Thursday, October 6, 2016

நுரையீரல் கவசம்....

[10/4, 20:48] Am Yoga: யீரல் கவசம் !!!

சித்தரத்தை-10 கிராம்,
ஓமம்-10 கிராம்,
கடுக்காய் தோல்-10 கிராம்,
மிளகு-10 கிராம்
திப்பிலி-10 கிராம்,
அக்ரகாரம்-10 கிராம்,
தாளிசாப்பத்திரி-10 கிராம்,
சர்க்கரை-40 கிராம்.
செய்முறை-
இவைகளை இடித்து ஒன்றாக சலித்து வைத்துக்கொண்டு வேளைக்கு கால் டீஸ்பூன் வீதம் காலை மாலை உணவுக்குப்பின் சாப்பிட நுரையீரல் சம்பந்தமான எல்லாப்பிரச்னைகளும் விலகும். நுரையீரலுக்கு கவசமாகவும் இது விளங்கும்.!

🏄🏽இணையப்பகிர்வு
[10/4, 21:12] Am Yoga: நல்ல கொழுப்பை அதிகரிக்கும் தேங்காய்!

செப்டம்பர் 2 – உலக தேங்காய் தினம்

நல்ல கொழுப்பை

தென்னையை ‘பூலோகக் கற்பகவிருட்சம்’ என்பார்கள். தருவதில் தாயைப் போன்ற தயாள குணம்கொண்டது தென்னை. தென்னம் பாளை, குருத்து, இளநீர், தேங்காய், தேங்காய் எண்ணெய் என ஒவ்வொரு நிலையிலும் மனிதருக்கு உணவாகவும் மருந்தாகவும் பயன்படுகிறது. தென்னை ஓலைகளில் பட்டு வரும் குளிர்ச்சியான காற்று, நம் உடலில் உள்ள சுரப்பிகளைத் தூண்டி நலம் சேர்க்கும். தென்னை ஓலையில் கூரை வேய்வது இதனால்தான்.

தேங்காய், இனிப்புச் சுவை உடையது. பாதாம், முந்திரி, பிஸ்தா போன்ற நட்ஸ் வகைகளுக்கு இணையான ஊட்டச்சத்து நிறைந்தது. தேங்காய் ஓட்டுக்கும் பருப்புக்கும் இடையே உள்ள தோல் போன்ற பகுதி, கொழுப்பைக் கரைக்கும் தன்மை உடையது. குடலில் உள்ள புழுக்களை நீக்கவும் மலச்சிக்கலைப் போக்கவும் பயன்படும். அல்சைமர் எனும் ஞாபக மறதி நோயைப்போக்கும். தேள், நட்டுவாக்கலி கொட்டினால் அதன் விஷம், கடுப்பு நீங்கவும் தேங்காய் பயன்படுத்தப்படுகிறது. ஆயுர்வேத மருத்துவத்தில் `சைந்தவலாவனம்’ என்ற மருந்து செய்வதற்கு தேங்காய் முழுமையாகப் பயன்படுத்தப்படுகிறது. இந்த மருந்து வயிறு உப்புசம், வயிற்றுப்புண், வயிற்றுவலியைக் குணப்படுத்தும்.
இளநீர்
குளிர்ச்சியைத் தரவல்லது; தாகத்தைத் தணித்து செரிமானத்தைச் சீராக்கும். சிறுநீர்ப்பை மற்றும் சிறுநீரகப் பாதையைச் சுத்தப்படுத்தும். சிறுநீரகக்கல் பிரச்னை, சின்னம்மை, பெரியம்மை நோய்கள் வராமல் தடுக்கும். கர்ப்பக் காலத்தில் ஏற்படும் அம்னியோட்டிக் திரவ     (Amniotic fluid) குறைபாட்டை, தொடர்ந்து இளநீர்  அருந்துவதன் மூலம் சரிசெய்யலாம். ரத்தத்தில் உள்ள பிளாஸ்மா குறைபாட்டைச் சரிசெய்ய இளநீர் உதவுகிறது.

தேங்காய்ப் பூ
தென்னையில் இருந்து வரும் பூவைப் பயன்படுத்தி கஷாயம் செய்து அருந்தினால், அதீத ரத்தப்போக்கு, வெள்ளைப்படுதல் குணமடையும். ஆயுர்வேத மருத்துவத்தில் லேகியம் செய்யப் பயன்படுகிறது.
தேங்காய்ப்பால்
பசும்பாலுக்கு நிகரான குணம் உடையது. ஆண்மையைப் பெருக்க வல்லது. வயிற்றுப்புண், வாய்ப்புண்ணைக் குணப்படுத்தும். செரிமானத்தைத் தூண்டும். தாய்ப்பால் சுரப்புக்கு உதவும். வாதத்தைத் குறைத்து, கபத்தைக் கூட்டும். உடலுக்கு மிகுந்த பலத்தைக் கொடுக்கும். சருமத்தின் அழகைக் கூட்டும். தேங்காய்ப்பாலைக் காய்ச்சி வடித்து எடுப்பது ‘உருக்கு தேங்காய் எண்ணெய்’ ஆகும். இதைப் பயன்படுத்தி, ஆயுர்வேத மருத்துவத்தில் ‘நீலிபிருங்காதி கேர தைலம்’ தயாரிக்கப்படுகிறது. இது, முடி கருமையாகவும் அடர்த்தியாகவும் வளர உதவும்.தேங்காய் எண்ணெய்
தேங்காய் எண்ணெயில் அதிக அளவில் சேச்சுரேட்டட் கொழுப்பு உள்ளது. இதனால், மிகவும் ஆபத்தானது என்று ஒதுக்கப்பட்டது. தேங்காய் எண்ணெய், இதய ரத்தக்குழாயில் அடைப்பை ஏற்படுத்துகிறது என்பது இதுவரை  நிரூபிக்கப்பட்டுள்ளது. தேங்காய் எண்ணெய் ரத்தத்தில் கெட்ட கொழுப்பு அளவைக் குறைத்து, நல்ல கொழுப்பு அளவை அதிகரிக்கச் செய்கிறது. தற்போது வெளியாகும் ஆராய்ச்சிகளில், தேங்காய் எண்ணெய் நல்ல சமையல் எண்ணெய் எனக் கண்டறிந்துள்ளனர்.
‘இந்தியாவில் இதயநோய் குறைவாக உள்ள மாநிலம் கேரளா’ என்று மருத்துவ அறிக்கை தெரிவிக்கிறது. இதற்குக் காரணம், அங்கு சமையலில் பிரதானமாக தேங்காய் எண்ணெய் பயன்படுத்தப்படுவதுதான்.
தலைமுடி வளர்ச்சிக்கும், ஆரோக்கியம், உறுதியை மேம்படுத்தவும் உதவுகிறது. தலைமுடியில் பாக்டீரியா கிருமி வளர்ச்சியைத் தடுக்கிறது.!

