Friday, December 9, 2016

மருத்துவக் குறிப்புகள் - 10/12/2016

[12/9, 14:03] Am Yoga: *கரும்புள்ளி மறைய*

சோற்றுக்கற்றாளை ஜெல்  மற்றும் உருளைக்கிழங்கு சம அளவெடுத்து அரைத்து முகத்தில் பூசி  ஊறவைத்து அரைமணி நேரம் சென்று கழுவிவந்தால் முகப்பரு, கருந்தழும்பு, தேமல்,முகவறட்சி,கண் கருவளையம் மாறும்.!

🌿இயற்கை மருத்துவ தகவல்களுக்கு
*amyogatrust.blogspot.in*
[12/9, 21:48] Am Yoga: இள நரையை இயற்கை முறையில் போக்க சில வழிமுறைகளை காண்போம்.

இப்போதெல்லாம், இளம் வயதிலேயே பலருக்கு நரைமுடி வந்து விடுகிறது. இதற்கு சுற்றுச்சுழல், உணவுப் பழக்கவழக்கங்கள், மனஅழுத்தம், பரம்பரை போன்றவை முக்கிய காரணங்களாக இருந்தாலும், முடியை சரியாக பராமரிக்காததும் ஒரு காரணமாக  கருதப்படுகிறது. மேலும் பலரும் இள நரையை மறைக்க பல்வேறு ஹேர் டைகளை வாங்கி பயன்படுத்துகின்றனர்.  ஆனால் அதனால் வெள்ளை முடி தற்காலிகமாக மறையுமே தவிர,  நிரந்தரமாக மறையாது.

அதுமட்டுமின்றி, இள நரையை மறைக்க கண்ட கண்ட பொருட்களை வாங்கி தடவுவதால், பல்வேறு அலர்ஜிகளும் ஏற்படுகின்றன. இருக்கும் முடியும் கொட்டி விடும்.  எனவே இவற்றையெல்லாம் தவிர்க்க, இயற்கை முறையில் இள நரையை எப்படி கருமையாக்குவது என்பது பற்றி தெரிந்து கொள்வோம்.

தேங்காய் எண்ணெய் :  தேங்காய் எண்ணெயில் சிறிது எலுமிச்சைசாறு சேர்த்து கலந்து, அதனை தலை
முடியில் தடவி நன்கு மசாஜ் செய்து, ஊற வைத்து அலசவேண்டும். இதனால் நரைமுடி மறைய
ஆரம்பிக்கும். ஹென்னா என்னும் மருதாணி பொடியைக் கொண்டு முடியைப் பராமரித்தால், முடி அதன் இயற்கை நிறத்தைப் பெறுவதோடு பட்டுப் போன்று மென்மையாகவும் இருக்கும்.

நெல்லிக்காய்:  நெல்லிக்காயை வெட்டி, வெயிலில் உலர்த்தி, பின் அதனை எண்ணெயில் போட்டு, அந்த
எண்ணெயை சூடேற்றி, ஸ்கால்ப்பில் படும்படி நன்கு மசாஜ் செய்து வந்தால்,வெள்ளை முடி மறைவதை
நீங்கள் காண முடியும்.

கறிவேப்பிலை:  கறிவேப்பிலை மோர் சேர்த்து அரைத்து பேஸ்ட் செய்து, அததனை தலையில் தடவி 1/2 மணி நேரம் ஊற வத்து, பின் குளிக்க வேண்டும். இப்படி வாரம் இரண்டு முறை செய்து வந்தால், முடியில் நல்ல மாற்றத்தைக் காண முடியும்.

வெந்தயம்: வெந்தயத்தை அரைத்து பேஸ்ட் செய்து, தலைக்கு தடவி ஊற வைத்தோ அல்லது அதனை
நீரில் இரவில் படுக்கும் போது ஊற வைத்து, மறுநாள் காலையில் அந்நீரைக் கொண்டு கூந்தலை அலசியோ வந்தால், நரை முடி மறையும்.

நெய்:  நெய் கூட இள நரையை மறைய வைக்கும். அதற்கு நெய்யை ஸ்கால்ப்பில் படும் படிநன்கு மசாஜ் செய்து, அலச வேண்டும். இந்த முறையால் பலன் சற்று தாமதமாக கிடைக்கும். இருப்பினும்  இந்த முறையால் நிரந்தரமாக வெள்ளை முடி வருவதைத் தடுக்கமுடியும்.

மிளகு:  தயிரில் மிளகுத் தூள் சேர்த்து நன்கு கலந்து, அதனை தலை முடிக்கு தடவி ஊற வைத்து அலச வேண்டும்.இதன் மூலமும் வெள்ளை முடி மறையும்.

ப்ளாக் டீ: 1 கப் ப்ளாக் டீயில் 1 டீஸ்பூன் உப்பு சேர்த்துகலந்து, அதனைக் கொண்டு ஸ்கால்ப்பை நன்கு மசாஜ் செய்து, ஊற வைத்து அலசவேண்டும். இப்படி வாரம் 2-3 முறை செய்துவந்தால், இள நரையை விரைவில் போக்கலாம்.!

