Monday, August 8, 2016

சீதாப்பழம்

சீத்தாப்பழம்

சீத்தாப்பழம் தனிப்பட்ட மணமும், சுவையும் கொண்டது. சீத்தாப்பழத்தின் தோல், விதை, இலை, மரப்பட்டை, அனைத்துமே அரிய மருத்துவ பண்புகளை கொண்டது. ஆங்கிலத்தில் சீத்தாப்பழத்திற்கு கஸ்டட் ஆப்பிள் என்றும், இந்தியில் சர்பா என்றும் பெயராகும். இதன் தாவரவியல் பெயர்- Annona squamosa என்று பெயர்.

சீத்தாப்பழத்தில்- நீர்சத்து அதிகமாக உள்ளது. மேலும் மாவுசத்து, புரதம், கொழுப்பு, தாது உப்புக்கள், நார்ச் சத்து, சுண்ணாம் புச்சத்து, பாஸ்பரஸ், இரும்பு சத்து போன்றவை அடங்கியுள்ளன. இத்தகைய சத்துக்கள் சீத்தாப்பழத்தில் அடங்கியிருப்பதனால் தான் இப்பழம் மிகுந்த மருத்துவ பயன்களை அடக்கியுள்ளது.

மருத்துவப் பயன்கள்:

1. சீத்தாப்பழத்தை உண்ண செரிமானம் ஏற்படும். மலச்சிக்கல் நீங்கும்.

2. சீத்தாப்பழச்சதையோடு உப்பை கலந்து உடையாத பிளவை பருக்கள் மேல் பூசிவர பிளவை பழுத்து உடையும்.

3. இலைகளை அரைத்து புண்கள் மேல் போட்டுவரை புண்கள் ஆறும்.

4. விதைகளை பொடியாக்கி சம அளவு பொடியுடன் சிறுபயிறு மாவு கலந்து தலையில் தேய்த்து குளித்;து வர முடி மிருதுவாகும். பேன்கள் ஒழிந்து விடும்.

5. சீத்தாப்பழம் குளிர் மற்றும் காய்ச்சலை குணப்படுத்தும்.

6. சீத்தாப் பழ விதை பொடியோடு கடலை மாவு கலந்து எலுமிச்சை சாறில் குழைத்து தலையில் தேய்த்து ஊறிய பின்னர் குளித்து வர முடி உதிராது.

7. சீத்தாப்பழ விதைப்பொடியை மட்டும் தலையில் தேய்த்து குளித்து வந்தால் முடி உதிராது.

8.சிறுவர்களுக்கு சீத்தாப்பழம் கொடுத்துவர எலும்பு உறுதியாகும். பல்லும் உறுதியாகும்.

9.சிறிதளவு வெந்தயம், சிறுபயிறு, இரண்டையும் இரவு ஊறவைத்து பின்னர் காலையில் அரைத்து இதோடு சீத்தாப்பழ விதைப்பொடியை கலந்து தலையில் தேய்த்து ஊறியபின்னர் குளித்துவர தலை குளிர்ச்சி பெறும். முடியும் உதிராது. பொடுகு காணாமல் போகும்.

10 சீத்தாப்பழத்தை தொடர்ந்து உண்டு வந்தால் இதயம் பலப்படும். காசநோய் இருந்தாலும் மட்டுப்படும்.நன்றிபேஸ்புக்

 இயற்கை வழியில்  சக்கரை வியாதியை குணப்படுத்துங்கள்🌿

இரவில் 8 சீத்தாப்பழ இலையை மண்பானையில் பிச்சிப்போட்டு 3 டம்ளர் தண்ணீரில்  கொதிக்கவைத்து ஒன்றரை டம்ளர் அளவானதும் இறக்கி வைத்து அடுத்தநாள் காலையில்  வடிகட்டி வெறும் வயிற்றில் குடித்துவந்தால் 400 -500 என்ற அளவில் இருக்கும் சக்கரை கூட எளிதாக கட்டுப்படும்🍀 amyogatrust.blogspot.in AUM HERBALS