🎯இணையப்பகிர்வு

திருமூலர் அருளிய ஒரு அற்புத பிராணாயாமம்



🚩நேராக நிமிர்ந்து அமர்ந்து கொண்டு வலது நாசியில் மூன்று எண்ணிக்கை காற்றை இழுத்து 12 எண்ணிக்கைகள் இரண்டு மூக்கையும் மூடி உள்நிறுத்தவும் அந்த நேரத்தில் ஆசனவாயையும் இறுக்கிக் கொள்ளவேண்டும்
பிறகு  ஆசனவாயை விட்டு ஆறு எண்ணிக்கைகள் வலது நாசியில் காற்றை வெளிவிடவேண்டும். <3,12,6 >இது ஒரு சுற்று இதுபோல் பத்து சுற்றுகள் செய்ய வேண்டும். அதாவது இடதில் இழுத்து , உள்நிறுத்தி , வலதில் வெளிவிடுவது ஒருசுற்று.! <வலது நாசியில் மூச்சை வெளிவிடலாம். ஆனால், வலதுநாசியில் இழுக்கலாகாது.!
அதுபோல் இடதுநாசியில் இழுக்கலாம் ஆனால், வெளிவிடக்கூடாது>
அடுத்து  கையை மாற்றி இடது நாசியில் 3 எண்ணிக்கை இழுத்து
வலதுநாசியில் 6 எண்ணிக்கை வெளியேவிட்டுவிட்டு பிறகு இரண்டு மூக்கு மற்றும் ஆசனவாயை இறுக்கி 12 எண்ணிக்கைகள் காத்திருக்கவும். இது ஒருசுற்று. பிறகு மீண்டும் 3,6,12 என்ற விதத்தில் இதுபோல் 5 சுற்றுகள் செய்து பயிற்சியை நிறைவு செய்ய வேண்டும்.!

🚺பயன்கள்

1.உடலில் உள்ள கெட்டக்காற்றுகள் வேகமாக வெளியேறும்
2.நுரையீரலின் இயங்கு சக்தி அதிகமாகும்
3.உடல் மிதக்கும் சக்தி ஏற்படும்
4. இரத்தஅழுத்தம் சீராகும்
5.இளமையான தோற்றம் கிடைக்கும்
6.உடல் எடை சீரான நிலையில் பாதுகாக்கப்படும்
7. குண்டலினி ஆற்றல் மேம்பட்டு ஆன்ம விழிப்பு நிலை ஏற்படும்
8.கவனகுவிப்பு திறன் மேம்படும்
9.நாளமில்லா சுரப்பிகளின் இயக்கம் சீராகும்
10.அதிக நேரம் தியனம் செய்யும் ஆற்றல் வளரும்.!

♨இது ஆரம்ப நிலையினருக்கு கொஞ்சம் கடினமான பயிற்சியாக தெரியும். ஆனால், தொடர்ந்து பிராணாயாமம் பயில்பவர்களுக்கு மிகவும் சுலபமாக செய்ய வருவதோடு நீடித்த ஆரோக்கியத்தையும் வழங்கும் அற்புத பயிற்சி இது.!

🍁amyogatrust.blogspot.in
Mobile:9629368389

நலம் பெருகட்டும் …

Monday, October 3, 2016

பஜனையின் பலன்கள்



இரத்த ஓட்டம் விரைவுபெறும்

மனஅழுத்தம் குறையும்

இதயத்திற்கு செல்லும் இரத்த குழாய்களில் உள்ள அடைப்புகள் நீங்கும்

ஞாபகசக்தி அதிகரிக்கும்

வலது இடது மூளைகளின் இயக்கம் சீராகும்

திக்குவாய் குணமாகும்

உடல்பருமன் குறையும்

உடலின் எரிசக்தி அதிகரிக்கும்

இழுப்பு,சளி,தொண்டைகட்டு
குணமாகும்

நுரையீரலின் இயங்குதிறன் அதிகரிக்கும்

உடல்வலி,தலைவலி,
எலும்பு பலவீனம் போகும்

இறைபக்தி, ஆன்மீக நாட்டம் அதிகரிக்கும்


இதுமட்டுமில்லீங்க  இன்னும் ஆயிரம் பலன்கள் இருக்கு பஜனை பாடுவதில் சுருக்கமாக கூறினால்  கலவியைவிட பத்துமடங்கு  அதிக நன்மைகள்.

