப்பிட்டாலும் , உஷ்ணத்தால் ஏற்படும் வயிற்று கடுப்பு நீங்கும் .
♦ குழந்தைகளுக்கு வாந்தி பேதிக்கு , இளநீர் சிறந்த மருந்து .
♦ இளநீரின் வாய்ப்பகுதியில் துளையிட்டு , ஒரு கரண்டி சீரகத்தை உள்ளே போட்டு , இரவு முழுவதும் வைத்திருந்து , அதிகாலையில் பருகி வர உடல் உஷ்ணம் மற்றும் வயிற்றுவலி தீரும் .
♦ இளநீருடன் நுங்கை கலந்து உடலில் தேய்த்தால் , சொறி , சிரங்கு மற்றும் வேர்க்குரு பிரச்னை ஏற்படாது .
♦ இளநீருடன் தேன் கலந்து சாப்பிட , தாது பலம் ஏற்படும் .
♦ இளநீரைத் தொடர்ந்து சாப்பிட , வயிற்றுப் புண் ஆறும் .
♦ சிறிதளவு வால்மிளகை இளநீருடன் அரைத்து , நெற்றிப் பொட்டில் பூசிட , வெப்ப தலைவலி தீரும் .
♦ இளநீரில் பாசிப்பயறு , வெந்தயத்தை ஊற வைத்து , உடலில் தேய்த்துக் குளிக்க சொறி , வியர்வை நாற்றம் மறையும் .
♦ இளநீரில் மல்லித்தூள் அல்லது ஏலத்தூள் கலந்து சாப்பிட , வாந்தி நிற்கும் .
♦ இளநீரில் தர்பூசணி பழத்துண்டுகளையோ அல்லது வெள்ளரி பழத் துண்டுகளையோ கலந்து சாப்பிட உடல் உஷ்ணம் தணியும்.!
🌺இணையப்பகிர்வு

Sunday, September 4, 2016

இயற்கை மூலிகை தயாரிப்புகள்

[கோவையில் மூன்றாம் ஆண்டு படித்துக்கொண்டிருக்கும் பொழுது இரவு 2 மணிக்கு தீராத வயிற்று வலி. கிட்னியில் கல் என்று தெரியும் இருந்தாலும் இரவு என்ன செய்வது என்று நான் தங்கியிருந்த வீட்டின் மாடிப்படியில் உட்கார்ந்திருந்தேன். பக்கத்து வீட்டுப்பாட்டி சலம் கழிக்க வந்தார். ஏன் இங்க உட்கார்ந்திருக்க என்று விவரம் கேட்டார். என் வேதனையைக் குறிப்பிட்டேன். உடனே பொங்கலுக்குக் காப்பு கட்டியிருந்த கொத்தில் பூளைப்பூவை மட்டும் உருகி சுடுநீரில் காய்ச்சி வடித்துக் கொடுத்தார். "இந்தா இதக்குடி . அரை மணி நேரத்துல சரியாகிடும்" என்று கொடுத்தார். கால் மணி நேரத்திலேயே வலி குறைந்தது. காலையில் ஸ்கேன் செய்து பார்த்தேன் 8mm கல் இருந்தது. மருத்துவர் ஆபரேசன் பன்ன வேண்டுமென்று தற்போதைக்கு மாத்திரை சாப்பிடுமாறு கூறினார். நான் மாத்திரை வாங்கவே இல்லை. பூளைப்பூ வைத்தியத்தைத் தொடர்ந்தால் என்ன என்று மனதிற்குத் தோன்றியது. தினமும் குடிக்குமளவு தண்ணீரை எடுத்து அதில் கைப்பிடிப் பூளைப்பூவைப் போட்டு காய்ச்சிப் 6 அல்லது 7 நாள் குடித்திருப்பேன். வலி சுத்தமாகக் காணாமல் போயிருந்தது. மறுபடியும் ஸ்கேன் செய்து பார்த்தேன் 3mm மட்டும் இருந்தது. மறுபடியும் 5 நாட்கள் தொடர்ந்தேன். சிறுநீரகக் கல் இல்லாமல் போனது. பாட்டியின் வழி காட்டுதலால் ஆபரேசனில் இருந்து தப்பித்தேன். அதிலிருந்து வாரம் ஒருமுறை பூளைப்பூவில் கருப்பட்டி போட்டு டீ போல வைத்துக் குடித்துக் கொள்வேன்.
பிறகு தான் தோன்றியது. காப்புக் கட்டுவதென்பது தற்காப்பிற்காகத்தான் என்று. இதை மூன்று ஆண்டுகளுக்கு முன்பே பொங்கல் சமயத்தில் பதிவிட்டிரு
***********************