*இணையப்பகிர்வு*
[12/10, 04:49] Am Yoga: கெட்டுப்போன முட்டையில் கெட்டிக்காரத்தனம்

நான் மதுரை மாவட்டம், கருமாத்தூர் - கலுங்குபட்டி என்னும் ஒரு சிறு கிராமத்தைச் சேர்ந்த ஒரு விவசாயி. என்னுடைய பெயர் காசிமாயன்.

நான் என்னுடைய மாட்டுக் கொட்டகையில் பந்தல் அமைத்து இரண்டு நாட்டுச்சுரை விதைகளை ஒரு சிமென்ட் தொட்டியில் நடவு செய்து கவனமாக வளர்த்து வந்தேன். அந்த இரண்டு செடிகளுக்கும் மண்ணை மலடாக்கும் ரசாயன உரங்களை கொடுக்காமல் மண்ணை வளமாக்கும் ஜீவாமிர்தத்தையே உரமாகக் கொடுத்து வந்தேன். நான் கொடுத்த அந்த உரத்திற்கு பரிசாக அந்த இரண்டு சுரைச்செடிகளும் இரண்டரை அடி நீளத்தில் 19 காய்கள் காய்த்தன.

அந்த சமயத்தில் என்னுடைய இரண்டு கோழிகள் குஞ்சு பொரித்ததில் எட்டு முட்டைகள் குழு முட்டை (கெட்டுப்போனது) ஆகிவிட்டன. அதில் இரண்டு முட்டைகளை செடிக்கு ஒன்று வீதம் வேரின் பக்கவாட்டில் சிறு குழி எடுத்து குழியில் முட்டைகளைப் போட்டு உடைத்து விட்டு மண்ணால் மூடி நீர் ஊற்றி பராமரித்து வந்தேன்.

இப்பொழுதான் ஒரு ஆச்சரியம் காத்திருந்தது. ஐந்து நாள் கழித்து மாடியில் ஏறிநின்று கொடிகளை கவனித்தேன். வயதான அந்த கொடிகளில் சுமார் 50 பூக்களுக்கு மேல் பூத்திருந்தன. அந்த 50 பூக்களில் 18 பூக்கள் காயாக மாறி ஒரு வாரத்திற்குள் அசுர வேகத்தில் பெரிதாகி பறிப்புக்கு வந்தன.

மீண்டும் ஆறுநாள் கழித்து முன்னைப் போலவே செடிக்கு ஒரு முட்டை வீதம் உரமாகக் கொடுத்தேன். மீண்டும் கொடிகளில் 55 பூக்கள் பூத்தன. அதில் 20 பூக்கள் காயாக மாறி 9 நாட்களில் பறிப்புக்கு வந்தன. மீண்டும் ஒரு வாரம் கழித்து செடிக்கு இரண்டு முட்டைகள் வீதம் உரமாகக் கொடுத்தேன். இப்பொழுது 70 பூக்களுக்கு மேல் பூத்தன. அதில் 24 பூக்கள் காயாக மாறி என்னை வியப்பில் ஆழ்த்தியது.

மீண்டும் அதே முயற்சி, ஆனால் அந்த செடிகளுக்கு வயது முடிந்துவிட்டது போலும். அந்த இரண்டு சுரைச்செடிகளின் வாரிசுகளும்  முளைத்து வளமாக வளர்ந்து வருகின்றன. அந்த இரண்டு சுரைச்செடிகளுக்கும் நான் கொடுத்த உரமோ 8 கெட்டுப்போன முட்டைகள். ஆனால் அந்த இரண்டு சுரைச்செடிகளும் எனக்குக் கொடுத்த வரவோ 81 சுரைக்காய்கள்.

இந்த சிறு முயற்சியின் மூலம் நாம் உணர்வது என்னவென்றால் காய்கறி மற்றும் எல்லாப் பயிர்களுக்கும் கெட்டுப்போன முட்டைகள், ஒரு சிறந்த உரம் என்பதை உணர்கிறோம். எனவே கோழி வளர்க்கும் விவசாயிகள் கெட்டுப்போன முட்டைகளை வீசி எறிந்து விடாமல் நம்முடைய பயிர்களுக்கே உரமாகக் கொடுக்க வேண்டும்.

நான் இந்த முறையினை அருள் ஆனந்தர் கல்லூரியில் நடைபெற்ற விதைத் தொழில் நுட்ப பயிற்சி வகுப்பில் கலந்து கொண்டு கற்றுக்கொண்டேன். அப்பொழுது எனக்கு தேனி மாவட்டம் வைகை அணையில் உள்ள (ARS - Agricultural Research Station) வேளாண் ஆராய்ச்சி நிலையப் பேராசிரியர் முனைவர். ரெங்கநாயகி அவர்கள் கற்றுத்தந்தார்கள். இந்த அருமையான பயிற்சியினை ஏற்பாடு செய்து கொடுத்த அருள் ஆனந்தர் கல்லூரிக்கு நன்றி

-*இணையப்பகிர்வு*
[12/10, 04:50] Am Yoga: கர்ப்பப்பை அழுக்குகளை நீக்கும் கருஞ்சீரகம் !