பாட்டு பாடுவதைவிட ஐந்து மடங்கு அதிக நன்மைகள் நடைபயிற்சியைவிட நாலுமடங்கு அதிகநன்மைகள்
சிரிப்பு பயிற்சியை விட இரண்டு மடங்கு அதிக நன்மைகள் கொண்டது பஜனை பாடுவது.!

ஒரே ஒரு முக்கியமான விசயம் என்னவெனில் பஜனை பாடும்போது இராகத்தை ஏற்றி இறக்கி பாட வேண்டும். அதாவது ஒரிரு முறை மெதுவாக பாடிவிட்டு அடுத்து சுதியை ஏற்றிபாட வேண்டும். பிறகு இரண்டிற்கும் இடைப்பட்ட நிலையில் பாடவேண்டும்.!

இந்த ஆராய்ச்சியை எந்த ஆராய்ச்சிகழகம் செய்ததுனு
கேக்குறீங்களா? யாரு செய்தா என்னங்க, தம்பிடி செலவில்லாமல் ஆரோக்கியத்தை மேம்படுத்த ஒரு வழி கிடைச்சா அதைபிடிச்சிட்டு ஆனந்தமா முன்னேறி போவிங்களேன்.! அதைவிட்டுட்டு  இதை யாரு செஞ்சான்,எதுக்கு செஞ்சான், இந்தியாகாரனா? வெளிநாட்டுக்காரனா? இந்துவா? கிறுஸ்தவனா? என்றெல்லம் நீங்க ஒரு  ஆராய்ச்சி செய்து  குழம்பி நேரத்தை வீணடிக்காமல் தினமும் 15 நிமிடம் பஜனை பாடி உங்கள் ஆரோக்கியத்தை அதிகப்படுத்துங்க …

 பொதுவா உலகத்தில் எந்த நாட்டவர்களுக்கும்  பஜனைனா இந்தியாதான் ஞாபகம் வரும்.! அதிலும் தமிழ்நாடு பிரபலம். ஹரே ராமா ஹரே கிருஷ்ணானு தொடங்கி  ரகுபதி ராகவன்  ராஜாராம்னு விரிஞ்சி ஒவ்வெரு தெய்வத்திற்கும் குருமார்களுக்கும் ஒரு பஜனையை உருவாக்கி
வெச்சிருக்கிறது நம்மதேசம் தான்.!

அவரவர்களுக்கு பிடிச்ச பஜனையை பாடுங்க. ஆனா, ஒரு நிபந்தனை கையைத் தட்டிக்கொண்டே  ஏற்ற இறக்கமுடன் பாடினால் தான் நாம் கூறிய பயன்கள் கிடைக்கும்.! அதுசரி ஆனால் எனக்கு  மத  பாடல் பிடிக்காது. இருந்தாலும்  எனக்கும் பஜனை பாடி ஆரோக்கியத்தை மேம்படுத்த   ஆவலாக இருக்கிறது என்கிறீர்களா?
"அப்படினா, உங்களை போன்றவர் களுக்காக நாமே தயார் செய்த கீழ்கண்ட் இந்த " இயற்கை பஜனையை பாடுங்களேன்.!


இயற்கையை உணவர்வோம் வாருங்கள்

மண்ணும் மரமும் மழையும் காற்றும் இயற்கையே உணர்வோம் வாருங்கள் …
<2முறை>

☘இயற்கையை உணர்வோம்
இயற்கையை உணர்வோம்
இயற்கையை உணர்வோம் வாருங்கள் …
<2 முறை>

🚣உடலும் மனமும் உலவும் உயிரும் இயற்கையே உணர்வோம் வாருங்கள் …
<2முறை>

🌵இயற்கையை உணர்வோம்
இயற்கையை உணர்வோம்
இயற்கையை உணர்வோம் வாருங்கள் …
<2முறை>

🌄உண்ணும் உணவும் ஒளிரும் கதிரும்
இயற்கையே உணர்வோம் வாருங்கள் …
<2முறை>

🌾இயற்கையை உணர்வோம்
இயற்கையை உணர்வோம் இயற்கையை உணர்வோம் வாருங்கள் …
<2முறை>

🎂தீதும் நஞ்சும்  திறம்படத் தவிர்த்து
இயற்கையை காப்போம் வாருங்கள்

<2முறை>

🌳இயற்கையை உணர்வோம்
இயற்கையை உணர்வோம்
இயற்கையை உணர்வோம் வாருங்கள் …
<2முறை>

☄இந்தப் படாலை முதல் முறை ஒருவரும் அடுத்தமுறை  குழுவினரும்  சேர்ந்து பாடவேண்டும். அதற்காகவே <2முறை> என்று குறிக்கப்பட்டுள்ளது. தனியாக பாடினால் இரண்டு முறையும் ஒரே நபர் பாட வேண்டும்.!

🐾இதை கையைத்தட்டிக் கொண்டே ஏற்ற இறக்கத்துடன் எப்படி பாடுவது என்று யாருக்காவது  தெரியாவிட்டால் கேளுங்கள் நாமே பஜனையாக பாடி பதிந்து உங்கள் உள்ளகத்திற்கு அனுப்பி வைக்கிறோம்.!



