Wednesday, December 28, 2016

பற்களை பாதுகாக்க எளிமையான பற்பொடி!

பற்களை பாதுகாக்க எளிமையான மருந்து

இன்றைய நவீன பற்பசை மற்றும் பற்பொடிகளில் சுவைக்காக அதிகமாக இரசாயனத்தை கலப்பதால் பக்கவிளைவுகளை ஏற்படுத்தி மிகவும் மோசமான நோய்களுக்கு நாம் உள்ளாகலாம்.

*நம் முன்னோர்கள் நமக்காக மிக சுலபமாக கிடைக்கக்கூடிய பொருட்களைவைத்து பல அறிய மருந்துகளை அளித்து சென்றுள்ளனர்.*

அந்த வகையில் பற்களை பாதுகாக்க சுலபமாக கிடைக்கக்கூடிய பொருட்களைவைத்து ஒரு தரமான பற்பொடியை எப்படி நம் வீட்டிலேயே தயாரிப்பது என்று பார்போம்.

*கடுக்காய் பொடி 100 கிராம் – நாட்டு மருந்து கடைகளில் பவுடராக வாங்கி கொள்ளவும்*

*கிராம்பு 50 கிராம்*

*இந்துப்பு 25 கிராம்*

இந்த கலைவையை அளவில் கூறவேண்டுமானால்

*ஒரு பங்கு கடுக்காய்*

*அரை பங்கு கிராம்பு* மற்றும்

*கால் பங்கு இந்துப்பு.*

மேற் சொன்ன பொருட்களில் கிராம்பு மற்றும் உப்பை நன்றாக மிக்ஸியில் அரைத்துக்கொண்டு அதில் கடுக்காய் பவுடரையும் கலந்து கொள்ளவும்.

 இப்பொழுது உங்களுக்கான தரமான பற்பொடி தயாராகிவிட்டது.

*பல் சொத்தை உள்ளவர்கள் இதை பற்பொடியாக தினந்தோறும் பயன்படுத்தினால் பல் சொத்தை இருப்பதையே மறந்துவிடுவார்கள்.*

இதை அனுபவத்தில் பலரிடம் நான் கண்ட உண்மை.

தயவு செய்து பல்லை பிடுங்காதீர்கள்...

குறிப்பு : இந்த பற்பொடி துவர்ப்பு சுவையாக இருக்கும்...

அப்படி துவர்ப்பு சுவை பிடிக்கவில்லை என்றால் 25கி அல்லது 50கி *அதிமதுரம்* சேர்த்து கொள்ளுங்கள்....

2. இவற்றை எங்கு போய் வாங்கி நாங்கள் பற்பொடி செய்வது என்று எண்ணங்கள் கொண்டவர்களுக்கு

கிராம்பு - 25 கிராம்
இந்துப்பு/ கல் உப்பு - 10 கிராம்

கிராம்பு + கல் உப்பை சட்டியில் போட்டு சிறுதீயில் வறுத்து இரண்டும் வெடிக்கும் போது அடுப்பை அணைத்துவிட்டு...

இரண்டையும் அரைத்து பொடி செய்யவும்...

 *இது தான் பெப்சோடன்ட் பற்பசையின் கலவை*

*நாம் ஏன் ரசாயனம் கலந்த பற்பசையை பயன்படுத்தி நம் வருங்கால சந்ததியினரை பல பிரச்சினைகளை சந்திக்க வைக்க நாம் ஏன் மூல காரணமாக இருக்க வேண்டும்*

தேவை என்றால் விதை நீக்கிய ஏலக்காயை 5 சேர்த்து வறுத்து அரைத்துக் கொள்ளலாம்...

*குறிப்பு* இந்துப்பை சேர்த்தால் வறுக்க வேண்டாம்... கல் உப்பை மட்டுமே வறுக்க வேண்டும்...

*பற்கூச்சம் குணமாக*

அவர் கூறிய பதிலில் இருக்கிறது...

ஓம உப்பு

புதினா உப்பு

பச்சை கற்பூரம்

இவை அனைத்தும் சம எடை...

10 கிராம் வீதம் 30கி வாங்கி ஒன்றாக சேர்த்து ஒரு பாட்டிலில் போட்டு 5 நிமிடங்கள் குழுக்கவும்...

மின்சார தைலம் தயார்...

பல் தேய்க்க ஒரு சொட்டுக்கு 5 சொட்டு தண்ணீர் கலந்து உபயோகிக்கவும்...

நேரடியாக பயன்படுத்தினால் எரியும்...

அதிக காரத்தன்மை உடையது...

இது ஒரு சிறந்த வெளிப்பிரயோக வலி நிவாரணியும் ஆகும்...

*பற்கள் வெண்மையாக*

புதினாவை உலர்த்தி பொடி செய்து அதனுடன் இந்துப்பை சேர்த்து பல் தேய்கலாம்...

கருவேலம்பட்டையை பொடி செய்து பல் தேய்த்தால் பற்கள் வலிமையாகி உறுதியாகும்.!

*இணையப்பகிர்வு*

No comments:

Post a Comment