Wednesday, March 8, 2017

ஊஞ்சல்

ஊஞ்சல் ஆடுவது எதற்காக தெரியுமா…? தெரியாதவர்கள் தெரிந்து கொள்ளுங்கள்..!

முன்பெல்லாம் ஊருக்கு வெளியே ஆலமரத்தில் ஊஞ்சல் கட்டி பெண்கள் ஆனந்தமாக ஆடினார்கள். பின்பு படிப்படியாய் அது குறைந்து, காணாமல் போய்விட்டது.

1. ஊஞ்சலில் ஆடுவதால் மனதில் உள்ள எதிர்மறை எண்ணங்கள் மறைந்து நேர்மறை எண்ணங்கள் தோன்றுகிறது.

2. திருமணங்களில் `ஊஞ்சல் சடங்கு’ இதன் அடிப்படையிலேயே நடத்தப்படுகிறது.

3. ஊஞ்சல் ஆடுவதால் மனச்சோர்வு நீங்கி உடல் உற்சாகம் பெறுகிறது

4. நேராக அமர்ந்து கைகளை உயர்த்தி இரு பக்க சங்கலிகளையும் பிடித்துக்கொண்டு வேகமாக ஆடும் போது முதுகுத்தண்டுக்கு ரத்த ஓட்டம் படர்ந்து மூளை சுறு சுறுப்பாகிறது.

5. கம்ப்யூட்டரில் மணிக்கணக்கில் உட்கார்ந்து முதுகுத்தண்டு வளைந்துப் போன இன்றைய பெண்கள் இந்த ஊஞ்சல் பயிற்ச்சியை தினமும் செய்தால் முதுகுத் தண்டுவடம் பலம் பெற்று கழுத்துவலி குணமடைய வழி செய்கிறது.

6. இதயத்திற்கு சுத்தமான பிராண வாயுவை கொடுத்து இதயத்தை சீராக இயங்கச் செய்யும். தினமும் தோட்டத்தில் ஊஞ்சல் ஆடுவர்களுக்கு இதயநோய் கட்டுப்படும்.

7. ஊஞ்சல் ஆடுவதால் உடலில் ரத்த ஓட்டம் அதிகரித்து இதயத்திற்கு ரத்தம் சீராக செல்லும்.

8. சாப்பிட்டவுடன் அரைமணிநேரம் மிதமான வேகத்தில் ஊஞ்சல் ஆடுவது நல்லது. சாப்பிட்ட உணவு நன்கு செரிக்க இந்த ஆட்டம் உதவும். (This is the reason, when we travel in train, whatever food we have during the journey, is completely digested without any health troubles. Hope many could have experienced this in their life journey)

9. கோபமாக இருக்கும் போது ஊஞ்சல் ஆடினால் கோபம் தணியும்.

10. வெளியில் சுற்றியலைந்துவிட்டு வந்து ஊஞ்சலில் உட்கார்ந்து கண்களை மூடி தலையை சற்றே மேலே உயர்த்தி, இரு கைகளையும் ஊஞ்சல் பலகையில் பதியவைத்து ரிலாக்ஸாக ஆடினால் களைப்பெல்லாம் பறந்து, உடலின் ஒவ்வொரு பகுதியும் ஓய்வு பெற்று நிம்மதி ஏற்படும்.

பழங்காலத்தில் எல்லா வீடுகளிலும் வரவேற்பறையில் ஊஞ்சல் கட்டி வைத்திருப்பார்கள். வீட்டுக்குள் வரும் தேவதைகள் ஊஞ்சலில் ஆடப் பிரியப்படுவார்கள், ஊஞ்சலில் ஆடி நல்லது செய்வார்கள் என்பதும் நம்பிக்கை(நம்பிக்கை மட்டுமே). சுப காரியங்களைப் பற்றி பேசும் போது ஊஞ்சலில் உட்கார்ந்து பேசுவதும் வழக்கமாக இருந்தது.!

இணையப்பகிர்வு

நாவல் (மரம்)

சாலை ஓரங்களிலும், குளக்கரை, ஆற்றங்கரைகளில் நாவல் மரங்கள் தன்னிச்சையாக வளர்ந்திருப்பதுண்டு சிறுவர்களின் விளையாட்டு தளமாக இருக்கிறது. நாவல் மரத்திற்கு ஆருகதம், நேரேடு, சுரபிபத்தினர் என்றும் பெயர்கள் இருக்கின்றன. ஆங்கிலத்தில் நாவல் மரத்தினை ((Eugenia Jambos) ஜம்பலம், பிளாக் பிளம் என்று பெயர்கள் உண்டு. ஜம்பு நாவல் என்றொரு ரகமும் உண்டு. இதன் பழங்கள் இனிப்பு கலந்த துவர்ப்பாக இருக்கும்.
நாவல் மரத்தின் இலைகள் கரும்பச்சையாக பளபளப்புடன் இருக்கும். ஜனவரி பிப்ரவரி மாதங்களில் இலைகளை உதிர்த்து நிர்வாணமாக வெட்கப்பட்டு நிற்க்கும் நாவல் மரம் சந்திரமுகியின் கண்களாக கருமை நாவல் பழங்களை கொத்துகொத்தாக தாங்கி வனப்புடன் ஜுலை, ஆகஸ்டு, செப்டம்பர் மாதங்களில் கவர்ச்சிகரமாக காட்சியளிக்கிறது..

நாவல் மரத்தின் பழம், இலை, மரப்பட்டை மற்றும் விதை என அனைத்துமே மருத்துவ குணங்கள் கொண்டவை.

நீரிழிவு நோய்:
நீரிழிவு நோயால் பலரும் பாதிக்கப்பட்டு அவதியுறுகிறார்கள். இதை கட்டுப்படுத்த நாவல் பழத்தின் விதைகள் சிறந்த மருந்து. இதன் விதைகளை நிழலில் உலர்த்தி தூள் செய்து கொள்ள வேண்டும். ஒரு கிராம் அளவு தூளை, காலை, மாலை வேளைகளில் சாப்பிட்டு வந்தால் போதும். படிப்படியாக நீரிழிவு நோய் கட்டுப்படும்.

ரத்தப்போக்கு:
பெண்களுக்கு மாதவிடாயின் போது ஏற்படும் அதிகப்படியான ரத்தப்போக்கை கட்டுப்படுத்தும் குணமும் நாவலுக்கு உண்டு. இதற்காக, 10 சென்டி மீட்டர் நீளமும், 5 சென்டி மீட்டர் அகலமும் கொண்ட முற்றிய நாவல் மரத்தின் பட்டைகளை எடுத்துக் கொள்ள வேண்டும். இந்த பட்டையை நன்கு நசுக்கி, 1/2 லிட்டர் தண்ணீரில் இட்டு கொதிக்க வைக்க வெண்டும். அந்த தண்ணீரை ஒரு டம்ளராக சுண்டக் காய்ச்சி, பின் ஆற வைத்து குடிக்க வேண்டும். தினமும் இரண்டு வேளை வீதம் 10 நாட்கள் இவ்வாறு குடித்து வந்தால் பெண்களுக்கு மாதவிடாயின் போது ஏற்படும் அதிகப்படியான ரத்தப்போக்கை கட்டுப்படுத்தலாம்.

சிறுநீர் எரிச்சல்:
சிலருக்கு சிறுநீர் கழிக்கும் போது எரிச்சல் ஏற்படும். இன்னும் சிலர் சிறுநீர்க்கட்டால் அவதிப்படுவார்கள். இப்படிப்பட்டவர்கள், நாவல் பழங்களை பிழிந்து வடிகட்டிய சாற்றை 3 தேக்கரண்டி அளவு எடுத்துக் கொள்ள வேண்டும். அதனுடன், ஒரு தேக்கரண்டி அளவு சர்க்கரை கலந்து குடிக்க வேண்டும். தினமும் காலை, மாலை ஆகிய இரு வேளைகள் வீதம் 2 நாட்களுக்கு சாப்பிட்டாலே போதும். சிறுநீர் எரிச்சல் தீர்ந்து விடும். நீர்க்கட்டும் பறந்தே போய்விடும்.