இயற்கையோடு இயைந்து இன்புற்று வாழ்வோம்.!
வாழ்க வளமுடன்.!
நலம் பெருகட்டு
இன்றைய மருத்துவ பலன்                                                               ~~~~~~~~~~~~~~~~~~~~~~~~    தினசரி சில துளசி இலைகளை மென்று தின்று தண்ணீர் குடித்து வர தொண்டைப் புண் வராது.*

*பஸ்ஸில் பயணம் செய்யும்போது எலுமிச்சை வற்றலை வாயில் அடக்கிக் கொண்டால் வாந்தி வராது.*

*பொன்னாங்கன்னி கீரையை சூப் செய்து சாப்பிட்டு வர உடல் வலிமை பெறும். மூல சூடு ஏற்படாது.*

*அரைக்கீரை இலைகள் 5-10 வரை தினமும் பச்சையாக வெறும் வயிற்றில் சாப்பிட்டால் சர்க்கரை நோய் கட்டுப்படும்.*

*பிஞ்சு புடலங்காயை பச்சடி செய்து சாப்பிட்டு வர உடல் பலம் பெறும். சொறி, சிரங்கு, அரிப்பு நீங்கும்.*

*பிரண்டையை வதக்கி துவையல் செய்து சாப்பிட்டு வர வயிற்றுப் பூச்சிகள் நீங்கும். ஜீரண சக்தி அதிகரிக்கும்.*

*வேப்பிலைச் சாறுடன் மோர் கலந்து சாப்பிட்டு வர வயிற்றில் பூச்சிகளே இருக்காது.*

*தினமும் மதியம் சாப்பிட்ட உடன் ஒரு வெற்றிலையை சிறிது பாக்கு, சிறிது சுண்ணாம்பு கலந்து சாப்பிட்டால் ஜீரண சக்தி அதிகரிக்கும்.*

*தலையில் நீர் கோர்த்துக் கொண்டு தலைபாரமாக இருந்தால் கருநொச்சி இலைகளைத் தண்ணீரில் போட்டு நன்கு கொதிக்க வைத்து அதன் ஆவியைப் பிடித்தால் உடனே குணமாகும்.*

*சீதாப்பழக் கொட்டைகளைக் காயவைத்து தூளாக்கி நல்லெண்ணெய்யில் கலந்து தலைக்கு தேய்த்து வந்தால் பேன்கள் அழிந்துவிடும்.*

*மூட்டு வலியா? சுக்கை இழைத்து மூட்டுக்களில் தடவினால் குணமாகி விடும்.*

*மாதவிலக்கின் போது, இரத்தப் போக்கு அதிகமானால் சாதம் வடித்த கஞ்சியில் ஒரு டம்ளர் மோர்விட்டுப் பருகினால் இரத்தப் போக்குக் கட்டுப்படும்.*

*முகப் பருவை கிள்ளக் கூடாது. பச்சைப்பயறு மாவை அரைத்து வைத்துக் கொண்டு தினமும் இரவில் பருவின்மேல் பூசி வைத்து , காய்ந்ததும் கழுவி விட வேண்டும். இவ்வாறு செய்தால் விரைவில் முகப்பரு மறையும்.*

*தோல்வியாதிகள் காரணமாக உடம்பின் மேல்பகுதி தடித்து சொரசொரப்பாக இருக்கும்.*           *கொத்துமல்லி தழையை நன்றாக அரைத்து சொர சொரப்பாக இருக்கும் இடத்தின் மீது பூசவேண்டும்.* *இவ்வாறு மூன்று நாள்கள் செய்து வர, தடிப்பு மாறி தோல் மிருதுவாகிவிடும்.*

Sunday, October 2, 2016

டயபர்

குழந்தைகளுக்கு டயப்பர் பயன்படுத்தலாமா? மருத்துவரின் கருத்து!

நாம் பயணத்தில் பார்க்கும் குழந்தைகளில் அநேகருக்கு டயப்பர் அணிவித்திருப்பார்கள். அடிக்கடி ஆடையை மாற்ற வேண்டாம் எனும் வசதிக்காக இதைப் பயன்படுத்துகிறார்கள் ஆனால் இது சரிதானா என்ற கேள்வி வருவதைத் தவிர்க்க முடியாது. குழந்தைகளுக்கு டயப்பர் பயன்படுத்துவதில் உள்ள பாதக விஷயங்களையும் தவிர்க்க முடியாதவர்களுக்கான பயன்படுத்தும் முறைப் பற்றியும் விவரிக்கிறார் குழந்தை நல மருத்துவர் பிரேம் குமார்.

டயப்பரின் கேடுகள்:
இறுக்கமான டயப்பரை அணிவதால், குழந்தைகளின் உடலுக்குத் தேவையான காற்றோட்டம் கிடைக்காது. குழந்தைகளின் சிறுநீர், நீண்ட நேரம் டயப்பரிலேயே இருப்பதால், அதில் இருக்கும் பாக்டீரியாக்கள், குழந்தைகளுக்கு வலியையும், எரிச்சலையும் ஏற்படுத்தும். மேலும், சிறுநீரகப் பாதையில் நோய்த்தொற்று ஏற்படவும் இதுவே காரணம். இந்த எரிச்சலின் காரணமாக குழந்தைகள் சாப்பிட மறுக்கும்.

டயப்பரில் சிறுநீரை உறிஞ்ச, சோடியம் பாலி அக்ரிலேட் என்ற வேதிப்பொருள் பயன்படுத்தப்படுகிறது. கூடவே, நறுமணத்துக்காகவும் சில வேதிப்பொருட்களும் சேர்க்கப்படுகின்றன. இவற்றால் குழந்தைகளுக்கு அலர்ஜி ஏற்படலாம். கால் இடுக்குகளில் அலர்ஜி ஏற்படுவதற்கு இதுதான் முக்கியக் காரணம்.

