Thursday, January 5, 2017

மருத்துவக் குறிப்புகள் 04/01/17

[1/5, 16:52] Am Yoga: *00சளி மற்றும் இருமலுக்கான பாட்டி வைத்தியங்கள்*

*தற்போதுள்ள மார்கழி பனியால் ஏராளமானோர் இருமல், சளி போன்றவற்றால் கடுமையாக அவஸ்தைப்படுவார்கள். நீங்களும் இருமல், சளியால் அவஸ்தைப்படுபவராயின், அதற்கு கண்ட கண்ட மாத்திரைகளை எடுக்காமல், இயற்கை வழிகளின் மூலம் சரிசெய்ய முயலுங்கள்.*

*அதிலும் நம் பாட்டிமார்கள் பின்பற்றிய வைத்தியங்களைப் பின்பற்றினால், இன்னும் சிறப்பான பலன் கிடைக்கும். இங்கு சளி, இருமலுக்கான சில பாட்டி வைத்தியங்கள் கொடுக்கப்பட்டுள்ளன. அதைப் படித்து பின்பற்றி, சளி, இருமலில் இருந்து விடுபடுங்கள்.*

*ஆரஞ்சு ஜூஸில் தேன் மற்றும் ஒரு சிட்டிகை உப்பு சேர்த்து கலந்து குடித்தால், சளி, இருமல், தொண்டை வலி போன்றவற்றில் இருந்து விடுபடலாம்.*

*கொய்யாப்பழத்தை மிளகுத் தூள் தொட்டு சாப்பிட, நுரையீரலில் உள்ள சளி வெளியேறி, இருமல் பிரச்சனையில் இருந்து தீர்வு கிடைக்கும்.*

*மாட்டுப் பாலை நன்கு கொதிக்க வைத்து, அதில் தேன் கலந்து குடிப்பதன் மூலமும் சளி, இருமல் தொல்லையில் இருந்து விடுபடலாம்.*

*வெங்காயத்தை தீயில் சுட்டு சாப்பிடுவதன் மூலம், இருமல் மற்றும் சளியில் இருந்து விடுதலை கிடைக்கும்.*

*வெற்றிலையை சாறு எடுத்து, தேன் கலந்து குடித்தாலும், இருமலில் இருந்து உடனடி நிவாரணம் கிடைக்கும்.*

*இரவில் படுக்கும் முன் பாலில் மிளகுத் தூள் மற்றும் மஞ்சள் கலந்து குடித்தால், இருமல் வருவதைத் தடுக்கலாம்.*

*கற்பூரவள்ளி இலையை நீரில் போட்டு கொதிக்க வைத்து, அந்நீரைக் குடிப்பதன் மூலமும் விரைவில் சளித் தொல்லை நீங்கும்.!*

*இணையப்பகிர்வு*
[1/5, 18:53] Am Yoga: *தோல் நோய்களை குணமாக்க இயற்கை மருத்துவம்*
🌿🌿🌿🌿🌿🌿🌿🌿🌿🌿🌿


எளிதில், அருகில் கிடைக்க கூடிய மூலிகைகள், வீட்டில் உள்ள உணவுப் பொருட்களை கொண்டு பாதுகாப்பான பக்கவிளைவில்லாத மருத்துவத்தை பார்த்து வருகிறோம். அந்தவகையில், மருதாணி, அருகம்புல், பூவரசு ஆகியவற்றை கொண்டு தோலில் ஏற்படும் பிரச்னைகளுக்கான மருத்துவத்தை பார்க்கலாம்.

*பூவரசு மஞ்சள் நிற பூக்களை உடையது.* பம்பரம் போன்ற உருவம் உடைய காய்களை கொண்டது. ரத்தத்தை  சுத்தப்படுத்த கூடியது. மருதாணி ரத்தத்தை சுத்திகரித்து உடலுக்கு ஆரோக்கியம் தரவல்லது. தோலுக்கு அழகை தருகிறது. நகப்பூச்சாக பயன்படுகிறது. அருகம்புல் ரத்தத்தை சுத்தப்படுத்தும் மூலிகையாக விளங்குகிறது. தோலில் ஏற்படும் அலர்ஜி, அரிப்புக்கான மருந்தாக விளங்குகிறது.