பேதி:
நாவல் மரத்தின் இலைக் கொழுந்தை நசுக்கி சாறு எடுத்து, ஒரு தேக்கரண்டி அளவு சாப்பிட வேண்டும். காலை, மாலை என இரு வேளை 3 நாட்களுக்கு தொடர்ந்து இவ்வாறு சாப்பிட்டு வந்தால் பேதியை கட்டுப்படுத்தலாம்.

தொண்டைப் புண், தொண்டை அழற்சி:
10 சென்டிமீட்டர் நீளமும், 5 சென்டிமீட்டர் அகலமும் கொண்ட முற்றிய நாவல் மரத்தின் பட்டையை சேகரித்துக் கொள்ள வேண்டும். இதை 1/2 லிட்டர் தண்ணீரில் இட்டு கொதிக்க வைக்க வெண்டும். கொதிக்கும் நீரை 1/4 லிட்டராக சுண்டக்காய்ச்சிய பின்னர், பொறுத்துக் கொள்ளும் சூட்டில் வாய் கொப்பளித்து வர வேண்டும். தொடர்ந்து ஓரிரு நாட்கள் இவ்வாறு செய்தால் தொண்டைப் புண், தொண்டை அழற்சி குணமாகும்.

பிற பயன்கள்:
* நாவல் பழத்திற்கு சிறுநீர் பெருக்கம், பசியை தூண்டும் தன்மை உண்டு. மேலும், நாக்கு மற்றும் பல் ஈறுகளை சுத்தம் செய்யும் தன்மையும் இதற்கு உண்டு.
* தொடர்ந்து நாவல் பழங்கள் சாப்பிட்டு வந்தால் குடல், இரைப்பை இதயத்தின் தசைகள் வலுவாகும்.
* நாவல் பழச்சாற்றுக்கும் நீரிழிவு நோயை கட்டுப்படுத்தும் குணம் உண்டு.
* நாவல் மரத்தின் பட்டைக்கு நரம்பை பலப்படுத்தும் சக்தியும், மூச்சுக்குழல் அழற்சி, காசநோய், குடல் புண்கள் மற்றும் வயிற்றுப்போக்கு ஆகியவற்றை குணமாக்கும் சக்தியும் உண்டு.
* இரத்தம் சுத்தப்படுத்துதலிலும் நாவல் முக்கிய இடம் பெறுகிறது.
 நாவல் பழம் சாப்பிட்டால் நீரிழிவு நோய் கட்டுப்பாட்டில் இருக்கும். கல்லீரல் கோளாறுகள், குடற்புண் போன்றவற்றைப் போக்க வல்லது.

இது ஜூன் மாதம் தொடங்கி ஆகஸ்ட் மாதம் வரைக் கிடைக்கும்.

இதைச் சாப்பிடுவது, உடம்பிற்கு மிகவும் நல்லது. ஆனாலும், இன்னமும் பெரியோர்கள், இதை குழந்தைகள் சாப்பிடும் பழமாகத்தான் கருதுகிறார்கள். இதன் துவர்ப்பு ருசியும், இதைச் சாப்பிட்டால் நீண்ட நேரம் நாவில் படிந்துவிடும் நீல நிறமும் காரணங்களாக இருக்கலாம்.

மூல நோய்க்கு

மூலத் தொந்தரவு உள்ளவர்கள் வாழ்நாள் முழுவதும் அந்த தொந்தரவில் இருந்து விடுபட நாவல் பழம் கைகொடுத்து உதவுகிறது.

பழம் அதிகம் விளையும் காலத்தில் தினசரி இரண்டு அல்லது மூன்று பழங்களை உப்புச் சேர்த்து அல்லது தேன் சேர்த்து காலையில் சாப்பிட வேண்டும்.

இப்படி தொடர்ந்து மூன்று மாதங்கள் வரை சாப்பிட்டால் மூல நோய் முற்றிலும் குணமாகும்.

தொழு நோய்க்கு நல்ல மருந்து

நாவல் பழம் பல்வேறு நோய்களுக்கு மாமருந்தாக உள்ளது. பித்தத்தைத் தணிக்கும், மலச்சிக்கலைக் குணப்படுத்தும், இதயத்தை சீராக இயங்கச் செய்யும். இரத்த சோகை நோயைக் குணப்படுத்தும். சிறுநீரகத்தில் ஏற்படும் வலியையும் நிவர்த்தி செய்யும். சிறுநீரகக் கற்கள் கரையவும், இரத்தம் சுத்தமாகி தொழுநோய் முற்றிலும் குணமாகவும், மண்ணீரல் கோளாறுகளைச் சரி செய்யவும் நாவற்பழம் உதவுகிறது.

பெண்களின் மலட்டுத் தன்மை குணமாக, வைட்டமின் ஈ தேவை. நாவல் மரத்தின் இலையின் சாற்றை கஷாயமாக்கித் தேன் அல்லது வெண்ணிய் கலந்து சாப்பிட்டால் மலட்டுத் தன்மை அகலும்.

அளவோடு சாப்பிட வேண்டும்

நாவல் பழத்தை குழந்தைகள் உட்பட அனைத்து வயதினரும் அளவுடன்தான் பயன்படுத்த வேண்டும். அளவுக்கு அதிகமாய் சாப்பிட்டால் இருமல், தொண்டைக் கட்டுதல் ஏற்படும்.

பழத்தையோ, பழச்சாற்றையோ வெறும் வயிற்றில் சாப்பிடவேக் கூடாது. பழம் சாப்பிடுவதற்கு முன்பும் பின்பும் 3 மணி நேரத்திற்கு பால் அருந்தக் கூடாது.
பழத்தின் மருத்துவபண்புகள்
நாவல் பழத்தை சாப்பிட மூளை பலமாகும். நல்ல சீரண சக்தி கிடைக்கும். குறிப்பாக பழத்தை கசாயம் போல் தயாரித்து சாப்பிடும் போது வாயுத்தொல்லை நீங்கும். மண்ணீரல் வீக்கத்தால் பாதிக்கப்பட்டவர்கள், தொடர்ந்து பல காலங்களாக கழிச்சல் நோய் உள்ளவர்கள் நாவல் பழத்தை சாப்பிட்டு வர குணமடையலாம். பழச்சாறுடன் தேன் கலந்து குடிக்கும் போது வெயிலால் உடம்பில் ஏற்படும் அனல் குறையும்.!

இணையப்பகிர்வு

Tuesday, March 7, 2017

*மூன்று நாட்கள் இயற்கை வாழ்வியல் முகாம்*

#வாழை இலைக்குளியல்
#மண்குளியல்
#எண்ணைகுளியல்
#மூன்றுவேளையும்பழகாய்கறிஇயற்கைஉணவு
#உடலியல்விளக்கம்
#இயற்கைமருத்துவவிளக்கம்
#யோகாசனம்
#சுத்திகரிப்புகிரியைகள்
#பிராணப்பயிற்சி
#மூலிகைமருந்துகள்
#இயற்கையானசூழலில்தங்கும்வசதி

விருந்தும் மருந்தும் மூன்றுநாள் என்பது முன்னோர் வாக்கு.!
எத்தகைய ஆரோக்கியக் குறைபாடு உடையவர்களும் இந்த முகாமில் கலந்துகொண்டு
இயற்கைவழியில் குணம்பெறலாம்.!
உங்கள் வாழ்நாள் மருத்துவச் செலவில் 75 % வரை மிச்சப்படுத்தலாம்.!
சக்கரை, இரத்த அழுத்தம், சிறுநீரக செயலிழப்பு, உடல்பருமன், மனஅழுத்தம், அதிககொழுப்பு போன்ற நோய்களுக்கு வாழ்நாள் முழுவதும் மாத்திரைகளை சாப்பிட்டு கட்டுப்படுத்தும் அவல நிலையிலிருந்து விடுபட்டு ஆரோக்கியமாக வாழலாம்.!