டயப்பரை  4 மணிநேரத்திற்கு ஒருமுறையாவது கண்டிப்பாக மாற்ற வேண்டும். ஆனால் சில பெற்றோர்கள், குழந்தைகள் அதில் மலம் கழித்ததுகூடத் தெரியாமல், அப்படியே வைத்திருப்பார்கள். இதனால் குழந்தைகள் எளிதாக நோய்த்தொற்றுக்கு ஆளாகி விடுகிறார்கள். இந்தக் கிருமித்தொற்றைத் தடுக்க, சில டயப்பர்களில், ஆன்டிசெப்டிக் பயன்படுத்தப்படுகிறது. இதுவும், குழந்தைகளின் மென்மையான சருமத்தை பதம்பார்த்துவிடும்.

24 மணி நேரமும், டயப்பரிலேயே சிறுநீர் கழிக்கும் குழந்தைகளால், ஒரு குறிப்பிட்ட வயதுக்குப் பின்னரும், சிறுநீர் வருவதை பெற்றோருக்கு உணர்த்த தெரியாது. டயப்பர் போட்டிருப்பதாக எண்ணி, இருந்த இடத்திலேயே சிறுநீர் கழிப்பது அல்லது சிறுநீரை அடக்குவது என்கிற இரண்டு தவறுகளைச் செய்யத் தொடங்குவார்கள். படுக்கையில் சிறுநீர் கழிப்பதற்கு இதுவும் ஒரு காரணம். இந்தப் பிரச்னைகளால், குழந்தைகள் பள்ளியில், பொது இடங்களில் கேலி, கிண்டலுக்கு ஆளாவதால் அவர்களுக்கு தாழ்வு மனப்பான்மை ஏற்படவும் வாய்ப்பு இருக்கிறது.

டயப்பர் பயன்படுத்தும் முறை:

டயப்பர்களைப் பயன்படுத்துவதைத் தவிர்ப்பதே நல்லது. தவிக்க முடியாமல் பயன்படுத்துபவர்கள் கீழ்காணும் சிலவற்றை அவசியம் பின்பற்றுங்கள்.

* குழந்தைகளுக்கு 2 வயது வரை மட்டும் டயப்பர் பயன்படுத்தலாம். டாய்லெட்களைப் பயன்படுத்த குழந்தைகளை 2 வயதில் இருந்தே பழக்கபடுத்துவது சிறந்தது.
* வெளியூர்களுக்குச் செல்லும்போது, குழந்தையை வெளியே எங்கேனும் அழைத்துச் செல்லும்போது மட்டும் டயப்பர் பயன்படுத்தவேண்டும்.
* ஒருநாள் முழுவதும் டயப்பர் பயன்படுத்துவதைத் தவிர்த்து இரவு நேரங்களில் மட்டும் டயப்பரைப் பயன்படுத்தலாம்.
* ஒருமுறை பயன்படுத்தி கழற்றிய டயப்பரை குழந்தை சீறுநீர் கழிக்கவில்லை என்று சிறிது நேரம் கழித்து மீண்டும் அதே டயப்பரை பயன்படுத்துவதைத் தவிருங்கள்.
* டயப்பர் பயன்படுத்துவதில் முக்கியமான விஷயம், அதைப் பாதுகாப்பாக அப்புறப்படுத்துவது. குழந்தைகள் புழங்கும் இடங்களில் அப்படி, அப்படியே கழற்றி வீசுவது, அவர்களுக்கே சுகாதாரமானதல்ல.!

🌈இணையப்பகிர்வு

1௦௦ ஆண்டுகள் ஆரோக்கியமாக வாழும் ரகசியம்

முடிந்தவரைகடைபிடியுங்கள்--

🏆அதிகாலையில் எழுபவன்
🏆 இயற்கை உணவை உண்டு வாழ்கிறவன்                        🏆 முளைகட்டிய தானியங்களை உணவில் பயன்படுத்துகிறவன்     🏆 மண்பானைச் சமையலை உண்பவன்
🏆 உணவை நன்கு மென்று உண்பவன்!
🏆 உணவில் பாகற்காய், சுண்டைக்காய், அகத்திக்கீரை சேர்த்துக் கொள்பவன்
🏆 வெள்ளை சர்க்கரையை உணவு பண்டமாக ஏற்றுக்கொள்ளாதவன்
🏆கோலா, கலர்பானங்களை அதிகம் உபயோகிக்காதவன்
🏆 மலச்சிக்கல் இல்லாதவன்
🏆 கவலைப்படாத மனிதன்
🏆 நாவடக்கம் உடையவன்
🏆 படுத்தவுடன் தூங்குகிறவன்
🏆எந்த வீட்டில் ஃப்ரிட்ஜ் இல்லையோ அந்த வீட்டார் எல்லாரும்
🏆 தினம் ஒரு மணிநேரம் மௌனம் அனுசரிப்பவன்
🏆 கோபம் இல்லாமல் நிதானத்தோடு வாழ்பவன்
🏆 கற்பு நெறி தவறாது வாழ்பவன்
🏆 மன்னிக்கிறவன், மன்னிப்பு கேட்கிறவன்
🏆 ஈகை மனப்பான்மையை வளர்ப்பவன்
🏆 வளையாத முதுகுத்தண்டுடன் நிமிர்ந்து உட்கார முடிந்தவன்
🏆 இடது பக்கமாக படுத்து காலை நீட்டி நித்திரை செய்பவன்
🏆தூங்கி எழுந்ததும் காலை 2டம்ளர் சுத்தமான தண்ணீர் பருகுபவன்
🏆 உணவு உண்ண வேண்டிய முறையறிந்து உண்பவன்
🏆 வாழ்க்கையில் நம்பிக்கை, பொறுமையுடன் வாழ்பவன்
🏆 10 நாட்களுக்கு ஒருமுறை உண்ணா நோன்பு இருப்பவன்
மேற்கண்ட முறைகளை கடைபிடிப்பவன் 100 ஆண்டுகள் இவ்வுலகில் நோயின்றி வாழ்வான் ---- அன்புடன் ” சித்தர் அடிமை “

