Wednesday, May 25, 2016

நாட்டுச் சர்க்கரை

வெள்ளைச் சீனியில் பத்துவகையான இரசாயணங்கள் சேர்க்கப்படுகிறது.! என்று எல்லோருக்கும் தெரியும் ஆனால் உண்மை என்னன்னா, பத்துவகையான இரசாயணங்களில் தான் போனா போகுதென்று கொஞ்சம் கரும்புச்சாற்றையும் சேர்க்கிறார்கள். குழந்தைகள், பெரியவர்கள் , நோயாளிகள் என்று அனைவரும் இந்தச் சீனியை ஏதோ ஒரு வகையில் தினமும் நமது உணவில்  சேர்த்துக் கொண்டிருக்கிறோம்.! இதற்கு மாற்றாக கருப்பட்டி, பனங்கற்கண்டு, சக்கரை போன்ற எதை  பயன்படுத்தினாலும் அதிலும் பல்வேறு இரசாயணப் பொருட்களை கலப்படம் செய்வதோடு விலையும் சீனியைவிட பலமடங்கு அதிகமாக  இருக்கிறது.! இந்தப் பிரச்சனைகளிலிருந்து மனித சமூகத்தை மீட்டு ஒரு ஆரோக்கிய உலகத்தை ஒருவாக்க வேண்டும் என்ற ஒரே லட்சியத்தோடு உருவாக்கப்பட்டது தான் Amrit 100% ஒரிஜினல் கரும்பு சக்கரை. முதல் தரம், நியாயமான விலை  <ஒரு கிலோ 60 ரூபாய்>  இனியென்ன கவலை குழந்தைகள், பெரியவர்கள், நோயாளிகள் மட்டுமல்லாது விழிப்புணர்வுமிக்க அறிவாளிகளும் இதற்கு மாறிவிடுங்களேன்.! ஆரோக்கிய உலகம் படைப்போம்.! " நாம் இதன் தயாரிப்பாளரோ விநியோகஸ்தரோ இல்லையய்யா " யாம் பெற்ற இன்பம் பெறுக இவ்வையகம் என்ற நல்லெண்ணத் துடனே இதை பகிர்கிறோம்.!  மேலதிக தகவல்களுக்கு  தயாரிப்பாளரின் இணையம் www.eidparry.com நலம் பெருகட்டும் …   amyogatrust.blogspot.com Mobile:9629368389

Tuesday, May 24, 2016

சர்க்கரை நோய்

சக்கரையை குணப்படுத்தும் என்று பலரும் பலவிதமான மருந்துகளை கூறி வருகிறார்கள்.உண்மையில் கணையத்தை முழுமையாக சீர் செய்வதற்கு  மருந்தால் மட்டும் முடியாது. அதற்கு யோகாசனம், பாரம்பரிய உடற் பயிற்சி, உணவு முறை, வாழ்க்கை முறை இவற்றை கடைபிடிப்பதோடு சிறுகுறிஞ் சான் மாத்திரையையும் பயன்படுத்தி னால்  ஆறுமாதத்தில் கணையம் சீராகி விடும்.! இந்த முறைகளை பயன்படுத்தினால் ஒரே மாதத்தில் இன்சுலின் இயல்பாகவே சுரக்க ஆரம் பித்துவிடும் செயற்கை இன்சுலின் ஆங்கில மாத்திரைகளை நிறுத்தி விடலாம்.!

நாம் 30 சக்கரை வியாதியால் பாதிக்கப் பட்டவர்களை வைத்து நடத்திய ஓர் ஆய்வில் மேற்கண்ட உண்மையை கண்டறிந்தோம்.!  இந்த ஆய்வை ஆவணப் படமாக தயாரித்துள்ளோம் அதில் யோகாசனம், உடற்பயிற்சி, உணவு முறை, மூலிகை மருந்து, பயனடைந்தோர் பேட்டி என்று அனைத்து விபரங்களும் உள்ளது.!

