Monday, April 4, 2016

தலைவலி குணமாக:

i. விரலி மஞ்சளை விளக்கெண்ணெயில் முக்கி,  விளக்கில் காட்டி சுட்டு அதன் புகையை மூக்கின் வழியாக உரிஞ்ச தலைவலி, நெஞ்சுவலி முதலியன அகலும்.

ii . கீழாநெல்லிச்சாறு, உத்தாமணிச்சாறு, குப்பைமேனிச் சாறு சமமாக கலந்து நல்லெண்ணையில் எரித்து நசியமிட ஓயாத தலைவலி தீரும்.

iii . திருநீற்று பச்சிலைசாறு, தும்பைச்சாறு இரண்டும் கலந்து பச்சை கற்பூரம் சேர்த்து மூக்கில் உறிஞ்ச தலைவலி பாரம் குணமாகும். குப்பைமேனி சாறும் தலைவலிக்கு நல்ல குணம் தரும்.

தீராத தலைவலி நீங்க :

தும்பைப் பூவின் இலையை கசக்கி அந்தச் சாறை முகர்ந்தால் தலைவலி உடனே நீங்கும்.

தலைப்பாரம் குறைய :

நல்லெண்ணெயில் தும்பை பூவை போட்டு காய்ச்சி தலையில் தேய்த்து குளித்து வர தலைபாரம் குறையும்.

ஜலதோஷத்தின் போது உள்ள தலைவலி நீங்க:

சிறு கொண்டியில் நீர் ஊற்றி ஒரு ஸ்பூன் மஞ்சள் தூளை போட்டுக் கலக்கி கெண்டியை அடுப்பில் சூடேற்ற ஆவி வெளிவரும். வெளிவரும் ஆவியை பிடித்தால் தலைவலி குணமாகும்.

தலைபாரம், நீரேற்றம் நீங்க:

இஞ்சியை இடித்துச் சாறு எடுத்து சூடாக்கி தலையில் நெற்றியில் பற்று போட குணமாகும்.

கடுமையான தலைவலி:

ஐந்தாறு துளசி இலைகளும் ஒரு சிறுதுண்டு சுக்கு 2 இலவங்கம் சேர்த்து மைபோல் அரைத்து நெற்றியில் பற்றாகப் போட்டால் தலைவலி குணமாகும்.

