Thursday, August 4, 2016

கீல் வாதம்

இயற்கை வழியில் கீல்வாதத்தை குணப் படுத்துங்கள்⛷்  கடுகை தூளாக்கி கொஞ்சம் நீர்விட்டுக் குழைத்து கெண்டைக்கால் வலி, குதிகால் வலி, மூட்டுவலி, கீழ்வாதம் போன்ற பிரச்சனை இருப்பவர்கள் வலியுள்ள இடத்தில் சுற்றிப் போட்டுவிட்டு உயரமான இடத்தில் கால்களை வைத்து அரைமணி நேரம் இளம்வெயிலில் அமர்ந்துவந்தால் ஒருவாரத்தில் மேற்கண்ட வலிகள் மறையும்.    AUM HERBALS amyogatrust.blogspot.in

Tuesday, August 2, 2016

தெரிந்த ஆசனமும் தெரியாத இரகசியமும்

 🍎 உலக யோகா தினத்தை முன்னிட்டு இந்தியா முழுக்க கிட்டத்தட்ட ஐயிரத்திற்கும் மேற்பட்ட  மருத்துவ மனைகளில் யோகாசன வகுப்புகளை எடுக்கத் திட்டமிட்டுள்ளோம். இதில் கன்னியாகுமரி மாவட்டத்தில்  உள்ள எட்டு மருத்துவ மனைகளும்   அடங்கும். உங்களால் இந்த எட்டு வகுப்புகளையும் ஒரு வார காலத்தில் எடுக்க முடியுமா? என்று; டில்லியை சேர்ந்த Abbott என்ற  மருந்து கம்பெனியிலிருந்து டாக்டர். ஷாலினி என்பவர் நம்மை தொடர்புக்கொண்டிருந்தார். சரியென்று யோகா தினத்தன்று புத்தேரியில் உள்ள CBH மருத்துவமனை அடுத்தநாள் ஹோலிகிராஸ் மருத்துவமனை என்று நாமும்  தொடர்ந்து எட்டுவகுப்புகளை எடுத்து நிறைவுசெய்தோம்🍎  பயிற்சியில் மருத்துவர்கள், தாதியர்கள் மற்றும் மருத்துவ பணியாளர்கள் திரளாக கலந்துகொண்டனர். பல மருத்து வமனையில்  ஏசி ஹாலில் பயிற்சிக்கான ஏற்பாடுகளை செய்திருந்தது வேடிக்கையாக இருந்தது👀 இதுதான் உங்க இரகசியமா ,என்று பொருமை இழக்கவேண்டாம்.  இப்பொழுது விசயத்திற்கு வருகிறேன் அந்த மருந்துகம்பெனி மூலம் மலச்சிக்கலைப் போக்குவதற்கான ஆசனங்களை வடிவமைத்து அதற்கு🍅🍇 Constipasana   என்று  ஒரு பெயரை சூட்டியுள்ளார்கள். இதை மருத்துவர்களும் மருத்துவமனை பணியாளர்களும் கற்றுக்கொண்டு நோயாளிகளுக்கு பரிந்துரைக்க செய்ய வேண்டும் என்பதே திட்டம்.🌶 நான் CBH மருத்துவமனையில் யோகாவை நிறைவு செய்ததும் ஒரு நர்ஸ் ஒடிவந்து கடைசியில் செய்தது என்ன ஆசனம் சார்? அதை செய்து முடித்ததும்  என் உடலெல்லாம் ஒருவித அதிர்வுகளை உணர்ந்தேன், உடலில் இரத்தம் ஒடுவது, இதயம் துடிப்பது என்று எல்லாம் துல்லியமாக தெரிந்தது அதுவும் இறுதியில் வயிற்றில் கைவைத்து படுத்திருந்த போது மன ஓட்டம் முற்றிலும் நின்று உடம்பில் புதிய  சக்தி தோன்றியதுபோல் இருந்தது. உண்மையில் இது என்ன, எனக்கு ஆச்சரியமாக உள்ளது என்றார்🎿 நான்கூறினேன் அந்த ஆசனத்தின் பெயர் சாந்தியாசனம் உடலை தளர்த்தவும் அதனோடு தியான நிலையை  உணர்த்தவும் செய்யும் பயிற்சி என்றேன். உடனே,  நல்ல அனுபவம் சார் என்று  நன்றிபெருக்கோடு கூறினார். தினமும் பயிலுங்கள் என்று கூறிவிட்டு விடைபெற்றேன்.!   பல ஆண்டுகளாக யோகா செய்தேன் எனக்கு ஒன்றும் கிடைக்கவில்லை என்பவர்கள்  உணர்வில்லா பிண்டங்கள்.! ஒரே நாளில்  உணர்வின் எல்லையை கண்ட இந்த மங்கையே யோகாசன இரகசியம் தெரிந்த ஞானி என்று எனக்குத் தோன்றியது⛷.amyogatrust.blogspot.in