*மருதாணியை* பயன்படுத்தி தோலில் ஏற்படும் அரிப்பை சரிசெய்யும் மருந்து தயாரிக்கலாம். மருதாணியின் துளிர் இலைகள் ஒருகைப்பிடி அளவுக்கு எடுக்கவும். இதில், 2 பல் பூண்டு, 6 மிளகு ஆகியவற்றை லேசாக தட்டிபோடவும். கால் ஸ்பூன் மஞ்சள் பொடி சேர்க்கவும். ஒரு டம்ளர் நீர்விட்டு கொதிக்க வைக்கவும். இதை வடிகட்டி 50 மில்லி அளவுக்கு குடித்துவர ரத்தம் தூய்மை பெறும். தோலில் ஏற்படும் அரிப்பு, தொற்று, சிறுகொப்புளங்கள், படர்தாமரை போன்றவை விலகிப்போகும்.

மருதாணி நுண்கிருமிகள், பூஞ்சை காளான்களை  போக்க கூடியது. நோயை தணிக்கும் தன்மை கொண்டது. நகங்களுக்கு மேல்பற்றாக போடுவதால் நகச்சொத்தை நீங்கும். நகத்துக்கு நல்ல வண்ணம், பாதுகாப்பு, அழகை கொடுக்க கூடியதாகிறது. உடல் குளிர்ச்சி பெறும். தோல்நோய்கள் வராமல் பாதுகாக்கிறது. வெள்ளைப்போக்கு பிரச்னைக்கு மருந்தாகிறது.

*அருகம்புல்லை* பயன்படுத்தி தோலில் ஏற்படும் அரிப்புக்கான மருந்து தயாரிக்கலாம். ஒரு பங்கு அருகம்புல் பொடி, கால் பங்கு மஞ்சள் பொடி சேர்த்து கலந்து பசையாக்கி உடலில் அரிப்பு இருக்கும் இடத்தில் தேய்து குளித்தால் தோலில் ஏற்படும் அரிப்பு குணமாகும். தோல் மென்மை பெறும்.

பல்வேறு மருத்துவ குணங்களை கொண்ட அருகம்புல் நோய் நீக்கியாகிறது. ஒவ்வாமையை போக்குகின்ற உன்னதமான மருந்தாக விளங்குகிறது. காலையில் வெறும் வயிற்றில் அருகம்புல் சாறு குடித்துவர ரத்தம் சுத்தமாகும். சர்க்கரை நோயை தணிக்க கூடியதாக உள்ளது. இதில் உள்ள புரதச்சத்து உடலுக்கு பலம் தரும்.
பூவரசம் இலையை பயன்படுத்தில் தோல் அரிப்பு, தொற்றுக்கான மேல்பூச்சு மருந்து தயாரிக்கலாம். ஒரு பாத்திரத்தில் தேங்காய் எண்ணெய் எடுக்கவும். இதனுடன் பூவரசம் இலை பசையை சேர்த்து தைலமாக காய்ச்சவும். இதை ஆறவைத்து மேல்பூச்சாக பயன்படுத்தும்போது தோலில் ஏற்படும் அரிப்பு, தேமல், படை, சொரி, சிரங்கு, வெண்புள்ளிகள் சரியாகும்.

*பூவரசம்* மரத்தின் பழுப்பு இலைகளை எடுத்து தீயில் இட்டு சாம்பலாக்கி தேங்காய் எண்ணெய் சேர்த்து கலந்து தோலில் அரிப்பு இருக்கும் இடத்தில் பூசினால் பிரச்னை சரியாகும். பூவரசு அற்புதமான மருந்தாக விளங்குகிறது. பூஞ்சை காளான்கள், நுண்கிருமிகளை அழிக்க கூடியது. ஒவ்வாமையை போக்கவல்லது. பூவரசம் பட்டையை தேனீராக்கி குடிப்பதால் ரத்தம் சுத்தமாகும். வெண்குஷ்டம் விலகிப்போகும்.

முகத்தில் உண்டாகும் எண்ணெய் பசையை போக்கி முகப்பரு வராமல் தடுப்பதற்கான மருத்துவம் குறித்து பார்க்கலாம். வியர்வை நாளங்கள் அடைபடுவதால் முகப்பரு ஏற்படுகிறது. எண்ணெய் சுரப்பியில் ஏற்படும் வீக்கம் முகப்பருக்களுக்கு காரணமாகிறது. திருநீற்று பச்சை இலையை நசுக்கி, இதனுடன் சந்தன விழுது சேர்த்து கலந்து முகத்தில் சிறிது நேரம் பூசிவைத்து கழுவினால் முகப்பரு மறையும். மீண்டும் முகப்பரு வராது. முகம் பொலிவு பெறும்.