இடம்: அன்னை ஆஸ்ரமம்,
சுப்ரமணியபுரம்,
ஆரல்வாய்மொழி,
கன்னியாகுமரி மாவட்டம்.

நாள்: மே 5,6,7
வெள்ளி,சனி,ஞாயிறு
நேரம்:6 am and 7pm
நன்கொடை :2650/-

#முன்பதிவுஅவசியம்
<குறைந்த இடங்களே உள்ளன>

#தொடர்பிற்கு:Mobile & whats app
*9629368389*
#amyogatrust.blogspot.in

மருத்துவக் குறிப்புகள் 7/3/17

[3/6, 13:07] Am Yoga: *பெருங்காய மோசடி*


பெருங்காயத்தை சமையலில் சேர்த்தால் வாயுத் தொல்லை நீங்கும் நன்கு ஜீரணமாகும்  என்று நாம் கேள்விப் பட்டிருப்போம்.  ஆனால், நாம் கடையில் வாங்கும் பெருங்காயம், ஜீரணத்துக்கு ஆப்பு வைத்து விட்டு வாயுத் தொல்லையைத் தரும் என்று உங்களுக்குத் தெரியுமா?

 அந்த கூட்டு பெருங்காயம் ...
 இந்த கூட்டு பெருங்காயம் ...
 அப்படின்னு விளம்பரங்களில் சத்தமா சொல்வதைக் கேட்கும் போதெல்லாம்  இது ஏதோ கூட்டில் சேர்க்கும் பெருங்காயம் என நினைப்பதுண்டு.  ஆனால் இது அந்த கூட்டு அல்ல.  இந்தக் கூட்டு முடிச்சவிக்கி அரசியல்வாதிகள் தேர்தலில் கூட்டு போட்டு மக்களைக்  கொள்ளையடிப்பதைப் போன்ற ஒன்றாகும்.

இது கொள்ளையடிக்கப் போவது நம் ஆரோக்கியத்தை.   என்னென்ன நன்மைகள் விளையும் என்று நினைத்து உணவில் சேர்க்கிறோமோ, அதற்க்கு நேரெதிர் விளைவுகளை இந்த நம்பிக்கைத் துரோகி ஏற்படுத்துகிறதாம்.

 அப்படி என்னதான் இதில் சேர்க்கிறார்கள்?
ஒரு வகையான அராபிய பிசின் 60%,
மைதா 30%,
பெருங்காய வாசனை தரும் ஒரு வித எசன்ஸ் 10%

இவற்றின் மொள்ளமாரி கூட்டே கூட்டுப் பெருங்காயம்.  இந்த மூன்றில் எதுவுமே பெருங்காயம் இல்லை என்பது தான் விந்தை!! இதை ஏதோ இரகசியமாகவோ, திருட்டுத் தனமாகவோ செய்வதாக நினைக்கிறீர்களா?  அது தான் இல்லை.  "பெருங்காய டப்பாக்களின்  மேலேயே கொட்டை எழுத்துகளில் அச்சடிச்சு விற்கிறாங்க, ஆனால்  நாம்தான் கவனிப்பதில்லை"-என்று படித்ததும் வியப்பாக இருந்தது. சரி நாமே பார்த்துடுவோம்னு வீட்டில் வாங்கி வைத்திருந்த இரண்டு வெவ்வேறு பிராண்டு பெருங்காய டப்பாக்களை எடுத்து வரச் சொல்லி பார்த்தேன்.  அட ஆமாங்க அவனுங்க க்ளீனா எழுதி வச்சுதான் நம்ம தலையில் கட்டுரானுவ......
இதைத் தொடர்ந்து பயன்படுத்தினால் என்ன நடக்கும்?

வயிறு புண்ணாகும்....
வயிற்றில்  வாயு அதிகமாகும் ..

நரம்பு தளர்ச்சி உண்டாகும் ..
மயக்கம் வரும் ...
பால்காயம் என நாட்டு மருந்து கடைகளில் கிடைக்கும் பெருங்காயமே நாம் விரும்பும் உடல் ஆரோக்கியத்தை தரும்.!

*இணையப்பகிர்வு*
[3/6, 15:09] Am Yoga: கையளவு ஆவாரம்பூவை எடுத்து  இரு டம்ளர் நீரில் கொதிக்க வைத்து ஒரு டம்ளரானதும் இறக்கி நாளைக்கு இரண்டு முறை உணவிற்கு முன் குடித்துவந்தால் தொண்டை புண்,வாய்ப்புண்  போன்றவை நான்கு நாளில் குணமாகும்.!

amyogatrust.blogspot.in
[3/6, 17:37] Am Yoga: பெண்களே! உங்கள் உதட்டிற்கு மேலே முடி வளர்வது போல் உள்ளதா

குப்பை மேனி இலை, வேப்பங்கொழுந்து, விரலி மஞ்சள் ஆகியவற்றை சேகரித்து கொள்ளவும்.
* இவற்றை மாவு போல் நன்றாக அரைத்து, படுக்கைக்கு போகும் முன் மேல் உதட்டில் பூசவும்.

* தொடர்ந்து இரு வாரங்கள் பூசி வந்தால், ரோமம் அல்லது மீசை போல் அருவருப்பாக இருக்கும் முடி உதிர்ந்து உதடுகள் பளிச்சிடும்.

*எலுமிச்சை மற்றும் சர்க்கரை 30 கிராம் சர்க்கரையை எலுமிச்சை சாறு சேர்த்து, சிறிது தண்ணீர் ஊற்றி கலந்து, முகத்தில் முடி வளரும் இடத்தில் தடவி 15 நிமிடம் ஊற வைத்து கழுவ வேண்டும். இந்த முறையை வாரம் ஒரு முறை தொடர்ந்து செய்து வந்தால், முடியின் வளர்ச்சியானது தடைபடும்.

*கடலை மாவு, தயிர், மஞ்சள் தூள் இது ஒரு பாரம்பரிய முறை என்றும் சொல்லலாம். ஏனெனில் இந்த முறையை அக்காலத்தில் இருந்து பெண்கள் பயன்படுத்தி வருகின்றனர். அது என்ன முறையெனில், கடலை மாவு, தயிர் மற்றும் மஞ்சள் தூள் ஆகியவற்றை ஒன்றாக கலந்து பேஸ்ட் செய்து, முகத்தில் தடவி நன்கு உலர வைத்து பின் கழுவ வேண்டும். இதனால் முகத்தில் வளரும் முடியின் வளர்ச்சி படிப்படியாக குறையும்.

*பப்பாளி மற்றும் மஞ்சள் பப்பாளி மற்றும் மஞ்சள் தூளை ஒன்றாக கலந்து, அதனை முகத்தில் முடி வளரும் இடத்தில் தடவி 15 நிமிடம் மசாஜ் செய்து வர வேண்டும். இதன் மூலமும் நல்ல பலன் கிடைக்கும்.

*உருளைக்கிழங்கு உருளைக்கிழங்கு ஒரு சிறப்பான ப்ளீச்சிங் ஏஜெண்ட். இதனை துவரம் பருப்பு பொடியுடன் சேர்த்து கலந்து முகத்தில் தடவி 15 நிமிடம் ஊற வைத்து பின் கழுவினால், நாளடைவில் முகத்தில் உள்ள முடியின் நிறமானது மங்க ஆரம்பிக்கும்.!