இப்படி சமைக்கலாமே

வித்தியாசமான முறைகளில் நாம் உணவுப் பொருட்களை சாப்பிட என்ன காரணம்?
ஒவ்வொரு உணவுப் பொருளிலும் இருக்கும் சத்துக்களை முழுமையாகப் பெறவேண்டும் என்றால், அதற்கு ஏற்றபடி சாப்பிடவேண்டியதிருக்கிறது.
உதாரணத்திற்கு முட்டையை நன்கு வேகவைத்து சாப்பிட்டால்தான், அது முழுமையாக ஜீரணமாகி, சத்துக்கள் எல்லாம் உடலில் சேரும். முட்டையை வேகவைக்காமல் பச்சையாக சாப்பிட்டால் சரியாக ஜீரணமாகாது. சத்துக்களும் உடலில் முழுமையாக சேராது.
பச்சைக் காய்கறிகள், கீரைகள், பருப்பு வகைகளை சமைக்கும்போது, அதிலுள்ள சில சத்துக்கள் வெளியேறி, வீணாகிவிடுகின்றன. குறிப்பாக நீரில் கரையக் கூடிய வைட்டமின்களாகிய (Water Soluble Vitamins) வைட்டமின் ‘C’ மற்றும் ‘B வைட்டமின்கள் (தயமின், ரைபோப்ளேவின், நியாசின், பேன்டொதெனிக் அமிலம், பிரிடாக்ஸின், போலிக் அமிலம், கொபாலமின்), கொழுப்பில் கரையக்கூடிய வைட்டமின்களாகிய வைட்டமின் A, D, E, K, பொட்டாசியம், மக்னீசியம், சோடியம், கால்சியம் ஆகியவை சமைக்கும்போது உணவுப் பொருட்களை விட்டு வெளியேறிவிடுகிறது.
நாம் பெரும்பாலான உணவுகளை தண்ணீர் சேர்த்து சமைக்கிறோம். அந்த தண்ணீர் சூடாகும் அளவைப் பொறுத்து, அந்த உணவுப்பொருட்களிலுள்ள சத்துக்கள் வெளியேறுகிறதா, இல்லையா என்பது தெரியவரும். இளஞ்சூடு (Poaching), காய்ச்சுவது (Simmering), கொதிக்க வைப்பது (Boiling) இந்த மூன்றிலும் தண்ணீர் சுடும் அளவு மாறுபடும்.
காய்கறிகள் மூலம்தான் நமது உடலுக்கு தேவையான வைட்டமின் ‘C’ சத்து அதிக அளவில் கிடைக்கிறது. ஆனால் காய்கறிகளை அதிக அளவில் கொதிக்கும் தண்ணீரில் சமைக்கும் போது வைட்டமின் ‘C’ சத்து அதிக அளவில் காய் கறிகளை விட்டு வெளியேறுகிறது. அதை உண்ணும்போது குறைவான அளவு வைட்டமின் ‘C’ சத்துதான் நமக்கு கிடைக்கிறது.
சரி! முழு சத்துக்களையும் பெற காய்கறிகளை சமைக்காமலே சாப்பிட்டுவிடலாமா?
சாப்பிடலாம்தான்! கேரட், வெள்ளரிக்காய், தக்காளி, வெங்காயம் போன்றவைகளை சாப்பிட்டுவிடலாம். கத்தரிக்காயை சாப்பிடமுடியாதே! உருளைக்கிழங்கையும் சாப்பிட முடியாதே! அவைகளை வேகவைத்துதானே சாப்பிட்டாகவேண்டும்.
மீன் துண்டுகளை குழம்பாக வைத்து சாப்பிடும்போது, அதிலிருக்கும் ஒமேகா3 கொழுப்பு அமிலம் நமக்கு முழுமையாக கிடைக்கும். மீன் துண்டை வறுத்தாலோ, மைக்ரோ ஓவனில் வைத்து சூடு பண்ணினாலோ, அந்த மீனிலுள்ள ஒமேகா3 கொழுப்பு அமிலம் முழுமையாக கிடைக்காது.
கிரில்லிங் (Grilling ) என்று சொல்லக்கூடிய முறையில் சூடாக்கப்பட்டு கோழி இறைச்சி தயாரிக்கப்படுகிறது. இந்த முறையில் வெப்பம் கீழேயிருந்து மேலே வரும். சாலையோர உணவகங்களில் கிரில்லிங் செய்யப்படுவது வெளியே இருந்து பார்த்தாலே தெரியும். இது சாப்பிட ருசியாகத்தான் இருக்கும். ஆனால் கிட்டத்தட்ட 40 சதவீத வைட்டமின் சத்து, அந்த கோழி இறைச்சியிலிருந்து வழியும் கொழுப்பு சாறுடன் சேர்ந்து வெளியேறிவிடும்.