🌿 *இணையப்பகிர்வு*

புகைபிடிக்கும் பழக்கம் மறக்க....

*கிராம்பு 1 எண்ணிக்கை*
*நெல்லிவற்றல் 2* *எண்ணிக்கை*
*வாயில் போட்டு* *சுவைத்துக்கொண்டு வர புகை பழக்கம்* *நீங்கும்.!*

*இணையப்பகிர்வு*

உடல் பருமனாக இயற்கை வழி

*இரவில் வெள்ளரிக்காய் 150 கிராம்*

*பேரிச்சம்பழம் 50 கிராம்*

*இரண்டையும் சிறிதுசிறிதாக வெட்டி ஒரு பாத்திரத்தில்* *வைத்துக் கொண்டு* *தினமும் காலையில்*
*வெறும் வயிற்றில் தொடர்ந்து 45 நாட்கள் உண்டுவந்தால் உடல் எடைகூடும்.!*
*இதற்கு  காரணம் உடல் எரிசக்தியை சீரான அளவில் பராமரிக்க வெள்ளரிக்காயும் பேரிச்சம்பழமும் உதவுவதால் எடையை கூட்டும் பேரீச்சை உஷ்ணம், வெள்ளரிக்காய் குளிர்ச்சி.  <இதுவே 150 பேரீச்சம் பழமும் 50 கிராம் வெள்ளரிக்காயும் சாப்பிட்டால் எடைகுறையும்.>அதோடு சர்வாங்காசனம், ஹலாசனம், மட்ச்யாசனம் இந்த மூன்று ஆசனங்களையும் ஒவ்வென்றையும் 5 நிமிடம் செய்துவந்தால்* *உடலுக்கு விரிந்த தோற்றம் கிடைக்கும்.!*
*நம் உடல் சீராக இயங்கவும் நிறைவான தோற்றம் கிடைக்கவும் நாம்  தினமும் செய்யும் பணி,*
*உடற்பயிற்சி, சிந்தனை போன்றவற்றுக்கு தேவையான எரிசக்தியை விட குறைந்தது 500 கலோரிகள் வரை அதிக அளவு உணவு எடுத்துக்கொள்ள வேண்டும். அதாவது உதாரணமாக ஒரு* *தட்டு சோற்றில் 500 எரிசக்தி கிடைத்தது, நான்கு சப்பாத்தியில் 500 எரிசக்தி கிடைத்தது,*
*நான்கு வாழைப்பழத்தில் 500 எரிசக்தி கிடைத்தது என்று வைத்துக்கொள்வோம் இன்றைய நமது உடல், மனம் சார்ந்த அனைத்து பணிகளுக்கும்* *சேர்த்து 2000 கலோரி செலவாயிற்று என்றால் உடல் மெலியும். அதுவே* *1000 கலோரி மட்டுமே உழைப்புக்கு செலவானது* *என்றால் உடல் கொஞ்சம் வனப்பாக வளரும். எப்பொழுதாவது  சாப்பிட உணவு கிடைக்காமல் இருந்தால் ஏற்கனவே உடலில்  உபரியாக சேர்ந்துவந்த கலோரிகள் சக்தியாக மாறுவதோடு எடையும் குறையும்.!* *உணவைப் போன்றே நீரும் உடல் எடையை கூட்ட ஒரு முக்கியக்காரணமாக இருக்கிறது.!*
*தினமும்  சராசரியாக ஒருவருக்கு 2500 கலோரிகள் வேண்டும்.* *சாப்பிடுவது மற்றும் பருகுவது மூலம் உடலுக்கு நாம் 2000 கலோரிகளை மட்டுமே கொடுத்து வந்தால் நிச்சயமாக எடை குறையும்.  3000 கலோரிகளை* *எடுத்தால்  எடை கூடும். 2500 எடுத்தால் எடை அப்படியே இருக்கும்.! எனினும் ஆளுக்கேற்ப உடல் சக்தியை கிரகிக்கும் திறனில் பல மாறுபாடுகள் இருப்பதாலும், மரபு ரீதியாக சிலருக்கு எரிசக்தியை* *செலவழிப்பதில் சில மாற்றங்கள் இருப்பதாலும்*
*சிறிய வித்தியாசங்கள் இருக்கவே செய்யும்.!*
*ஆகவே உடல் எடையை கூட்டவோ,குறைக்கவோ விரும்புபவர்கள்* *மேற்கண்ட வழிமுறைகளை பின்பற்றுவதோடு தினமும் பசிக்கும் போதெல்லாம் அதிகமாக  உண்பது, சரியான உறக்கம்,சீரான மனநிலையையும் கைகொண்டால்*
*நிச்சயம் எடை கூடி வனப்பாக காட்சியளிப்பார்கள்.!*
🍁இயற்கை மருத்துவ தகவல்களுக்கு💐
*amyogatrust.blogspot.in*

