Sunday, January 8, 2017

மருத்துவக் குறிப்புகள் 08/01/17

[1/7, 18:32] Am Yoga: *சமய சஞ்சீவி*

சித்த, ஆயுர்வேத, இயற்கை மருத்துவ முறைகளில் அமிர்தமாகக் கொண்டாடப்படுவது திரிபலா சூரணம். கடுக்காய், நெல்லிக்காய், தான்றிக்காய் எனும் மூன்று பொருட்களின் கூட்டமைப்பு. நாட்டு மருந்துக்கடைகளில் எளிதாகக் கிடைக்கும்.
திரிபலா சூரணம் தினமும் சாப்பிட்டுவர, வளர்சிதை மாற்றம் சீராக இருக்கும். அஜீரணக் கோளாறு நீங்கும். ரத்தம் சுத்திகரிக்கப்படும். ரத்த ஓட்டம் சீராகும். கல்லீரல், நுரையீரலில் புண்கள் வராமல் பாதுகாக்கும். ஆஸ்துமா, மஞ்சள் காமாலை இருப்பவர்களுக்கு ஏற்றது.
தோலில் அரிப்பு, கருமை, சிவப்புப் புள்ளிகள் இருந்தால், இந்த சூரணத்தைத் தடவிவர, விரைவில் சரியாகும். தொடர்ந்து, திரிபலா சாப்பிட்டு வருபவர்களுக்கு மலச்சிக்கல் இராது, தோல் மினுமினுப்பு அடையும். உடல் வலுவாகும், நோய்கள் அண்டாது.
உயர் ரத்த அழுத்தம், கொலஸ்ட்ரால், உடல் எடையைக் குறைக்க விரும்புபவர்களுக்கு இது ஏற்றது.
காலில் வெடிப்பு இருந்தால், இரவு படுக்கைக்குப் போகும் முன்பு, சுடுநீரில் திரிபலா சூரணத்தைக் கலந்து, வெதுவெதுப்பான சூட்டில் பாதத்தை 20 நிமிடங்கள் ஊறவைத்து எடுக்கலாம்.!
40 வயதிற்கு மேற்பட்டோர் தினமும் சாப்பிடலாம். மற்றவர்கள்  வாரம் இரண்டு நாள் சாப்பிட்டால் போதும்.! சாப்பிடும் முறை- ஒரு ஸ்பூன் பொடி சுடுநீர் அல்லது தேனில் கலந்து சாப்பிடலாம்.!

*இணையப்பகிர்வு*
[1/8, 14:59] Am Yoga: *பப்பாளி பழம்*

*பப்பாளிப் பழத்தின் மருத்துவ பயன்கள்*

🍑எல்லாக் காலங்களிலும் கிடைக்கும் ஒரு அருமையான பழம் பப்பாளிப் பழம்..

🍑இது வெப்ப பிரதேசங்களில் நன்றாக விளையக் கூடியது. இது கிராம புறங்கள் அல்லாமல் நகர்ப்புற வீடுகளிலும் இந்த மரத்தை நாம் காணலாம்.

🍑 இதை வளர்க்கும் முறை மிகவும் எளிமையானது

🍑விதைகளை போட்டாலே போதும் இது விரைவில் வளர்ந்து மரமாக நிற்கும்.

🍑இதில் ஆண் மரம் மற்றும் பெண் மரம் என்று இரு வகை உண்டு.

😃ஆண் மரத்தில் கொத்து கொத்தாக பூக்கள் மட்டுமே பூக்கும் பழங்கள் வராது.

😍பெண் மரத்தில் ஒவ்வொரு இலையின் காம்பு ஆரம்பிக்கும் இடத்தில் ஒரு பூ மலரும் அதுவே வளர்ந்து கணியாக மாறும்.
இது பழுத்தவுடன் மஞ்சள் கலந்த ஆரஞ்சு நிறமாக இருக்கும்.

🍑இப்பழம் அதிக சூடுள்ள பழம் என்று நினைத்து பலர் சாப்பிடாமல் இருப்பர் அது தவறான கருத்தாகும்.