எளிய மருத்துவம்


🍀 ஒரு தம்ளர் வெந்நீரில் ஒரு ஸ்பூன் சர்க்கரை, ஒரு ஸ்பூன் நெய் விட்டு கலக்கிக் குடித்தால் வயிற்று வலி மாயமாய் மறைந்துவிடும்.
• உடல் பருமனைக் குறைக்க இரவு ஒரு ஸ்பூன் ஓமத்தைத் தண்ணீரில் போட்டு, காலையில் வடிகட்டி ஒரு ஸ்பூன் தேனுடன் கலந்து குடித்து வந்தால் போதும்.
• அவரை இலையை அரைத்து தினமும் காலையில் முகத்தில் தடவி வந்தால், முகத்தில் இருக்கும் தழும்புகள், முகப்பருக்கள் நீங்கிவிடும்.
• பால் கலக்காத தேநீரில் தேன் விட்டுக் குடித்தால் தொண்டைக்கட்டு சரியாகும்.
• சுக்கைத் தூளாக்கி எலுமிச்சைச் சாறில் கலந்து தின்றால் பித்தம் குறையும்.
• மூட்டு வலியா? தேங்காய் எண்ணெய் - எலுமிச்சைச் சாறை கொதிக்கவிட்டு ஆறியபின் மூட்டுக்களில் தேய்த்தால் நிவாரணம் கிடைக்கும்.
• துளசி இலை போட்ட நீரை தினசரி குடித்து வந்தால் ஞாபகமறதி நீங்கி மூளை பலம் பெறும்.
• மிளகுத் தூளுடன் நெய், வெல்லம் கலந்து உருண்டையாக்கி சாப்பிட்டுவர தொண்டைப்புண் குணமாகும்.
• வெங்காயத்தை சிறு துண்டுகளாக நறுக்கி, பனங்கற்கண்டு சேர்த்து வதக்கி காலையில் வெறும் வயிற்றில் சாப்பிட்டுவர நரம்புத் தளர்ச்சி நீங்கும்.
• பொடித்த படிகாரத்தை தூள் செய்து அதைக் கொண்டு வாரம் மூன்று முறை பல் தேய்த்து வந்தால் பற்களின் கறை, இரத்தம் வடிதல், வாய் துர்நாற்றம் நீங்குவதோடு பல் ஈறுக்கும் வலு கொடுக்கும்.
• வயிற்றுப் போக்கு அதிகமாக இருந்தால் ஜவ்வரிசியை சாதம் போல வேகவைத்து மோரில் கரைத்து உப்பு போட்டு சாப்பிட்டால் வயிற்றுப்போக்கு நின்றுவிடும். வயிற்றில் வலியும் இருக்காது.
• உடலில் நோய் எதிர்ப்பு சக்தி இல்லாதவர்கள், தினசரி ஒரு ஸ்பூன் தேன் சாப்பிட்டு வந்தால் உடம்பு பலம் பெறும்.
• வாயில் புண் இருந்தால் வயிற்றிலும் இருக்கலாம். தினமும் காலையிலும் மாலையிலும் தேங்காய் பாலில் தேனை விட்டுச் சாப்பிட்டால் புண் ஆறிவிடும்.
• அஜீரணத்திற்கு இரண்டு ஸ்பூன் கருவேப்பிலைச்சாறை ஒரு டம்ளர் மோரில் கலந்து குடித்தால் அஜீரணம் நீங்கும்.
• அதிக தலைவலி இருக்கும்போது ஒரு பாத்திரத்தில் தண்ணீர் ஊற்றி மூடிக் கொதிக்க வைத்து இறக்கி இரண்டு ஸ்பூன் காபி பவுடர் போட்டு ஆவி பிடித்தால் தலைவலிக்கு உடனடி நிவாரணம் கிடைக்கும்.🌻 இணையப்பகிர்வு

இயற்கை துளசி மாத்திரை

🌿🌿 கருந்துளசி, வால்மிளகு, தேன் கலந்து இயற்கை முறையில் தயாரிக்கப்பட்டது🌿சளி, காய்ச்சல், இரத்த அழுத்தம் போன்ற நோய்களை குணப்படுத்துவதோடு நோய் எதிர்ப்பு சக்தியையும் அதிகப்படுத்தும் 🌿 துளசிமாத்திரை மாத்திரை🌿 தேவைக்கு அழைக்கவும் 9629368389🍁 100%இயற்கையான மூலிகைகளை பயன்படுத்தி கைகளால் தயாரிக்கப்பட்டது? 100 மாத்திரை 200 ரூபாய்?🌺🌼 AM HERBALS amyogatrust.blogspot.in