தோ ப் புக் கரணம்

மூளையின் செயல் திறனை அதிகரிக்கும் தோப்புக்கரணம்.

இடது கையால் எந்த பணியை செய்தாலும் வலது பக்க மூளை செயல்திறன் அதிகரிக்கும்.

வலது கையால் எந்த பணியை செய்தாலும் இடது பக்க மூளை செயல்திறன் அதிகரிக்கும்.

உடற்பயிற்சி செய்யும் பொழுது இடதின் ஆற்றாலும், யோகா செய்யும் பொழுது வலதின் ஆற்றலும் அதிகரிக்கும்.

இடது மூளையின் செயல்பாடு தர்க்க அறிவு, வலதுமூளையின் செயல்பாடு ஆழ்மன, ஞானஅறிவு இந்த இரண்டு பக்க மூளையும் சமபலத்துடன் செயல்பட வேண்டுமானால் இரண்டு கைகளையும் சமமாக செயல்படுத்த வேண்டும், அல்லது தினமும் 50 தோப்புக்கரணங்கள் போடவேண்டும்.

ஏனெனில் கைகளை மாற்றி, காதைப்பிடித்து தோப்புக்கரணம் போடும் போது இரண்டு பக்க மூளையும் சிறப்பாக வேலை செய்வதை ஆராய்ந்து கண்டறிந்திருக்கிறார்கள் விஞ்ஞானிகள். தற்போது மேற்கு நாடுகளில் பிரெய்ன் யோகா என்று நமது தோப்புக்கரணம் பிரபலமாக இருக்கிறதாம், ஆனால் … நம்மவர்கள் பலருக்கு காலை மடக்கி அமர்ந்து எழவே முடியவில்லை.!

‎நம்முன்னோர் பழக்கங்கள், ஆற்றலின் கவசங்கள் என்பதை உணர்ந்து, அவர்களின் பழகங்களை, காரணம் அறிந்து பின்பற்றி... நலமோடும்... வளமோடும் வாழ்வோம்...

நன்றி : ஆம்யோக ட்ரஸ்ட் 

அருகம்புல்

தீராத நோய்களை தீர்க்கும் அருகம்புல் - இயற்கை மருத்துவம்

பிரபஞ்சத்தில் முதல் முதலில் முளைத்த மூலிகை அருகம்புல். தீராத நோய்களுக்கு அருகம்புல் மிளகு தீர்க்கும் என்பது முன்னோர்களின் பழமொழியாகும். இந்து சமய வழிபாட்டில் வினாயகர் முதற்கடவுள். அவருக்கு அருகம்புல்லை சாற்றி வழிபாடு செய்கிறோம்.

அருகம்புல் திரிதோஷம், கோழை, கண்ணோய், சிரங்கு, சிரஸ்தாபம், ரத்த பித்தம், மருந்துசுடு, வயிற்றுபுண், வெள்ளை இப்படிபட்ட வியாதிகளுக்கு நல்ல மருந்தாக விளங்குகிறது.

பசுமையான, அகலத்தில் குறுகிய, நீண்ட கூர்மையான இலைகள் தாவரம் முழுவதும் காணப்படும். தண்டு குட்டையானது, நேரானது. ஈரப்பாங்கான வயல் வரப்புகள், தரிசு நிலங்கள் மற்றும் சாலை ஓரங்களில் மிகுதியாகக் காணப்படும். வெப்பமான சூழ்நிலைகளிலும் வளரக்கூடிய தன்மையை அருகம்புல் கொண்டுள்ளது.