🍑இதில் உள்ள சூடு எந்த வித பாதிப்பையும் நமக்கு ஏற்ப்படுத்தாது.
உடலுக்கு அதிக சக்தியைக் கொடுக்க கூடிய இப்பழம் மாம்பழத்திற்கு அடுத்து இதில்தான் அதிக அளவு வைட்டமின்கள் இருக்கின்றன.

இதில் குளுக்கோஸ், இரும்புச் சத்து, உலோகச் சத்து, சுண்ணாம்புச் சத்து, எரியம், புரதம், நியாசின்,தயாமின், ரிபோஃப்ளேவின் ஆகிய சத்துக்ளும் எ,எ1,பி1,பி2 மற்றும் சி வைட்டமின்களும் நிறைந்துள்ளன

🍑விலையுயர்ந்த பழத்தை விட பல்வேறு சத்துக்கள் இந்த பழத்தில் உள்ளன.

🍑இதில் பெப்சின் என்னும் சத்து அதிக அளவில் உள்ளது.

🍑இந்த சத்து குடலில் உள்ள ஏற்படும் நோய்களை குணமாக்கும் வல்லமை உடையது.

🍑நமது இரத்தத்தில் கலக்கும் எந்த விதமான கிருமிகளையும் அழிக்கும் வல்லமையுடைய பழம் இது மற்றும் இரத்தத்தை விருத்தி செய்யும்.

🍑இப்பழத்தை உண்பதால் சொறி சிரங்கு குணமாகும். உடலிலுள்ள புண்கள் விரைவிலேயே குணமாகும்.

🍑உடற் சோம்பலை போக்கும். பல் சம்பந்தமான வியாதிகளை குணமாக்கும், பற்களுக்கு உறுதியைக் கொடுக்கும்.

🍑பெண்களுக்கு ஏற்படும் மாதவிடாய் பிரச்சனைகளை தீர்க்கும்.நரம்புகளில் முறுக்கேற்றும்,தொற்று நோயை அண்ட விடாது.

🍑கண்களுக்கு மிகவும் நல்லது.

🍑குழந்தை பெற்ற பெண்கள் இப்பழச்சாற்றை உட்கொண்டால் அதிக பால் சுரப்பு ஏற்படும்.

🍑குடற் புண்களை ஆற்றும். உதடுகளில் ஏற்படும் வரட்சி, வாய் ஓரங்களில் ஏற்படும் வெடிப்புகளை குணப்படுத்த கூடியது.
மலச்சிக்கலுக்கு எளிய மருந்தாக பயன்படுகிறது.

🍑இந்த பழத்தை காலை மூன்று துண்டுகளும் மாலை மூன்று துண்டுகளும் ஐந்து நாட்கள் சாப்பிட்டு வந்தால் மலச்சிக்கலை குணப்டுத்தலாம்.

🍑மலச்சிக்கலால் ஏற்படும் மூல நோயை குணப்படுத்த பதினைந்து நாட்கள் இப்பழத்தை சாப்பிட்டு வந்தால் மூல நோயின் மூலமே அற்று விடுமாம்.

🍑வயிறு சரியில்லாதவர்களுக்கு எந்த வேலையும் செய்யவும் தோன்றாது சாப்பிடவும் தோன்றாது. இப்படிபட்டவர்கள் பப்பாளி பழம் சாப்பிட்டு அன்று முழுவதும் எந்த உணவையும் தொடாமல் இருந்தால். வயிறு சரியாகிவிடும்

🍑இப்பழத்தை தினமும் தொடர்ந்து 40 நாட்கள் வரை உணவு உண்ட பின் சாப்பிட்டு வர நரம்புகள் பலம் பெறும். இரத்தம் விருத்தியாகும் மற்றும் உடல் பளபளக்கும்.

🍑இந்த மலிவான பழத்தில் இவ்வளவு சத்துக்கள் உள்ளது. இதை நம் அன்றாட வாழ்வில் அடிக்கடி சேர்த்துக் கொண்டால் ஆரோக்கியத்துடன் வாழலாம்....!