Sunday, August 7, 2016

தவறான பேலியோ உணவு முறை

பேலியோ என்னும் கற்கால உணவு முறை🐅   உடல்  இரண்டுவிதமாக இயங்குகிறது ஒன்று சக்கரையால் மற்றொன்று கொழுப்பால் சக்கரை அரிசி, சிறுதானியங்கள், பிஸ்கெட், கேக், வத்தல் போன்ற நொறுக்குத்தீனி போன்றவற்றில் இருந்து கிடைக்கிறது.🐆 கொழுப்பு நேரடியாக பாதாம், பிஸ்தா, சுத்திகரிக்காத எண்ணைய் மாமிச உணவுகளான  ஆடு,மாடு ,மீன், முட்டை போன்ற வற்றிலிருந்து கிடைக்கிறது🐬 கற்கால மனிதனுக்கு பெரும்சதை, சக்கரைவியாதி, இரத்த அழுத்தம் போன்ற  எந்தவியாதியும் இல்லை.🐫 மனிதன் விவசாயம் செய்ய ஆரம்பிக்கும் முன்னே  தனது உணவாக மாமிச உணவுகளையும் ஒரு சில பழம்,காய்கறியைகளை மட்டுமே உண்டு ஆரோக்கியமாக வாழ்ந்துள்ளான்🏂 ஆகையால், உடல் பருமன், சக்கரைவியாதி, இரத்த அழுத்தம்  போன்ற நோய்களில் அவதிப்படுபவர்கள் குறிப்பாக உடல் எடையை குறைக்க நினைப்பவர்கள் பேலியோ உணவு முறையை பின்பற்றி 90% நேரடியான கொழுப்பு உணவான மாமிசம், கொட்டை உணவுகள் போனால் போகிறதென்று 10%  தானியம், காய்கறிகளை எடுத்துக்கொண்டால் போதும்🐿 10 நாட்களிலேயே உடல் எடையில் நல்ல மாறுதலை உணரலாம்🌻 6 மாதத்தில் 30 கிலோ குறைந்தேன், ஒருவருடத்தில் 80 கிலோ குறைந்தேன்🕷 இப்ப சக்கரையில்லை🐧 கொழுப்பும் இல்லை 🐇 என்றெல்லாம் பேலியோ காரர்கள்  தனது அனுவங்களைப் பகிர   புற்றீசல்களைப் போல பலரும் இந்த உணவுமுறைக்கு மாறிவருகிறார்கள், சில மருத்துவர்களும்  இந்த உணவு முறையை பரிந்துரைக்கிறார்கள்🌻 இதில் கொடுமை என்னவெனில்  பல சைவ உணவுக்காரர்களும்  எடையை குறைக்கும் ஆசையில் இந்த கோதாவில் இறங்கி உடலை குறைத்தேனே  உயிரை வளர்த்தேனே என்று எக்காளமிடுகிறார்கள்🐄 ஆனால், உண்மையில்  இந்தப் பேலியோ உணவு ஒரு சரிவிகித உணவல்ல, எடையைக் குறைக்க, நோய்களை கட்டுப்படுத்த இது ஒரு சரியான தீர்வும் இல்லை🌺 ஏனெனில் 90 சதவீதம் கொழுப்பு உணவுகளை தொடர்ந்து எடுத்துக்கொண்டு மாவுச்சத்தை எடுக்காமல் இருப்பதாலேயே எடை குறைகிறது. அதே நேரம் உடலில் ஏற்கனவே சேமிக்கப்பட்ட மாவுச்சத்தான கார்போஹைட்ரட்டை உடல் தனது தேவைக்கு பயன்படுத்திக் கொள்கிறது.🕸 ஆனால், தொடர்ந்து முறையை பல ஆண்டுகள் கடைப்பிடிக்கும் போது உடல் மெட்ட பாலிசம்  பாதிக்கப்பட்டு உடல் சோர்வு ஏற்படுவதோடு பக்கவாதம், இருதய செயலிழப்பு போன்ற பல கொடிய வியாதிகள் உருவாகும்.