மாதவிடாய் தள்ளிப்போகிறது என்றாலோ, பி.சி.ஓ.டி எனும் சினைப்பை நீர்க்கட்டிகள் பிரச்னையால் அவதிப்பட்டாலோ, கருஞ்சீரகத்தை நன்றாக அரைத்துப் பொடித்து, அதில் ஒரு தேக்கரண்டியைத் தேனில் குழைத்து, 10 நாட்கள் தொடர்ந்துச் சாப்பிட்டுவர, பிரச்னை சரியாகும்.

கர்ப்பப்பை அழுக்குகளை நீக்கும். குழந்தைப் பிறந்த நான்கைந்து நாட்கள் கழித்து, கருஞ்சீரகப் பொடியுடன், பனை வெல்லம் சேர்த்து, தினமும் ஒரு உருண்டை வீதம் ஐந்து முதல் 10 நாட்கள் சாப்பிடலாம்.

கருஞ்சீரகம் உடலில் ஏற்படும் வலியைக் குணப்படுத்தும் ஆற்றல் கொண்டது. மழைக் காலம் மற்றும் பனிக் காலங்களில் உடலுக்குத் தேவையான வெப்பத்தைக் கொடுக்கும். சீரகத்தில் இருந்து தைமோக்யூனோன் (Thymoquinone) எனும் வேதிப்பொருள் பிரித்தெடுக்கப்படுகிறது. இது, செரிமானக் கோளாறுகள், கர்ப்பப்பைவாய் புற்றுநோய், வளர்சிதை மாற்றக் குறைபாடுகள் போன்றவற்றுக்கு மருந்து தயாரிக்கப் பயன்படுத்தப்படுகிறது.!

*இணையப்பகிர்வு*
[12/10, 04:54] Am Yoga: வயிற்றில் உள்ள புழுக்களை அழிக்கும் எளிய இயற்கை  வைத்தியம் :-

வயிற்றுப் புழுக்கள் குழந்தைகளுக்கு மட்டுமின்றி பெரியவர்களுக்கும் உள்ள ஒரு பொதுவான பிரச்சனை. இந்த புழுக்கள் ஓர் ஒட்டுண்ணிகள். இந்த புழுக்கள் உணவுகள் மூலமாகவும், சுகாதாரமற்ற குடிநீரின் மூலமாகவும், உடலினுள் நுழையும். அதுமட்டுமின்றி நன்கு சமைக்காத உணவுகள் மூலமாகவும் இவை நுழையும்.

வயிற்றில் புழுக்கள் இருந்தால், அடிவயிற்றில் வலி, பசியின்மை, வயிற்றுப்போக்கு, மலப்புழையில் அரிப்பு, தூக்கமின்மை, குமட்டல், எடை குறைவு போன்ற பிரச்சனைகளை ஏற்படுத்தும்.

* வெங்காய சாறு வயிற்றில் உள்ள புழுக்களை அழிக்க வல்ல ஓர் சிறப்பான பொருள். அதற்கு வெங்காய சாற்றினை காலையில் வெறும் வயிற்றில் சிறிது குடிக்க வேண்டும். இப்படி செய்வதால் வயிற்றில் உள்ள ஒட்டுண்ணிகள் அழித்து வெளியேறிவிடும். இதனை வாரம் இருமுறை செய்து வரலாம்.

* மாதுளையின் தோலை உலர வைத்து, அரைத்து பொடி செய்து, அதில் சிறிது தேன் கலந்து உட்கொண்டு வர, வயிற்றில் உள்ள புழுக்களின் வளர்ச்சி தடுக்கப்பட்டு, அவை அழிந்து வெளியேறும். மேலும் பசியின்மையால் அவதிப்படும் குழந்தைகளுக்கு இது மிகவும் நல்ல மருந்து.

* தினமும் பச்சை பூண்டை 3-4 உட்கொண்டு வர வேண்டும். இப்படி செய்வதால் வயிற்றை சுத்தமாக வைத்துக் கொள்ள முடியும். ஆனால் பூண்டை பச்சையாக சாப்பிடவுடன் சற்று வெது வெதுப்பான தண்ணீரை குடிக்க வேண்டும்.

* ஒரு டம்ளர் மோரில் 1 டேபிள் ஸ்பூன் பாகற்காய் சாற்றினை சேர்த்து கலந்து, அவ்வப்போது குடித்து வர, வயிற்றில் புழுக்கள் வளர்வதைத் தடுக்கலாம். இதனை வாரம் ஒருமுறை குழந்தைகளுக்கு கொடுத்தால் மிகவும் நல்லது. குழந்தைகளின் வயிற்றில் உள்ள புழுக்கள் அழியும்.

