Showing posts with label மருந்துகள்.. Show all posts
Showing posts with label மருந்துகள்.. Show all posts

Thursday, April 21, 2016

தொப்பை குறைய..

இயற்கை வழியில் உடல் பருமன், தொப்பையை குறையுங்கள்

தினமும் 15 நிமிடம் உடற்பயிற்சி 60 நிமிடம் யோகா பயிற்சி
தினமும் ஒருவேளை சமைக்காத பழம், காய்கறி தானிய உணவு அதோடு வழக்கமான உணவில் இஞ்சி, பூண்டு, மிளகு, தினம் ஒரு கீரை போன்றவற்றை சாப்பிடுவதோடு இடையில் ஸ்நாக்ஸ் டீ, காபிக்கு பதிலாக ஆப்பிள், சாத்துக்குடி, எலுமிச்சை,பைனாப்பிள் பழச்சாறுகளை குடித்துவந்தால்  எடை குறையும்.!

அதோடு தேவைப்பட்டால்  தினமும் இரவில் ஒரு தேக்கரண்டி திரிபலா சூரணத்தை அரை டம்ளர் நீரில் கரைத்து தூங்குவதற்கு அரைமணி நேரம் முன்பு குடித்து வந்தால் எடையும் தொப்பையும் வேகமாக குறையும்.!
நலம் பெருகட்டும் …

amyogatrust.blogspot.com
mobile:9629368389

Sunday, April 17, 2016

காய்ச்சல்

இயற்கை வழியில்
காய்ச்சலை குணமாக்குங்கள்

காய்ச்சல் என்பது உடலின் உள் கழிவுகளை வெளியேற்றி
உடலை சுத்திகரித்துக் கொள்ள
உடலே செய்யும் வைத்தியம்.!
காய்ச்சலில் முக்கியமான பகுதி மூளைகாய்ச்சல் என்பது தான்.!
மற்றபடி டைபாய்டு, மலேரியா போன்ற காய்ச்சல்கள் நோயெதிர்ப்பு ஆற்றல் குறைந்தவர்களுக்கு மட்டுமே வரும்.!
காய்ச்சல் வந்தவுடன் நாம் செய்ய வேண்டிய முதல் உதவி வழக்கமான உணவை நிறுத்துவதுதான். அதற்காக பிஸ்கெட், பிரட், ஹார்லிக்ஸ் போன்றவற்றை எடுத்துக்கொள்ளக் கூடாது.! ஏனென்றால் உடலில் பல நாட்களாக சேகரிக்கப்பட்ட இரசாயண கழிவுகளை எரிக்கத்தான் காய்ச்சலே வருகிறது. மீண்டும் இரசாயணத்தை கொடுத்தால் காய்ச்சல் குணமாக  நீண்ட நாட்கள் பிடிக்கும்.! வெறு என்னதான் சாப்பிடுவது என்றால் வெறும் சுத்தமான சாத்துக்குடியின் சாறு மற்றும் சுத்தமான மண்பானை நீர் மட்டும்தான் மண்பானை நீரை வேண்டுமானால் சற்று சூடாக்கி குடிக்கலாம். ஆனால் கொதிக்க வைக்கவே கூடாது.! கொதிக்க வைத்தால் நீரில் உள்ள ஆக்ஸிஜன் மற்றும் தாதுப்பொருள்கள் முற்றிலும் அழிந்துவிடும்.! காய்ச்சல் மூளைகாய்ச்சலாக மாறுவதிலிருந்து பாதுகாக்க ஒரு ஈர வெள்ளைத்துணியை நனைத்து நெற்றியில் மட்டும் துணிக்காயகாய பற்றிட்டுக் கொண்டே இருக்க வேண்டும். தேவைப்பட்டால் குழைய வேகவைத்த அரிசிக்கஞ்சியை கொஞ்சம் குடித்துக் கொள்ளலாம்.! காய்ச்சலோடு ஜன்னி வந்தால் சுத்தமான மண்ணை குழைத்து நெற்றியிலும் வயிற்றிலும் பற்றிட்டுக் கொள்ள வேண்டும்.!  இதுவே போதும் இரண்டு மூன்றுநாட்களில் உடலில் உள்ள கழிவுகள் தீர்ந்தவுடன், நோயெதிர்ப்பு ஆற்றல் வலுவடைந்தவுடன் காய்ச்சல் விடைப்பெற்று விடும்.! உள்மருந்து கொடுத்தே ஆகவேண்டிய சூழல் இருந்தால் பத்து துளசி இலை பத்து நல்லமிளகு ஐந்து ஜாதிமல்லி இலை அல்லது பூ இவற்றை இடித்து 2 டம்ளர் நீரில் கொதிக்க வைத்து அது ஒன்றரை டம்ளர் ஆனதும் எடுத்து வடிகட்டி மூன்று வேளை உணவிற்கு  அரைமணி முன் அல்லது உணவிற்கு அரைமணி நேரம் பின்பு கொடுத்து வந்தால் எத்தகைய காய்ச்சலும் அதிகப்பட்சம் ஒருவாரத்தில் குணமாகிவிடும்.! இது பலபேரால் பயன்படுத்தி முழு வெற்றி அடைந்த அருமையான இயற்கை முறை  அனைவரும்  பயன்ப்படுத்திக் கொள்ளுங்கள்.!
நலம் பெருகட்டும்.!

amyogatrust.blogspot.com
mobile:9629368389.!

Wednesday, April 13, 2016

சிட்டுக்குருவி லேகியம்

சாதிக்காய்
சாதிப்பத்திரி
தக்கோலம்
மதுரம்
மாயக்காய்
அதிவிடயம்
குரோசணி
திரிபலா
தாளிசபத்திரி
தகரவிதை
பூனைக்காலி விதை
திரிகடுகு
செம்பகமொட்டு
கொட்டம்
வால்மிளகு
கஞ்சா
முந்திரிப்பழம்
அபின்
தாறவிதை

வகைக்கு 15 கிராம் சேகரித்துக்கொண்டு 300 கிராம் சுத்தம் செய்த சிட்டுக்குருவி.

செய்முறை:-

முதலில் மருந்துகள் அனைத்தையும்நன்றாக சுத்தம் செய்துஉரலில் இடித்து வைத்துக்கொண்டு குருவியின் தூவல்பின்னி, குடல் எல்லாவற்றையும்எடுத்து சுத்தம் செய்துகொண்டு  குருவின் வயிற்றில் இடித்த  மூலிகை சரக்குகளை அடைத்து ஊசிநூல் கொண்டு சுத்திதைத்து வைத்து விட்டு ஒரு சட்டியில் தேவை யான அளவு பசுநெய் விட்டு குருவியை சிவக்க பொறித்து எடுக்கவும். பிறகு குருவி களை எடுத்து நூலைப்பிரித்து விட்டு அனைத்தையும் உரலில் போட்டு நன்றாக இடித்து எடுத்துவிட்டு  இதன் எடைக்கு பாதியளவு நாட்டுவெல்லமும் பாதியளவு பனங்கற்கண்டும் சேர்த்து வைத்துக்கொண்டு  ஒரு சட்டியை அடுப்பில் வைத்து  அரைலிட்டர் பசும்பாலை ஊற்றி வைத்துவிட்டு பால் சூடானதும் அதில் மருந்து சரக்குக ளைப்போட்டு சிறிய தீயில் நன்றாக கிளறி வரவும் பாகுபதம் வந்ததும் குருவி பொறித்த மீதி நெய்யையும் 200 மில்லி தேனையும் விட்டுத் தொடர்ந்து  எல்லா வற்றையும்   கிளறிக் கொண்டே வரவும் அனைத்தும் இறுகி கம்பிபதம் வந்ததும் இறக்கி ஆறியபின் பரணியில்பத்துரப்படுத்துக.!