Sunday, April 3, 2016

கீரைகள்

➡40 வகை கீரைகளும் அதன் முக்கிய பயன்களும்:
🌿அகத்திக்கீரை- ரத்தத்தை சுத்தமாக்கி பித்தத்தை தெளியவைக்கும்.
🌿காசினிக்கீரை- சிறுநீரகத்தை நன்கு செயல்பட வைக்கும். உடல் வெப்பத்தை தணிக்கும்.
🌿சிறுபசலைக்கீரை- சருமநோய்களைத் தீர்க்கும் பால்வினை நோயை குணமாக்கும்.
🌿பசலைக்கீரை- தசைகளை பலமடையச் செய்யும்.
🌿கொடிபசலைக்கீரை- வெள்ளை விலக்கும் நீர் கடுப்பை நீக்கும்.
🌿மஞ்சள் கரிசலை- கல்லீரலை பலமாக்கும், காமாலையை விலக்கும்.
🌿குப்பைகீரை- பசியைத்தூண்டும்.வீக்கம் வத்தவைக்கும்.
🌿அரைக்கீரை- ஆண்மையை பெருக்கும்.
🌿புளியங்கீரை- சோகையை விலக்கும், கண்நோய் சரியாக்கும்.
🌿பிண்ணாருக்குகீரை- வெட்டையை, நீர்கடுப்பை நீக்கும்.
🌿பரட்டைக்கீரை- பித்தம், கபம் போன்ற நோய்களை விலக்கும்.
🌿பொன்னாங்கன்னி கீரை- உடல் அழகையும், கண்ஒளியையும் அதிகரிக்கும்.
🌿சுக்கா கீரை- ரத்த அழுத்தத்தை சீர்செய்யும், சிரங்கு மூலத்தை போக்கும்.
🌿வெள்ளை கரிசலைக்கீரை- ரத்தசோகையை நீக்கும்.
🌿முருங்கைக்கீரை- நீரிழிவை நீக்கும், கண்கள், உடல் பலம்பெறும்.
🌿வல்லாரை கீரை- மூளைக்கு பலம் தரும்.
🌿முடக்கத்தான்கீரை- கை, கால் முடக்கம் நீக்கும் வாயு விலகும்.
🌿புண்ணக்கீரை- சிரங்கும், சீதளமும் விலக்கும்.
🌿புதினாக்கீரை- ரத்தத்தை சுத்தம் செய்யும், அஜீரணத்தை போக்கும்.
🌿நஞ்சுமுண்டான் கீரை- விஷம் முறிக்கும்.
🌿தும்பைகீரை- அசதி, சோம்பல் நீக்கும்.
 🌿முரங்கைகீரை- சளி, இருமலை துளைத்தெரியும்.
🌿முள்ளங்கிகீரை- நீரடைப்பு நீக்கும்.
🌿பருப்புகீரை- பித்தம் விலக்கும், உடல் சூட்டை தணிக்கும்.
🌿புளிச்சகீரை- கல்லீரலை பலமாக்கும், மாலைக்கண் நோயை விலக்கும், ஆண்மை பலம் தரும்.
🌿மணலிக்கீரை- வாதத்தை விலக்கும், கபத்தை கரைக்கும்.
🌿மணத்தக்காளி கீரை- வாய் மற்றும் வயிற்றுப்புண் குணமாக்கும், தேமல் போக்கும்.
🌿முளைக்கீரை- பசியை ஏற்படுத்தும், நரம்பு பலமடையும்.
🌿சக்கரவர்த்தி கீரை- தாது விருத்தியாகும்.
🌿வெந்தயக்கீரை- மலச்சிக்கலை நீக்கும், மண்ணீரல், கல்லீரலை பலமாக்கும். வாத, காச நோய்களை விலக்கும்.
🌿தூதுவலை- ஆண்மை தரும். சருமநோயை விலக்கும். சளித்தொல்லை நீக்கும்.
🌿தவசிக்கீரை- இருமலை போக்கும்.
🌿சாணக்கீரை- காயம் ஆற்றும்.
🌿வெள்ளைக்கீரை- தாய்பாலை பெருக்கும்.
🌿விழுதிக்கீரை- பசியைத்தூண்டும்.
🌿கொடிகாசினிகீரை- பித்தம் தணிக்கும்.
🌿துயிளிக்கீரை- வெள்ளை வெட்டை விலக்கும்.
🌿துத்திக்கீரை- வாய், வயிற்றுப்புண் அகற்றும். வெள்ளை மூலம் விலக்கும்.
🌿காரகொட்டிக்கீரை- மூலநோயை போக்கும். சீதபேதியைu நிறுத்தும்.
🌿மூக்கு தட்டைகீரை- சளியை அகற்றும்.
🌿நருதாளிகீரை- ஆண்மையைப் பெருக்கும், வாய்ப்புண் அகற்றும்.!

பூக்கள் மருத்துவம்


வாழைப்பூ:

மருத்துவக் குணமும் மகத்தான மணமும் கொண்டது வாழைப்பூ. ஆனாலும், அது சமையலில் அரிதாகவே இடம்பெறுகிற ஒன்றாக இருக்கிறது.
வாழைப்பூவை சமைக்கத் தெரியாதவர்கள் ஒரு பக்கம் என்றால், வாழைப்பூவை ஆய்ந்து, சுத்தப்படுத்தி சமைப்பதற்கு அலுத்துக் கொண்டு அதைத்  தவிர்ப்பவர்கள் இன்னொரு பக்கம். அறியாமையையும் அலுப்பையும் தவிர்த்து வாழைப்பூவை அடிக்கடி சமையலில் சேர்த்துக் கொள்கிறவர்களின்  வீடுகளில் ஆரோக்கியம் தாண்டவமாடும் என்பதில் சந்தேகமில்லை.

‘‘நமது உணவில் காய்கறிகள் முக்கிய அங்கம் வகிக்கின்றன என்பதில் எவ்வித சந்தேகமும் இல்லை. இந்திய உணவு வகைகளில் எப்போதுமே  காய்கறிகள் ஒரு பகுதியாவது இடம்பெறுகின்றன. பெரும்பாலும் நமது உணவில் ஒன்றுக்கும் மேற்பட்ட காய்கள் இடம்பெறுகின்றன. காய்கள் சேர்ந்த  உணவுக் கலவை அல்லது தொட்டுக்கொள்ளும் ஒரு உணவாக காய்கறி இடம்பெறுகிறது. சில காய்கறிகள் பொதுவாக நமது உணவில் வழக்கமாக  தினசரி இடம் பெறுகின்றன. சில காய்கறிகள் பொதுவாக சமைக்கப்படுவதே கிடையாது. வாழைப்பூ, பெரும்பாலான வீடுகளில் விரும்பப்படும்  உணவாகும்.