*இணையப்பகிர்வு*
[1/8, 14:59] Am Yoga: 🍀🌹🍀🌹🍀


பித்தப்பை கல் நீங்க !!!

கொழுப்பு அதிகம் உள்ள உணவு உண்பதால் பித்தப்பையில் கல் உருவாகிறது. இதன் அறிகுறி வலது நெஞ்சில் வலி , நேர் பின்னே முதுகில் வலி, வலது தோளிலிரிந்து உள்ளங்கை வரை வலி பரவும். இதன் அறிகுறி தென்பட்டால் எலுமிச்சை சாரை ஒரு கப் நீரில் பிழிந்து ஒரு மணிநேரத்திற்கு ஒரு முறை அருந்தவும்.

#ஒரு கப் தண்ணீரை கொதிக்க விட்டு கொதி வந்தவுடன் நெருப்பை அணைத்து , இதில் அரை டீஸ்பூன் கீழாநெல்லி கீரை பொடியை சேர்த்து கலக்கவும். பத்து நிமிடம் கழித்து நீர் ஆறியவுடன் வடிகட்டி அருந்தவும். ஒரு நாளைக்கு ஒருமுறை குடித்தால் போதும். இதை ஒரு வாரம் குடிக்கவும். கீழாநெல்லிக் கீரை கல்லை கரைக்கும் தன்மை கொண்டது. இது பித்தப்பைக் கல், கிட்னியில் கல், கல்லீரலில் கல் அனைத்தையும் கரைக்க வல்லது. அறுவை சிகிச்சை மூலம் பித்தபையை அகற்றினால் பிற்காலங்களில் அஜீரனக் கோளறு, குடற்புண் ஏற்படும் வாய்ப்பு உள்ளது.

#இந்த வகை நோயினால் பாதிக்க பட்டவர்கள் நெருஞ்சில் இலையை பொடிசெய்து காலையில் இரண்டு ஸ்பூன் எடுத்து தண்ணீரில் கலந்து குடிக்க வேண்டும். அப்படி குடித்து வந்தால் ஆறுநாட்களில் இந்த நோயை குணப்படுத்தலாம்.!

*இணையப்பகிர்வு*

Saturday, January 7, 2017

சித்த குழுமத்தில் உள்ள அனைவருக்கும் ஏக இறைவனின் சாந்தியும் சமாதானமும்  என்றென்றும் நின்று நிளவட்டுமாக...

சித்த மருத்துவத்தில் ஓரு கேள்வி?
எனது மாமன் மகனுக்கு வயது 8 அவனுக்கு 10 நாள் முன்பு காய்ச்சல்இ ருந்தது காய்ச்சல் குறையவில்லை பிறகு ரத்தம் சோதித்ததில் மஞ்சள் காமளை என்று மருத்துவர்கள் கூரியுள்ளார்கள் குழந்தை வாந்தி எடுக்கிறான்
எதுவும் சாப்பிடவில்லை நடக்கவும் முடியவில்லை இதற்கு நம் மருத்வத்தில் என்ன செய்யலாம்?

நெல்லிக்காய்  தேனுறால் வேளைக்கு இரண்டு தேக்கரண்டி இரண்டு வேளை உணவிற்கு முன்
காலை,மாலை கொடுத்து வருவதோடு உணவிற்கு பின் இரண்டு  கொத்து கீழாநெல்லி இலையை பிச்சிப்போட்டு மண்பானையில் இரண்டு டம்ளர் நீர்விட்டு காய்ச்சி ஒரு டம்ளராக சுண்டவைத்து வடிகட்டி இருவேளையாக கொடுங்கள் உணவாக உப்பில்லா கைக்குத்தல் அரிசிக்கஞ்சி, சாத்துக்குடி, ஆப்பிள், கருப்பு விதையுள்ள திராட்சை மட்டுமே கொடுங்கள்.! உப்பு,புளி,காரம், எண்ணைய் பலகாரம், அசைவ உணவுகள்,இரசாயண உணவுகள் விலக்கம்.!
இது 5 முதல் 12 வயதுள்ள சிறுவருக்கு பெரியவர்கள் இதே முறையை இரண்டு மடங்காக கூட்டிக்கொள்ளலாம்.!
கீழநெல்லியை  இடித்து கசாயமாக்கியும் கொடுக்கலாம்.!
கீழநெல்லி சூரணத்தையும் கடையில் வாங்கி கொதிக்க வைத்து வடிகட்டி கொடுக்கலாம்.!
நாம் கூறுவது ஆரம்ப நிலை மஞ்சள் காமாளைக்கு.!  நீர் வெளுத்து கண் ஒளிபெறும் வரை இம்முறையை பயன்படுத்துக.!
நலம் பெருகட்டும் …