மருத்துவப் பயன்கள் மற்றும் மருந்து முறைகள்

முழுத்தாவரமும் இனிப்புச் சுவையும், குளிர்ச்சித் தன்மையும் கொண்டதாகும். உடல் வெப்பத்தை அகற்றும்; சிறுநீர் பெருக்கும்; உடலைப் பலப்படுத்தும்; குடல் புண்களை ஆற்றும்.

அருகம்புல் ஒரு கைப்பிடி அளவு சேகரித்துச் சுத்தம் செய்து கொள்ள வேண்டும். இதனை, ஒன்றிரண்டாக நறுக்கி, 4 டம்ளர் தண்ணீரில் இட்டு, சிறிதளவு  மிளகுத்தூள் சேர்த்து, 1 டம்ளராகக் காய்ச்சி, வடிகட்டிக் கொள்ள வேண்டும். இத்துடன், தேவையான அளவு பனங்கற்கண்டு சேர்த்து, இளஞ்சூடாக, தினம் இரண்டு வேளைகள் குடித்து வரவேண்டும். அதனை தொடர்ந்து செய்து வந்தல் வெள்ளைப்படுதல் பிரச்சனை படிப்படியாக தீரும்.

தேவையான அளவு அருகம்புல் சேகரித்துக் கொண்டு, சிறிதளவு மஞ்சள் சேர்த்து பசையாக அரைத்து, உடலில் தேய்க்க வேண்டும். ஒரு மணி நேரம் ஊறிய பின்னர் குளிக்க வேண்டும். சொறி, சிரங்கு, புண்கள், படர்தாமரை, உடல் அரிப்பு குணமாகும் வரை இவ்வாறு தொடர்ந்து செய்து வரலாம்.

ஒரு கைப்பிடி அளவு பசுமையான அருகம் புல்லைச் சேகரித்துக் கொண்டு, நீரில் கழுவி, அரைத்து, காலையில் மட்டும் காய்ச்சாத ஆட்டுப்பாலில் கலந்து குடிக்க வேண்டும். தொடர்ந்து இரண்டு மாதங்கள் வரை இவ்வாறு செய்யலாம். நரம்புத் தளர்ச்சி கட்டுப்படும்.

அருகம் சாறு 20 மி.லி. அளவு, தண்ணீர் 20 மி.லி., தேக்கரண்டி அளவு சர்க்கரை சேர்த்து காலையில் வெறும் வயிற்றில் தொடர்ந்து 30 நாட்கள் சாப்பிட வேண்டும். இவ்வாறு தொடர்ந்து குடித்து வந்தால் வயிற்றுப்புண் குணமாகும்.🍁🍃🍂 இணையப்பகிர்வு🌾🍁🍂🌾