* எலுமிச்சையின் விதைகளை அரைத்து பேஸ்ட் செய்து, 1 டம்ளர் நீரில் கலந்து, அத்துடன் சிறிது எலுமிச்சை சாற்றினையும் சேர்த்து கலந்து வாரம் ஒருமுறை குடித்து வர, குடல் புழுக்களை முற்றிலும் வெளியேற்றி, வயிற்றை சுத்தமாக வைத்துக் கொள்ளலாம்.
[12/10, 04:55] Am Yoga: தேமல் நீங்க  எளிய  இயற்கை  மருத்துவம் :-

1.கீழாநெல்லி இலை, கொத்துமல்லி இலை ஆகியவற்றை பாலில் அரைத்து, முகத்தில் தேமல், கரும்புள்ளி உள்ள பகுதிகளில் பூசி முப்பது நிமிடங்கள் கழித்துக் குளித்து வந்தால் தேமல், கரும்புள்ளி ஆகியவைகள் குறையும்.

2.கமலா ஆரஞ்சு தோலை பொடி செய்து தினமும் தேயத்து குளித்து வந்தால் தேமல் குறையும்.

3.மலைவேம்பு இலைகளை அரைத்து அதன் சாறை தேமல் மீது பூசி வந்தால் தேமல் மற்றும் அரிப்பு குறையும்.

4.வெள்ளைப் பூண்டை வெற்றிலை சேர்த்து மசிய அரைத்துத் தினமும் தோலில் தேய்த்துக் குளித்துவர தேமல் குறையும்.

5.கருஞ்சீரகத்தை வறுத்து பொடி செய்து நல்லெண்ணெயில் கலந்து தேமல் உள்ள இடத்தில் தினமும் தடவி 10 நிமிடம் ஊற வைத்து பின் குளித்து வர தேமல் குறையும்.

6.முள்ளங்கிச் சாறு, எலுமிச்சைச் சாறு, தக்காளிச் சாறு மூன்றையும் கலந்து தேமல் உள்ள இடத்தில் தினமும் தடவி 10 நிமிடம் கழித்து குளித்து வர தேமல் குறையும்.

7.சந்தனத்தை எலுமிச்சைச் சாற்றில் கலந்து தேமல் உள்ள இடத்தில் தடவி வர தேமல் குறையும்.

8.நாயுருவி இலை சாறை தேமல் உள்ள இடத்தில் தினமும் தட‌வி வ‌ர‌ தேமல் குறையும்.

9.ஆரஞ்சு தோலை வெயிலில் உலர்த்தி பொடி செய்து தினமும் தேய்த்து குளித்து வர தேமல் குறையும்.!

*இணையப்பகிர்வு*
[12/10, 04:58] Am Yoga: இஞ்சிப் பால்..! இதை சாப்பிட்டால்…..

கொடி போல இடை தளிர்போல நடைன்னு சொல்வாங்க. அப்படி சிக்குன்னு சுறுசுறுன்னு இருக்கனும்பாங்க. சுலபமா செஞ்சு முடிக்கக்கூடிய இஞ்சிப் பால் இருக்க பயமேன்? கவலையை விடுங்க.

ஒரு நபர் ஒரு வேளை குடிக்கக்கூடிய அளவுக்கு இஞ்சிப்பால் செய்யறது எப்படி?

ஆள்காட்டி விரல் பருமனில் சிறிது துண்டு இஞ்சியை எடுத்துத் தோலைச் சீவிக்கணும். தோல் சீவிய இஞ்சித்துண்டை நல்லா நசுக்கிட்டு, பிறகு முக்கால் குவளை தண்ணீர் எடுத்து அதில் நசுக்கிய இஞ்சியை போட்டு நல்லா கொதிக்க விடணும். தண்ணீரில் சாரம் முழுவதும் இறங்கி விடும். பிறகு வடிகட்டி சாரை எடுத்துக் கொள்ளணும்.

அப்புறம் அரைக் குவளை காய்ச்சிய பால் எடுத்துக்கொண்டு அத்துடன் வடிக்கட்டிய சாரத்தை கலந்து கொள்ளணும். அத்துடன் தேவையான அளவில் தேன் அல்லது பணங்கற்கண்டு அல்லது சர்க்கரை இனிப்புச் சுவைக்காக சேர்த்துக்கணும். அவ்வளவுதான். இஞ்சிப்பால் தயார். இந்த இஞ்சிப் பாலை காலையில வெறும் வயிற்றில் குடிக்கனும்.

அட. இப்படி தினம் செஞ்சா என்ன கிடைக்கும்?

1. நுரையீரல் சுத்தமாகும்.

2. சளியை ஒழுச்சு கட்டிடும்.

3. வாயுத் தொல்லை என்பதே வராது.

4. தேவையில்லாத கொழுப்பு பொருளை கரைச்சிடும்.

5. தொப்பை வயிற்றுக்காரர்கள் தொப்பைக்கு விடை கொடுத்துவிடலாம்.

6. அதிகமா எடை இருந்தா படிப்படியாக குறைஞ்சிடும்.

7. ஒல்லியா ஆகணும்னு நினைக்கிறவங்க தொடர்ந்து குடிக்கலாம்.