இணையப்பகிர்வு
[3/7, 17:33] Am Yoga: *மூன்று நாட்கள் இயற்கை வாழ்வியல் முகாம்*

#வாழை இலைக்குளியல்
#மண்குளியல்
#எண்ணைகுளியல்
#மூன்றுவேளையும்பழகாய்கறிஇயற்கைஉணவு
#உடலியல்விளக்கம்
#இயற்கைமருத்துவவிளக்கம்
#யோகாசனம்
#சுத்திகரிப்புகிரியைகள்
#பிராணப்பயிற்சி
#மூலிகைமருந்துகள்
#இயற்கையானசூழலில்தங்கும்வசதி

விருந்தும் மருந்தும் மூன்றுநாள் என்பது முன்னோர் வாக்கு.!
எத்தகைய ஆரோக்கியக் குறைபாடு உடையவர்களும் இந்த முகாமில் கலந்துகொண்டு
இயற்கைவழியில் குணம்பெறலாம்.!
உங்கள் வாழ்நாள் மருத்துவச் செலவில் 75 % வரை மிச்சப்படுத்தலாம்.!
சக்கரை, இரத்த அழுத்தம், சிறுநீரக செயலிழப்பு, உடல்பருமன், மனஅழுத்தம், அதிககொழுப்பு போன்ற நோய்களுக்கு வாழ்நாள் முழுவதும் மாத்திரைகளை சாப்பிட்டு கட்டுப்படுத்தும் அவல நிலையிலிருந்து விடுபட்டு ஆரோக்கியமாக வாழலாம்.!

இடம்: அன்னை ஆஸ்ரமம்,
சுப்ரமணியபுரம்,
ஆரல்வாய்மொழி,
கன்னியாகுமரி மாவட்டம்.

நாள்: மே 5,6,7
வெள்ளி,சனி,ஞாயிறு
நேரம்:6 am and 7pm
நன்கொடை :2650/-

#முன்பதிவுஅவசியம்
<குறைந்த இடங்களே உள்ளன>

#தொடர்பிற்கு:Mobile & whats app
*9629368389*
#amyogatrust.blogspot.in
[3/7, 17:39] Am Yoga: மூலிகை குடிநீர்
°°°~°~~~°°°°°°

ஒரு லிட்டர் தண்ணீரில் அரை தேக்கரண்டி ஓமம் போட்டு சிறிது சூடாக்கி வடிக்கட்டி குடித்து வந்தால் குடலிறைச்சல், வயிற்றுப்பூச்சி, அடிக்கடி வாய்வு பிரிதல், வயிற்றுவலி குணமாகும்.

ஒருலிட்டர் தண்ணீரில் அரைதேக்கரண்டி சீரகம் போட்டு சிறிது சூடாக்கி குடித்து வந்தால் அஜீரணக்கோளாறு,வயிற்று உப்புசம், உடல்சூடு தணியும்.!

ஒருலிட்டர் தண்ணீரில் சிறிது சுக்கு,மிளகு, கொத்தமல்லியை தட்டிப்போட்டு சிறிது சூடாக்கி கொஞ்சம் கொஞ்சமாக குடித்து வந்தால் அதிக சோர்வு, சளித்தொல்லை,
முகத்தில் ஏற்படும் கருவளையம்,
தொண்டைக்கட்டு குணமாகும்.!

ஒருலிட்டர் தண்ணீரில் ஒரு கடுக்காயை தட்டிப்போட்டு சூடாக்கி குடித்து வந்தால் வாய்ப்புண், தொண்டைப்புண், வயிற்றுப்புண் குணமாகும்.!

ஒருலிட்டர் தண்ணீரில் நாவப்பழக் கொட்டைகளை தட்டிப்போட்டு சிறிது சூடாக்கி குடித்து வந்தால் அதிக சக்கரை குறையும்.!

ஒருலிட்டர் தண்ணீரில் 10 கிராம் பால்காயத்தை தட்டிப்போட்டு சூடாக்காமல் 2 மணி நேரம் அப்படியே ஊறவைத்து பிறகு குடித்து வந்தால் வாய்வுபிடிப்பு, ஏப்பம்,  மூட்டுவலி குணப்படும்.!

ஒருலிட்டர் தண்ணீரில் சிறிது புளி, கருப்பட்டி, உப்பு போன்றவற்றை கலந்து அப்படியே குடித்துவந்தால் உடல்சோர்வு, அதிகதாகம் அடங்கும்.!

ஒருலிட்டர் தண்ணீரில் அரைமூடி எலுமிச்சைப்பழம், தேன், சிறிது இந்துப்பு கலந்து குடித்து வந்தால் உடல் உற்சாகம் பெருகும் உடலில் உள்ள நாள்ப்பட்ட சளியை கரைத்து வெளியேற்றும்.!

*இதுபோன்ற இன்னும் பலவித மூலிகை நீர் சிகிட்சை உண்டு.
*ஒருவர் தொடர்ந்து ஒரேவிதமான நீர்சிகிட்சையை செய்யக்கூடாது.
*ஒருலிட்டர் என்பது ஒரு அளவீடுதான் நமக்கு ஒரு நாளைக்கு எவ்வளவு நீர் தேவைப்படுமோ அவ்வளவு நீரையுமே இந்த முறையில் தயாரித்து குடித்து வந்தாலும் மிகவும் நல்லதுதான்.
*ஒருமுறை தயாரித்த நீரை
அதிகப்பட்சம் 9 மணிநேரம் வரையில் மட்டுமே வைத்துக்கொள்ளலாம்.
*மூலிகை நீர் தயாரிப்பதற்கு சாதாரண குழாய் குடிநீரையே பயண்படுத்தலாம் அல்லது மண்பானை நீரை பயண்படுத்தலாம்.
சுத்திகரித்த நீரோ/ ஊட்டம் கலந்தநீரே தேவையில்லை.!

🌿இயற்கை மருத்துவ தகவல்களுக்கு🍁
amyogatrust.blogspot.in

🌾100% இயற்கை மூலிகை💥 தயாரிப்புகளுக்கு
AUM HERBALS
MOBILE & Whats app
9629368389

நலம் பெருகட்டும் …

Saturday, March 4, 2017

..



கண்கள்

கண்களின் எற்படும் தொந்தரவுகளில் இருந்து எளிதில் விடுபட உத்திகள்!

ஒருமுறை கண்ணாடி அணிந்தால், பிறகு கண்ணாடியைக் கழற்ற வழியே இல்லையா?

பல வழிகள் இருக்கிறது.

கண்கள் தொந்தரவுகளில் இருந்து எளிதில் விடுபட உத்திகள்!

கண்களைக் காக்கும் பயிற்சி

கண்களில் ஏதேனும் பிரச்சனை வந்தால், மருத்துவரைப் பார்த்து, கண்ணாடி அணிந்து கொள்கிறோம். பிரச்சனை சரியானதும் கண்ணாடியைக் கழட்டிவிட வேண்டும் தானே? ஆனால், ஒருமுறை கண்ணாடி அணிந்தால், அதையே தொடர்கிறோமே ஏன்? ஒருமுறை அணிந்தால், கண்ணாடியைக் கழற்ற வழியே இல்லையா?

கண்ணாடி ஏன் அணிகிறோம்?

கண்ணின் முன்பக்கத்தில் இருந்து, பின்பக்கம் வரை அதாவது, கருவிழியில் இருந்து விழித்திரை வரை இருக்கும் விட்டத்தை `ஆக்ஸியல் லென்த்’ (Axial length) என்பார்கள். பிறக்கும்போது 17 mm இருக்கும் விட்டம், பெரியவர்கள் ஆகும்போது 22.5 mm வரை அதிகரிக்கும். சிலருக்கு 24 மி.மீ வரைகூட இருக்கும். 22.5 mm என்ற இந்த சராசரி அளவைவிட அதிகமாகவோ, குறைவாகவோ இருந்தால், பார்வை சரியாகத் தெரியாது. ‘ஆக்ஸியல் லென்த்’ குறைவாக இருப்பவர்களுக்குக் கிட்டப் பார்வையிலும், அதிகமாக இருப்பவர்களுக்குத் தூரப் பார்வையிலும் பிரச்சனை இருக்கும். தூரப் பார்வை உள்ளவர்களுக்கு குவிவு வில்லைகளும் Convex lens, கிட்டப் பார்வை உள்ளவர்களுக்கு குழிவு வில்லைகளும் Concave lens பார்வைக் கோளாறைச் சரிசெய்யத் தரப்படும்.