பஞ்சமூலி சூரணம்

உடல் பருமன், மலச்சிக்கல், மூட்டுவலி, கண்சிகப்பு, இழுப்பு, சக்கரை வியாதி போன்ற வியாதிகளை கட்டுப்படுத்துவதோடு உடலில் உள்ள கழிவுகளை சுத்திகரித்து முழு ஆரோக்கியத்தை உணரவைக்கும்.

நெல்லிக்காய் , தான்றிக்காய், கடுக்காய், ஆடாதோடை, சுக்கு சேர்த்து தயாரிக்கப்பட்டது.
 100% இயற்கையானது.!

950 கிராம் 400 ரூபாய்

மூலிகை தேனீர்

ஆவரம்பூ, தாமரைப்பூ, ரோஜாப்பூ, செம்பருத்திப்பூ, வாழைப்பூ, சுக்கு, கொத்தமல்லி, அதிமதுரம், ஏலக்காய், மிளகு போன்ற 24 இயற்கை மூலிகைகளால் தயாரிக்கப்ப மூலிகை தேனீர் பொடி

உடல் சுறுசுறுப்பு தரும், நோய் எதிர்ப்பை அதிகப்படுத்தும், சளி, இருமல், புற்று செல்களை அழிக்கும் திறன் கொண்டது.!

950 கிராம் 500 ரூபாய்

மூலிகை பல்பொடி

வேப்பம் பட்டை, ஆலம்பட்டை, ஆவாரம் பட்டை, கிராம்பு, இந்துப்பு போன்ற 18 மூலிகைகளின் கலவை.

பல்சொத்தை, பல்லரிப்பு, பல்வலி ஈறுகளில் இரத்தம் வடிதல், நோய் எதிர்ப்பு சக்தி குறைபாட்டால் அடிக்கடி நோய்வாய்ப்படுதல் போன்றவற்றை  குணப்படுத்தும் அதிசய பல்பொடி.!

950 கிராம் 500 ரூபாய்

மூலிகை குளியல் பொடி

ரோஜா, சந்தனம், ஆவாரம், விலாமிச்சு, வேட்டிவேர் கர்போக அரிசி போன்ற பல்வேறு மூலிகைகளால் தயாரிக்கப்பட்ட 100% இயற்கையான குளியல் பொடி.!

உடல் அரிப்பு, தேமல், கரும்புள்ளி, வயதான தோற்றத்தை குணப்படுத்துவதுடன் எலும்புகளையும் தோலையும் வலிமைபடுத்த உடலில் சுரக்கும் மெலனின்  சுரப்பின் ஆற்றலை அதிகப்படுத்தும்.!

950 கிராம் 600 ரூபாய்

சக்கரை வியாதி சூரணம்

உடல் சோர்வு, அதிமூத்திரம் படபடப்பு போன்ற குறைபாடுகளை போக்கி இன்சுலின் சுரப்பை சீராக்கும் அற்புத மருந்து.!

சிறுகுறிஞ்சான், நாவல்கொட்டை, கடுக்காய், பன்னீர்ஜோதி, கொத்தமல்லி, வெந்தயம் போன்ற 10 மூலிகைகளின் கலவை.!

அமுக்ரா மாத்திரை

அமுக்ரா, சுக்கு, சிறுநாகப்பூ, மிளகு, கிராம்பு, ஏலக்காய்,  போன்ற 16 மூலிகைகளை பசும்பால் மற்றும் வாழையிலையால் சுத்திகரித்து செய்யப்படும் ஆரோக்ய மாத்திரை

நரம்புத்தளர்ச்சி, பக்கவாதம், கர்பபைக்கோளாறு, ஆண்மைக்குறைவு, தைராய்டு சீரின்மை, போன்றவற்றை குணப்படுத்துவதோடு வாய்வு சம்மந்தப்பட்ட அனைத்து வியாதிகளைகளையும் சீராக்கி நரம்பு மண்டலத்தை பலப்படுத்தும்
ஆரோக்ய மாத்திரை

100 மாத்திரை 300 ரூபாய்

யோகா புத்தகம் & வீடியோ

சூரியநமஸ்காரம் உள்ளிட்ட 100 க்கும் மேற்பட்ட யோகாசனம், பிராணாயாமம்,கிரியை,தியானம், இயற்கை வாழ்வியல் வழிமுறைகள் அடங்கிய முழுமையான யோகா பயிற்சி நூல்
மற்றும் குறுந்தகடு
இரண்டும் சேர்த்து 350 ரூபாய்.!
 