8. இரத்தக் குழாய்களில் அடைப்பு எதுனாலும் இருந்தா நீக்கி விடும். அதனால மாரடைப்பை தடுக்கும் சத்தி இதுக்கு இருக்கு.

9. முக்கியமா பெண்களுக்கு சினைப்பையில் வரக்கூடிய புற்றுநோய்க் கட்டிகளை நீக்கி விடும்.

10. தினமும் சாப்பிட்டால் உடம்பு சும்மா சுறு சுறுன்னு இருக்கும்மில்லே.

அதுசரி, இந்த பாலை எல்லாருமே சாப்பிடலாமா?

3 வயசுக்கு மேல யார் வேணுமின்னாலும் சாப்பிடலாம்.

ஆனால் வாய்ப்புண், வயிற்றுப் புண், மலவாயில் புண், எரிச்சல் இருப்பவர்கள் தவிர்க்கனும்.

மற்றபடி அனைவரும் சாப்பிடலாம்.!

*இணையப்பகிர்வு*
[12/10, 04:59] Am Yoga: வெந்தயப்பொடி ஜூஸ்

நீரிழிவு நோயாளிகளுக்கான டயட் உணவு

என்னென்ன தேவை?

வெந்தயம்- 1 கப்
மிளகு-1/4கப்
சுக்கு-சிறு துண்டு

எப்படி செய்வது?

வெந்தயம், மிளகு(4:1) சுக்கு சேர்த்து வறுத்து பொடி செய்து வைத்துக்கொள்ளவும். ஒரு டம்ளர் மோருடன் ஒரு டீஸ்பூன் பொடி சேர்த்து அருந்தி வந்தால் சர்க்கரை நோய் கட்டுபாட்டில் இருக்கும். கோடை காலத்தில் இதை அவ்வப்போது அருந்திவர உஷ்ணம் குறையும்!

*இணையப்பகிர்வு*

Thursday, December 8, 2016

*உளுந்தின் மகத்துவம்*

உளுந்து , சிறுபருப்பு , பச்சரிசி - மூன்றையும் சேர்த்து கஞ்சி காய்ச்சிக் குடித்து வந்தால் , பாலூட்டும் பெண்களுக்கு தாராளமாகப் பால் சுரக்கம்.

உளுந்து , ,கோதுமை , கஸ்தூரி மஞ்சள் - மூன்றையும் சம அளவு எடுத்துப் பொடி செய்துகொள்ளவும். இதில் தேவையான அளவு எடுத்து வெந்நீரில் கலந்து பற்றுப்போட்டால் , மூட்டு வலி , மூட்டு வீக்கம் உள்ளிட்ட வாத நோய்கள்  குணமாகும்.

உளுந்தை தண்ணீரில் போட்டு ஊறவைத்து , மறுநாள் காலையில் அந்தத் தண்ணீரைக் குடித்து வந்தால் சிறுநீரக நோய்கள் அனைத்தும் குணமாகும்.

உளுந்து , பார்லி  - தலா 100 கிராம்  , மிளகு , சீரகம் , பூண்டு , மஞ்சள் - தலா 10 கிராம் எடுத்து அரைத்து , கஞ்சி காய்ச்சிக் குடித்து வந்தால் வெட்டைச் சூடு , வெள்ளைப்படுதல் போன்றவை குணமாகும்.

உளுந்தை மாவாக்கி , அதனுடன் மிளகு , சீரகம் , கொத்தமல்லி , மஞ்சள் ஆகியவற்றைச் சேர்த்து அரைத்து கஞ்சி காய்ச்சிக் குடித்து வந்தால் குடல் புண்கள் ஆறும்.

உளுந்து , சின்ன வெங்காயம் - இரண்டையும் சேர்த்துக் கஞ்சி காய்ச்சிக் குடித்து வந்தால் ஆண்மைக் குறைபாடு நீங்கும்.!

*இணையப்பகிர்வு*

உடற்பயிற்சி




எளிய குறிப்புகள் மற்றும் புகைப்பதை நிறுத்தும் வழி

[12/8, 16:20] Am Yoga: *எளிய மூலிகை மருத்துவம்*

காசநோய்:
     தாளிசபத்திரி சூரணம் இருமலை குறைப்பதோடு, காசநோயின் கடுமையையும் படிப்படியாக குறைக்கும்.

ஆஸ்த்துமா:
     கடுக்காய் லேகியத்தை வேளைக்கு ஒன்று அல்லது இரண்டு தேக்கரண்டி வீதம் ஒரு நாளைக்கு இரண்டு வேளை ஆக 20 நாட்கள் உட்கொள்ள வேண்டும். குறையவில்லையெனில் 48 நாட்கள் உட்கொள்ளலாம்.

மஞ்சள் காமாலை:
        கீழாநெல்லி செடியை வேரோடு பிடுங்கி அரைத்து எலுமிச்சை அளவு எடுத்து பசுந்தயிர் அல்லது மோரில் கலந்து நாளைக்கு இரண்டு வேளை உட்கொள்ள காமாலை தீரும்.

