Showing posts with label நமது நிகழ்வுகள். Show all posts
Showing posts with label நமது நிகழ்வுகள். Show all posts

Tuesday, May 3, 2016

பூத சுத்தி

பூதங்களை வசியப்படுத்துங்கள்

இயற்கை வாழ்வியல் முகாம் வெகு சிறப்பாக நிறைவுபெற்றது.! நமது ஒவ்வெரு முகாமிலும்
என்னிடம்  பயில வரும் ஒவ்வெருவரிடமும் நான் புதிதாக சில விசயங்களை கற்றுக் கொள்வது என்னுடைய வழக்கம். அப்படித்தான் இந்த முறையும் முகாமில் கலந்துகொண்ட ஏழுபேரிடமும்  பல நுட்பமான விசயங்களை கற்றுகொண்டேன். அதுவும் நமது முகநூல் நட்பாளர் பலராமன் அய்யாவிடம் நான்  சில விசயங்களை  கற்றுகொண்டேன்.
சார், பூதசுத்தி எப்படி செய்வது? என்று அவர் ஒரு கேள்வியை கேட்டார்; நான் உடனே  அப்படி ஒரு தலைப்பில் நாம் ஒரு பயிற்சியும் கற்கவில்லை, ஒரு வேளை உடலில் உள்ள பஞ்சபூதங்களை சுத்திகரிப்பதை தான் அப்படி கூறுகிறார்கள் என்று நினைக்கிறேன். என்று கூறி முடித்துவிட்டேன்.! அதாவது கபாலபதி காற்றால் சுத்திகரித்தல், வாமணதௌதி நீரால் சுத்திகரித்தல், திராட்டகா நெருப்பால் சுத்திகரித்தல், சந்திர தியானம் ஆகாயத்தால் சுத்திகரித்தல், சாந்தியாசனம் பூமியால் சுத்திகரித்தல்  என்பதைப் போலவே ஏதேனும் ஒரு சில பயிற்சிகளை சேர்த்து பூதசுத்தி என்று சில அமைப்புகளில் வழங்குவார்கள் என்று  நினைத்தேன்.!
ஏனெனில் யோகம் பெருங்கடல் இதில் ஒவ்வெரு யோகா ஆசிரியரும் அமைப்பினரும் தங்கள் அறிந்தவற்றோடு பல புதிய யுக்திகளை புகுத்தி இன்னும் அதை மகா சமுத்திரமாக மாற்றி வைத்துள்ளனர்.! அடிப்படை விசயம் ஒன்றாய் இருக்கும் சொல்லும் வழிமுறைகளில்  சில மாற்றம் பெயர் குளறுபடி போன்றவை தவிர்க்க முடியாததாகி விட்டது.!  பிறகு இதுபோன்ற ஒரு பயிற்சியை நாம் இதுவரை கற்ற அமைப்புகளில் எங்காவது கற்றுள்ளோமா …? என்று சிந்தித்தேன்  அப்பொழுதுதான் பூதவசியம் என்று யோகரத்னா டாக்டர். அசோக்குமார் அவர்கள் வழங்கிய பயிற்சி நினைவிற்கு வந்தது. அதாவது காலை எழுந்ததும் மூன்று முறை மூச்சை இழுத்து விட்டு பூமியில்  மூன்றடி தூரம் வெறும் காலோடு நடந்து பின் ஆகாயத்தை மூன்று முறை நிமிர்ந்து பார்த்துவிட்டு , மூன்று மடக்கு நீரை நன்றாக கொப்பளித்து உமிழ்நீரோடு சேர்த்து குடித்துவிட்டு வீட்டில் உள்ள குத்துவிளக்கு அல்லது அகல்விளக்கை ஏற்றிவைத்து மூன்று நிமிடம் அந்த ஒளியையே தொடர்ந்து பார்த்துக் கொண்டே இருந்தால் 48 நாளில் நமக்கு பஞ்சபூதங்களும் வசியமாகிவிடும்.! இதன் மூலம் நமது உடலின் அதிர்வுநிலை மேம்படுவதோடு உடல், மன, பணப்பிரச்சனை, குடும்ப உறவில் வேறுபாடு போன்றவை நீங்குவதோடு நாம் நினைக்கும் அத்தனை விசயங்களையும் இதன் மூலம் சீரமைத்து விடலாம் என்றது நினைவிற்கு வந்தது.! இந்தப் பயிற்சியை காலை எழுந்து குளித்துவிட்டு அல்லது குளிக்காமல் கூட செய்யலாம்.! இதன் உட் பொருள் என்னவெனில் நமக்குள்ளும் இந்த பிரபஞ்சம் முழுவதும் இயங்கும் சக்தியான ஐம்பெரும் ஆற்றல்களை நாம் முறையாக விழிப்புணர்வுடன் பயன்படுத்தினால் நமக்கு தேவை முக்தியோ சித்தியோ எது வேண்டுமோ பெறலாம் என்பதுதான்.!
இந்திய வழிபாட்டு முறையில் இது இயல்பாக கலந்துள்ளது.! இது போலவே பலராமன் அய்யா  அவர்கள் கழுத்து எலும்பு பலவீனத்தை சீர்செய்ய அவரே தனது கழுத்துவலிக்கு செய்து வெற்றியடைந்த  ஒரு முறையையும், கண்பயிற்சியில் நாம் அறியாத ஒரு நுட்பத்தையும் பகிர்ந்து சென்றார்கள்! இதை நாம் இன்னும் பலருக்கு கற்பிப்போம்.!
உங்களுக்கும் பிறகு பகிர்கிறோம்.!
அறிந்ததை பகிர்ந்துகொள்ளவும் அறியாததை அறிந்து கொள்ளவுமே இதுபோன்ற இயற்கை வாழ்வியல்
முகாம்கள் அனைவருக்கும் தேவையான ஒன்றாய் இருக்கிறது!
அதோடு மண்குளியல், வாழை குளியல், பழ உணவுகள், யோகா நுட்பம் போன்றவை உடல் மன ஆரோக்கியத்தை புதிய பரிமாணத்தில்
இயங்க வைக்கிறது.எந்த கற்பனையும் இல்லாமல் உடலை உன்னதமாக உணர செய்கிறது.!
இம்முகாமில் கலந்து கொண்ட அனைவருக்கும்  என் மனமார்ந்த நன்றியும் பிராத்தனைகளும் …¡¡¡
நலம் பெருகட்டும் …

amyogatrust.blogspot.com
mobile:9629368389

Saturday, March 26, 2016

நிகழ்வுகள்

இது இலவச யோகா ஆசிரியர் பயிற்சி வகுப்பு 2013 ஆண்டு எடுக்கப்பட்டது