*amyogatrust.blogspot.in

Friday, January 6, 2017

கொள்ளு - பிஸ்தா பருப்புகளின்தன்மைகள்

[1/6, 20:16] Am Yoga: கொள்ளுப் பருப்பை ஊற வைத்து,அந்த நீரை அருந்தினால் உடலில் உள்ள கெட்ட நீர் வெளியேறிவிடும்.
அதேபோல் கொழுப்புத் தன்மை எனப்படும் ஊளைச் சதையை குறைக்கும் சக்தியும் கொள்ளுப் பருப்புக்கு உண்டு.
மேலும் இதில் அதிகளவு மாவுச் சத்து உள்ளது.கொள்ளுப் பருப்பை ஊற வைத்தும் சாப்பிடலாம் வறுத்தும் சாப்பிடலாம்.
கொள்ளை நீரிலிட்டு கொதிக்க வைத்து அந்நீரை அருந்த ஜலதோஷம் குணமாகும். உடல் உறுப்புக்களைப் பலப்படுத்தும்.
வயிற்றுப்போக்கு,வயிற்றுப்பொருமல்,கண்ணோய்கள் போன்றவற்றையும் கொள்ளு நீர் குணப்படுத்தும்.
வெள்ளைப் போக்கைக் கட்டுப்படுத்துவதுடன் மாதாந்திர ஒழுக்கை சரிப்படுத்தும்.பிரசவ அழுக்கை வெளியேற்றும்.
கொள்ளும் அரிசியும் கலந்து செய்யப்பட்ட கஞ்சி பசியைத் தூண்டுவதுடன் தாதுவைப் பலப்படுத்தும்.
1)கொள்ளில் அதிகளவு அயர்ன் மற்ற பருப்புகளை விட அதிகமாக‌ உள்ளது.இதனால் மாதவிடாய் பிரச்சனைகளுக்கு மிகவும் நல்லது.
2)இது பல வகையான நோய்களை உடலில் குணப்படுத்துகிறது.
3)இது கொஞ்சம் உடலுக்கு சூடு ஏற்படுத்தும் என்பது உண்மை.
4)இரவு முழுவதும் ஊறவைத்து கொஞ்சம் தண்ணீர் அதிகமாக சேர்த்து ஊறவைத்து காலையில் அந்த தண்ணீரை மட்டும் எடுத்து அப்படியே வெறும் வயிற்றில் 1 அல்லது 1 1/2 கிளாஸ் குடிங்க.
5)அந்த தண்ணீரிலேயே அந்த கொள்ளை போட்டு நன்றாக அரைத்து பேஸ்ட் செய்து,துவையல் மாதிரியும் சாப்பிடலாம்.
6)ஊறவைக்கும் பொழுது ஒரு டீஸ்பூன் சீரகமும் சேர்த்து ஊறவைத்து அந்த நீரை வடித்து லேசாக காய்ச்சி வெறும் வயிற்றில் குடிக்கலாம்.
7)ஊறவைத்த கொள்ளை எப்படி வேண்டுமானாலும் சமைத்து சாப்பிடலாம்.மிளகு,சீரகம் சேர்த்த ரசம் மிகவும் நல்லது.
8)காலையில் வெறும் வயிற்றில் ஊறவைத்த நீரை லேசாக சூடு செய்து குடித்தல் மற்ற வழிகளை விட உடல் இளைக்க அதிகம் உதவும்.
9)உடலுக்கு சூடு ஏற்படுத்தும் என்பதால்,முதன் முதலில் கொஞ்சமாக சாப்பிட்டு பார்த்துவிட்டு பிறகு வாரம் ஒரு முறையோ அல்லது உங்கள் வசதிக்கேற்ற மாதிரி தொடரலாம்.