🍀100 % இயற்கை
மூலிகை தயாரிப்புகளுக்கு

*AUM HERBALS*
MOBILE & WHATSAPP
*9629368389*

Wednesday, January 4, 2017

கீரைகளும் அதன் முக்கிய பயன்களும்

அகத்திக்கீரை- ரத்தத்தை சுத்தமாக்கி பித்தத்தை தெளியவைக்கும்.

காசினிக்கீரை- சிறுநீரகத்தை நன்கு செயல்பட வைக்கும். உடல் வெப்பத்தை தணிக்கும்.

சிறுபசலைக்கீரை- சருமநோய்களைத் தீர்க்கும் பால்வினை நோயை குணமாக்கும்.

பசலைக்கீரை- தசைகளை பலமடையச் செய்யும்.

கொடிபசலைக்கீரை- வெள்ளை விலக்கும் நீர் கடுப்பை நீக்கும்.

மஞ்சள் கரிசலை- கல்லீரலை பலமாக்கும், காமாலையை விலக்கும்.

குப்பைகீரை- பசியைத்தூண்டும்.வீக்கம் வத்தவைக்கும்.

அரைக்கீரை- ஆண்மையை பெருக்கும்.

புளியங்கீரை- சோகையை விலக்கும், கண்நோய் சரியாக்கும்.

பிண்ணாருக்குகீரை- வெட்டையை, நீர்கடுப்பை நீக்கும்.

பரட்டைக்கீரை- பித்தம், கபம் போன்ற நோய்களை விலக்கும்.

பொன்னாங்கன்னி கீரை- உடல் அழகையும், கண்ஒளியையும் அதிகரிக்கும்.

சுக்கா கீரை- ரத்த அழுத்தத்தை சீர்செய்யும், சிரங்கு மூலத்தை போக்கும்.

வெள்ளை கரிசலைக்கீரை- ரத்தசோகையை நீக்கும்.

முருங்கைக்கீரை- நீரிழிவை நீக்கும், கண்கள், உடல் பலம்பெறும்.

வல்லாரை கீரை- மூளைக்கு பலம் தரும்.

முடக்கத்தான்கீரை- கை, கால் முடக்கம் நீக்கும் வாயு விலகும்.

புண்ணக்கீரை- சிரங்கும், சீதளமும் விலக்கும்.

புதினாக்கீரை- ரத்தத்தை சுத்தம் செய்யும், அஜீரணத்தை போக்கும்.

நஞ்சுமுண்டான் கீரை- விஷம் முறிக்கும்.

தும்பைகீரை- அசதி, சோம்பல் நீக்கும்.

கல்யாண முரங்கைகீரை- சளி, இருமலை துளைத்தெரியும்.

முள்ளங்கிகீரை- நீரடைப்பு நீக்கும்.

பருப்புகீரை- பித்தம் விலக்கும், உடல் சூட்டை தணிக்கும்.

புளிச்சகீரை- கல்லீரலை பலமாக்கும், மாலைக்கண் நோயை விலக்கும், ஆண்மை பலம் தரும்.

மணலிக்கீரை- வாதத்தை விலக்கும், கபத்தை கரைக்கும்.

மணத்தக்காளி கீரை- வாய் மற்றும் வயிற்றுப்புண் குணமாக்கும், தேமல் போக்கும்.

முளைக்கீரை- பசியை ஏற்படுத்தும், நரம்பு பலமடையும்.

சக்கரவர்த்தி கீரை- தாது விருத்தியாகும்.

வெந்தயக்கீரை- மலச்சிக்கலை நீக்கும், மண்ணீரல், கல்லீரலை பலமாக்கும். வாத, காச நோய்களை விலக்கும்.