இருப்பினும் மற்ற காய்கறிகளான கேரட், முட்டை கோஸ், பீட்ரூட், பாகற்காய் உள்ளிட்ட காய்களைப் போல இது பயன்படுத்தப்படுவதில்லை.  வாழைப்பூவில் என்ன சமைப்பது என்று பலருக்குத் தெரியாததுதான் காரணமாகும். சமையல் பயன் பாட்டுக்கு அப்பால், உணவு வகைகள் சிறந்த  மருத்துவக் குணங்களைக் கொண்டதாகவும் திகழ்கின்றன. வாழைப்பூவில் சில உணவு வகைகள் தயாரிக்கத் தெரிந்து கொள்வதற்கு முன்பாக  வாழைப்பூவில் உள்ள உடலுக்கு நன்மை தரும் விஷயங்களை தெரிந்து கொள்வோம்.ஆயுர்வேத மருத்துவத்தில் பல காய்கறிகள் பற்றிய குறிப்புகள்  இருந்தாலும், அவற்றில் முதன்மையானதாக ‘கதளி’ எனப்படும் வாழைப்பூ முக்கிய இடம் பிடித்துள்ளது.

இதில் உள்ள நன்மை தரும் விஷயங்களால் இதை உணவில் கட்டாயம் சேர்த்துக் கொள்வது மிகவும் நல்லது. வாழைப்பூவில் அதிக காரம் மற்றும்  மசாலா பொருட்கள் சேர்க்காமல் சமைத்துச் சாப்பிடுவது மிகவும் பயனளிக்கக் கூடியது.

#குளிர்ச்சி தரும்... நார்ச்சத்து நிறைந்தது!

வாழைப்பூ சாப்பிடுவது உடலுக்கு குளிர்ச்சியைத் தரும். ஆயுர்வேதத்தில் இது ‘பித்த சம்ஹா’ (உடலில் பித்தத்தைத் தணிக்கும் குணம் கொண்டது)  எனப்படுகிறது. இதை உரிய வகையில் சமைத்து சாப்பிடும்போது உஷ்ணத்தால் ஏற்படும் பலவித நோய்களை - அதாவது, சிறுநீர் சார்ந்த நோய்கள்,  பெண்களுக்கு வெள்ளைப்படுதல் உள்ளிட்டவற்றைக் குணப்படுத்த உதவுகிறது. வாழைப்பூவில் அதிக நார்ச்சத்து இருப்பதால் மலச்சிக்கலைப் போக்க  உதவுகிறது. கொழுப்புச் சத்து குறைவாக இருப்பதால் ஆரோக்கியமான உடல் எடை அதிகரிப்புக்கு உதவுகிறது.

#மருந்துதயாரிப்பில்வாழைப்பூ

ஆயுர்வேத மருத்துவ தயாரிப்புகளில் குறிப்பாக கதளி கல்ப ரசாயனம் தயாரிக்க - அதாவது, பெண்களுக்கு ஏற்படும் கர்ப்பமேகம், மாதவிடாய்  பிரச்னைகள் குணமாக பரிந்துரைக்கப்படுகிறது. இது உணவுடன் சேர்த்து சாப்பிட வேண்டிய பொருளாகும். ‘கடல்யாடி கிரிதம்’ எனப்படும் சிறப்பு  எண்ணெய் தயாரிப்பில் வாழைப்பூ பிரதானமாக பயன்படுத்தப்படுகிறது. இந்த எண்ணெய் சர்க்கரை நோயாளிகள் மற்றும் அவர்களுக்கு ஏற்படும்  நோய்களைக் குணப்படுத்த பயன்படுத்தப்படுகிறது.