தினமும் காலை, இரவு உணவிற்கு ஒருமணி முன்பு நெல்லிக்காய் அளவு லேகியத்தை சுவைத்து சாப்பிட்டு கால்டம்ளர் பசும்பால் அல்லது சுடுநீர் குடித்து வர,

போக சக்தி அதிகரிக்கும், விந்தணுக்குறைபாடு சரியாகும், கைகால் கடுப்பு,
மந்தம்,
சோர்வு,
கடும்விக்கல்,
இடுப்புளைவு,
கைநடுக்கம்,
உடல் இளைப்பு தண்டுவடக்கோளாறுகள்

ஆகியவை சரியாவதுடன் வெள்ளைப் படுதல், அதீத உதிரப்போக்கு, விந்தொழுக்கு போன்ற மேகவியாதிகள் இருபத்தொன்றும் போகும்.!

கிடைக்காத மூலிகைகளை தவிர்த்து அல்லது அதே குணமுள்ள மூலிகையை சேர்த்து லேகியம் கிண்டலாம். சிட்டுக் குருவி இல்லையெனில் நாட்டு கோழிக் குஞ்சுகளை பயன்படுத்தலாம்.!


amyogatrust.blogspot.com
mobile:9629368389

Tuesday, April 12, 2016

பிரசவ மருந்து.

பிரசவித்த   பெண்களுக்கு
   பிரசவ (பேற்று)  மருந்து

மஞ்சள்,
பூண்டு,
அரத்தை,
நாகப்பூ,
சதகுப்பை,
திரிகடுகு,
திரிபலை,
கருஞ்சீரகம்,
ஆசாளி,
வாய்விளங்கம்,
லவங்கம்,
ஓமம்,
குரோசணி,
கசகசா,
தாளிசம்,
வால்மிளகு,
கடுகு,
வசம்பு,
காயம்,
தக்கோலம்,
தேசாவரம்,
திரிசாதி,
சீரகம்,
பெருஞ்சீரகம்,
கார்கோல்,
கற்கடக சிங்கி, வலம்புரிக்காய்,
மாயக்காய்,
நயம் விடயம் ,
அக்கறா,
கச்சோசலம்,
ஏலம்

ஆகியவற்றை வகைக்கு  10 கிராம்
வாங்கி சுத்தம் செய்து நன்றாக இடித்து தூளாக்கி 330  கிராம்  கருப்பட்டியோடு சேர்த்து நன்கு விரவி வைத்துவிட்டு அடுப்பில் சட்டியை வைத்து அதில் 100  மில்லி  தேனும் கலந்து சிறிய தீயாக எரித்து சற்றுநேரம் கிளறிவிட்டு பிறகு நாட்டுப்பசு நெய் விட்டு   மேலும் கிளறி மெழுகு பதம் வந்ததும் இறக்கி காண்ணாடி பாட்டிலில் பத்திரப்படுத்துக.!


நெல்லிக்காய் அளவு காலை இரவு வெறும் வயிற்றில் சாப்பிட்டு வர குடல்நீர், குடல்புண், பிரசவ வாய்வு குணமாகும். பிரசவ தொப்பை வற்றும், அதிகபால் சுரக்கும், இடுப்பெலும்பு வலுப் பெறும்.!

amyogatrust.blogspot.com
mobile:9629368389

Monday, April 11, 2016

கோடைவியாதிகள் - கண்கட்டி

கண்கட்டி வராமல் தடுப்பது எப்படி?

தற்போது வெயில் தகித்து வருகிறது. வெப்பத்தால் தலை முதல் கால் வரை நமது உறுப்புகள் பாதிப்பை சந்திக் கின்றன. கண்களும் வெகுவாக பாதிக்கப்படுகிறது. இதனால் கண்ணில் கட்டி ஏற்பட்டு பாடாய்படுத்தி விடுகிறது. வெயில் தாக்கத்தில் இருந்து கண்களை பாதுகாக்கும் வழிகள் பற்றி விளக்கு கிறார் கண் மருத்துவர் சித்தார்த்தன்.