தூதுவலை- ஆண்மை தரும். சருமநோயை விலக்கும். சளித்தொல்லை நீக்கும்.

தவசிக்கீரை- இருமலை போக்கும்.

சாணக்கீரை- காயம் ஆற்றும்.

வெள்ளைக்கீரை- தாய்பாலை பெருக்கும்.

விழுதிக்கீரை- பசியைத்தூண்டும்.

கொடிகாசினிகீரை- பித்தம் தணிக்கும்.

துயிளிக்கீரை- வெள்ளை வெட்டை விலக்கும்.

துத்திக்கீரை- வாய், வயிற்றுப்புண் அகற்றும். வெள்ளை மூலம் விலக்கும்.

காரகொட்டிக்கீரை- மூலநோயை போக்கும். சீதபேதியை நிறுத்தும்.

மூக்கு தட்டைகீரை- சளியை அகற்றும்.

நருதாளிகீரை- ஆண்மையைப் பெருக்கும், வாய்ப்புண் அகற்றும்.!

*இணையப்பகிர்வு*

Tuesday, January 3, 2017

கூந்தல் செழிக்க....

தேவையான பொருட்கள்

1. செம்பருத்தி பூ - சாறு 300 மில்லி
2. மரச்செக்கு தேங்காய் எண்ணெய் 300    மில்லி

செய்முறை

1. செம்பருத்தி பூக்களை மிக்ஸியில் சேர்த்து கொஞ்சமாக தண்ணீர் நன்றாக அரைத்து சாறு பிழிந்துவைத்துக்கொள்ளவும்.

2.அதே சம அளவுக்கு தேங்காய் எண்ணெயுடன் சேர்த்து இத்துடன் சிறிதளவு கூட தண்ணீர் சேர்க்காமல்

3.  இவைகளை ஒன்றாக வடச்சட்டியில் சேர்த்து நீர் சத்துசுண்டும் வரை காய்ச்சி வடிகட்டி வைத்துக்கொண்டு இத்தைலத்தை
தினமும் தலைக்கு தேய்த்து வர..
பொடுகு நீங்கும், முடி கொட்டுதல் நின்று தலைமுடி கருமையாகவும், செழிப்பாகவும்
வளரும்.!

*இணையப்பகிர்வு*

Sunday, January 1, 2017

தொப்பை வருவதைத் தடுக்கும் உணவுகள்!

ஆப்பிளில் கரையக்கூடிய நார்ச்சத்து ஏராளமான அளவில் உள்ளது. அதிலும் ஒரு நாளைக்கு 3 ஆப்பிளை சாப்பிட்டு வந்தால், பசி கட்டுப்பட்டு, உடல் எடை நாம் நினைப்பதை விட அதிகமாக குறையும்.!


பீன்ஸில் நார்ச்சத்து அதிகம் இருப்ப தோடு, கிளைசீமிக் இன்டெக்ஸ் அளவும் மிகவும் குறைவு என்பதால், இரத்த சர்க்கரை சீரான அளவில் பராமரிக்கப்படும்.


முட்டைகளில் புரோட்டீன் அதிகம் உள்ளது. இந்த புரோட்டீன் பசியைத் தூண்டும் ஹார்மோனைக் கட்டுப்படுத்தும். ஆகவே தான் காலை உணவின் போது முட்டையை சேர்த்துக் கொண்டால், நாள் முழுவதும் சிறப்பாக செயல்பட முடிகிறது.

பீட்ரூட் கலோரி குறைவான ஆரோக்கியமான உணவுப் பொருள். இதில் நார்ச்சத்து ஏராளமான அளவில் உள்ளதால், பசி கட்டுப்பாட்டுடன் இருப்பதோடு, செரிமான மண்டலத்தின் செயல்பாடும் சீராக இருக்கும்.

காளான்களில் கலோரிகள் குறைவாகவும், பொட்டாசியம் அதிகமாகவும் உள்ளது. மேலும் இதில் அத்தியாவசிய கனிமச்சத்துக்களான செலினியம் மற்றும் நியாசின் அதிகம் உள்ளதால், இது உடலின் மெட்டபாலிச அளவை அதிகரித்து, நீண்ட நேரம் பசியெடுக்காமல் செய்யும்.