 இன்சுலின் ஆவணப்படம்  சக்கரை வியாதியை கட்டுப்பத்தி யோகாப்பயிற்சி, உணவுமுறை, வாழ்வியல் முறை ஆகியவற்றை பயன்படுத்தி ஒரே மாதத்தில் சக்கரை மாத்திரை , இன்சுலினை நிறுத்தியும், 181 அளவுவரை சக்கரையின் அளவை குறைத்தும் சாதனை படைத்த உண்மை ஆவணப்படம்.!  விலை: ரூ 250/-

இயற்கை வழியில் உடல்  ஆரோக்கியத்தை மேம்படுத்திக் கொள்ளவே நமது தரமான 100% இயற்கையான, அரசு அங்கீகாரத்துடனான மூலிகைப் பொருட்கள் விற்பனை செய்யப்படுகிறது.  நட்பாளர்கள் இந்த அறிய வாய்ப்பை பயன்படுத்தி உங்கள் உடலையும், மனதை ஆரோக்கிய மாக்கி என்றும் நலமாக வாழ  அன்போடு வேண்டுகிறோம்.!


வாழ்க வளமுடன்.!
நலம் பெருகட்டும் …  AUM HERBALS தொடர்புக்கு:9629368389
amyogatrust.blogspot.in

இயற்கை வைத்தியம்

தீராத விக்கலை நிறுத்த...
1. ஒரு 30 வினாடிகள்...
இரு காது துவாரங்களையும்
விரல்களால் அடைத்துக்கொள்ளு
ங்கள்...
நின்று போகும் தீராத விக்கல்!
2. ஒரே ஒரு சிறு கரண்டி அளவுக்கு
சர்க்கரையைவாயில் போட்டு
சுவையுங்கள்..
பறந்து போகும் விக்கல்!
____________ _________ _________ _____
கொட்டாவியை நிறுத்த...
கொட்டாவி வருவதற்கான
காரணம்:
Oxigen பற்றாக்குறை தான்..
அதனால்...
ஒரு நான்கு அல்லது ஐந்து தடவை,
நன்கு மூச்சை இழுத்து விடுங்கள்...
கொட்டாவி போய், நன்கு
சுறுசுறுப்பாகி
விடுவீர்கள்!
____________ _________ _________ _______
உடல் துர் நாற்றத்தைப்போக்க...
குளிக்கும் போது...
நீங்கள் குளிக்கும் தண்ணீரில்
ஒரே ஒரு தக்காளிப் பழத்தின் சாற்றினை
கலந்து பிறகு குளிக்கவும்...
அவ்வளவு தான்...
நாள் முழுக்க புத்துணர்வுடன்
திகழ்வீர்கள்!
____________ _________ _________ ________
வாய் துர்நாற்றத்தால் சங்கடமா?
எலுமிச்சை சாற்றில் சிறிது உப்பு
சேர்த்து குடித்து வந்தாலும்,
வாயைக் கொப்பளித்து வந்தாலும்
வாய் துர்நாற்றம் நீங்கும்.
____________ _________ _________ ________
தலைமுடி வயிற்றுக்குள் போய் விட்டதா?
வாழைப்பழத்தினுள் அல்லது
வெற்றிலையில்
ஒரு நெல்லை வைத்து விழுங்க,
முடி வெளியேறி பேதியும் நிற்கும்.
____________ _________ _________ ________
வேனல் கட்டி தொல்லையா?
வெள்ளைப் பூண்டை நசுக்கி
சிறிது சுண்ணாம்பு கலந்து
கட்டி மீது தடவி வர அது உடையும்.
____________ _________ _________ ________
1) பொன்மேனி தரும் குப்பைமேனி
குப்பை மேனி இலையையும் உப்பையும்
சேர்த்து அரைத்து சொறி, சிரங்குகளுக்குத்
தேய்த்துவர குணமாகும்.