கண்கட்டி என்பது கண்ணின் இமைப் பகுதி மற்றும் கீழ்ப்பகுதியில் கொப்புளம் போல உருவாகும். இது வலி மற்றும் கண்ணில் உறுத்தலை உண்டாக்கும். சில நேரம் இந்த கட்டிகள் ஒரு வாரம் வரை நீடிக்க வாய்ப்புள்ளது. மேலும் வெயில் காலத்தில் கண்கட்டி பிரச்னை அதிகமாக இருக்கும். வெயிலில் அலையும் போது, உடல் உஷ்ணம் அதிகரிப்பதால் கண்கட்டி உருவாகிறது. அழுக்குகள், தூசுகளாலும் இது ஏற்படலாம். சாலையில் செல்லும் போது தூசு, புழுதி முகத்தில் படிகிறது. கண்களிலும் தூசுகள் படிந்து பாதிப்பை ஏற்படுத்துகின்றன. இதுபோன்ற சூழலில் கண்ணில் உடனே கிருமித்தொற்று உருவாகிறது. புழுதி, மண், புகை உள்ளிட்டவைகளுடன் உஷ்ணமும் சேர்ந்து கொண்டால் கண்ணில் கட்டிகள் எட்டி பார்த்து விடுகிறது. வெயில் காலத்தில் அதிக வியர்வை வெளியேறுவதால் உடல் உலர்ந்து போகிறது. கண்ணில் உள்ள கண்ணீர், விழிப்படலத்துக்கான ஈரப்பசையை கொடுக்கிறது. வெயிலில் செல்லும் போது இந்த கண்ணீர் விரைவில் ஆவியாகி விடுவதால் கண் உலர்ந்து எரிச்சலை ஏற்படுத்தும். மேலும் புறஊதா கதிர்களின் தாக்கம் வெப்ப காலத்தில் அதிகமாக இருக்கும். அவையும் கண்களுக்கு பாதிப்பை ஏற்படுத்தும். இதிலிருந்து பாதுகாத்துக் கொள்ள தரமான குளிர்க்கண்ணாடி களை (கூலிங் கிளாஸ்)பயன்படுத் தலாம். வெயில் காலம் மட்டுமல்லாமல், எப்போது வெளியில் சென்றாலும் குளிர் கண்ணாடிகளை பயன்படுத்தலாம். பாதுகாப்பு முறை: வெயில் தலையில் பட்டு உடல் உஷ்ணம் அதிகரிக்காமல் தடுக்க தொப்பிகள் அணிவது நல்லது. எங்கு சென்றாலும் ஒரு பாட்டில் குடிநீரும் கையில் இருக்கட்டும். வெயிலால் கண் உலர்வு ஏற்படும் போது இந்த தண்ணீ ரால் கண்களை கழுவிக் கொள்ளலாம். அதிக நேரம் வெயிலில் அலைவதால் ஏற்படும் கண் எரிச்சலுக்கு கண் சொட்டுமருந்துகள் உள்ளன. இவற்றை மருத்துவரின் ஆலோசனைப்படி பயன்படுத்தலாம். வெயிலில் சுற்று பவர்கள் அடிக்கடி முகத்தையும் கண் களையும் குளிர்ந்த தண்ணீரில் கழுவ வேண்டும். இது கண்களில் தூசு படிவஎதையும், உலர்வதையும் தடுக்கும். கண்கள், முகம் புத்துணர்ச்சியுடன் காணப்படும். கண்ணில் பிரச்னை வரும் போது மருத்துவரின் ஆலோசனைப்படி சிகிச்சை எடுத்துக் கொள்வது நல்லது. ரெசிபி பாலக்பனீர்: 200 கிராம் பனீரை பொடியாக நறுக்கி எண்ணெயில் வறுத்துக் கொள்ளவும். ஒரு கட்டு பாலாக்கீரையை 10 நிமிடம் வேக வைத்து மிக்சியில் அரைத்துக் கொள்ளவும். தக்காளி, வெங்காயம், இஞ்சி, பூண்டு விழுது, சிவப்பு மிளகாய் ஆகியவற்றை வதக்கி அரைத்துக் கொள்ளவும். வாணலியில் எண்ணெய் ஊற்றி முந்திரி போட்டு பனீர் சேர்த்து அரைத்த விழுதை சேர்க்கவும். கரம்மசாலாத்தூள் மற்றும் உப்பு சேர்த்து கொதிக்க விடவும். பாலக்கீரையில் வைட்டமின் ‘ஏÕ சத்து உள்ளது. பனீர் உடலுக்கு குளிர்ச்சி தருகிறது. ராகிபழ அப்பம்: ராகி மாவு அரை கப், மைதா மாவு அரை கப், பொடியாக வெட்டிய 2 வாழைப்பழம் ஆகியவற்றுடன் சிறிதளவு உப்பு மற்றும் சர்க்கரை சேர்த்து பிசைந்து கொள்ளவும். தோசை பதத்தில் ஆப்பம் போல் சட்டியில் வார்த்து எடுக்கவும். இந்த இனிப்பு அப்பத்தில் நார்ச்சத்து உள்ளது. வாழைப்பழம் சேர்ப்பதால் உடலுக்கு குளிர்ச்சி. பனீர் பொடிமாஸ்: இரண்டு கப் பனீரை ஆவியில் வேக வைத்து உதிர்த்துக் கொள்ளவும். அரை கப் நறுக்கிய குடை மிளகாய், வெங்காயம் அரை கப், கேரட் துருவல் ஒரு டேபிள் ஸ்பூன், பச்சை மிளகாய் 2 ஆகியவற்றுடன் உதிர்த்து வைத்துள்ள பனீரையும் சேர்த்து தாளித்து வதக்கவும். இறுதியில் அரை எலுமிச்சை பழத்தை பிழிந்து, கொத்தமல்லி இலை சேர்த்து அலங்கரிக்கவும். இதில் புரோட்டீன் மற்றும் வைட்டமின்கள் உள்ளன. பாட்டி வைத்தியம் அகத்திக் கீரை சாற்றுடன் துவரம் பருப்பு 100 கிராம், தேங்காய்ப்பால் சேர்த்து வேக வைத்து சாப்பிட்டால் கண் எரிச்சல் தீரும். அகத்திக் கீரையை அரைத்து உச்சந்தலையில் ஒரு மணி நேரம் வைத்திருந்து குளித்தால் உடல் சூடு குறையும். அல்லிக் கொடியை தேங்காய் எண்ணெயில் போட்டு காய்ச்சி தைலமாக தயாரித்து தலையில் தேய்த்து வந்தால் உடல் சூடு தணியும். ஒரு கைப்பிடி ஆதொண்டை இலையை ஒரு லிட்டர் நல்லெண்ணெயில் போட்டு கொதிக்க வைத்து தைலம் தயாரித்து, தலைக்கு தேய்த்து குளித்து வந்தால் கண் நோய் குணமாகும். இசப்கோல் விதையை பொடி செய்து தேனில் கலந்து சர்பத் செய்து குடித்து வந்தால் உடல் சூடு தணியும். வெந்தயக் கீரையுடன் பூண்டு, உப்பு சேர்த்து அரைத்து சாப்பிட்டால் சூடு குறையும். வெங்காயத் தாளை அரைத்து அதில் வெந்தயத்தை ஊற வைத்து காய வைக்கவும். பின்னர் பொடி செய்து ஒரு ஸ்பூன் அளவுக்கு சாப்பிட்டால் சூடு தணியும். வல்லாரைக் கீரையை அடிக்கடி உணவில் சேர்த்துக் கொண்டால் கண்கள் குளிர்ச்சி அடையும். முருங்கைக் கீரையை அரைத்து தலையில் தேய்த்துக் குளித்தால் உடல் குளிர்ச்சியடையும். டயட் தொடர்ந்து வெயிலில் அலைவது, கண்களில் தூசுபடுவது போன்றவற்றை தடுப்பது அவசியம். குறைந்தது மூன்று லிட்டர் தண்ணீர் குடிக்க வேண்டும். வைட்டமின் ‘ஏ’ சத்து உள்ள கீரை வகைகளான அகத்திக் கீரை, பாலாக் கீரை, முருங்கைக் கீரை, கொத்தமல்லி, கருவேப்பிலை ஆகியவற்றை கட்டாயம் உணவில் சேர்க்க வேண்டும். கீரை, பால், வெண்ணெய், மோர், தயிர் ஆகியவற்றை தினமும் உணவில் சேர்த்துக் கொள்ளவும். உணவு தயாரிக்க கடலை எண்ணெய், ரீபைண்டு ஆயிலுக்கு பதிலாக நல் லெண்ணெய், தேங்காய் எண்ணெய் பயன்படுத்தலாம். காய்கறிகளில் கேரட், மாங்காய், தக்காளி, மீன் ஆகியவற்றில் இருந்து அதிகளவு வைட்டமின் ‘ஏ‘ சத்து கிடைக்கிறது. சிக்கன் சாப்பிட்டால் உடல் சூடு அதிகரிக்கும். அதற்கு பதிலாக மீன் அல்லது ஆட்டு இறைச்சி சாப்பிடலாம். வெந்தயத்தை பொடியாக்கி மோரில் அரை ஸ்பூன் கலந்து தினமும் இரண்டு முறை குடிப்பது உடல் சூட்டை தணிக்கும். இதை வெறும் வயிற்றில் குடித்தால் நல்ல பலன் கிடைக்கும். இளநீர், தர்பூசணி உள்ளிட்ட நீர்ப்பழங்களும் உஷ்ணத்தை குறைக்கும் என்கிறார் உணவு ஆலோசகர் சங்கீதா.!