இதேபோல் ப்ராய்லிங் (Broiling) என்று சொல்லக்கூடிய முறையிலும் இறைச்சி போன்ற உணவுப் பொருட்கள் தயாரிக்கப்படும். இந்த முறையில் வெப்பம் மேலேயிருந்து கீழே வரும். இதிலும் 40 சதவீத சத்துக்கள் வழிந்து, வீணாகும். இந்த கிரில்லிங், ப்ராய்லிங் இரு உணவு தயாரிப்பு முறைகளிலும், ‘பாலிஸைக்ளிக் அரோமேட்டிக் ஹைட்ரோ கார்பன்’ (Polycyclic Aromatic Hydrocarbon ) என்ற வேதிப்பொருள் சேர்க்கப்படு கிறது. இது புற்றுநோயை உருவாக்குவதாகும்.
அதிர்ஷ்டவசமாக இந்தப்பொருள், இறைச்சித் துண்டிலிருந்து வழியும் கொழுப்போடு சேர்ந்து வெளியேறிவிடுகிறது. கீழே வழிந்திருக்கும் கொழுப்புக் கரைசலை வழித்தெடுத்து வெளியே போட்டுவிட்டால், நமக்கு ஆபத்தில்லை. சுவைக்காக அதை மீண்டும் எடுத்து கலந்துவிட்டால் நமக்கு ஆபத்து.
மைக்ரோவேவ் ஓவனை பயன்படுத்தி சமைப்பது ஓரளவு நல்லது. விரைவாக இதில் சமையல் முடிந்துவிடும் என்பதால், அதிக நேரமும்- அதிக வெப்பமும் அந்த உணவில் நிலைகொண்டிருக்காது. அதனால் அந்த உணவுப் பொருட்களிலுள்ள சத்துக்கள் ஓரளவு பாதுகாக்கப்படும். குறிப்பாக பூண்டு, காளான் போன்றவைகளில் இருக்கும் நோய் எதிர்ப்பு சக்தி சத்துக்கள், மைக்ரோவேவ் ஓவன் சமையல் மூலம் பாதுகாக்கப்படுகிறது.
‘பேப்பர் ரோஸ்ட்’ தோசை சாப்பிடுவது பலருக்கும் பிடிக்கும். ‘ரோஸ்ட்டிங்’ (Roasting) என்கிற முறையில் இது தயாரிக்கப்படுகிறது. உலர்ந்த வெப்பத்தில் (Dry heat) இது தயாராகிறது. ‘ரோஸ்ட்டிங்’ முறையில் பலவிதமான உணவுகள் தயாரிக்கப்பட்டாலும், ரோஸ்ட் என்று சொன்னாலே சைவப் பிரியர்களுக்கு தோசையும், அசைவப் பிரியர்களுக்கு ‘மட்டன் ரோஸ்ட்டும்’ ஞாபகத்துக்கு வரும். ‘ரோஸ்ட்டிங்’ முறையில் உணவு தயாரிக்கும்போது, அதிக அளவு வைட்டமின் சத்து இழப்பு ஏற்படுவதில்லை.
‘Stir Frying’ என்று சொல்லக்கூடிய இந்த உணவுத் தயாரிப்பு முறையில், உணவுப் பொருட்கள் ஒரு நீண்ட கை கொண்ட கடாயில் (Sauce Pan) போடப்பட்டு சிறிதளவு எண்ணெய் அல்லது வெண்ணெய் ஊற்றப்பட்டு அதிக வெப்பத்தில் வறுக்கப்படும். தொடர்ந்து கிளறிக் கொண்டே இருப்பதால், சீக்கிரம் உணவுப்பொருள் வெந்துவிடும். அதிக நேரம் வெப்பத் தாக்குதலுக்கு உட்படாததாலும், தண்ணீர் சேர்க்கப்படாததாலும் சத்துக்கள் வெளியேறுவதில்லை. கொழுப்பில் கரையக்கூடிய வைட்டமின்கள் வறுக்கும்போது வெளியேறுவதில்லை. வீணாகுவதும் இல்லை.
‘Deep Frying’ என்பது அதிக வெப்பத்தில், அதிக எண்ணெய் உபயோகித்து செய்யப்படுவது. இந்த முறையில் உணவு தயாரிக்கும்போது கொஞ்சம் அசந்தாலும் உணவு கரியாகிவிடும். அந்த அளவுக்கு எண்ணெய் கொதித்திருக்கும். அதிக உஷ்ணமும் இருந்து கொண்டிருக்கும்.
இந்த முறையில் தயாரிக்கப்படும் உணவு நன்றாக வெந்துவிடும். இதில் கொழுப்பும் உருகி உணவோடு சேர்ந்து விடுவதால், சுவை அதிகமாக இருக்கும். பொரிக்கும்போது அதிக அளவில் எண்ணெய்க்கு வெப்பம் ஏறுவதால், அல்டிஹைடு (Aldehyde) என்று சொல்லக்கூடிய விஷப்பொருள் ஒன்று உருவாகிறது. இது புற்றுநோயை உண்டாக்கும் சக்தி உடையது. எனவே பொரிக்கும் உணவை சாப்பிடும்போது எச்சரிக்கை உணர்வு மிக அவசியம்.
ஸ்டீமிங் (Steaming ) அதாவது ஆவியில் வேகவைப்பது, இதுதான் மிகச்சிறந்த உணவு தயாரிப்பு முறை. இந்த முறையில் உணவு தயாரிக்கும்போது சத்துப் பொருட்கள் எதுவும் வீணாவதில்லை. வெளியேறுவதில்லை!