#பெண்களுக்குநல்லது

கெட்டித் தயிருடன் சேர்த்து எடுக்கப்பட்ட வாழைப்பூ ஜூஸ் மாதவிடாய் நேரத்தில் ஏற்படும் பிடிப்புகளுக்கு நிவாரணமாகும். அத்துடன் அப்போது  ஏற்படும் அதிகபட்ச உதிரப் போக்கைக் கட்டுப்படுத்தவும் பரிந்துரைக்கப்படுகிறது. மகளிர் சார்ந்த பல்வேறு உடல் உபாதைகளுக்கு மிகச்சிறந்த தீர்வாக  வாழைப்பூ இருப்பதால், பெண்கள் இதை தங்கள் உணவில் கட்டாயம் சேர்த்துக் கொள்ள வேண்டும்.

#சர்க்கரைநோயாளிகளுக்குமிகச்சிறந்தஉணவு

நீரிழிவு எனப்படும் சர்க்கரை நோயாளிகளுக்கு மிகச் சிறந்த உணவாக வாழைப்பூ கருதப்படுகிறது. சர்க்கரை நோய் மற்றும் அதனால் ஏற்படும் குடல்  புண், சிறுநீர் பிரச்னைகளுக்கு இது மிகச் சிறந்த நிவாரணம் அளிக்கக்கூடியது. வேகவைத்த வாழைப்பூ பொரியல் நீரிழிவு நோயாளிகளுக்கு மிகச் சிறந்த  உணவாகும். இதில் உள்ள ஹைபோகிளைசிமிக் எனும் ரசாயனம் நீரிழிவு நோயாளிகளுக்கு மிகச் சிறந்தது. வாழைப்பூ சூப் சாப்பிடுவதன் மூலம் நல்ல  பலன் கிடைக்கும். அத்துடன் வயிற்றுப்போக்கு உள்ளவர்களுக்கும் ஏற்றது.

#சிலஎச்சரிக்கைகள்

வாழைப்பூ இயற்கையில் விளைந்ததாக இருக்க வேண்டும்.!  அல்லது அரை மணிநேரம் உப்புநீரில் ஊறவைத்து பிறகு கழுவி வெட்டி பயன்படுத்த வேண்டும்.!  எந்த உணவும் அளவோடு சாப்பிட்டால்தான் அதன் முழுப் பலனும் கிடைக்கும். அந்த  விஷயத்தில் காய்கறிகளையும் அளவோடு சாப்பிடுவது  உடலுக்கு நல்லது.  உணவு ஆய்வாளர்கள் பரிந்துரை செய்துவிட்டார் என்பதற்காக அதை  அளவுக்கு அதிகமாக சாப்பிடுவது கூடாது.!

#எப்படித்தேர்ந்தெடுப்பது?

வாழைப்பூ புதிதாக மலர்ச்சியுடன் இயற்கை தன்மை கெடாமல் இருக்க வேண்டும். வெளிப்பகுதி மிகவும் வழவழப்பாக இருத்தல் வேண்டும்.  தோலிலிருந்து வாழைப்பூ இதழ்களை எடுப்பது சிரமமாக இருத்தல் கூடாது. உள்புற இதழ்கள் நன்கு மூடியிருந்தால் அது சிறந்த வாழைப்பூவாகும்.!