நலம் பெருகட்டும் …

Saturday, March 26, 2016

நாயுருவி

நாயுருவி (Achyranthes aspera)
* * * * * * * * * * * * * * * * * * * * * * *
நாயுருவி கண்டால் வசீகரமாம் காண் - சித்தர் கூற்று.
கிராமபுறங்களில் கொல்லைக்காடுகளிலும், நகர்ப்புறங்களில் சாலையோரங்களிலும் வெகு சாதாரணமாய் தென்படும் இந்த நாயுருவி (Achyranthes aspera) ஒரு வெகுசக்தி வாய்ந்த மருத்துவ மூலிகைகச் செடியாகும்.இது ஒரு குத்துச்செடி வகையை சார்ந்தது.
எல்லா இடங்களிலும் தானே வளரும் தன்மை கொண்ட நாயுருவிச் செடியில் அரிதான மருத்துவ குணங்கள் கொட்டிக் கிடக்கின்றது. எப்போதும் போல நல்லவற்றை எல்லாம் நாம் கண்டுகொள்வதே இல்லைதானே.
நீள நீளமான குச்சிகளில் கீழ்நோக்கியபடி ஒட்டவைத்த நூற்றுகணக்கான அரிசிகள்தான் இதன் விதைகள். ஏதேனும் சிறு விலங்குகள் இந்த செடியை உரசியபடி ஓடும்போதோ, மனிதர்கள் இந்த செடியை உரசியபடி கடக்கும் போதோ இந்த விதைகள் அவற்றுடன் ஒட்டிக்கொண்டு விடும். அந்த விதை நன்கு காய்ந்த பின் உதிர்ந்தும் விடும். இந்த செடியின் விதைகள் பரவுவதற்காக இயற்கை அமைத்த வழிதான் இது.
இதில் செந்நாயுருவி, கருநாயுருவி, வெண்நாயுருவி என மூன்று வகைகள் இருக்கின்றன. இந்த மூன்று வகைகளுமே மருத்துவ குணம் சார்ந்தது என்றாலும் கருநாயுருவி ("கரு"நாயுருவி) தான் கிடைத்தற்கரியது. கருநாயுருவி கஷாயத்தை கர்ப்ப காலத்தில் மூன்று வேளை கொடுத்தால் சுகப்பிரசவம் ஆகும் என்கிறது சித்தர்களின் மூலிகை ஆராய்ச்சி முடிவுகள்.
சிவந்த ஞாயிறு, பரமாரி, பிறத்திய புற்பம், பிப்பீலிகிதநிதுச்சி, உளமணி, கடுடூதி, கரம்பை, மாமுனி, நாயுருஞ்சி,அமராரவம், கருதீதனகோரத்தி, கங்கேசரி, காரத்தி, காரம், சிலைகாரம் என்று பல பெயர்களில் இந்த மூலிகை சித்தர்களின் குறிப்பில் இடம் பெற்றிருக்கிறது.
மலைகளில் பாறைகளுக்கு இடையே வளரும் நாயுருவிச் செடியானது, பாறையில் துளையிட்டு வளரும் ஆற்றல் பெற்றது. இதனால் இதற்கு கல்லுருவி என்றொரு பெயருமுண்டு.
இந்த செடியின் வேரை வாயினுள் சில மணி நேரங்கள் வைத்து இருந்தால் நா வன்மை பெருகுமாம். நாவுருவி என்ற இதன் உண்மையான பெயர் மருவி நாயுருவி ஆகி இருக்கலாம்..
நாயுருவியின் இலை முதல் வேர் வரை எல்லாப் பாகங்களும் மருத்துவக் குணம் கொண்டவை. மனிதனின் சிறுநீரக உறுப்புகளை சரிவர இயங்கச் செய்யும். நோய்களை நீக்கி உடலைத் தேற்றும். தேவையற்றச் சதைகளை நீக்கும். நரம்புகளை சரிவர இயங்கச் செய்யும். இதுவே இவற்றின் பொதுவான மருத்துவ குணங்கள் ஆகும்.
நாயுருவிச்செடியை வேருடன் பிடுங்கி நன்கு கழுவிய பின் சிறுசிறு குச்சிகளாக வெட்டி வைத்துக்கொண்டு பல் துலக்கப் பயன்படுத்தலாம். (நாயுருவியுடன் கிராம்பு, வேம்பு, சுக்கு, கடுக்காய், நெல்லிக்காய், தான்றிக்காய், ஏல அரிசி, கருவேலப்பட்டை, இந்துப்பு போன்றவற்றைச் சேர்த்து பற்பொடியும் தயாரிக்கலாம்.)
நாயுருவி வேர் மற்றும் பட்டையைக் கொண்டு பல் துலக்கினால் கறைகள் இல்லாமல், பற்கள் பளிச்சென்ற வெண்மை நிறம் பெறும்.
பற்களில் தங்கியுள்ள நுண்கிருமிகளை நீக்கி, பற்களில் உண்டாகும் கூச்சம், சொத்தை, ஈறுகளில் உண்டாகும் வலி, வீக்கம் என வாய் சம்பந்தப்பட்ட அனைத்து நோய்களையும், நீக்குவதுடன் பற்களை பளபளவென மின்னச் செய்யும்.
நாயுருவி வேரால் 48 நாட்கள் தொடர்ந்து பல் துலக்கி வர பற்களோடு சேர்ந்து முகம் அழகு பெறும். வசீகரம் கூடும். வாக்கு வன்மை உண்டாகும். சொன்னது பலிக்கும். நம்முள் நேர்மறை எண்ணங்கள் மேலோங்கும். மனசக்தி அதிகமாகும். நினைத்தவை நடக்கும்.
முகம் பொலிவு பெற்று, பேச்சில் தெளிவு கூடும்போது நம்மையும் அறியாமல் நமக்குள் தன்னம்பிக்கை பெருகும். தன்னம்பிக்கை பெருக பெருக அது ஏற்படுத்தும் சக்தி அலைகள் மற்றவரை வசியம் செய்யும். அதனால் இதை ஒரு வசிய மூலிகை என்றும் கூறலாம்.
மேலும் நாயுருவி செடியின் இலை முதல் வேர் வரை மருத்துவ மகிமைகள் கொட்டிக் கிடக்கின்றன. இம் மூலிகையைக் கொண்டு நம் சித்தர்கள், முன்னோர்கள் அதீத பசி, மூலம், கண் நோய்கள், பல், ஈறு சம்பந்தப்பட்ட வியாதிகள், காதில் சீழ் வடிதல், இருமல், அனைத்து வகையான காய்ச்சல்கள், இருமல், பேதி , மலசிக்கல், மூலம், நீர்கட்டுபோன்ற வியாதிகளில் இருந்து எளிய முறையில் தீர்வும் கண்டுள்ளனர்.
சிறுநீரகக் கட்டி, சிறுநீரகக் கற்கள், இரத்தத்தில் உப்பு மற்றும் கிரியாட்டினைன் அதிகரித்த நிலை போன்ற மனிதர்களை மிரட்டும் வியாதிகளில் இருந்தும் முழுவதுமாய் குணமாக்கும் ஆற்றல் மிக்கது இந்த நாயுருவி.
மாதவிடாய்க் கோளாறுகள் ,வெள்ளைப்படுதல், பால்வினை நோய்களால் ஏற்பட்ட புண்கள், வெப்பக்கட்டிகள், தேமல், படை, சொறி, தொழுநோய் போன்றவற்றைக் குணப்படுத்தவும் இம்மூலிகைப் பயன்படுகிறது. உடம்பில் நீர் கோர்த்தல், ஊதுகாமாலை, நீரிழிவு நோய், ஆறாத புண்கள், சீழ்வடியும் புண்கள், வெட்டுக் காயங்கள், விஷக்கடி போன்றவையும் முற்றிலும் குணமடையும்.
மன நோய்கள், மன பயம், மன உளைச்சல், தூக்க மின்மை, படபடப்பு போன்ற மனம், நரம்பு சம்பந்தப்பட்ட வியாதிகளில் இருந்தும் அதிசயத்தக்க வகையில் பூரண குணம் பெறலாம்.
இதன் விந்தையான குணத்தால் சித்தர்கள் இரகசிய முறையாக தொடர்ந்து உபயோகித்து வந்துள்ளனர். நாயுருவி கதிரில் இருக்கும் அரிசியை பாலில் அரைத்து உட்கொண்டு, பசியையும், உணவையும் தவிர்த்து, காட்டிலேயே மனிதர்கள் கண்ணில் படாமல் இருக்க அவர்கள் மேற்கொண்ட எளிய வழிகளில் இதுவும் ஒன்றாம்.
மூங்கிலரிசி, தினையரிசி, நாயுருவி அரிசி ஆகியவற்றை வகைக்கு 100 கிராம் சேகரித்து ஒன்றாய் அரைத்து, அதில் ஒரு ஸ்பூன் பொடியை கஞ்சிபோல் செய்து சாப்பிட்டு வர, உடல் இரும்பைப் போல் உறுதியாகும். யானை பலத்தையொத்த அபார உடல்திறன், உடல் வனப்பு, முக வசீகரம் ஆகியன உண்டாகும்.
நாயுருவி இலைச்சாற்றை 30 மி.லி. அளவில் தினசரி காலை வெறும் வயிற்றில் சாப்பிட்டு வந்தால் சிறு நீரக நோய்கள் அனைத் தும் தீரும்.
நாயுருவி இலையை வதக்கி மிளகு, பூண்டு சேர்த்து அரைத்து வைக்கும் குழம்பு மிகவும் அருமையான ருசியில் இருக்கும். யார் வைத்தாலும் அம்மாவின் கைமணம் கட்டாயம் இருக்கும். வாரம் ஒரு முறையாவது இதை உட்கொண்டு வந்தால், இம் மூலிகை தன்னுள்ளே கொண்டுள்ள மருத்துவ குணத்தால் உடல்நலனை பாதுக்காக்கும் என்பதில் சிறிதும் ஐயமில்லை.
உட்கொண்டாலும் மருந்து, அரைத்து பூசிக்கொண்டாலும் மருந்து.
அதுமட்டுமல்ல காய்ந்த செடிகளை எரித்து அதன் புகையை சுவாசித்தாலும் அதுவும் மருந்து. எறிந்த சாம்பலை குழைத்து பூசினாலும் மருந்து.
இந்துக்களின் பூஜை முறைகளில் ஹோமம் வளர்க்கும் முறையில் ஆல், அரசு குச்சிகளுடன் நாயுருவியும் இருப்பதை நாம் கண்டிருப்போம். ஆம். இது ஒரு தேவ மூலிகை.
ஃபார் எக்ஸ்டெர்னல் யூஸ் ஒன்லி என்று எச்சரிக்கை தாங்கிவரும் இரசாயண மருந்துகளை தவிர்த்து நாயுருவி போன்ற இயற்கை கொடுத்த சீதனங்களை உபயோகிப்பதன் மூலம் பக்கவிளைவுகளை தவிர்த்தும், உடலுக்கு வலுவூட்டியும் ஆரோக்கியம் காக்கலாமே!!!
ஓரிரு தொட்டிகளிலோ, காம்பவுண்ட் /வேலி ஓரத்திலோ ஓரிரு செடிகள் வளர்த்தால் போதுமானது. உங்கள் பொன்னான நேரத்தை வீணடித்து கூண்டு அமைத்து, உரம் போட்டு எல்லாம் வளர்க்க வேண்டிய கட்டாயமில்லை.
மக்கள் நலனிற்காக தன்னை முழுவதுமாக அர்ப்பணிக்கும் இந்த அற்புத மூலிகைக்கு கொஞ்சமே கொஞ்சம் தண்ணீரும், எப்போதாவது கொஞ்சம் இயற்கை எருவும் போனால் போகிறதென்று கொடுங்கள்.