சர்க்கரை வியாதி

யோகா ஆசிரியருக்கு வந்த சக்கரைவியாதி இரண்டு மாதங்களுக்கு முன்  நாகர்கோவிலில் புகழ்ப்பெற்ற ஒரு யோகா ஆசிரியர் என்னைப் பார்க்க வேண்டும் என்று கூறி , எப்ப வரலாம் என்று கேட்டார் நானும் காலை 11 மணிக்குள் என்றால் நமது பார்வதிபுரம் பயிற்சியகத்தில் சந்திக்கலாம் என்று கூறினேன். சரியென்று அடுத்தநாளே காலை ஒம்பது மணிக்கு வந்துவிட்டார். அவர் வந்தநேரம் ஓய்வுப்பெற்ற ஒரு ஆசிரியருக்கு சக்கரை நோயை குணப்படுத்தும் ஆசனங்களை கற்றுக் கொடுத்துக் கொண்டிருந்ததால் சற்றுநேரம் காத்திருங்கள் வந்துவிடுகிறேன் என்றேன்.! <அது என்னவோ தெரியலை பொதுவாக ஆசிரியப்பணி செய்பவர்களுக்கே சக்கரை நோய் அதிகமாக வருகிறது> நண்பர் உடனே இதோ வந்துவிடுகிறேன் என்று கிளம்பிவிட்டு பிறகு அடுத்த நாள் அதே நேரம் வந்து பள்ளி ஆசிரியருக்கு அளிக்கும் பயிற்சியை கொஞ்ச நேரம் பார்த்துக் கொண்டிருந்துவிட்டு அவர் பயிற்சி முடிந்து போனதும். நேற்று ஒரு அவசர வேலை வந்துவிட்டதால் சென்றுவிட்டேன் என்று கூறிக் கொண்டிருக்கும் போதே அவரின் கைப்பேசிக்கு ஒரு அழைப்பு வந்தது எடுத்துப் பேசியவர் தன்னால் இன்று  வரமுடியாது. வேண்டுமானால் வேறு ஒரு யோகா ஆசிரியரை அனுப்புகிறேன் என்றார் எதிர்முனையில் என்ன சொன்னார்களோ தெரியல கைப்பேசியை வைத்துவிட்டு பேச்சை தொடர்ந்தார் … சக்கரைவியாதியை நீங்கள் யோகாவின் மூலம் குணப்படுத்துவதாக விளம்பரம் செய்துள்ளீர்கள், இது எந்த அளவிற்கு சாத்தியம்? எனென்றால்  எனக்கும் மூன்று ஆண்டுகளாக சக்கரை உள்ளது.நானும்  சக்கரைக்காக பரிந்துரைக் கப்பட்டுள்ள வக்ராசனம், சலபாசனம், மயூராசனம் போன்றவற்றை தினமும் செய்துவருகிறேன். ஆனாலும், எந்த இனிப்பை சாப்பிட்டாலும் சக்கரை ஏறிவிடுகிறது, தினமும் இரண்டு அலோபதி மாத்திரைகளை போட்டால் மட்டுமே ஓரளவிற்கு தாக்குப்பிடிக்க முடிகிறது என்று அவர் கூறவும் மீண்டும்  கைப்பேசி ஒலித்தது. நான் அவரிடம் கூறினேன் நண்பரே தயவாய் இப்பொழுது சென்றுவிட்டு உங்களுக்கு கைப்பேசி அழைப்பு வராத நேரத்தில் வாருங்கள் அல்லது கைப்பேசியின் இயக்கத்தை நிறுத்திவிட்டு பேசுங்கள் என்றதும் கைப்பேசியை அதிர்வு நிலையில் போட்டு  கொஞ்சம் தூரமாக வைத்துவிட்டு  என்னைப் பார்த்தார்   நான் கூறினேன்; " சக்கரை என்பது ஒரு வியாதியே அல்ல, அது உடலியல் இயங்குத் திறனில் ஏற்ப்பட்ட ஒரு தடுமாற்றம் மட்டுமே ஆறுமாதம் வரை தொடர்ந்து நாம் வரையறுத்துக் கூறும் யோகா நுட்பங்களுடன், உணவு முறை, வாழ்க்கை முறை மற்றும் மூலிகை மருந்துகளை எடுத்துக் கொண்டால்  சக்கரை குணமாகிவிடும். நம்மிடம் பயிற்சி ஆரம்பித்த பத்தே நாட்களில்  நீங்கள் பயன்படுத்தும்  ஆங்கில மாத்திரை அல்லது இன்சுலினை  ஒருவேளையாக இருந்தால் முற்றிலும் நிறுத்திவிடலாம். இரண்டு வேளையாக இருந்தால் அதிகப்பட்சம் ஒரு மாதத்தில் நிறுத்தி ஆரோக்கியமாக வாழலாம். பயிற்சி ஆரம்பித்த சிலநாட்களிலேயே நாவறட்சி, அதிமூத்திரம், உடல்சோர்வு, எடைகுறைதல், பசியின்மை, படப்படப்பு