Saturday, April 2, 2016

வாழை இலைக்குளியல்



உலகில் உள்ள எல்லா தாவரங்களும் கரியமிலா வாய்வை உண்டு அக்ஸிஜனை வெளிவிடுகின்றன. அதில் சுத்தமான பிராணக் காற்றும் கலந்திருக்கும். ஆனால், வாழை இலை  மட்டுமே கரியமிலா வாய்வை உண்டு சுத்தமான பிராணக்காற்றை மட்டுமே வெளிவிடுகின்றன.!
இன்றைக்கு சைனா போன்ற நாடுகளிலும் நமது பெருநகரங்களிலும் சுத்தமான காற்றை சுவாசிக்க கட்டணம் வசூலித்து விட்டு காற்றை விற்கிறார்கள். ஆனால் அதுவும் தூய பிராணாக்காற்று அல்ல.! ஏனெனில் காற்றைப் பிடித்து அதில் உள்ள மாசை வடிகட்டி நமக்கு அளிக்கிறார்கள்.! இதில் உண்மையில் பிரணாக்காற்று இருப்பதில்லை. வெறும் சக்கையான காற்று மட்டுமே உள்ளது. இதனால் உடலுக்கு பெரிய நன்மை எதுவும் கிடைக்காது. ஆனால், இயற்கையான வாழை இலையில் சாப்பிடுவதாலும், வாழையில் உள்ளிருந்து வெளியேறும் காற்றை சுவாசிப்பதலேயும் நமது உடலில் 100% பிராணக்காற்று அதிகரிக்கும்.! அதனால் தான் உடல் எரிந்த நிலையில் பிரணான் அல்லாடிக் கொண்டிருப் பவர்களை  வாழையில் படுக்க வைக்கிறார்கள்.!
இது மட்டுமல்லாமல் இலையை சுட்டு புண்களில் தடவுவது, வயிற்றுப் புண்ணுக்கு காய்ந்த இலையோடு தேன் கலந்து சாப்பிடுவது போன்ற பல்வேறு பழக்கங்கங்களை நமது முன்னோர்கள் கடைப்பிடித்தனர் அதில் ஒன்றுதான் வாழை இலைக்குளியல் வாழை இலைக்குளியல் செய்வதால் போகுப் போகும் உயிரைக்கூட திரும்ப மீட்க முடியும் என்கிறார்கள் இயற்கை ஞானிகள்.!
வாசியை சுத்தப்படுத்தும் இரகசியம் தெரிந்து விட்டால் உடலின் சேர்ந்து விட்ட அளவுக்கதிகமான கரியமிலா வாய்வை ஒரு மணி நேரத்தில் வெளியேற்றி விடலாமே.!

வாழை இலைக்குளியல்
செய்முறை

1. இயற்கை வழியில் விளைவித்த வாழை இலைகளை ஆளுக்கு தகுந்தாற்போலும் உருவத்திற்கு தகுந்தாற் போலும் சேகரித்துக் கொள்ள வேண்டும். சுமாராக ஒருவருக்கு  எட்டு இலைகள் வரை தேவைப்படும்.!
2.தரையில்  ஆறு வாழை நார், நூல் கயிறு அல்லது தென்னங்கயிற்றை வரிசையாக போட வேண்டும்.
3.அதன் மேல் நான்கு வாழை இலைகளை நன்றாக துடைத்து இலையின் தண்டை கையால்  லேசாக சதைத்து போடவேண்டும்.!
4.ஒரு காட்டன் டவலை சிறிது நனைத்து தலையில் மப்ளர்போல் சுற்றிக் கட்டிக் கொள்ள வேண்டும்.
5.நான்கு முதல் ஆறு டம்ளர் வரை நீரை குளியல் செய்யப் போகின்ற வருக்கு குடிக்க கொடுக்க வேண்டும்.!
6.பிறகு மெதுவாக அவரை வாழையில் படுக்க வைத்து விட்டு அவரின் மேல் நான்கு முதல் ஆறு இலைகளை  தலை முதல் பாதம் வரை வெளியே தெரியாமல் வைத்து நன்றாக மூடிவிடவும். சுவாசம் செய்வதற்காக மூக்கின் மேல் வைக்கும் இலையை மட்டும் லேசாக வெட்டிக் கொள்ள வேண்டும்.!
7.அப்படியே கயிறால் கட்டி படுக்க விடவும். இருபது முதல் 30 நிமிடம் வரை இப்படி இருக்க வேண்டும். உடல் முழுவதும் நன்றாக வேர்த்து இனிமேல் இருக்க முடியாது என்ற நிலை வந்தவுடன். கட்டுகளை அவிழ்த்து இலையை எடுத்துவிடவும்.
8.எழுந்தவுடன் பார்த்தால் கிட்டத்தட்ட இரண்டு முதல் நான்கு லிட்டர் வரை உடலில் இருந்து கெட்டநீர் வெளியேறி இருக்கும்.!
9.எழுந்தவரை நன்றாக ஐந்துமுறை சுவாசம் செய்ய வைத்து
தேன்  மற்றும் சிறிது இந்துப்புக்கலந்த  இரண்டு டம்ளர் நீரை குடிக்க கொடுக்க வேண்டும்.பிறகு 15 நிமிடம் கழித்து குளித்து விடலாம்.!