வாத வேங்கை வர்ம ஜோதி தைலம்.


1. தேங்காய் எண்ணெய் 1 1/2.லிட்டர்
2. சீனம் 100 gm
3. நவசாரம் 100 gm
4. வெள்ளை பூண்டு 100 gm
5. மிளகாய் வத்தல் 10 gm
6. வெற்றிலை 5 no's
7. டர்பன் ஆயில் 30 ml
8. தேன்மெழுகு 10 gm
9. கட்டி கற்பூரம் 10 gm
10. வேம்பாடம் பட்டை 25 gm
11. பச்சை கற்பூரம் 5 gm
12. புகையிலை 10 gm
செய்முறை :
சீனம்,சாரம் ,தனித்தனியே பொடித்து கொள்ளவும்.பூண்டு தோல் உரித்து சேர்த்து அரைத்து வழித்து இரும்பு சட்டியில் போட்டு,மிளகாய் வற்றல்,வெற்றிலை,புகையிலை கிள்ளி போட்டு எண்ணெய் முழுவதும் ஊற்றி அடுப்பிலேற்றி சிறு தீயாக எரித்து கற்கம் கறுத்து சட்டியில் ஒட்டும்.தைலம் காய்ச்சும் ஆரம்பம் முதல் முடிவு வரை கரண்டியால் கிண்டி கொண்டே இருக்கவும்.கற்கம் மணல் பதம் வரும் போது சட்டியை கீழ் இறக்கி வடி கலசத்தில் தேன் மெழுகை சீவி போட்டு,கட்டி கற்பூரம்,பச்சை கற்பூரம் பொடித்து சேர்க்கவும்.வடிகலசத்தில் மேல் துணியை சல்லடைபோல் வேடு கட்டி வேம்பாடம் பட்டையை பொடித்து தூவி அதன் மேல் சூடான தைலத்தை வேம்பார் பட்டை தூளின் ஊற்றவும்.எண்ணெய் சிவப்பாக மாறி கீழிறங்கி மெழுகு சூடங்களை தன்னுடைய சூட்டால் கரைத்துசேர்த்துக்கொள்ளும்.பிறகு டர்பன் ஆயில் சேர்க்கவும்.
தீரும் நோய்கள் :
1. மூட்டு வலி
2. கைகால் குடைச்சல்,
3. ரத்தக்கட்டு
4. அடிபட்ட வீக்கம்
5. சுளுக்கு
6. நரம்பு பிசகல்
7. சதைப் பிடிப்பு
8. மத மதப்பு
9. குதிங்கால் வலி
10. கழுத்துப் பிடிப்பு
11. மூச்சுப் பிடிப்பு
12. தோள்பட்டை வலி
13. உடம்புவலி
14. பக்க வாதம் முதலியவை தீரும்.
உபயோகிக்கும் முறை :
தூங்குவதற்கு முன்பாக 5 முதல் 10 சொட்டு வர்ம தைலம் எடுத்து சூடு உண்டாகும்படி கையினால் பாதித்த பகுதியில் தேய்க்கவும்.மறுநாள் காலை சுடு தண்ணீரில் குளிக்கவும்.or உப்பை சட்டியில் தெறிப்பு அடங்க வறுத்து துணியில் முடிந்து இளஞ்சூட்டில்ஒத்தடம் கொடுக்கவும்.
நலம் பெருகட்டும் 

தேனும் லவங்கப் பட்டையும் ..........