2) தேளை விரட்டும் குடியோட்டிப்பூண்டு
பிரம்மதண்டின் பச்சை வேரைச் சிதைத்து
தேள்கடி வாயில் வைத்துக் கட்ட நஞ்சு நீங்கும்.

3) வயிற்றுவலி போக்கும் நறுவலி
நறுவிலிப்பட்டையை இடித்துச் சாறு பிழிந்து,
தேங்காய்ப் பாலில் கலக்கி குடிக்க
கடினமான
வயிற்றுவலி போகும்.

4) காற்று சுத்திகரிப்பான்  சர்க்கரை
சர்க்கரையை நாட்பட்ட நோயாளிகளின்
படுக்கை அறையில் புகைக்க சுத்தக்காற்று
உண்டாகி அறை சுத்தப்படும்.

5) தலைபாரம் நீக்கும் கிராம்பு
கிராம்பை நீர்விட்டு மை போல அரைத்து
நெற்றியிலும் மூக்கு தண்டின் மீதும் பற்றிட
தலைபாரம் நீரேற்றம் குணமாகும்.

6) காயத்துக்கு காட்டாமணக்கு
காயம்பட்டு, இரத்தம் வெளிப்பட்ட
இடத்தில்
காட்டாமைக்கு பாலைப் பூச குருதி நிற்கும்.
காயமும் ஆறும்.

7) உப்பலுக்கு உப்பிலாங்கொடி
மாந்தத்தினால் குழந்தைகளின் வயிறு
உப்பிக் காணின்,
உப்பிலாங்கொடியை
அரையில் கட்டத் தீரும்.

8) குழந்தையை காப்பான் கரிப்பான்
கரிசாலைச் சாறு 2 துளியுடன், 8 துளி தேன்
கலந்து கொடுக்க கைக்குழந்தைகளுக்கு
உண்டாகும் நீர்க்கோவை நீங்கும்.

9) கடலையும் அடிதடியும்
கடலை இலையை வேகவைத்து அடிபட்ட வீக்கம்,
மூட்டுப் பிசகல் முதலியவைகளுக்குச் சூட்டோடு
வைத்துக் கட்ட தீரும்.

10) மயக்கத்துக்கு ஏலம்
ஏலக்காய் 1 பங்கு, பனைவெல்லம் ½
பங்கு சேர்த்து,
எட்டுப்பங்கு நீர்விட்டுக் காய்ச்சி
கொடுக்க
பித்த மயக்கம் நீங்கும்.

11) புளியிருக்க புண்ணேது?
புளியிலை, வேப்பிலை இவ்விரண்டையும்
சமஅளவு எடுத்து இடித்து எட்டுபங்கு நீர்விட்டுக்
காய்ச்சி புண்களைக் கழுவி வர, ஆறாத
புண்கள்
ஆறும்.

12) பால்கட்டுக்கு பாசிப்பயிறு
பாசிப்பயிறு மாவை வெந்நீர் விட்டுக்
களியாகக்
கிளறி மார்பில் பற்றிட பால்கட்டு குறைந்து
வீக்கமும் குறைந்து போகும்.
மார்பின் நெறிக்கட்டிகளும் குறையும்.

13) மயிர்கறுக்க மருதோன்றி
மருதோன்றி இலை, நிலவாரை இரண்டையும்
சேர்த்து அரைத்துப் பூச மயிர் கறுக்கும்.

14) வாந்தி நீக்கும் நெல்லி
நெல்லியீர்க்கு, கருவேம்பீர்க்கு, வேப்பீர்க்கு
மூன்றையும் சேர்த்து இடித்து, நீர்விட்டுக்
காய்ச்சிக் கொடுக்க வாந்தி உடனே
நிற்கும்.

15) படர்தாமரைக்கு
அறுகம்புல்லும், மஞ்சளும் சேர்த்து அரைத்து
படர்தாமரையில் பூச தீரும்.

16) பல் ஈறு, வீக்கம், வலிக்கு
கிராம்பு, கற்பூரம், ஓமம் எடுத்து நன்றாகத்
தட்டி
வீக்கம் உள்ள ஈறுகளில் வைத்து சிறிது நேரம்
சென்றபின் வாய் கொப்பளிக்க
பல் ஈறு, வீக்கம்
தீரும்.