எடையைக் குறைக்க மற்றும் உடல் ஆரோக்கியத்தை மேம்படுத்த நினைத்தால், முட்டைக்கோஸை உணவில் சேர்த்துக் கொள்ளுங்கள். இதில் பைட்டோ-நியூட்ரியண்ட்டுகள் மற்றும் நார்ச்சத்து அதிகம் உள்ளதால், நீண்ட நேரம் பசியெடுக்காமல் வைப்பதுடன், தொப்பை வருவதையும் தடுக்கும்.!

*இணையப்பகிர்வு*

ஊமத்தையின் மருத்துவ குணங்கள்

1)வேறுபெயர்கள்-:

ஊமத்தம் உன்மத்தம் எனவும் படும்.இந்தியம் டாட்யூரா, துர்த்தா, கனகா ஆகியவை.


2) தாவரப்பெயர் -: DATURA METEL.


3) தாவரக்குடும்பம் -: SOLANACEAE.


4) வகைகள் -:
 வெள்ளை ஊமத்தை, பொன்னூமத்தை, கருஊமத்தை எனும் வகைப்படும்.


5) வளரும் தன்மை -:

எல்லா வகை நிலங்களும் ஏற்றது.வளர்ச்சியைத் தாங்கி வளரும்.பற்களுள்ள அகன்றஇலைகளையும், வாயகன்ற நீண்ட குழலுமான புனல் வடிவ மவர்களையும் முள்நிறைந்த காயையும் உடைய குறுஞ்செடிகள்.

மலர்கள் வெள்ளை, மஞ்சள்,கருஞ்சிவப்பு ஆகிய நிரங்களில் இருக்கும். இவை விதை மூலம் இனப் பெருக்கம் செய்யப்படுகிறது. நட்ட ஒரு மாதத்தில் பூக்கள் விட ஆரம்பிக்கும்.


6) பயன்தரும் பாகங்கள் -:
செடியின் எல்லாபாகங்களும் மருத்துவ பயனுடையவை.


7) பயன்கள் -:
பொதுவாக நோய்தணிப்பானாகவும், சிறப்பாக இசிவு நோய் தணிப்பானாப்பானகவும் செயற்படும். அறுவை சிகிச்சைக்கும் மகப்பேருக்கு மயக்க மருந்தாகவும் பயன்படுகிறது.


இலையை நல்லெண்ணெயில் வதக்கிக் கட்ட வாதவலி, மூட்டு வீக்கம், வாயுக்கட்டிகள், அண்ட வாயு, தாய்பால் கட்டிக்கொண்டு வலித்தல், நெரிகட்டுதல், ஆகியவை குணமடையும்.


இலைச்சாற்றுடன் சமன் நல்லெண்ணெய் கலந்துகாச்சி, இளஞ்சூட்டில் 2-3 துளி காதில் விடச்சீதளத்தால் வந்த காது வலிதீரும்.


இலையை நீர் விடாது அரைத்து நல்லெண்ணெயில் வதக்கி நாய்கடிப் புண்ணில்கட்ட ஆறும்.மூன்று துளிச் சாறு வெல்லம் கலந்து காலை,மாலை 3 நாள் மட்டும் கொடுக்க நஞ்சு தீரும்.கடும் பத்தியம்- பகலில் தயிர் சோறும் இரவில் பால் சோறும் உப்பில்லாமல் சாப்பிடவும்.


இலைச்சாற்றைச் சமளவு தேங்காய் எண்ணெயில் காச்சி சிறிதளவு மயில் துத்தம் கலந்து வெளிப்பூச்சாகப் பயன்படுத்த ரணம் சதைவளரும் புண்புரைகள், தீரும்.


ஊமத்தைப் பிஞ்சை அவரவர் உமிழ் நீரில் மையாய் அரைத்துத் தடவ புழுவெட்டு தீரும்,புழு இறந்து முடி வளரும்.


இலை, பூ, விதை மூன்றையும் பாலில் பிட்டவியலாய் அவித்து உலர்த்தி, தூள் செய்து (ஒன்றிரண்டாய்) பிடியாய்ச் செய்து புகைக்க ஆஸ்துமா, மூச்சுத்திணரல் உடனே குறையும்.


ஊமத்தை மயக்கத்தை உண்டாக்கும். நஞ்சுத்தன்மையுடையது. இதன் நஞ்சு முறிய தாமரைக் கிழங்கை அரைத்து பாலில் இரு வேழை மூன்று நாள்கொடுக்கலாம். இக்காய் பில்லி, சூன்யம் ஆகியவற்றை அகற்றும், முறிக்கும்.