 உலகத்தில் கெட்டு போகாத ஒரே உணவு தேன் தான்!
அதிகபட்ச மாற்றம் எதுவென்றால், உறைந்து கிறிஸ்டல் கற்களாக மாறும். அப்போது சூடான தண்ணீரில் தேன் பாட்டிலை வைத்தால் இளகி மீண்டும் பழைய நிலைக்கு மாறிவிடும்.

**தேனை சூடு படுத்தக்கூடாது**
தேனை மைக்ரோவேவிலோ அல்லது அடுப்பிலோ வைத்து சூடு செய்தால் அதில் உள்ள சத்துக்கள் அழிந்துவிடும்.
உலகில் எல்லா பகுதிகளிலும் கிடைக்கும் உணவு தேன். தேனின் அற்புத உணவு தேனின் மருத்துவ குணங்கள் சொல்லி தீராதது. நாம் இதனை அறிந்து, நமது அன்றாட வாழ்வில் தேனை உபயோகிக்க வேண்டும். ஆரோக்கியமாக வாழ வேண்டும்.

**தேனும் லவங்கப் பட்டையும்**
இதய நோய்: இன்று எல்லா வயதினரையும் தாக்கும் நோய் இதய நோய். இந்த நோய் ஏற்பட மன உளைச்சல், பரம்பரை, கொழுப்பு சத்து கூடுதல் என்று பல காரணங்கள் சொல்லப்படுகின்றன.
இதயத்தின் ரத்த குழாய்களில், நாளங்களில் அடைப்பு ஏற்படுவதால், போதிய ரத்தம் கிடைக்காமல் இருதயம் செயல் இழக்கிறது.

**அற்புத மருந்து இதோ!**
தினமும் காலையில் லவங்கப்பட்டை பொடியை தேனுடன் சேர்த்து குழைத்து சிற்றுண்டியுடன் சேர்த்து சாப்பிடுங்கள். 2 கரண்டி தேன், 1 கரண்டி பொடி என்ற கணக்கில் ரொட்டியுடன் அல்லது நீங்கள் சாப்பிடும் சிற்றுண்டியுடன் சாப்பிட்டு வாருங்கள்.
இதய நோய் உங்களை மீண்டும் அனுகாது. ஏற்கெனவே உங்களுக்கு மாரடைப்பு வந்திருந்தால், மீண்டும் நிச்சயம் வராது.
இதய நோய் உள்ளவர்களுக்கு சுவாசம் மற்றும் இதய துடிப்பு பலவீனமாக இருக்கும். அவர்களுக்கு இந்த தேனும் லவங்கப்பட்டை பொடியும் ஒரு வசப்பிரசாதம். 1 மாதத்தில் அவர்களுக்கு வித்தியாசம் தெரியும்.
அமெரிக்கா, கனடா நாடுகளில் மருத்துவமனைகளில் இந்த உணவை கொடுத்து வருகிறார்க்ள.அதிசயத்தக்க மாற்றங்களை பதவு செய்துள்ளார்கள். அடைப்பை நீக்கி, இரத்த ஓட்டத்தை அதிகரித்து, மூச்சு வாங்குவதை குறைத்து, இதய துடிப்பை பலப்படுத்தி, இதய நோயை விரட்டி அடிக்கும் அற்புத சக்தி கொண்டது தேனும் லவங்கமும்.
செலவு குறைச்சல் தானே! முயற்சி செய்யுங்களேன்!

**ஆர்த்ரிரைட்டீஸ் என்கின்ற முடக்குவாதம்.**
மூட்டு வலி உள்ளவர்கள், நடக்க முடியாமல் கஷ்டப்படுகிறவர்களுக்கு தித்திக்கும் தேன் போன்ற செய்தி.
தினமும் காலை மற்றும் இரவு நேரங்களில் 1 கப் வெந்நீரில் 2 தேக்கரண்டி தேன், 1 சின்ன தேக்கரண்டி லவங்க பொடியை கலந்து குடித்து வாருங்கள்.
ஒரே வாரத்தில் உங்கள் வலி குறைவது தெரியும்.

‘எத்தகைய கடுமையான மூட்டுவலியாக இருந்தாலும் 1 மாதத்தில் குணம் நிச்சயம்’ என்று அடித்து சொல்கிறார்கள் கோபன் ஹேகன் பல்கலைகழக ஆய்வு மையத்தினர்.
200 மூட்டுவலிகாரர்களை கொண்டு ஒரு சோதனை நடத்தினர். தினமும் காலை 1 தேக்கரண்டி தேனும் 1/2 தேக்கரண்டி லவங்க பொடியும் கலந்து கொடுத்து வந்தனர்.
ஒரே வாரத்தில் 73 நோயாளிகள் வலி நிவாரணம் கண்டனர். ஒரு மாதத்தில் அனைவரும் நடக்கத் தொடங்கினர்.
இந்த காலத்தில் மூட்டு வலி இல்லாதவர் யார்? அதனால் இந்த கண்கண்ட மருந்தை இன்றே தொடங்கி வாழ்க்கை பயணத்தின் வலியை குறைத்துக் கொள்வோம்!

**சிறுநீர்குழாய் கிருமிகள்**
2 தேக்கரண்டி லவங்கபொடி, 1 தேக்கரண்டி தேன் ஆகியவற்றை இளஞ்சூட்டு தண்ணீரில் கலந்து குடித்து வர, சிறுநீர் குழாய்களில் உள்ள கிருமிகள் அழிந்து விடும். கோடைக்கலத்தில் இது அரு மருந்து.

**கொலஸ்ரால் என்னும் கொழுப்பு சத்து**
2 மணி நேரங்களில் உடம்பில் உள்ள கொழுப்புச் சத்தை 10% குறைக்கும் தன்மை கொண்டது தேன்.

2 தேக்கரண்டி தேன், 3 தேக்கரண்டி லவங்க பட்டை பொடியையும் 16 அவுன்ஸ் தண்ணியுடன் கலந்து குடியுங்கள். 2 மணி நேரத்தில் உங்கள் கொழுப்பு சத்து அளவு குறையும்.