🌞 ஏனெனில் மனித உடலே பஞ்ச சக்திகளின்  ஆற்றல்தான் இதில் அதிக வெப்ப சக்தியை கொடுக்கும் மாமிச கொழுப்பு உணவுகளை மட்டுமே   அதிகமாக எடுக்கும் போது நீர்சக்தி, நிலசக்தி, காற்று சக்தி, ஆகாயசக்தி போன்றவை பாதிக்கப்பட்டு பெரிய பாதிப்புகள் ஏற்படுவது உறுதி.🌧! ஆனால், இது உடனடியாக தெரியாது. ஏனெனில் ஒவ்வெரு உடல் பாகங்களுக்கும் தேவையான இயங்கு சக்தி ஏதேனும் ஒருவகையில்  கிடைக்கும் வரையில் உறுப்புகளில் பாதிப்புதெரியாது🌟 இது எப்படியெனில் தினமும் 500 மில்லி ஆல்ககால் உட்கொள்ளும் மனிதனுக்கோ அல்லது சில வருடங்களாக தொடர்ந்து இரவு விழுத்திருந்து பகலில் தூங்கும் மனிதனுக்கோ அதன்பாதிப்பு உடனடியாக  தெரியாது.🐼 ஆனால் இயற்கைக்கு மாறாக இயங்கியதன் பாதிப்பு வந்தே தீரும்.! இதுவரை பேலியோ உணவை ஆராய்ந்த அத்தனை ஆராய்ச்சிகளிலுமே இதன் பாதிப்புகளை  உடனே  கண்டறிய முடியவில்லை. ஆனால், உடல் எடையை வேகமாக குறைக்கிறது. அப்படி குறைப்பதுகூட ஆபத்துதான் உடல் எடையை சீரன அளவிலேயே குறைக்க வேண்டும்  என்று எச்சரிக்கிறார்கள்.🌷 ஆனால், இந்த போலியோ டயட் ஆதரவளார்களே தங்களுக்குள் இயக்கம் ஆரம்பித்து சமூக ஊடகங்களின் வாயிலாக மிகப்பெரிய பரப்புரைகளை செய்து எத்தைத்தின்றால் பித்தம் கூடும் என்று உடல் பருமனை  குறைக்க  அலைபவர்களை குறிவைத்து கொடுக்கிறார்கள்🐝 மாவுச்சத்தை எடுக்காமல் வெறும் மாமிசத்தை மட்டும் எடுத்தால் எடை குறையத்தான் செய்யும் இதில் ஆச்சரியம் ஒன்றும் இல்லை. சக்கரை வியாதியால் எடை குறைவதிலும் இதுதான் நிகழுகிறது. ஏற்கனவே அதிகமான மாவுச்சத்து உணவை உட்கொண்டு சக்கரையால் குண்டாக இருப்பவர்கள் பிறகு புதிய உணவுப் பழக்கத்திற்கு மாறுவதாலேயே எடையை இழக்கிறார்கள்🐪 சக்கரையால் அல்லவே அல்ல.! ஆனால், போலியோ காரர்களாவது அதிக மாமிச கொழுப்பை எடுக்கிறார்கள் சக்கரைக் காரர்களுக்கு  அதுவும் இல்லை☘ பிறகெப்படி உடல் குறையாமல் இருக்கும்🌿 ஆகவே ஜகத்தோரோ 🐾 பேலியோ டயட், சுகர் டயட் என்றெல்லாம் சரிவிகிதம் இல்லாத உணவு முறைகளைப் பின்பற்றி உடலை வதைக்காமல் பிடித்த இயற்கை உணவு, முறையான யோகப் பயிற்சி, சரியான வாழ்க்கை முறையை பின்பற்றி என்றும் ஆரோக்கியமாய் வாழுங்கள்.💥☘🌺 amyogatrust.blogspot.in AM HERBALS mobile:9629368389 நலம் பெருகட்டும் …