சித்தம் பிரமை -:

ஊமத்தம் பூவை இரவு தண்ணீரில்போட்டு ஊறவைக்கவும். மறு நாள் காலை தலைக்குத் தேய்த்துக் குளிக்க வைக்கவும். 5-7 நாள் இவ்வாறு குளிக்க வைத்தால் இந்தப் பிரமை உன்மத்தம், பைத்தியம் குணமாகி விடும்.

அனைத்து வகைப் புண்ணுக்கும். - ஊமத்தம் இலைச்சாறு 500 மி,லி.தேங்காய் எண்ணெய்500 மி.லி. கலந்து மயில் துத்தம் 30 கிராம்போட்டு சுண்டக் காச்சி சாறு வடிக்கவும்.இதனை அனைத்து வகையான புண்களுக்கும்மேல் பூச்சாக இட குணமடையும்.மேகப் புண், நீரிழிவுப்புண், ஆராத குழிப்புண், வளர் புண் குணமடையும்.


பேய்குணம் -

:இதன் காய்,விதையும், மருதாணிப் பூவும், உலர்த்திய தூள் புகைக்க பேய் குணம் விலகும்.

காய் :
வாதநோய், கரப்பான், கிரந்தி, சொறி நீக்கும். பித்த மயக்கத்தை உண்டாக்கும்.

பிஞ்சு :
இதன் பிஞ்சை எச்சிலில் அரைத்துத் தடவி வர புழுவெட்டு தீரும்.

ஊமத்தைப் பிஞ்சை அவரவர் உமிழ் நீரில் மையாய் அரைத்துத் தடவ புழுவெட்டு தீரும், புழு இறந்து முடி வளரும்.

விதை :
இதன் விதையை நெய்யில் அரைத்து மூல முளையில் பூசி வந்தால் குணமாகும்.

50 கிராம் அளவு விதையை ஒன்றிரண்டாய் இடித்து சுமார் 400 மிலி அளவு நல்லெண்ணெயில் இட்டு 7 நாட்கள் பொறுத்து அரைத்து, வெயிலில் வைத்து வடிகட்டி வைத்திருந்து, அடிவயிற்றில் தடவி வந்தால் சூதக வயிற்று வலியும், நீர்த்தாரை எரிச்சல் குணமாகும். கன்னம், முகம், காது என அனைத்து பகுதிகளிலும் ஏற்படும் குடைச்சல் நோய்க்கு தடவி வந்தால் குணமாகும்.

வேர் :

விதை மற்றும் வேர் வயிற்றுப் போக்கை தடுக்கிறது. காய்ச்சலைப் போக்கி, கிருமிகளுக்கு எதிராகச் செயல்படுகிறது. தனது நிலையை மறந்தவர்களுக்கு மருந்தாகிறது. தோல் வியாதிகளைப் போக்குகிறது

ஆச்சார்யர் சரகர் இந்த ஊமத்தையை விஷ சிகிச்சையிலும் தோல் வியாதி சிகிச்சையிலும் கூறுகிறார் .  ஆசார்யர் சுஸ்ருதர் முக்கியமாக அலர்க விஷம் என்னும் -நாயகடியால் ஏற்படும் ரேபிஸ் நோயில் கூறுகிறார் . ஹிரித சம்ஹிதையில் மூல நோய்க்கான சிகிச்சையில் கூறுகிறார் .

பயன்பாடுகளில் -
ஜ்வரம், தோல் நோய்கள், புண், அரிப்பு, கிருமி, விஷ ரோகம், நீர் கடுப்பு.

நாய் கடிகளில் (அலர்க்க விஷம் ) – ஊமத்தை , வெள்ளை சாரணை வேர் இரண்டும் சேர்ந்து நாய்கடி விஷத்தை போக்கும்.

கிருமி – ஊமத்தை இலை சாறு சூடேற்றி தேய்க்கும் போது பேன், ஈறு தொல்லை நீங்கும்.

பிடக ஆமாய –

வேனல் கட்டிகளில் – வல்லாரை இலை சாறு+ஊமத்தை வேர் -வேனல் கட்டிகளுக்கு, கட்டிகளை கரைக்க வெளிப் பிரயோகமாக உதவும்.