17) மலச்சிக்கலுக்கு
பிஞ்சு கடுக்காய் – 100 கிராம், சுக்கு – 100
கிராம்,
எடுத்து தட்டி 1 குவளை நீரில் போட்டு காய்ச்சி
இரவு படுக்க போகும்பொழுது குடித்து
விட்டு படுக்கவும்.
நன்றாக மலம் இளகும்.

18) மூலம் அகல
ஆகாசத் தாமரை இலையை அரைத்து
தொடர்ந்து
தடவி வந்தால் மூலம் அகன்று விடும்.

19) முகப்பொலிவிற்கு
உலர்ந்த ரோஜா இதழ்களுடன் சிறிது பன்னீரும்
சந்தனமும் அரைத்து முகத்தில் தடவ தோலின்
நிறம் பொலிவு பெறும்.

20) சூட்டினால் உண்டாகும் இருமலுக்கு
மிளகை தூள் செய்து சம அளவு
பனைவெல்லம்
கலந்து சுண்டைக்காய் அளவு ஒரு நாளைக்கு
மூன்று வேளை சாப்பிட வேண்டும்.

21) கல்லடைப்புக்கு – தாம்பூலம்
எருக்கம் பூவின் மொக்கு ஏழு எடுத்து
சுண்ணாம்பு
போடாமல் வெற்றிலை பாக்குடன் வைத்து
உண்ணவும்.
இப்படி 2 அல்லது 3 வேளையில் கல் விழும்.

22) தாய்ப்பால் சுரக்க கீரை
கோவை இலையை நெய்யில் வதக்கி,
வெள்ளைப் பூண்டு சேர்த்து வதக்கி,
கால் வயிறு கீரை, காலையில் உண்டு விட்டு
ஆகாரம் சாப்பிடவும்.
இவ்வாறு 3 நாள் செய்ய பால்
சுரக்கும்.

23) அரையாப்பு தீர
எலுமிச்சம் வேர், சத்திசாரணைவேர் அரைத்து
கெச்சக்காய் அளவு
நல்லெண்ணையில் கலந்து
சாப்பிடவும் 3 நாளில் தீரும்.

24) குழந்தைகள் பேதிக்குப் பிட்டு வகை
புளியாரை, வாழைப்பூ சமனெடை எடுத்து
இடித்து
பிட்டவியல் செய்து தேன் சேர்த்து பிசைந்து
கொடுக்க பேதி நிற்கும்.

25) கர்ப்பிணிகளுக்கு குடிநீர்
கர்ப்பிணிகளுக்கு மலசலம் கட்டினால்,
ஒரு பலம் பழைய நெல்லிவற்றலை இடித்துக்
குடிநீர் செய்து சமஅளவு பசும்பால் விட்டு
சாப்பிட,
மலசலம் வெளியேறும்.

26) பசி உண்டாக
புதினா சாறு 1 பங்கு, எலுமிச்சம் பழச்சாறு
3 பங்கு கூட்டி கொஞ்சம் சர்க்கரை
சேர்த்துக்
கொள்ளவும்.

27) இருமலுக்கு தேனூறல்
5 பலம் தேனை நன்றாய்க் காய்ச்சி சுடுகையில்
மிளகுத்தூள் படிகாரம் (12 கிராம்) போட்டுக்
குலுக்கி கொடுக்கவும்.!
🍁இணையப்பகிர்வு
[9/4, 18:57] Am Yoga: கொசு மருந்தை பயன் 🐜
படுத்துகிறீர்களா?

கொசுமருந்து - கொசுவை மட்டுமல்ல
மனிதனின் நோயெதிர்ப்பு சக்தியையும் சேர்த்தே கொல்லும். தயவாய் கொசுவத்தி, லிக்யூட் என்று எந்தவிதமான கொசு மருந்தையும் பயன்படுத்தாதீர்கள் சகோதரர்களே.!