கண்ணாடி போட்டுக்கொண்டால், பார்வைக் கோளாறு சரியாகிவிடுமா?

கண்ணாடி போடுவதால், நிச்சயம் பார்வைக் கோளாறு சரியாகாது. நாம் பார்க்கும் பொருளின் பிம்பம், கண்ணில் இருக்கும் லென்ஸ் வழியாக விழித்திரையில் விழும். விழித்திரையில் விழும் இந்த பிம்பம், மூளைக்குச் சென்று பதிந்த பிறகுதான், நாம் அந்தப் பிம்பத்தைப் பார்க்கிறோம். கருவிழிக்கும் விழித்திரைக்குமான இடைவெளி அதிகமாக இருந்தாலோ, குறைவாக இருந்தாலோ, நாம் பார்க்கும் பிம்பம் சரியாக விழித்திரையில் விழாது.

கண்ணாடி அணிவதன் மூலம், கருவிழி வழியாகச் செல்லும் பிம்பமானது, சரியாக விழித்திரைக்குச் சென்றடைய உதவும். ஆனால், கண்ணின் முன் பக்கத்துக்கும் பின் பக்கத்துக்கும் இடையில் இருக்கும் இடைவெளியைக் கண்ணாடி குறைக்கவோ, அதிகரிக்கவோ செய்யாது.

ஒருமுறை கண்ணாடி அணிந்தால், பிறகு கண்ணாடியைக் கழற்ற வழியே இல்லையா?

பல வழிகள் இருக்கிறது. அதில் ஒரு வழிமுறையை இன்று பார்ப்போம்.

கண்களுக்கான பயிற்சி  1

நிமிர்ந்து நேராக உட்கார வேண்டும். வலது கையில் கட்டை விரலைத் தவிர மற்ற விரல்களை மடக்கி, பார்வைக்கு நேராக உயர்த்தி, கட்டைவிரலைப் பார்க்க வேண்டும். நம் பார்வை, கட்டை விரலில் நிலைத்திருக்க வேண்டும். கையை மெதுவாக வலப்புறம் நகர்த்த வேண்டும். கையை நகர்த்தும்போது, விழிகள் மட்டும் கையோடு சேர்ந்து நகர வேண்டும். தலையைத் திருப்பக் கூடாது. கழுத்து, முதுகு, நேராக இருப்பது அவசியம். கட்டை விரலைத் தெளிவாகப் பார்க்கக்கூடிய தூரம் வரை மட்டுமே கையை நகர்த்தவும். சிறிது நேரம் அப்படியே வைத்திருக்கவும். பிறகு, கையை அப்படியே பழைய நிலைக்குக் கொண்டுவரவும். இதை, ஐந்து முறை செய்ய வேண்டும். பயிற்சி செய்யும்போது, கண்களைச் சிமிட்டக் கூடாது. இதேபோல கை பெருவிரலை இடது பக்கம் நகர்த்தி செய்ய வேண்டும்.

கண்களுக்கன பயிற்சி 2

நிமிர்ந்து நேராக உட்கார வேண்டும். கட்டை விரலைத் தவிர மற்ற விரல்களை மடக்கி, வலது கையைப் பார்வைக்கு நேராக உயர்த்தி, கட்டை விரலைப் பார்க்க வேண்டும். இப்போது, கையை மேலே உயர்த்த வேண்டும். உயர்த்தும்போது கருவிழிகள் மட்டும் கையோடு சேர்ந்து நகர வேண்டும். சிறிது நேரம் அப்படியே வைத்திருக்கவும். பிறகு, கையை பழைய நிலைக்குக் கொண்டுவரவும். கட்டை விரலைப் பார்த்தபடி கையைக் கீழே கொண்டுசெல்ல வேண்டும்.

கண்களுக்கான பயிற்சி  3

நேராக உட்கார்ந்து, மூக்கின் நுனியை உற்று நோக்கவும். கண்களோ, தலையோ வலிப்பது போன்று இருந்தால், கொஞ்சம் ஓய்வு எடுத்துவிட்டுத் தொடரலாம். பிறகு, கண்களை மூடி ஓய்வெடுக்கவும்.

கண்களுக்கான பயிற்சி 4

நிமிர்ந்து உட்கார்ந்து கண்களை 10 முதல் 20 time முறை சிமிட்டவும். பிறகு, கண்களைத் திறந்து நேராகப் பார்க்கவும். இடது கண் விழியை வலது பக்கமும், வலது கண் விழியை இடது பக்கமும் கொண்டுவந்து பயிற்சி செய்யவும். அதன் பிறகு, கைகளை தேய்த்து கண்களில் வைத்துக்கொள்ளவும். மீண்டும் 10- 20 முறை கண்களைச் சிமிட்டவும்.

கண் சிமிட்டுதல் மற்றும் மூக்கின் நுனியினை பார்த்தல் புருவமத்தியைப் பார்த்தல் என்பவற்றுடன் கீழே கொடுக்கப்பட்டுள்ள உத்திகளையும் செய்து வந்தால்
கண் சம்பந்தப்பட்ட  நோய்களையும் குணப்படுத்தலாம்.

குணப்படுத்தக்கூடிய நோய்கள்:

கிட்டப்பார்வை,

 தூரப்பார்வை,

குளுக்கோமா Glucoma,
கண்ணில் புரை Cataracts,

 கண்ணுள் அழுத்தம் அதிகரித்தல் Eye Pressure,
 கண் உலர்தல் Dry eyes.!

*இணையப்பகிர்வு*

Thursday, March 2, 2017

குறிப்புகள் 02/03/2017

[2/27, 08:42] Am Yoga: *உடல் சங்கேதமும் அதன் பாதிப்புகளும் 😘
*********"****

**முகத்தில் அரிப்போ நமைச்சலோ எடுத்தால் ---
கூந்தலில் சுத்தமில்லை என அர்த்தம்.

** வயிற்றுவலியோ வயிற்றாலையோ இருந்தால் ---
கைவிரல் நகங்கள் சுத்தமில்லை என அர்த்தம்.

** கண்களோ மூக்கோ தொடர்ந்து அரிக்குமானால் ---
ஜலதோசம் பிடிக்கப்போகிறது என அர்த்தம்.

** காதில் அதீத குடைச்சலோ வலியோ வந்தால் ---
காய்ச்சல் வர நேரம் வந்துவிட்டது என அர்த்தம்.

** கைமடிப்பு, கழுத்து மடிப்பு, கால் இடுக்கில் கருப்பான பட்டை விழுந்தால் ---
கணையத்தில் இன்சுலினின் சுரப்பு அதிகமாகிறது என அர்த்தம்.

**உடலில் இன்சுலின் அதிகம் சுரந்து அதிக பசி எடுக்கிறதென்றால் ---
அது நீரிழிவின் ஆரம்பம் என அர்த்தம்.

**கால் பாதங்களில் வெடிப்பு உண்டானால்-- -
உடலில் அதிக அழுத்தமும் சூடும் இருக்கிறது என அர்த்தம்.

**முழுங்கால் மூட்டு அல்லது கால்களின் மணிக்கட்டு வலியெடுத்தால் ---
உடலில் அதிக எடை கூடிவிட்டது அதனைக் குறைக்கவேண்டும் என அர்த்தம்.

**தொடர்ந்து முதுகுத்தண்டு அல்லது இடுப்புப் பகுதி வலிக்குமானால் ---
அந்த இரு எலும்புகளும் மிருதுவாகி தேய்மானம் தொடங்குகிறது என அர்த்தம்.