வாழைகுளியல் பலன்கள்
""''"'''"''"""""""'"'"'"
1.உடல் எடை சீராக இருக்கும்
2.உடலில் உள்ளக் கொட்ட நீரும் காற்றும் வெளியேறிவிடும்
3.தோல் நோய்கள் குணமாகும்
4.ஆஸ்துமா,இழுப்பு ,அடுக்குத்தும்மல், உடல் பருமன்  போன்ற நோய்கள் கட்டுப்படும்
5.சிறுநீரகம், கணையம், கல்லீரல் பலப்படும்
6.ஆண்மைக் குறைவு, கர்பபைக் கோளாறு குணமாகும்
7.உடலுக்கு புத்துணர்வும் புதிய நம்பிக்கையும் கிடைக்கும்
8.கை,கால் வலி, மூட்டுவலி, முதுகுவலி தண்டுவடக் கோளாறுகள் கட்டுப்படும்
9.பசியின்மை, அஜீரணக் கோளாறு, பித்த வாந்தி குணமாகும்
10.ஜாதகத்தில் சிலருக்கு ஏற்படும் மரண கண்டத்தில் இருந்து தப்புவிக்கும்.!

இது மட்டுமல்ல இன்னும் எத்தனையோ அற்புத பலன்களை உடையது வாழை இலைக்குளியல். ஏனெனில் உடலில் பிராணசக்தி துய்மையடையும் உடல், மனம், ஆன்மா அனைத்துமே தூய்மையடையும்.!

குறிப்பு: காலையில் 8 முதல் 11 மணிவரையும் மாலையில் 3 மணி முதல் 5 மணிவரையும் வாழையிலைக் குளியல் செய்ய ஏற்ற நேரம்.!
கீழே விரிப்பை விரித்து மொட்டை மாடி, வெட்டவெளியில் மட்டுமே குளியல் செய்ய வேண்டும். பெண்கள் சுற்றிலும் மறைவான வெட்ட வெளியில் செய்ய வேண்டும்.!
வாழை இலைக்குளியலுக்கு முதல்நாள் முற்றிலும் சமைக்காத உணவை உண்டு வாழை இலைக்குளியல் செய்தால் அதன் பலன் பல மடங்கு உயரும்.!
அதீத மன அழுத்தம், மனக்கோளாறுகள், கர்பிணிப் பெண்கள், இரத்த அழுத்தத்திற்காக பல ஆண்டுகள் மாத்திரை எடுப்பவர்கள், முற்றிய நிலையில் உள்ள இதய நோயாளிகள் வாழை இலை குளியல் எடுப்பதை தவிர்ப்பது நலம் பயக்கும். மற்றபடி 10 வயது முதல் நூறு வயதுவரை உள்ள ஆண், பெண் அனைவரும் வாழையில் குளியல் செய்து உடலில் பிராண சக்தியை அதிகரிக்கலாம்.!
வாழ்க வளமுடன்.!
நலம் பெருகட்டும் …

நாகர்கோவிலில் விரைவில் நடக்க இருக்கும் வாழையிலை குளியல் உள்ளிட்ட இயற்கை வாழ்வியல் முகாமில் கலந்துகொள்ள நம்மை அனுகலாம் …!
amyogatrust.blogspot.com
mobile:9629368389

நீர் சிகிச்சை

தண்ணீர் சிகிட்சை

*தினமும் காலையில் இரண்டு டம்ளர் நீர் குடிக்க வேண்டும்.
இதனால்  உணவுப்பாதை,பெருங்குடல் சுத்தமாகும்.!

*உடற்பயிற்சி, யோகா செய்வதற்கு முன் ஒரு டம்ளர் நீர் குடிக்க வேண்டும். இதனால் பயிற்சியினால் ஏற்படும் உடல் உஷ்ணம்
சீரடையும்.!

*ஒன்றுக்கு போய்விட்டு வந்ததும் அரை டம்ளர் நீர் குடிக்க வேண்டும். இதனால் உடல் இழந்த நீரை சமன்செய்யும் அதோடு யூரினரி இன்பெக்சனையும் கட்டுப்படுத்தும்.!

*யோகா, உடற்பயிற்சி முடிந்ததும் அரை டம்ளர் நீர் குடிக்க வேண்டும். இதனால்  உடல் செயல்திறன் அதிகமாகும்.!

*குளிப்பதற்கு முன் ஒரு டம்ளர் நீரருந்த வேண்டும். இதனால் உடல்சூடு எளிதில் தணியும்.!

*சாப்பிடுவதற்கு ஒரு மணிநேரம் முன்பு ஒன்று முதல் இரண்டு டம்ளர் நீரருந்த வேண்டும். இதனால் உணவு எளிதில் ஜீரணமாகும்.!