மாலையில் கொஞ்சம் காய்ந்த வேப்பிலை மற்றும் காய்ந்த நொச்சியிலையை போட்டு வீட்டில் புகைப்போடுங்கள்.
இரவில் வேப்பெண்ணையில் கொஞ்சம் கட்டிகற்பூரம் கலந்து கைகால்களில் தேய்த்து விட்டு படுக்கைக்கு செல்லுங்கள்.🐜
கொசுவலையை
பயன்படுத்துங்கள்🐜

அதைவிடுத்து கொசுவை கொல்கிறேன் என்று உங்களுக்கும் உங்கள் குடும்பத்திற்கும் நீங்களே விசம் வைத்துக் கொல்லாதீர்கள்.!🐜

தயவாய் புரிந்துகொள்ளுங்கள் கொசுக்கடியால்  நோய்   வந்தாலும் நோயெதிர்ப்பு சக்தி இருந்தால்  உங்கள் குழந்தையை குணப்படுத்த முடியும். ஆனால், தினம்தினம் கொசுமருந்தால் நோயெதிர்ப்பு ஆற்றலை முழுவதும் சீரழித்தபின் எந்த மருத்துவத்தாலும் உங்களின் நோயையோ அல்லது உங்கள் குடும்பத்தினருக்கு வரும் நோயையோ குணப்படுத்த முடியாது. எந்த காலத்திலும் இல்லாமல் இப்பொழுது நிறைய டெங்கு மரணம் நிகழ்வதற்கு கொசுவல்ல காரணம் நோயெதிர்ப்பின்மையே காரணம் புரிந்துகொள்ளுங்கள்.!  என்னை தினமும் குறைந்தது 100 கொசுக்கள் கடிக்கிறது ஆனால், ஜுரமோ சோர்வோ ஏற்படுவதில்லை. மண்பானை நீர், சுத்திகரிக்காத எண்ணைய் , எளிய உணவு  இதுதான் கடந்த ஆறுவருடப் பழக்கம். அதற்கு முன்னால் சுத்திகரித்த நீர், கொசுமருந்து,  அனாசின், ஹார்லிக்ஸ்  என்று எல்லாவற்றையும் பயன்படுத்தினேன் பகலில் பாதிநேரம் சோர்வாகவே இருப்பேன். மூன்று மாதத்திற்கு ஒரு முறை  காய்ச்சல் வரும் ஆண்டுக்கு ஓரிரு முறை டைபாய்டு , மலேரியா போன்ற நோய்களில் சிக்கி சீரழிவேன். இயற்கை வாழ்வியலுக்கு மாறிய பின்  6 வருடத்தில் மூன்று முறை கடுமையான ஜுரம் வந்திருந்தது ஒருத் துண்டு  இரசாயண மாத்திரை கூட எடுக்காமலே  குணமாகிவிட்டது.!
இதற்கு காரணம் என்னவெனில்  உடலில் நோயெதிர்ப்பு ஆற்றல் இன்று வலுவாக உள்ளது. ஆகவே, எதிர்ப்பாற்றலை   பாழ்ப்படுத்தும் எந்த காரியங்களையும் தெரிந்து செய்ய வேண்டாம் சகோதரர்களே.!

 நலம் பெருகட்டும் …

amyogatrust.blogspot.in
Aum Herbals

ஆஸ்துமாவை விரட்டும் வெல்லம்…!

ரத்த சோகைக்கு தீர்வு நம் வீட்டு சமையல் அறையிலேயே இருக்கிறது என்பது ஆச்சரியமாக இருக்கிறதா? ஆம், வெல்லத்தில் இரும்புச் சத்து அதிகம் இருப்பதால் ரத்த சோகைக்கு மிகவும் நல்லது. தவிர இதிலுள்ள சத்துக்கள் பொட்டாஷியம், சோடியம், கால்ஷியம், பாஸ்பரஸ், மற்றும் ஜின்க் ஆகும். வெல்லத்தில் மினரல்ஸும் அதிகம் இருப்பதால் சத்துணவாக இது அமைந்துள்ளது. இதில் மேக்னிஷியம் இருப்பதால் நரம்பு மண்டலத்தை உறுதிப்படுத்தும், தசைகளை ரிலாக்ஸ் செய்யும்.

・ எலுமிச்சைச் சாறு பிழிந்து அதில் வெல்லத்தை தட்டிப் போட்டு பருகினால் உடனடியாக சோர்வு நீங்கி உடல் புத்துணர்ச்சி அடையும்.

・ பொதுவாக அஸ்கா சர்க்கரை உட்கொள்ளும்போது அதிலுள்ள சத்துப் பொருட்கள் உடனடியாக உடலில் சேர்ந்துவிடும். ஆனால் வெல்லம் சத்துக்களை உடலில் தேக்கி வைத்து தேவைப்ப்டும் போது தகுந்த பயனை அளிக்கும்.