நீரழிவு:
        கோரைக்கிழங்கை பச்சையாக இடித்து சாறுபிழிந்து நாளைக்கு இரு வேளை என அரை டம்ளர் எடுத்து 20 நாட்கள் குடிக்க நீரழிவு குணமாகும்.

மூலநோய்:
       வேப்பவிதையின் பருப்புகளை எடுத்து பசும்பால் விட்டரைத்து கழற்சிக்காய் அளவு எடுத்து நாளைக்கு இரு வேளை உட்கொள்ள வேண்டும்.

இருதய நோய்:
        அகத்திக் கீரையை வெயிலில் நன்றாக உலர்த்தி பொடி செய்து வலி ஏற்படும் போது ஒரு தேக்கரண்டி உட்கொண்டு சுடுநீர் அருந்த வேண்டும்.

உடல் அரிப்பு:
     குளிக்கும் முன் எலுமிச்சை சாற்றினை பூசி ஊறிய பின், இளஞ்சூடான நீரில் இரண்டு நாட்கள் குளிக்க குணமாகும்.

பித்த வெடிப்பு:
       மஞ்சள் மற்றும்  வேப்பிலையை அரைத்து பூசினால் குணமாகும்.  மருத இலையை அரைத்துப் பூசுவதும் குணத்தை தரும்..

படர் தாமரை:
        பூவரசங்காயை இடித்து சாறு பிழிந்து தடவி வர குணமாகும்.

இரத்தக் கொதிப்பு:
            அவரைப் பிஞ்சை சமைத்து தொடர்ந்து உண்டு வந்தால் குணமாகும்.!

🌷இயற்கை மருத்துவ தகவல்களுக்கு
*amyogatrust.blogspot.in*

🌾100% இயற்கை மூலிகை தயாரிப்புகளுக்கு

 *AUM HERBALS*
MOBILE & WHATSAPP
*9629368389*

நலம் பெருகட்டும் …
[12/8, 16:23] Am Yoga: "

புகைப் பிடிக்கும் பழக்கத்தினை நிறுத்துவதற்கு"

நாட்டு மருந்து கடைகளில் கிடைக்கும் 'நெல்லிமுள்ளியை(உலர்ந்த நெல்லிக்காய்)' 100 கிராம் வாங்கிவந்து ,கொஞ்சம் தண்ணீரில் சிறிது இந்துப்பு மிளகுதூள் இட்டு கலக்கி ,நெல்லிமுள்ளியை கொட்டை நீக்கிவிட்டு இந்த நீரில் ஒரு பத்து நிமிடம் ஊறவிட்டு எடுத்து வெயிலில் உலர்த்தி ஒரு பாட்டிலில் போட்டு வைத்துக்கொள்ளவும்,
புகை பிடிக்க தோணும் போதெல்லாம் இரண்டு எடுத்து வாயில் போட்டு வரவும் ,
புகைபிடிக்கும் பழக்கம் அறவே நீங்கும்.!

*இணையப்பகிர்வு*

Wednesday, December 7, 2016

கட்டிகள்

ஓம்: எல்லாம் வல்ல சித்தர் அருள் :
உடம்பில் தோண்றும் எந்த கட்டியாக இருந்தாலும் சரி வெள்ளை எருக்கம் பழுப்பு இலை கோவைஇலை இரண்டையும் நல்லெண்ணெயில் காய்ச்சி இட்டுவர ஓரிரு நாளில் குணமாகும்.

கொழும்பு கட்டிதானே ஒன்றும் செயாது என மருவர்கள் கூருவார்கள்.
சரும அழகை கெடுக்கும்
இதுவும் குணமாகும்.

புற்றுகட்டிகள் கூட  இதனால் சரியாகும் என குரு சொல்லி கேட்டுள்ளேன்.

உடலில் உண்டாகும் கரும்படை சொரியசிஸ் நரம்பு திரர்ச்சி தேமல்
என தோல்வியாதிகள் அனைத்தும் தீரும்.

நீர்கட்டு சமந்தமான மூட்டுவலி ரத்தகட்டு கை கால் வலி நீங்கிவிடும்.!

*இணையப்பபகிர்வு*

மருத்துவக் குறிப்புகள் 07/12/2016

[12/3, 16:25] Am Yoga: குடிநீரை உயிரோட்டமுள்ள நீராக மாற்ற..!!!


நீரின்றி அமையாது உலகு”

மிளகு 25 கிராம்

சீரகம் 25 கிராம்

தேத்தாங்கொட்டை 1

வெட்டி வேர் சிறிது

வெந்தயம் 20 கிராம்
1. பத்து ஆண்டுகள் முன்பு நிலத்தடி நீரை குடிநீராக பயன்படுத்தி வந்தோம் .