*சாப்பிடும் போது உணவுடன் அரைடம்ளர்  வரை மட்டும் நீரருந்த வேண்டும். இதனால் உணவு நன்றாக அரைக்கப்பட்டு உணவின் சத்து எளிதில் உடலில் சேரும்.!

சாப்பிட்டு அரை மணி முதல் ஒரு மணிநேரம் கழித்து இரண்டு டம்ளர் வரை நீரருந்த வேண்டும். இதனால் உணவுப்பாதை, பெருங்குடல் பலப்படும்.!

உடல் உழைப்பிற்கு பின் இரு டம்ளர் நீரருந்த வேண்டும்.
இதனால் உடல் இழந்த ஆற்றலை திரும்பப் பெறும்.!

கோபம் வந்தால் உடனே அரை டம்ளர் நீரருந்த வேண்டும். இதனால் மனம் அமைதியடையும்.!

அதிகமாக பேச வேண்டிய நேரத்தில் ஒரு டம்ளர் வரை நீரருந்திவிட்டு பேச வேண்டும். இதனால் நாவறட்சி இன்றி நீண்ட நேரம் உரையாட முடியும்.!

தூங்குவதற்கு காலிலிருந்து அரைமணி நேரம் முன்பு ஒரு டம்ளர் நீரருந்த வேண்டும்.
இதனால் உறக்கத்தில் இரத்த ஓட்டம் சீராக நடைபெறும்.!

#குறிப்பு: மினரல் வாட்டர், பிரிஜ் வாட்டர்,  ஹாட் வாட்டர், கூல்டிரிங்ஸ், மோர் போன்ற எதுவும் மண்பானை நீருக்கு ஈடாகாது. ஏனெனில் மாண்பானை நீரில் தேவையில்லாத பாக்டீரியாக்கள் அழிந்து விடுவதோடு சுத்தமான அக்ஸிஜன் அதிகரிக்கும் மற்றவை களில்
அக்ஸிஜன் சிதைந்து விடுவதோடு தீமை செய்யும் பாக்டீரியாக்கள் நிறைந்து காணப்படும்.!

 amyogatrust.blogspot.com
mobile:9629368389

நலம் பெருகட்டும் …

Friday, April 1, 2016

உங்க சமைமயலரையில் மாதா பிளாஸ்டிக்கா?

நீங்க உங்கள் சமையலறையில்
 plastic cutting board ( பிளாஸ்டிக் கட்டிங்  போட் )  ஐ கொண்டு   தானா காய்கறிகளை நறுக்குவது.?

அப்படிஎன்றால் இந்த பதிவை படித்தவுடன் உங்கள் plastic cutting board ஐ சற்று அவதானியுங்கள்.
நீங்க உபயோகிக்கும் plastic cutting board காய்கறிகள் நறுக்கும் பொழுது உங்கள் கத்தி அந்த கட்டிங் போடையும் சேர்த்து சிறிது சிறிதாத நறுக்கப்பட்டு உங்கள் கண்களுக்குத் தெரியாத அளவுக்கு சிறிது துண்டுகள் நீங்க  நறுக்கும் காய்கறிகளுடன் சேர்ந்து உங்கள் சமையலில் சேர்ந்து நீங்கள் சாப்பிடும்போது அது  உங்க சமிபாட்டு அறையை சென்றடைகின்றது. பிளாஸ்டிக் எப்பொழுதும் ஜீரணிப்பதில்லை இதனால் உங்களுக்கு உங்கள்  உடம்பில் குடலோடு ஒட்டி உடல் சம்பந்தமான  நோய்களை உருவாக்கி உங்களை மரணம் வரைக்கும் கொண்டுசெல்கின்றது. இந்த பாதிப்பு

அதிகமாக சிறுவர்களுக்கே ஏற்படுகின்றது. உங்கள் plastic cutting board ஐ  அவதானித்து பார்த்தீர்களானால் புரியும்.எவ்வளவு இதிலிருந்து உங்கள் சமையலோடு கலந்து சாப்பிட்டு இருக்கின்றீர்கள்  என்று.