Saturday, August 6, 2016

தீயசக்திகளிடமிருந்து விடுதலை

இயற்கை வழியில் தீய சக்திகளிடமிருந்து பாதுகாப்புப் பெறுங்கள்✡ 1.வெண்கடுகு 250 கிராம் 2.நாய்க்கடுகு 250 கிராம் 3.மருதாணிவிதை 250 கிராம் 4.சாம்பிராணி 250 கிராம் 5.அருகம்புல் 50 கிராம் 6.வில்வ இலைப்பொடி 50 கிராம் 7.வேப்ப இலைப்பொடி 50 கிராம் ☸ இவற்றில் சாம்பிராணியை மட்டும் பொடி செய்துகொண்டு மீதியுள்ள 6 பொருட்களுடன் கலந்து வைத்துக் கொண்டு சொவ்வாய்,வியாழன், வெள்ளி, ஞாயிறு போன்ற நாட்களில் ஒருநாள் விட்டு ஒருநாள் விதம் காலை, மாலை 48 நாட்கள் தொடர்ந்து  அடுப்புக்கரியில் 5 நிமிடம் தூபம் போட்டுவர  பில்லி சூனியம்,ஏவல்,செய்வினை, கண்திருஷ்டி மற்றும் அனைத்து எதிர்மறை ஆற்றல்களும் தெரித்து ஓடும்.! தூபம் போடும் நாட்களில் வீட்டை சுத்தமாக வைத்துக் கொள்வதுடன் அசைவ உணவுகளை தவிர்ப்பது அவசியம்.✡ amyogatrust.blogspot.in Aum Herbals mobile:9629368389 நலம் பெருகட்டும் …

கர்ப்பப்பை பை நீர்க்கட்டி

இயற்கை வழியில் கர்பப்பை நீர்க்கட்டிகளை கரையுங்கள்🍎 இரண்டுகப் சோற்றுக்கற்றாளை சதையுடன் அரைகப் தேன் மற்றும் ஐந்துபொடித்த கிராம்புத்துளைப் போட்டு கலக்கி வைத்துக் கொண்டு தினமும் காலையில் சாப்பிடும் முன் ஒருத்தேக்கரண்டி குடித்துவந்தால் 48 நாட்களில் நீர்க்கட்டி, பித்தப்பைகல், தூக்கமின்மை, உஷ்ண வயிற்றுவலி குணமாகும்.! amyogatrust.blogspot.in

உடற் கடிகாரம்

🔴 நமது உடல், ஒவ்வொரு உடல் பாகத்திற்கென தனித்தனியே கடிகாரத்தின் அலாரத்தை முன்பதிவு செய்து கொ ண்டு சுழன்று கொண்டிருக்கிறது.

🔴ஒவ்வொரு உறுப்புக்கும் அதன் பணியை செய்து முடிக்க இரண்டு மணி நேரம் ஒதுக்கியுள்ளது. இரண்டு மணி நேரம் முடிந்ததும் மீண்டும் அலாரத்தை அடுத்த உறுப்புக்கு மாற்றி விடுகிறது.

🔴 *விடியற்காலை 3.00 மணிமுதல் 5.00 மணிவரை நுரையீரலின் நேரம்*.

இந்த நேரத்தில் சுவாசப் பயிற்சி செய்து காற்றின் மூலம் வரும் பிராண சக்தியை உடலுக்குள் அதிகமாகச் சேகரித்தால் ஆயுள் நீடிக்கும்.
தியானம் செய்யவும் ஏற்ற நேரம் இது. ஆஸ்துமா நோயாளிகள் இந்த நேரத்தில் மிகவும் சிரமப்படுவார்கள்.

🔴 *விடியற்காலை 5.00 மணிமுதல் 7.00 மணிவரை பெருங்குடலின் நேரம்*.

காலைக்கடன்களை இந்த நேரத்துக்குள் முடித்தே தீர வேண்டும் மலச்சிக்கல் உள்ளவர்கள் இந்த நேரத்தில் எழுந்து கழிவறைக்குச் செல்லும் பழக்கத்தை ஏற்படுத்திக் கொண்டால் நாளடைவில் மலச்சிக்கல் தீரும்.உயிரணுக்களின் எண்ணிக்கை மிகவும் அதிகமாக உள்ள நேரமும் கூட இதுவே.

🔴 *காலை 7.00 மணி முதல் 9.00 மணி வரை வயிற்றின் நேரம்*.