** உதட்டில் அல்லது மேல்தோலில் வெடிப்பு, பிளவு, தோல் உரிதல் உண்டாகுமானால் ---
உடலில் நீர்ச்சத்தும் எண்ணெய்ப்பசையும்  குறைந்துவிட்டது என அர்த்தம்.

** தோள்பட்டை, முதுகுத்தாரை, குதிங்கால் இவற்றில் இறுக்கமோ வலியோ வந்தால் ---
உடலில் காற்றின் அழுத்தம் கூடி வாயு தேங்கியுள்ளது என அர்த்தம்.

** கைவிரல் நகங்களுக்கு மேல் மெல்லிய கருப்புக்கோடு விழுமானால் ---
இருதயத்தில் பிரச்சினை தொடங்குகிறது என அர்த்தம்.!
மேற்கண்ட அறிகுறிகளை காண்பவர்கள் சரியான உணவு முறை, யோகா செய்தல், தேவையான உறக்கம் என்று வாழ்க்கை முறையை சீர்ப்படுத்திக் கொண்டால் நல்லது.
அல்லது பெருநோயாளிகள் ஆகி தன்னையும் தன்னை சார்ந்தவர்களையும் வதைப்பதை யாராலும் தடுக்க முடியாது.!      

*இணையப்பகிர்வு*
[2/28, 08:41] Am Yoga: ஆரோக்கியமான வாழ்விற்கு சித்த மருத்துவம்!


* சாதம் வடித்த கஞ்சியை எடுத்து ஆறவைத்து ஒரு ஸ்பூன் நெய்யில் கொஞ்சம் சீரகம் கலந்து குடித்தால் இடுப்புவலி நீங்கும்.

* அரிசியுடன் வெந்தயத்தைச் சேர்த்து கஞ்சியாக்கி காய்ச்சி உண்டு வந்தால் தாய்ப்பால் சுரக்கும்.

* விரலி மஞ்சளை சுட்டு பொடி செய்து தேங்காய் எண்ணெயில் குழப்பி காலையிலும் இரவிலும் ஆறாத புண்களுக்கு மேல் போட்டால் சீக்கிரம் குணமாகிவிடும்.

* கறிவேப்பிலையை அம்மியில் வைத்து அதனுடன் தேக்கரண்டியளவு சீரகத்தையும் வைத்து, மை போல அரைத்து வாயில் போட்டு தண்ணீர் குடித்துவிட்டால் வயிற்றுப் போக்கு நிற்கும்.

* சாம்பிராணி, மஞ்சள், சீனி போட்டு கஷாயமாக்கி பாலும் வெல்லமும் சேர்த்து பருகினால் உடம்புவலி தீரும்.

* நெருப்பு சுடுநீர் பட்ட இடத்தில் பெருங்காயத்தை அரைத்துப் பூசினால் எரிச்சல் குறையும் கொப்பளமும் ஏற்படாது.

* வெண்டைக்காயை உணவில் அடிக்கடி சேர்த்து வந்தால் நரம்புகள் வலிமை பெறும். மூளையின் இயக்கத்தைச் செம்மைப்படுத்துவதுடன் நல்ல ஞாபக சக்தியையும் உண்டாகும்.

* பசுவின் பால் நூறு மில்லி தண்ணீரில் அதே அளவு விட்டு இதில் வெண்தாமரை மலர்களைப் போட்டுக் காய்ச்சி பாத்திரத்தை இறக்கி வைத்து அதில் வரும் ஆவியைக் கண்வலி போன்ற நோய்கள் வந்த கண்ணில் படும்படி பிடித்தால், கண் நோய்கள் அகலும்.

* புடலங்காயின் இலைச்சாறு, காலையில் குழந்தைகளுக்குத் தருவதால் கக்குவான், இருமல் குணமாகும். மலச்சிக்கல் நீங்கும். புடலங்காய் சமைத்து உண்பதால் தேவையில்லாத உடல் பருமன் குறையலாம்.

* பீட்ருட் கிழங்கின் சாற்றுடன் சிறிது தேனும் கலந்து அருந்தி வந்தால் வயிற்றுப்புண் குணமாகும்.

* கேரட் சாறும் சிறிது தேனும் கலந்து பருகி வர கர்ப்பினி பெண்கள் வாந்தி நிற்கும் உடல் வலுவாகும். பித்த நோய்கள் தீரும்.

* சுக்கு, மிளகு, திப்பிலி, தாமரை இதழ், வெல்லம் சேர்த்து தண்ணீரில் விட்டுக் கொதிக்க வைத்து வடிகட்டி இரவில் ஒரு டம்ளர் சாப்பிடுவதால் மாரடைப்பைத் தடுக்கலாம்.

* முட்டைக் கோசுடன் பசுவின் வெண்ணெய் கலந்து பாகம் செய்து சாப்பிட்டால் உடல் தளர்ச்சி விலகும்.
இருமல், தொண்டை கரகரப்பு
பாலில் பூண்டைப் போட்டு காய்ச்சிக் குடித்தால் இருமல், ஜலதோஷம், தொண்டைக் கரகரப்பு போகும்.

சளி:

பூண்டை தோல் உரித்து நசுக்கி, தக்காளி, உப்பு, தண்ணீர் சேர்த்து கொதிக்க வைத்து சூப் செய்து குடித்தால் சளி சீக்கிரம் குணமாகும்.

டான்சில்:
வெள்ளைப் பூண்டு, இஞ்சி சாறு இரண்டையும் சேர்த்து அரைத்து இதனுடன் தேன் கலந்து காலை மாலை உணவுக்கு முன் சாப்பிட்டால் டான்சில் கரையும்.!

இணையப்பகிர்வு
[2/28, 18:21] Am Yoga: அதிமதுரம் - மருத்துவப் பயன்கள்:

* அதிமதுரப் பொடியை வெல்லத்துடன் தண்ணீரில் கலந்து குடிக்க மலச்சிக்கல் நீங்கும்.

* திராட்சை, அதிமதுரம் இவற்றின் கஷாயத்துடன் காய்ச்சிய பாலைப் பருகச் செய்தால், சிறுநீரத் தடையால் தோன்றிய வயிறு உப்புசம் நீங்கும்.

* அதிமதுரத்தைத் தூளாக்கி பசும்பாலில், ஒரு மணி நேரம் ஊறவைத்து அரைத்து தலையில் அழுத்தித் தேய்த்து, சிறிது நேரங்கழித்துக் குளிக்க, தலைமுடியின் குறைகள் நீங்கும். தலையிலுள்ள சிறு புண்கள் குணமாகும். கேசம் பட்டுப் போல பிரகாசிக்கும்.

* கரு சுருங்கிய போதும், குழந்தை இளைத்த போதும், குமிழம் வேர், அதிமதுரம் சேர்த்துக் காய்ச்சிய பாலில் சர்க்கரை கலந்து பருகச் செய்யவும். அப்படி ஒரு மண்டலம் செய்தால் விரைவில் தீர்வு கிட்டும்.

* அதிமதுரம், சுக்கு இவற்றைக் கஷாயம் காய்ச்சிப் பருகச் செய்தால் அடிபடுதலால் உண்டாகும் இளைப்பு தீரும்.

* தொண்டை கரகரப்பு, உலர்ந்த தொண்டை, உலர் இருமல்களை போக்கி, நுரையீரலை ஈரப்படுத்தும் தன்மை கொண்டது இந்த அதிமதுரப் பொடி.

* அதிமதுரம், கடுக்காய், திப்பிலி, மிளகு சேர்த்து வறுத்து பொடி செய்து நெய்யில் கலந்து சாப்பிட கண் எரிச்சல் நீங்கும். கண் ஒளி பெறும்.

* அதிமதுரம், மனிதர்களுக்குத் தீங்கு செய்யும் வைரஸ் கிருமிகளை அழிக்கும் சக்திகள் நிரம்பியது. அதிமதுரத்தில் உள்ள பசைப் பொருளும், பிசின் பொருளும் உணவு மண்டலத்தில் செயல்பட்டு உணவு செரிப்பதற்கு உதவுகிறது.