AUM HERBALS
amyogatrust.blogspot.com mobile:9629368389

Monday, May 23, 2016

நீர்க்கடுப்பு

நீர்க்கடுப்புக்கு சித்த மருத்துவம் சிறப்பான தீர்வு!

உடலிருந்து சிறுநீரை வெளியேற்றும் சிறுநீர்க் குழாய் வீக்கமடைந்து எரிச்சலுக்கு ஆளாவதால் நீர்க்கடுப்பு ஏற்படுகிறது.

காரணங்கள்:
சிறுநீர்ப் பாதையில் கிருமித் தொற்று அல்லது புண் இருப்பது, அதிகம் தண்ணீர் அருந்தாது, பால்வினை நோய்கள், அடிபடுதல், கருத்தடைச் சாதனங்களில் பயன்படுத்தப்படும் வேதிப் பொருட்கள் போன்றவற்றால் நீர்க்கடுப்பு ஏற்படலாம்.

அறிகுறிகள்
ஆண்களுக்கு சிறுநீர் கழிக்கும்போது கடுப்புடன் கூடிய வலி, சிறுநீர் மற்றும் விந்துடன் ரத்தம் கலந்து வெளியேறும்.
அடிக்கடி சிறுநீர் கழிக்க வேண்டும் என்ற உணர்வு ஏற்படும்.
பெண்களுக்கு வயிற்றுவலி, சிறுநீர் கழிக்கும்போது கடுப்புடன் கூடிய வலி, குளிர் மற்றும் காய்ச்சல், அடிக்கடி சிறுநீர் கழிக்க வேண்டும் என்ற உணர்வு, பிறப்புறுப்புக் கசிவு போன்றவை காணப்படும்.

சித்த மருத்துவத்தில் எளிய தீர்வுகள்:
கைப்பிடி உளுந்தை நீரில் ஊறவைத்து, மறுநாள் அதிகாலை நீரை வடித்து, அந்த நீரை அரை டம்ளர் அருந்தலாம்.
கற்பாசியை அரைத்து இடுப்புப் பகுதியிலும், அடிவயிற்றிலும் பூசலாம்.
சிறு துண்டு கற்றாழையை நன்றாகக் கழுவி, வெண்ணெய், கற்கண்டு, வால் மிளகுத்தூள் சேர்த்து உண்ணலாம்.
கால் டம்ளர் பருப்புக் கீரையின் சாற்றை இரண்டு வேளை அருந்தலாம்.
அரை ஸ்பூன் முள்ளிக்கீரை வேர்ப்பொடியை நீர் கலந்து அருந்தலாம்.
சரக்கொன்றை புளியுடன் கடுகுரோகிணி, சுக்கு, வாய்விடங்கம், பெருங்காயம், படிகாரம், பொட்டிலுப்பு கூகைநீறு ஆகியவற்றை சேர்த்து அரைத்து அடிவயிற்றில் பற்றுப் போடலாம்.
செண்பகப் பூவுடன் பத்து மடங்கு நீர் சேர்த்துக் காய்ச்சி, அதில் அரை டம்ளர் அருந்தலாம்.
கைப்பிடியளவு சுரைக்கொடியை தண்ணீர் விட்டுக் காய்ச்சி, வடித்து வெண்ணெய் கலந்து அருந்தலாம்.
சதாவேரிக் கிழங்கின் பொடி அரைஸ்பூன் வெண்ணெயில் கலந்து உண்ணலாம்.
துத்தி வேர்ப்பொடியை அரை ஸ்பூனை திராட்சைப் பழச்சாற்றில் கலந்து சாப்பிடலாம்.
அரை ஸ்பூன் தேற்றான் விதைப்பொடி எடுத்து எலுமிச்சைச் சாறு, நீர் சேர்த்து உண்ணலாம்.

சேர்க்கவேண்டியவை:
திராட்சை, எலுமிச்சை, அன்னாசி, வெங்காயம், உருளைக்கிழங்கு முள்ளங்கி, பூசணி, வெள்ளரி.