10)என்னதான் இதை சாப்பிட்டாலும் கொஞ்சமாக உடற்பயிற்சியும் தேவை என்பது…எனது உணர்வு பூர்வமான கருத்து.
குழந்தைகளுக்கு சளி பிடித்து இருந்தால் கொள்ளு சூப் வைத்து குடுத்துப்பாருங்கள். சளி காணாமல் போயிவிடும் என்கிறார்கள்.அப்படி ஒரு அருமையான மருத்துவ குணம் இந்த கொள்ளுக்கு உண்டு.உங்கள் வீட்டில் உள்ள குழந்தைகள் முதல் வயதானவர்கள் வரை அனைவரும் அருந்தலாமாம்.குளிர்காலத்தில் தான் அதிகம் சளி பிடிக்கும் அந்த காலங்களில் இந்த சூப் குடித்தால் சளி பிடிக்காதாம்.
சாப்பாட்டில் அடிக்கடி கொள்ளு சேர்த்துக் கொள்வது உடல் எடையை குறைக்கும்.
அதை விட ராத்திரி  ஒரு ஸ்பூன் கொள்ளு போதும் 1 கிளாஸ் தண்ணீருக்கு. கொள்ளு எடுத்து தண்ணீரில் ஊற வைத்து காலையில் எழுந்தவுடன் அதை சாப்பிட்டு விடுங்கள்.இது நிச்சயம் எடையை குறைக்கும் என்கிறார்கள்.
கொள்ளை ஆட்டி பால் எடுத்து(தண்ணீர்க்குப் பதில்)அதில் சூப் வைத்தால் இன்னும் சுவையாக இருக்கும்.
கொள்ளை அரைத்து பொடி செய்து வைத்துக்கொண்டால் ரசம் வைக்கும் போது பயன்படுத்தலாம்.
(நாம் எப்போதும் வைக்கும் ரசத்தில் ஒரு ஸ்பூன் கொள்ளு பொடியை போட்டால் அருமையாக இருக்கும்)இ‌ப்படி செ‌ய்ய முடியாதவ‌ர்க‌ள் கொ‌ள்ளு ரச‌ம்,கொ‌ள்ளு துவைய‌ல்,கொ‌ள்ளு குழ‌ம்பு ஆ‌கியவை வை‌த்து அ‌வ்வ‌ப்போது உ‌ண்டு வ‌ந்தாலு‌ம் உட‌ல் எடை குறையு‌ம்.
பொடியாக்கி வைத்துக்கொள்ள.
துவரம் பருப்பு,2 கப், கொள்ளு 1/2 கப், இரண்டையும் தனித்தனியாக எண்ணெய் விடாத வெறும் வாணலியில் சிவக்க வறுத்துக் கொள்ளவும்.காய்ந்த மிளகாய்,மிளகு,சீரகம்,நசுக்கிய பூண்டையும் தனித்தனியாக நன்கு வறுத்துக் கொள்ளவும்.நன்கு ஆறியதும் வறுத்த பொருள்களுடன் பெருங்காயம்,உப்பு சேர்த்து மிக்ஸியில் கரகரப்பாகப் பொடித்து,காற்றுப் புகாத பாத்திரத்துள் எடுத்துவைக்கவும்.
(பெருங்காயம் கட்டிக் காயமாக இருந்தால் முதலிலேயே சிறிது நெய்யில் பொரித்துக் கொள்ளவும்.)
கொள்ளு கஞ்சி
கொள்ளு மிகவும் சத்தானதும், மருத்துவக்குணம் கொண்டதாகும். வாரம் ஒருமுறை கொள்ளை உணவில் சேர்த்துக் கொள்வது மிகவும் நல்லது. கொள்ளு உடலில் உள்ள அதிகப்படியான கொழுப்பை கரைக் கூடியது. எல்லா வயதினரும் இக்கொள்ளை உணவில் சேர்த்துக் கொள்ளலாம்.!