2.நம் உடலுக்கு தேவையான தாதுப் பொருள்கள் கிடைத்தது , உலகமையமாக்கள் கொள்கையால் குடிநீர் இன்று ஆண்டிற்கு 6000 கோடி ருபாய் ஈட்டும் வணிக பொருளாக இன்று மாறியுள்ளது.
3. இந்திய முழுவதுமாக பாட்டில் குடிநீர் ,கேன் வாட்டர் என அன்னிய கார்ப்ரேட் நிறுவனங்கள் மூலம் பாதுகாப்பு குடிநீர் என்று விளம்பரம் படுத்தப்படுறது .
4.இவ்வாறு பயன்படுத்தபடும் குடிநீரில் நாம் உடலுக்கு தேவையான தாது பொருள்கள் நிறைந்தவையா என ஆராய்ந்தால் இல்லையொன்ற பதில் மட்டுமே வருகிறது .
5.RO மற்றும் IV தொழில்நுட்பம் மூலம் தாதுப் பொருள்களை பிரித்து வெறும் சக்கை குடிநீராக கேனில் அடைத்து விற்பனை செய்யப்படுகிறது .
6.இந்த குடிநீரை உயிரோட்டமுள்ள நீராக மாற்றவும் மாறி வரும் கால நிலைக்கேற்ப்ப இந்த கோடையில் தொற்று நோய்களை தடுக்க. இதை முயற்சி செய்யலாம்.

இவைகளை துணியில் வைத்து கட்டி 15 லிட்டர் தண்ணீரில் போட்டு பயன்படுத்தலாம் , மண் பாணை மிகவும் நல்லது .
சித்த மருத்துவர் உமா வளவன்
தேற்றாங்கொட்டை பேச்சு வழக்கில் தேத்தாங்கொட்டை என்கிறார்கள்.
தேற்றாங் கொட்டை நீரைத் தெளிய வைக்கும் விதை என்ற பொருளைத் தருகிறது. சிலர் தேற்றா மரத்தின் காய்களை இடித்து

கொட்டையை எடுத்த பின் கிடைக்கும் சக்கையைக் கரைத்து மீன்கள் உள்ள குட்டைகளில் இடுவர். இச்சக்கையின் சாறு மீன்களை ஒரு வித மயக்க நிலைக்கு இட்டுச் சென்று கரையில் ஒதுங்கச் செய்யும். இவ்வாறு மீன் பிடிப்புக்கும் தேற்றா மரம் பயன்படுகிறது
ஆற்றில் வரும் கலங்கல் நீரைப் பருகவேண்டிய நிலை வரும்போது, ஆற்றுநீரைக் கொண்டுவந்து பானையில் ஊற்றி அதில் தேத்தாங்கொட்டையைப் போட்டு வைப்பர். கலங்கல் அடியில் படிந்து தேளிந்த நீர் மேலே நிற்கும். அதனைத் மேலாக மொண்டு பருகுவர்.
பொற்கொல்லர்கள் பழைய அணிகலன்களில் படிந்துள்ள அழுக்கினைப் போக்கத் தேத்தாங்கொட்டையை ஊறிய நீரில் நுரை பொங்கத் தூரியத்தால் தேய்த்துத் தூய்மை செய்வர்.

தாய்மார் தேத்தாங்கொட்டை நீரில் சில மணி நேரம் ஊறவைத்து எடுத்தே தூய்மை செய்துகொள்வர்.!

*இணையப்பகிர்வு*
[12/5, 16:23] Am Yoga: *இயற்கை வழியில் கல்லீரல் நோய்களை குணப்படுத்துங்கள்*

கீழாநெல்லி, குப்பைமேனி இலைகளை சமமாக எடுத்து கழுவி அரைத்து இரண்டு நெல்லிக்காய்  அளவு  தினமும்   காலையில் உணவிற்கு முன் ஒரு டம்ளர் மோரில் 48 நாட்கள் குடித்துவந்தால்  கல்லீரல் கட்டி, மஞ்சள் காமாலை,கல்லீரல் கொழுப்பு, உடல்சோர்வு, குடியினால் ஏற்பட்ட கல்லீரல் புண் போன்றவை குணமாகும்.!

*இயற்கை மருத்துவ தகவல்களுக்கு*
amyogatrust.blogspot.in

🌴100% இயற்கை மூலிகை தயாரிப்புகளுக்கு

AUM HERBALS🍁
Mobile & Whatsapp
*9629368389*
[12/7, 12:28] Am Yoga: *எலுமிச்சையின் குணங்கள்*

எலுமிச்சம் பழச்சாறு , வெள்ளரிப் பிஞ்சு , உப்பு  மூன்றையும் கலந்து அஜீரணக் கோளாறுகள் நீங்கும்.

எலுமிச்சம் பழச்சாற்றில் தேயிலைத் தண்ணீரைக் கலந்து தலையில் தேய்த்துக் குளித்து வந்தால் தலைமுடி கருமையாக வளரும்.

தேங்காய் எண்ணெய்யில் எலுமிச்சம் பழச்சாறு கலந்து காய்ச்சி தலையில் தேய்த்துக் குளித்து வந்தால் பொடுகுத் தொல்லை தீரும்.