போன்ற அனைத்தும்  கட்டுப்பாட்டில் வந்துவிடும், எல்லா வகையான இயற்கை இனிப்புகளையும் தராளமாக சாப்பிடலாம்  நீங்கள் நம்மிடமோ அல்லது வேறு எந்த ஆய்வகத்திலேயோ சக்கரை பரிசோதனை செய்துபார்த்தாலும் சக்கரை அளவு முன்பை விட குறைந்துகொண்டே வந்து ஆறுமாதத்தில் முழு குணம் கிடைக்கும் "  ' அய்யா கோபித்துக் கொள்ள வேண்டாம்  பிறகெதற்கு இதை குணப்படுத்தவே முடியாது என்று கூறுகிறார்கள்? " அது அறியாமை அல்லது வியாபர யுத்தியாக இருக்கலாம் " நீங்கள் கூறுவதை எப்படி நம்புவது? என்று அவர் கேட்டதும் நமது இன்சுலின் ஆவணப்பட குறுந்தகட்டை கொடுத்து இதைப்பாருங்கள் சகோதரரே.! ஒரு மாதத்திலேயே ஆங்கில மருந்துகளை நிறுத்தி யோகாவால்  தங்கள் சக்கரையை சீரமைத்துக் கொண்டவர்களின்  முழு விபரமும் இதில் உள்ளது. என்று நாம் கூறியதும் மிக நல்லது  என்று கூறி டிவிடியை வாங்கிவிட்டு எழுந்து இதைப் பார்த்துவிட்டு வருகிறேன் என்று  விடைபெற  முயன்றார்.  குறுந்தகடின் விலை 250 ரூபாய் " என்று நான்   கூறினேன்; உடனே அவர் இலவசம் என்று கேள்விப்பட்டேனே என்று புருவத்தை உயர்த்தினார்;  கூறினேன்; "நண்பரே எளிய ஆலோசனைகளுக்கு நாம் கட்டணம் வாங்குவதில்லை, அதுபோலவே வருடத்தில் பாதிநாட்கள் ஒவ்வெரு வியாதிக்கும் தனித்தனியாக ஆராய்ச்சிப் பூர்வமாக இலவச வகுப்புகளுடன் மூலிகை மருந்துகளும் இலவசமாக வழங்குகிறோம். ஆனால், நமது டிவிடி, புத்தகம், பல்வேறு நோய்தீர்க்கும் மூலிகை மருந்துகள் போன்றவற்றை கட்டணத்திற்கே கொடுக்கிறோம்" என்றதும் எவ்வளவு என்று கேட்டுக் கொண்டு பிறகு நமது புத்தகம், சிறுகுறிஞ்சான் மாத்திரை போன்றவற்றையும் பணம் செலுத்தி வாங்கிசென்றார். ஆனால், இதுவரை  பயிற்சிக்கு வரவில்லையே என்று  நினைத்துக் கொண்டிருந்தேன். நேற்று மதியம் போன் செய்து  அய்யா, சக்கரை மாத்திரைகளை நிறுத்திவிட்டேன் எனது வழக்கமான ஆசனப்  பயிற்சிகளோடு உங்கள் டிவிடியில் கூறப்பட்டுள்ள கிரியை, பிராணாயாமப் பயிற்சியையும் சேர்த்து செய்துவருகிறேன். சக்கரை கட்டுக்குள் இருக்கிறது. முன்பிருந்த அடிக்கடி நாவறட்சி ஏற்படுதல், இரவில் இரண்டு மூன்றுமுறை எழுந்து சிறுநீர் கழிப்பது இப்போது இல்லை. அதோடு முன்பு அடிக்கடி ஏற்படும் வயிற்று உப்புச குறைபாடுகளும் சரியாகி விட்டன என்று மகிழ்வாக கூறியதோடு நானும் இப்பொழுது யோகாவுடன் இயற்கை வாழ்வியல் முறைகளையும் உணவு முறையையும் சேர்த்து எனது மாணவர்களுக்கு கற்பிக்கிறேன். இப்பொழுதுதான் என்னால் குற்ற உணர்வில்லாமல் பிறருக்கு பயிற்சி கொடுக்க முடிகிறது. என்றார். அதானே;  யோகா சக்கரையை கட்டுப்படுத்தும் என்று சொல்லிக் கொண்டே ஆசிரியர் மாத்திரையை போட்டுக் கொண்டு வகுப்பெடுத்தால் அது கேலிக் குறியதாகத்தான்  இருக்கும். இயற்கை இன்னும் யாருக்கெல்லாம் தன் அருளாசியை வழங்கி தூய்மைப்படுத்த முனைகிறதோ அவர்களெல்லாம் பாக்கியவான்களே.! நலம் பெருகட்டும் … amyogatrust.blogspot.in AM HERBALS Mobile:9629368389