தவிர்க்க வேண்டியவை:
துவர்ப்பு மற்றும் கார உணவுகள்.
http://www.techsatish.com/

உதிரப்போக்கு - மதிமாறாட்டம்.. இயற்கை வழி நிவாரணம்.

 இயற்கை வழியில் உதிரப் போக்கை நிறுத்துங்கள்.!   120 கிராம் படிகாரத்தை வாங்கிப் பொடித்து  அரைலிட்டர் பசும்பாலில் 10 நிமிட நேரம் வேகவைத்து  இறக்கி ஒரு துணியில் வடிகட்டி  ஆறியபின்  <உணவுண்டு10 நிமிடம் கழித்து > 50 மில்லி விதம் மூன்று நேரம் குடித்துவர பெரும்பாடு அதிகமாகி பின் குறையும். இதே முறையை ஒருநாள் விட்டு ஒருநாள் என்று 6 நாட்கள் செய்தால்  பெரும்பாடு இரைப்பை புண்,  நுரையீரல் புண், ஆசனவாயில் இரத்தம் வடிதல்  குணமாகும்.! நலம் பெருகட்டும் … amyogatrust.blogspot.com  mobile:9629368389


இயற்கை வழியில் மதிமாறாட்டம், பைத்தியம், பித்தம் இவைகளை குணமாக்குங்கள்.! காலை மாலை வெறும் வயிற்றில் 50 மில்லி கழுதைப்பாலை   சூடாக்கி தொடர்ந்து மூன்றுநாள்  கொடுத்துவர மேற்கண்ட நோய்கள் தீருவதோடு ஏவல், சூன்ய, செய்வினை  தோசங்கள் நீங்கும்.!நலம் பெருகட்டும் …  amyogatrust.blogspot.com

மூச்சின் இரகசியம்

தலைமேலிருக்கு கற்பம்
அதற்குதானே சிறகுமுண்டு வாலுமுண்டு பிறக்கும் போதடைத்ததப்பா
பின்னிறந்தபோதும் திறப்பதில்லை
புள்ளினும் மிக்க புரவியை மேல் கொண்டால்
கள்ளுண்ண வேண்டாம்தானே கனிதரும்
துள்ளி நடப்பிக்கும் சோம்பலை தவிர்ப்பிக்கும்
உள்ளதைச் சொன்னோம் உணர்வுடையோருக்கே
காணாமல் அலைந்தோர்கள் கோடாகோடி
வீணாக புலம்பினதால் அறியப்போமோ
வாய்ஞானம் பேசுவது எதுக்காகும்
பதி இன்ன இடமென்று குருசொல்லும்
பரப்பிலே விள்ளாதே தலைரெண்டாகும்
விதி இன்ன இடமென்று சொல்லை கேளு
விண்ணான விண்ணுக்குள் செலுத்துவது
உண்ணாக்கில் அண்ணாக்கப்பா
மதிரவியும் பூரணமும் கண்வாய் மூக்கு
மகத்தான செவியொடு பரிசமெட்டும்
பதியுமிடம் சுழிமுனை என்றதற்கு பேராம்
பகருவார் சொர்க்கமென்றும் கைலாசமென்றே.!     _ திருமூலர்

Saturday, May 21, 2016

ஜாதிக்காய்.