ஒரு நாளில் 3 முறை 2 கரண்டி தேன், 1 கரண்டி லவங்க பொடியை மிதமான வெந்நீரில் கலந்து குடித்து வர நிச்சயம் கொலஸ்டிரால் கரைந்து விடும்.
சாதாரணமாகவே உங்கள் உணவில் தேனை சேர்த்து கொண்டு வாருங்கள். கொழுப்பு சத்து நோய் வரவே வராது.

**ஜலதோஷம்**
சூடான தண்ணீரில் 1 தேக்கரண்டி தேனை வைத்து இளஞ்சூடாக்கி அதனுடன 1/4 தேக்கரண்டி லவங்க பொடியை குறைத்து 3 நாளைக்கு எடுத்துக் கொள்ளுங்கள்.
சைனஸ், சளி, இருமல் என எல்லாமே ஓடி போகும்.

**வயிற்று அல்சர்**2 தேக்கரண்டி தேன், 1 தேக்கரண்டி லவங்கபவுடர் கலந்து உண்டு வர வயிற்றுவலி, வயிற்றில் அல்சர் போன்றவை அடியோடு மறையும்.

**வாயு தொல்லை**இந்தியாவிலும் ஜப்பானிலும் நடந்த ஆய்வின் முடிவில் தேனுடன் லவங்க பொடியை சேர்த்து சாப்பிட்டால் வாயுத்தொல்லை தீருமாம்!

**எதிர்ப்பு சக்தி வளரும்**
தேனில் அதிக அளவு இரும்பு சத்தும் வைட்டமின்களும் உள்ளது. இதை நாம் தொடர்ந்து லவங்க பொடியுடன் கலந்து உண்டு வந்தால் நமது உடலின் நோய் எதிர்ப்பு சக்தி கூடுகிறது. இதனால் அடிக்கடி வைரஸ் ஜுரம், ஃபுளு என்று படுக்க வேண்டாம்.
ஸ்பெயின் நாட்டு விஞ்ஞானி ஒருவர் தேனில் உள்ள இயற்கை ரசாயனங்கள் ஃப்ளூ ஜூரத்தை உண்டு பண்ணும் கிருமிகளை அழிக்கிறது என்று நிருபித்துள்ளார்.

**அஜீரணம் **
சிலருக்கு சாப்பிட்ட உடன் வயிறு பெருத்து, வயிறு அடைத்து சிரமபடுவார்கள். இவர்கள் உணவு உண்பதற்கு முன் 2 தேக்கரண்டி தேனில் சிறிது லவங்க பொடியை தூவி சாப்பிட வேண்டும். பிறகு இவர்கள் சாப்பிட்டால் இவர்களுக்கு உணவு சுலபமாக வலியில்லாமல் ஜீரணமாகும்.

**நீண்ட ஆயுள்**
நீண்ட ஆயுளுக்கு 3 கப் மிதமான சூடில் உள்ள நீரில் 4 தேக்கரண்டி தேன், 1 தேக்கரண்டி லவங்க பட்டை பொடியை கலந்து வைத்துக்கொண்டு ஒரு நாளில் 3 அல்லது 2 முறையாக பருக இளமை ததும்பும்.
வயதான தோற்றம் மறைந்தே போகும். 100 வயதில் 20 வயதிற்கான சுறுசுறுப்பை காணலாம். சருமம் மிருதுவாக இருக்கும் ஆயுள் நீடிக்கும்.

**தொண்டையில் கிச் கிச்!**
1 தேக்கரண்டி தேனை எடுத்து மெதுவாக உண்ணுங்கள். 3 மணிக்கு ஒரு தரம் இப்படி செய்து வாருங்கள். தொண்டையில் கிச்கிச் முதல் அல்லது 2 தேக்கரண்டியில் போய்விடும்.
**முகப்படுக்கள் அடியோடு மறைய!**
3 தேக்கரண்டி தேன், 1 தேக்கரண்டி லவங்கப் பொடி இரவு படுக்கும் போது இதை குழைத்து பருக்களின் மேல் தடவுங்கள். காலையில் வெதுவெதுப்பான நீரில் முகத்தை அலம்புங்கள். தொடர்ந்து 2 வாரம் இதை செய்து வர பருக்களை வேரோடு இது அழித்துவிடும்.

**சரும நோய் தீர**சொறி, படை போன்ற பல சரும நோய்களை குணப்படுத்தும் தேன், லவங்க பொடி இரண்டையும் சம அளவில் எடுத்துக் கொண்டு குழைத்து இந்த சரும நோய்களின் மேல் தடவி வர இந்த சரும் நோய்கள் குணமாகும்.

**எடை குறைய வேண்டுமா?**
தினமும் காலையில் சாப்பிடுவதற்கு அரை மணி முன்னர் மிதமான சூட்டில் உள்ள நீரில் தேனையும், லவங்க பொடியையும் கலந்து குடிக்கவும். அதே போல இரவில் படுக்க போகும் முன்னர் தேனையும், லவங்க பொடியையும் மிதமான வெந்நீரில் கலந்து குடிக்கவும். தொடர்ந்து இப்படி செய்து வந்தால் எத்தனை குண்டாக இருந்தாலும் உடல் எடை குறைவது உறுதி.
அதிசயம் ஆனால் உண்மை. இதை நீங்கள் குடித்து வரும் போது உடலில் கொழுப்பை சேர விடாமல் தடுத்து விடும். அதாவது நீங்கள் சாதாரண உணவை சாப்பிட்டு வந்தாலும் கூட எடை கூடாமல் தடை செய்யும்.

**புற்று நோய்க்கு அருமருந்து**
ஆஸ்திரேலியா, ஜப்பான் நாடுகளில் நடத்தப்பட்ட ஆய்வின் முடிவில், ‘வயிறு மற்றும் எலும்பில் வரும் புற்று நோய்களை குணப்படுத்தலாம்’ என்று தெரியவந்துள்ளது.
ஒரு தேக்கரண்டி தேன், ஒரு தேக்கரண்டி லவங்க பொடி என்ற கணக்கில் குழைத்து, தினமும் 3 வேளை உண்ண ஒரே மாதத்தில் இந்த புற்று நோய் குறைந்து விடுமாம்.

**அயர்ச்சி**
‘உடம்பில் சக்தியை அதிகரிக்க தேனை விட சிறந்தது இல்லை’ என்கிறார் ஆராய்ச்சியாளர் டாக்டர் மில்டன். இதில் உள்ள சர்க்கரை அபாயகரமானது இல்லை. உடலுக்கு உதவ கூடியது.
வயதானவர்கள், நோயிலிருந்து மீண்டவர்கள், சக்தி குறைவதால் தினமும் காலை ஒரு கப் நீரில் 1 தேக்கரண்டி தேனில் லவங்க பொடியை நன்று தூவி குடிக்க வேண்டும்.
அதே போல மதியம் 3 மணிக்கும் குடித்து வர, இழந்த சக்தியை பெறுவார்கள்.