சாந்தியாசனம்

ஒரே ஆசனம் ஓகோனு  ஆரோக்கியம்✡    சிலநாட்களுக்கு முன் நமது வாட்ஸ் அப் பக்கத்தில் ஒரு  யோகாசனத்தை பற்றி எழுதி இருந்தேன்✡ இதைபடித்த ஒரு வெளிநாட்டு நண்பர்   என்னங்க இது? விளம்பரத்திற்காக இதைதான் சொல்லலாம்னு இல்லையா?.  நீங்க குறிப்பிட்ட அந்த ஆசனத்தை நானும் பல ஆண்டுகள் செய்துதான் வருகிறேன் கொஞ்சம் உடலுக்கு ஓய்வுகிடைக்கும் அவ்வளவுதான்✡ மற்றபடி அதற்கு பெரிய பலன் ஒன்றும் கிடையாது எனது இரத்த அழுத்தம், சக்கரை எல்லாம் அப்படியேதான் உள்ளது என்று கூறி நமது வாயைக் கிளறினார்.  ✡  அந்த நேரத்தில் நாம் மூலிகை மாத்திரை தயாரிப்பு பணியில் ஈடுபட்டிருந்ததால் பிறகு இதுபற்றி பதிவிடுகிறேன் என்றுகூறி கைப்பேசியை வைத்துவிட்டேன்✡  நண்பர் எந்த அமைப்பில் யோகா கற்றார் என்று தெரியவில்லை.  சரி எங்கு கற்றால் என்ன.! ஆனால், சாந்தியாசனம் என்ற சவாசனத்தை பயிலும் முன் ஒரு சில யோகாசனத்தை செய்தபின்னோ அல்லது உடல் களைத்துப் போகுமளவு   சில உடற்பயிற்சிகளை செய்தபின்போ  செய்தால் அதிக பலனை உணர்வதோடு  இரத்த அழுத்தமும் சீரான நிலைக்கு வருவதை  உடனே உணரமுடியும். இது எப்படியெனில் நன்றாக வேலை செய்து கடுமையான தாகம் ஏற்பட்ட பிறகு நீர் குடித்தால் எப்படி உடல் நீரின் தன்மையை வேகமாக ஈர்த்துக் கொள்வதோடு அதன் சுவையும் நமக்கு ஆனந்தத்தை தருவதுபோல் இருக்கிறதோ அதுபோல் தான் இதுவும். அப்படி இல்லாமல் சும்மா கால் மணி நேரத்திற்கு ஒருமுறை நீரையோ, பாட்டிலில் பானங்களையோ இடையறாது உள்ளே தள்ளிக் கெண்டிருப் பவர்களுக்கு  நீரின் சுவை எப்படித் தெரியும், உடல் உறுப்புகளான நுரையீரலும்,சிறுநீரகமும், கல்லீரலும் ஆனந்தத்தை உணருமா அல்லது அடேய் ஆர்வக்கோளாறு எனக்கு கொஞ்சம் ஒய்வு கொடுடா என்று கதறுமா? அதுபோலவே நன்றாக பகலெல்லாம் உழைத்து களைத்து  இரவில் தூங்கும் தொழிலாளியின்  உறக்கத்திற்கும் வட்டிக்கடையில் வெங்கலப் பானைபோல் ஏதோ ஒரு இடத்தில் அசையாமல் இருந்துவிட்டு போனாப் போகுதுனு அரைமணி நேரம் வெட்டிக் கதையடித்துக் கொண்டே நடைப்பயிற்சி செய்துவிட்டு இரவில்  தூங்கச் செல்லும்  செல்வந்தனின் தூக்கத்திற்கும் எத்தனை வேறுபாடு உள்ளது. என்பதை நாம் செல்லியாத் தெரிய வேண்டும்.!   