・ சித்த மருத்துவத்தில் சில வியாதிகளுக்கு மருந்து தயாரிக்க வெல்லத்தைப் பயன்படுத்துவார்கள்.

・ பெண்களுக்கு மாதவிடாய் பிரச்சனையின் போது உடல் சோர்வாகவும், காரணமின்றி படபடப்பாகவும் இருக்கும். சிலருக்கு தலைசுற்றலும் இருக்கும் அந்நிலையில் வெல்லம் சாப்பிட சரியாகிவிடும்.

・ ஒவ்வாமையால் ஏற்படும் ஆஸ்துமா நோய்க்கு வெல்லம் ஒரு வரப்பிரசாதம். வெல்லம் ஒரு ஆன்டி அலர்ஜிக் என்று பலருக்கும் தெரியாது.

・ பித்தம், வாதம் மற்றும் காமாலை நோய்களுக்கு வெல்லத்தை அனுபானமாகச் செய்து தரலாம்.

・ இந்த வெல்லத்தில் சமையலில் பயன்படுத்தும் போது சுவை அதிகரிக்கும். குழந்தைகள் விரும்பி சாப்பிடுவார்கள்.

・ வெல்லத்தில் நீர்ப்புத் தன்மை இருப்பதால் இதை தொடர்ந்து சாப்பிட்டு வந்தால் உடல் சமச்சீர் அடைந்துவிடும்.

・ ஹோட்டலில் அடிக்கடி சாப்பிடுவதால் சிலருக்கு அடிக்கடி வயிறு வலி ஏற்படும். மலம் சரிவர கழியாது. ஓமம், மிளகு வெல்லம் மூன்றையும் சம அளவில் (50 கிராம்) எடுத்து பொடி செய்து காலை மற்றும் இரவு அரை தேக்கரண்டி சாப்பிட்டால் சூட்டினால் வரக் கூடிய வயிற்று வலி குறையும்.

・ குழந்தைகளுக்கும் பெரியவர்களுக்கும் வரக் கூடிய குடல் புழுக்களை கட்டுப் படுத்த அதிகாலையில் வெல்லத்தை சிறிது அளவு உட்கொண்டால் போதும்.

அனீமியாவுக்கு இரும்புச் சத்தும் புரத உணவும் சேர்த்து எடுத்துக் கொள்ள வேண்டும். அந்தந்த சத்துணவை தனித்தனியாக சாப்பிடுவதால் பெரியதாக பலன் எதுவும் இருக்காது. தேவைக்கேற்றபடி கலந்து சாப்பிட்டு வந்தால் கை மேல் பலன் கிடைக்கும்.

வெல்லத்தை வெல்கம் செய்து அனிமியாவுக்கு குட் பை சொல்வோம்!
🍒இணையப்பகிர்வு

அசடிட்டியைப் போக்கும் இயற்கை மூலிகைகள் - இயற்கை மருத்துவம்

உங்களுக்கு சில சமயங்களில் நெஞ்செரிச்சல் ஏற்பட்டு, அசௌகரியமான நிலை தந்திருக்கிறதா? எல்லாருக்குமே அப்படி ஏற்பட்டிருக்கும். வயிற்றில் சுரக்கப்படும் அமிலம் அளவுக்கு அதிகமாக சுரக்கும்போது அவை உணவுக்குழாய் வரை மேலே வருகிறது. அதனால்தான் அங்கே எரிச்சல் உண்டாகும்.

இது இன்னும் தீவிரமானால் வயிற்று வலி, குமட்டல் வாந்தி, வயிற்று உப்புசம் உண்டாகும். மசாலா உணவுகள் அதிகம் உண்டால், சரியாக காலை உணவை எடுத்துக் கொள்ளாமலிருக்கும்போது, முக்கியமாய் மது அருந்தினால் என அசிடிட்டி வர பல காரனங்கள் உண்டு. அடிக்கடி வந்தால் வயிறு புண்ணாகி அல்சர் வந்துவிடும். அதனால் ஆரம்பத்திலேயே குணப்படுத்த வேண்டும்.

நிறைய பேர் விளம்பரங்களைப் பார்த்து கடைகளில் கிடைக்கும், ஜீரண மருந்துக்களை வாங்குவார்கள். அவற்றில் அலுமினியம் ஹைட்ராக்ஸைட் அதிகம் இருப்பதால் பக்க விளைவுகளை தரும்.