* அதிமதுர வேரின் சிறு துண்டுகளை பாலில் அரைத்து. துளி குங்குமப்பூ போட்டு கலந்து, இந்த கலவையை தலையில் வழுக்கை இருக்கும் இடத்தில் தடவி வரவும். சில வாரங்களில் முடிகள் தோன்றும்.

* அதிமதுரச் சாறு அல்லது கஷாயம் மிதமான பேதி மருந்தாகவும், சிறு நீரகக் கோளாறுகளுக்கும், மார்பு மற்றும் வயிற்றுக்கு கோளாறுகளுக்கும் நல்ல மருந்தாகவும் இருக்கும்.

* அதிமதுரத்தை இஞ்சி மற்றும் பாலுடன் கலந்து சாப்பிட சோர்வு நீங்கும்.

* அதிமதுரம், தேவதாரம் இவைகள் வகைக்கு 35 கிராம் பொடி செய்து, பிறகு வெந்நீர் விட்டு நன்றாக அரைத்து, பிரசவ வலி துவங்கிய உடன் இரண்டு முறை கொடுத்தால் சுகப்பிரசவம் ஏற்படும். பெண்களுக்கு ஏற்படும் கருப்பைத் தொடர்பான நோய்கள் நிவர்த்தியாகும்.

* அதிமதுரத்துடன் சமஅளவு, தோல் சீவிய சுக்கு சேர்த்து தூளாக்கி காலை, மாலை உணவுக்குப் பிறகு, கால் டீஸ்பூன் தேனில் குழைத்து, சிறிது சிறிதாக சுவைத்து உண்ண, தலைச்சுற்றல், வாந்தி, மயக்கம் போகும்.

* அதிமதுர இலையை அரைத்துப் பூசிவர, உடலிலும், அக்குளிலும் உண்டாகும் கற்றாழை நாற்றம், அரையில் உண்டாகும் சொறி, சிரங்கு போகும்.

* அதிமதுரம், திராட்சை இவை இரண்டையும் சமமாகப் பொடி செய்து 50 அல்லது 100 கிராம் எடுத்து தண்ணீரில் அரைத்து பாலில் கலக்கி பெண்களின் மாதவிடாய் தொடங்கிய நாள் முதல் ஐந்து தினங்கள் சாப்பிட்டு வந்தால், பெண்களின் இயற்கை கோளாறுகள் நீங்கும்.

* அதிமதுரம், சீரகம் சம அளவு எடுத்து பொடித்து வைத்துக் கொண்டு 20 கிராம் பொடியை 200 மில்லி தண்ணீரில் போட்டுக் கொதிக்க வைத்து 100 மில்லியாகச் சுண்டியதும் வடிகட்டி காலை வேளையில் மூன்று தினங்கள் சாப்பிட்டால் கருவுற்ற பெண்களுக்கு பிரசவத்திற்கு முன்னதாக உள்ள காலங்களில் ஏற்படும் உதிரப் போக்கு நிவர்த்தியாகும்.

* ஜலதோஷம், ப்ளூ, ஆஸ்துமா இவற்றுக்கு நல்ல மருந்தாக உள்ளது இந்த அதிமதுரப் பொடி.

* இளமையில் போக சக்தியை இழந்து விட்ட வாலிபர்களுக்கு அதிமதுரம் ஒரு புத்துயிர் அளிக்கும் அரு மருந்தாக பழங்காலத்தில் இருந்தே பயன்பட்டு வருகிறது.

* அதிமதுரத் துண்டு ஒன்றை வாயிலிட்டுச் சுவைத்து விழுங்க, இருமல் தணியும். அதிமதுரச் சூரணத்தைத் தயாரித்து வைத்துக் கொண்டு, 2 கிராம் அளவில் தேனில் குழைத்து, தினம் மூன்று வேளை சாப்பிட்டால், தொண்டைக் கட்டு, இருமல், சளி குணமாகும்.

* அதிமதுர வேருடன் வால்மிளகு, பனங்கற்கண்டு, பால் சேர்த்து தயாரித்த கஷாயத்தை குடிப்பதால் தொண்டைப்புண் குணமாகும். அதிமதுர கஷாயத்தை வாயிலிட்டு கொப்பளித்தாலே வாய்ப்புண்கள் ஆறும்.

* அதிமதுரத்து பொடியுடன் சிற்றாமணக்கு நெய் தடவி, குன்றி இலையை ஒட்டவைக்க பிடிப்பும், சுளுக்கும் குணமாகும்.

* தொண்டை, வாய்ப்புண்களுக்கு அதிமதுரம் தொன்று தொட்டு பயன்படுத்தப்படுகிறது. ஒரு துண்டு அதிமதுரத்தை அப்படியே வாயில் வைத்து மென்றாலே தொண்டைக்கு இதமாகும்.

* கண்கள் ஒளிபெற அதிமதுரத்தை முலைப்பால் விட்டு அரைத்து கண்ணில் விட வேண்டும்.

* போதுமான அளவு தாய்ப்பால் இல்லாதவர்கள், ஒரு கிராம் அதிமதுரச் சூரணத்தை, பாலில் கலந்து சிறிதளவு இனிப்பு சேர்த்துச் சாப்பிட்டு வந்தால், தாய்ப்பால் அதிகமாகச் சுரக்கும். பெண்களுக்கு ஏற்படும் கருப்பை தொடர்பான நோய்களை அதிமதுரம் நிவர்த்தி செய்யும்.

* சூட்டினால் உண்டாகும் இருமலுக்கு அதிமதுரம், கடுக்காய், மிளகு ஆகியவற்றை சம அளவு எடுத்து இளவறுப்பாய் வறுத்து சூரணம் செய்து தேனில் சாப்பிட குணமாகும்.

* சோம்புச் சூரணம், அதிமதுரச் சூரணம் இரண்டையும் தலா 5 கிராம் அளவில் இரவு படுக்கும்போது சாப்பிட்டு வெந்நீர் பருகினால் இலகுவாக மலம் வெளியாகும். உள் உறுப்புகள் சூடு தணிந்து, சுறுசுறுப்பாக உடல் இயங்கச் செய்யும்.

* வயிற்றுப்புண்களுக்கு - அதிமதுரத்துண்டுகளின் பொடியை நீரில் போட்டு கலக்கி இரவு வைக்கவும் - காலையில் அரிசி கஞ்சியுடன் சேர்த்து நீரை குடித்து வந்தால் வயிற்றுப்புண் குணமாகும். வயிறுகோளாறுகளுக்கு அதிமதுரத்தை பொடியாகத் தான் எடுத்துக் கொள்ள வேண்டும்.

* சூட்டினால் உண்டாகும் இருமல், மஞ்சள் காமாலை, உடல் உஷ்ணம் போன்றவை தனிய அதிமதுரப்பொடி உதவும்.

* அதிமதுரத்துடன் தேன் கலந்து சாப்பிட சர்க்கரை வியாதி குணமாகும்.!