🌾இணையப்பகிர்வு

Saturday, October 1, 2016

உறவு முறைகள்

👉 *உறவு முறைகள்* *பற்றி*
*மிகவும் சிந்திக்கவேண்டிய*
*one of the BEST பதிவு*
~~~~~~~~~~~~

*அண்ணன், தம்பி, அக்கா,* *தங்கை, சின்ன அண்ணன்,* *பெரிய அண்ணன், சின்ன அக்கா,* *பெரிய அக்கா,*
*சித்தப்பா, பெரியப்பா, அத்தை, மாமா, மச்சான்,* *மச்சினி, அண்ணி, கொழுந்தனார், நாத்தனார்,* *தாய்மாமன், சித்தப்பா பையன், சித்தப்பா பொண்ணு,*
*பெரியப்பா பையன்,*
*பெரியப்பா பொண்ணு,*
*அத்தை பையன்,*
*அத்தை பொண்ணு,* *மாமன்* *பொண்ணு,*
*மாமன் பையன்,*

இது போன்ற வார்த்தைகள் எல்லாம் 2050  க்குமேல் யாருடைய காதிலும் விழாது,

யாரும் கூப்பிடவும் மாட்டார்கள்,

அகராதியில் இருந்து கூட கொஞ்சம் கொஞ்சமாக அழிந்துவிடும்

👉 *காரணம், . . .*

ஒண்ணே ஒண்ணு, கண்ணே கண்ணு என்று ஒரே ஒரு குழந்தை மட்டும் போதும் என்று முடிவெடுக்க ஆரம்பித்ததுதான்!

அப்படி இருக்கும் போது இந்த உறவுகள் எல்லாம் எப்படி வரும்?

பெண்கள் வயதுக்கு வந்ததும் சீர்வரிசை செய்யவோ, பந்தல் போடவோ, முதல் புடவை எடுத்துத்தரவோ, எந்த தாய்மாமனும் இருக்கப்போவது இல்லை!

திருமணத்தின் போது அரசாணைக்கால் நட
எந்த அண்ணனும் இருக்கப்போவதில்லை,

மாப்பிள்ளைக்கு மோதிரம் போட எந்த தம்பியும் இருக்கப்போவதில்லை,

குழந்தைக்கு மோட்டை போட யார் மடியில் உட்கார வைப்பார்கள்?

கட்டிக்கொடுத்த பெண்ணுக்கு எதாவது பிரச்சனை என்றால் அண்ணனும் தம்பியும் பறந்து செல்வார்கள்,

👉 *இனி யார் போவார்?*

ஒவ்வொரு பெண்ணும், சொந்தபந்தம் ஏதுமின்றி
ஆறுதலுக்கு ஆள் இன்றி தவிக்க போகிறார்கள்

ஒவ்வொரு ஆணும்
தன் கஷ்டநஷ்டங்களில் பங்குகொள்ள அண்ணன் தம்பி யாருமின்றி அவதிப்பட போகிறார்கள்.

அப்பா அம்மாவை தவிர எந்த உறவுகளும் இருக்கப்போவதில்லை,

அந்த ஒரு குழந்தையும்
வெளியூருக்கோ
இல்லை தனிக்குடித்தனமோ சென்றுவிட்டால், . . .
ஒண்ணே ஒண்ணு கண்ணே கண்ணு என்று வளர்த்தவர்கள் எல்லாம் வயதான காலத்தில், ஏனென்று கேட்க நாதியற்று முதியோர் இல்லத்திலோ இல்லை அந்த ஒரு குழந்தைக்காக கட்டிய வசதியான வீட்டிலோ அனாதையாக கிடந்து சாவார்கள்!

உறவுகளின் உன்னத மதிப்பை உணராமல் பொருளாதார முன்னேற்றத்தை மட்டுமே குறிக்கோளாக கொண்டு
ஒரு குழந்தைக்கு மேல் வேண்டாம் என சோம்பேறித்தனப்பட்டு
எந்திர வாழ்க்கை வாழ்ந்து கொண்டு இருக்கும் அத்தனைபேருக்கும்
இதே நிலைதான் !

உடல்நிலை சரியில்லாமல் ஆஸ்பிடலில் சேர்க்கப்பட்டால் ஓடோடி வந்து பார்க்க உறவுகள் வேண்டாமா?!

சின்னச்சின்ன விஷயங்களுக்கெல்லாம்
எனக்கு உனக்கு என்று சண்டைபோடும் அதே குழந்தைகள் தான், . . .

வயதான காலத்தில் அப்பா அம்மாவுக்கு எதாவது ஒன்று என்றால் நான் நீ என்று ஓடிவருவார்கள்!

கணவன் குடும்பம் குழந்தை என்று உயிரைவிட்ட பெண்கள் கூட பெற்றோருக்கு
ஒன்று என்றால் அத்தனையும் தூக்கியெறிந்துவிட்டு முதலில் வந்து நிற்பார்கள்!

ஒரே ஒரு முறை உங்கள் கடைசி காலத்தை நினைத்து
பாருங்களேன்.!
பணமில்லாத ஒருவனை அனாதை என்று யாரும் சொல்வதில்லை!

*ஆனால் உறவுகள் இல்லாத ஒருவன் எத்தனை கோடி வைத்திருந்தாலும் அனாதைதான் என்பதை மறந்துவிடக்கூடது!*

கார் பங்களா வசதி வாய்ப்புகளுடன்
ஒண்ணே ஒண்ணு கண்ணே கண்ணு என்ற பெயரில் உறவுகளற்ற ஒரு அனாதையை வளர்ப்பதற்கும்,

*வயதான காலத்தில் நாதியற்று சாவதற்குமா இவ்வளவு பாடுபட்டு, . . .

*ஓடி ஓடி சம்பாதிக்கிறீர்கள்?*

சிந்தியுங்கள் மக்களே …!