எனவே இது போன்ற சரிப்படுத்தக் கூடிய பாதிப்பிற்கு மருத்துவரை ஆலோசனையின்றி மாத்திரை மருந்துகளை தேடிப் போகாதீர்கள். அதற்கு பதிலாக உடலுக்கு பக்க விளைவுகளைத் தராத இயற்கை மூலிகைகளை எடுத்துக் கொள்ளுங்கள்.

துளசி :

அசிடிட்டி வந்தால் உடனே வாய்வுத் தொல்லையும் ஏற்படும். வாய்வுத் தொல்லையாலும் அசிட்டிட்டி உண்டாகும். இந்த இரண்டிற்குமே துளசி அருமருந்தாகும். துளசி இலையை பறித்து நன்றாக மென்று அதன் சாறினை விழுங்குங்கள் அல்லது துளசி இலையை நீரில் கொதிக்க வைத்து அவ்வப்போது குடியுங்கள். இதனால் அமிலம் அதிகமாக சுரப்பது தடுக்கப்படும்.

சோம்பு :

சோம்பு எந்த வகை உணவையும் எளிதில் ஜீரணப்படுத்திவிடும். நெஞ்செரிச்சலை கட்டுப்படுத்தி, நிவாரணம் அளிக்கும். சோம்பினை நீரில் போட்டு கொதிக்க வைத்து குடித்தால் பலன் கிடைக்கும். வெறும் வாயிலும் மெல்லலாம்.

பட்டை :

நெஞ்செரிச்சலை போக்கும் அற்புத மருந்தாகும். பட்டை ஜீரண சக்தியை தூண்டும். அதிக ஆன்டி ஆக்ஸிடென்ட் கொண்டது. பட்டைப் பொடியை நீரில் கலந்து குடிக்கலாம். அல்லது தேநீரில் பட்டையை கலந்து கொதிக்க வைத்து குடித்தாலும் அசிடிட்டி குறையும்.

மோர் :

மோர் மிகவும் குளிர்ச்சியானது. அதிக அமிலம் சுரப்பதை உடனடியாக கட்டுப்படுத்தும். வயிற்றிற்கு இதம் தரும். குளிர்ந்த மோரில் இஞ்சி, கொத்தமல்லித்தழை ஆகியவற்றை கலந்து குடியுங்கள். உடனடியாக பலன் கிடைக்கும்.

கிராம்பு :

கிராம்பு கிருமி நாசினி மட்டுமல்ல. அதிலுள்ள குணங்கள் ஜீரண சக்தியை தூண்டும். வாயுவை போக்கும். இதனால் நெஞ்செரிச்சல் உடனடியாக குணமாகும். கிராம்பை பொடி செய்து நீரில் அல்லது மோரில் கலந்து குடிக்கலாம்.!
🌺இணையப்பகிர்வு

Thursday, September 1, 2016

இயற்கை_மருத்துவம்

தினமும் இரண்டு அல்லது மூன்று வெண்டைக்காய்களை சுத்தம் செய்து முனையையும், அடிப்பகுதியையும் வெட்டி எடுத்துவிட்டு துண்டு துண்டாக நறுக்கி ஒரு கப் தண்ணீரில் இரவு முழுவதும் ஊற வைத்திருந்து.!

மறுநாள் காலையில் வெறும் வயிற்றில் அந்த நீரை மட்டும் எடுத்து குடித்து வந்தால் ஒரு சில மாதங்களில் ரத்த புற்றுநோய், சர்க்கரை நோய், உடல் எடையை தாங்க முடியாமல் கால்கள் வீங்குதல் மற்றும் கால் வலி போன்ற இன்னும் பல பிரட்சினைகள் இருந்த இடம் இல்லாமல் போகும் என ஆயுள் வேத வைத்தியர்கள் ஊர்ஜிதமாக கூறுகின்றனர்.!!

இத்தகவலை ஏனோ தானோ என்று விட்டு விடாமல் உலகில் பலருக்கும் இப்பிரட்சினை இருப்பதனால் இத்தகவலை அதிகம் பகிர்ந்து கொள்ளுங்கள் யாருக்காயினும் பிரயோசனமாக இருக்கும்.!!

🍅இணையப்பகிர்வு