**வாய் துர்நாற்றத்தை போக்க!**
தெற்கு அமெரிக்கா மக்கள் தினமும் காலையில் தேனையும் லவங்க பொடியையும் கலந்து சுடுநீரில் வாய் கொப்பளிப்பார்கள். இதனால் வாய் துர்நாற்றம் போய் விடும். நாள் முழுவதும் வாய் மணக்கும்.
**காது கேளாதவர்களுக்கு நற்செய்தி**
தேனையும், லவங்க பொடியையும் சம அளவில் கலந்து காலை மாலை என 2 வேளையிலும் எடுத்து காமந்தம் போய்விடுமாம்.
தேன் லவங்கப்பட்டை கலவை 
மூலிகை பல்பொடி குளியல் பொடி இயற்கை சத்துமாவு பஞ்சமூலி சூரணம் சிறுகுறிஞ்சான் மாத்திரை
சக்கரை சூரணம் அமுக்ரா மாத்திரை போன்ற 100 % இயற்கையான நமது மூலிகை தயாரிப்புகள் தேவைக்கு
தொடர்புகொள்க :9629368389
நலம் பெருகட்டும் …

சீரகத்தின் 15 மருத்துவப் பயன்கள்


மஞ்சள் வாழைப் பழத்துடன், சிறிது சீரகம் சேர்த்துச் சாப்பிட்டு வந்தால்உடல் எடை குறையும்.
சிறிது சீரகத்தை மென்று தின்று ஒரு டம்ளர் குளிர்ந்த நீரைக் குடித்தால் தலைச்சுற்றுகுணமாகும்.
கர்ப்பகாலத்தில் ஏற்ப்படும்வாந்தியைக் குறைக்க எலுமிச்சம்பழச் சாற்றுடன் சீரககுடிநீரை சேர்த்துக் கொடுக்கலாம்.
ஓமத்துடன் சிறிது சீரகம் இட்டு கஷாயம் செய்து, சாப்பிட்டால், அதிகபேதி போக்கு நிற்கும்.
சீரகம் தாய்மார்களுக்கு பால் சுரப்பை அதிகரிக்கச் செய்யும்.
மோருடன் சீரகம், இஞ்சி, சிறிது உப்பு சேர்த்துப் பருகினால் வாயுத் தொல்ல நீங்கும்.
சீரகத்தை லேசாக வறுத்து, அத்துடன் கருப்பட்டி சேர்த்துச் சாப்பிட்டு வர, நரம்புகள் வலுப்பெறும். நரம்புத் தளர்ச்சிகுணமாகும்.
சீரகத்துடன், மூன்று பற்கள் பூண்டு வைத்து மைய்ய அரைத்து, எலுமிச்சை சாறில் கலந்து குடித்தால், குடல் கோளாறுகள்குணமாகும்.
கொஞ்சம் சீரகமும், திப்பிலியும் சேர்த்துப் பொடித் தேனில் குழைத்து சாப்பிட்டால், தொடர் விக்கல்விலகும்.
பசியின்மை, வயிற்றுப்பொருமல், சுவையின்மை, நெஞ்செச்ரிச்சல்தீர சீரகம் + கொத்தமல்லி+ சிறிது இஞ்சி இவைகளை லேசாகவறுத்து நீரில் கொதிக்கவைத்து வடித்து தேநீர் போல வெல்லம் அல்லது நாட்டுசர்க்கரை சேர்த்து பருகி வரலாம்.
வாய்ப்புண், உதட்டுப்புண்குணமாக சீரகம் + சின்னவெங்காயம் இவற்றை லேசாக நெய்விட்டு வதக்கி உண்ணலாம்.
சீரகத்தை இஞ்சி, எலுமிச்சம் பழச்சாறில் கலந்து ஒருநாள் ஊறவைத்துக் கொள்ளவும். இதை, தினம் இருவேளை வீதம் மூன்று நாட்கள் சாப்பிட்டு வர, பித்தம்மொத்தமாகக் குணமாகும்.
சுக்கு, சீரகம், மிளகு, திப்பிலி ஆகியவற்றைப் பொடித் தேனில் கலந்து சாப்பிட்டால் எல்லா உடல் உள் உறுப்புகளையும் சீராக இயங்கச் செய்வதோடு, கோளாறு ஏற்படாது தடுக்கும்.
"ஓமம், சீரகம் கலவை வய்ற்றுக்குமருந்து"
தினமும் தண்ணீருடன் சிறிது சீரகத்தைப் போட்டு நன்கு கொதிக்க வைத்து 'சீரகக் குடிநீர்' தயார் செய்து வைத்துக் கொள்ளவும். இதை, நாள்முழுவதும், அவ்வப்போது பருகி வர, எந்தவித அஜீரணக் கோளாறுகளும் வராது.நீர்மூலம் பரவும் நோய்களைத் தடுக்கலாம். பசி ருசியைத் தூண்டும்.!

பஞ்ச தீபாக்கினி சூரணம் !!!

அனைத்து இருமல் நோய்களுக்கும் பஞ்ச தீபாக்கினி சூரணம் !!!
சுக்கு ................. இரண்டு துண்டுகள்
மிளகு .......................ஒரு தேக்கரண்டி
திப்பிலி ............... ஒரு தேக்கரண்டி
ஏலக்காய் ............. ஒரு தேக்கரண்டி
சீரகம் ............... ஒரு தேக்கரண்டி
நாட்டுப் பசு நெய் ,......தேவைக்கு
அனைத்துப் பொருட்களையும்
தனித்தனியே
நாட்டுப் பசு நெய்யில்
பொன்னிறமாக வறுத்து
மொத்தமாக சேர்த்து
நன்கு அரைத்து
சூரணமாக செய்து கொள்ளவும்
இந்த சூரணத்திற்குப் பெயர் பஞ்ச தீபாக்கினி சூரணம் ஆகும்
வறட்டு இருமல்
தொடர் இருமல்
கக்குவான் இருமல்
சளி இருமல்
போன்ற அனைத்து வகை இருமல் நோய்களும் நீங்க
இந்த சூரணத்தை சாப்பிட வேண்டிய முறை
பெரியவர்கள்
இந்த பஞ்ச தீபாக்கிணி சூரணத்தில்
ஒரு தேக்கரண்டி எடுத்து
நாட்டுப் பசு நெய்யில் சேர்த்துக் குழைத்து
காலை மாலை
தினம் இருவேளை
வெறும் வயிற்றில்
சாப்பிட்டு வர
மூன்று நாட்களில் பரிபூரண குணம் அடைவார்கள்
சிறுவர்களுக்கு
அரை தேக்கரண்டி பஞ்ச தீபாக்கினி சூரணத்தைத்
தேனில் குழப்பி
உணவுக்கு முன்
காலை மட்டும்
இரண்டு நாட்கள் கொடுத்து வர
பரிபூரண குணமாகும்
பச்சிளம் குழந்தைகளுக்கு
இந்த பஞ்ச தீபாக்கினி சூரணத்தை
ஒரு சிட்டிகை அளவு
தேனில் குழைத்து
நாக்கில் தடவ
நோய் சரியாகும்
அகத்தியர் வைத்திய ரத்தின சுருக்கத்தில்
இந்த சூரணம்
பன்னிரெண்டு நோய்களைத் தீர்க்கும்
என குறிப்பிடப் பட்டுள்ளது
இது ஒரு சரியாக எளிய அனுபவ வீட்டு மருத்துவம் ஆகும்