இன்றைக்கு யோகா என்று பெயரை வைத்துக் கொண்டு இதுபோன்ற பல வெங்கலப் பானைகளை வரிசையாக நிக்கவைத்து தொட்டு விளையாட்டு, கபடி என்று பல விளையாட்டுகளை கற்றுக் கொடுத்துவிட்டு பிறகு உடல் களைத்தவுடன் அமைதியாக உட்காரச் சொல்லி  நெற்றிக் கண் திறக்கிறது பார், தியானவெளி தெரிகிறது பார் என்றெல்லாம் சொல்வது இதற்காகத்தானே.! அதுசரிங்க ஆனால், எங்களுக்கு நேரமே குறைவாகத்தான் உள்ளது.  பத்துநிமிடம் சாந்தியாசனம் செய்துவிடலாம் ஆனால், உடல் களைப்படைய வேறு என்ன செய்வது என்றால் சாந்தியாசனம் செய்வதற்கு முன் சர்வாங்காசனம், விபரீதகரணி,  ஹலாசனம், அதோமுக சவானாசனம், அர்த்த சிரசாசனம் போன்ற ஆசனங்களில் ஏதேனும் ஒன்றை மூன்று முறை   15 விநாடிகள் விதம் செய்துவிட்டு புஜங்காசனம் இரண்டு முறை 15 விநாடி விதம் அல்லது மட்ச்யாசனம்  ஒருமுறை 30 விநாடிகள் வரை செய்துவிட்டு சாந்தியாசனம் செய்தால் உடனடியாக உடல் பூரண ஓய்வை உணர்ந்து நோய்களை படிப்படியாக  குணமாக்குவதோடு சாந்தியாசனம் செய்த நாள்முழுக்க  மனமும் உடலும் உற்சாகமாக இயங்கும்.! மற்ற ஆசனங்களை நேரில் கற்றுக் கொள்ளுங்கள்.!  ஒகோ ஆசனமான சாந்தியாசத்தை  மட்டும் இப்பொழுது நாம் கற்பிக்கிறோம்.✡ இதில் பல முறைகள் உள்ளது ஆனால், பயன்கள் கிட்டத்தட்ட  ஒரே மாதிரியானவை  தான்.! ஆயினும் மண்பண்ட சமையலுக்கு ஆரோக்கியமும் ருசியும் அதிகம்✡ அலுமினியத்திற்கு குறைவு. அதுபோல நமது உடல் நிலைக்கேற்ப பயனுண்டு.!   ✡செய்முறை  1.விரிப்பில் மல்லாந்து படுத்துக் கொள்ளவும் 2.தலையை ஏதாவது ஒருப்பக்கம் லேசாக சரித்து வைத்துக் கொள்ளவும்.! 3.உடலை தளர்வாகவும் மனதை அமைதியாகவும் வைத்துக்கொள்ளவும்! 4. கண்களை மூடியபடி வைத்துக் கொண்டு மூன்று முறை மூச்சை ஆழமாக இழுத்து மெதுவாக  வெளிவிடவும்.5. மூன்று  முறை கண்களை நன்றாக சுருக்கி  விரித்துப் பார்க்கவும். 6.மூன்றுமுறை கண்களை பக்கவாட்டில் வல இடமாக நகர்த்தவும். 7.இப்பொழது புருவ மத்தியிலிருந்து  கண்களை வலதுபக்கமாக சுத்தி புருவமத்திக்கு வரவேண்டும் பிறகு இதுபோல இடதுபக்கமாக சுத்தி புருவமத்திக்கு வரவேண்டும். இது ஒரு சுற்று இதுபோல் இன்னும் இரண்டு சுற்றுகள் செய்ய வேண்டும். 8. மூக்கு நுனியை 5 விநாடிகள் புருவ மத்தியை 5 விநாடிகள்  என்று மொத்தம் மூன்று சுற்றுகள் செய்துவிட்டு கண்களை மெதுவாக மூடிக்கொள்ளலாம்.9.மூன்று மூச்சை ஆழமாக இழுத்துக் கொள்ளவும். 