எனவே நீங்கள் எப்பொழுதும் உங்கள் wood  cutting board பலகை கட்டிங் போட் கொண்டே உபயோகிக்கும் பழக்கத்துக்கு மாற்றிக்கொள்ளுங்கள். பலகை சிறிது துண்டுகளாக தூள்கள்  சமையலில் கலந்துஅதை அடுப்பில் வைத்து வேகவைத்தால் அது உடம்புக்கு கேடு விளைவிக்காது.ஜீரணிக்கும். நீங்களும்உங்கள் குடும்பமும் உங்கள் நண்பர்களும்.பாரிய நோயிலிருந்து பாதுகாக்கலாம்.இந்த தகவலையும் நண்பர்களுக்கு பகிர்ந்துகொள்ளுங்கள்.
நோயற்ற  வாழ்வே குறைவற்ற  செல்வம்.

அதிமதுரம்

அதிமதுரம் என அழைக்கப்படும் இதன் தாவரவியல் பெயர் Glycyrrhiza glabra என்பதாகும்.

வயிறு, கழுத்து, தலை, நாரவாய் இவ்விடத்து நோய்கள் சுரம் அதைப்பு ,உதாவர்த்தரோகம் ,வாயு மூலமுடி, எலி, பாம்பு இவற்றின் விஷம் நீங்கும்.

ஒன்றரை அடி உயரம் வளரும் இச்செடி இயற்கையாக மலைப்பகுதிகளில் விளைகிறது.

இலைகள் கூட்டிலையானவை.

ஊதா நிறமான சிறு பூக்கள் தண்டின் கணுக்களில் காணப்படும்.

காய்கள் 3 செ.மீ வரை நீளமாக சிறு முட்களுடன் காணப்படும்.

வேர்கள் கிளைத்தவை.

இவை சிறியதும் பெரியதுமாக உட்புறம் மஞ்சள் நிறமாகவும், வெளிப்புறம் அடர்த்தியான பழுப்பு நிறமாகவும் காணப்படும்.

வேர்களே மருத்துவத்தில் அதிகமாக பயன்படுகின்றன.

மேலும், இவை பெருமளவில் ஏற்றுமதி செய்யப்படுகின்றன.

காஷ்மீர், பஞ்சாப், இமாச்சலப் பிரதேசம், உத்தரப் பிரதேசம் போன்ற மாநிலங்களில் அதிமதுரம் வாணிப ரீதியாகப் பயிரிடப்படுகிறது.

அதிங்கம்,அஷ்டி, மதூகம், இரட்டிப்பு மதுரம் ஆகிய மாற்றுப் பெயர்களும் அதிமதுரத்திற்கு உண்டு.

அதிமதுரம் நாட்டு மருந்துக் கடைகளில் காய்ந்த நிலையில் கிடைக்கும்.

ஸ்பெயின், இத்தாலி போன்ற நாடுகளில் நெல் வயல்களில் அதிமதுரமும் அடர்ந்த களைச்செடியாக வளர்கிறது.

இலைகள் இனிப்பு சுவையும், வெப்பத் தன்மையும் கொண்டவை.

வேர்கள் குளிர்ச்சித் தன்மை கொண்டவை.

வேர் புண்கள், தாகம், இருமல்,தலைநோய்கள் ஆகியவற்றை குணமாக்கும்.

காக்கை வலிப்பு, மூக்கிலிருந்து இரத்தம் வடிதல், படர்தாமரை, ஒற்றைத் தலைவலி ஆகியவற்றை கட்டுப்படுத்தும்.

முடியை வளர்க்கும் பண்பும், ஆண்மையைப் பெருக்கும் குணமும் கூட அதிமதுரத்திற்கு உண்டு.

ஆயுளையும் அதிகரிக்கச் செய்யும்.

அதிமதுரம் சர்வதேச மருத்துவ மூலிகையாகும்.

அதிமதுரத்தின் மருத்துவ குணங்கள் அனைத்தும், உலகத்தின் எல்லா மருத்துவ முறைகளிலும் பயன்படுத்தப்படுகிறது.

அதிமதுரம் மிக எளிய முறையில் பயன்படுத்தப்பட்டாலே அனேக நோய்களை நீக்கி விட முடியும்.

மனிதர்களுக்குத் தீங்கு செய்யும் வைரஸ் கிருமிகளை அழிக்கும் சக்திகள் நிரம்பியது.

நவீன ஆய்வின் மூலம் இந்த உண்மை வெளியாகியுள்ளது.!

நலம் பெருகட்டும் …