எளிய மருத்துவம்
ஜாதிக்காய், சித்திர மூலவேர், இலவங்கம், ஏலக்காய், அசல் கற்பூரம், இவைகளில் வகைக்கு, 10 கிராம் எடுத்து, உரலில் போட்டு தூள் செய்து மாவு சல்லடையில் சலித்து, வைத்துக் கொண்டு, தினசரி காலை, மாலை ஒரு டீஸ்பூன் அளவு எடுத்து, காய்ச்சிய பசும்பாலில்
கலக்கிக் குடித்து வந்தால், வாத நோய் சம்பந்தமான கோளாறுகள் குணமாகும். இதே மருந்து, பக்கவாதம், தலைவலி, வயிற்று வலியையும் குணப்படுத்தும்.
ஜாதிக்காய், சீரகம், சுக்கு ஆகியவற்றை நெல்லிக்காயளவு எடுத்து, அம்மியில் வைத்து மை போல அரைத்து, அதை மூன்று சம உருண்டைகளாக உருட்டி வைத்துக் கொண்டு, காலை மாலை தினசரி ஒரு வேளைக்கு, ஒரு உருண்டை வீதம் ஒரு டம்ளர் பச்சை பசும்பாலில் கலந்து குடித்து வந்தால், மூன்றே நாட்களில் வயிற்றுப்போக்கு நிற்கும்.
ஜாதிக்காயை லேசான சூட்டில் நெய்யில் வறுத்து, இடித்து பொடியாக்கி வைத்துக் கொள்ளவும். 5 கிராம் சூரணத்தை காலை, மாலை பசும்பாலில் காய்ச்சி குடிக்கவும். இது ஆண்மை குறைவு மற்றும் நரம்பு தளர்ச்சியை போக்கும். நீர்த்துப் போன விந்தை கெட்டிப்படுத்தும். விந்தில் உயிரணுக்களின் உற்பத்தியை அதிகரிக்கும். விந்து முந்துதலை தவிர்க்க, மூலிகைகள் பல உள்ளன. அதில் மிகவும் பயனுள்ள மூலிகை ஜாதிக்காய். தாம்பத்தியம் தொடர்பான பிரச்னைகளுக்கு ஜாதிக்காய் உபயோகித்தாலே போதும்.
எந்தக் கோளாறினால் பல் வலி ஏற்பட்டாலும், ஜாதிக்காயில் பட்டாணி அளவு எடுத்து, நைத்து வலியுள்ள இடத்தில் வைத்து அழுத்திப் பிடித்து, கால்மணி நேரம் வைத்திருந்தால் பல்வலி நீங்கும். காலை, பகல், மாலை என, ஒரு நாளைக்கு மூன்று வேளை வைத்தால் பல் வலி குணமாகும். ஜாதிக்காயை உடைத்து, கோலிக் குண்டளவு ஜாதிக்காயை சுத்தமான அம்மியில் பால் விட்டு மை போல அரைத்து, இரவு படுக்கும் முன் கண்களைச் சுற்றிக் கனமாக பற்றுப் போட்டுப் படுத்துக் கொள்ள வேண்டும். காலையில் கண்களைக் கழுவினால், கண்பார்வை தெளிவடைந்து விடும். ஜாதிக்காயை சந்தனத்துடன் அரைத்து பருக்கள் மீதும், முகத்தில் உள்ள கரும் தழும்புகள் மீதும் பூசி வந்தால், நாளடைவில் மறையும் என, சித்த மருத்துவம் கூறுகிறது.!

இணையப் பகிர்வு

இயற்கை வழியில் நிவாரணம்

இயற்கை வழியில்  சுவாசகாசம், வாய்வு, குன்மவலி,கடினமான விக்கலை குணமாக்குங்கள்.!        இரண்டு லிட்டர் நீரில் 20 கிராம் பெருங்காயத்தை கொஞ்சம் கொஞ்சமாக உரைத்து அது பால் பக்குவம் வந்தவுடன்  வடிகட்டி வைத்துக்கொண்டு 35 மில்லி விதம்   இரண்டு மணிக்கொரு தரம் குடித்துவர மேற்கண்ட நோய்கள் குணமாகும்.! மருந்து தீரும் வரை பாட்டிலில் அடைத்து நீரில் வைத்து பயன்படுத்தலாம்.!

<ஒரிஜினல் பெருங்காயம் நாட்டுமருந்து கடையில் கிடைக்கும்! நலம்பெருகட்டும் … amyogatrust.blogspot.com   mobile 9629368389