மருந்து கடைகளில் கிடைக்கும் மருந்துகளில் – கனகாசவம், சூத சேகர ரசம், மகா விஷ கர்ப்ப தைலம், உன்மத்த ரசம்.

ஆஸ்மா குணமாக -கனகாசவம் உதவும்.

அட்ரோபின் என்னும் ஆங்கில மருந்துக்கு இது தாய்- தற்கொலைக்கு விஷம் சாபிட்டவர்களின் உயிர்களை இந்த அட்ரோபின் காப்பாற்றியுள்ளது எனவே -ஆயுர்வேத சித்த மருந்தில் குறிப்பிட்டது போல் விஷ வைத்தியத்தில் உதவுகிறது.

அட்ரோபின் கண்ணின் விழிபார்வையை விரிக்க உதவும். இந்த கண் சொட்டு மருந்து இல்லாமல் கண் விழித்திரையை எந்த கண் மருத்துவரும் பார்க்கமுடியாது


பொன்னூமத்தை மூலிகை மருத்துவம் – ரசவாதமும் -மிருக வசியம்.

சித்தர்கள், முனிவர்கள், ரிஷிகள் போன்றோர் காடுகளிலும், மலைகளிலும், வனங்களிலும் குடில் அமைத்தும், குகைகளிலும் தவம் இயற்றி வாழ்ந்து வரும் காலங்களில் கொடிய மிருகங்கள் மற்றும் விஷ ஜந்துக்களின் இடர்பாடுகளில் இருந்து காத்துக் கொள்ள, கட்டுக்குள் கொண்டு வர பல அதிசய மூலிகைகளையும், சூட்சும மந்திரங்களையும் கையாண்டு வந்துள்ளனர்.

அவைகளில் ஒன்றுதான் “பொன் ஊமத்தை” என்ற மூலிகை ஆகும். இம் மூலிகையைப் பற்றிய அகத்தியர் பெருமான் பாடல்…

காணவே பொன்னி னூமத்தை மூலி
கருவான மூலியடா கந்தர் மூலி
பாணமாம் பச்சையது தழையினாலே
பாருலகில் சொர்ணமதைக் காணலாகும்
தோணவே சாரதனைப் பிழிந்துமல்லோ
தோராமல் ரவிதனிலே காயவைத்து
மாணவே செம்புருக்கி கிராசமீய
மன்னவனே பசுமையடா தங்கந்தானே

தங்கமா மூலியது தழைதானாகும்
சாங்கமுடன் சொர்ணமென்ற பீசமாகும்
சிங்கமதைத் தான்மயக்குந் தழை தானாகும்
புகழான காயாதி இதற்கொவ்வாது
எங்கேனுந் தேடியுழைந் தலைந்திட்டாலும்
என்மகனே விதியாளி காண்பான் தானே

காண்பானே தழையினது மகிமையாலே
காவனத்தில் வசிக்கின்ற மிருகமெல்லாம்
ஆண்பான மதமடங்கி தன்முன்னாக
அப்பனே எதிர் வணங்கி பணியும் பாரு
சாண் பாம்பே யானாலு முந்தனுக்கு
சட்டமுடன் ஏவலுக்கு முன்னாய் நின்று
வீண்பாக முறையாம லடிவணங்கி
வித்தகனே முறைபாடாய் நடக்கும் பாரே

இந்த அதிசய பொன்னூமத்தை மூலிகை கந்தர் முருகனின் மூலிகை ஆகும். இம்மூலிகையால் ரசவாதம் செய்யலாம். இம்மூலிகையை இடித்து பிழிந்து சாறெடுத்து ரவி என்ற வெயிலில் காயவிடவும். பின்பு தாமிரம் என்ற செம்பை உருக்கி இதில் சாய்க்க வேண்டும்.

இந்த செம்பை மீண்டும் உருக்கி சாய்க்க வேண்டும். ஒவ்வொரு முறையும் புதுச்சாறு ஊற்ற வேண்டும். இதுபோல் பதினொரு முறை உருக்கி சாய்க்க பசுமையான தங்கமாகும்.

இம் மூலிகையின் வாசனையால் சிங்கம் மயங்கும், யானை முதல் அனைத்து மிருகங்களும் வசியமாகும். எதிர் வந்தாலும் அடிவணங்கி பணியும். பாம்பு போன்ற ஜந்துக்கள் நம் சொல்லுக்கு கட்டுப்படும்.!

*இணையப்பகிர்வு*