*இணையப்பகிர்வு*
[3/1, 09:50] Am Yoga: *எண்வகை வாயுவையும்*
 *போக்கும் உப்பு பஸ்பம்*

இந்துப்பு,வெடியுப்பு,கறுப்பு உப்பு,கல்லுப்பு,அட்டுப்பு,வளையலுப்பு, உவர் உப்பு வகைக்கு
50 கிராம் சோற்றுப்பு 400 கிராம்  எலுமிச்சை உப்பு
<சிட்ரிக் ஆசிட்> 10 கிராம்
இவைகளை பொடித்து குமட்டிக்காய் சாறு ஒரு லிட்டர் புளித்தமோர் 2 லிட்டர்  ஊற்றி நன்றாக கலக்கி மூடிவைத்து மறுநாள் அதேநேரம்  தெளிவை மட்டும் இறுத்து புது மண் பாண்டத்தில் விட்டு  சிறுதீயில் மூன்றிலொரு பங்காக வற்றவைத்து  வழித்து நான்கைந்து பீங்கான்  பாத்திரத்தில் அல்லது வாயகன்ற பெரிய ஒரு பீங்கான் பாத்திரத்தில் ஊற்றி  கடும் வெயிலில் ஒருநாள் முழுக்க அல்லது  காயும் வரை வைத்து எடுத்து  பொடித்து காற்றுபுகாத கண்ணாடி பாட்டிலில் அடைத்து வைத்துக்கொண்டு  காலை,மாலை வெறும் வயிற்றில் ஒன்றரை கிராம் பஸ்பத்தை  ஒரு டம்ளர் மோர் அல்லது ஒரு டம்ளர் பழைய சோற்றுநீரில் கலந்து கலக்கி   10 முதல் 48 நாட்கள் குடித்துவர  *உடல் வீக்கம்,புளித்த ஏப்பம், வாய்வு உருண்டு உருண்டு உடலில் பல்வேறு இடங்களில் உலாவுதல், அடிக்கடி வாய்வு பிடித்துக்கொள்ளுதல், மூச்சை அடைத்தல், இதயத்திற்கும் செல்லும் இரத்த குழாயை அடைத்தல் போன்ற எட்டுவிதமான வாய்வும் போவதோடு மாதவிடாய் வலி, கல்லீரல் வீக்கம், கல்லீரல் அலர்ஜி, கல்லீரல் கொழுப்பு, வயிற்றுக்கட்டி, கர்பபை நீர்க்கட்டி போன்றவை கரையும்*

உணவில் எளிதில்  ஜீரணமாகும் கஞ்சி,பொங்கல் போன்றவற்றை உண்டு வாயுப்பதார்த்தங்கள்,இரசாயண உணவுகளை முழுவதும் தவிர்க்க வேண்டும்.!

🍁 *இயற்கை மருத்துவ தகவல்களுக்கு*🌿
amyogatrust.blogspot.in

100 % இயற்கை மூலிகை தயாரிப்புகளுக்கு
AUM HERBALS
Mobile & Whats App
*9629368389*
[3/2, 07:40] Am Yoga: *மருதாணி மருத்துவம்*

மருதாணியின் பயன்கள்:
மருதா‌ணி இலையை வெறு‌ம் அழகு‌க்காக கைகக‌ளி‌ல் வை‌க்‌கிறா‌ர்க‌ள் எ‌ன்று கரு‌தினா‌ல் அது ‌மிக‌‌ப்பெ‌ரிய தவறாகு‌ம். மருதாணி இலை கிருமி நாசினி, கண்ணுக்குப் புலப்படாத கிருமிகளை அழிக்க வல்லது. நகசுத்தி வராமல் தடுக்கும். சேற்றுப் புண்ணை ஆற்றவும் நல்ல மருந்து. கை, கால், விரல் நகங்களுக்கு அரைத்துப் பூசி அழகூட்டுவார்கள்.
மேலும் மருதாணியின்
பூக்களைப் பறித்து உலர்த்தி தலையணைகளில் பரப்பி உபயோகித்தால் ஆழ்ந்த தூக்கம் வரும்.
இதன் இலைகளை நீரில் ஊற வைத்து, வாய் கொப்பளித்து வந்தால் தொண்டை கரகரப்பு, தொண்டைக் கம்மல் குணமாகும்.மருதாணி செடியின் பட்டையை ஊற வைத்த நீரை அரை அவுன்ஸ் காலை, மாலை குடித்து வந்தால் மஞ்சள் காமாலை குணமாகும்.
மருதாணி இலையை நன்றாக அரைத்து தலைவலிக்கு நெற்றியிலும், பொட்டுகளிலும் பற்றுப் போட்டுக்கொண்டால் தலைவலி உடனே நீங்கும்.
மருதாணிஇலையை நன்றாக அரைத்து சிறு சிறு அடைகளாகத் தட்டி நிழலில் உலர்த்தித்
தேங்காய் எண்ணெயில் சில நாள்கள் ஊறவிட்டு, அதை நன்றாகக் காய்ச்சித் தலைக்குத் தேய்த்தால் நீண்ட அடர்த்தியான தலைமுடி வளரும்.
மருதாணி இலை உடம்பிலுள்ள அதிக உஷ்ணத்தைக் குறைத்து, கண்களுக்குக் குளிர்ச்சியை
ஏற்படுத்தும்.மருதாணி இலையை எலுமிச்சம் பழச்சாறு சேர்த்து அரைத்து
கால்வெடிப்புக்கும், கால் எரிச்சலுக்கும் வெளிப்பூச்சாக உபயோகித்தால் நல்ல பலன் பெறலாம்.
சிலபெ‌ண்களு‌க்கு ஏ‌ற்படு‌ம் பெரு‌ம்பாடு, வெ‌ள்ளை‌ப்பாடு ஆ‌கியவை குணமாக, மருதா‌ணி இலையை அரை‌த்தநெ‌ல்‌லி‌க்கா‌ய் அளவு பசு‌ம்பா‌லி‌ல் கல‌ந்து
இருவேளை ‌வீத‌ம் 3 நா‌‌ட்க‌ள் சா‌ப்‌பி‌ட்டா‌ல் ‌விரை‌வி‌ல் குண‌ம் கிடை‌‌க்கு‌ம். ஆனா‌ல், இ‌தனை உ‌ண்ணு‌ம் போது உண‌வி‌ல் பு‌ளியை சே‌ர்‌த்து‌க் கொ‌ள்ள‌க் கூடாது.
கரும்படை, வண்ணான் படை கால் இடுக்கிலும், இடுப்பிலும், கழுத்து, கை இடுக்கிலும் வரும். இதற்கு ஒரு பிடிமருதாணி இலையுடன் 5 கிராம் 501 பார்( துணி துவைக்கும்) சோப்புவைத்து அரைத்துக் களிம்பு போல தடவி வந்தால் கரும்படை யாவும் சுகமடையும். 10 -15 நாள் பூச வேண்டும். வண்டு கடிக்கும் சொறி, சிரங்கிற்கும் இதனைப் பூச்சு மருந்தாகப் பயன்படுத்தலாம்.
செம்பருத்தி இலை, பூ, மருதாணி இலை, முட்டையின்
வெள்ளைக் கரு ஆகியவற்றைக் கலந்து மிக்சியில் அரைத்து, தயிர் சிறிதும் கலந்து தலையில் தேய்த்து அரை மணி நேரம் ஊறிக் குளித்தால், தலை “ஜில்’ லென்றிருக்கும். தலை முடி “புசுபுசு’வென அதிகமாய் ஜொலிக்கும். இரண்டு வாரத்திற்கு ஒரு முறை இதைச் செய்து வந்தால், அரை அடி கூந்தலும் ஆறடி கூந்தல் போல  மாறிவிடும்.!

*இணையப்பகிர்வு*
[3/2, 17:14] Am Yoga: தோல் நோய் நீக்கும் எண்ணெய்
**********************
நாமே தயாரிக்கும் முறை..

மருதாணி வேர் பட்டை 10  கிராம்.
வசம்பு.   ___________        10 கிராம்.
கற்பூரம் ____________        10 கிராம்.
மஞ்சள் ________________   10 கிராம்.

இவற்றை நன்கு பொடியாக்கி
வைத்ததை
100 மி்ல்லி ஆமணக்கு எண்ணெயில் இட்டு
நன்கு காய்ச்சி வடிகட்டி பாட்டிலில்
வைத்துக்கொண்டு தோல் பிரச்சினை
உள்ள இடங்களில் மேல் பூச்சாக தடவிவர தோல் நோய்கள் நீங்கும்.

விரைவில் பலன் தெரிய ..
பேதிமருந்தும்  எடுத்துக்கொள்ளவும்.