*இணையப்பகிர்வு*
[1/6, 20:19] Am Yoga: *பலம்தரும்*
*பிஸ்தா பருப்பு !*

இளமையும், ஆரோக்கியமும் இருக்கும் வரையே நம்மால் புத்துணர்ச்சியாக  இருக்க முடிகிறது. அதே நேரம் முதுமையின் ஆரம்பக் கட்டத்தை நெருங்கும் பொழுதும்,
நோய்வாய் படும்பொழுதும் புத்துணர்ச்சி குறைய ஆரம்பிக்கிறது.

இளமைக்காலத்தில் கண்ணும் கருத்துமாய் பாதுகாத்து வந்த உடலானது முதுமையை நெருங்கும் பொழுது செல்களின் பல்முறை பெருக்கம் குறைந்து, செல் அழிவை சந்திக்க நேரிடுகிறது.
இதனால் தோல் சுருங்குதல், சதை வற்றுதல், ஐம்பொறிகளின் பலன் குன்றுதல், முதுமைகால நோய்களின் ஆதிக்கம், நோய் எதிர்ப்பு சக்தி குறைவு போன்ற பல தொல்லைகளை சந்திக்க நேரிடுகிறது. அதுபோல் பல வகையான நோய்களால் உடல் பாதிக்கப்படும் பொழுது செல்களின் ஆற்றல் குறைந்து ஒருவித பலஹீனம் ஏற்படுகிறது. இந்த பலஹீனத்தினாலும் புத்துணர்ச்சி மறைந்து ஒருவிதமான சோர்வு நம்மை ஆட்கொள்கிறது.

உடலுக்கு புத்துணர்ச்சியையும், சுறுசுறுப்பையும் உண்டாக்குவதில் ஹார்மோன்கள் பெரும் பங்கை வகிக்கின்றன. இந்த ஹார்மோன்களில் சுரக்கும் நாளமில்லா சுரப்பிகள் ஆயுட்காலத்தை நீடிக்கச் செய்யும் அத்தியாவசிய உறுப்புகளாக கருதப்படுகின்றன. இந்த உறுப்புகள் தங்கள் சுரப்பை அதிகப்படுத்தும் பொழுதும், குறைக்கும் பொழுதும் உடலில் பலவித குறைபாடுகள் தோன்றுகின்றன. இந்த நாளமில்லா சுரப்பிகளின் செயல்பாடு மருத்துவ உலகிற்கு சவாலாகவும், பலவித ஆச்சர்யங்களை ஏற்படுத்துவதாகவும் உள்ளது.
நமது உடலின் உறுப்புகள் செயலிழந்தால் அவற்றை மாற்றி பிறரின் உறுப்புகளை அறுவை சிகிச்சையின் மூலம் பொருத்துவது போல் நாளமில்லா சுரப்பிகளை மாற்றம் செய்யும்படியான மருத்துவ விஞ்ஞான வளர்ச்சி இன்னும் ஏற்படவில்லை என்பதே உண்மை.

ஹார்மோன்களின் செயல்பாடானது செல் வளர்ச்சியை சீராக்கவும், செல் முதிர்ச்சியை கட்டுப்படுத்தவும், செல் அழிவை தடுக்கவும் பயன்படுவதாக கண்டறியப்பட்டுள்ளது. அதிலும் குறிப்பாக இனப்பெருக்க உறுப்புகளை கட்டுப்படுத்தும் ஹார்மோன்கள் ஒரு மனிதனை நாள் முழுவதும் புத்துணர்ச்சியுடன் வைத்திருப்பதாக ஆய்வுகள் தெரிவிக்கின்றன.
ஆண்களின் டெஸ்டோஸ்டீரோன் மற்றும் பெண்களின் ஈஸ்ட்ரோஜன் இனப்பெருக்க ஹார்மோன்கள் முதுமையை கட்டுப்படுத்துகின்றன.