எலுமிச்சம் பழச்சாறு , வல்லாரைக்கீரை - இரண்டையும் சேர்த்துச் சாப்பிட்டுவந்தால் உடலில் உள்ள வெண்புள்ளிகள் மறையும்.

எலுமிச்சம் பழச்சாற்றை மௌரில் கலந்து குடித்தால் நீர்க்கடுப்பு சரியாகிவிடும்.எலுமிச்சம் பழச்சாறூ ,பேரீச்சம்பழம் , சீரகம் சேர்த்து அரைத்து வெறும் வயிற்றில் சாப்பிட்டு வர ரத்தக் கொதிப்பு குணமாகும்.

எலுமிச்சம் பழச்சாறு , வெங்காயச்சாறு - இரண்டையும் ஒன்றாகக் கலந்து குடித்து வந்தால் வயிற்றுப் போக்குநிற்கும்.

இளநீரில் எலுமிச்சம் பழச்சாறு கலந்து உடலில் தேய்த்து வந்தால் தேமல் , வியர்குரு போன்றவல குணமாகும்.

எலுமிச்சம் பழச்சாறு , தேன் - இரண்டையும் சம அளவு கலந்து குடித்து வந்தால் இருமல் குணமாகும்.

எலுமிச்சம் பழச் சாறை மாதவிலக்குச் சமயங்களில் குடித்து வந்தால் அந்த நேரத்தில் ஏற்படக்கூடிய வயிற்று வலி குணமாகும்.!

*இணையப்பகிர்வு*
[12/7, 14:52] Am Yoga: *தக்காளி சாப்பிடுங்கள் தங்கங்களே*

தினமும் இரண்டு நாட்டுத்தக்காளிகளை உணவிற்கு முன் அப்படியே சாப்பிட்டு வந்தால் உடல் சோர்வு மறையும், தாது உற்பத்தி அதிகரிக்கும்.!
குழந்தை இல்லாத தம்பதிகள், இல்லற வாழ்வில் நாட்டமில்லாதவர்கள்உணவில்  தினமும் நாட்டுத் தக்காளிகளை அதிகமாக சேர்த்து வந்தால் விரைவில் மகப்பேறு அடைவதோடு  இல்லற வாழ்வில் ஈடுபாடும் அதிகரிக்கும்.!
தக்காளியில் கருப்பட்டி அல்லது தேன் கலந்து ஜாமாக தயாரித்து வைத்துக்கொண்டு தினமும் காலை மாலை இரண்டு தேக்கரண்டி அளவு உண்டு வந்தால் இரத்தசோகை மாறுவதோடு முகவசிகரம் அதிகரிக்கும்.!
தினமும் ஒருவேளை உணவாக ஐந்து நாட்டுத் தக்காளிகளை மட்டுமே உண்டுவந்தால் உடல் எடை சீரான நிலையில் இருப்பதோடு உடலில் தேவையில்லாத கழிவுகள் சேராமல் தடுக்கும்.!
இரண்டு மூன்று நாட்டுத் தக்காளியை வெட்டி உடல்,முகம் தலை என்று உடலில் எல்லா பகுதியிலும் தேய்த்து அரைமணி நேரம் காயவைத்து பிறகு குளித்தால் உடல் நமைச்சல், தேமல் மாறுவதோடு உடலுக்கு புத்துணர்வும் புதுப்பொலிவும் கிடைக்கும்.!
தினமும் இரவு உணவிற்கு முன் தக்காளி  சூப் ஒருகப் குடித்து வந்தால் நன்றாக தூக்கம் வரும்.!
மனஅழுத்தம், கவலை, விரக்தி  மனநிலையில் இருப்பவர்கள் தினமும் ஒரு தக்காளியை அப்படியே சாப்பிட்டுவர உற்சாகமான மனநிலை உருவாகும்.!

*குறிப்பு:* *இயற்கையில் விளைந்த நாட்டுத் தக்காளி கிடைக்காதவர்கள், சந்தையில் கிடைக்கும் தக்காளியை அரைமணிநேரம் கல்லுப்பு நீரில் ஊறவைத்து பிறகு தக்காளி காம்போடு உள் சேர்ந்திருக்கும்  பச்சைநிற பகுதியையும் வெட்டி எறிந்து விட்டே பயன்படுத்த வேண்டும்.!*

*இயற்கை மருத்துவ தகவல்களுக்கு*
amyogatrust.blogspot.in

🌿100% இயற்கை மூலிகை தயாரிப்புகளுக்கு🍁 *AUM HERBALS*🌴
Whatsapp & Mobile
*9629368389*

Thursday, December 1, 2016

விந்து நஷ்டம் சரியாவதற்கு"

நல்ல உயர்தர ஏலக்காயை பொடி செய்து வைத்துக்கொண்டு மூன்று கிராம் அளவு காலை மாலை நெய்யில் கலந்து சாப்பிட்டுவர விந்து நஷ்டம் நீங்கி ஆண்மை பெருகும்
,உஷ்ணபேதி,இருமல்,கபக்கட்டு,பசியின்மை ஆகியவை குணமாகும்.!

*இணையப்பகிர்வு*