10. இப்பொழுது கால்கட்டை விரல் , கணுக்கால், முட்டிக்கால், ஆசனவாய், சிறுநீரகம், வயிறு, இதயம், நுரையீரல் ,தொண்டைக்குழி, வாய், மூக்கு, கண்கள், புருவமத்தி, உச்சந்தலை  என்று உடலில் உள்ள ஒவ்வெரு பகுதியையும் தனித்தனியாக இறுக்கி  அந்த இடம் ஓய்வாக, பலமாக ஆரோக்கியமாக இருப்பதாக ஒவ்வெரு பகுதிக்கும்  2 முறை மனதில்   நினைத்துக் கொள்ளவேண்டும். 11. பிறகு உச்சந்தலையை நினைத்து முடிந்ததும் உடலில் உள்ள எல்லா பகுதிகளையும்  இறுக்கமாக்கி என் உடலில் உள்ள ஒவ்வெரு பகுதியும் ஓய்வா, பலமா, ஆரோக்கியமா இருக்கு என்பதாக 3 முறை மனதில் நினைத்துக் கொள்ள வேண்டும்.!  12. மெதுவாக இரண்டு முறை மூச்சை இழுத்து விட்டு விட்டு இரண்டு உள்ளங் கைகளையும்  எடுத்து தொப்புளை மையப்படுத்தி விரித்து  வைக்கவும்.  ்13. இரண்டு கட்டைவிரல்களும் ஒன்றைஒன்று தொட்டதுபோன்றும் , இரண்டு ஆள்க்காட்டி விரலும்  ஒன்றைஒன்று தொட்டது போல் இருக்க வேண்டும். 14. அப்படியே உங்கள் வயிற்றினுள் ஒரு ஒளி வட்டம் இருப்பதாக நினைத்துக் கொண்டே படுத்திருக்க வேண்டும். முழுகவனத்தையும்  வயிற்றிலேயே  வைத்துக் கொண்டு மூச்சு உள்ளே போகும்போவதையும் வெளியே போகும்போவதையும் கவனித்துக் கொண்டே இருங்கள். 15. இப்படியே 5 நிமிடம் படுத்திருங்கள். அந்நேரம் உங்களையறிமால் தூக்கம் வந்தால் தூங்கிவிடுங்கள் .  16 . பிறகு கைகளை கீழே எடுத்து 3 முறை  மூச்சை ஆழமாக இழுத்துவிடவும். 17.மெதுவாக வலதுகையை தலைக்கு நேராக நீட்டி உடம்பை வலப்பக்கமாக ஒருக்களித்து மெதுவாக எழுந்து அமரவும்.! அம்மாடியோ … 17 நிலைகள் கொண்ட ஆசனம் இதுதான் போல.!  இந்த முறை சவாசனம்  பல்வேறு யோகாசன  குருமார்களின் முறையை உள்ளகத்தில்  கொண்டு நம்மால் உருவாக்கப்பட்ட புதிய முறை.! இரத்த அழுத்தம், உடல் பருமன், சக்கரை வியாதி, மனஅழுத்தம், பக்கவாதம் போன்ற பல்வேறு நோய்களுக்கு நாம் யோகா & இயற்கை வாழ்வியல் பயிற்சியளித்து பலரின்  செயற்கை இன்சுலின்,  இன்ஹேலர் மற்றும் தள்ளிவண்டிகளுக்கு ஒய்வு கொடுத்து  ஆரோக்கியமாக்க முக்கிய காரணம் இந்த ஓகோ ஆசனம்தான் மரணப்படுக்கையில் இருப்பவர் கூட இந்த ஆசனத்தை முறையாக செய்தால் மூன்றுநாளில் எழுந்து அமர்ந்துவிடுவார்.!  நலம் பெருகட்டும் … -ஏகப்பிரியன் மு. இஸ்மாயில் D.Y.T amyogatrust.blogspot.in  Mobile:9629368389

சர்க்கரை வியாதியால் எடையிழப்பு

சோற்றுக் கற்றாழை ஜெல்,  சிவப்பு பச்சரிசி மாவு, பனங்கற்கற்கண்டு மூன்றையும் தேவையான அளவெடுத்து  கலந்து உருண்டையாக்கி தினமும் இரண்டு உருண்டை தின்றுவந்தால்  சக்கரை வியாதியால் குறைந்த எடைகூடும்.