டெஸ்டோஸ்டீரோன்கள் குறைபாட்டால் ஆண்களுக்கு மலட்டுத்தன்மையும், அலித்தன்மையும், தோல் சுருக்கம், தோல் வறட்சி மற்றும் ஒருவித பலஹீனமும் உண்டாகின்றது.

அதே போல் ஈஸ்ட்ரோஜன் குறைபாட்டால் பெண்களுக்கு விரைவில் மெனோபாஸ் ஏற்படுகிறது. ஆண்களுக்கு வளர்வது போன்ற ரோமங்களும், சதை தொங்குதல், முடி உதிர்தல் போன்ற முதுமையின் குணங்களும் தோன்றுகின்றன. இந்த ஹார்மோன்களை சுரக்கக்கூடிய இனப்பெருக்கம் சார்ந்த நாளமில்லா சுரப்பிகளும், இவற்றை கட்டுப்படுத்தும் பிட்டுயூட்டரி என்னும் நாளமில்லா சுரப்பியும் தங்கள் பணியில் தொய்வடைவதால் விரைவில் முதுமை ஏற்படுவதுடன் பாலுறவில் ஆர்வக்குறைவும் தோன்றுகிறது.

தாம்பத்ய உறவில் மிதமாக ஈடுபடுபவர்களுக்கு இதயக்கோளாறு, இரத்தக்கொதிப்பு மற்றும் அதிக இரத்த உறைவு நோய்கள் ஏற்படும் வாய்ப்பு குறைவாக உள்ளதாக சமூக வல்லுனர்கள் தெரிவிக்கின்றனர். மேலும் பாலுறவில் ஈடுபட வாய்ப்பில்லாத மற்றும் பாலுறவு துணை இல்லாத ஆண்களும், பெண்களும் விரைவில் மனநோய்க்கு ஆளாகின்றனர் என்பது அனைவரும் அறிந்த உண்மையே.

ஆண் மற்றும் பெண்களுக்கு ஏற்படும் இனப்பெருக்க ஹார்மோன்களின் குறைபாட்டை நீக்கி, பாலுறவில் ஈடுபடுவதற்கு ஏற்ற உடற்தகுதியையும், மனப்புத்துணர்ச்சியையும் தரும் அற்புத மூலிகை தான் பிஸ்தா.

பிஸ்டேசியா வீரா என்ற தாவரவியல் பெயர் கொண்ட அனகார்டியேசியே என்ற குடும்பத்தைச் சார்ந்த இந்த சிறுமரங்களின் உலர்ந்த பழ பருப்புகளே பிஸ்தாபருப்பு என்று அழைக்கப்படுகின்றன.

பிஸ்தா பருப்பில் டெரிபின்தினேட், இனிப்புச் சுவையுடைய நறுமண எண்ணெய், காலோடானிக் அமிலம் ஆகியன காணப்படுகின்றன. இவை நரம்பு மணடலத்தை தூண்டி, ஹார்மோன்களின் சுரப்பை அதிகப்படுத்தி, புத்துணர்ச்சியை உண்டாக்குகின்றன.

பிஸ்தா பருப்பை இளவறுப்பாக வறுத்து, ஒன்றிரண்டாக இடித்து, கற்கண்டு சேர்த்த பாலுடன் கலந்து தினமும் 1 முறை சாப்பிட தேகம் ஆரோக்கியமடைவதுடன் பாலுறுப்புகள் வலுவடைகின்றன.

பிஸ்தா பருப்பை நெய்விட்டு வறுத்து, ஒன்று அல்லது இரண்டு தினமும் சாப்பிட செரிமான சக்தி அதிகப்படுவதுடன் சுறுசுறுப்பு உண்டாகும்.

பிரசவித்த பெண்கள் பிஸ்தா பருப்பை பாலுடன் வேகவைத்தோ அல்லது நெய்யில் பொரித்தோ சாப்பிட தாய்ப்பால் நன்கு சுரக்கும்.

ஆண், பெண் இருபாலரும் பிஸ்தா பருப்பை சூடான பாலில் ஊறவைத்து தினமும் மாலையில் சாப்பிட போக சக்தி அதிகரிக்கும்.!

*இணையப்பகிர்வு*