இந்த நேரத்தில் கல்லைத் தின்றாலும் வயிறு அரைத்து விடும். காலை உணவை பேரரசன் போல் உண்ண வேண்டும் என்று சொல்வார்கள். இந்த நேரத்தில் சாப்பிடுவதுதான் நன்கு செரிமானமாகி உடலில் ஒட்டும்.

🔴 *காலை 9.00 மணிமுதல் 11.00 மணி வரை மண்ணீரலின் நேரம்*.

காலையில் உண்டஉணவை மண்ணீரல் செரித்து ஊட்டச் சத்தாகவும் ரத்தமாகவும் மாற்றுகிற நேரம் இது. இந்த நேரத்தில் பச்சைத் தண்ணீர் கூடக் குடிக்கக்கூடாது. மண்ணீரலின் செரிமான சக்தி பாதிக்கப்படும். நீரழிவு நோயாளிகளுக்கு மோசமான நேரம் இது.

🔴 *முற்பகல் 11.00 மணிமுதல் பிற்பகல் 1.00 மணி வரை இதயத்தின் நேரம்*.

இந்தநேரத்தில் அதிகமாகப் பேசுதல், அதிகமாகக் கோபப்படுதல், அதிகமாகப் படபடத்தல் கூடாது. இதயம் பாதிக்கப்படும். இதய நோயாளிகள் மிகமிக எச்சரிக்கையாக இருக்க வேண்டிய நேரம்.

🔴 *பிற்பகல் 1.00 மணிமுதல் 3.00 மணி வரை சிறு குடலின் நேரம்*.

இந்த நேரத்தில் மிதமாக மதிய உணவை உட்கொண்டு சற்றே ஓய்வெடுப்பது நல்லது.

🔴 *பிற்பகல் 3.00 மணி முதல் மாலை 5.00 மணிவரை சிறுநீர்ப்பையின் நேரம்*.

நீர்க்கழிவுகளை வெளியேற்ற சிறந்த நேரம்.

🔴 *மாலை 5.00 மணி முதல் 7.00 மணி வரை சிறுநீரகங்களின் நேரம்*.

பகல் நேரபரபரப்பிலிருந்து விடுபட்டு அமைதி பெற, எதிர்காலத்தைப் பற்றி சிந்திக்க,தியானம்செய்ய, வழிபாடுகள் செய்ய சிறந்த நேரம்.

🔴 *இரவு 7.00 மணி முதல் 9.00 மணி வரை, பெரிகார்டியத்தின் நேரம்*.

பெரிகார்டியம்என்பது இதயத்தைச் சுற்றி இருக்கும் ஒரு ஜவ்வு இதயத்தின் Shock absorber. இரவு உணவுக்கு உகந்த நேரம் இது.

🔴 *இரவு 9.00 மணி முதல் 11.00 மணி வரை, டிரிப்பிள் கீட்டர்* என்பது ஒரு உறுப்பல்ல.
உச்சந்தலை முதல் அடி வயிறு வரை உள்ள மூன்று பகுதிகளை
இணைக்கும் பாதை. *இந்த நேரத்தில் உறங்கச் செல்வது நல்லது*.

🔴 *இரவு 11.00 மணி முதல் 1.00 மணி வரை பித்தப்பை இயங்கும் நேரம்*.

 இந்த நேரத்தில்தூங்காது விழித்திருந்தால் பித்தப்பை இயக்க குறைபாடு ஏற்படும்.

🔴 *இரவு 1.00 மணி முதல் விடியற்காலை 3.00 மணி வரை கல்லீரலின் நேரம்*.

இந்தநேரத்தில் நீங்கள் உட்காந்திருக்கவோ விழித்திருக்கவோ கூடாது.
கட்டாயம் படுத்திருக்க வேண்டும். உடல் முழுவதும் ஓடும் ரத்தத்தை கல்லீரல் தன்னிடத்தே வரவழைத்து சுத்திகரிக்கும் நேரம் இது. இந்த பணியை நீங்கள் பாதித்தால் மறுநாள் முழுவதும் சுறுசுறுப்பில்லாமல் அவதிப்படுவீர்கள்.

🔴 மிகவும் பயனுள்ள தகவல்கள்..அனைவரும் ஷேர் செய்தால் படிப்பவர் மிகப்பயன் பெறுவர்.  -இணையப்பகிர்வு